கனிமோழிக்கு சவுக்கின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த பிறந்த நாள் கனிக்கு இனிமையாக இருந்ததா என்றால் இல்லை. இன்று கனிமொழி ஒரே அழுகாச்சி.. எல்லா பிறந்த நாளுக்கும் கூடவே இருந்து மதிய உணவு சாப்பிடும் கருணாநிதி இந்த பிறந்த நாளுக்கு கூட இருந்து மதிய உணவு உண்ணாதது மட்டுமல்ல, காலையில் வந்தவர் மாலை வரை மீண்டும் வரவேயில்லை.
இதனால் கனிமொழி ஒரே அழுகையாம்… அய்யோ பாவம்.. இதுக்கு ஏன் மேடம் அழுவுறீங்க… வோல்டாஸ் கட்டிடமா கைய விட்டுப் போச்சு…. ? இல்ல விருகம்பாக்கத்துல இருக்கற 78 க்ரவுண்டா போச்சு…. அப்பா சாப்பிட வரல அவ்ளோதானே மேடம்… ? இதுக்குப் போய் அழுவலாமா ? ஆனா, உங்களுக்கு கொஞ்சம் சோகம் இருக்கத் தான் செய்யும். உங்க அண்ணன் வேற சென்னை சங்கமம் நடக்கக் கூடாதுன்னு சொல்லிருக்காறாமே.. உங்கள எம்.பி பதவிய வேற ராஜினாமா செய்யச் சொல்லிருக்காறாமே… என்ன மேடம், இந்த பிறந்த நாள் உங்களுக்கு இப்படி சோகமா அமைச்சுருச்சு ?
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.
சவுக்குக்கு உண்மையிலேயே கஷ்டமா இருக்குமேடம்… ?
உங்க அண்ணன், அஞ்சா நெஞ்சன் போன வாரம் என்ன பண்ணார் தெரியுமா ? 31 டிசம்பர் அன்னைக்கு நைட்டு, உங்க டாடிக்கு போன் பண்ணி “அப்பா, ராசாவையும் கனிமொழியையும் கட்சிய விட்டு நீக்கி வையுங்க. இல்லன்னா, நான் மந்திரி பதவியையும் கட்சிப் பதவியையும் ராஜினாமா பண்ணிடுவேன். அப்புறம் உங்க இஷ்டம்“ என்று சொல்லி விட்டு, “இதுதான் எனது புத்தாண்டு செய்தி“ என்று வேறு சொல்லி விட்டார். உங்க டாடி ரொம்ப கவலையாகி, என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கார்.
இந்த டென்ஷன்லதான் இப்பவும் இருக்கார். முந்தா நாள் என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரியாது மேடம். முந்தா நாள் நைட்டு, அஞ்சா நெஞ்சன் கோபாலபுரம் வந்தாரு. வந்து அன்னைக்கு நைட்டே, பஞ்சாயத்த ஆரம்பிச்சுட்டாரு. “நானும் தம்பியும் ஊர் ஊரா அலஞ்சு கட்சிய வளக்குறோம். கட்சிக்காக நாயா உழைக்குறோம். ஆனா என்ஜாய் பண்றது மட்டும் அந்தக் குடும்பமா ? “ என்று பஞ்சாயத்தை தொடங்கியிருக்கிறார். உங்க டாடி முந்தாநாள் நைட்டு பத்து மணிக்கு கௌம்பி போனார் ஞாபகம் இருக்கா… ? அது உங்க அண்ணன் குடுத்த டார்ச்சர்ல தான் மேடம். போய் உங்க அண்ணன கன்வின்ஸ் பண்ணப் பாத்துருக்கார். ஆனா அஞ்சா நெஞ்சன் கொஞ்சமும் மசியல. நேத்து காலையில இந்தப் பஞ்சாயத்து தொடர்ந்து நடந்தது மேடம். நேத்து காலையிலயே தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு உங்க டாடிக்கிட்ட லெட்டர் குடுத்துட்டாரு.
ஈழப் போராட்டத்துக்காக உங்க எம்.பி பதவிய ராஜினாமா பண்ணி உங்க டாடிக்கிட்ட லெட்டர் கொடுத்தீங்களே… அது மாதிரி இல்ல மேடம் இது…. உங்க அண்ணன் நெஜம்மாக்குமே கோபமா இருக்கார்.
