சரி உங்களுக்கு க்ளூ… ஓகேவா…. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
ஒருவர் கவிஞர். மற்றொருவர் கயவர்
ஒருவர் வயதில் மூத்தவர் மற்றொருவர் ஊரை ஏய்த்தவர்
ஒருவர் வாயில் கவிதை நடைபயிலும் மற்றொருவர் வாயில் பொய்மை நடைபயிலும்.
ஒருவர் பாட்டெழுதுவதில் புலமை மிக்கவர். மற்றவர் அடுத்தவருக்கு வேட்டு வைப்பதில் திறமை மிக்கவர்.
ஒருவர் மெட்டுக்கு பாட்டெழுதுபவர். மற்றவர் ஒட்டுக் கேட்பவர்.
இப்போது புரிந்திருக்குமே… சவுக்கு யாரைப் பற்றிச் சொல்கிறது என்று….
ஆம் தோழர்களே… அந்தக் காலி வேறு யாருமல்ல. நமது ஜாபர் சேட்தான்.
அவருக்கும் கவிஞர் வாலிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? இருக்கிறது தோழர்களே… இருக்கிறது.
இந்த ஆண்டின் முதல் நாளில் பல மாதங்களாக முயற்சி செய்த ஜாபர் சேட் ஜனவரி 1ம் தேதி மாலை சரியாக 4.15 மணிக்கு கவிஞர் வாலியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர், திரைப்பட இயக்குநர் கதிர். காதல் வைரஸ் படம் எடுத்தாரே… அந்தக் கதிர் தான். கவிஞர் வாலியை ஏறக்குறைய மூன்று மாதங்களாக தொந்தரவு செய்து, உங்களை ஒரு முக்கியமான நபர் பார்க்க வேண்டும் என்று ரொம்ப தொந்தரவு செய்யவும், என்னடா இது தொல்லையாகப் போய் விட்டது என்று சரி வரச் சொல்லுங்கள் என்று கூறினார்.
வருபவர் யார் என்பதை இயக்குநர் கதிர் சொல்லவில்லை. ஒரு முக்கியமான நபர் என்று மட்டும் சொன்னார்.
வாலிக்கு இந்த போலீஸ் அதிகாரிகள், யார் எவ்வளவு அதிகாரம் படைத்தவர் என்றொல்லாம் எதுவும் தெரியாது. வந்தவர், கவிஞர் வாலியின் காலைத் தொட்டு கும்பிட்டார். (ஜாபர், உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா ?வாலி காலையே தொட்டுக் கும்பிடுகிறீர்கள் என்றால் நீங்கள் கருணாநிதி காலிலேயே விழுந்து உருளுவீர்கள் போலிருக்கிறதே) சார் நான் உங்கள் தீவிர ரசிகன்….. உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடம். சிறிய வயதிலிருந்தே உங்கள் பாடல்களை கேட்டு வருகிறேன்.
நீங்கள் அனுமதி கொடுத்தால் உங்கள் பாடல்களில் பிடித்தவற்றை பாடுகிறேன் என்று கேட்டு விட்டு, மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா என்ற பாடலை முழுமையாக பாடினார் (இது கருணாநிதிக்கு ராசாத்தி அம்மாள் பாடுற பாடலாயிற்றே) பிறகு எம்ஜிஆரின் பிரபல பாடலான கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்ற பாடலை பாடி விட்டு, “மண் குடிசை வாசலேன்றால் தென்றல் வர வெறுத்திடுமா, மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா“ என்ற வரிகளைப் பற்றி மிகவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.
எங்க வீட்டுப் பிள்ளை பாடலை முழுமையாக பாடி, எம்ஜிஆருக்காகவே எழுதப் பட்ட வரிகள் என்று “சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்“ (நீங்க இப்போ இதைத்தானே ஜாபர் பண்ணிக்கிட்டு இருக்கீங்க) என்ற வரிகளை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
தத்துவப் பாடல்கள் மட்டுமல்லாமல் “மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட“, “மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே“, “குயிலாக நானிருந்தேன்ன, குரலாக நீ வரவேண்டும்“, “மன்னிக்க வேண்டுகிறேன்“ என பல பாடல்களை முழுமையாக மனப்பாடமாக சொன்னதும், வாலி அசந்து போய் விட்டார்.
