கடந்த 2010ம் ஆண்டு, நளினி முன் விடுதலை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, நளினியிடம் செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக, கருணாநிதி அரசு குற்றம் சுமத்தியது.
இதையடுத்து, நளினி சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், வேலூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த 10 மே 2013 அன்று வேலூர் இரண்டாம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்து.
இந்த வழக்கில் நளினியை நேரில் ஆஜராகுமாறு 29 ஜுலை 2013 அன்று நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய இணைப்பு