உங்களை நீதிபதி சி.டி.செல்வம் என்று ஏன் அழைக்கவில்லை தெரியுமா ? நீதிபதிகளாக நடந்து கொள்பவர்களைத்தான் நீதிபதி என்று அழைக்க முடியும். திமுகவின் வட்டச் செயலாளர் போல நடந்து கொள்பவர்களை நீதிபதி என்று அழைக்க இயலாது.
முதலில், உங்கள் தீர்ப்பை படித்து விடுவோம். பிறகு விவாதிப்போம்.
இடைக்கால மனு எண் 3 / 2014 தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, இந்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கிறது.
ஏற்கனவே, இந்த நீதிமன்றம் 07.01.2014 அன்று அளித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்ததைப் போல, தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதலும், துஷ்பிரயோகம் செய்து ஒரு நபரை அவமானப்படுத்துதல் மற்றும் ஆபாச படங்களை ஏற்றுதல் குறித்து இந்த வழக்கில் மனுதாரர் (மகாலட்சுமி) முக்கியமான பிரச்சினையை எழுப்பியுள்ளார். அவதூறான கட்டுரைகளும் இந்த வகையில் சேரும்.
இந்த விஷயத்தின் முக்கியத் தன்மை கருதி, வழக்கறிஞர்களை, இந்த விஷயத்தை அணுகுவது குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு கேட்கப்பட்டிருந்தது. அதே போல இவ்வழக்கின் தீவிரத்தன்மை கருதி, மூத்த வழக்கறிஞர் பி.குமார் அவர்களை, இந்த வழக்கில் உதவுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அவர் மிக நீண்ட வாதங்களை எடுத்து வைத்தார். அவர் எடுத்து வைத்த விஷயங்களும், மற்ற விஷயங்களும், இந்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எடுத்துரைக்கப்படும். மனுதாரர் எடுத்து வைத்த ஆவணங்களை வைத்துப் பார்க்கையில், இந்த தளத்தின் பின்னணியில் உள்ள நபர் / நபர்கள் மனுதாரருக்கு சொல்லோன்னா துயரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதைத் தவிரவும், இந்த வழக்கில் சவுக்கு தளத்தில் வெளியான பல்வேறு விஷயங்கள் இந்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. அவற்றுள், தனி நபர் சுதந்திரத்தில் குறுக்கீடு, பலரின் நற்பெயருக்கு களங்கம், என்று பலருக்கு வேதனை ஏற்படுத்தியுள்ளது. இந்த தளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து வழக்கறிஞர்கள், இந்நீதிமன்றத்தின் முன் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய அரை டஜனுக்கும் குறையாத நீதிபதிகள், பல வழக்கறிஞர்கள், பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர் இந்த விஷம் கக்கும் தளத்தால் தளத்தால் கடுமையாக தாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டள்ளனர். இது அனைத்தும், இத்தளத்தை நடத்துவது யார் என்பதை வெளியில் சொல்லக் கூட துணிச்சல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் இணைய தளம் நடத்த வழிவகை செய்யும் நிறுவனங்கள், இணைய தளம் நடத்துவதற்கு, அந்த இணையதளங்களை நடத்துபவர்கள் அவர்களின் விபரங்களையும், முகவரிகளையும் வழங்க வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளனர். ஆனால், இந்த நேர்வை பொறுத்தவரை, பெயரும், முகவரியும் தவறாக வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் தளத்தில் உள்ள விஷயங்கள் எந்த அளவுக்கு அவமானகர மானதாகவும், வெறுக்கத் தக்கனவாகவும், ஆபத்தானதாகவும் உள்ளதென்றால், அவற்றை இந்த நீதிமன்றத்தில் ஆணையில் எழுத முடியாத அளவுக்கு உள்ளது. இது போன்ற தளங்கள் தொடர்ந்து நடக்க அனுமதிக்கப்பட்டால் சமுதாயத்துக்கு இதனால் நேரும் தீங்கை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. காதலிப்பவர்கள் திருமணம் புரிய மாட்டார்கள். பல தம்பதிகள் பிரிந்து போவார்கள், பல குழந்தைகள், பெற்றோரோடு இணைந்திருப்பதற்கு பதிலாக யாரோ ஒரு பெற்றோரின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அவலம் நேரிடும். இது போல சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இந்த இடைக்கால உத்தரவின் மூலமாக, குழு ஒருங்கிணைப்பாளர் (இணைச் செயலாளர்) இணைய சட்டப் பிரிவு, தகவல் தொழில் நுட்பத் துறை, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம், மத்திய அரசு, எலெக்ட்ரானிக் நிகேதன், எண் 6, மத்திய அரசு அலுவலக வளாகம், புது தில்லி என்பவருக்கு, இந்த தளம் www.savukku.net இந்த ஆணை கிடைத்த உடன், முழுமையாக தடை செய்ய உத்தரவிடுகிறது.
