“ஹாய் மச்சான்… வணக்கம்ணே…“ என்று அமர்க்களமாக மொட்டை மாடியில் காலடி எடுத்து வைத்தான் டாஸ்மாக் தமிழ்.
வெயில் தணிந்திருந்ததால், அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர். தான் வாங்கிக் கொண்டு வைத்திருந்த சரக்கை எடுத்து வைத்தான் தமிழ்.
“அதானே பாத்தேன்… இந்த வாட்டியும் வாங்கிட்டு வராம ஏதாவது சாக்கு போக்கு சொல்லியிருந்தன்னா மண்டைய ஒடைக்கலாம்னு நெனைச்சுட்டு இருந்தேன்….“ என்றான் பீமராஜன்.
“எனக்கும் இப்படிப் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுதானே மச்சான் வாங்கிட்டு வந்துட்டேன்… அண்ணன் ஐட்டத்தை எடுத்துக் குடு…“ என்றான் தமிழ்.
ஓரமாக உட்கார்ந்து புகைத்துக் கொண்டிருந்தவர், அப்போதுதான் திடீரென்று கவனம் பெற்றவராக “வாப்பா தமிழ்“ என்றார் கணேசன்.
“சொல்லு மச்சான்… என்ன நாட்டு நடப்பு.. ? “ என்று முந்திக்கொண்டான் வடிவேலு.
“இப்போதைக்கு தலைப்புச் செய்தி நரேந்திர மோடிதான் மச்சான். பார்ல வழக்கமா அரசியலை விவாதிக்கறவங்க, மோடி பத்திதான் பேசிக்கிட்டு இருந்தாங்க.
மோடி எப்படியும் நம்ப பிரதமர் வேட்பாளரா ஆகிடணும்னு நெனைக்கிறார். தன்னோட பரிவாரங்களை, சமூக வளைத்தளங்கல்ல தனக்கு பெரிய ஆதரவு இருக்கறதா ஒரு மாயையை உருவாக்கி அதன் மூலமா எப்படியாவது பிரதமர் வேட்பாளரா ஆகிடனும்னு நெனைக்கிறார். “
“ஏன் அப்படி நெனைக்கிறார் ? “
“சமூக வளைத்தளங்கள் இன்று மக்கள் கருத்தை பிரதிபலிக்குதுன்னு எல்லா அரசியல் கட்சிகளும் நெனைக்கிறாங்க. அரசியல் கட்சிகளோட ஆதரவாளர்கள் சமூக வளைத்தளங்கள்ல போட்டுக்கற சண்டையப் பாத்தாலே தெரியுதே… ஆனா, இதெல்லாம் வாக்குகளா மாறுமாங்கிறது சந்தேகம். இது தவிரவும், மோடிக்கு பிஜேபிக்கு உள்ளயே கடுமையான எதிர்ப்பு இருக்கு. அத்வானி கோவாவுல நடக்கிற தேசிய செயற்குழுக் கூட்டத்துக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டார். கேட்டா உடம்பு சரியில்லைன்னு காரணம் சொல்றாங்க. ஆனா உண்மையான காரணம், பல வருஷமா பிரதமர் கனவோட இருந்த தன்னை புறக்கணிச்சுட்டு, மோடியை பிரதமர் வேட்பாளரா அறிவிக்கிறதை அத்வானி கொஞ்சமும் விரும்பலை. பிரதமர் வேட்பாளரா இல்லையாங்கறதே சிக்கலா இருக்கு..
அதையும் மீறி பிரதமர் வேட்பாளரா மோடி அறிவிக்கப்பட்டாலும் கூட, கூட்டணிக் கட்சிகள் மோடியை ஏத்துக்கிறது கஷ்டம்.. “
“ஆனா மோடி பிரதமர் ஆயிட்ட மாதிரியே பேசிக்கிட்டு இருக்காங்களே…“ என்றான் ரத்னவேல்.
“கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு“ என்று சிரித்துக் கொண்டே சொன்னான் தமிழ்.
“ராஜ்ய சபா தேர்தல் எப்படிப்பா போகும்…“ என்று கேட்டார் கணேசன்.
