கவுண்டர்கள் என அழைக்கப்படும் கொங்கு வேளாளர் இனம் மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஒரு சமுதாயமாகும். பகுதிகளில் பெருமளவில் உள்ள இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இவர்களை பொதுவாக கவுண்டர் சமுதாயம் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர். கவுண்டர் என்ற சொல்லுக்கு நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்று புலவர் ராசு கூறுகின்றார்
கவுண்டர்கள் இன்று பெருமளவு விவசாயம் மற்றும் தொழில் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் கவுண்டர்கள், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அதிகமாக வசித்து வருகின்றனர்.
கரூர் வளநாட்டை ஆண்ட அண்ணமாரை சேரர் என வரலாற்று ஆதாரங்களை திரட்டி வரும் கே.ராஜா குறிப்பிடுவதால், கவுண்டர்கள் சேரர்களின் வழி வந்தவர்களாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தகடூரை ஆண்ட சத்யபுத்திர அதியமான்கள் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி குறிப்பிடுகிறார். 13ம் நூற்றாண்டில் கொங்கு பகுதியை ஆட்சி செய்த காளிங்கராயர் எனப்படும் லிங்கைய கவுண்டர், கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் ஆவார். காளிங்கராயர் ஈரோடு பகுதியில் பாயும் பவானி நதியையும், கோவை பகுதியில் பாயும் நொய்யல் நதியையும் இணைத்து, கொங்கு நாட்டை வளப்படுத்தினார். விஜயநகர அரசிற்கு பிறகு, பதினாறாம் நூற்றாண்டில், தமிழகம் பல்வேறு பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கு தமிழக பகுதியில் பல்வேறு பாளையங்களை கவுண்டர்கள் ஆண்டு வந்திருக்கின்றனர்.
கொங்கு மண்டல அரசியலில், கவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழ்நாட்டில் அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட சாதிகளில் கொங்கு வேளாள கவுண்டர்களும் ஒன்று. தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் 8 பேர் கொங்கு வேளாளர்கள். தமிழக அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் கொண்ட சாதியினர் இவர்களே.
இந்திய சுதந்திரத்தின் போது கவுண்டர்கள், முன்னேறிய வகுப்பினராக வரையறுக்கப்பட்டிருந்தனர். 1970 களின் ஆரம்பங்களில் மாநாடுகள் நடத்தி, தங்களை பிற்பட்ட வகுப்பினராக வரையறுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, 1975ம் ஆண்டு, அவர்களை பிற்பட்ட வகுப்பினராக அறிவித்தது. கிராமபுறங்களில் இன்னும் கல்லூரி வசதி இல்லாததால், ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கொங்கு வேளாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிற்பட்ட சமூகமாக தங்களைக் அழைத்துக் கொள்ளும் கவுண்டர்கள், தலித்துகளை கொடுமைப் படுத்தி, அவர்களை அடக்கி ஒடுக்கும் ஆதிக்க சாதிகளி முன்னணி வகிக்கின்றனர்.
தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இப்போது எதற்கு கவுண்டர் வரலாறு என்ற யோசிக்கிறீர்களா ? இதன் தொடர்பு என்ன என்பது பின்னால் தெரியும்.
கொள்ளையோ கொள்ளை என்ற தலைப்பில் சவுக்கு தளத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தால் தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட 83 க்ரூப் 1 அதிகாரிகள், எவ்விதமான தடையுத்தரவும் இல்லாமல் சட்ட விரோதமாக பணியில் தொடர்வது பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இப்படி தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது குறித்து மூடர் கூடம் என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டிருந்தது.
தற்போது இந்த வழக்கில் என்ன நடந்துள்ளது என்பதை விளக்குவதே இந்தக் கட்டுரை. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் 83 பேரின் தேர்ச்சி 4 மார்ச் 2011 அன்று ரத்து செய்யப்பட்டதும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு முதன் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் முகுந்தம் சர்மா மற்றும் அனில் ஆர். தவே முன்னிலையில் 11 ஏப்ரல் 2011ல் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் தன்மை கருதி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். அதன் பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருந்தால், எப்பொழுதோ முடிந்திருக்கும்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதே, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட 83 பேரும் களத்தில் இறங்குகிறார்கள். தற்போது அவர்கள் அரசுப் பணியில் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள் அல்லவா ? அதனால் பணமும் செல்வாக்கும் ஏராளமாக இருக்கிறது. இந்தத் தேர்வு நடந்த ஆண்டு 2002ம் ஆண்டு. அதன் பின் இத்தேர்வின் முடிவு வெளியானது 2004ம் ஆண்டு.
