புதுக்கோட்டையிலிருந்து சரவணன் தெரியும். இது என்னடா இது. பட்டுக்கோட்டையிலிருந்து சரவணன், அதுவும் இரா.சரவணன் என்று பார்க்கிறீர்களா ? வேறு யார். ஜுனியர் விகடனில் உள்ள ஜாபர் சேட்டின் அடிமை சரவணன் தான்.
பத்திரிக்கையாளர்களின் உலகம் வித்தியாசமானது. இங்கே, நீங்கள் ரவுடியிடமும் பழக வேண்டும், காவல்துறை அதிகாரிகளிடமும் பழக வேண்டும். இரண்டு பேரிடமும் பழகா விட்டால் நீங்கள் நல்ல பத்திரிக்கையாளராக இருக்கவே முடியாது. ரவுடியானாலும் சரி, காவல்துறை அதிகாரியானாலும் சரி, பத்திரிக்கையாளனின் தயவு வேண்டும் என்பதால், அளவுக்கு அதிகமாகவே பழகுவார்கள், கொஞ்சுவார்கள், கெஞ்சுவார்கள், ‘கவனி‘ப்பார்கள், மிரட்டுவார்கள், விரட்டுவார்கள், வேகப்படுவார்கள், விசனப்படுவார்கள். ஆனால் ஒரு நல்ல பத்திரிக்கையாளன், இவர்களோடு பழகி, இவர்களின், கொஞ்சல், கெஞ்சல் அனைத்துக்கும் ஆட்படாமல் தாமரை இலை தண்ணீர் போல இருக்க வேண்டும்.
பழகாமல் இருந்தாலும் தவறு, தேவைக்கு அதிகமாக பழகினாலும் தவறு. இந்தக் கலையில் நேர்த்தியாக தேர்ச்சி பெற்று, தகவல் அளிக்கும் சோர்சுகளையும் நல்ல முறையில் பேணி, அவர்களோடு, அன்யோன்யமாக ஆகாமல், நல்ல செய்திகளையும் மக்களுக்குத் தரும் பத்திரிக்கையாளர்கள் வெகு குறைவு.
இந்த இரா.சரவணன் இரண்டாவது வகை. தேவைக்கு அதிகமாக பழகத் தொடங்கி, கடைசியில் ஜாபர் சேட்டுக்கு அடிமையாகவே மாறிப் போனார்.
‘எங்கெங்கு காணிணும் ஏடிஜிப்பிக்கள் என்ற ஜுனியர் விகடன் கட்டுரைக்கு, சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அச்செய்தி பொய் செய்தி, ஏகக் காலத்தில் 13 பேர் ஏடிஜிபிக்கள் ஆகவே முடியாது என்று எழுதியிருந்தது. சவுக்கு சொன்னபடியே முதலில் 5 பேரும், பிறகு 8 பேரும் ஏடிஜிபி ஆனார்கள். ஆனால், இரா.சரவணன், தான் முதலில் எழுதிய கட்டுரையே சரி என்பது போல, கடந்த இதழ் ஜுனியர் விகடனில் எழுதியுள்ளார். ஜாபர் சேட்டுக்கு கிடைத்த பதவி உயர்வு, அதில் உள்ள சட்டவிரோதம், ஜாபர் சேட் நேற்றைக்கு முன்தினம், காவல்துறை உயர் அதிகாரிகள் கிளப்பில், அவரோடு பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளோடு சேர்ந்து, நன்றாக சரக்கடித்து விட்டு, டான்ஸ் ஆடியது முதற்கொண்டு, சவுக்கு அனைத்து விபரங்களையும் சேகரித்து வருகிறது. அது பற்றித் தனியே எழுதப் படும். இந்தப் பதிவு இரா.சரவணனைப் பற்றியது. சரவணன் மீதான தனி நபர் தாக்குதலை சவுக்கு தொடங்கவில்லை. ஆனால், இரா.சரவணனைப் பற்றிய அடுத்த பதிவு, தனி நபர் தாக்குதலாகவே அமையும்.
