ஜாபர் சேட். இந்தப் பெயரைக் கேட்டதும் உடனே நினைவுக்கு வருவது ஒட்டுக் கேட்பு. தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் வழக்கம் காலங்காலமாக இருந்தே வருகிறது என்றாலும், சமீப காலங்களில் ஒட்டுக் கேட்பு என்ற விவகாரம் பரபரபப்பாக பேசப்பட்டது, ஜாபர் சேட் உளவுத்துறை தலைவராக பிறகே. தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க, உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்கள் பெரும்பாலான நேரத்தில் பின்பற்றப்பட்டே வந்துள்ளன.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 2007ம் ஆண்டு உளவுத்துறையின் உள்ளே நுழைந்த ஜாபர் சேட் முதன் முறையாக சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்பில் ஈடுபடத் தொடங்கினார். தொலைபேசி ஒட்டுக் கேட்பு என்பதை செய்ய அனுமதித்த உச்சநீதிமன்றம், தேசத்தின் பாதுகாப்பு, இந்தியாவின் இறையாண்மை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களைத் தடுத்தல், பெருங்குற்றங்களை தடுத்தல், இது போன்ற காரணங்களுக்காக ஒட்டுக்கேட்பை செய்யலாம் என்று அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் ஜாபர் சேட், தகவல்களை அறிந்து கொள்வதற்காகவே, சகட்டு மேனிக்கு முக்கிய நபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கத் தொடங்கினார். காவல்துறையின் மூத்த அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பத்திரிக்கையாளர்கள் என, ஜாபர் சேட் ஒட்டுக் கேட்காத தரப்பினரே சமூகத்தில் இல்லை என்ற அளவுக்கு ஒட்டுக் கேட்பை நிகழ்த்தினார். உளவுத்துறை ஒட்டுக் கேட்பு செய்ததையும் தாண்டி, முதன் முதலாக தொலைபேசி ஒட்டுக் கேட்பை ஒரு தனியார் நிறுவனத்துக்கு அவுட்சோர்ஸ் செய்தார். உளவுத்துறையிலேயே டிஐஜியாக பணியாற்றிய, சங்கர் ஜிவால் ஐபிஎஸ் என்ற அதிகாரியின் மனைவிக்கு சொந்தமான டி3டி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை பயன்படுத்தி ஒட்டுக் கேட்பு நிகழ்த்தப்படுகிறது என்ற தகவல் பரவலாக 2008 ஆண்டு வாக்கில் பேசப்பட்டாலும், அது குறித்த ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தால், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் போனது.
2008, ஏப்ரல் 14ம் தேதி, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ், முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி மற்றும் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாய் ஆகியோர் இடையே நடைபெற்ற உரையாடலை வெளியிட்டு, ஒட்டுக் கேட்பை அம்பலப்படுத்தியது. அந்த ஒட்டுக் கேட்பை மூடி மறைக்க கருணாநிதி அரசு, நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த விசாரணை ஆணையம், சட்டவிரோத ஒட்டுக் கேட்பை விசாரிப்பதற்கு பதிலாக, அந்த ஒட்டுக்கேட்பை மூடி மறைக்க அத்தனை வேலைகளையும் செய்தது. அந்த செய்தியை வெளியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் செய்தியாளர், வி.பி.ரகு, விசாரணை என்ற பெயரில் பல்வேறு முறை, அழைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார். அந்தப் பத்திரிக்கையில் பணியாற்றிய அருண் என்ற பத்திரிக்கையாளரும் அலைக்கழிக்கப்பட்டார். மக்கள் டிவியின் செய்தியாளர் ரவி, ஜுனியர் விகடனைச் சேர்ந்த வெங்கடேஷ், ஜெயா டிவியின் ரமணி ஆகியோரும் விசாரணை என்ற பெயரில் வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டனர். இந்த செய்திக்கு துளியும் சம்பந்தமில்லாத டெஹல்கா வார இதழின் செய்தியாளர் வினோஜ் என்பவரும், விசாரணைக்காக பல முறை அழைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார்.
விசாரணையின் முடிவில், ஒட்டுக் கேட்பை பற்றி விசாரிக்க வேண்டிய வேண்டிய ஆணையம், இந்த செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. இந்த உரையாடலை வெளியிட்டதாக, லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் ஒரு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய உத்தரவிட்டது. உரையாடலை பதிவு செய்ததாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாய் மீது துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது.
அப்படி ஊரில் உள்ளவர்களின் தொலைபேசியையெல்லாம் ஒட்டுக் கேட்ட ஜாபர் சேட்டின் தொலைபேசியையே ஒருவர் ஒட்டுக் கேட்டிருக்கிறார் என்பது எத்தனை மகிழ்ச்சியான செய்தி ? அந்த உரையாடலும் சவுக்கு தளத்தில் வெளியிடப்படுகிறது என்பது அதனிலும் எத்தனை மகிழ்ச்சியான செய்தி ?
