“வணக்கம்… வணக்கம்…” என்று உரக்க அறிவித்தபடியே மொட்டை மாடியில் நுழைந்தான் தமிழ்.
”வா மச்சான். உக்காரு…. என்னென்ன செய்திகள்லாம் வச்சுருக்க.” என்று ஆவலாகக் கேட்டான் பீமராஜன்.
”இருக்குடா… இருக்கு… நெறய்ய இருக்கு.. எங்க ஸ்டார்ட் பண்றதுன்னு யோசிக்கிறேன்” என்றான் தமிழ்.
”அம்மாக்கிட்ட இருந்தே ஸ்டார்ட் பண்ணுடா” என்றான் ரத்னவேல்.
”ம்ம்… ஓகே… அம்மாவை யானை முட்டினதுக்கு சகுனம் சரியில்லாததுதான் காரணம்னு நினைச்சுட்டாங்க. அதுக்காக தமிழ்நாட்டில் உள்ள பல ஜோசியர்களை கொடநாட்டுக்கு வரவைச்சு ஏதாவது தோஷமான்னு கேட்டுருக்காங்க.”
”யானை முட்டுனதுக்கு என்ன பரிகாரம்னு சொன்னாங்களாம் ?”
”இதுக்கு எதுக்கு பரிகாரம்… யானை இருக்கற இடத்துக்கு போகாம இருந்துட்டா போதாதா ? ஒரு முதலமைச்சர் யானைக்கு லட்டு ஊட்டி விட்றதும்.. அது முட்றதும், இது செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியா இடம் பெறுவதும், தமிழ்நாட்டுல மட்டுமே நடக்கற கூத்து.. ”
”சரி… அவங்களுக்கு யானைகளை புடிக்கும். அதனால லட்டு ஊட்றாங்க… இதுல என்னடா தப்பு இருக்கு” என்றான் வடிவேலு.
”யானைகளைப் பிடிக்கும்னு சொல்றதும் உண்மையில்லயே… அப்படி உண்மையிலயே யானைகளைப் பிடிக்கும்னா, பல யானைகளோட சாவுக்கு காரணமான ஜக்கி வாசுதேவை காலி பண்ண வச்சுருக்கனுமா இல்லையா ? அனுமதி இல்லாம கட்டிடம் கட்டிட்டு, இப்போ அனுமதி குடுங்கன்னு ஒரு விண்ணப்பம் தர்றான். ஏற்கனவே இடிக்கிறதுக்கு நோட்டீஸ் குடுத்து இருக்கறதை கண்டுக்காம, அந்த விண்ணப்பத்தை வாங்கி சென்னைக்கு அனுப்பறார் கோவை ஆட்சியர் கருணாகரன். இந்த மாதிரி ஆளையெல்லாம் விட்டு வச்சுட்டு, இவங்க யானைகளை நேசிக்கிறாங்கன்னு சொன்னா எப்படிடா ஒத்துக்க முடியும் ? ” என்று பொறிந்தான் தமிழ்.
கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஐஏஎஸ்
”சரி அம்மா என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க ?”
”கொடநாட்டில உக்காந்துக்கிட்டு, பாராளுமன்றத் தேர்தலுக்கான பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செஞ்சுட்டாங்க. ராஜ்ய சபா தேர்தல் மாதிரி எந்தக் குழப்பமும் வந்துடக் கூடாதுன்னு அட்வான்சா தேர்ந்தெடுத்துட்டாங்க. இப்போ இருக்கற எம்.பிக்களில் பெரும்பாலான ஆட்களுக்கு மறு வாய்ப்பு இல்லைன்னு சொல்றாங்க. ”
“சரி மற்ற கட்சிகள் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில இறங்கிட்டாங்களா ? “
“மற்ற கட்சிகள் இறங்கிட்டாங்களோ இல்லையோ தெரியலை… அன்புமணி ராமதாஸ் இறங்கிட்டாரு. காங்கிரஸ் கட்சியோட எப்படியாவது கூட்டணி அமைக்கணும்னு உறுதியா இருக்கறாரு…“
“அந்தக் கட்சிக்கூட சேந்தா ஜெயிச்சுடலாம்னு நினைக்கிறாரா ? “ என்றான் ரத்னவேல்.
“ஜெயிக்க முடியுமோ முடியாதோ… அன்புமணி மேல இருக்கற சிபிஐ வழக்குலேர்ந்து தப்பிக்கலாம்னு நினைக்கிறாரு. அதுக்காகத்தான் இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கறாரு. இந்தக் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவது, அன்புமணியோட மாமனார் கிருஷ்ணசாமி. “
“திமுக செய்திகள் என்னப்பா ? “ என்றார் கணேசன்.