“அண்ணே… ஜெயலலிதா தன்னோட கட்சி எம்.எல்.ஏக்களை எடுக்கறதால விஜயகாந்த் கடுமையான கோவத்துல இருக்கறார். திமுகவோட பேச்சுவார்த்தைகள் நடந்துக்கிட்டுதான் இருக்கு. விஜயகாந்த் இந்த முறை சுதீஷுக்கு சப்போர்ட் பண்ணுங்க. அடுத்த முறை உங்க கேன்டிடேட்டை எம்.பியாக்குவோம்னு சொல்றார். “
“இது நல்ல டீலாத்தானே இருக்கு ? “
“நல்லாத்தான் இருக்கு. ஆனா கருணாநிதி இந்த முறை என் பொண்ணு ஆகட்டும். அடுத்த முறை உங்களுக்கு ஆதரவு தர்றோம். என் பொண்ணு எம்.பியாகறது இப்போ அவசியம். வழக்கு விவகாரங்களால கண்டிப்பா எம்.பியாகணும், அதனால எங்களுக்கு ஆதரவு குடுங்கன்னு கேக்கறார். “
“கேப்டனுக்கு ஓகேவா ? “
“கேப்டனுக்கு ஓகேதான்.. ஆனா ஸ்டாலினுக்குதான் ஓகே இல்ல“
தளபதியோடு சேஷசாய்…
“என்னடா சொல்ற… ஸ்டாலினுக்கு இதுல என்ன சிக்கல் ? “ என்று ஆச்சர்யப்பட்டான் வடிவேலு.
“அப்புறம்.. கனிமொழி எம்.பியாகிட்டாங்கன்னா ? தனக்கு போட்டிய வந்துட மாட்டாங்களா ? “ என்று சொல்லி விட்டு சிரித்தான் தமிழ்.
“இப்படியாடா பண்ணுவாரு ஸ்டாலின்… ? “ என்று தானும் வியப்பைக் காட்டுவோம் என்று வியந்தான் ரத்னவேல்.
“அழகிரி ஏறக்குறைய விருப்ப ஓய்வு வாங்கிட்டாரு. இனிமே கட்சியைக் கைப்பத்தறதுல ஒரே போட்டி கனிமொழி மட்டும்தானே… ? அவங்க எம்.பியாகிட்டா செல்வாக்கு வளந்துடும்னு ஸ்டாலின் பயப்படறார். ஸ்டாலினை மீறி கனிமொழிக்கு ஆதரவு குடுக்க விஜயகாந்த் தயங்கறார்.
இது மட்டுமில்லாம, 2ஜி வழக்குல கனிமொழி தண்டிக்கப்படணும்னு ஸ்டாலின் விரும்பறார். இதுக்கு தகுந்தார்ப்போலதான், அமிர்தத்தையும் சாட்சி சொல்ல வச்சுருக்கார்.
அதனால, எப்படியாவது கனிமொழி எம்.பியாகக் கூடாதுன்றதுல, ஸ்டாலின்தான் தீர்மானமா இருக்குறார். பாட்டாளி மக்கள் கட்சி ராஜ்ய சபா தேர்தலுக்கு ஆதரவு தர்ற முடிவுக்கு வந்த பிறகு, பத்திரிக்கையாளர்கள் கிட்ட பேசுன ஸ்டாலின், நாங்க யார் ஆதரவையும் கேக்கலன்னு கோவமா சொன்னாரு.. அவர் அப்படிப் பேசுனதுக்குப் பிறகுதான், அன்புமணி ராமதாஸ், திராவிடக் கட்சிகளோட கூட்டணியே கிடையாதுன்னு சொன்னார். “
“சரி பிறந்தநாள் சிறப்பு செய்திகள் என்ன ? “ என்றான் வடிவேலு.
“பிறந்த நாள் அன்னைக்கு குஷ்பு ரொம்ப கவனமாத்தான் போயிருக்காங்க.. நம்ப பாட்டுக்கு போயி நின்று யாராவது ஏதாவது பேசி அவமானப்படுத்திடப் போறாங்கன்னு பயந்துக்கிட்டு, கார்க்குள்ளயே உக்காந்துக்கிட்டு தன்னோட உதவியாளரை அனுப்பி, தலைவர் கீழே வந்ததும் சொல்லுன்னு சொல்லி, அவர் வந்ததும்தான் போயிருக்காங்க… “
“வேற.. ? “
“எல்லாப் பிறந்தநாளுக்கும், கலைஞரும் தயாளு அம்மாளும், மாலை மாத்திக்குவாங்க.. இது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நடக்கும் சடங்கு. இந்த முறையும் இது நடந்துச்சு.. “
“இதுல என்னடா விசேஷம் ? “
“இதுலதான் விசேஷமே.. ஒவ்வொரு முறையும் இந்த சடங்கு நடைபெறும்போது, புகைப்படக்காரர்கள், கேமராமேன்கள் எல்லாரையும் அனுப்புவாங்க.. இந்த வாட்டி கலைஞர் டிவியைத் தவிர யாரையுமே உள்ள விடல.. இந்த ஃபுட்டேஜும் வெளியில போயிட்டா தொலைச்சுடுவேன்னு சொல்லிட்டார் ஸ்டாலின்… “
“ஏன் மச்சான் இப்படிப் பண்ணாங்க “ என்று புரியாமல் கேட்டான் ரத்னவேல்.