ஜாபர் சேட்டுக்கும், 2ஜி வழக்கில் குற்றவாளியான, கலைஞர் டிவியின் முன்னாள் மேலாண் இயக்குநர் சரத்குமார் இடையே நடந்த உரையாடலை சவுக்கு வாசகர்களுக்காக பிரத்யேகமாக வெளியிடுவதில் சவுக்கு பேருவுவகை கொள்கிறது.
இந்த உரையாடல் நடைபெறும் நாள் 13.02.2011. அதற்கு முன்னதாக 2 பிப்ரவரி 2011 அன்று, ஆ.ராசா சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆ.ராசா மீது வீசிய சிபிஐ புயல், அடுத்து சிஐடி காலனி நோக்கி நகர்கிறது என்ற விபரம் கருணாநிதிக்கு தெரியத் தொடங்குகிறது. கலைஞர் டிவிக்காக, 2ஜி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஷாஹீத் பல்வாவிடமிருந்து, 200 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டது. இந்த பணம் நேரடியாக வராமல், ஷாகீத் பல்வாவின் டி.பி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது. இந்த விவகாரத்தை சிபிஐ மோப்பம் பிடித்து, உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கிறது.
கலைஞர் டிவிக்கும் 2ஜி வழக்குக்கும் என்ன தொடர்பு ?
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெறும் நிறுவனம், டிபி ரியாலிட்டி இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஷாஹீத் உஸ்மான் பல்வா. இந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனம், டைனமிக்ஸ் ரியாலிட்டி. இந்த டைனமிக்ஸ் ரியாலிட்டி 200 கோடி பணத்தை கலைஞர் டிவிக்கு வழங்குகிறது.
விசாரணை நடைபெறத் தொடங்கிய பிறகு, கலைஞர் டிவி தரப்பில், இது வெறும் கடன் என்று கூறுகிறார்கள். 2009-2010ம் ஆண்டில் கலைஞர் டிவிக்கு மொத்தம் 214 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
ஷாஹீத் உஸ்மான் பல்வா
டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம், டி.பி ரியாலிட்டி நிறுவனத்துக்கு சொந்தமானது.
டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநர் ஷாஹீத் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம், குசேகான் ரியாலிட்டிஸ். குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் என்ற நிறுவனமே, பின்னாளில் குசேகான் ரியாலிட்டிஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. குசேகான் நிறுவனத்தின் 2010 ஆண்டுக் கணக்கில், 209 கோடி ரூபாய் பாதுகாப்பில்லாத கடனாக ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவியின் 2010 ஆண்டறிக்கையில், பாதுகாப்பில்லாத கடனாக 214 கோடி ரூபாய் பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பணம் திருப்பித் தரப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இந்த நிறுவனங்களின் ஆண்டறிக்கையில், அதற்கான சான்றுகள் இல்லை. இது குறித்து கலைஞர் டிவி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை, சினியுக் நிறுவனம், கலைஞர் டிவியில் பங்குகள் வாங்குவதற்காக 200 கோடி ரூபாயை அளித்ததாகவும், அது நிறைவேறாத காரணத்தால் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர். கலைஞர் டிவி பெற்ற பணம், வட்டியோடு திருப்பி கொடுக்கப்பட்டதாகவும், இதில் தவறேதும் இல்லை என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டது.
இது வெளி வந்ததும், கலைஞர் டிவி சினியுக் நிறுவனத்திலிருந்து பெற்றது வெறும் கடனே என்றும், அந்தக் கடனும் திருப்பிச் செலுத்தப்பட்டது என்றும், ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த சூழலில்தான் சரத்குமார் மற்றும் ஜாபர் சேட் இடையே நடந்த உரையாடலைப் பார்க்க வேண்டும்.
இப்படி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டாலும், பின்னாளில் சரத்குமாரும் கனிமொழியும் கைது செய்யப்படுகின்றனர். இந்த உரையாடலில், சரத் குமார், ஜாபர் சேட்டிடம், சிபிஐ இந்த முறை இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விடுவார்கள் என்றும், இந்தத் தகவல், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தாரால் கூறப்பட்டது என்றும், இதை சரிபார்த்து சொல்ல வேண்டும் என்றும், கூறுகிறார். சரிபார்த்த பிறகு, கருணாநிதியிடம் சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார். ஜாபர் சேட், தான் டெல்லி சேனல்களில் இதை சரிபார்ப்பதாகவும், அதற்குப் பின்னர் கருணாநிதியிடம் சொல்லிக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.
