“அண்ணன் என்னடா… தம்பி என்னடா ? அவசரமான உலகத்திலே. ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே” என்று பாடியபடியே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“வா தம்பி. உக்காரு. மொத மேட்டரா அழகிரி மேட்டர்தான் சொல்லப் போறன்னு தெரியுது. சொல்லு” என்றார் கணேசன்.
“அண்ணே. எம்.ஜி.ஆரும் வைகோவும் பிரிஞ்சப்போ இருந்த நிலையை விட மிக மோசமான நிலையில் திமுக இருக்கு. திமுக சந்திக்கக் கூடிய மிகப்பெரிய நெருக்கடி இந்த நெருக்கடி”
“ஏம்பா…. அழகிரியை கட்சியை விட்டு நீக்கறது ஒன்னும் புதுசு இல்லையே ? ஏற்கனவே நீக்கியிருக்காங்களே… “
“அண்ணே. இதுக்கு முன்னாடி நீக்கியபோது இருந்ததை விட, இன்னைக்கு சூழல் மோசமா இருக்கு. போன வாரம் வெளி நாட்டுல இருந்து திரும்பிய அழகிரி நேரா, கோபாலபுரம் போயிருக்கார். என்ன நெனைச்சுக்கிட்டு இருக்க நீ… என் ஆளுங்களை ஒவ்வொருத்தரா நீக்கிக்கிட்டு இருக்க. நான் கட்சியில இருக்கறதா வேணாமா என்று, கோபமா கேட்டிருக்கார் அழகிரி. கருணாநிதி பதிலுக்கு கோபமா பேசியிருக்கார். ஒரு கட்டத்துல வார்த்தைகள் தடித்து, அழகிரி, கருணாநிதியை கன்னத்தில அறைஞ்சிருக்கார். கருணாநிதி அய்யோ அம்மான்னு கத்தவும் மத்தவங்கள்லாம் ஓடி வந்திருக்காங்க.
அழகிரி உடனே அந்த இடத்தை விட்டு வெளியில கிளம்பியிருக்கார். கருணாநிதி நடந்ததை விளக்கியதும், ஸ்டாலின், அன்பழகன் எல்லோருக்கும் அழைப்பு போயிருக்கு. ஸ்டாலினும் கருணாநிதியும், அழகிரியை கட்சியை விட்டு நீக்கணும்னு உறுதியா சொல்லியிருக்காங்க. ஆனா, அன்பழகன்தான், இடைநீக்கம் செய்யலாம்னு சொல்லி, அதன் படி முடிவெடுத்து அறிவிச்சிருக்காங்க”
“சரி.. இதனால திமுகவுக்கு என்ன பெரிய நெருக்கடின்னு சொல்ற ? ” என்றான் பீமராஜன்.
“அழகிரி நீக்கத்துக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களிடம் தனிப்பட்ட முறையில பேசிய அழகிரி ஸ்டாலின் குறித்தும், கருணாநிதி குறித்தும் பயன்படுத்திய பல வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாதவை. இந்த முறை, மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் திமுக வேட்பாளர்களை தோற்கடிச்சே தீரணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வேலை செய்வார் அழகிரி. வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டால், கருணாநிதி அதை சும்மா விட மாட்டார். ஏற்கனவே, அழகிரி மீது கடுமையான எரிச்சலில் இருக்கும் ஸ்டாலின், இந்த வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கத் தொடங்கிட்டார்.
இத்தனை நாள், அழகிரிக்கும், ஸ்டாலின் மற்றும் கருணாநிதி இடையே பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் சமாதானம் செய்து வைத்தது தயாளு அம்மாள்தான். ஆனா இந்த முறை, தயாளு அம்மாள் சமாதானம் செய்து வைக்கும் நிலையில் இல்லை. தயாளு அம்மாளுக்கு அடுத்ததா, குடும்பத்துக்கு சமாதானத் தூதுவரா இருப்பவர் கருணாநிதியின் மகள் செல்வி. ஆனா, சமாதானத்தில் ஈடுபட்டால், ஸ்டாலினோட கோபத்துக்கு ஆளாக நேரிடும்னு செல்வியும் இந்த விவகாரத்தில் இறங்க மாட்டாங்க.
அழகிரி நிச்சயமா, தன்னோட பிறந்த நாளான ஜனவரி 30 அன்றைக்கு பெரிய பிரளயத்தை கிளப்புவார் இது இன்னும் சிக்கலை வலுப்படுத்தும்”
“அப்போ கருணாநிதிக்கு தொல்லைதான்னு சொல்லு” என்றான் வடிவேலு.
“கருணாநிதிக்கு தொல்லையில்ல. கருணாநிதி இது மாதிரி பல தொல்லைகளை எல்லாருக்கும் உருவாக்கக் கூடியவரு. அழகிரி ஸ்டாலின் மோதலை பயன்படுத்தி, எப்படி தான் பலனடையறதுன்னுதான் யோசிப்பாரு.”