மாநில அரசு தலைமை வழக்கறிஞர் கவலை தெரிவித்தபடி, அவர் கூறிய வாதங்களை பதிவு செய்து கொண்டு, இந்த நீதிமன்றம் மேற்கூறிய உத்தரவை பிறப்பிக்கிறது. தலைமை வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க சிறப்புப் படை நியமிக்கப்பட்டிருப்பதாகவும், குற்றவாளி எங்கிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்கின் புலன் விசாரணை தீவிரமாக நடைபெறும் என்றும் கூறியதை இந்நீதிமன்றம் பதிவு செய்து கொள்கிறது.
இந்த வழக்கில் பிறப்பித்துள்ள இந்த இடைக்கால உத்தரவோடு இப்போதைக்கு இந்த விவகாரம் முடிவடைகிறது. ஆனால், இந்த தளத்தில் உள்ள ஒவ்வொரு மோசமான கட்டுரையும், தனித் தனி புகார்கள் அடிப்படையில் தனித்தனி வழக்குகள் பதிவு செய்ய உகந்தது. உத்தரவு நிலுவையில் இருப்பதனால், மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து வரலாம். அதை இந்த நீதிமன்றம் விசாரிக்கும்.”
இதுதான் உங்களின் தீர்ப்பு. இப்போது விவாதிப்போம். அன்பார்ந்த சி.டி.செல்வம் அவர்களே. மகாலட்சுமி அளித்த புகாரின் மீதான உங்கள் கரிசனம் உண்மையிலேயே புல்லரிக்க வைக்கிறது. மகாலட்சுமி அளித்த புகார் என்ன ? சவுக்கு தளத்தில், அவர் குறித்து வெளிவந்துள்ள, மூன்று கட்டுரைகளை நீக்க வேண்டும் மற்றும் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் கீழ், சவுக்கு தளத்தை நடத்துபவர் மற்றும், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றும் அவர் தம்பி மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே. மகாலட்சுமி என்பவர் யாரென்றே தெரியாது. அவர் குறித்த தகவல்கள் எப்போது வருகிறதென்றால், அவர், ஸ்கை வாக்கில் தோழிகளோடு இரவு உணவு அருந்த வந்த அவரது தம்பி மனைவியை தன் குடும்பத்தினரோடு சேர்ந்து, பொது இடத்தில் அடித்து உதைத்த போதுதான். பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணை, மகாலட்சுமி பொது இடத்தில் அனைவர் முன்னிலையிலும் அடித்து உதைத்ததோடு நிற்கவில்லை. அது குறித்து மறுநாள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற அந்தப் பெண்ணை, வழக்கறிஞர் என்ற தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மீண்டும் மிரட்டுகிறார். காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய விடாமல், வழக்கறிஞர்களை அழைத்து சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண், புதிய தலைமுறையில் பணியாற்றுவதால், அவரும் அழுத்தத்தை அளித்து, எப்ஐஆர் பதிவு செய்ய வைக்கிறார். ஒரு நேர்மையான காவல் ஆய்வாளர், நாகப்பட்டினத்துக்க தப்பிச் சென்ற, மகாலட்சுமியின் தம்பி மற்றும் தாயாரை, கைது செய்து நீதிமன்றம் அழைத்து வருகிறார். நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும் நீதித்துறை நடுவர் முன்னிலையில் நேர் நிறுத்துகையில், நூறு வழக்கறிஞர்களை அழைத்து சென்று, நீதித்துறை நடுவரை மிரட்டி, அவர்களை புழல் சிறைக்கே எடுத்து செல்ல விடாமல், மிரட்டி ஜாமீன் பெறுகிறார் மகாலட்சுமி. இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் மகாலட்சுமியைப் பற்றியே தெரிய வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகள்தான், சூது கவ்வும் மற்றும் பால் கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் அடாவடி ஆகிய கட்டுரைகள்.