சரத் குமார் ரெட்டி
சிபிஐ விசாரணைக்கு வரப் போகிறார்கள் என்பது தெரிந்து, நேற்று நான் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்களில் முன்தேதியிட்டு கையெழுத்திட்டேன். சிபிஐ என்ன கேட்கிறார்களோ, அதற்கு ஏற்றார் போல, ஆவணங்களை திருத்த வேண்டும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.
2ஜி வழக்கில் ஆவணங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா 20 பிப்ரவரி 2011 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை மிக மிக முக்கியமானது.
“முதல்வர் கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ரூ 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது.
தேடப்பட்டு வரும் தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள டைனமிக்ஸ் பால்வா குழுமம், 80 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை உரிமைதாரர்களாக கொண்டுள்ள கலைஞர் டி.வி.க்கு ரூ 206 கோடி பணம் கொடுத்திருக்கிறது என்ற தகவலை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை மத்திய புலனாய்வுத் துறை செய்து இருக்கிறது. இது போன்ற சந்தேகம் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு கலைஞர் டி.வி. அலுவலகத்தை சோதனை செய்து அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி இருக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடைபிடிக்கப்படும் பொதுவான நடைமுறையை பின்பற்றியதன் மூலம்போதுமான கால அவகாசத்தை அளித்து, தப்பிப்பதற்கு மத்திய புலனாய்வுத் துறை வழிவகுத்துவிட்டது.
கலைஞர் டி.வி.யின் கலைக்கூடங்கள் மற்றும் அலுவலகத்தை உள்ளடக்கிய தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இரவோடு இரவாக உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி மட்டுமல்லாமல், ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர். பாலு, கலைஞர் டி.வி.யின் தலைமை செயல் அலுவலர் சரத்குமார் ரெட்டி, கருணாநிதியின் உடன் பிறந்தார் மகன் அமிர்தம், தணிக்கையாளர் சிவசுப்ரமணியன், தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ். ராமன், மூத்த வழக்கறிஞர்கள், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இரவு 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மறுநாள் காலை 4 மணியளவில் முடிந்ததாம். இந்தக் கூட்டத்தின் போது அண்ணா அறிவாலயக் கட்டடத்திற்கு வெளியே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டனவாம்.
13.2.2011 அன்று கலைஞர் டி.வி. தொடர்பான முக்கிய ஆவணங்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குடியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 15.2.2011 அன்று, கலைஞர் டி.வி. தொடர்பான ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள், ரொக்க செலவுச் சீட்டுகள், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகள் சிறு சிறு துண்டுகளாக கிழிக்கப்பட்டு, சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. நம்பகமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்தபிறகு, குற்ற ஆவணங்கள் இருந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்திவிட்டு, ரூ 206 கோடி பணப் பரிமாற்றத்திற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை; பெறப்பட்ட பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்று கனகச்சிதமான ஓர் அறிக்கையை வெளியிட்டார் சரத்குமார். இது மட்டுமல்லாமல், மத்திய புலனாய்வுத் துறைக்கோ அல்லது வருமான வரித் துறைக்கோ இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், கலைஞர் டி.வி. தொடர்பான கணக்குகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதில் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த அழைப்பினை ஏற்று தான், மத்திய புலனாய்வுத் துறை கலைஞர் டி.வி. அலுவலகங்களில் சோதனை நடத்தியது போல் தெரிகிறது. மத்திய புலனாய்வுத் துறை சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை தோண்டி ஆராய்ந்து பார்த்திருந்தால், ஸ்பெக்டரம் ஊழலுக்கும், கலைஞர் டி.வி.க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்க முடியும்”
தற்போது வெளியாகியுள்ள இந்த உரையாடல், ஆவணங்கள் அழிக்கப்படுகின்றன என்ற செல்வி ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மையானது என்பதை நிரூபிக்கிறது.
தற்போது வெளியாகியுள்ள இந்த உரையாடலின் அடிப்படையில், சிபிஐ 2ஜி ஊழலில், ஜாபர் சேட்டின் பங்கு குறித்தும், ஆவணங்கள் அழிக்கப்பட்டு, திருத்தப்பட்டது குறித்தும் விசாரணை நடத்துமா என்பதுதான் மக்கள் முன்னால் உள்ள கேள்வி.”
இதுதான் ஜெயலலிதாவின் அறிக்கை. ஜெயலலிதாவின் அறிக்கை வெளியான நாள் 20 பிப்ரவரி 2011. சரத் குமார் மற்றும் ஜாபர் சேட் இடையே உரையாடல் நடைபெற்ற நாள் 13.02.2011. சரத் குமார் தன்னுடைய உரையாடலில், 100 பக்கங்களுக்கும் மேலாக, பின் தேதியிட்டு கையெழுத்திட்டு, ஆவணங்களை திருத்தியுள்ளதாகவும், சிபிஐ என்னென்ன கேட்கிறார்களோ, அதற்கேற்றார் போல, ஆவணங்களை திருத்தி வருவதாகவும் கூறுகிறார். சிபிஐ பதிவு செய்துள்ள 2ஜி வழக்கில், ஏற்கனவே உள்ள குற்றச் சாட்டுகளோடு, ஆவணங்களை திருத்துதல் மற்றும் அழித்தல் என்ற குற்றச்சாட்டுகளையும் சேர்க்க வேண்டும். மேலும், ஆவணங்களை திருத்தவும், அழிக்கவும் உதவிய, ஜாபர் சேட்டும் இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும்.