4.15க்கு சரியாக தொடங்கிய சந்திப்பு 5.30 மணி வரை தொடர்ந்தது. இந்த சந்திப்பின் போது 20 கைபேசி அழைப்புகள் ஜாபருக்கு வந்தன. ஆனால் வாலியே பரவாயில்லை பேசுங்கள் என்று சொன்னபோதும், எடுக்காமல் அழைப்பை தவிர்த்து இருக்கிறார் ஜாபர். ஒரே ஒரு அழைப்பை மட்டும், வாலியிடம் அனுமதி கேட்டு விட்டு, அட்டென்ட் செய்திருக்கிறார். (அந்த அழைப்பு லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் காண்ட்ராக்டர் கிட்டேர்ந்து தானே ஜாபர்) வாலியே இவர் பணிவைப் பார்த்து அசந்து போய் விட்டார்.
ஜாபரை அழைத்து வந்தாரே கதிர்… அவர் எப்படிப் பட்டவர் தெரியுமா ? கதிர் தான் காதல் வைரஸ் படத்தில் விஜயக்குமார் மஞ்சுளா தம்பதியினரின் கடைசி மகளான ஸ்ரீதேவியை அறிமுகப் படுத்தியவர். அந்தப் படத்தில் நடித்த ஸ்ரீதேவியுடன் அவருக்கு லவ்ஸ். ஒரு நாள் இந்தப் படத்தின் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முதல் ஷெட்யூல் முடிந்து 10 நாட்கள் இடைவேளை வரப் போகிறது. அந்த இடைவேளையில் நடிகை ஸ்ரீதேவிக்கு பிறந்த நாள்.
பிறந்த நாளில் தன் காதலியை பார்க்க முடியாமல் போய் விடுமே என்று, அவசர அவசரமாக காதல் வைரஸ் படத்தில் வரும் ஒரு பாடலை படமாக்குகிறார். இவர் காதலியை சைட் அடிப்பதற்கு ப்ரோட்யூசர் பணம் தண்ணியாகிறது.
அதற்குப் பிறகு, விஜயக்குமார் குடும்பம், ராஜ்கிரண், இயக்குநர் கேயார் போலவே, கதிரை பட்டாப் பட்டி அண்டர்வேரோடு விரட்டி விட்டது ஒரு தனிக்கதை.
ஜாபர் தான் அயோக்கியன் என்று பார்த்தால், அவருடைய நண்பர்களும் அவரைப் போலவே இருப்பது என்ன ஒரு ஒற்றுமை ?
இவ்வாறாக ஒன்றரை மணி நேரம் கவிஞர் வாலியுடன் ஜாபரின் சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.
வாலி மீது இவ்வளவு அபிமானம் வைத்திருக்கும் ஜாபர் வாலி எழுதியுள்ள பாடல்களின் அர்த்தத்தை உண்மையில் புரிந்து கொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஜாபருக்காக, வாலி எழுதிய “ஒரு கொடியில் இரு மலர்கள்“ படத்திலிருந்து ஒரு பாடல் இதோ…
“உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்
தப்பைச் செய்தவன் தண்டனை கொள்வான்
ஒப்புக் கொண்டவன் வெட்கப்படுவான்
வெட்கப்பட்டவன் ஞானம் பெறுவான்.
அரிசியின் மேலே அவனவன் பெயரை
ஆண்டவன் எழுதி வைப்பான் அதை
அடுத்தவன் யாரும் எடுப்பதற்கில்லை
அவனவன் தின்று தீர்ப்பான்
எவரெவருக்கு என்னென்ன தேவை
இறைவன் கொடுக்கின்றார் அதை
அவசர மனிதன் ஆத்திரப்பட்டு
அதற்குள் எடுக்கின்றான்.
ஜாபர் இந்த பாடலை உங்கள் அபிமானக் கவிஞர் வாலி உங்களுக்காகவே எழுதியது போல் இல்லை ?
பெரிய மனிதர்கள் மீது அபிமானம் வைப்பது பெரிய விஷயமில்லை ஜாபர். அவர்கள் சொல்வது போல நடக்க வேண்டும். இந்த ஜென்மத்தில் நீங்கள் அது போல நடக்கப் போவது இல்லை… அப்புறம் எதற்கு வாலியிடம் போய் இப்படி நடிக்கிறீர்கள் ?