ஜெயலலிதா அரசு பதவியேற்றதும், முதல்வர் அலுவலகத்தில் ஆன்னி மேரி ஸ்வர்ணா என்பவர் பணியாற்றுகிறார். இவரும் இந்த 83 பேரில் ஒருவர். இவர் மூலமாகவும், முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய ஆண்டியப்பன் என்பவர் மூலமாகவும், சென்னை உயர்நீதிமன்றம் தேர்ச்சி ரத்து செய்த 83 பேரும் ஜெயலலிதாவை 2011ம் ஆண்டில் சந்திக்கின்றனர். சந்தித்து, “அம்மா ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களின் தேர்ச்சியை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது” என்ற முறையிடுகின்றனர். அவ்வளவுதான் ஜெயலலிதாவுக்கு வந்ததே கோபம் “What is this ? You are all selected by my government..” என்று கூறி விட்டு, அருகில் இருந்த தலைமைச் செயலாளரை அழைத்து, இவர்களின் வழக்கை நல்லபடி கவனித்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிடுகிறார். ஜெயலலிதா இப்படி உத்தரவிட்டதன் பின்னணியிலேயே, தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட 83 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்குகிறது தமிழக அரசு.
இதன் பிறகு, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்து விட்டால், வழக்கில் தோற்க நேரிடுமோ என்று அஞ்சிய 83 அதிகாரிகளும் கூடிப் பேசுகிறார்கள். அதன் படி, இந்த வழக்கு தொடர்பான விவகாரங்களை கவனித்துக் கொள்ள, இந்த 83 பேரில் டிஎஸ்பியாக உள்ள பாலாஜி சரவணன் மற்றும் ஈரோட்டில் டிஆர்ஓ வாக உள்ள குமாரவேல் பாண்டியன் ஆகியோரை தேர்ந்தெடுக்கின்றனர்.
பாலாஜி சரவணன் யார் ? பாலாஜி சரவணன் என்பவர் தற்போது கோவை மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் டிஎஸ்பியாக பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதலாகவே இவர் கோவை மாவட்டத்தைத் தவிர்த்து வேறு எங்கும் சென்றதில்லை. காவல்துறையில் எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவர். இவர்களுக்கெல்லாம் பின்புலமாக விளங்குபவர், மாநில ஆளுனர் அலுவலகத்தில் துணைச் செயலாளராக பணியாற்றும் கே.வி.முரளிதரன். தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து வரும் அத்தனை கோப்புகளும் ஆளுனர் அலுவலகத்துக்கு சென்றே ஆக வேண்டும் என்பதால், முரளீதரனுக்கு தெரியாத விவகாரம் எதுவுமே கிடையாது.
புடவையைப் பார்வையிடும் குமாரவேல் பாண்டியன்
குமாரவேல் பாண்டியன் என்பவர் ஈரோடு மாவட்ட மண்டல வருவாய் அதிகாரியாக (DRO) பணியாற்றிக் கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றியதால், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களின் அத்தனை சொத்துக்களையும் இவர்தான் நிர்வகித்து வந்தார். எத்தனையோ நீதிபதிகள், அதிகாரிகள் இருக்கையில், நீதிபதி சதாசிவம் குமாரவேல் பாண்டியனை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் ? ஏனென்றால், குமாரவேல் பாண்டியன் ஒரு கவுண்டர். இந்த குமாரவேல் பாண்டியன், திமுகவின் முன்னாள் கொறடா சக்ரபாணியின் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவல்.
இவர் பல முறை புதுதில்லி சென்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தை அவர் வீட்டிலேயே சந்தித்து வந்திருக்கிறார். கட்டுரையை படிக்கும் வாசகர்கள் உடனே, குமாரவேல் பாண்டியன் 83 பேரின் வழக்கு குறித்து பேசத்தான் போயிருக்கிறார் என்று தவறாக நினைக்கக்கூடாது. குமாரவேல் பாண்டியனும், நீதிபதி சதாசிவமும், உலக சமாதானம், சுற்றுச் சூழல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம். என்ன பேசினார்கள் என்ற விபரம் நமக்குத் தெரியாது என்பதால், நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது.