அந்த உரையாடல் இதோ…. இணைப்பு
ஜாபர் சேட் : ஷரத்… ஷரத்…
வினோதகன் : ஷரத்தும் அமிர்தமும் இருக்காங்க.
ஷரத் ரெட்டி : ஹலோ
ஜாபர் சேட் : ஷரத் உங்கள் போன் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறதே..
ஷரத் ரெட்டி : ஆமாம் சார்… நான் போனை காரிலேயே வைத்து விட்டேன். தலைவர் வீட்டுக்கு வந்துள்ளேன்.
ஜாபர் சேட் : ஓ.கே… ஓ.கே…
ஷரத் ரெட்டி : சார். அந்த சினியுக் ஆட்கள் டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அழைத்தார்கள். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, அனேகமாக இந்த வாரம் வந்து விடுவார்கள். இந்த முறை கேள்விகளோடு வரமாட்டார்கள். வந்து இயக்குநர்களை கைது செய்து விடுவார்கள். அதனால் தயாராக இருக்குமாறு சொன்னார்கள். நான் எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், பாஸ், எங்கள் தகவல் 100 சதவிகிதம் சரி. உங்கள் தலைவரிடம் சொல்லி விடுங்கள். நான் இது மதியம் என்பதால் சொல்ல முடியாது என்று கூறினேன். இதை எப்படி கையாள வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இது மதியம் என்பதால் சொல்ல முடியாது என்று சொன்னேன். சரி… அதை எப்படிக் கையாள்வது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இதைத்தாண்டி எங்களால் எதுவும் சொல்ல முடியாது.
ஜாபர் சேட் : போன முறை கூட அவர்கள் இதைத்தானே சொன்னார்கள்…
ஷரத் ரெட்டி : போன முறை அவர்கள்…… (குரல் தெளிவில்லை)
ஜாபர் சேட் : டிவி அலுவலகத்துக்கு வருவார்கள் என்று சொன்னார்கள், நினைவிருக்கிறதா ?
ஷரத் ரெட்டி : ஆமாம்… இப்போதும் சொன்னார்கள். எல்லாம் தயாராக இருக்கிறது. இப்போது கைதுக்கு தயாராகிறார்கள். விசாரணைக்கு அல்ல. கைதுக்கு. ஆகையால் இது குறித்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் சோர்ஸ்களில் விசாரித்து விட்டு, இதை உறுதி செய்யுங்கள். அமிர்தம்(கலைஞர் டிவியின் ஒரு இயக்குநர்) சாரை அழைத்தேன் ஒரு விழாவுக்கு போய் விட்டார். ராமநாராயணன் பேத்தியின் விழா. முதலில் அவர் இதை விட்டு விடு என்றார். பிறகு முதலில் சண்முகநாதன் சாரிடம் சொல்லுங்கள் (கருணாநிதியின் உதவியாளர்) என்றார். அப்போது நான் உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். நாங்கள் இங்கே வருகிறோம் என்று. இங்கே வந்த பிறகு சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தோம். பிறகு மீண்டும் வரச் சொல்லி தொலைபேசி அழைப்பு வந்தது.
ஜாபர் சேட் : இல்லை. நான்தான் சண்முகநாதனிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னேன். முதலில் நாம் இதை சரி பார்க்க வேண்டும்.
ஷரத் ரெட்டி : கரெக்ட் சார். முதலில் நாம் சரி பார்த்து 100 சதவிகிதம் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். இப்போதுதான், சிதம்பரம் மற்றும் மொத்த காங்கிரஸ் ஆட்களும் வந்துள்ளார்கள். அதனால் நாங்கள் காத்திருக்கிறோம். டி.ஆர் பாலு சார், அவர் இதை பார்த்துக் கொள்வதாக சொன்னார். இதுதான் இப்போதைய நிலை.
ஜாபர் சேட் : தலைவரிடம் சொல்லும்போது, என்னிடமும் இதை சொல்லி விட்டதாக சொல்லுங்கள்.
ஷரத் ரெட்டி : நன்றி சார். நன்றி.