“சரி… கூட்டணி நிலவரம் எப்படி இருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
“கூட்டணி ஏறக்குறைய முடிஞ்ச மாதிரிதான். பிஜேபி அணியில வைகோ போயிட்டாரு. வைகோவுக்கு 5 குடுக்கறதா, 6 குடுக்கறதான்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க”
“என்னடா சொல்ற… ? எங்க பத்திரிக்கையில மதிமுகவுக்கும், பாமகவுக்கும் தலா 9 இடங்கள்னு கவர் ஸ்டோரி பண்ணாங்களே” என்று வியப்பாக கேட்டான் பீமராஜன். அவன் அண்ணா சாலையில் உள்ள வாரமிருமுறை இதழில் பணியாற்றுபவன்.
“அது உங்க பத்திரிக்கையில பணியாற்றுபவர்களோட விருப்பம். பாட்டாளி மக்கள் கட்சிக்கு வட மாவட்டங்களில் 10 தொகுதிகளில் நல்ல செல்வாக்கு இருக்கு. குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிற அளவுக்கு செல்வாக்கு இருக்கு. மதிமுகவுக்கு, வைகோவோட சொந்த ஊர்லயே செல்வாக்கு கிடையாது. இணையதளங்களில் மதிமுவுக்காக குரல் கொடுக்கிறவங்களை வைச்சிக்கிட்டு தேர்தலில் ஜெயிக்க முடியாதுன்னு பிஜேபியில் உள்ளவங்களுக்குத் தெரியும். வைகோவுக்கு ஜாதி செல்வாக்கும் இல்ல. வாக்கு வங்கியும் இல்ல. செலவு பண்றதுக்கு பணமும் இல்ல. அதனால அவருக்கு அஞ்சு சீட் தர்றதே பெரிய விஷயம்.
இது வைகோவுக்கும் தெரியும். அதனாலதான் ஓவரா சலம்பல் பண்ணாம, இவரா முன்னாடி போயி, பிஜேபிக்கு என்னோட முழு ஆதரவுன்னு சொல்லி, காவிக் கொடியோட இருக்கிற பாரத மாதா சிலைக்கு மலர் தூவி மரியாதையெல்லாம் பண்ணி, மோடி அலை வீசுதுன்னு பேசிக்கிட்டு இருக்கார்”
“சுப்ரமணிய சுவாமி.. வைகோவோடு பிஜேபி கூட்டடணி வைத்தால், பிஜேபி நாற்பதிலும் நட்டுக்கும், அதிமுக கூட்டணி ஜெயிக்கும்னு பேசியிருக்காரே… “
“ஆமா. அதுவும், வைகோ பிஜேபி அலுவலகமான கமலாலயத்துக்குப் போயி, பாரத மாதா சிலைக்கு பூஜை பண்ண இருந்த சமயத்துல இது மாதிரி ட்வீட் பண்ணிட்டார். வைகோவுக்கு ஒரே வெக்காச்சியா போச்சு. கிரேக்க வரலாறையெல்லாம் படிச்ச வைகோவுக்கு, “மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டா” ன்ற மூதுரை தெரியாமல் போயிடுச்சு. பிஜேபி தலைமைக்கு சொல்லவும் முடியல… மெல்லவும் முடியல. அவங்களால சுப்ரமணிய சுவாமியை விட்டுக் கொடுக்க முடியாது. படித்த வலதுசாரிகள் மத்தியில சுவாமிக்கு நல்ல ஆதரவு இருக்கு. இருந்தாலும், சமாளிச்சிக்கிட்டு, தலைமையின் ஒப்புதலோடுதான் இந்த கூட்டணின்னு சொன்னாங்க. ஆனா, சுவாமி மறுபடியும் ட்வீட் பண்ணியிருக்கார். பிஜேபி மத்தியக் குழு ஒப்புதல் இல்லாம, மதிமுக கூட்டணி நடக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லியிருக்காரு. வைகோ நிலைமைதான் பரிதாபமா இருக்கு. வேற எங்கயும் இடமில்லன்னு, கருப்புத் துண்டை கழட்டி வைச்சுட்டு காவித் துண்டை போட்டுட்டாரு.. இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை. முழிக்கிறாரு”
“சரி… பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை என்ன ? “
பாட்டாளி மக்கள் கட்சி, அரக்கோணம், ஆரணி, கிருஷ்ணகிரி, சேலம், புதுச்சேரி, திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிச்சிடுச்சு. இந்தத் தொகுதிகள் எங்கள் தொகுதிகள். இதுக்கு குறையாம எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யணும்னுதான் பேச்சுவார்த்தையே நடக்குது. “
“இவங்களுக்கு இத்தனை தொகுதியை கொடுத்தா பிஜேபி அணியில கேப்டன் எப்படிப் போவாரு ? “
“அதுதான் இப்போ சிக்கலே. தேமுதிகவோடு நடந்த பேச்சுவார்த்தைகளில், பாட்டாளி மக்கள் கட்சி அறிவிச்சிருக்கும் தொகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட தொகுதியை கேப்டன் கேக்கறாரு. அதை பாமக விட்டுக் கொடுக்க மாட்டேங்குது. அதுவும், கேப்டனுக்கு தரவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பொன் ராதாகிருஷ்ணன் என்ன நினைக்கிறாருன்னா, விஜயகாந்த் வர்றதா இருந்தா, பாமகவை கழட்டி விடலாம்னு நினைக்கிறாரு”
“வேற எந்தக் கட்சிகள் பிஜேபி அணி பக்கம் போகும் ? “
“பச்சமுத்துவோட ஐஜேகேவுக்கு ஒரு இடம், கொங்கு பேரவைக்கு இரண்டு இடமும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கு”
“கேப்டன் கேட்கும் பணத்தை தர்றதுக்கு ஆர்எஸ்எஸ் தடை சொல்றாங்கன்னு சொன்னியே ? ” என்றான் ரத்னவேல்.
