கருணாநிதி மற்றும் அழகிரி இடையே என்ன நடந்தது… என்ன பேசினார்கள் என்று பல்வேறு ஊகங்கள், மற்றும் வதந்திகள் பரவியுள்ள நிலையில், சவுக்கு செய்தியாளர்கள் உண்மையை உள்ளபடி, அப்படியே அள்ளி வந்துள்ளார்கள்.
என்ன நடந்தது என்பதை பார்க்கும் முன், இந்த வீடியோவை பார்த்து விட்டு, பிறகு படியுங்கள்.
கருணா : டேய்…. அழகிரி.. நாந்தேன்.
அழகிரி : அய்யா சொல்லுங்கய்யா.
கருணா : அறிவாலயம் போனியா…
அழகிரி : ஆமாங்கய்யா.
கருணா : கட்சி கொள்ளையடிக்கத்தான் இருக்குன்னு சண்டை போட்டீங்களே… இப்போ கட்சியோட நிலைமை புரியுதா ?
அழகிரி : நல்லாவே புரியுதுங்கைய்யா. நான் செஞ்ச தப்பும் புரியுது. அதுக்கு தண்டனையா இந்த கட்சியை விட்டே போயிடலாம்னு இருக்கேன்.
கருணா : என்னது… ? கட்சியை விட்டுப் போறீயளா.. நடந்ததுக்கு பரிகாரம் தேடாம, கட்சியை விட்டுப் போறேன்னு சொல்றது கோழைத்தனம் இல்ல ?
அழகிரி : அதுக்காக….
கருணா : அதுக்காக.. ?
அழகிரி : அதுக்காக நடக்கிற கொள்ளையையெல்லாம் உட்கட்சி ஜனநாயகம்னு நெனைச்சிக்கிட்டு இருக்கறது முட்டாள்த்தனம்.
கருணா : இந்தக் கொள்ளைக்கூட்டத்தை உருவாக்குனதே உங்க அப்பன்றதை மறந்துடாத.
அழகிரி : அப்படிப்பாத்தா நானும் இந்தக் கொள்ளைக்கூட்டத்தை உருவாக்குனவன்தான்யா. ஆனா அதுக்காக பெருமைப் பட விரும்பல. 20 வருஷம் பின்தங்கியிருக்கிற இந்த கொள்ளைக்கூட்டத்துல இருந்து நான் கத்துக்கிட்ட ரவுடித்தனத்தையெல்லாம் காட்ட முடியாம இருக்கறது எனக்கு புடிக்கல.
கருணா : 20 வருஷம் பின்தங்கிதான் இருக்கோம் நான் ஒத்துக்கறேன். 40 வருஷமா தமிழுணர்வு, திராவிடம்னு பேசிக்கிட்டு, கரைவேட்டியை கட்டிக்கிட்டு, தமிழ் வாழ்க, திராவிடம் வாழ்கன்னு கத்திக்கிட்டு அம்புட்டுப் பயலும் கொள்ளையடிச்சிக்கிட்டு இருந்த பயலுகதேன். அறிஞர் அண்ணா கொள்ளையடிக்கலாம் வாங்கன்னு கூப்புட்டப்போ, ஓடிப்போய் மொத வரிசையில நின்ன பயலுக அம்புட்டுப் பேரும் நம்ம பயகதேன். திடீர்னு அவனை கொள்ளையடிக்காத, நேர்மையா அரசியல் பண்ணலாம்னு சொன்னா எப்படி வருவான் ? நீ ரவுடித்தனம் தெரிஞ்சவனாச்சே…. ? கூட்டிக்கிட்டு வா… அங்க கூட்டிக்கிட்டு வா… ? அந்தப் பய மெதுவாத்தான் வருவான். மெதுவாத்தான் வருவான்.
அழகிரி : மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா… ? அதுக்குள்ள நான் செத்துடுவேன் போலருக்கே.
கருணா : செத்துப் போ…. செத்துப்போ… நான் தடுக்க முடியுமா ? எல்லாப் பயபுள்ளையும் ஒரு நாள் சாகப்போற பயலுகதான். வாழ்றது முக்கியம்தேன். இல்லன்னு சொல்லல… ஆனா எவ்வளவு கொள்ளையடிச்சுட்டு வாழ்ந்துட்டு செத்துப்போறதுதான் அந்த சாவுக்கே பெருமை. ஆட்சியில இல்லாதப்போவே கொள்ளையடிக்கணும்னு நெனைக்க முடியுமோ ? இன்னைக்கு ஆட்சியில இல்ல . நாளைக்கு ஆட்சிக்கு வருவோம். உன் மவன் துரை தயாநிதி கொள்ளையடிப்பான். அதுக்கபுறம்… ? அவன் மவன் கொள்ளையடிப்பான். அதப்பாக்கறதுக்கும் நான் இருப்பேன். ஆனா, மொதல்ல கொள்ளையடிச்சது, நான்தான். இதெல்லாம் என்ன பெருமையா.. ? கடமை. ஒவ்வொருத்தனோட கடமை.
