கருணாநிதியை இன்று தமிழக அரசில் பணியாற்றும் ஏராளமான அடிமைகள் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதில் சில அடிமைகளுக்கு கருணாநிதி பொங்கல் பரிசாக, 1000 ரூபாய் வழங்கினார்.
முதலில் இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள்.
ட்ராஃபிக்ல பிச்சை எடுக்கற மாதிரியே எப்படி கை நீட்டி வாங்கறார் பாருங்க கண்ணாயிரம்
இது பிச்சை எடுக்கும் கூட்டம் அல்ல, ராஜமாணிக்கம் தலைமையிலான கொள்ளைக் கூட்டம்.
பக்கவாத்திய குழுவினரோடு, புறநகர் ஆணையர் ஜாங்கிட்
(சார், உங்களுக்கு கருணாநிதி துட்டு தரலயா ? இவ்ளோ பேர கூட்டிக்கிட்டு வந்ததால தரல. தனியா வந்திருந்தா வாங்கிருக்கலாம்ல ?)
கருணாநிதியிடம் பிச்சை பெறும், ராதாகிருஷ்ணன் என்கிற பிச்சை நாயுடு
வேலூர் மாவட்ட அடிமை ஆட்சியர் ராஜேந்திரன், ஐஏஎஸ் (இது ஒன்னுதான் குறைச்சல்)
உளவுத்துறை அடிமை சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழச்சி
(தமிழச்சி மேடம், நீங்க எப்போ ராஜ்ய சபா எம்பி ஆவீங்க ?)
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் குஷ்பூ. பிச்சைக்காரங்க பிச்சை எடுப்பாங்க, நீங்களுமா மேடம் பிச்சை எடுக்கறீங்க ?
பிச்சை பெறும் ஜாபர் சேட். சார் இந்த 1000 ரூபாய, திருவான்மியூர் வீட்டுக்கு செங்கல் வாங்க வெச்சுக்கங்க சார்.
புகைப்படங்களைப் பார்த்து விட்டீர்களா ?
ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் என்ன தொடர்பு ? அதிகாரிகள், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள். அவர்கள், மற்ற எல்லாவற்றையும் விட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறோம் என்ற கவனத்தோடு பணியாற்ற வேண்டும்.
முதலமைச்சர் என்பவர், அவர்களுக்கு ஒரு உயர் அதிகாரி… அவ்வளவே.. ஆட்சி மாறினால், வேறு முதலமைச்சர் வருவார். அடுத்த ஆட்சியில் வேறு முதலமைச்சர் வருவார். ஆனால் அதிகாரிகள் பணி ஓய்வு பெறும் வரை, தொடர்ந்து பணியாற்ற வேண்டும். ஆகையால், ஆட்சியாளர்களை விட, மக்களுக்கும், அரசியல் அமைபுச் சட்டத்திற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்.
ஆனால் இந்த அடிமைக் கூட்டத்தைப் பார்த்தீர்களா ? இப்படி, தீவாளி, பொங்கல் என்று ஒரு பண்டிகை விடாமல், கருணாநிதி வீட்டு வாசலில் காத்திருக்கும் இந்த அதிகாரிகள் எதற்காக இப்படி கருணாநிதியின் அடிமைகளாக மாறி, கூழைக் கும்பிடு போடுகிறார்கள் ? மேலும் மக்களுக்கு சேவை செய்வதற்கா ? நிச்சயமாக இல்லை.