“திமுகவுல ஒண்ணும் பரபரப்பா செய்திகள் இல்லன்ணே…. கனிமொழி இரண்டாவது முறையா ராஜ்யசபை எம்.பியா பதவியேத்துக்கிட்டாங்க. தன் மீதான வழக்குல இருந்து எப்படியாவது வெளியில வரணும்னு கடுமையா பிரயத்தனம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. உச்சநீதிமன்றம் மற்ற எந்த நீதிமன்றங்களும், 2ஜி தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டதால, தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து பண்ணனும்னு சொல்ற கனிமொழி வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க அனுமதி அளிக்கணும்னு மனு போட்டு இருக்காங்க. அந்த வழக்கில உச்சநீதிமன்றம் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கு. “
“மற்ற நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாதுன்னு உத்தரவு போட்டது உச்சநீதிமன்றம்தானே… சிபிஐ இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும் ? “ என்றான் ரத்னவேல்.
“அதெல்லாம் நீதியரசர்களுக்கே வெளிச்சம்…“
“சரி. இயக்குநர் சேரனின் மகள் விவகாரத்துல என்னதாம்பா நடக்குது ? “ என்றார் கணேசன்.
“அண்ணே… சேரன் காதலுக்கு எதிரானவர் கிடையாது. ஆனா, அந்தப் பையன் நல்ல பையன் இல்லன்னு நினைக்கிறாரு. அதனால அந்தப் பையன் வேண்டாம்மான்னு சொல்லியிருக்காரு… ஒரு சில தடவை கோபமாவும் பேசியிருக்காரு. திடீர்னு அந்தப் பொண்ணு போய் கமிஷனர் அலுவலகத்துல, எங்க அப்பாவால என் காதலனுக்கு ஆபத்துன்னு புகார் கொடுத்துடுச்சி. “
“சரி அந்தப் புகார் உண்மையா இல்லையான்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே ? “
“புகார் பொய்யின்னு அந்தப் பொண்ணே எழுதிக் கொடுத்துடுச்சு. ஆனா, ஸ்டேஷன்ல, தமிழ்த் திரைப்படத்தோட பிரபல இயக்குநர்கள் அத்தனை பேரும் வந்து அந்தப் பெண்கிட்ட பேசுனாங்க. அந்தப் பையன் வேணாம்னு சொல்லிப் பாத்தாங்க. ஆனா அந்தப் பொண்ணு முடியவே முடியாதுன்னு சொல்லிடுச்சு. அப்புறம், படிப்பை முடிம்மா… அப்புறம் கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொன்னாங்க. அதுக்கும் அந்தப் பொண்ணு முடியாதுன்னு சொல்லிடுச்சு.
அந்தப் பையன் ஒரு தறுதலைன்றதால தான் சேரன் வேணாம்னு சொல்றாருன்னு சேரன் தரப்புல சொல்றாங்க.”
”அந்தப் பொண்ணுக்கு 20 வயசுல்ல ? ” என்றான் வடிவேல்.
”ஆமா… அந்தப் பொண்ணு அவன் தறுதலையா இருந்தாலும், பொறுக்கியா இருந்தாலும், எனக்கு அவன்தான் வேணும்னு சொல்லுது. இப்படி இருக்கறப்போ யாரு என்ன பண்ண முடியும் ? இந்த மாதிரி ரவுடிப்பயல்களும், தறுதலைகளும்தான் ஹீரோக்கள்… அந்த மாதிரி நபர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்னு சொல்லிக்குடுத்ததே இந்த சினிமாக்காரங்கதானே…. அதுக்கு சேரன் பொண்ணு பலியாயிருக்கு. இதுக்கு நடுவுல, அந்தப் பொண்ணோட காதலனின் தாயார் உயர்நீதிமன்றத்துல, திங்கட்கிழமை ஆட்கொணர்வு மனு கொண்டு தாக்கல் பண்ணாங்க. அந்த மனுவின் அடிப்படையில அந்தப் பெண்ணை மதியம் 2.15 மணிக்கு நீதிமன்றத்துல நிறுத்துனாங்க”
”யாரு அந்த நீதிபதிகள் ? ”
”நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் தனபாலன்”
”இவங்களா… இந்த வழக்கு வந்ததும் போஸ்ட் மார்ட்டம் பண்ண டெல்லியிலேர்ந்து மருத்துவர்கள் வரணும்னு சொல்லலையா” என்று சொல்லி விட்டு சிரித்தான் ரத்னவேல்.
”அப்படி சொல்லலை. நாளைக்கு நீதிபதிகள் அறைக்குள்ளவே, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பெற்றோர்களோடு தனியா விசாரணை நடத்தப்படும்னு அறிவிச்சிருக்காங்க. ”
”தமிழ்நாட்டில் நடக்கும் காதலில் எது நல்ல காதல், எது நாடகக்காதல்னு பகுத்தறிஞ்சு சொல்ற ஒரே மருத்துவர் ராமதாஸ் தானே… அவர்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட வேண்டியதுதானே ? ”
”அவர் இப்போ உடல் நிலை சரியில்லாம இருக்கார் இல்லையா… அதுக்காகத்தான் அவரு வேலையை இந்த நீதிபதிகள் எடுத்துக்கிட்டு இருக்காங்க. ”
”சரிடா… நீதிபதிகள், கவனத்தோட இந்த வழக்கை விசாரிக்கிறது நல்லதுதானே…” என்று இடைபுகுந்தான் ரத்னவேல்.