குமாரவேல் பாண்டியன் நீதிபதி சதாசிவத்தை சந்தித்ததற்கு, சற்றும் சம்பந்தம் இல்லாத தகவல் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட 83 பேரில், (1) குமாரவேல் பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் (2) ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் (3) தங்கதுரை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், (4) அரவிந்தன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், (5) செல்வராஜ், வணிகவரித்துறை துணை ஆணையர், (6) பாண்டியன், கூட்டுறவு சங்க சார் பதிவாளர் மற்றும் (7) தனலட்சுமி, கூட்டுறவு சங்க சார் பதிவாளர் ஆகியோர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதே அந்த சம்பந்தம் இல்லாத தகவல்.
இந்த வழக்கு விசாரணைக்கே வராமல் பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்படி பட்டியலில் வழக்கு வராமல் போனதற்கும் பின்னணி இருக்கிறதென்று கூறுகிறார்கள் விஷயமறிந்தவர்கள். தமிழக வழக்குகளை பட்டியலில் ஏற்றும் அதிகாரியாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர் ப்ரமோத். இந்த வழக்கு பட்டியலில் ஏறாமல் பார்த்துக் கொள்வதற்காக, இவருக்கு பிரத்யேகமாக ஒரு காரே வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்படி தாமதப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரியான ஒரு டிவிஷன் பென்ச்சை நியமித்ததும் இறுதி விசாரணைக்கு வருகிறது. இப்போது இந்த வழக்கு அனில் ஆர்.தவே மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு மிக மிக நெருக்கமானவர். இவருக்கு மிக மிக நெருக்கமானவர், மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி. எந்த அளவுக்கு நெருக்கம் என்றால், மாலை ஏழு மணிக்கு சட்டம் குறித்த விவாதங்களை இந்த இருவரும் தொடங்கினார்கள் என்றால், நள்ளிரவு வரை அந்த விவாதம் தொடரும். அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே என்று வாதாட மனுதாரர்கள் சார்பில், வடகிழக்கு மாகாணங்களுக்கான அரசு வழக்கறிஞராக நீண்ட நாட்கள் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் மரிய அற்புதம். 83 பேர் சார்பாகவும், டிஎன்பிஎஸ்சி சார்பாகவும் அத்தனை நாள் ஆஜராகிக் கொண்டிருந்த மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவுக்கு பதிலாக, ராகேஷ் திரிவேதி ஆஜராகிறார். வழக்கு 12.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடுத்தவர்கள் தரப்பில், இந்த தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து பேச முற்பட்டதும் அவர்களை தடுக்கிறார் நீதிபதி தீபக் மிஸ்ரா. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதாக இல்லையே என்கிறார். இல்லை, 43 தேர்வாளர்களின் விடைத்தாள்களை இதே விடைத்தாள்களில் விதிகளை மீறி திருத்தம் செய்தார்கள் என்ற காரணத்துக்காகவே தகுதியிழப்பு செய்துள்ளது டிஎன்பிஎஸ்சி. எந்த காரணத்துக்காக 48 தேர்வர்களின் விடைத்தாள்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதோ அதே தவறைத்தான் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 83 பேரும் செய்துள்ளார்கள். மேலும் தற்போது தேனியில் வருவாய் கோட்டாட்சியராக உள்ள விஜயராணி என்பவர் தனது நான்கு விடைத்தாள்களிலும் ஒரே மாதிரியாக, ஒரு கேள்வி மற்றும் விடையை எழுதி, அதை அடித்துத் திருத்தியுள்ளார். இது இயல்பாக நடக்கக் கூடிய தவறு அல்ல. இப்படிப்பட்ட நபர் இன்று கோட்டாட்சியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று வாதாடுகிறார் வழக்கறிஞர் மரிய அற்புதம். ஆனால் இவை எவற்றையும் காதில் வாங்க நீதிபதி தீபக் மிஸ்ரா தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் திடீரென்று எழுந்து, தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன் என்று கூறி விட்டு சென்று விடுகிறார்.
சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் அதிரச்சியில் உறைந்து போயினர். உயர்நீதிமன்றங்களிலும் சரி, உச்சநீதிமன்றத்திலும் சரி. ஒரு டிவிஷன் பென்ச்சில் அமரும் இரண்டு நீதிபதிகளில், மூத்த நீதிபதி மட்டுமே பேசுவார்.. நீதிமன்றத்தை நடத்துவார். இளைய நீதிபதி என்று ஒருவர் அந்த இடத்தில் இருப்பதாகவே அந்த மூத்த நீதிபதி உணராதது போல நீதிமன்றத்தை நடத்துவார். இந்த வழக்கை விசாரித்த அனில் தவே மற்றும் தீபக் மிஸ்ரா டிவிஷன் பென்ச்சில், மூத்த நீதிபதி அனில் தவே. ஆனால், இந்த நீதிபதி அனில் தவே வாயே திறக்கவில்லை. முழுக்க முழுக்க அந்த வழக்கை நடத்தியது நீதிபதி தீபக் மிஸ்ரா மட்டுமே. இது நீதிமன்றத்தில் இருப்பவர்கள் அனைவருக்குமே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது தீபக் மிஸ்ரா இந்த வழக்கை முன்னின்று விசாரித்ததற்கும், இந்த வழக்கில் அவரது நண்பரான ராகேஷ் திரிவேதி ஆஜரானதற்கும் தொடர்பு இருக்கிறதா என்றால் அது நமக்குத் தெரியாது.
இதே போல மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கும், நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்ததும், தமிழக அரசு சார்பில் ராகேஷ் திரிவேதியை நியமித்திருக்கிறார்கள். தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்திருக்க வேண்டிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது, ராகேஷ் திரிவேதி ஆஜரானதாலா என்பதும் நமக்குத் தெரியாது.
83 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் எந்த விதமான முறைகேடுகளில் ஈடுபட்டார்களோ, அதே முறைகேடுகளில் ஈடுபட்ட 48 பேர்களின் வினாத்தாள்களை செல்லாததாக அறிவித்தது டிஎன்பிஎஸ்சி. இவர்களின் வினாத்தாள்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது தொடர்பான முடிவெடுக்கப்பட்ட கோப்பு K.Dis 4015/ED – A6/2002 dated 30.07.02. இந்தநிலையில்தேர்வாணையத்திற்குஇந்தக்கோப்பின்நகலைஅளிக்குமாறுதகவல்அறியும்உரிமைச்சட்டத்தின்மூலமாககேட்டு, அனுப்பப்பட்டவிண்ணப்பத்துக்குபலவருடங்களாகியும்எந்தபதிலும்தராமல்இழுத்தடிக்கிறதுடிஎன்பிஎஸ்சி. மடியில்கனமில்லையென்றால்வழியில்எதற்குபயம் ?
நியாயப்படி, இந்தத்தேர்வுமுடிவுகளில், விடைத்தாள்திருத்தல்களில், ஏற்பட்டமுறைகேடுகளில்ஈடுபட்டடிஎன்பிஎஸ்சிஅதிகாரிகள்மீதுமுழுமையானவிசாரணைநடத்தியிருக்கவேண்டும். தேர்வாணையவட்டாரங்களில்விசாரித்ததில், அந்தஆண்டுநடந்ததேர்வுவிடைத்தாள்களைகையாண்டவர்கள்கீழ்கண்டதேர்வாணையஅதிகாரிகள்
(1) ஜே.சுசீலா, சார்புசெயலாளர் (2) அகிலாராமானுஜம், பிரிவுஅலுவலர் (3) கே.பி.கலாதேவி, பிரிவுஅலுவலர், (4) ஏ.லூர்துராயன், பிரிவுஅலுவலர், (5) ஆர்.மல்லிகாபிரிவுஅலுவலர், (6) எஸ்.பாண்டியன், பிரிவுஅலுவலர் (7) டி.கே.ப்ரேம்குமார், பிரிவுஅலுவலர், (8) கே.சரஸ்வதி, பிரிவுஅலுவலர், (9) ஜி.சண்முகம், பிரிவுஅலுவலர் (10) எம்.வெங்கடாச்சலம்பிரிவுஅலுவலர், (11) வி.விஜயலட்சுமி, பிரிவுஅலுவலர் (12) ஏ.ஆதிகேசவலு, உதவிப்பிரிவுஅலுவலர், (13) பி.சந்திரிகா, உதவிப்பிரிவுஅலுவலர் (14) ஆர்.கலைச்செல்வி (15) எஸ்.பத்மா (16) டி.பரமேஸ்வரி, உதவிப்பிரிவுஅலுவலர் (17) எம்.பெரியசாமி (18) சி.ராஜன், உதவிப்பிரிவுஅலுவலர் (19) சி.ருக்மணிஉதவிப்பிரிவுஅலுவலர் (20) சி.ஸ்ரீதர், உதவிப்பிரிவுஅலுவலர்ஆகியோர்தான் 2002-2004ம்ஆண்டுகாலகட்டத்தில்விடைத்தாள்களுக்குப்பொறுப்பானவர்கள்.
