கடந்த வாரம் குமுதம் இதழில் சென்னை தமிழனுக்கு லண்டன் விருது ! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. அந்தக் கட்டுரையில் ஜாபர் சேட்டுக்கு தேசிய சட்ட நாள் விருது வழங்கப் பட்டது தொடர்பாக ஒரு கட்டுரை “டால்மேன்“ என்பவரால் எழுதப் பட்டிருந்தது. அந்தக் கட்டுரை இதோ.
“அண்மையில் சென்னையில் நடந்த போலீஸ் விருது வழங்கு விழாவில் தமிழக முதல்வர், தமிழகத்தின் உளவுப்பிரிவுத் தலைவர் ஜாபர் சேட்டுக்கு சிறப்பு விருது வழங்கினார். அது தேசிய சட்ட நாள் விருது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் பன்னாட்டு நீதியரசர்களின் குழுமத்தினர், உலக அளவில் போலீஸ் துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இந்த விருதை வழங்குகிறார்கள். இந்த விருதை இந்தியாவிலிருந்து பெறும் காவல்துறை அதிகாரியாக ஜாபர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
அது என்ன தேசிய சட்ட நாள் விருது ? சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது, குற்றத்தை தடுப்பது, பயங்கரவாதத்துக்கு எதிராக துடிப்புடன் செயல்படுவது இப்படி பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து விருதுக்குரிய காவல்துறை அதிகாரியை தேர்ந்தெடுத்து இந்த விருதுகளை வழங்குகிறார்கள்.
“நான் தமிழக உளவுத்துறை ஐ.ஜி ஆக வந்த பிறகு சென்ற ஆண்டு, திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்க ஒரு தனிப் பிரிவை துவக்கினோம். இதில் காவர்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 800 பேர் கொண்ட போலீஸ் படையை அமைத்தோம். அதற்கு நல்ல பலன் இருக்கிறது. இப்போது ஆர்கனைஸ்ட் குற்றங்களை உடனடியாக கண்டுபிடித்து விடுகிறோம்“ என்கிறார் ஜாபர் சேட். உண்மைதான். சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் நடந்த எண்பத்தேழு லட்ச ரூபாய் கொள்ளை, சிறுவன் கடத்தல் போன்ற சம்பவங்களில் இந்தப் படை சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியிருக்கிறது.
“காவல்துறை நவீனப்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கு இவற்றைப் பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சர்வதேச நீதியாளர் குழுமத்திற்கு அனுப்பினேன். அதில் உள்ள கருத்துக்கள் அடிப்படையிலும் தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற் குண்டான பங்களிப்பின் அடிப்படையிலும் இந்த விருது வழங்கப் பட்டது.
டிசம்பர் 11ம் தேதி டெல்லி வித்யாபவனில் துணை ஜனாதிபதி வழங்கினார். அலுவல் காரணமாக அதற்கு என்னால் செல்ல முடியவில்லை. இப்போது தமிழக முதல்வர் மூலம் பெற்று இருக்கிறேன்“ என்று சொல்லும்போது ஜாபர் முகத்தில் பெருமிதம்.
இருக்காதா ! இந்த விருதை பெறும் முதல் தமிழ்நாட்டுக்காரராயிற்றே. “
இதுதான் அந்தக் கட்டுரை. இந்த விருது, ஜாபர் என்ன ஆராய்ச்சிக் கட்டுரை அனுப்பினார், அந்த சர்வதேச நீதியாளர் குழுமத்தின் பின்னணி என்ன, இந்த விருது வழங்கப் பட்டதன் பின்னணி என்ன என்பதைப் பற்றிய ஒரு தனிப் பதிவு தயாராகிக் கொண்டு இருக்கிறது.
முதலில், இந்த விருதை கருணாநிதி ஜாபருக்கு வழங்கியது தமிழக அரசின் காவல்துறையால் காவல்துறையினருக்கு வழங்கப் படும் வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்புப் பணிக்கான விருது வழங்கும் அரசு விழா. இந்த அரசு விழாவில் ஒரு தனியார் வழங்கிய விருதை கருணாநிதி வழங்கியதே மிகப் பெரிய மரபு மீறல். இது எப்படி இருக்கிறது என்றால், சென்னைப் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில், சிறந்த துப்புறவுத் தொழிலாளிக்கு விருது வழங்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.
ஜாபர் சேட், எஸ்எஸ்எல்சி சர்டிபிகேட்டை எடுத்து நீட்டினாலும் அதை அரசு விழாவில் கருணாநிதி வழங்குவார், அதில் சந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு கருணாநிதிக்கும் ஜாபருக்கும் நெருக்கமான உறவு.
