சென்னை உயர்நீதிமன்றத்தில், சவுக்கு தளத்தை முடக்க வேண்டும் என்று கோரி, மூத்த வழக்கறிஞரும், மனித உரிமைப் போராளியும் ஆன (?????) சங்கரசுப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஒரு மாதமாக விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கை, திமுக உடன்பிறப்பு மற்றும், திமுக நீதிபதிகள் பேரவையின் நிறுவனத் தலைவரான நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்து வந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தபோது, காவல்துறையிடம் சவுக்கு என்ற தளத்தை நடத்துவது யார் என்று கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பிக்கவும், சவுக்கு தளத்தை நடத்துபவரை உடனடியாக கைது செய்யவும் என்று கட்டளையிட்டார் சி.டி.செல்வம். அதற்கு பதிலளித்த காவல்துறையினர், சவுக்கு தளத்தை நடத்துபவர் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. மனுதாரர் கூறும் பெயருள்ள சங்கர்தான் இந்த தளத்தை நடத்துகிறார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆகையால், உடனடியாக அவரை கைது செய்ய முடியாது என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட வழக்கறிஞர் சங்கரசுப்பு, சங்கர் என்ற நபர் ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றியுள்ளதால், காவல்துறையினர் அவருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவரை கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தெரிவித்ததை அடுத்து, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும், மூத்த வழக்கறிஞரான பி.குமார், இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நண்பனாக இருந்து செயல்பட்டு, இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ஏற்று, மூத்த வழக்கறிஞர் பி.குமார் இன்று சி.டி.செல்வம் முன்பாக அறிக்கை சமர்ப்பித்தார். பி.குமார் தனது அறிக்கையில், தனி நபர் சுதந்திரம் மற்றும் அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை ஆகியவை, பின்னிப் பிணைந்தது. இதில் நூலளவே வேறுபாடு உள்ளது. இதை நீதிமன்றம் கவனமாகக் கையாள வேண்டும் என்று தெரிவித்தார். இதைப் படித்த நீங்கள் குழம்பியது போலவே, நீதிபதி சி.டி.செல்வமும் குழம்பினார்.
என்ன செய்வதென்று சி.டி.செல்வம் யோசித்துக் கொண்டிருந்தபோது, மூத்த வழக்கறிஞரும், மனித உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் சங்கரசுப்பு எழுந்து பேசினார். நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்பான நடைபெறும் அத்தனை விவகாரங்களும், ஆச்சிமுத்து சங்கர் என்பவரின் முகநூல் பக்கத்தில், அப்டேட் செய்யப்படுகிறது. ஆகையால், அவர்தான் இந்த தளத்தை நடத்துகிறார். ஆனால் காவல்துறை அவரை கைது செய்ய மறுக்கிறார்கள். இது குறித்து நீதிமன்றம் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதி சி.டி.செல்வம் வெகுண்டெழுந்தார். பெயர் தெரிகிறது…. இந்தத் தளத்தை யார் நடத்துகிறார் என்று தெரிகிறது… அப்படி இருந்தும் மெத்தனம் ஏன் ? என்று கோபமாக கேட்டார். அரசு வழக்கறிஞர், ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய முடியாது என்று கூறினார். இப்படியெல்லாம் காரணத்தை கூறாதீர்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை, கைது செய்து, இது தொடர்பான அறிக்கையை நாளை சமர்ப்பியுங்கள் என்று உத்தரவிட்டார்.
அன்பார்ந்த சவுக்கு வாசகர்களுக்கு. கடந்த நான்கு ஆண்டுகளாக, எவ்விதமான விளம்பரமும் இல்லாமல், வாசகர்களின் அன்பையும், ஆதரவையும் மட்டுமே நம்பி நடத்தி வரப்படும் தளம் இந்த சவுக்கு தளம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவில் எந்த ஊடகமும் செய்யாத பணிகளை, சவுக்கு தளம் செய்திருக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
சவுக்கு தளத்தை முடக்கியே தீர வேண்டும் என்று கச்சை கட்டிக்கொண்டு நிற்கும் நீதிபதி சி.டி.செல்வம், கருணாநிதியின் அடிமை. திமுக கரை வேட்டி கட்டாத ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி. இவருக்கும் நீதிபதி கர்ணனுக்கும் என்ன வேறுபாடு தெரியுமா ? நீதிபதி கர்ணன், எப்படி ஊழல் செய்வது என்று தெரியாமல் மாட்டிக் கொண்டார். நீதிபதி சி.டி.செல்வம், மிக மிக தேர்ந்த அறிவோடு, கருணாநிதி போலவே, விஞ்ஞான முறையில் ஊழல் செய்து கொண்டிருக்கிறார். திமுகவின் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், எந்த வழக்குக்காக வந்தாலும், அவர் சார்பாக தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். திமுக வழக்கறிஞர்கள் என்ற அடையாளம் காணப்பட்ட அத்தனை வழக்கறிஞர்கள் தொடுக்கும் எல்லா வழக்குகளிலும், அவர்களுக்கு சாதகமாக உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். திமுக வழக்கறிஞர்கள் ஆஜரான வழக்குகளில், நீதிபதி சி.டி.செல்வம் தள்ளுபடி செய்த வழக்குகள் எத்தனை என்று, ஒரு கணக்கெடுப்பு செய்தால், சவுக்கு தளத்தில், நீதிபதி சி.டி.செல்வம் பற்றி எழுதிய கூற்றுகள் அத்தனையும் உண்மை என்பது புலப்படும்.