சிபி.சிஐடி வசம் இந்த வழக்கை ஒப்படைத்து இவர்களை கைது செய்து, விசாரித்தால், உண்மைகளை கிளிப்பிள்ளை போல கக்குவார்கள். சென்னை உயர்நீதிமன்றம் 83 பேரின் தேர்ச்சியை எப்போது ரத்து செய்ததோ, அப்போது இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு முழுமையான விசாரணை நடந்திருக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதிகளை விட அதிகாரிகள்தான் எப்போதுமே பலம் பொருந்தியவர்கள் என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில், எந்த விதமான விசாரணைக்கும் உத்தரவிடப்படாதது மட்டுமல்லாமல், இந்த அதிகாரிகள் சட்டவிரோதமாக இன்று வரை பதவியில் தொடரவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சரி… அரசுதான் இப்படி இருக்கிறது என்றால் நீதிமன்றம் எப்படி இருக்கிறது தெரியுமா ? தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட 13 டிஎஸ்பிக்களை கூடுதல் எஸ்.பிக்களாக தமிழக அரசு பதவி உயர்வு செய்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் இப்படி ஒரு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது, ஆகையால் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமல்ப்படுத்த வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி பால் வசந்த குமார் தலைமையிலான டிவிஷன் பென்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது
அப்போது நீதிபதி பால் வசந்தகுமார் என்ன தீர்ப்பு அளித்தார் தெரியுமா ? இவர்கள் பதவியில் நீடிக்கக்கூடாது என்று கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கை தாக்கல் செய்தது தவறு, அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளித்தார். ஒரு உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச்சின் தீர்ப்பை தமிழக அரசு மதிக்காமல் இருப்பதோடு, தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கியிருக்கிறது, உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துமாறு உத்தரவிடுங்கள் என்று சொன்னால் எப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது பார்த்தீர்களா சென்னை உயர்நீதிமன்றம் ?
பல இடங்களில் கூவம் ஆற்றின் இந்தப் பக்கம் ஒரு காவல் நிலைய எல்லையில் வரும், அந்தக் கரை இன்னொரு காவல் நிலைய எல்லையில் வரும். திடீரென்று ஆற்றின் கரையில் பிணம் மிதந்தால், காவலர்கள் என்ன செய்வார்கள் என்றால், ஒரு நீளமான கம்பை எடுத்து, அந்தப் பிணத்தை அடுத்த கரைக்கு தள்ளி விடுவார்கள். அந்தக் கரையில் உள்ள ஏட்டையா ஒரு கம்பை எடுத்து, இந்தப் பக்கம் அந்தப் பிணத்தை தள்ளி விடுவார். ஏனென்றால், அவர்கள் எல்லையில் வந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும், அந்த பிணத்தை கைப்பற்றி ஏராளமான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். இதற்காக பிணத்தை தள்ளி விடும் வேலைகளில் ஏட்டையாக்கள் ஈடுபடுவர். இதற்கும் நீதிபதி பால் வசந்தகுமார் அளித்த தீர்ப்புக்கும் வேறுபாடே இல்லை.