“அது உண்மைதான். கேப்டன் கேட்கும் 500 கோடியெல்லாம் தர முடியாதுன்னு ஆர்எஸ்எஸ் தெளிவா பிஜேபிக்கிட்ட சொல்லிட்டாங்க. ஆனா, கேப்டன் கேட்கக்கூடிய பணத்தை நான் தர்றேன்னு பச்சமுத்து உடையார் சொல்லியிருக்கார். அதனால, பணம் ஒரு பிரச்சினையில்ல. கேப்டன் வர்றாரா இல்லையான்றதுதான் பிரச்சினை”
“சரி கேப்டன் எந்தப் பக்கம்தான் போகப் போறார் ? ” என்றான் ரத்னவேல்.
“கேப்டனுக்கும் திமுகவுக்கும் உடன்பாடு ஏறக்குறைய முடிவாயிடுச்சு”
“என்னடா சொல்ற…. கேப்டன் பிஜேபி பக்கம் போகப்போறாருன்னு பலமா செய்திகள் வந்துக்கிட்டு இருக்கே… ? “
“அதெல்லாம் இல்ல. கேப்டனுக்கு, பிஜேபி பக்கம் போனா, சிறுபான்மையினரோட வாக்குகளை இழக்க நேரிடும்ன்ற பயம் இருக்கு. அது தவிரவும், பாட்டாளி மக்கள் கட்சியோட ஏற்பட்டிருக்க தொகுதிகள் நெருக்கடியால, பிஜேபி பக்கம் போறதுக்கு தயக்கமா இருக்கு கேப்டனுக்கு. டாக்டர் ராமதாஸ் கேப்டனை ஏற்கனவே கடுமையா விமர்சனம் பண்ணியிருக்கார். இதனால, ராமதாஸோட ஒரே கூட்டணியில் இணையறதை சங்கடமான விவகாரமா பாக்கறார் கேப்டன்.
மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விஜயகாந்தை திமுக பக்கம் வர்றதுக்கு வலியுறுத்திக்கிட்டு இருக்காங்க. இதையெல்லாம் யோசிச்சுதான், கேப்டன் திமுக பக்கம் சாயலாம்னு முடிவெடுத்திருக்கிறார். மேலும், திமுக பக்கம் சாய்ஞ்சா, மச்சானை மாநிலங்களவை உறுப்பினராக்குவதை விட, வெற்றி வாய்ப்புகள் அதிகம்ன்றது ஒரு காரணம்.”
“காங்கிரஸ் திமுக பக்கம் வருமா வராதா ? ” என்றான் ரத்னவேல்.
“இன்னைக்கு வரைக்கும் காங்கிரஸ் திமுக பக்கம் இருக்ககுதா இல்லையான்னு தெளிவா ஒரு முடிவை கருணாநிதி இது வரைக்கும் அறிவிக்கலை. ஆனா காங்கிரஸ் பெரும்பாலும், திமுக பக்கம்தான் வர இருக்கு. அதுக்கு நேரடியா காங்கிரஸை கருணாநிதி அழைக்காமல், இஸ்லாமிய அமைப்புகளை விட்டு காங்கிரஸை அழைக்கும் திட்டத்தில் இருக்கிறார். மதவாத சக்திகள் வளர்வதை தடுப்பதற்காக, காங்கிரஸோடு இணையணும்னு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து, அதை கருணாநிதி ஏத்துக்கறா மாதிரி ஒரு காட்சியமைப்பை உருவாக்கி, அப்படியே சேந்துக்கிறதுதான் திட்டம்”
“அப்போ திமுக அணி வலுவான அணியா அமையுமே… ? ” என்றான் வடிவேலு.
“ஆமாம் மச்சான். திமுக, தேமுதிக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், ஆகிய கட்சிகளோட வாக்கு வங்கிகளை மட்டும் வைத்தாலே இந்த அணிக்கு மற்ற அணிகளை விட, ஒரு எட்ஜ் இருக்கு. திமுக கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகளுக்கு விழுப்புரமும், முஸ்லீம் லீகுக்கு வேலூரும், மனிதநேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரமும் ஒதுக்கப்பட்டிருக்கு.”