கடந்த ஆண்டு பிறந்த நாளில் எடுத்த புகைப்படம்
“என்னடா லூசு மாதிரிப் பேசற… தயாளு அம்மாளுக்குதான் உடம்பு ரொம்ப முடியலையே… நடக்க முடியாது… பேச முடியாது… பக்கத்துல யாராவது இருந்தா மூஞ்சி மேலயே குத்துறாங்கன்னு கோர்ட்ல புளுகியிருக்காங்களே… புருஷன் கூட மாலை மாத்தி போஸ் குடுத்தா, இதை கோர்ட்ல சமர்ப்பிக்க மாட்டாங்களா ?
இதுல இன்னோரு தமாஷ் வேற இருக்கு.. டெல்லி நீதிமன்றத்துல தயாளு அம்மாள் ஆஜராகனும்னு உத்தரவு போட்டதும், மறு நாள் காலையில தயாளு அம்மாளை அப்போல்லோ மருத்துவமனையில அனுமதிக்கனும்னு திட்டம் போட்டுட்டார் கருணாநிதி. “
“ஏன் அனுமதிக்கனும்.. ? “
“அப்போல்லோவுல அனுமதிச்சு மூஞ்சுல மாஸ்கெல்லாம் போட்டு படுக்க வச்சுட்டா.. சிபிஐ அதிகாரிங்க சம்மன் எப்படித் தருவாங்க ? அதுக்குத்தான் அந்த ப்ளான். “
“ப்ளான் படி நடந்துச்சா ? “
“இப்படியெல்லாம் இந்தக் குடும்பம் பண்ணும்னு தெரியாதா ? டெல்லி நீதிமன்றம் உத்தரவு போட்டதுமே, டெல்லி உத்தரவை ஒரு அதிகாரி எடுத்துக்கிட்டு இரவோட இரவா சென்னை வந்து, மறு நாள் அதிகாலையிலயே கதவைத் தட்டி சம்மனை குடுத்துட்டாங்க..
அதிகாலையில சம்மன் வந்ததும், திகைச்சுப் போயிட்டாங்க.. “ என்று வாய் விட்டு சிரித்தான் தமிழ்.
அன்னைக்கு, ஆ.ராசாவும் திமுக வழக்கறிஞர் குமரேசனும், 2ஜி வழக்கு தொடர்பாக தீவிரமான விவாதத்துல இருந்தாங்க. குமரேசன்தான் இப்போ கருணாநிதி குடும்பத்துக்கும் 2ஜி வழக்கு தொடர்பா ஆலோசனை சொல்லிக்கிட்டு இருக்கார்.. “
“இதுல என்ன ஆச்சர்யம் இருக்கு.. அவரு திமுக வக்கீல்தானே ? “
“திமுக வக்கீல்தான்.. ஆனா, அதிமுக வக்கீல் பி.எச்.பாண்டியனோட போயி, டி.டி.நாயுடுவுக்கு ஜாமீன் குடுக்கனும்னு திருத்தணி நீதிமன்றத்துல ஆஜராயிருக்காரே…. “
“எப்படி ரெண்டு பேரும் ஒண்ணா சேந்தாங்க.. இந்த திமுக அதிமுக ரெண்டு பேருமே திருடனுங்கதான் மச்சான்.. காசு குடுத்தா எது வேணாலும் செய்வானுங்க… நூத்துக்கணக்கான மாணவர்களை, எந்த அனுமதியும் இல்லாத மருத்துவக் கல்லூரியில லட்சக்கணக்குல பணம் வாங்கிட்டு, ஏமாத்தனவனுக்கு, அந்த மாணவர்கள் வாழ்க்கையை பாழாக்குனவனுக்கு ஜாமீன் குடுக்கணும்னு திமுக வக்கீல், அதிமுக வக்கீல் ரெண்டு பேரும் போயி வாதாடுறானுங்க பத்தியா… “
தீனதயாள் நாயுடு
“ஆமாம்டா… “
“ஜெயலலிதான்றதுனால, இந்த டிடி நாயுடுவை இப்போ குண்டர் சட்டத்துல அடைச்சுருக்காங்க.. இதே திமுக ஆட்சியா இருந்தா, நீதிமன்றமே வேணாம்.. குமரேசனே கருணாநிதிக்கிட்ட பேசி வழக்கே போடாம முடிச்சுருப்பாரு.. “
“சரி பா.ம.க செய்தி ஏதாவது இருக்கா ? “ என்று கேட்டான் பீமராஜன்.
“போன வாரம் டெல்லி போனாரு அன்புமணி… டெல்லிக்கு அவர் போனது திருமாவளவன் குடுத்த புகாருக்கு எதிரா மனித உரிமை ஆணையத்துல கடிதம் குடுக்கறதுக்காகன்னு வெளியில சொன்னாலும், போன உண்மையான காரணம் காங்கிரஸ் கட்சிக் கூட கூட்டணி பேசறதுக்காகத்தான். அஹமது பட்டேலை சந்தித்து பேசிருக்காரு…
இதே மாதிரியா அஹமது படேலைப் போயிப் பாத்தாரு… ?
காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி பேசறதுக்கு அன்புமணி தரப்புல வச்ச ஒரே நிபந்தனை, அவர் மேல இருக்கற வழக்குகளை வாபஸ் வாங்க உதவி பண்ணும்னு.. ஆனா அவங்க நான் கமிட்டலா இருக்காங்க. காங்கிரஸ் கட்சி, பாமகவை விட, கேப்டனைத்தான் நம்பியிருக்காங்க. கேப்டனோட கூட்டணி அமைஞ்சா, ஒரு சரியான தாக்கத்தை உண்டு பண்ண முடியும்னு நெனைக்கிறாங்க.. “
“சரி அம்மாவின் சிகப்பு சொம்பு எம்.பியாவாரா மாட்டாரா.. அதைச் சொல்லு ? “ என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ரத்னவேல்.
“தா.பாண்டியனைத்தானே சொல்ற… அந்தக் கட்சிக்குள்ள பயங்கர அடிதடியா இருக்கு. என்னை எம்.பியாக்கினா, தமிழகம் பூரா சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன்.. நான் உங்கள் அடிமை ஆலம்பனா ன்னு சொல்றார் தா.பா. ஆனா, கட்சியில பெரும்பாலானவங்க, டி.ராஜாவைத்தான் எம்.பியாக்கனும்னு சொல்றாங்க… இவங்க கட்சியில இந்த பஞ்சாயத்து முடியாததால, ஜெயலலிதா எந்த முடிவும் இது வரைக்கும் எடுக்கல. “
“சரி.. ஐபிஎல் சூதாட்டம் எந்த அளவுல இருக்கு ? “
“சூதாட்ட விசாரணை, டெல்லி, மும்பை, மற்றும் சென்னையில தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கு.
பிசிசிஐ சார்பில் ஐபிஎல் சூதாட்டத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டிருக்கற நீதிபதி சவுடா மற்றும் நீதிபதி பாலசுப்ரமணியத்தைப் பத்தித்தான் டெல்லி முழுக்க ஒரே பேச்சு. நீதிபதி சவுடாவும் பாலசுப்ரமணியமும், சென்னை உயர்நீதிமன்றத்துல நீதிபதிகளா இருந்தப்போ, ஒரு கவுன்ட்டர் திறந்து வசூல் பண்ணாத குறையா வசூல் பண்ணவங்க… நீதிபதி சவுடா, காபிபோசா வழக்குகள்ல சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கிட்ட, லட்சக்கணக்குல வசூல் பண்ணியிருக்காரு… வசூல் பண்றதுக்குன்னே தனியா ஒரு நபரை நியமிச்சு வசூல் பண்ணியிருக்காரு…
நீதிபதி பாலசுப்ரமணியம் இன்னும் சிறப்பானவர். அவர் நீதிபதியா இருந்தப்போ, ஒரு வழக்குல ஒருத்தருக்கு சாதகமா தீர்ப்பு வழங்குனதுனால சம்பந்தப்பட்டவர் இவருக்கும் இன்னொரு நீதிபதி ராமமூர்த்திக்கும் கன்னியாக்குமரியில ஒரு பார்ட்டி வைக்கிறார்.
அந்த பார்ட்டியில ஃபுல்லா சரக்கடிச்சுட்டு ஒரே ரவுசு.. பக்கத்துல இருக்கறவங்கள்லாம் சத்தம் போட்டு போலீசுக்கு புகார் பண்ணிட்டாங்க. புகார் பண்ணதும், ஒரு கான்ஸ்டபிள் வந்து என்னய்யா இப்படி சத்தம் போட்றீங்கன்னு கேட்டுருக்கார்… நீதிபதிக்கிட்டயே வந்து சத்தம் போடறியான்னு பாலசுப்ரமணியமும், ராமமூர்த்தியும் சேந்து அந்த கான்ஸ்டபிளை அடிச்சு, மாடியிலேர்ந்து தூக்கிப் போடப் போயிருக்காங்க…
நீதிபதி பாலசுப்ரமணியம்
அந்த கான்ஸ்டபிள் ஸ்டேஷனுக்குப் போயி நடந்ததைச் சொல்லியிருக்கார். இன்ஸ்பெக்டர் ஒரு டீமைக் கூட்டிக்கிட்டு, அந்த இடத்தை ரெய்டு பண்ணி எல்லாரையும் புடிச்சுட்டார். பாலசுப்ரமணியம் ஒரு ரூமுக்குள்ள போயி ஒளிஞ்சுக்கிட்டார்.
அப்புறம் சிக்குனது நீதியரசர்கள்னு சொல்லி, காப்பாத்தி உட்டாங்க. இப்படிப்பட்ட நீதிபதிகள்தான், ஐபிஎல் ஊழலை விசாரிக்கப் போறாங்களாம்.. “
“சூப்பரப்பு…. இவங்கதான் பெஸ்ட் ஜட்ஜஸ் “ என்று சிரித்துக்கொண்டே சொன்னான் பீமராஜன்.