மகாலட்சுமி ஒரு ஆணை விரும்புகிறார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற மகாலட்சுமி மற்றொரு ஆணை விரும்புவது அவரது தனிப்பட்ட விருப்பம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படி மகாலட்சுமி விரும்பும் அந்த ரூபன் என்ற அந்த நபருக்கு திருமணமாகிறது. அந்த திருமணத்தை மகாலட்சுமி விரும்பவில்லை. அதை எப்படியாவது முறிக்க வேண்டும் என்று முயல்கிறார். அதுவும் அவரது தனிப்பட்ட விருப்பமே. ஆனால், அந்த திருமணத்தை முறிப்பதற்காக, ரூபனை திருமணம் செய்து கொண்ட பெண் மீது இல்லாத ஒரு உறவை இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். கல்லூரியில் பணியாற்றும் அந்தப் பெண், தன் மாணவனோடு உறவில் இருப்பதாக ஆதாரங்களை ஜோடிக்கிறார் மகாலட்சுமி. அந்தப் பெண், ஒரு தீவிரமான கிறித்துவ பக்தை. தன்னை கடவுள் கணவனுக்கு உண்மையாக இருக்கிறாரா என்று சோதிக்கிறார் என்று இறைவனை வேண்டும் அந்தப் பெண், இந்த சோதனைகள் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறார். எந்த ஆதாரங்களும் எடுபடாமல் போனதால், இறுதியாக அந்த மாணவனிடம் பணம் கொடுத்து, அந்தப் பெண்ணோடு உறவு இருப்பதாக, குடும்ப நல நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார்.
நீதிமன்றத்திலேயே கதறி அழுத அந்தப் பெண் இனியும் பொறுக்க முடியாது என்று, விவாகரத்து அளிக்க சம்மதிக்கிறார். அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம் எந்தப் பெண்ணுக்கும் நிகழலாம். ஆண் பெண் உறவு என்பது, தனி நபர் விருப்பம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே நேரத்தில், சம்பந்தமே இல்லாத ஒரு அப்பாவிப் பெண்ணை, தன்னுடைய விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காக, அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்தி, நீதிமன்றத்தை ஏமாற்றியது தனி நபர் விஷயம் அல்ல என்பதும் உண்மை. மகாலட்சுமியால் தனது வாழ்க்கையை தொலைத்து, அவமானப்படுத்தப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு, புலம்பித் தவித்து கண்ணீர் விடும் ஒரு அபலைப் பெண்ணுக்கு என்ன நியாயத்தை செய்து விட முடியும் ? அவள் வாழ்க்கையை நாம் திருப்பித் தர முடியுமா ? அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீருக்கு விடையாக எழுதப்பட்டதே இரண்டு பேர் ஏழு காதல் கட்டுரை. இந்தக் கட்டுரையால் மகாலட்சுமி கோபமடைந்தது நியாயமான விஷயமே. அவர் தனிப்பட்ட வாழ்வை குறி வைத்து எழுதப்பட்ட கட்டுரை. இதற்காக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில், சவுக்கு இணையதளம் மற்றும், அவர் தம்பி மனைவி மீது மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். இதுதான் சட்டரீதியாக எடுக்கக்கூடிய நடவடிக்கை.
ஆனால், இது தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யவே முடியாது. மகாலட்சுமி, ஒரு வழக்கறிஞர் என்ற தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, கிரிமினல் வழக்கு பதிய வைக்கிறார். வழக்கு பதிவு செய்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில்தான் வழக்கு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு விசாரணைக்கு வருகிறது.