உங்க டாடி படா கேடியாச்சே…. அவர் என்ன பண்ணார் தெரியுமா ? ராஜாவை கட்சிய விட்டு நீக்கறதுக்கு பதிலா, பூங்கோதையை அமைச்சர் பதவியை விட்டு ராஜினாமா செய்ய வைச்சுட்டு, உங்க அண்ணன சமாதானப் படுத்தலாம்னு ட்ரை பண்றாரு. அதாவது பூங்கோதை ராஜினாமா செய்தால் உங்க அண்ணன் கோபம் கொறஞ்சுடுமாம். உங்க அண்ணன் உங்க டாடிய எத்தனை வருஷமா பாக்கறாரு…. ? உங்க டாடியோட கேடி வேலை தெரியாது அவருக்கு ? அதுனால அவரு காண்டாயிட்டாரு.
உங்க டாடி இன்னைக்கு காலைலே வீட்டுக்கு வந்து உங்களுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு, ஒரே ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டாரா… சாப்டுட்டு நேரே தலைமைச் செயலகம் போனாரா… போனவுடன் டிவியப் போட்டுப் பாத்துருக்கார். என்டிடிவி சேனல்ல, அழகிரி மந்திரி பதவிய ராஜினாமா செய்து விட்டார்னு நியூஸ் ஓடிட்டு இருக்கு… அவ்ளோதான். உங்க டாடிக்கு வந்துச்சு பாருங்க கோபம்…. கத்தித் தீத்துட்டாரு…
அந்தக் கோபத்துலதான் மேடம் லன்ச்சுக்கு உங்க கூட சாப்பிட வரல… டாடிக்கு உங்க மேல கொள்ளைப் பிரியம் மேடம். 2001ல் அவர் அரெஸ்ட் ஆனப்போ, சென்ட்ரல் ஜெயில்ல அவர் பக்கத்துலேயே இருந்தீங்களே ஞாபகம் இருக்கா ? அதே மாதிரி நீங்க அரெஸ்ட் ஆகும்போது, அவர் கூட இருக்காரா இல்லையான்னு பாருங்களேன்…. கண்டிப்பா இருப்பார். நீங்க அவர் செல்லப் பெண் மேடம்.
உங்களுக்கு இருக்கற பிரச்சினை பத்தாதுன்னு, பாருங்களேன், சில வேலையற்றவர்கள், நீங்க ஆசை ஆசையா நடத்துற சென்னை சங்கமம் நிகழ்ச்சியில போலிப் பாதிரி கஸ்பர் கலந்துக்கக் கூடாதுன்னு, ஒரு பொது நல வழக்கு வேற சென்னை உயர்நீதிமன்றத்துல போட்ருக்காங்களாம். என்ன கொடுமை மேடம் இது….
எவ்ளோ ஆசை ஆசையா ப்ரெஸ் மீட் கொடுத்தீங்க… சென்னை சங்கமம் தொடர்பா… சிபிஐ ரெய்டு பண்ணாலும் சென்னை சங்கமம் நடக்கும்னு எவ்ளோ நம்பிக்கையோட சொன்னீங்க….
பாருங்களேன். கேஸ் போட்டு எப்படி உங்க நிம்மதிய கெடுக்கறாங்க…. உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் ஜாபர் சேட் எப்படி மேடம் இருக்காரு ? நீங்க ஏதாவது பத்திரிக்கைக்கு பேட்டு கொடுத்தா, அந்த பத்திரிக்கை ஆபீசுக்கு போன் பண்ணி “நல்லா போடுங்க“ ன்னு ஏன் மேடம் கேட்டுக்கறாரு… ?
ஆனா ஒரு விஷயம் மேடம். ஊரு பூரா வசூல் பண்றாரு… உங்க பர்த்டே போட்டோவப் பாத்தா உங்க டாடிக் கிட்டயே நீங்க வசூல் பண்றீங்களே மேடம். உங்க திறமை இதிலேயே தெரியுது மேடம்.
பிறந்த நாள் வாழ்த்துக்களோட, உங்களுக்கு ஒரே ஒரு ரெக்வெஸ்ட் மேடம். சவுக்குக்கு வேலை இப்பவோ, அப்பவோன்னு இருக்கு.. எப்படியும் 10 நாள்ல டிஸ்மிஸ் பண்ணிடுவாங்க. அப்போ சவுக்குக்கு சம்பாத்தியத்துக்கு வழி வேணும். சவுக்குக்கு வேலை போயிடுச்சுன்னா, அந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி பணத்தை எண்ணி வைக்கிற வேலை கொடுங்க மேடம். உங்களுக்கு இருக்கற ஆயிரம் வேலையில, இவ்ளோ பணத்தை உங்களால மட்டும் எண்ண முடியாது. ஊருல யாரையும் நம்ப வேற முடியல…..
சவுக்கு காசு விஷயத்துல நேர்மையா நடந்துக்கும் மேடம். அதனால நம்பி அந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியக் குடுக்கலாம். கரேக்டா எண்ணித் திருப்பிக் கொடுத்துடும் மேடம்.
மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம்.