“என்னடா இப்படி சொல்ற…. திமுக மேல இருந்த ஊழல் புகார்கள் இன்னும் அப்படியே இருக்கு. கட்சி குழப்பத்துல இருக்கு. அப்படி இருக்கும்போது எப்படி ஜெயிக்கும்னு சொல்ற ? “
“மச்சான் 1996ல், நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றுப் போகும் அளவுக்கு அதிமுக மோசமான தோல்வியை சந்திச்சது. கிட்டத்தட்ட டோட்டல் வாஷ் அவுட். அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த 1998ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா 18 எம்.பி சீட்டுகளை ஜெயிச்சாங்க.
ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளா தமிழகத்தில் ஆட்சியில் இருக்காங்க. பொதுமக்கள் கூட நேரடியா தொடர்பே இல்லாம ஆட்சி நடத்திக்கிட்டு இருக்காங்க. இடைத்தேர்தல் நடக்கும் சமயங்களைத் தவிர்த்து, பொதுமக்களை ஜெயலலிதா சந்திப்பதே இல்லை. திட்டங்கள் எல்லாத்தையும் காணொளி காட்சி மூலமாத்தான் திறந்து வைக்கிறாங்க. வருடத்தில் பாதி நாட்கள் ஜெயலலிதா கொட நாட்டுலதான் இருக்காங்க. ஜெயலலிதா எங்க இருக்காங்கன்றதை கண்டு பிடிக்கிறதே பெரிய வேலையா இருக்கு. 12 மணி நேர மின்வெட்டை, கிராமப்புற மக்கள் அவ்வளவு எளிதா மறந்துட மாட்டாங்க.
இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவோட வாக்கு வங்கியோட வாக்குகளைத் தாண்டி, ஜெயலலிதாவுக்கு புதிய வாக்குகள் விழுவது எளிதல்ல.. “
“ஆனா 2011 சட்டசபைத் தேர்தலில் பெரிய வெற்றி பெற்றதை நாம மறந்துட முடியாது டா.. ? ” என்றான் பீமராஜன்.
“2011ல் அதிமுகவுக்கு மிகப் பெரிய வாக்குகள் விழுந்தது உண்மைதான். அது முழுக்க முழுக்க, திமுக எதிர்ப்பு வாக்குகள் என்பதை மறந்து விடக்கூடாது. முதலமைச்சரான ஜெயலலிதா, மாறவேயில்ல என்பது மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கு.
பள்ளர்கள் எனப்படும் தேவேந்திரக் குலத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் தென் மாவட்டங்களில் இருக்காங்க. பரமக்குடி சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டது அவங்க மனதில் மாறாத வடுவா இருக்கு. அதுக்கு காரணமானவங்கன்னு சம்பத் கமிஷன் சொன்ன இரண்டு காவலர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்காம தவிர்த்ததை, அந்த சமூக மக்கள் அவ்வளவு எளிதா மறந்துட மாட்டாங்க. ஒட்டுமொத்தமா அந்த சமூக மக்கள் திமுகவுக்கு வாக்களிப்பாங்க.
வட மாவட்டங்களில் வன்னியர்கள், தருமபுரி சம்பவத்தின் காரணமா அதிமுகவுக்கு எதிரா வாக்களிப்பாங்க. அதனால, ஜெயலலிதா நாற்பதும் நமதே ன்னு சொல்வது, கனவுதான்”
“புதிய தலைமுறை முதலாளி பச்சமுத்து மேல பிடிவாரண்ட் நிலுவையில் இருக்கு. அவரை எப்போ வேணாலும் கைது செய்வாங்கன்னு சொன்னியே… என்ன நிலைமையில இருக்கு ? “
“அந்த வாரண்டை ரத்து பண்ண வேண்டிய பொறுப்பு, தேவக்கோட்டையில் இருக்கும் ராஜபாண்டியன் என்ற வழக்கறிஞர் கிட்ட ஒப்படைக்கப்பட்டிருக்கு. வாரண்ட் ரத்து பண்ணிட்டா, பச்சமுத்துகிட்ட பணம் வசூல் பண்ண முடியாதுன்னு, அதை அப்படியே நிலுவையில் வைச்சா, பச்சமுத்துவை மிரட்டி காசு பாக்கலாம்னு தேவகோட்டையில் இருக்கும் ராஜபாண்டியன்ற வக்கீல், மற்றும் சென்னையில் சில வழக்கறிஞர்கள் சேந்து, பச்சமுத்துவை நல்லா கறந்துக்கிட்டு இருக்காங்க”
“ஆமாம்பா….. ஒரு சிபிஐ விசாரணையில், பச்சமுத்துவை சாட்சியா கூப்புட்டப்பவே, பச்சமுத்துவை கைது பண்ணப்போறாங்கன்னு சொல்லி பீதியை கௌப்பி, பல பேர் பணம் வசூல் பண்ணாங்க”
“ஆமாம்ணே.. பச்சமுத்துகிட்ட பணம் இருக்கிற அளவுக்கு அறிவு இல்லையே… என்ன பண்றது ? “
“அம்மா தேர்தலை எப்படி அணுகுவதா இருக்காங்க டா ? ” என்றான் ரத்னவேல்.
