2011 தேர்தலில், திமுக தோற்று, ஆந்திராவில் என்.டி.ராமாராவை அவரது கட்சியை விட்டு நீக்கியது போல, கருணாநிதியும் நீக்கப் படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ராசாத்தி அம்மாள், கருணாநிதியை பார்த்து பாடினால் எப்படிப் பாடுவார் ? இப்படித் தான்.
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா …
கட்சி விட்டுப் போனாலும்
கருப்புப் பணம் போகவில்லை
தயாளு போனாலும்
ராசாத்தி போகவில்லை
ஸ்பெக்ட்ரம் பணமெடுத்து
பதுக்கியவள் நானல்லவா
பங்குதர வில்லையென்று
கலங்குவதும் நீயல்லவா
மன்னவா… மன்னவா.. மன்னவா…..
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
தமிழ்நாட்டை வாங்கனும் என்ற
தவிப்பு உனக்கு புரியாதா
மூத்தவங்க வாங்கிட்டாங்கன்ற
கோபம் உனக்கு தெரியாதா
தமிழினத்தின் தலைவன் என்ற
நடிப்பையெல்லாம் மறந்து விடு
செவனேன்னு உக்காந்து
தமிழகத்தை வாழ விடு….
மன்னவா… மன்னவா.. மன்னவா…..
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க