ஜாபர் சேட் : நானும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். 50-50 சான்ஸ்தான் இருக்கிறது. யாரும் உறுதி செய்ய மாட்டேன் என்கிறார்கள். வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார்கள். இரண்டு மூன்று லாஜிக் சொல்கிறார்கள். ஒன்று, மூத்தவர்களைத்தான் முதலில் கை வைப்பார்கள் என்று சொல்கிறார்கள்.
ஷரத் ரெட்டி : கரெக்ட் சார்.
ஜாபர் சேட் : அது நடக்கவில்லை. அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்யலாம். அப்போதுதான் அந்த திசையில் பார்க்க மாட்டார்கள் என்பதற்காக. பரிவர்த்தனை விபரங்களை தெரிவித்து விட்டோம். அவர் இயக்குநர் இல்லை என்பதையும் (தயாளுஅம்மாள்) தெரிவித்து விட்டோம். அவர் பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். மற்றொரு இயக்குநனர் அங்கே இல்லை. இது போன்ற விவகாரங்கள்… ….
ஷரத் ரெட்டி : சார்.. அந்த பரிவர்த்தனை நடக்கையில் அவர் (தயாளு) அங்கே இருந்தார். அதுதான்…
ஜாபர் சேட் : என்ன…? என்ன…?
ஷரத் ரெட்டி : சார் பரிவர்த்தனை நடந்தபோது அவர் அங்கே ஒரு இயக்குநர்.
ஜாபர் சேட் : உண்மையாகவா ?
ஷரத் ரெட்டி : ஆமாம் சார்.
ஜாபர் சேட் : அன்றைக்கு இல்லை என்று சொன்னீர்களே…
ஷரத் ரெட்டி : சார் அவர் டிசம்பர் மாதத்தில் இயக்குநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் எல்லாம் பழைய தேதிகள் சார். நான் இப்போது உட்கார்ந்து சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஜாபர் சேட் : இல்லை.. டிசம்பரில் ராஜினாமா. அது உள்ளே வருகிறதா என்ன?
ஷரத் ரெட்டி : சார். பணம் 2008ல்தானே வந்தது?
ஜாபர் சேட் : ஓ… இந்த டிசம்பரில்தானே அவர் ராஜினாமா செய்தார். எந்த டிசம்பர்?
ஷரத் ரெட்டி : ஆமாம் சார். இந்த டிசம்பரோ… போன டிசம்பரோ… ஆனால், அவர் அந்த காலகட்டத்தில் இயக்குநராக இருந்தார். நான் ஒரு 100 பக்கங்களை
பின்தேதியிட்டு நேற்றுதான் கையெழுத்திட்டேன். எல்லாவற்றையும் நகல் எடுத்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜாபர் சேட் : ம்ம்.
ஷரத் ரெட்டி : பிரச்சினை என்னவென்றால், நாம் பல விஷயங்களை கேள்விப்படுகிறோம். பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதற்கு தகுந்தாற் போல, ஆவணங்களை திருத்துகிறோம்(Manipulating). அதனால் பக்கங்கள் மாற்றப்படுகின்றன.
ஜாபர் சேட் : ம்ம்..
ஷரத் ரெட்டி : கனி மேடம் 2007-ல் இல்லை. 2007-க்குப் பிறகு பெரியம்மா (தயாளு அம்மாள்) இருந்தார்.
ஜாபர் சேட் : பெரியம்மா இருந்தது எனக்குத் தெரியும். அவருக்கு ஆங்கிலமும் தெரியாது, தமிழும் தெரியாது என்பதால் அவர் இருந்தார்.
ஷரத் ரெட்டி : கரெக்ட்… கரெக்ட்…
ஜாபர் சேட் : அவரை இதோடு அவர்களால் இணைக்க முடியாது. இல்லையென்றாலும் கூட, அந்தப் பரிவர்த்தனை உண்மைதானே.. அது வெளிப்படையான பரிவர்த்தனை. காசோலை மூலமாக நடந்தது.
ஷரத் ரெட்டி : அது சரிதான் சார். ஆனால், எந்த கோணத்தில் இது போகப்போகிறது என்பதுதான் கேள்வி.
ஜாபர் சேட் : அதைத்தான் நான் சொல்கிறேன். என்னுடைய ஆட்கள், என் சோர்ஸ்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இது சிக்கலாகக் கூடியது. அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். முதலில் விசாரணை செய்வார்கள். அது நடந்தாலும் கூட, விசாரணையில் அவர்கள் திருப்தி அடையாவிட்டால், இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று அவர்கள் நினைத்தால்… கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தால்.. அல்லது சாட்சிகளை அழித்து விடுவீர்கள் என்று நினைத்தால், அப்போதுதான் அதற்காக (கைது) போவார்கள்.
ஷரத் ரெட்டி : அதற்குப் பிறகு ரொம்பவும் தீவிரமாக இருப்பார்களே…
ஜாபர் சேட் : ஆமாம்.