மகாலட்சுமி எப்படிப்பட்டவர் என்று தெரியுமா ? சவுக்கு தளத்தில் உள்ள கட்டுரையை எடுக்க வேண்டும் என்றால், 50 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று அடையாளம் தெரியாத ஒரு நபர், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மகாலட்சுமியை மிரட்டினாராம். அவர் பயந்து போய், காவல்துறையில் புகார் செய்தாராம். மிரட்டிய அந்த நபர், ஆச்சிமுத்து சங்கர், மற்றும் ஐந்து பேர் அனுப்பிய நபராம். அந்த ஐந்து பேரும், மகாலட்சுமிக்கு பிடிக்காத அவர் உறவினர்கள். அவரின் முதல் கணவர், அவர் தம்பி, மகாலட்சுமியின் தம்பி மனைவி, சன் டிவி ராஜா மீது புகார் கொடுத்த அகிலா, அவர் நண்பர் கண்ணன் ஆகியோர் தான் அந்த ஐந்து பேர். இதன் பேரிலும் காவல்துறை தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. இது வரை சவுக்கு தளம் மீதும், மகாலட்சுமியின் தம்பி மனைவி மீதும் 31 புகார்களை அளித்துள்ளார் மகாலட்சுமி. சவுக்கு தளத்தை விட, குடும்பத் தகராறை தீர்த்துக் கொள்வதில், மகாலட்சுமி முனைப்பாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் செய்தி வாசித்துக் கொண்டே, வழக்கறிஞராக பணியாற்றுபவர். இப்படி பணியாற்றுவது, வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி குற்றம். மகாலட்சுமி வழக்கறிஞராக பணியாற்றுவதை தடை செய்யும் அளவுக்கு சீரியசான குற்றம். இது குறித்து, தற்போது பார் கவுன்சிலில் மகாலட்சுமி மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
சவுக்கு தளத்தில் தொடர்ந்து நீதிபதிகளைப் பற்றி எழுதப்பட்டு வந்தது அறிந்து கடுமையான எரிச்சலில் இருந்த பல நீதிபதிகள், சவுக்கு தளத்தை முடக்க எடுத்த முயற்கிகளை நீங்களும், வழக்கறிஞர் சங்கரசுப்புவும் சேர்ந்து, மகாலட்சுமியை ஒரு கருவியாக பயன்படுத்தத் தொடங்கினீர்கள் என்பது நான் அறியாதது இல்லை செல்வம் அவர்களே. மகாலட்சுமி குறித்து சவுக்கு தளத்தில் வந்த கட்டுரை மிக மிக சாதாரணமானது. இணைய தளத்தில் பெண்களுக்கு எத்தனை இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன தெரியுமா செல்வம் ? முகநூலில் ஆபாச படங்களை வெளியிடுவதிலிருந்து, பர்சனல் மின்னஞ்சல்களை வெளியிடுவது வரை ஏராளமான நெருக்கடிகளை பெண்கள் சந்தித்தே வருகிறார்கள். அந்தப் புகார்களின் மீது சென்னை மாநகர காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அமைதியாக வரும் பெண்களிடம், பொறுமையை வளர்த்துக் கொள்ளச் சொல்லி அறிவுரை கூறி வருகிறது என்பதும் உங்களைப் போன்ற கற்றறிந்த அறிஞர் அறியாதது அல்ல.
உண்மையிலேயே இணைய தளத்தில் பெண்கள் குறித்த அக்கறை உங்களுக்கு இருக்குமானால் என்ன செய்திருக்க வேண்டும் நீங்கள் ? இது போல எத்தனை புகார்கள் உங்களிடம் நிலுவையில் இருக்கிறது என்பதை காவல்துறையிடம் கேட்டிருக்க வேண்டுமா இல்லையா ? ஆனால் உங்கள் நோக்கம் என்ன என்பது உங்கள் நடவடிக்கைகளிலும், உங்கள் தீர்ப்பிலும் வெளிப்பட்டுள்ளது.
அனைத்து வழக்குகளும், நீதிபதியின் முன் பட்டியலிடப்படும். சாதாரணமாக ஒரு நீதிபதியின் முன்பு, 100 அல்லது 150 வழக்குகள் பட்டியலிடப்படும். அன்றைய வேலைப்பளுவைப் பொறுத்து, சில வழக்குகள் விசாரிக்கப்படாமல் செல்வது கூட உண்டு. ஆனால், இந்த வழக்கை தினமும் 2.15 மணிக்கு விசாரிக்குமாறு தொடர்ந்து பட்டியலிட உத்தரவிட்டீர்கள். 2.15 மணிக்கும், வேறு சில வழக்குகளோடு இது சேர்ந்து வந்ததால், ஒரு நாள் விசாரிக்க முடியாமல் போனது. அதன் பிறகு, இந்த வழக்கை தினமும் 12 மணிக்கு விசாரிப்பது போல தனி வழக்காக பட்டியலிட உத்தரவிட்டீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் எந்த வழக்கையும், தனி வழக்காக விசாரித்த வரலாறே இல்லை. (திமுக மூத்த வழக்கறிஞர்கள் எடுத்து வரும் பசையான வழக்குகளை தவிர்த்து).