அழகிரி : ஆனா…. பொருளாளர் பதவியை எனக்கு குடுக்காம தம்பிக்கு குடுத்ததால கட்சி வௌங்காதுய்யா. என்ன விட்ருங்கய்யா.. நான் போறேன்.
கருணா அழகிரி சட்டையை பிடிக்கிறார்.
கருணா : நாலஞ்சு கொலை பண்ணிப்புட்டு, நெஞ்ச நிமித்தி அய்யாகிட்ட பேசற வயசுல்ல…
அழகிரி : அப்படி இல்லய்யா.
கருணா : வேற எப்படி ? வேற எப்படின்னு கேக்கறேன். ரெண்டு தாய் இருக்கிற புள்ளன்னு ஊட்டி ஊட்டி வளத்தேன்ல…. ? இது வரைக்கும் ஒரு வார்த்தை பேசியிருப்பேனா உன்கிட்ட… ? ஒரு வார்த்தை ? என்னால முடிஞ்சத நான் கொள்ளையடிச்சுட்டேன்.. நீ கொள்ளையடிச்சியா ? நீ டெல்லியில மந்திரியா இருந்து சம்பாதிப்பன்றதுக்காக, உன்னை எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்புச்சோமே…அந்த காட்டுமிராண்டிப் பயலுகளுக்கு என்ன பண்ண நீயி ? ஏதாவது பண்ணு ? அதுக்கப்புறம் கட்சியை விட்டுப் போ. பொரோட்டாக் கடை வைய்யி… கோனார் மெஸ்ஸு வையி. சன்னி லியோனை கல்யாணம் பண்ணிக்க…. பணம் சம்பாரி.. என்ன இப்போ… ?
அழகிரி : கொள்ளையடிக்கிறது கட்சியில இருந்துதான் செய்யணும்னு இல்லைங்கய்யா… வெளியில இருந்தும் கொள்ளையடிக்கலாம். நான் போறேன்யா…
கருணா : போயிட்டு வர்றேன்னு சொல்லுங்களேன். அந்த நம்பிக்கைதான் நம்ப குடும்பத்துல உள்ளவங்களுக்கு முக்கியம். ந்தா.. எங்கய்யா பேராசிரியர் ? எலே யார்றா அவன்.. எங்க பேராசிரியர் ?
பேராசிரியர் : அய்யா.
கருணா : இங்கதான் இருக்கியா… அய்யா, கட்சியை விட்டு மதுரையில போயி பொரோட்டா கடை வைக்கப் போறாங்களாம். ரொம்ப நாள் கட்சியில இருக்க மாட்டாங்களாம். அவரை கட்சியை விட்டு சஸ்பெண்ட் பண்ணு.
பேராசிரியர் : ஒரு பத்து நாள் கழிச்சு சஸ்பென்ட் பண்ணட்டுங்களா ?
கருணா : என்ன அப்பு.. ஒரு பத்து நாள் கழிச்சு போறீங்களா ?
அழகிரியை அமருமாறு சைகை செய்கிறார். அழகிரி மண்டியிட்டு அமர்கிறார்.
கருணா : பத்து நாள் இருக்க மாட்டீயளா ? என் மவன பத்து நாள் கட்சியில வச்சுப் பாக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா ?
அழகிரி : அய்யா … நான் கட்சியை விட்டுப் போகலங்கய்யா.. அங்க போயி பரோட்டா கடை வச்சு, நெறய்ய சம்பாதிச்சதும் உங்களையும் கட்சியை விட்டு கூட்டிட்டுப் போறேங்கய்யா.
கருணா : என்னையா ? ம்கூம். இந்த கட்டை திமுகவுலயே இருந்து, எரிஞ்சு வெந்து, கட்சியையே நாசம் பண்ணுமே தவிர, கட்சித் தலைவர் பதவியை விட்டுக் குடுக்காது. இந்த மரத்தை வேரோட சாச்சுறாதப்பு.. நான் அம்புட்டுதான் சொல்லுவேன். புரியுதா ?
அழகிரி : அய்யா நான் கட்சிக்கு நல்லது ஏதாவது செஞ்சு … செய்வேன்யா… என்னை நம்புங்க.
கருணா : உங்களைத்தானேய்யா நம்பணும்.. இந்த வீட்ல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு ?
இருவரும் அழுகிறார்கள்.