”மச்சான்… நல்லதுதான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, உயர்நீதிமன்றத்துல லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, முக்கிய பிரமுகர்கள் சொந்தப் பிரச்சினைக்காக, நீதிபதிகள் இவ்வளவு நேரத்தை செலவழிக்கணுமா ? இது சேரன் குடும்பம், அந்தப் பையன் சந்துரு குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அந்தப் பெண் சட்டவிரோதமா அடைச்சு வைக்கப்பட்டு இருக்கறதா மனு தாக்கல் செய்யப்பட்டுச்சு. அந்தப் பெண் இன்னைக்கு நீதிமன்றத்துக்கு வந்ததும், உன்னை அடைச்சு வச்சுருக்காங்களான்னு கேட்டதும், இல்லைன்னு சொல்லிடுச்சு…. ஆட்கொணர்வு மனுவுல இதுக்கு மேல நீதிமன்றத்துக்கு என்ன வேலை ?”
”இது போன்ற காதல் பிரச்சினைகள் லட்சக்கணக்குல இருக்கு… இதையெல்லாம் நீதிபதிகள் தீர்த்து வைப்பாங்களா ? இளவரசனோட மரணம் தற்கொலைன்னு ஏறக்குறைய முடிவாயிடுச்சு. ஆனா, இந்த நீதிபதிகள், அந்தப் பிணத்தை ரெண்டு வாரம் வச்சுருந்து, எத்தனை போஸ்ட் மார்ட்டம் நடத்துனாங்க ? போஸ்ட் மார்ட்டம் கேட்பது ஒடுக்கப்பட்டோரின் குரல்னு சொன்னாங்களா இல்லையா ? நீதிமன்றங்கள் தங்களோட எல்லையை மீறி செயல்படலாம். ஆனா, அது எல்லாருக்கும் இருக்கணும். முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் இருக்கக் கூடாது”
”சரி வேற நீதிமன்ற செய்திகள் இல்லையா ? ” என்றான் பீமராஜன்.
”மருத்துவக் கல்லூரிகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செஞ்சு, தன்னோட பதவியின் இறுதி நாளில் உத்தரவு போட்டார் பழைய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர். இந்த உத்தரவு போட்டதால, எல்லா மருத்துவக் கல்லூரிகளும், அவங்க அவங்க இஷ்டத்துக்கு சீட்டை நிரப்பிக்கலாம். 35 மார்க் எடுத்து பாஸ் பண்ணவன்லாம், டாக்டராகலாம். இந்த வழக்குல, கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூல் பண்ணப்பட்டதா டெல்லி வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த வசூலை முன்னின்று நடத்துனது, சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் வேந்தர் வெங்கடாச்சலம்னு பேச்சு.
இப்போ இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்கணும்னு தற்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் சொல்லயிருக்கறதா டெல்லி வட்டாரங்கள் சொல்லுது. ”
”அவர் விசாரிக்க சொல்றது இருக்கட்டும்.. அவரைப் பத்தி யார் விசாரிக்கிறது….” என்று சொல்லி விட்டு சிரித்தான் வடிவேல்.
”அதெல்லாம் இனிமேதான்டா நடக்கும் ”என்று சொல்லி விட்டு தொடர்ந்தான் தமிழ்.
”சென்னை உயர்நீதிமன்றத்துல இருந்து அனுப்பப் பட்ட நீதிபதிகள் பட்டியல்ல 15 பேரை அனுப்பியிருந்தாங்க. அதுல 5 பேரை மட்டும் நீக்கிட்டு, மீதம் உள்ள 10 பேரை செலக்ட் பண்ணியிருக்கறதா சொல்றாங்க. ”
”ஒதுக்கப்பட்டவர்கள் யார் ? ”
”முனீர் ஷெரீஃப், பரமசிவம், தங்கசிவம், மற்றும் மகாதேவன் ஆகியோர் பெயர்கள் ஒதுக்கப்பட்டதா சொல்றாங்க. ரவி பால் ன்ற வழக்கறிஞர் மேல எந்தப் புகார்களும் இல்லன்னாலும், ஏற்கனவே அவரோட அப்பா உயர்நீதிமன்ற நீதிபதியா இருந்ததால அவரே வேணாம்னு சொல்லிட்டதா சொல்றாங்க. ”
“சரி.. அதை விடு… அடுத்த மேட்டருக்கு வா…“ என்று அவசரப்பட்டான் ரத்னவேல்.
“கடல் சார் பல்க்கலைக்கழகத்தோட சென்னை இயக்குநரா இருக்கறவரு டாக்டர் விஜயன். இவர் இந்தப பல்கலைக்கழகத்தோட துணை வேந்தரா இருந்தப்போ, வருமானத்துக்கு அதிகமா சொத்து சேத்ததா சிபிஐல வழக்கு இருக்கு. இப்போ இவர் இந்தப் பல்கலைக்கழகத்தோட இயக்குநரா இருக்காரு. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேரைச் சொல்லி பலமா வசூல் பண்ணிக்கிட்டு இருக்கார். இது வாசனுக்குத் தெரியுமான்றதுதான் தெரியலை…“
”சரி காவல்துறை செய்திகள் என்னப்பா ?” என்றார் கணேசன்.