அப்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் ஒரு நாளில்தான், நாளை, சவுக்கு வடிவமைப்பாளரையும், சவுக்கு தளம் நடத்துபவரையும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டீர்கள். அரசுத் தரப்பில் ஒரு வாரம் அவகாசம் கேட்டும் அவசர அவசரமாக மறுத்து, நாளையே கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டீர்கள். அப்படி அவசர அவசரமாக உத்தரவிட வேண்டிய காரணம், சவுக்கு தளத்தின் வசம் ஜாபர் டேப்புகள் சிக்கிய விபரம், உங்களுக்கு திமுக தலைமை மூலமாக சொல்லப்பட்டது. ஒரு தளத்தில் வரும் கட்டுரைக்கு தள வடிவமைப்பாளர் எந்த வகையில் பொறுப்பாவார் செல்வம் ? உங்கள் உத்தரவு எப்படி இருக்கிறது தெரியுமா ? புதிதாக கட்டிய வீட்டில் ஒரு கொலை நடக்கிறது என்றால், அந்த வீட்டை கட்டிய மேஸ்திரியை கைது செய்ய உத்தரவிட்டது போலத்தான் இதுவும். அந்த அளவுக்கா உங்கள் ஆத்திரம் உங்கள் அறிவையும் கண்களையும் மறைத்து விட்டது ? முருகைய்யன் கைது செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு நாளும், இன்னொரு நபரை ஏன் கைது செய்யவில்லை என்று, உங்கள் சேம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை அழைத்து, தினமும் ‘ஏன் அவனைக் கைது செய்யவில்லை….. துப்பு கெட்ட காவல்துறை’ என்று நீங்கள் கடிந்து கொண்டதெல்லாம் தெரியும்.
உங்களைப் பற்றி சவுக்கு தளத்தில் எத்தனையோ கட்டுரைகள் வந்திருக்கின்றன. சட்டம் படித்த உங்களுக்கு Nemo iudex in causa sua என்ற லத்தீன் நியதி தெரிந்திருக்கும். no-one should be a judge in his own cause. தன்னுடைய வழக்குக்கு யாரும் தானே நீதிபதியாக முடியாது. உங்களைப் பற்றி பல கட்டுரைகள் வந்திருந்தும், துளியும் வெட்கமேயின்றி, நீங்களே இந்த வழக்கை விசாரித்தீர்கள். உங்களுக்குத்தான் வெட்கமே இல்லை என்பதால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, அநியாயமாக 21 நாட்கள் சிறையில் இருந்த முருகைய்யன் நீங்கள் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று தலைமை நீதிபதியிடம் மனு அளித்தார். அந்த மனுவும் உங்கள் பார்வைக்கு தலைமை நீதிபதியால் அனுப்பப்பட்டது. ஆனாலும் நீங்கள் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்தே வந்தீர்கள்.
இந்த நிலையில், நீங்கள் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று முருகைய்யன் சார்பில் உங்கள் முன்னாலேயே அந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை ஏற்காமல் தள்ளுபடி செய்ய உங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால், அப்படி தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை நீங்கள் உங்கள் தீர்ப்பில் விவாதிக்க வேண்டுமா இல்லையா ? ஒரே வரியில், ” இடைக்கால மனு எண் 3 / 2014 தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து” என்று எழுதி விட்டு, எந்த விளக்கமும் அளிக்காமல் தீர்ப்பெழுதுவதற்கு பெயர் என்ன தெரியுமா ?
கோழைத்தனம். அந்த மனுவை ஏன் தள்ளுபடி செய்கிறேன் என்ற காரணங்களைப் பதிவு செய்யக் கூட துணிச்சல் இல்லை உங்களுக்கு. முருகைய்யன் சார்பில் வாதிட்ட, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை பேசவே விடாமல், அவர் பேசுபதை காது கொடுத்து கேட்காமல் ஒதுக்கியதும் உங்கள் கோழைத்தனமே.
நீதிபதி சந்துருவோடு ‘வாடா போடா’ என்று உரையாடும் அளவுக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர் இருக்கிறார். அவர் சந்துரு முன்பு தனது வழக்குகள் வந்தால், வேறு வழக்கறிஞரை வைத்து வாதாட சொல்வார். “சார்… அவர் உங்கள் நண்பர்தானே… ஏன் நீங்களே வாதாடக்கூடாது” என்று கேட்டால் என் நண்பர் என்பதற்காகவே நியாயமான வழக்கைக் கூட டிஸ்மிஸ் செய்து விடுவான். அதற்காகத்தான் வேறு வழக்கறிஞரை அனுப்புகிறேன் என்று கூறுவார். நீதிபதி என்றால் இப்படி இருக்க வேண்டும் செல்வம்.