ஜாபர் சேட், சட்டவிரோதமாக அவரது மனைவி பெயரிலும், பின்னர் மகள் பெயரிலும் வீட்டு மனை வாங்கி ஊழல் புரிந்தது தொடர்பாக ஜுனியர் விகடனில் செய்திக் கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கும் போது இரா.சரவணன் என்ன செய்தார் தெரியுமா ? அடுத்த அறைக்குச் சென்று, ஜாபர் சேட்டுக்கு போன் செய்து, ‘சார் உங்களப் பத்தி மேட்டர் பண்றாங்க சார்‘ என்று உளவு சொன்னவர். ஜுனியர் விகடன் இதழ் தான் சரவணனுக்கு சோறு போடுகிறது, அவர் குடும்பத்தை வாழ வைக்கிறது. அப்படிப் பட்ட நிறுவனத்துக்கு இப்படி ஒரு துரோகத்தை இழைக்கலாமா ?
இப்போது சமீபத்தில் நடந்த ஒரு டெவலப்மென்ட்டை பார்த்து விடுவோம். ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு முன், செம்மொழி மாநாட்டை ஒட்டி, விழுப்புரம் தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பை பற்றி படித்திருப்பீர்கள். இந்த சம்பவத்தை ஒட்டி ஜுலை 21 நாளிட்ட ஜுனியர் விகடன் இதழில் “உடைந்தது தண்டவாளம்…. உடைகிறதா வண்டவாளம் ? “ என்ற தலைப்பில் அந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றவாளிகள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை, அரசே இந்த வழக்கை மறந்து விட்டதா, அல்லது ஊத்தி மூடப்பட்டு விட்டதா என்று கேள்வி எழுப்பப் பட்டிருந்தது. மேலும், சிலரிடம் கருத்து கேட்கப் பட்டு, செம்மொழி மாநாடு பிரச்சினை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக இந்த குண்டு வெடிப்பு நடத்தப் பட்டதோ என்ற சந்தேகம் இருக்கிறது என்று கூறப் பட்டது.
இந்த இதழ் வெளியானது ஜுலை மாதம். இப்போது தமிழக அரசு சார்பில் ஜுனியர் விகடன் இதழ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முதல் குற்றவாளி, அந்த கட்டுரையை எழுதிய இரா.சரவணன். மற்றவர்கள், ஜுனியர் விகடனின் ஆசிரியர் அசோகன் மற்றும் விகடன் குழுமத்தின் பிரின்டர் மற்றும் பப்ளிஷர் சீனிவாசன்.
முதலில் இந்த வழக்கு குறித்துப் பார்ப்போம். தமிழக அரசு சார்பாக இந்த வழக்கை தொடுத்திருப்பவர் அரசு வழக்குரைஞர். அந்த மனுவில் என்ன குறிப்பிடப்படடிருக்கிறது தெரியுமா ?
“The above said matter in the newspaper contains false and baseless allegations and frivolous statements which are per se defamatory. The said matter has completely damaged and undermined the high reputation of the Hon’ble Chief Minister in the eye of the party cadres, colleagues and the general public. The allegations have been made falsely and it is per se defamatory with an ulterior motive to defame him.
The Chief Minister enjoys a good reputation among the people as an able administrator with honesty and he is a mass leader of Tamils throughout the world…. After the publication of the said defamatory statement several persons including Thiru.TKS.Elangovan, Thiru.Balaraman,SAM.Hussain and other persons approached the Hon’ble Chief Minister both in person and through telephone and enquired him about the said statements and also conveyed that after reading the defamatory statements, they have changed the high opinion they had on him”
“ அந்த செய்தித் தாளில் வந்த செய்தி அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளையும் வாக்கு மூலங்களையும் அவமானப்படுத்தும் நோக்கோடு அமைந்துள்ளது. அந்த கட்டுரை முதலமைச்சரின் உயர்ந்த புகழுக்கு களங்கம் கற்பித்ததோடு அல்லாமல், அவர் கட்சித் தொண்டர்கள், சகாக்கள், பொதுமக்கள் மத்தியில் அவருக்கு இழுக்கை தேடித் தந்திருக்கிறது. முதலமைச்சரை களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த செய்திக் கட்டுரை வெளியிடப் பட்டிருக்கிறது
முதலமைச்சருக்கு பொதுமக்கள் மத்தியில் மிகச் சிறந்த நிர்வாகி என்ற பெயர் இருப்பது மட்டுமல்லாமல், அவர் சர்வதேச தமிழ்ச் சமூகத்தின் தலைவர். இந்த கட்டுரையை படித்து விட்டு டிகேஎஸ் இளங்கோவன், பலராமன், எஸ்ஏஎம் உசேன் ஆகியோர் நேரிலும் தொலைபேசியிலும் முதலமைச்சரைப் பற்றி வைத்திருந்த உயர்ந்த கருத்தை மாற்றிக் கொண்டு விட்டோம் என்று தெரிவித்தார்கள்.”