”சிபி. சிஐடியில ஐஜியா இருந்த மஞ்சுநாதாவை மாத்தி வடக்கு மண்டல ஐஜியா போட்ருக்காங்க. ”
”ஏம்பா அவர் நல்லாத்தானே இருந்தாரு ?”
”அவர் நல்லாத்தான் இருந்தாரு. ஐபிஎல் சூதாட்ட விவகாரத்துல, ராடிஸ்ஸன் ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு இவர் உதவினார்னு ஒரு பேச்சு அடிபட்டுச்சு. அது மட்டுமில்லாம, திருச்சி ராமஜெயம் கொலை வழக்குல எந்த முன்னேற்றமும் இல்லை. இதெல்லாம் இவருக்கு எதிரா வேலை செஞ்சுருக்குன்னு சொல்றாங்க”
”சரி கமிஷனர் ஜார்ஜ் எப்படி இருக்கார் ? ”
”ஜார்ஜ் மேல ஏகப்பட்ட புகார்கள் வந்துக்கிட்டு இருக்கு. ஜார்ஜ் அடிக்கடி அரசுக் காரை பயன்படுத்தாமல் சொந்தக் காரை பயன்படுத்தறார். இந்த சொந்தக் காரில் இவர் செல்லும்போது, இவரோடு அதிமுக எம்எல்ஏ கலைராஜன் போறதா சொல்றாங்க. எதுக்காக அலுவலக காரை பயன்படுத்தாமல் சொந்தக் காரில் போறார்ன்றது மர்மமா இருக்கு…”
”கடந்த ஞாயித்துக் கிழமை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை, ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசியதா காவல்துறை கைது செஞ்சாங்க. ”
”ஆமாம்பா… அந்த அம்மா கிழவியாமே… ? ”
”கிழவி மட்டுமில்ல… மென்டல். அந்த அம்மா பேரு ராதா வேணுபிரசாத். அந்த அம்மா ஒரு மலையாளி. இப்போ பாலவாக்கத்துல குடியிருக்காங்க. இதுக்கு முன்னாடி கற்பகம் அவென்யூவில் உள்ள அசிந்தியா அபார்ட்மென்ட்ல தான் குடியிருந்தாங்க. இந்த அம்மா மலையாள அதிகாரிகள் அத்தனை பேரொடவும் ரொம்ப நெருக்கம்.
ரொம்ப காலத்துக்கு முன்னாடி ரவீந்திரன்னு ஒரு டிஜிபி இருந்தாரு. அவர் கூடவும் நெருக்கம். இந்த அம்மாவோட கணவர் மெட்ராஸ் ஃபெர்ட்டிலைஸர்ஸ் நிறுவனத்துல வேலை பாத்து ஓய்வு பெற்றவரு. இந்த அம்மாவோட பையன் அரசு அதிகாரியா இருக்கறாரு.
கற்பகம் அவென்யூவுல இருக்கறபோதே இந்த அம்மாவுக்கு இதே வேலைதான்… ஃப்ளாட்டுக்கு முன்னாடி வண்டிய நிறுத்தறவங்கக்கிட்ட, தகராறு பண்றது, ரோட்டுல காய்கறி விக்கறவனை போலீஸ்ல புடிச்சுக் குடுக்கறது இதே பொழப்பா இருக்குமாம். சூசன் மேத்யூ, மேத்யூ, ஜெயந்தி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த கிழவிக்கு ரொம்ப நெருக்கம்.
அந்த அசெந்தியா அபார்ட்மென்ட்ல மத்திய அரசோட கனிம நிறுவனத்துக்கு சொந்தமான வீடு இருந்துச்சு. அந்த நிறுவனத்தோட அதிகாரிகள் அங்க வந்து தங்குவாங்க. வர்ற எல்லா அதிகாரி மேலயும் புகார் அனுப்பியபடி இருந்திருக்கு. அந்த நிறுவனத்தோட சென்னை அலுவலகத்துக்கு இந்த அம்மா அனுப்பின புகார்கள் ஒரு அறை முழுக்க இருக்கறதா சொல்றாங்க. அந்த அம்மா ஒரு அதிகாரி மேல காவல்துறையில கொடுத்த புகாரை விசாரிக்க போலீஸ் வந்து அந்த அதிகாரியை கூட்டிக்கிட்டு போனாங்க.. அப்புறம் டெல்லியிலேர்ந்து அதிகாரிகள் தலையிட்டதால தப்பிச்சாரு அந்த அதிகாரி.