“போன வாட்டி, சில காவல்துறை அதிகாரிகள் இந்த விசாரணையில சிபி.சிஐடிக்கிட்ட சிக்கப் போறாங்கன்னு சொன்னேன் ஞாபகம் இருக்கா…. பல அதிகாரிகள் பேரு இதுல சிக்கியிருக்கு…
பழைய கமிஷனர்களா இருந்த ட்டி.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் இவங்க எல்லாம் சட்டவிரோதமா சம்பாதிச்ச பணத்தை ப்ரின்ஸ் ஃபவுன்டேஷன் முதலாளியா இருக்கற அஸ்வின் குமார் காம்தார்ன்ற நபர்கிட்ட குடுத்து வச்சுருக்காங்க. அவர் மூலமா, தொடர்ந்து நடந்த எல்லா ஐபிஎல்லயும் பெட்டிங்கும் பண்ணியிருக்காங்க. சிபி சிஐடி டிஜிபியா இருக்கற நரேந்திர பால் சிங்கே நேர்மையான அதிகாரி இல்ல… அவர் கண்டிப்பா காவல்துறை அதிகாரிகளை காப்பாத்தி விட்ருவார்னு சொல்றாங்க… “
“ஏன் அவரு நேர்மையான அதிகாரி இல்லையா ? “
“2002ல அவர் லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியா இருந்தப்போ, அவரோட பொண்ணு குர்பானி சிங்குக்கு அண்ணா பல்கலைக்கழகத்துல, ஜெயலலிதா புண்ணியத்துல சீட் வாங்கினாரு. அந்தப் பொண்ணுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கெடச்சுது. அந்தப் பொண்ணு படிக்கனும்ன்றதுக்காக ஆபீஸ்ல அவருக்கு குடுத்த கம்ப்யூட்டரைப் போயி வீட்டுல வச்சுக்கிட்டாரு. அவரு லஞ்ச ஒழிப்புத் துறையிலேர்ந்து ட்ரான்ஸ்பர் ஆகிப் போன பிறகு கூட அந்தக் கம்ப்யூட்டரை குடுக்கல.
அப்புறம் உபாத்யாய்ன்ற அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரா வந்த பிறகு, பல தடவை சொல்லியனுப்பிய பின்னாலயும் தரல. வேற வழியில்லாம ஒரு டிஎஸ்பிய அவரு வீட்டுக்கே அனுப்பிட்டாங்க. அப்புறம்தான் அந்தக் கம்ப்யூட்டரை குடுத்தாரு. அந்தக் கம்ப்யூட்டர் உடைஞ்சு நாசமாகி பயன்படுத்த முடியாத நிலைமையிலதான் திருப்பிக் குடுத்தாரு. அப்படிப்பட்ட ஆளு, பெட்டிங்குல சிக்குன காவல்துறை அதிகாரிகள் மேல எப்படி நடவடிக்கை எடுப்பாரு… ? “
“அதுவும் சரிதான்.. லஞ்ச ஒழிப்புத் துறையில ஒரு அதிகாரிக்கு எக்ஸ்டென்ஷன் குடுத்துருக்கறதாகவும், அவரை மாதிரி ஒரு சிறந்த அதிகாரியைப் பாக்கவே முடியாதுன்னும் டைம்ஸ் ஆப் இந்தியாவுல செய்தி வந்துருந்துச்சே.. ? “ என்று கேள்வி எழுப்பினார் கணேசன்.