நல்ல பதவி வேண்டும். அதிகாரம் வேண்டும். அந்தப் பதவியில் அமர்ந்து கொண்டு, பணம் சம்பாதிக்க வேண்டும். புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட வேண்டும். லஞ்சம் வாங்கி சொத்துக்கள் குவிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
தமிழ்நாட்டில் இவர்கள் மட்டும் தான் அதிகாரிகளா ? வேறு அதிகாரிகளே இல்லையா ? மற்ற அதிகாரிகள் ஏன் கருணாநிதியை வந்து பார்ப்பதில்லை ? ஏனென்றால், அவர்களுக்கு தாங்கள் அரசு ஊழியர்கள், கருணாநிதிக்கு அடிமை இல்லை என்ற உணர்வு உண்டு. ஆனால், இந்த அடிமைகளுக்கு, சூடு, சொரணை, மானம், ரோஷம், வெட்கம், சுயமரியாதை, போன்ற எதுவுமே இல்லை. மனதில் இருக்கும் ஒரே எண்ணம்… எப்படியாவது கருணாநிதியின் கடைக்கண் பார்வை பட்டு, மீண்டும் நல்ல பதவியில் அமர வேண்டும், இதை விட நல்ல பதவி வாங்க வேண்டும், அல்லது இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.
உண்மையில் கருணாநிதி மீது அபிமானம் உள்ளவர்கள் என்றால், கருணாநிதி முதலமைச்சராக இல்லாத போது சென்று பார்ப்பார்களா ? இந்த அடிமைகளில் ஒரு அடிமை கூட, கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால், ரகசியமாகக் கூட சந்திக்காது.
1989-90ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தது வரை, இரவு 2 மணி வரை சீட்டாடும் பழக்கம் கருணாநிதிக்கு உண்டு. சீட்டாடப் போகும் போது கையில் பத்து பைசா இல்லாமல் தான் போவார் கருணாநிதி. அங்கே போய், துரை முருகனிடம், “யோவ்… எனக்கு ஒரு 500 ரூபாய் குடுய்யா… ” என்று கடன் வாங்கி சீட்டாடுவார் கருணாநிதி. சீட்டாட்டத்தில் எப்போதும் கருணாநிதிதான் ஜெயிப்பார். கருணாநிதிக்கு வேண்டிய சீட்டை போடாவிட்டால், துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித்துறை பறிக்கப் படும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன ?
வீட்டுக்கு திரும்பி வரும்போது, கத்தை கத்தையாக பணத்தை எடுத்து வருவார். மாதம் முழுவதும் அவருக்காக உழைக்கும் டிரைவருக்கு கருணாநிதி எவ்வளவு தருவார் தெரியுமா ? 10 ரூபாய். விடியற்காலை 2 மணிக்கு 10 ரூபாயைக் கொடுத்து, “போய் நல்லா சாப்பிடு” என்பார். இரவு 2 மணிக்கு, கருணாநிதி கொடுக்கும் 10 ரூபாயை வைத்துக் கொண்டு எங்கே போய் சாப்பிடுவது ?
இப்படிப் பட்ட ஒரு கஞ்சப் பிசினாறி கருணாநிதி. இவ்வளவு ஏன்… விலைமாது வீட்டுக்கு சென்று, எல்லாம் முடிந்தவுடன், அந்த வீட்டிலேயே, கொடுத்த காசை மிரட்டி திருப்பி வாங்கியவர்தானே கருணாநிதி …(கண்ணதாசனின் வனவாசம் படியுங்கள்)
ஆனால், இப்போது பார்ப்பவர்களுக்கெல்லாம் 1000 ரூபாய் நோட்டை கருணாநிதி அள்ளி வீசும் மர்மம் என்ன ? எல்லாம் ஸ்பெக்ட்ரம் பணமைய்யா… ஸ்பெக்ட்ரம் பணம்.
மேலே உள்ள புகைப்படங்களை மீண்டும் ஒரு முறை பாருங்கள்.
இரண்டே இரண்டு பேருக்கு பணம் கொடுக்கும் போது மட்டும் தான், கருணாநிதி சிரிக்கிறார். ஒருவர் குஷ்பூ… மற்றொருவர் ஜாபர் சேட். இவர்கள் இருவரையும் மட்டும் பார்த்து சிரிக்கும் அளவுக்கு இருவருக்குள்ளும் இருக்கும் அன்யோன்யம் என்ன என்பது மட்டும மர்மமாகவே உள்ளது.