ஜேம்ஸ் வசந்தன் சினிமாவுல இசையமைக்க ஆரம்பிச்சதும், பாலவாக்கத்துல ஒரு வீட்டு மனை வாங்கறாரு. அந்த மனைக்கு பின்னாலதான் இந்த ராதாவோட வீடு. ஜேம்ஸ் வீட்டு மனை வாங்கினதும் அந்த மனையை தன் கிட்ட விக்கணும்னு இந்த ராதா கேட்டாங்க. ஆனா, ஜேம்ஸ் வசந்தன் குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு.
அதுலேர்ந்தே இந்த அம்மா ரெண்டு வருஷமா தொடர்ந்து தொந்தரவு குடுத்துக்கிட்டு இருந்தாங்க. ஜேம்ஸ் வசந்தன் வீடு கட்ட ஆரம்பிச்சதுலேர்ந்தே தினமும் பிரச்சினை பண்ணுவாங்க. அங்க வேலை செய்யற ஆட்கள்கிட்ட தகராறு… அவங்க மேல போலீஸ் கம்ப்ளெயின்ட்னு இந்த அம்மா பண்ணாத தொந்தரவே இல்லையாம்.. சிஎம்டிஏவுக்கு புகார் அனுப்பி, ஜேம்ஸ் வசந்தன் வீட்டை இடிக்கிற அளவுக்கு பண்ணியிருக்காங்க.
ஒரு நாள் இந்த கிழவி, காரை எடுத்துட்டு ஜேம்ஸ் வீட்டு முன்னாடி நின்னு போட்டோ எடுக்கறத, ஜேம்ஸோட மனைவி ஹேமா பாத்துட்டாங்க. நேரா அந்த கிழவி வீட்டுக்குப் போயி, ஏன் இப்படி எங்களை தொந்தரவு பண்றீங்கன்னு கேட்டாங்க… அவ்வளவுதான்… இந்த அம்மா, ஹேமா தன்னை கத்தியால குத்த வந்ததா ஒரு புகார் குடுத்து, அதுக்கும் போலீஸ் எஃப்ஐஆர் போட்டுட்டாங்க. இந்த வழக்கு இன்னும் ஆலந்தூர் நீதிமன்றத்துல நடந்துக்கிட்டு இருக்கு. இதான் இந்த அம்மாவோட பின்னணி.
இந்தப் பின்னணியில, போன வெள்ளிக்கிழமை ஜேம்ஸ் அவங்க குடும்பத்தோட கார்ல போயிருக்காரு. அப்போ, ஜேம்ஸ் காரை இந்தக் கிழவி இடிக்கிற மாதிரி ஓட்டிட்டு வந்துருக்கு. அப்போ ஜேம்ஸ் வண்டியை ஸ்லோ பண்ணிட்டு போயிட்டாரு. இவ்வளவுதான் நடந்துச்சு.
அவ்வளவுதான்… உடனே இந்த அம்மா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி, ஜேம்ஸ் மேல புகார் கொடுத்துடுச்சு. அன்னைக்கே நீலாங்கரை ஆய்வாளர் புகழேந்தி, ஜேம்ஸையும், அவர் மனைவி ஹேமாவையும் அழைச்சு விசாரிச்சுட்டு அனுப்பிட்டாரு.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, இன்ஸ்பெக்டர் புகழேந்தி “சாரை ஏ.சி பாக்கணும்னு சொல்றார்னு சொல்லி பீச் பார்க் ரிசார்ட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஜேம்ஸோட மனைவியும், அவர் கூடவே போயிட்டாங்க. அங்க பாத்தா 50 போலீசோட, ஜேம்ஸ் வீட்டுக்குப் போயி கூப்பிட்டுருக்காரு. கணவரை கைது பண்ணப் போறாங்கன்னு சந்தேகம் வந்ததும், ஜேம்ஸ் மனைவி ஹேமா, வக்கீலுக்கு போன் பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க. புகழேந்தி அவர் மனைவி கையைப் பிடிச்சு போனை பிடுங்கியிருக்காரு.. இப்படியெல்லாம் பெண்கள்கிட்ட நடந்துக்காதீங்கன்னு ஜேம்ஸ் சத்தம் போட்டதும், தீவிரவாதியை பிடிக்கிற மாதிரி கூட்டிட்டுப் போயிருக்காங்க.
ஜேம்ஸ் தரப்புல, இப்படி பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி மேல வழக்கு போடப்போறதா சொல்றாங்க. ஜேம்ஸ் ஆலந்தூர் நீதிமன்றத்துல பத்திரிக்கையாளர்கள்கிட்ட பேசியிருக்காரு. இவர் பேசியதைப் பார்த்த ஜார்ஜ், அடையாறு துணை ஆணையர் பெரோஸ் கானை கூப்பிட்டு, ஏகத்துக்கும் திட்டியிருக்காரு. எப்படி நீ அந்த ஆளை ப்ரெஸ்ஸை பாக்க விடலாம்… ஐ வில் சஸ்பெண்ட் யு ன்னு சத்தம் போட்ருக்காரு… அந்த அளவுக்கு மலையாள பாசம் ஜார்ஜ் குஞ்சுமோன் கண்ணை மறைக்குது.”