“பெய்ட் நியூஸ்னா என்னன்றதுக்கு அந்த செய்தி உதாரணம். முதல்ல குணசீலனுக்கு குடுத்தது பணி நீட்டிப்பு இல்ல. மறு நியமனம். அந்த செய்தியோட தலைப்பே தப்பு. In a first, DVAC IG gets extension. யாருக்குமே குடுக்காம வரலாற்றுலயே முதல் முறையா ஒரு ஐஜிக்கு எக்ஸ்டென்ஷன்னு போட்ருக்காங்க.. இதுக்கு முன்னாடி எஸ்.பியா இருந்த நல்லமா நாயுடுவுக்கு 1997 முதல் பணி நீட்டிப்பு குடுத்துருக்காங்க…
அந்த செய்தியில போட்ருந்த மாதிரி, அவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐஜியா வந்ததும் 500 கேஸ் பதிவு பண்ணியிருக்காங்கன்னு போட்டதெல்லாம் புருடா. அவர் சிறப்புப் புலனாய்வுக் குழுவோட ஐஜி. அந்த குழு அரசியல் வழக்குகளை மட்டும்தான் கவனிக்கும். அந்தப் பிரிவு 1996ல தொடங்குனதுலேர்ந்து இது வரைக்கும் கணக்கு பண்ணாக் கூட 500 வழக்கு வராது. எதுக்காக இப்படி அல்பத்தனமா தன்னைப் பத்தி நியூஸ் வர வைக்கிறாருன்னு தெரியல.. “
“சரி அவருக்கு மறு வேலை வாய்ப்பு எதுக்கு குடுத்தாங்க ? “
“வேலை செய்யாம இருக்கறதுக்குத்தான். “
“என்னடா சொல்ற.. ? “
“ஆமாம் மச்சான்.. ஒரு காவல்துறை அதிகாரியோட வேலை என்ன… ? தனக்குக் கீழ் இருக்கற வழக்குகளை சீக்கிரம் முடிச்சு குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தர்றது. இவருக்கு கீழ இருக்கற வழக்கு பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கு. இந்த வழக்கை இவர் சீக்கிரம் முடிச்சார்னா என்ன ஆவார்..? அவர் வேலையே செய்யாம, இந்த வழக்கை நடத்தாம இருக்கறதுக்குத்தான் இவருக்கு மறு நியமனம். “
“வேற என்னப்பா காவல்துறை செய்திகள்…“
“தஞ்சாவூர் சரக டிஐஜியா இருக்கற ஹனீபா, தஞ்சாவூர்ல புதுசா தொடங்கியிருக்கற மீனாட்சி மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு ஆயுதம் தாங்கிய காவலர்களை பாதுகாப்புக்காக குடுத்துருக்காரு.. “
“இதுல என்ன தப்பு இருக்கு. ? “
“மீனாட்சி மெடிக்கல் மிஷன் மருத்துவமனையை நடத்தறது மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமனோட மகன் டாக்டர் குரு சங்கர். இவருதான் இப்படி பாதுகாப்பு கேட்டுருக்காராம். பாதுகாப்பு கேட்டு காவல்துறை குடுக்காததுனால, நீதிமன்றத்தை அணுகியிருக்கார். நீதிமன்றம் சட்டப்படி என்ன செய்யனுமா அதை செய்யுங்கன்னு உத்தரவு போட்ருக்கு. பாதுகாப்பு குடுக்கனுமா வேணாமாங்கறதை, உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையிலதான் முடிவு செய்யணும். ஆனா, உளவுத்துறை அறிக்கையே இல்லாம, பாதுகாப்பு குடுக்கணும்னு உத்தரவு போட்ருக்கார் ஹனீபா…“
“ஏன் அவரு இப்படிப் பண்ணார் ? “
“ஹனீபா எங்க காசு கெடச்சாலும் வாங்கிக்கறவருப்பா… 2001லயே அவர் மேல லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை இருந்துச்சு.. அன்னையிலேர்ந்து இன்னைக்கு வரை மாமூல் வாழ்க்கைதான்.. “
“சரி.. நீதிமன்ற செய்திகள் இல்லையா மச்சான்.. ? “
“சைதாப்பேட்டை நீதிமன்றத்துல 11வது நீதிமன்ற நீதிபதியா இருக்கறவரு பேரு சரவணன். இவரு இதுக்கு முன்னாடி தாம்பரம் நீதிமன்ற நடுவரா இருந்தாரு.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியா இருக்கடி டி.முருகேசனுக்கு இவரு ரொம்ப நெருக்கம். இவருக்கு எந்த அளவுக்கு செல்வாக்குன்னா, ஒரு முறை இவரை தூத்துக்குடி நீதிமன்ற நடுவரா மாற்றல் பண்ணிட்டாங்க. ஆனா இவர் தன்னோட செல்வாக்கால, மறு நாளே அந்த மாறுதல் உத்தரவை ரத்து பண்ணி தாம்பரம் வாங்கிட்டு வந்துட்டார்.
சைதாப்பேட்டை 11வது நீதிமன்றம், சென்னை மாநகர காவல்துறையோட மத்திய குற்றப்பிரிவு வழக்குகள் எல்லாத்தையும் விசாரிக்கிற நீதிமன்றம். இந்த நீதிமன்றம்தான் சமீபத்துல ஐபிஎல் பெட்டிங்கில சம்பந்தப்பட்ட புக்கிகளுக்கு ஜாமீன் வழங்கியிருக்கு. இந்த ஜாமீன் வழங்கப்பட்டதுக்காக பெரிய தொகை கைமாறியிருக்குன்னு சொல்றாங்க…. “
“இந்த விவகாரத்துல சிக்கின எல்லாருமே மார்வாடிங்க போலயே…“
“மார்வாடிங்கதான்.. மார்வாடிங்கதான் தமிழ்நாட்டோட பொருளாதாரத்தையே தீர்மானிக்கறாங்க. அவங்க கட்டுப்பாட்டுல பல கீழமை நீதிபதிகள் இருக்காங்க.. அவங்க நெனச்சா என்ன வேணாலும் சாதிக்க முடியும்…
அவங்க சாதிக்கறது கூட பரவாயில்ல…. நம்ப பவர்ஸ்டார் சாதிச்சிருக்கார்…“
“என்னய்யா சொல்ற ? “
“ஆமாம் ஒரு நீதிபதியோட மனைவி ஒரு புது ஹோண்டா கார் வாங்கியிருக்காராம். சில்வர் கலர் ஹோண்டா அமேஸ்.. அந்தக் காரை வாங்கிக் குடுத்ததே பவர் ஸ்டார் சீனிவாசன்னு, நீதிமன்ற வளாகத்துல பேச்சா இருக்கு.