முதல் வரியை படியுங்கள். “அந்த செய்தித் தாளில் வந்த செய்தி” ஜுனியர் விகடன் எப்போதிருந்து செய்தித் தாளானது ? மேலும் அந்த கட்டுரை வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இது வரை ஒருவரையும் கைது செய்யாதது ஏன் ?
இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், மான நஷ்ட ஈடு வழக்கை மானமுள்ளவர்கள் தானே தொடுக்க வேண்டும் ? கருணாநிதி போல மானங்கெட்ட மனிதர் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வதே நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணாக்குவதல்லவா ?
கருணாநிதி சர்வதேச தமிழ்ச்சமூகத்தின் தலைவர் என்று எந்த முட்டாப்பயல் சொன்னான் ? முதலில் கருணாநிதி இதை நிரூபிக்கட்டும். பிறகு வழக்கை மேற்கொண்டு தொடரலாம். அப்புறம் டிகேஎஸ் இளங்கோவன், உசேன் ஆகியோர் இக்கட்டுரையை படித்து விட்டு, கருணாநிதி மீது இருந்த உயர்ந்த மதிப்பை மாற்றிக் கொண்டு விட்டார்களாம் !!!!!! ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊரே காறித் துப்புகிறது. அதைப் பார்த்து விட்டு மதிப்பு குறையவில்லையாம். இந்தக் கட்டுரையை படித்து விட்டு கருணாநிதி மீது இருந்த மதிப்பு குறைந்து விட்டதால், உசேனும், இளங்கோவனும் எம்எல்ஏ, எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே ? இன்று வரை ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று இளங்கோவன் தானே பேசி வருகிறார்.
ராசாத்தி அம்மாள் கருணாநிதியை திட்டுவதை கேட்டீர்கள் என்றால் காது கூசும். அதை ஜாபரை வைத்து தொலைபேசியில் ஒட்டுக் கேட்ட கருணாநிதி 15 நாட்களுக்கும் மேலாக சிஐடி காலனி பக்கம் போகாமல் இருந்தார். அதற்கு பிறகு இன்று வரை தினமும் அங்கே போய் வந்து கொண்டுதானே இருக்கிறார். இவரை விட ஒரு மானங்கெட்ட மனிதரை உலகில் எங்காவது பார்க்க முடியுமா ? தமிழனின் மானத்தை இத்தாலி காலடியில் அடகு வைத்தவர் தானே இவர் ?
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை பற்றி தினமணி எழுதிய தலையங்கத்தை சவுக்கு மறு பிரசுரம் செய்கிறது
“அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை.
விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இது நிச்சயமாகத் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல.
சனிக்கிழமையன்று இந்த ரயில் தடத்தில் சென்ற மலைக்கோட்டை விரைவு ரயில், அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது. விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் தினமணி பாராட்டுகிறது.
தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்த இடத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர்கள் என்று குறிப்பிட்டு இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய விஜயத்தைக் கண்டிப்பதாக அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தெரிவிப்பதாகக் காவல்துறை கூறுகிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்றால் அவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக் கூடாது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக் கூடாது. மேலும், பல அப்பாவி உயிர்களைப் பலி கொண்டு தங்களது பழியைத் தீர்த்துக்கொள்ள முயலும் யாரையும், அவர்களது லட்சியம் நல்லதாகவே இருந்தாலும், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேநேரத்தில், மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே ஒருசில மணிநேரங்களில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.