”ஜார்ஜ் நல்ல அதிகாரியாச்சே….” என்று வியந்தான் பீமராஜன்.
”நீதான் மெச்சிக்கணும்… ஜார்ஜ் எப்படிப்பட்ட அதிகாரி தெரியுமா ? 2002ல் இவர் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநரா இருந்தப்போ, அங்க ரமேஷ்னு ஒரு தனியார் கணிப்பொறியாளர் இருந்தார். அந்தத் துறையோட மொத்த கம்ப்யூட்டர்களையும் மெயின்டெயின் பண்றவர் இந்த ரமேஷ்தான்.
ஜார்ஜ் என்ன வேலை பண்ணாரு தெரியுமா… அந்த ரமேஷைக் கூப்புட்டு, ஆபீஸ் வண்டி பொலிரோவுல பர்மா பஜார் அனுப்பி, ப்ளு பிலிம் வாங்கிட்டு வரச் சொன்னாரு. ”
”இப்படியெல்லாமா பண்ணுவாரு…. ?”
“இதையெல்லாம் நான் சொல்லலடா… அந்தத் துறையில 22 வருஷம் வேலை பாத்தவருதான் சொன்னாரு… நீலப்படம் பார்ப்பது ஜார்ஜின் தனிப்பட்ட விருப்பம். அலுவலக நேரத்துல லேப்டாப்ல பாக்கறதும் அவரோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அதை வாங்க, அரசு வாகனம், அரசு டீசல், அரசு ஓட்டுநனர், சிடி வாங்கினதும் அரசு நிதி. இதை எப்படி கேள்வி கேட்காம இருக்க முடியும்… ?
லஞ்ச ஒழிப்புத் துறையோட ரகசிய நிதியை மொத்தமா ஆட்டையைப் போட்டவருதான் இந்த ஜார்ஜ். அப்போ அந்தத் துறையில தலைமையக டிஎஸ்பியா இருந்த அகஸ்டின் டானியல்ன்ற டிஎஸ்பியோட சேந்து ஜார்ஜ் அடிச்ச கூத்து கொஞ்ச நஞ்சம் இல்ல. அப்புறம் ஜார்ஜ் மாற்றப்பட்டதும், ரகசிய நிதி தொடர்பா விசாரணை நடத்தப்பட்டுச்சு…. ஆனா உயர் உயர் அதிகாரிகள் என்னைக்கு தண்டிக்கப்பட்டிருக்காங்க….
இப்படிப்பட்டவருதான் இந்த ஜார்ஜ். கடுமையான மலையாள வெறியர். சென்னை கமிஷனரா இருந்தாலும், இவருக்கு, டைம்ஸ் ஆப் இந்தியாவுல இருக்கற சில மலையாள பத்திரிக்கையாளர்கள், மாத்ருபூமி, மலையாள மனோரமா பத்திரிக்கையாளர்கள்தான் நெருக்கம்.
2002ல ஜார்ஜ் இணை ஆணையரா இருந்தப்போதான் கருணாநிதி கைது நடந்துச்சு. அப்போ ஒரு வழக்குல சினிமாத் துறையினர் சம்பந்தப்பட்டிருந்தாங்க. அந்த வழக்கை விசாரிச்ச ஜார்ஜ், அப்போ பிரபலமா இருந்த நடிகைகளோட மணிக்கணக்குல பேசிக்கிட்டு இருப்பாரு. குறிப்பா நடிகை மும்தாஜோட மணிக்கணக்குல ஜார்ஜ் கடலை போட்டதற்கான ஒலிப்பதிவு இன்னும் மத்திய உளவுத்துறைகிட்ட இருக்கு.
இப்படிப்பட்டவரைப் போயி நல்ல அதிகாரின்னு சொல்றியே…. ஒரு பொய்யான வழக்குல கைது செய்யப்பட்றவங்களோடு குடும்பம் அனுபவிக்கும் மனவேதனையை வார்த்தைகளால வர்ணிக்கவே முடியாது… ஒரு மலையாளக் கிழவி சொன்னார்னு ஒரு பிரபலமானவரோட குடும்பத்துக்கு இப்படிப்பட்ட சோதனையை கொடுத்த ஜார்ஜ் நிரந்தரமா கமிஷனரா இருப்பார்னு நெனைச்சுக்கிட்டு இருக்காரு.
இப்போ புதுசா வந்திருக்கக் கூடிய உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி அஷோக் குமார்கிட்ட அதுக்குள்ளயே இவரைப்பத்தி பல புகார்கள் குவியுது. ஆனா, அஷோக் குமாரை கண்காணிக்கனும்னு சென்னை மாநகர உளவுப் பிரிவோட இணை ஆணையர் வரதராஜுவுக்கு, ஜார்ஜ் உத்தரவு போட்டிருக்காறாம்… எப்படி இருக்கு நிலைமை பாத்தியா ? ”
“ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்குல ஏதாவது முன்னேற்றம் இருக்காப்பா ? “ என்றார் கணேசன்.