ஷரத் ரெட்டி : நான் உங்களிடம் சொல்லி விட்டேன். நீங்கள் சண்முகநாதன் சாரிடம் பேசுங்கள். இதை அவரிடம் சொல்லுங்கள். தமிழில் சொல்லுங்கள். என்னை விட நீங்கள் சொன்னால் பெட்டராக இருக்கும்
ஜாபர் சேட் : சரி… சரி…. நான் சொல்கிறேன். நீங்கள் தலைவரைப் பாருங்கள். இதையும் சொல்லுங்கள். நான் மாலையில் தலைவரிடம் சொல்லுகிறேன்.
ஷரத் ரெட்டி : ஓகே சார்.. நன்றி சார்.
இந்த உரையாடலும், மேலும் சில உரையாடல்களும் சவுக்கு தளத்துக்கு வந்து, இதில் உள்ள ஜாபர் சேட் குரலையும், மற்றவர்களின் குரலையும் சரிபார்க்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த விவகாரம், திமுக தலைமைக்குத் தெரிந்துள்ளது. இதையடுத்து, இந்த உரையாடல் மற்றும் இதர உரையாடல்களை வெளியிடாமல் எப்படியாவது சவுக்கு தளத்தை முடக்க வேண்டும் என்று கடும் முயற்சி எடுக்கப் பட்டது.
அந்த முயற்சியின் வெளிப்பாடே, வியாழக்கிழமை அன்று, சவுக்கு தளத்தை நடத்துபவர் மற்றும் அதன் வடிவமைப்பாளரை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவு. நீதிமன்றம், ஒரு வழக்கை பதிவு செய்ய வேண்டும், ஒரு வழக்கில் விசாரணை விரைவாக நடத்த வேண்டும், குற்றப் பத்திரிக்கை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும், என்று மட்டுமே உத்தரவு பிறப்பிக்க இயலும்.
குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று எவ்விதமான உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இதையும் மீறி, நீதிபதி சி.டி.செல்வம் சவுக்கு தளத்தின் வடிவமைப்பாளர் மற்றும் சவுக்கு தளத்தின் ஆசிரியர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வியாழனன்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தார். காவல்துறையில் எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டபோது, முடியவே முடியாது.. இன்று கைது செய்து நாளை தகவல் தெரிவியுங்கள் என்று கூறினார். இன்று கைது செய்யப்பட்டுள்ள முருகைய்யனை, காவல்துறையினர் ஏற்கனவே விசாரித்து விட்டனர். அவர், நான் எப்போதோ ஒரு வழக்கறிஞர் கேட்டதற்காக வடிவமைத்துக் கொடுத்த தளம் இது. தற்போது இந்த தளத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாக்குமூலம் அளித்திருந்தார். அதை அப்படியே காவல்துறையும் பதிவு செய்து கொண்டது.
நீதிபதி சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவின் காரணமாகவே, இன்று முருகையன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போன்ற நடவடிக்கைகளால், சவுக்கு தளத்தை முடக்கி, கருணாநிதி குடும்பத்தை காப்பாற்றலாம் என்று சி.டி.செல்வம் கனவு காணுவாரேயானால், அது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான். கருணாநிதி குடும்பத்தை, மை லார்ட்ஷிப் என்கிற கடவுளே நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது. இது வேறு யாருக்குப் புரிகிறதோ இல்லையோ…. சி.டி.செல்வம் போன்ற மங்குணி நீதிபதிகளுக்கு புரிந்தே ஆக வேண்டும். கருணாநிதி குடும்பத்தையும், திமுகவையும் ஒழித்து நாசம் செய்ய… சவுக்கு வேண்டியதில்லை….. கருணாநிதி பெற்ற புத்திர பாக்கியங்களே போதும்.
அன்பார்ந்த ஜாபர் சேட் அவர்களே….. நீங்கள் உங்களை கடவுளாக கருதிக் கொண்டிருந்தீர்கள். உங்களை யாருமே அசைக்க முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்தீர்கள். வல்லவனுக்கு வல்லவன், வையகத்தில் என்றுமே உண்டு.
English transcript
– Jaffer Sait: Sharad!! Sharad!!
– Voice: Sharad and Amirtham sir are here, they haven’t met the CM…
– Jaffar Sait: I am trying on his number but he is not rechable…
– Voice: Shall I give my phone sir?
– Jaffar Sait: Ok! Give him your phone…
– Sharad Reddy: Hello!
– Jaffar Sait: Yea, Sharad…
– Sharad Reddy: Yes sir…
– Jaffar Sait: Your phone is not reachable…
– Sharad Reddy: Sir I have kept that in the car sir…I had come to Thalivar’s house…
– Jaffar Sait: Ok ok!!