“அவரு எதுக்கு இவர் நீதிபதி மனைவிக்கு வாங்கித் தரணும் ? “
“பவர் ஸ்டாருக்கு ஜாமீன் நீதிபதிதானே குடுக்கணும்… சீக்கிரம் ஜாமீன் கிடைச்சாதானே குண்டாஸ் போட்றதுக்கு முன்னாடி வெளியில வர முடியும் இந்தப் பவர்ஸ்டாரோட கதை ரொம்ப சுவராஸ்யமானது. பவர் ஸ்டாரா ஆவறதுக்கு முன்னாடி இவர் பேரு சீனிவாசன். இவர் படிச்சது 8வது வகுப்பு..
சிதம்பரத்துலேர்ந்து கடலூர் போற வழியில உள்ள புட்லூர்தான் இவர் சொந்த ஊரு. வெள்ளாள முதலியார். சென்னைக்கு வரும்போது இவரு எடுத்துட்டு வந்தப் பணத்தை, ஒரு ஆளு ஏமாத்தி ஆட்டைய போட்டுட்டான்.. அதனால, என்னைக் குத்திய கத்தியாலயே இந்த சமூகத்தை குத்துறேன்னு சபதம் போட்டாரோ என்னவோ தெரியல.. திருப்பிக் குத்த ஆரம்பிச்சுட்டாரு.
8வது படிச்ச இந்து ஆளு, ஆரம்பத்துல தன்னை அக்குபஞ்சர் டாக்டர்னு சொல்லிக்கிட்டாரு.. அப்படியே கொஞ்ச கொஞ்சமா ஏமாத்த ஆரம்பிச்சுட்டாரு. 2005ல ஒரு முறை, அதுக்குப் பின்னாடி ஒரு முறை மோசடி வழக்குல கைதானாரு. அப்போ ஜெயிலுக்குப் போனபோது, ஜெயில் உள்ள இருந்த 420 கேசெல்லாம் சேந்து ஒரு பெரிய கேங்கா உருவாகுறாங்க..
வெளியில வந்ததும் இதே வேலைதான். மொதல்ல காங்கிரஸ் கட்சியில சேந்தாரு. பின்னாடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில சேர்ந்து மாநில மருத்துவ அணி செயலாளரா ஆனாரு… காவல்துறைக்கு காசை அள்ளி இரைப்பாரு.. இவரு மேல 20 புகார் இருக்குன்னா, காவல்துறைக்கு காசைக் கொடுத்து ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யச் சொல்லுவாரு. ஒரு வழக்குல கைதானதும், புகார் குடுத்த மத்தவங்கள்லாம் நம்ப புகார்லதான் உள்ள போயிருக்காருன்னு நெனச்சுக்குவாங்க.. வெளியில வந்ததும், எந்த வழக்குல கைதாயிருக்காரோ, அந்த வழக்கோட புகார்தாரருக்கு மட்டும் பணத்தை செட்டில் பண்ணிடுவாரு…
இதுதான் இவரோட ஸ்டைல்… இவருக்கு முதல்ல திருமணம் ஆயி, ஒரு மகள் இருக்கு. அந்தப் பெண்ணோட பேருதான் லத்திக்கா. இவரு கூட ஜெயில்ல இருந்தவரு பேரு ஜான்சன். அந்த ஜான்சன் பின்னாடி பவர் ஸ்டார் டீம்ல ஐக்கியம் ஆயிட்டாரு… ஜான்சனோட தங்கை ஜுலியை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு..