“நாம ஏற்கனவே பேசிக்கிட்டிருந்தபடி, இடது சாரிகள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி. மீதம் உள்ள 38லும் அதிமுக போட்டியிடும். “
“மாநிலங்களவை வேட்பாளர் தேர்வுலயே ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்குது போலருக்கே… ? ” என்றான் பீமராஜன்.
“வேட்பாளர்களையும், அமைச்சர்களையும் மாற்றுவதில், ஜெயலலிதாவுக்கு நிகரே கிடையாது. 1996ம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் முதலில் ஆதி ராஜாராம் பெயரை அறிவித்து விட்டு, அவரை மாற்றி தளவாய் சுந்தரத்தை நியமிச்சாங்க. அதுக்குப் பிறகு கடந்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில், சரவணபெருமாளை அறிவித்து விட்டு, அவரையும் மாத்துனாங்க. இந்த முறை சின்ன துரையை அறிவிச்சுட்டு மாத்துனாங்க. இப்போ அறிவிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா மீதும் ஏகப்பட்ட ஊழல் புகார்கள் இருக்கு”
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் சசிகலா புஷ்பா
“ஏன் இப்படி மாத்தறாங்க ? “
“ஜெயலலிதாவுக்கு, ஆட்சி நிர்வாகத்துலயோ, கட்சி மீதோ எவ்விதமான பிடிமானமும் இல்லைன்றதைத்தான் இது காட்டுது. மாநில உளவுத்துறை, காவல்துறையை கையில வைச்சிருக்காங்க. இது போக ஜெயலலிதாவுக்கு விசுவாசமான அடிமையா பல பத்திரிக்கையாளர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட சொன்னா பத்து நிமிஷத்துல விசாரிச்சு சொல்லப் போறாங்க. ஆனா, அப்படி விசாரிக்கிறதுக்குக் கூட ஜெயலலிதாவால முடியல. ஒரு வேட்பாளரை அறிவிக்க வேண்டியது. 2011 சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டணி கட்சிகளோட பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருந்தப்போவே, ஜெயா டிவியில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியில் வந்தது. இது போல ஜெயலலிதா குளறுபடிகளோட ஒட்டுமொத்த உருவமா இருக்காங்க. இந்த லட்சணத்துலதான் கட்சியும் நடத்தறாங்க.. ஆட்சியும் நடத்தறாங்க.
மன்னார்குடி கும்பல் இருந்தப்போ கூட, வேலைகள் ஒழுங்கா நடந்துக்கிட்டு இருந்துச்சு. இப்போ நானே எல்லாத்தையும் பண்றேன்னு குட்டையை குழப்பிக்கிட்டு இருக்காங்க. இதே அணுகுமுறை, மக்களவைத் தேர்தலிலும் கடைபிடிக்கப்பட்டால், நாற்பதிலும் நாமம்தான்” என்று சொல்லி சிரித்தான் தமிழ்.
“அம்மா தனியா ஒரு சர்வே எடுத்திருக்காங்க போல இருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
“ஆமாம் மச்சான். மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மூலமா எடுத்த சர்வே முடிவுகளின்படி, அதிமுக 30 இடங்களில் வெற்றி பெறும்… பெண்களின் ஆதரவைப் பெற, பெண் வேட்பாளர்களை அதிகம் நிறுத்தணும்னு அந்த சர்வே முடிவுகள் சொல்லுது. அதன்படி பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரலாம்னு முடிவெடுத்திருக்காங்க”
“அத்தோட, மீனவர்கள் பிரச்சினையில் கருணாநிதி எதுவுமே செய்யலைன்றதை நிரூபிக்க, சர்வதேச நீதிமன்றத்தில், இலங்கை அரசு மீது வழக்கு தொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்காங்க ஜெயலலிதா. ஏற்கனவே, மீனவர் அமைப்புகளோட பேசி,
“ஆம் ஆத்மி பார்ட்டியில் கூடங்குளம் போராட்டக் குழுவினர் இணைவது எந்த நிலையில் இருக்கு டா ? ” என்றான் வடிவேலு.