– Sharad Reddy: Sir, those Cineyug people had called from Delhi and Mumbai…and they said that their information is that next week positively…they are not going to come with the questioner or something they will only come and take custody of the directors so please be prepared. So I asked him how sure are you…he said Boss! All our information is sure…its 100 percent sure. Please inform your leader right now. So I said its afternoon time right now…its not possible. They are saying we are passing on the information to you…now its up to to you decide how you want to handle it. Beyond this we cannot tell…so please please…
– Jaffar Sait: Last time also they said this know?
– Sharad Reddy: Last time they said said…(voice overlaps)
– Jaffar Sait: Our TV office they are coming he said…You remember?
– Sharad Reddy: He said they said…even now he said… Everything is ready… they are now pushing for arrest…they are not pushing for questioner or inquiry…they are pushing for arrest. So its up to you guys to take it…you please do another thing check up from your sources before you want to take any further action. I called up Amirtham sir (One of the Directors of Kalaignar TV) he had gone to some function…Ramnarayanan sir’s grand daughter some function was there…first he said leave it then he said no…no…its better we first go tell off Shanmuganathan sir (Karunanidhi’s personal secretary)…that time I sent you an SMS saying we are getting here…We came here then they decided NOT to tell…then I went back home…then again I got a call saying come back…
– Jaffar sait: No..I told Shanmuganathan not to tell now…pleas we check up…
– Sharad Reddy: Correct sir…Its better we check up and 100 percent sure and then do it…form whatever they are saying they sounded little panicky…Just now I think from Chidambaram sir and the entire congress people have landed up…so we are waiting sitting down…So TR Baalu sir said he will handle it. That’s where its now.
– Jaffar Sait: When you are telling Thalivar…tell that you have also told me…
– Sharad Reddy: Thanks sir..thanks sir…
– Jaffar Sait: I am Checking up…They are saying that its 50-50 only. Guys are not confirming…they are saying that now way. They are telling about 2-3 logic… one they saying in that case first to be touched will be the Senior guys.
– Sharad Reddy: Correct!
– Jaffar Sait: That has not been done…may be there are doing it to apply some pressure. So that they will not look in that direction. We have conveyed the facts about the transaction and the fact that she is not the director. She is only a share holder and the other director is not there…and these are the things which is a…
– Sharad Reddy: When the transaction occurred she was there sir…that is what i ?
– Jaffar Sait: What!!! What!!!
– Sharad Reddy: When the transaction took place she was the Director…
– Jaffar Sait: Really!!!
– Sharad Reddy: Yes sir
– Jaffar Sait: Ooohhh…that day you said No…
– Sharad Reddy: She resigned in December…all back date is going now na sir…I am sitting and finding so.
– Jaffar Sait: No resigned in December…those things come in?
– Sharad Reddy: Money came in 2008 no sir.
– Jaffar Sait: Ohh..this December only she resigned? Which December?
– Sharad Reddy: Yes Sir! This December or may be last…but she was there as the director when…Sir I have signed some 100 pages of back dated thing yesterday only and I have taken a xerox and sitting and reading it now.
– Jaffar Sait: Hmmm
– Sharad Reddy: The problem is that… because we are hearing news and getting news and the queries. Then we are manipulating according to that. So the pages are being changed.
– Jaffar Sait: Hmmm…
– Sharad Reddy: Then Kani Madam was not there in 2007 after 2007…Periyama continued to be (Referring to Karunanidhi’s wife Dayalu Ammal).
– Jaffar Sait: Periyamma, Continued to be that I know. There because and she has said that she has no knowledge of English or Tamil no…
– Sharad Reddy: Correct!! Correct!!
– Jaffar Sait: They cannot link her. But even otherwise the transaction we are saying and you are saying…it’s a fact also. It’s a clean transaction …taking by cheque.
– Sharad Reddy: Talking is not a problem…the only question is that which angle is it going to take?
– Jaffar Sait: That’s what I am telling…My guys…my sources are telling…that is highly precipitative…which they will not do…first they will question…even if that’s the case…they will question and if they are not convinced and if there is something…they see that tracing or some u know…hmmm… damaging the trial or destroying the evidence all those things then they may go for that…
– Sharad Reddy: Then they will take it little aggressively…
– Jaffar Sait: Yeah…
– Sharad Reddy: I just conveyed it to you. You want to talk to Shanmuganathan sir and tell the same…tell him in Tamil it will be better than me sir?
– Jaffar Sait: No no…I will tell…you are meeting Boss tell this also later I will tell Boss in the evening..
தற்போது வெளியாகியுள்ள இந்த உரையாடல், ஆவணங்கள் அழிக்கப்படுகின்றன என்ற செல்வி ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மையானது என்பதை நிரூபிக்கிறது.