இவரோட டீம், டெல்லி, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசத்துலயெல்லாம் போயி சீட்டிங் பண்ணியிருக்காங்க. பல இடங்கள்ல இவர் மேல வழக்கு இருக்கு.. ஆனா எதைப் பத்தியும் கவலைப்படாம, பணத்தை போலீஸுக்கும், மீடியாவுக்கும் தண்ணி மாதிரி இறைப்பாரு…. அதனால இவரோட வண்டி பிரமாதமா ஓடிக்கிட்டு இருந்துச்சு…
தயாரிப்பாளர் துரியா
குஜராத்தை சேர்ந்த பெண்மணி ஒருத்தவங்க, பவர் ஸ்டாரோட முன்னோடியா இருந்த ரமேஷ் ரெட்டின்ற ஆளுகிட்ட பி.ஏவா இருந்தாங்க. அவங்க பேரு துரியா. அந்த துரியாவுக்கு கல்யாணம் ஆகி காலேஜ் படிக்கிற பொண்ணு இருக்கு. அந்த ரமேஷ் ரெட்டியை திடீர்னு பணம் கொடுத்தவங்கள்லாம் நெருக்க ஆரம்பிச்சதும் அவர் எல்லாத்தையும் விட்டுட்டு ஆந்திராவுக்கு ஓடிட்டாரு… அவரு ஓடுனதும் அவரு விட்டுட்டுப் போனதையெல்லாம் துரியா சுருட்டிக்கிட்டு வந்துட்டாங்க… இப்படி வெளியில வந்த துரியாவை இப்போ யாரு வச்சுக்கறதுன்ற வரலாற்று சிக்கல் வந்தப்போதான், பவர் ஸ்டார் வர்றாரு… துரியாவுக்கு, தமிழ், ஆங்கிலம், இந்தி குஜராத்தின்னு நாலு மொழி சரளமா தெரியும். நுனி நாக்கு ஆங்கிலத்துல பின்னி பெடலெடுப்பாங்க. இதைப் பாத்ததும் பவர்ஸ்டார் இம்ப்ரெஸ் ஆகி, துரியாவை தன்னோடு எல்லாப் படத்துக்கும் தயாரிப்பாளரா ஆக்கிட்டாரு.. “
“அவரு ஒரு படம்தானே எடுத்தாரு… ? “
“ஒரு படம்தான் எடுத்தாரு… ஒரு எடுத்துட்டு 10 படத்துக்கு பூஜை போட்டு வௌம்பரம் குடுப்பாரு… இதப் பாத்துட்டு ஒரு நாலு டிஸ்ட்ரிப்யூட்டர் அட்வான்ஸ் குடுக்க மாட்டானான்னு ஒரு நம்பிக்கைதான்..
இந்த பவர்ஸ்டார்தான், ஒரு நீதிபதியோட மனைவிக்கு சில்வர் கலர் ஹோண்டா அமேஸ் வாங்கிக் குடுத்துருக்காரு….“
“அத விடு மச்சான்…. முக்கியமான மேட்டருக்கு வா….“
“சொல்டா…. “
“பவர் ஸ்டார் ஜெயிலுக்குப் போயிட்டாரு…..“
“ஆமா… குண்டாஸ் கூட போடப்போறதா பேசிக்கிறாங்க….“
“பவர் ஸ்டார் வச்சுருந்த …… …… ……. “
“போடா லூசுப் பயலே…. “ என்று வடிவேலுவை எழுந்து அடிக்க ஓடினான் தமிழ்.”
”அவனை அடிக்கறத விடு… எங்க அலுவலகத்தை இடிக்கப் போறாங்களா… ? ” என்று கேட்டான் ரத்னவேல்.
”உங்க அலுவலகத்தை இப்போதைக்கு இடிக்கிற மாதிரி திட்டமெல்லாம் எதுவும் இல்லை மச்சான்…. சும்மாவே உங்க ஆளுங்க பத்திரிக்கை சுதந்திரம்னு கூப்பாடு போடுவாங்க… இதுல சட்டவிரோதமா கட்டுன கட்டிடத்தை இடிச்சா என்ன பண்ணுவாங்க தெரியுமா ? “ஜெ ஆட்சியில் பறிபோகும் பத்திரிக்கை சுதந்திரம்”னு தலைப்பு போட்டு, ஒரு பத்து அரசியல் கட்சித் தலைவர்கள்ட, கருத்து கேட்டு, தமிழ்நாடே கொதிக்கிறது-னு பொய்ய எழுதுவாங்க.. ஊர்ல இருக்கற தப்பையெல்லாம் எழுதறேன்னு பேரு.. ஆனா சொந்தக் கட்டிடத்தைக் கூட அனுமதி வாங்கி ஒழுங்கா கட்டலை… இதுதான் திராவிடம் பேசிக்கிட்டு பத்திரிக்கை நடத்தறவங்களோட லட்சணம்.
பொது வழியை ஆக்ரமிச்சு கட்டிடம் கட்டுனதை ஒப்புதல் குடுக்கச் சொல்லி குடுத்த கடிதத்தை சிஎம்டிஏ நிராகரிச்சுட்டாங்க…. இது விஷயமா அடுத்து என்ன நடக்குதுன்றதை சொல்றேன் மச்சான். உங்க பத்திரிக்கை யோக்கியதையை இப்போவாவது புரிஞ்சுக்க… “ என்று சொல்லி விட்டு எழுந்தான் தமிழ்.
அவனைப் பின்தொடர்ந்து அனைவரும் கலைந்து தத்தமது அறைக்கு சென்றனர்.