“உதயக்குமார், புஷ்பராயன் உள்ளிட்ட போராட்டக் குழுவினரைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மி பார்ட்டியில் இணைவது குறித்த எவ்விதமான ஊசலாட்டமும் இல்லை. சமீபத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சமுதாயத் தலைவர்களோடு நடந்த பேச்சுவார்தையில், ஆம் ஆத்மி பார்ட்டியோடு, பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம்னு சொல்லிட்டாங்க. இப்போ, சிக்னல் ஆம் ஆத்மி பார்ட்டிக்கிட்ட இருந்துதான் வரணும்”
“சமீபத்தில் டெல்லியில் நடந்த போராட்டங்களினால் ஆம் ஆத்மி பார்ட்டியோட செல்வாக்கு குறைந்ததா ஊடகங்கள் சொல்லுதே.. ? அது தவறான நடவடிக்கையா ? டெல்லி காவல்துறைக்கு எதிரா போராட்டம் நடத்தி தப்புப் பண்ணிட்டாங்களா ? “
“டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி ஏற்படுத்திய பிரச்சினையால காவல்துறைக்கு எதிரா போராட்டம் நடத்தியது வேணா தவறா இருக்கலாம். ஆனால், டெல்லி காவல்துறைக்கு எதிரா, நடத்தப்பட்ட போராட்டம், அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களிடையே ஆம் ஆத்மி பார்ட்டிக்கு செல்வாக்கை அதிகரிச்சிருக்கு. நாள்தோறும் காவல்துறையோடு மோதும் ஏழை உழைப்பாளி மக்களுக்கு, காவல்துறையோடு நேரடியாக மோதும் கட்சியை எப்படிப் பிடிக்காமப் போகும் ? டெல்லி ஊடகங்கள் மற்றும் நடுத்தர வர்க்கங்களுக்கு, ஏதாவது ஒரு மூலையில உக்காந்துக்கிட்டு உண்ணாவிரதம் இருந்து, மனு குடுத்து, தேசியக் கொடியை ஆட்டிக்கிட்டு இருக்கிற போராட்டம்தான் சிறந்த போராட்டம். ஆனா, இந்த ஊடகங்களும், நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களும், வாக்களிக்கப் போவதில்லை. ஏழை மக்கள்தான் வாக்காளர்கள். அவர்கள் மத்தியில், கேஜ்ரிவாலோட செல்வாக்கு அதிகரிக்கத்தான் செய்திருக்கு.”
“அதிமுக மந்திரிகளெல்லாம் தீவிரமான வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்காங்க போல இருக்கே…? ” என்று அடுத்த சப்ஜெக்டுக்குத் தாவினான் வடிவேல்.
“ஆமாம். அதிக வசூல் பண்ண வேண்டிய பொறுப்பு நத்தம் விஸ்வநாதன்கிட்ட ஒப்படைக்கப் பட்டிருக்கு. டாஸ்மாக்கை கையில் வைத்திருப்பதால் அவருக்கு பெரிய பொறுப்பு. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மெட்ரிகுலேஷன் பள்ளிகளிடம் மட்டும் 100 கோடி வசூல் பண்ண இருக்கார். பள்ளிக் கட்டணம் நிர்ணயம் பண்ண நியமிக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தாம இருக்கவும், கமிட்டியையே செயல்படுத்த விடாம முடக்கவும் இந்தத் தொகை கொடுக்கப்பட இருக்கு. இதற்கான முதல் தவணை, இந்த வாரத்தில் அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும். பாராளுமன்றத் தேர்தலுக்குள்ள எப்படியும் 1000 கோடிக்கு குறையாம வசூல் பண்ணனும்னு அமைச்சர்களுக்கு கட்டளை”
“சரி. காவல்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் வருதுன்னு சொல்றாங்களே… எந்த அளவுக்குப்பா உண்மை ? ” என்றார் கணேசன்.
“ஆமாம். தேர்தலையொட்டி, அதிமுக பலவீனமா இருக்கக் கூடிய தொகுதிகளில் சாதகமான காவல்துறை அதிகாரிகளை நியமிக்கும் வேலை நடக்க இருக்கு. அதுக்கு ஏற்றார்ப்போன்ற அதிகாரிகளை அடையாளம் கண்டு பிடிச்சிக்கிட்டு இருக்காங்க”
“அந்த மாதிரி அதிகாரிகள் இருக்காங்களா என்ன ? “
“என்னண்ணே இப்படிக் கேட்டுட்டீங்க ? அதிமுக அமைச்சர்களை விட விசுவாசமான அடிமைகள், காவல்துறையிலும், நிர்வாகத் துறையிலும் இருக்காங்க. அந்த மாதிரி சிறந்த அடிமைகளை அடையாளம் காணும் பணிதான் நடந்துக்கிட்டு இருக்கு வரக்கூடிய வாரங்களில் பெரிய அளவில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்”
“டேய்… சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜை மாற்றப் போறாங்கன்னு பேச்சு இருக்கே… ? ” என்றான் பீமராஜன்.