சம்பவம் நடந்த இடத்தில் காணப்படும் சில துண்டுப் பிரசுரங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவசர ஆத்திரத்தில் சாதாரண பொதுஜனம் முடிவு எடுப்பது சகஜம். பத்திரிகையாளர்கள்கூட பல சந்தர்ப்பங்களில் கண்ணில் தெரியும் தடயங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எழுதிவிடுவதும் உண்டு. அப்படி நடக்கும்போதெல்லாம், காவல்துறையினர் அதை வன்மையாகக் கண்டிப்பதுடன், முழுமையான விசாரணை இல்லாமல் முடிவுக்கு வருவதும், கருத்துத் தெரிவிப்பதும் தவறு என்று பத்திரிகையாளர்களைக் கடிந்து கொள்வதும் உண்டு.
ஆனால், விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் காவல்துறையினர், முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.
முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்திருந்தால் அவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்பது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தலையெடுக்கும் தீவிரவாதம் எந்தவகையினது ஆனாலும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதுதான். ஆனால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதாவது சக்திகள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு.
எல்லா நாடுகளும் அண்டை நாடுகளில் தங்களது உளவுத்துறையின் மூலம் செயல்படுவது புதியதொன்றும் அல்ல. இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சர் என்கிற போர்வையில் தனது குழுவுடன் அழைத்துவந்து இந்தியப் பிரதமருடன் கைகுலுக்க வைத்து தனது தாயகம் திரும்பியிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபட்ச. இதனால் எழும்பியிருக்கும் சர்ச்சையும், இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடமும் கொஞ்சநஞ்சமல்ல.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்பட்டு வந்த ஈழத்தமிழர் பிரச்னை இப்போது தேசிய அளவிலான ஊடகங்களில் முன்னுரிமை தரப்படுகின்றன. பிரச்னையைத் திசைதிருப்ப இலங்கை அரசின் உளவுத்துறையேகூட ஏன் இப்படியொரு சதித்திட்டத்தை அரங்கேற்றி பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டு டக்ளஸ் தேவானந்தா கைது பிரச்னையை மூடி மறைக்க முற்பட்டிருக்கக்கூடாது?
துண்டுப் பிரசுரத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுப்பது சிறுபிள்ளைத்தனம். யாரும் யார் பெயரிலும் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு சம்பவம் நடந்த இடத்தில பார்வையில்படுவதுபோல போட்டிருக்கலாம். பொறுப்பான காவல்துறை அதிகாரிகள், முழுமையான விசாரணையை மேற்கொண்டு துப்புத்துலக்கி தக்க ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்வதுதான் தமிழகக் காவல்துறைக்குப் பெருமை சேர்க்கும். தவறு இழைத்தது, விடுதலைப்புலி ஆதரவாளர்களாக இருந்தாலும், இலங்கை அரசின் கைப்பாவைகளாக இருந்தாலும், வேறு தீவிரவாத இயக்கத்தவர்களாக இருந்தாலும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சதிகாரர்கள் யாராக இருந்தாலும், அப்பாவி மக்களைப் பழி வாங்காதீர்கள். இந்த நாசவேலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அதற்கு ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும், ராமனுக்கு சடாயு சொன்னதைத்தான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. சீதையை ராவணன் கவர்ந்து செல்ல, துக்கம் தாளாமல் காணும் அனைத்தின்மீதும் கடும்கோபம் கொள்ளும் ராமனிடம் சடாயு தன் உயிர் பிரியும் முன் சொல்கிறார்: “ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை; உள்ளம் ஆறுதி’.
தனிப்பட்ட ஒருவரின் துயரத்தை அனைவருக்குமாக மாற்றுகிற, பழி வாங்கும் படலத்துக்கும், திசைதிருப்பும் முயற்சிக்கும், வெறிச்செயல்களுக்கும் எங்கள் தமிழகம் களமாவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது”
தினமணி தலையங்கத்தில் இந்த வரிகளை மீண்டும் படித்துப் பாருங்கள்.
“அதேநேரத்தில், மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே ஒருசில மணிநேரங்களில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.