“அந்த வழக்குல குற்றவாளிகளை போலீஸ் பிடிச்சிட்டதா சொல்றாங்க. ஆனா, இந்த வழக்குல, கிச்சன் புகாரியை கஸ்டடி எடுத்து, தமிழ்நாட்டுல வச்சு விசாரிச்சிருக்காங்க.
சமீபத்துல மத்திய உளவுத்துறை, ஒரு முக்கியமான அறிக்கையை தமிழ்நாட்டுக்கு அனுப்பியிருக்காங்க.. குஜராத் மற்றும் மகாராஷ்ட்டிராவுக்கு அடுத்தபடியா, லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்ள நுழைய தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்திருக்காங்களாம். இலங்கையில லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவங்க ஊடுருவியிருக்காங்க. ராமேஸ்வரம் வழியா, தீவிரவாதிகள் ஊடுருவுவார்கள்னு உளவுத்துறை சொல்லியிருக்கு.
அல் முன் தாஹீம் னு ஒரு அமைப்பு புதுசா உருவாகியிருக்கு. இந்த அமைப்பு பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட திட்டம் போட்ருக்கறதா சொல்றாங்க. “
“சரி இலங்கையை எதுக்குப்பா தேர்ந்தெடுத்தாங்க ? “
“இலங்கையில விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்த வரைக்கும், இந்த லஷ்கர் ஏ தொய்பா ஆட்களுக்கு இலங்கை உள்ள நுழையவே பயம். புலிகள், தொலைச்சுடுவாங்கன்ற பயம் இருந்துச்சு. ஆனா, இப்போ புலிகள் அமைப்பு இல்லாததால, இலங்கையை தங்களோட களமா பயன்படுத்தறாங்க. புலிகள் அமைப்பை அழிக்க உதவிய இந்தியா இன்னைக்கு அதற்கான விளைவை சந்திச்சிக்கிட்டு இருக்கு.. “
“எங்க பத்திரிக்கையில கூட செய்தி பண்ணியிருந்தோமே.. “ என்று பெருமையாக சொன்னான் பீமராஜன்.
“பாத்தேன் பாத்தேன் உங்க செய்தியை… சிறையில் வைத்து ஸ்கெட்ச் னு கவர் ஸ்டோரி போட்டீங்களே… அது உள்ள ஏதாவது செய்தி இருக்கா ? எல்லாம் பழைய ஸ்டோரி. அந்த பழைய ஸ்டோரியவாவது ஒழுங்க போட்டீங்களா ?
என்ன போட்ருந்தீங்கன்னு படிக்கிறேன் கேளு. “சிறைச்சாலை அதிகாரிகள் அதிகமாகவே பயந்துதான் போயிருக்கிறார்கள். இரண்டு சம்பவங்களைப் பின்னணியாகச் சொல்கின்றனர். மதுரை சிறைச்சாலையில் உதவி ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் என்பவர் இந்த மாதிரியான தீவிரவாதிகளிடம் கெடுபிடியாக நடந்துகொண்டாராம். அவர்களைச் சுதந்திரமாக நடமாட விடவில்லையாம். ‘போலீஸ் நம்மைக் கண்டால் பயப்படுகிறார்கள். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பயம் இல்லை. அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று சொல்லி, சிறைச்சாலையில் இருந்து வெளியில் இருந்த ஆட்களுக்கு அவரைத் தீர்த்துக்கட்ட உத்தரவு போனது. சிறைச்சாலை வாசலில் ஜெயப்பிரகாஷின் தலையை சீவிக் கொன்றனர். இது நடந்து பல வருடங்கள் ஆகியும் கொலையாளிகளை போலீஸ் பிடிக்கவில்லை. “
இது நடந்து பல வருடங்கள் ஆகியும் கொலையாளிகளை பிடிக்கலைன்னு எழுதியிருக்கீங்க… இந்த வழக்குல அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த அபு தாஹீர், ஆஷிக், ஜப்ரு என்கிற சையது ஜபீர் அகம்மது, மற்றும் தடா அஸ்லாம் ஆகிய நாலு பேர் கைது செய்யப்பட்டு, அவங்களுக்கு ஆயுள் தண்டனையும் கிடைச்சுடுச்சு. (இணைப்பு) 2003லயே அவங்களுக்கு தண்டனை கிடைச்சு, உயர்நீதிமன்றமும் அந்த தண்டனையை உறுதி செஞ்சுடுச்சு. இதான் நீங்க செய்தி பண்ற லட்சணம்… புரியுதா ? ஆனா பேரு மட்டும் நாடித்துடிப்பு.. பாடித்துடிப்புன்னு போட வேண்டியது…
சிறை அதிகாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.
“சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணன் மேல புகார்கள் குவியுதாமே… ? “ என்றான் வடிவேல்.