கருணாநிதியின் காலைக் கழுவி நீதிபதியானவர் சி.டி.செல்வம். கருணாநிதி எப்படிப்பட்ட அயோக்கியரோ… அதற்கு சற்றும் குறையாத அயோக்கியர் நீதிபதி சி.டி.செல்வம் என்றால் அது மிகையாகாது. கருணாநிதிக்கு இன்று பணிவிடை செய்து கொண்டிருக்கும் நித்தி என்கிற நித்தியானந்தத்திற்கும், கருணாநிதியின் வண்டியைத் தள்ளிச் செல்லும் பாண்டியனுக்கும், நீதிபதி சி.டி.செல்வத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நித்திக்கும், பாண்டியனுக்கும் வீட்டு மனை கொடுத்தார் கருணாநிதி. சி.டி.செல்வத்துக்கு நீதிபதி பதவி கொடுத்தார் கருணாநிதி. கருணாநிதியின் துதிபாடி நீதிபதியாகும் ஒரு நபர் எப்படிப்பட்ட நபர் என்பதை உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. ஆனால் சவுக்கு தளம், நீதிபதி சி.டி.செல்வத்தைப் போல, முதுகெலும்பை கழற்றி வைத்து விட்டு, கூழைக் கும்பிடு போடும் நபரால் நடத்தப்படும் தளம் அல்ல. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் “யாரக்கும் அஞ்சாத நெறிகள்”, இதுதான் எம் தாரக மந்திரம். அது நீதியரசர் சி.டி.செல்வமாக இருந்தாலும் கூட.
கருணாநிதி கடைக்கண் காட்டியிராவிட்டால், சி.டி.செல்வம், இன்று ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்திருப்பார். உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக, தன்னைக் கடவுளாக பாவித்து, சி.டி.செல்வம் இன்று சவுக்கு தளத்தை முடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
நீதிபதி சி.டி.செல்வம் போலவே, தன்னைக் கடவுளாக பாவித்த உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட், சவுக்கு தளம் நடத்தியதாக சந்தேகப்பட்டு, ஆச்சிமுத்து சங்கர் என்பவரை, ஒரு பொய் வழக்கில் கைது செய்தார். ஆனால், அதற்குப் பிறகுதான், சவுக்கு என்று ஒரு தளம் இருப்பதே உலகுக்குத் தெரிந்தது. அந்த மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும், சவுக்கு தளம் எப்படி சந்தித்ததோ, அதே போல இந்த மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும், சவுக்கு தளம் நிச்சயம் சந்திக்கும்.
அன்பார்ந்த நீதிபதி சி.டி.செல்வம் அவர்களே…
எம்மிடம் இழப்பதற்கு எதுவுமில்லை
அடிமைச் சங்கிலிகளைத் தவிர.
உங்களுக்கு இழப்பதற்கு கோடிக்கணக்கான இந்திய ரூபாய்கள் மற்றும் அமெரிக்க டாலர்கள் இருக்கின்றன.
வழக்கறிஞர் சங்கரசுப்பு அவர்களுக்கு….
உங்களுக்கு தனியா இருக்கு சார்.
மனித உரிமைப் போராளி சங்கர சுப்பு
Vaalga Savukku.
Good steps
சவுக்கு வாசகர் நான் அறிவேன்,. கடந்த நான்கு ஆண்டுகளாக, எவ்விதமான விளம்பரமும் இல்லாமல், வாசகர்களின் அன்பையும், ஆதரவையும் மட்டுமே நம்பி நடத்தி வரப்படும் தளம் இந்த சவுக்கு தளம் என்பதையும்,. இந்தியாவில் எந்த ஊடகமும் செய்யாத பணிகளை, சவுக்கு தளம் செய்திருக்கிறது என்பதையும் நான் முழுமையா அறிகிறேன். சவுக்கின் பணி காலத்தால் அழியாத காவியம். நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் என்ற வாழ்க்கை முறைப்படி வாழும் சவுக்கு அவர்கள் இன்றைய அப்பர் சாமிகள் என்றே சொல்ல இயலும். ஊழலை வெறுத்து, நெஞ்சை நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வை கொண்டு சிம்ம நடை போடும் சவுக்கு வாழ்க. .