ஆனால், அந்த வழக்கை தொடுத்த மனுதாரர் புகழேந்தி, சளைக்காமல், மீண்டும் நீதிப்பேரரரசர் கிருபாகரன் முன்பு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு ஒரு கோ வாரண்டோ வழக்கு. ”கோ வாரண்டோ” என்றால், எந்த அடிப்படையில் ஒருவர் ஒரு பதவியில் தொடர்கிறார் என்று கேள்வி எழுப்பும் வழக்கு. உதாரணத்துக்கு பொதுப் பணித்துறையில் ஒருவர் உதவிப் பொறியாளராக பணியாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். உதவிப் பொறியாளர் பணிக்கு அடிப்படை தகுதி பி.இ. ஒருவர், போலியாக பி.இ சான்றிதழ் பெற்று, உதவிப் பொறியாளர் பணியில் இருக்கிறார் என்றால், அவருக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கு தொடுக்க முடியும்.
நீதியின் நாயகன் கிருபாகரன்
கோ வாரண்டோ வழக்குகளை பொறுத்தவரை, வழக்கு தொடுக்கப்பட்டால் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பியே ஆக வேண்டும். அதாவது மேலே குறிப்பிட்ட வழக்கில் உள்ளது போல ஒரு உதவிப் பொறியாளருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டால், அந்த உதவிப் பொறியாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நான் அசல் சான்றிதழ்தான் வைத்துள்ளேன், என்னுடைய சான்றிதழ் போலிச் சான்றிதழ் அல்ல என்பதை நீதிமன்றத்தின் முன் நீரூபிக்க வேண்டிய கடமை அந்த உதவிப் பொறியாளருடையது. அதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்புவது நீதிமன்றத்தின் கடமை.
இப்படி ஒரு கோ வாரண்டோ வழக்குதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. தேர்ச்சி ரத்து செய்யப்படட 13 காவல்துறை அதிகாரிகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு அளித்தது சட்டவிரோதம் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தி வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்ததும், அரசு வழக்கறிஞர், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாக தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் வரை, சென்னை உயர்நீதிமன்றதின் தீர்ப்பே அமலில் இருக்கும். நியாயப்படி, அந்த வழக்கு தொடுக்கப்பட்டதுமே, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால்….. கிருபாகரன் நீதியரசர் அல்லவா ? அவருக்கு தெரியாத சட்டமா ? உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு குறித்து தீர்ப்பு வரும் வரையில், இவ்வழக்கை ஒத்தி வைக்கிறேன் என்று உத்தரவிட்டார். இன்று வரை இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படவில்லை.
தற்போது உச்சநீதிமன்றத்தில் 83 உயர் அதிகாரிகளின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில தலைக்கனம் பிடித்த தறுக்கர்கள், நீதிமன்றத்தின் மாண்பைப் பற்றித் தெரியாதவர்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிமான் சதாசிவத்தின் நேர்மையையும், நீதிபரிபாலனத் திறனையும் அறியாதவர்கள் என்ன பேசுகிறார்கள் தெரியுமா ?
வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல் பாண்டியன், தலைமை நீதிபதி சதாசிவத்தை அவரது வீட்டில் சந்தித்துப் பல முறை பேசியதாகவும், அப்படி சந்திக்கையில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் இந்தப் பட்டியலில் உள்ளதாகவும், கவுண்டர் சமுதாயத்தின் விடிவே நீதிபதி சதாசிவத்தின் கையில்தான் இருப்பதாகவும், அவர் நினைத்தால்தான் இந்த அதிகாரிகளை காப்பாற்ற முடியும் என்றும், அவரும் இவர்களுக்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டதாகவும், அதன்படி தான் சொன்னபடியெல்லாம் கேட்கும் நீதிபதியான தீபக் மிஸ்ராவிடம் இந்த வழக்கை விசாரணைக்கு அனுப்பியதாகவும், தீபக் மிஸ்ராவும், 83 அதிகாரிகளின் தேர்ச்சி சரியே… அதில் தவறேதும் இல்லை.. சென்னை உயர் நீதிமன்றம் மிக மிக தவறான தீர்ப்பை அளித்திருக்கிறது என்று தீர்ப்பு வழங்க இருப்பதாகவும் பேசிக்கொள்கின்றனர். இப்படி அபாண்டமான கூற்றுக்களை நாம் நம்பத் தயாராக இல்லை. இந்திய நீதித்துறையில் வாய்மை மட்டுமே வெல்லும் என்பதால், அபாண்டமான அவதூறான பேச்சுக்களை நாம் நம்பத் தயாராக இல்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருகையில் உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள். அது வரை அமைதி காப்போம். ஆமென்.