வரலாற்றிலேயே இல்லாத வகையில், உளவுத் துறையின் தலைவர் விழுப்புரம் சென்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவதற்கான காரணம் என்ன ? இந்த வழக்கின் புலனாய்வுக்காக அமைக்கப் பட்ட 8 ஸ்பெஷல் டீம்களை புலனாய்வு முடியும் முன்பாகவே கலைத்த மர்மம் என்ன ?
இப்போது சவுக்கு நேரடியாகவே, இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு முழுக் காரணம் ஜாபர் சேட் என்று குற்றம் சாட்டுகிறது. ஈழத் தமிழரின் பிணங்களின் மீது நடக்கும் செம்மொழி மாநாட்டில் மானமுள்ள தமிழன் யாராவது எதிர்ப்புத் தெரிவித்து விடப் போகிறானோ என்று அவர்களை கைது செய்து மாநாடு முடியும் வரை சிறையில் வைப்பதற்காக ஜாபர் சேட் மூளையில் உதித்த திட்டம் இது என்று சவுக்கு நேரடி குற்றச் சாட்டை முன் வைக்கிறது. இது தொடர்பாக மான நஷ்ட ஈடு வழக்கு ஜாபர் தொடர்வாரானால், சவுக்கே அந்த வழக்கில் வாதாடும். இந்த வழக்கை தொடர்வதற்கு ஜாபருக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. சூடு, சொரணை, போன்ற விஷயங்கள் துளியும் இல்லாத காண்டாமிருகத்தின் தோலை உடைய ஒரு நபர் எப்படி மான நஷ்ட ஈடு வழக்கு தொடரலாம் என்று உரிய ஆதாரங்களோடு (அவருக்கு காண்டாமிருகத் தோல்தான் என்பதற்கு) சவுக்கு நீதிமன்றத்தில் வாதாடும்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். ஜுனியர் விகடன் கட்டுரையை விட, மிகுந்த வலிமையாகவும், கூர்மையாகவும் இருப்பது தினமணி தலையங்கம். அரசு ஏன் தினமணி மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரவில்லை ? இவ்வழக்கு தொடர்பாக உண்மை அறியும் குழு, பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் அமைக்கப் பட்டு காவல்துறை மீது சந்தேகம் இருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டது. அந்தக் குழு மீது ஏன் மான நஷ்ட வழக்கு தொடரவில்லை ?
சரி ஜுனியர் விகடன் மீது ஏன் மான நஷ்ட வழக்கு இப்போது தொடரப் பட்டுள்ளது ? அதுவும், அவருக்கு மிகவும் நெருக்கமான இரா.சரவணன் மீது ஏன் வழக்கு ? இங்கேதான், ஜாபரின் கயமையை கவனிக்க வேண்டும்.
சவுக்குக்கு வந்த நம்பகமான தகவல்கள் என்ன கூறுகிறதென்றால், இந்த வழக்கு விசாரணை நடக்கும் சமயத்தில் நான் இந்தக் கட்டுரையை எழுதவேயில்லை, ஆசிரியரும் மேலாண் இயக்குநரும் இதை எழுதி விட்டு என்னுடைய பெயரை போட்டு விட்டார்கள் என்று இரா.சரவணன், வாக்குமூலம் கொடுத்து, ஜுனியர் விகடன் இதழுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளன.
இந்த சதித் திட்டத்தை ஜுனியர் விகடன் நிறுவனம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை… ஆனால் ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலாகவே சவுக்கு இதை பார்க்கிறது. கருணாநிதிகளும் ஜெயலலிதாக்களும் வந்து போவார்கள். அவர்களுக்கான மக்களின் ஆதரவு இன்று இருக்கும், நாளை மறையும். ஆனால், ஜுனியர் விகடனுக்கான மக்களின் ஆதரவு எப்போதும் இருக்க வேண்டும் என்றே சவுக்கு விரும்புகிறது. அதனால் இந்த நேர்வில் மட்டும் பயன்படுத்தக் கூடாத ஒரு நபர் பயன்படுத்தும் வாசகத்தை ஜுனியர் விகடன் மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
“அடங்க மறுப்போம். அத்து மீறுவோம். திருப்பி அடிப்போம்.”