“மச்சான். இந்த பேச்சு ரொம்ப நாளா ஓடிக்கிட்டு இருக்கு. இங்கிலாந்து இளவரசரைக் கூட எளிதா சந்திச்சுடலாம். ஆனா ஜார்ஜை சந்திக்க முடியாது. கூடுதல் ஆணையர்களைத் தவிர வேறு யாரும் சந்திக்க முடியாதுன்றது ஆணையர் அலுவலகத்துல எல்லாருக்கும் தெரியும். எந்தப் பிரச்சினையா இருந்தாலும், உளவுத் துறை இணை ஆணையர் வரதராஜுவைப் பாருங்கள்னு சொல்லிட்றாரு.
எந்த முக்கியமான நிகழ்வுகளுக்கும் ஜார்ஜ் நேரா போறதே கிடையாது. தொலைக்காட்சி நிலையங்கள் லைவ் டெலிகாஸ்ட் பண்றது மாதிரி ஒரு கேமராமேனை அனுப்பி, ரூமுக்குள்ளயே உக்காந்து டிவியில பாத்துக்கிட்டு இருக்கார். வரதராஜுவைத் தவிர வேறு யாரையும் அவர் சந்திக்கிறது இல்லை. வரதராஜுதான் அவருக்கு எல்லாமே.
தமிழக காவல்துறை இயக்குநர் ராமானுஜத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளயே வராமல் தனி சாம்ராஜ்யம் நடத்திக்கிட்டு இருக்கார் ஜார்ஜ். துணை ஆணையர்கள், ஜார்ஜை பாத்தே பல மாதங்கள் ஆகுது. புதிய ஆணையர் கட்டிடத்தில், ஜார்ஜ் இருக்கும் தளத்தில் யாருமே போகக் கூடாதுன்னு சொல்றாங்க.
சில நாட்களுக்கு முன்னால், பாதுகாப்பு தொடர்பாக, தலைமைச் செயலாளர் அழைத்த ஒரு கூட்டத்துக்கு டிஜிபியே போயிருந்தார். ஆனா, ஜார்ஜ் போகலை. ஜெயலலிதா கிட்ட நல்ல பேர் இருந்தாலும், தன்னோடு பணியாற்றும் சக அதிகாரிகள் அத்தனை பேரையும் பகைச்சுக்கிட்டு இருக்கார். எப்போ காலை வாரி விடுவாங்கன்னு தெரியலை. ஜார்ஜை விட பெரிய பெரிய அப்பாடக்கரெல்லாம் இருந்த இடம் தெரியாம போயிட்டாங்க. இவரு என்ன ஆகப்போறாருன்னு தெரியலை..”
“டிஜிபி ராமானுஜம் தேர்தலுக்கு முன்னாடியே போயிடுவாருன்னு சொன்னியே என்னப்பா ஆச்சு ? “
“அண்ணே… ராமானுஜம் போறாரோ இல்லையோ… அவரை எப்படியும் இந்தப் பதவியில் நீடிக்க விட மாட்டாங்க. ராமானுஜம், அதிமுக ஆட்சிக்கு சாதகமா நடந்துக்குவாருன்னு, திமுக தரப்பில் உறுதியா நம்பறாங்க. இன்னைக்கு ஸ்டாலின் தன்னோட முகநூல் பக்கத்தில் ராமானுஜத்துக்கு எதிரான தன்னோட முதல் தாக்குதலை தொடுத்திருக்கார். ஸ்டாலின் தன்னோட முகநூல் பக்கத்தில் “அண்மையில் நடைபெற்ற ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் காவல்துறையினரின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளால் எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்திற்குப் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டதுடன், ஆளுங் கட்சியினரின் விதிமீறல்கள் கடைசிவரை நீடித்தன.
நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆளுங்கட்சியினரின் அத்து மீறல்களுக்குக் காவல்துறை துணை நிற்கும் என்ற சந்தேகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கிறது.
தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ராமானுஜம் பணி நீட்டிப்பில் உள்ளார். அவர் தமிழக அரசின் தயவை எதிர்பார்த்தே பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே அவரைப் போன்ற அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை” ன்னு சொல்லியிருக்கார்.
தேர்தல் அறிவிப்பு வந்தததும், தேர்தல் ஆணையத்துக்கு திமுகவோட . முதல் மனு, ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். “
“சரி.. காவல்துறை உயர் அதிகாரி ஒருத்தர் விருப்ப ஓய்வில் போறாராமே…. ? “
“போகணும்ன்றது அவரோட விருப்பம். ஆனா, அவரால போக முடியாது”
“யாருடா அது… ? என்ன விஷயம். விளக்கமா சொல்லு ” என்று அலுத்துக் கொண்டான் ரத்னவேல்.
“சிபி சிஐடியில் டிஐஜியாக உள்ள ஜான் நிக்கல்சன் தான் விருப்ப ஓய்வில் போகணும்னு முயற்சி பண்றவர். ஆனா, இவர் விருப்ப ஓய்வில் போறாரா இல்லையான்றதை விடு. இவர் பணியில் இருக்கப் போறாரா இல்லையான்றதே தெரியலை. டிஐஜியா இருந்தப்போ ஒருத்தர் கூட சேர்ந்து தொழில் பண்றேன்னு ஆரம்பிச்சாரு. இது ஏற்றுமதி இறக்குமதி தொழில். அந்தத் தொழிலில் அதிகமா லாபம் வர ஆரம்பிச்சதும், பார்ட்னருக்கு பணம் குடுக்காம ஏமாத்தியிருக்கார்.