கல்லாப்பெட்டி கருப்பண்ணன்
“அந்த ஆள் மேல ஒரு கொலை வழக்கு நிலுவையில இருக்கு. இந்த ஆளு புழல் சிறையில இருந்த இரண்டு ஆண்டுகள்ல 16 கைதிகள் தற்கொலை செஞ்சுருக்காங்க.. அவர் மேல ஒரு வழக்கறிஞர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பியிருக்காரு… ஆனா, இப்போ லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரா இருக்க எஸ்.கே.டோக்ரான்ற அதிகாரி, சிறைத்துறை கூடுதல் டிஜிபியா இருந்தப்போ, கருப்பண்ணன் கிட்ட மாமூல் வாங்கினவர். இவர் தீயணைப்புத் துறையில இயக்குநரா இருந்தப்பவும் மாமூல் வாங்கினவருதான். கருப்பண்ணன் மேல புகார் வந்ததும், இப்போ ஒரு பெரிய தொகைக்கு கருப்பண்ணன் கிட்ட பேரம் பேசிக்கிட்டு இருக்கறதாவும் தகவல் வந்துருக்கு.
லஞ்ச ஒழிப்புத் துறையில யார் போனாலும் இவர் பாக்க மாட்டாரு… இவருக்குக் கீழ உள்ள அதிகாரிகளைத்தான் பாக்கணும்.. “
“ஏன் இவரு யாரையும் பாக்க மாட்டாரு… ? “
எஸ்.கே.டோக்ரா ஐபிஎஸ்
“புகார் கொடுக்க வர்றவங்களை பாக்க மாட்டாரு… ஆனா புகாருக்கு ஆளான குற்றவாளிகளைத்தான் பாப்பாரு….“ என்று சொல்லியபடி சிரித்தான் தமிழ்.
அனைவரும் சிரித்தனர்.
“மச்சான்.. ஜெயா டிவியில என்னடா நடக்குது… பிரச்சினையெல்லாம் ஓஞ்சுதா இல்லையா ? “
“15 வருஷத்துக்கும் மேலா ஜெயா டிவியில வேலை பாத்துக்கிட்டு இருந்த கே.பி.சுனில் பதவியை ராஜினாமா பண்ணிட்டாரு. அவர் பையனோட கல்யாணத்தை அடுத்த மாசம் வச்சுருந்தாரு. அதை வச்சு, மீண்டும் ஜெயலலிதாவோட கடைக்கண் பார்வை கிடைக்காதான்னு பாத்துக்கிட்டு இருந்தாரு. ஆனா, நிர்வாகம் அவரை விரும்பலை. போன வாரம் ரிசைன் பண்ணிட்டாரு.
ஜெயா டிவியில உருப்படியானவங்க ஒருத்தரையும் எடுக்க மாட்டாங்க போலருக்கு. அங்க ஜோதீஸ்வரன்னு ஒருத்தரை வேலைக்கு வச்சாங்க… அந்த ஆளு, பத்தே நாள்ல, பணத்தை கையாடல் பண்ணி மாட்டிக்கிட்டாரு.
சூரின்னு மார்க்கெடிங்ல ஒருத்தர் இருந்தாரு. அதே துறையில இருந்த இன்னொரு பெண்கிட்ட சில்மிஷம் பண்ணிட்டாரு. அந்தப் பெண்ணோட அண்ணன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர். நேரா பத்து பேர் ஆபீஸுக்கு வந்துட்டாங்க. அன்னைக்கே சூரியோட சீட்டையும் கிழிச்சிட்டாங்க… என்ன நடக்குதுன்னே யாருக்கும் புரியலை.. “
“தமிழ் இந்து என்ன நிலைமையில இருக்கு ? ஆளெடுக்கும் படலம் சற்றே ஓய்வடைஞ்சிருக்கு. நிருபர்கள், சீனியல் பதவிக்கு ஆட்களை எடுத்தாங்க. இன்னும் புகைப்படக் கலைஞர்களை எடுக்கலை. மார்க்கெட்டிங் நல்லா பண்ணணும்னு பெரிய திட்டமெல்லாம் வச்சுருக்காங்க. டைம்ஸ் ஆப் இந்தியா சந்தா வசூல் பண்ணி வியாபாரத்தை பெருக்கினா மாதிரி, திட்டம் கொண்டு வர்றாங்க. ஆறு மாசத்துக்கு 333 ரூபாய் சந்தான்னு நிர்ணயம் பண்ணியிருக்காங்க.
“இது வெற்றி பெறுமா ? “
“அது சந்தேகமாத்தான் இருக்கு. டைம்ஸ் ஆப் இந்தியா இதை விடக் குறைவான தொகைக்கு, ஒரு வருட சந்தா தரும்போது, ஆறு மாசத்துக்கு 333 ரூபா அதிகம்னு நினைப்பாங்க. அதையெல்லாம் மீறி, இந்த செய்தித்தாளை மக்கள் விரும்பணும். புதுசா ஒரு செய்தித்தாளை மக்கள் கிட்ட வெற்றி பெறச் செய்யறது அவ்வளவு எளிதான காரியம் இல்ல… பாப்போம் எப்படிப் பண்றாங்கன்னு. “
“போலாம்பா… “ என்று கணேசன் எழுந்தார். சங்கத்தை கலைத்தனர்.