ஆனால் இந்த விருது வாங்கியதை ஏதோ உலகத்தில் நேராத ஒரு அதிசய நிகழ்வு போல, செய்தி எழுதிய பத்திரிக்கையாளரை, மன்னிக்கவும். அந்த நபரை பத்திரிக்கையாளர் என்று அழைக்க முடியாது. அந்த நபரை என்னவென்று சொல்வது.
பெத்த புள்ளை விருது வாங்கறது மாதிரி, பின்னாடி நிக்கற வினோதனுக்கு என்னா பூரிப்பு பாத்தீங்களா….. ? பின்ன சும்மாவா… முகப்பேர்ல ஒரு கோடி மதிப்புள்ள 2 க்ரவுண்டு இல்லாம, ஆ.ராசா கிட்ட இருந்து சும்மா ஒரு கோடி ரூபாய வாங்கிக் குடுத்துருக்காரே ஜாபர் சேட். அப்புறம் பூரிப்பா இருக்காதா ?
பைலைன் கூட போட முடியாத சூழலில், பணி இடைநீக்கத்தில் இருக்கும் திருவேங்கிமலை சரவணன் இது போன்ற எழுத்து விபச்சாரத்தில் ஈடுபடுவதை சவுக்கு வன்மையாக கண்டிப்பதோடு எச்சரிக்கையும் செய்கிறது. அவருக்கு துணை போகும் குமுதம் இணையாசிரியர் ரஞ்சனுக்கும் சவுக்கு தனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.
திருவேங்கிமலை சரவணன்…. …. உங்களைப் பற்றி எழுதுவதற்கு சவுக்கிடம் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. இன்று நீங்கள் சொம்படிக்கும் ஜாபர் சேட்டைப் பற்றி கருணாநிதியிடம் நீங்கள் புகார் சொல்லியது நினைவிருக்கிறதா ? அப்போது கருணாநிதி “யோவ். ஜாபர திட்டாதய்யா. மலேசியாவில நான் லிப்டில் மாட்டிக் கொண்டப்போ என்னை காப்பாத்துனான்யா“ என்று கருணாநிதி சொல்லியது ஞாபகம் இருக்கிறதா ? வாய்க்கு வந்ததை, கண்டபடி பேசும் நபர் நீங்கள் என்பது சவுக்குக்கு தெரியும்.
உங்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள பெண் பத்திரிக்கையாளர்களிடம் விசாரித்தால் பத்துப் பதிவுகள் போடும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. ஆனால், சவுக்கில் எழுதப்படும் அளவுக்கு உங்களை ஒரு பொருட்டாக சவுக்கு நினைக்கவில்லை. ஆனால் எழுதத் தொடங்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். உங்கள் அந்தரங்கங்கள் உட்பட அனைத்தும் வெட்ட வெளிச்சமாக்கப் படும். சென்னை நகரின் பிரதானமான இடத்தில் லாட்ஜில் ரூம் போட்டு, குமுதத்தில் அட்டைப் படத்தில் போடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து நீங்கள் கல்லூரிப் பெண்களை சீரழித்தது உட்பட அந்தப் பெண்களின் வாக்குமூலத்தோடு அம்பலப்படுத்தப் படும். இது உங்களுக்கு இறுதி எச்சரிக்கை. இதோடு உங்கள் எழுத்து விபச்சாரத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்.
அன்பார்ந்த திரு.ரஞ்சன். உங்களைப் பற்றி விசாரித்ததில், உங்கள் மேலும் ஏராளமான புகார்கள் தெரிய வருகிறது, திருவேங்கிமலை சரவணன் அளவுக்கு இல்லாவிட்டாலும். எழுத்து விபச்சாரத்திற்கு துணை போகாதீர்கள். எஸ்ஏபி உருவாக்கிய பத்திரிக்கையை, அயோக்கியர்களின் புகழ் பாடும் மஞ்சள் பத்திரிக்கையாக மாற்றாதீர்கள். இது ஜாபர் சேட்டுக்காக குமுதம் பாடும் இரண்டாவது லாவணி. இந்த லாவணி இத்தோடு நிற்கட்டும்.
ஜாபர் சேட்டுக்காக எழுத்து விபச்சாரத்தில் ஈடுபடும் பத்திரிக்கையாளர்களின் பெயர்கள் சரவணன் என்று அமைந்திருப்பது என்ன ஒரு விசித்திரம் ?
குமுதத்தில் வெளியான அந்தக் கட்டுரையில் ஜாபர் சேட்டின் படத்திற்கு அருகே போடப்பட்டிருந்த கேப்ஷன் “இனி குற்றவாளிகள் தப்ப முடியாது”. நாங்களும் அதத் தானே சொல்றோம் பாஸு.. நீங்க தப்பவே முடியாது. தப்பிட்டா அப்புறம் சவுக்கும் அதன் வாசகர்களும் எதுக்கு இருக்கோம்.