பார்ட்னர் கேள்வி கேட்டதும், பார்ட்னர் மேலயே பொய் வழக்கு போட்டு, அவர் மீது குண்டர் சட்டத்தை போட்டுட்டார். அவர் சம்பாதிச்ச பணத்தையெல்லாம், ரேணுகா ன்ற பெண் பெயரில் முதலீடு பண்ணியிருக்கார். இந்தத் தகவலெல்லாம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகாரா போயி, இப்போ பல்வேறு மட்டங்களில் விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. அதனால, இவர் எந்த நேரமும் பணி இடை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருக்கு. “
ஜான் நிக்கல்சன் ஐபிஎஸ்
“இன்னோரு அதிகாரி, வசூலை வாரி குவிச்சுக்கிட்டு இருக்காராமே.. ? ” என்றான் ரத்னவேல்.
“பல அதிகாரிகள் இருக்காங்க… எந்த அதிகாரியை சொல்ற ? “
“போக்குவரத்து தொடர்பா ஒரு அதிகாரி இருக்காரே.. “
“ம்ம்… ஆமாம். சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையரா இருக்கும் கருணா சாகர்தான் வசூலைக் குவிச்சிக்கிட்டு இருக்கார். அவர் போக்குவரத்து கூடுதல் ஆணையரா ஆனதுல இருந்து இது வரைக்கும் அவரோட வருமானம் மட்டும் குறைந்தது 15 கோடி இருக்கும்னு சொல்றாங்க”
“என்னடா சொல்ற… எப்படி அவ்வளவு வருமானம் வரும் ? “
“மச்சான். பெரிய பெரிய வணிக வளாகங்கள், மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு போக்குவரத்து காவல்துறையிடமிருந்து தடையில்லா சான்று வாங்கணும். அப்படி வாங்கினாத்தான் கட்டிடம் கட்ட முடியும். இந்த விவகாரத்துலயே கருணா சாகர் பெரிய அமவுன்ட் அடிச்சிட்டதா சொல்றாங்க”
“அவருக்கும் கவர்னர் அலுவலகத்தோட முன்னாள் ப்ரோக்கருக்கும் பிரச்சினைன்னு சொன்னாங்களே… ? “
“ஆமாம். பர்னாலா கவர்னரா இருந்தப்போ அங்கே கோலோச்சிக்கிட்டு இருந்த நஜிம்முதினுக்கு பல அதிகாரிகளோட நெருக்கம் உண்டு. கருணா சாகரும் நஜிம்முதினோட ரொம்ப நெருக்கம். நஜிம்முதீனுக்கு சொந்தமான பங்களாக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கு. அந்த பங்களாக்களில் நஜிம்முதீன் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் கருணா சாகர் கலந்து கொள்வது வழக்கம்”
கருணா சாகர் ஐபிஎஸ்
“இதுல என்ன தப்பு…. எல்லா அதிகாரியும்தான் விருந்துக்குப் போறாங்க.. “
“பொறுமையா கேளுடா.. நஜிம்முதீனும், கருணா சாகரும் ரொம்ப நெருக்கம். கருணா சாகர் திருநெல்வேலி ஆணையரா இருந்தப்போ, பல பேருக்கு துப்பாக்கி லைசென்ஸ் கொடுத்து மாட்டிக்கிட்டாரு. அந்த லைசென்ஸ்கள் அத்தனையும் நஜிம்முதீன் பரிந்துரையின் பேரில் கொடுக்கப்பட்டது. இப்படி ரெண்டு பேருக்கும் நடுவுல பல கொடுக்கல் வாங்கல்கள் இருந்திருக்கு.
இதுல பெரிய சிக்கல் வந்து ரெண்டு பேருக்கும் முட்டிக்கிச்சு. கருணா சாகர், நஜிம்முதீனைப் பார்த்து உன்னை என்ன பண்றேன் பாருன்னு மிரட்டியிருக்கார். பதிலுக்கு நஜிம்முதீன், கருணா சாகர் கேளிக்கை விருந்தில் கலந்து கொண்டபோது எடுத்த ஆபாச வீடியோ ஒன்னை எடுத்து கருணா சாகர் கிட்ட கொடுத்திருக்கார். வீடியோவை பாத்த கருணா சாகர், அதிர்ச்சியில உறைஞ்சிட்டார். அதோட நஜிம்முதீன் கிட்ட எதுவும் பேசல”
“பொறுக்கிகளோட சகவாசம் வச்சா இப்படித்தான் ஆகும்” என்றார் கணேசன். சொல்லி விட்டு எழுந்தார்.
சபை கலைந்தது.