தற்போது வெளியாகியுள்ள இந்த உரையாடலின் அடிப்படையில், சிபிஐ 2ஜி ஊழலில், ஜாபர் சேட்டின் பங்கு குறித்தும், ஆவணங்கள் அழிக்கப்பட்டு, திருத்தப்பட்டது குறித்தும் விசாரணை நடத்துமா என்பதுதான் மக்கள் முன்னால் உள்ள கேள்வி.”
இதுதான் ஜெயலலிதாவின் அறிக்கை. ஜெயலலிதாவின் அறிக்கை வெளியான நாள் 20 பிப்ரவரி 2011. சரத் குமார் மற்றும் ஜாபர் சேட் இடையே உரையாடல் நடைபெற்ற நாள் 13.02.2011. சரத் குமார் தன்னுடைய உரையாடலில், 100 பக்கங்களுக்கும் மேலாக, பின் தேதியிட்டு கையெழுத்திட்டு, ஆவணங்களை திருத்தியுள்ளதாகவும், சிபிஐ என்னென்ன கேட்கிறார்களோ, அதற்கேற்றார் போல, ஆவணங்களை திருத்தி வருவதாகவும் கூறுகிறார். சிபிஐ பதிவு செய்துள்ள 2ஜி வழக்கில், ஏற்கனவே உள்ள குற்றச் சாட்டுகளோடு, ஆவணங்களை திருத்துதல் மற்றும் அழித்தல் என்ற குற்றச்சாட்டுகளையும் சேர்க்க வேண்டும். மேலும், ஆவணங்களை திருத்தவும், அழிக்கவும் உதவிய, ஜாபர் சேட்டும் இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும்.
சரி. இந்த உரையாடலும், மேலும் சில உரையாடல்களும் சவுக்கு தளத்துக்கு வந்து, இதில் உள்ள ஜாபர் சேட் குரலையும், மற்றவர்களின் குரலையும சரிபார்க்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த விவகாரம், திமுக தலைமைக்குத் தெரிந்துள்ளது. இதையடுத்து, இந்த உரையாடல் மற்றும் இதர உரையாடல்களை வெளியிடாமல் எப்படியாவது சவுக்கு தளத்தை முடக்க வேண்டும் என்று கடும் முயற்சி எடுக்கப் பட்டது.
அந்த முயற்சியின் வெளிப்பாடே, வியாழக்கிழமை அன்று, சவுக்கு தளத்தை நடத்துபவர் மற்றும் அதன் வடிவமைப்பாளரை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவு. நீதிமன்றம், ஒரு வழக்கை பதிவு செய்ய வேண்டும், ஒரு வழக்கில் விசாரணை விரைவாக நடத்த வேண்டும், குற்றப் பத்திரிக்கை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும், என்று மட்டுமே உத்தரவு பிறப்பிக்க இயலும்.
குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று எவ்விதமான உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இதையும் மீறி, நீதிபதி சி.டி.செல்வம் சவுக்கு தளத்தின் வடிவமைப்பாளர் மற்றும் சவுக்கு தளத்தின் ஆசிரியர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வியாழனன்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தார். காவல்துறையில் எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டபோது, முடியவே முடியாது.. இன்று கைது செய்து நாளை தகவல் தெரிவியுங்கள் என்று கூறினார். இன்று கைது செய்யப்பட்டுள்ள முருகைய்யனை, காவல்துறையினர் ஏற்கனவே விசாரித்து விட்டனர். அவர், நான் எப்போதோ ஒரு வழக்கறிஞர் கேட்டதற்காக வடிவமைத்துக் கொடுத்த தளம் இது. தற்போது இந்த தளத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாக்குமூலம் அளித்திருந்தார். அதை அப்படியே காவல்துறையும் பதிவு செய்து கொண்டது.
நீதிபதி சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவின் காரணமாகவே, இன்று முருகையன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போன்ற நடவடிக்கைகளால், சவுக்கு தளத்தை முடக்கி, கருணாநிதி குடும்பத்தை காப்பாற்றலாம் என்று சி.டி.செல்வம் கனவு காணுவாரேயானால், அது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான். கருணாநிதி குடும்பத்தை, மை லார்ட்ஷிப் என்கிற கடவுளே நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது. இது வேறு யாருக்குப் புரிகிறதோ இல்லையோ…. சி.டி.செல்வம் போன்ற மங்குணி நீதிபதிகளுக்கு புரிந்தே ஆக வேண்டும். கருணாநிதி குடும்பத்தையும், திமுகவையும் ஒழித்து நாசம் செய்ய… சவுக்கு வேண்டியதில்லை….. கருணாநிதி பெற்ற புத்திர பாக்கியங்களே போதும்.
ஜாபர் சேட்டின் உரையாடலை, சவுக்கு வாசர்களுக்கு பிரத்யேகமாக வழங்குவதில், சவுக்கு பெருமகிழ்ச்சி கொள்கிறது.