நேரடியாக நீங்களே இந்த தளத்தை தடை செய்ய இயலாது என்பதால், நீங்கள், வழக்கறிஞர்களின் துணையை நாடினீர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் இந்த தளத்தின் விசிறிகள் என்பது உங்களுக்குத் தெரியாது செல்வம்.
உங்களைப் போன்ற ஊழல் பேர்விழிகளும், அடாவடி செய்யும் சங்கரசுப்பு போன்ற பேர்விழிகளுக்கும்தான் சவுக்கை பிடிக்காது. நியாயமாக தொழில் செய்யும் பல நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களுக்கு சவுக்கு தளத்தை பிடிக்கவே செய்யும். குறிப்பாக, நீதிபதிகளின் ஊழல் விவகாரங்களை சவுக்கு அம்பலப்படுத்துகையில் வெகுவாக ரசிக்கவே செய்கிறார்கள்.
அடுத்ததாக, “இதைத் தவிரவும், இந்த வழக்கில் சவுக்கு தளத்தில் வெளியான பல்வேறு விஷயங்கள் இந்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. அவற்றுள், தனி நபர் சுதந்திரத்தில் குறுக்கீடு, பலரின் நற்பெயருக்கு களங்கம், என்று பலருக்கு வேதனை ஏற்படுத்தியுள்ளது. இந்த தளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து வழக்கறிஞர்கள், இந்நீதிமன்றத்தின் முன் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய அரை டஜனுக்கும் குறையாத நீதிபதிகள், பல வழக்கறிஞர்கள், பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர் இந்த விஷம் கக்கும் தளத்தால் தளத்தால் கடுமையாக தாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டள்ளனர்.” என்று கூறியுள்ளீர்கள்.
எது தனி நபர் சுதந்திரம் செல்வம் ? நீதிபதி நியமன ஆணை வந்த பிறகு அரசியல் கட்சித் தலைவரை சென்று பார்ப்பதா ? 120 நாட்கள் காவல்துறையை ஏமாற்றி தப்பி ஓடிய க்ரானைட் திருடன் துரை தயாநிதிக்கு முன் ஜாமீன் வழங்குவதா ? திமுக பிரமுகர் கேசிபி பழனிச்சாமியின் மகன் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணையே இன்றி இடைக்காலத் தடை வழங்குவதா ? இப்படி நீதியை விலைக்கு விற்று, கருணாநிதியின் காலடியிலோ, காசு உள்ளவன் காலடியிலோ நீங்கள் அடகு வைப்பீர்கள்… அது குறித்து ஊடகங்கள் எழுதினால் நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டுவீர்கள்… அது பற்றி ஒரு இணையதளம் எழுதினால் தடை செய்வீர்களா ? உங்களுக்கெல்லாம் பெயரே இல்லை. பிறகு என்ன நற்பெயர். அரை டஜனுக்கும் குறையாத நீதிபதிகளைப் பற்றி எழுதியதாக கூறியுள்ளீர்கள். சிபிஐ பறிமுதல் செய்த சுரானா கார்பரேஷனின் 400 கிலோ தங்கத்தை பணத்தை வாங்கிக் கொண்டு விடுவிக்க முயன்ற சி.எஸ்.கர்ணனைப் பற்றி எழுதுவது குற்றமா ? அப்பாவி நீதிமன்ற ஊழியரைப் பார்த்து உன் மீது காவல் நிலையத்தில் எஸ்.சி எஸ்டி புகார் கொடுப்பேன் என்று மிரட்டும் கர்ணணைப் பற்றி எழுதுவது குற்றமா ? மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நீதிபதி தனபாலன், 10 கோடி ரூபாய் செலவில் தன் மகனுக்கு எப்படி திருமணம் செய்தார் என்று எழுதுவது குற்றமா ? நீதிபதி தனபாலன் திருமணத்துக்கு வரவேண்டும் என்பதற்காகவே, சென்னையில் மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அரங்கம் ஏற்பாடு செய்த மோசடியைப் பற்றி எழுதுவது குற்றமா ? கையில் ஒரு வழக்கும் இல்லாத நீதிபதி தனபாலனின் மகன் பிரபு, 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடி கார் எப்படி வாங்கினார் என்று எழுதுவது குற்றமா ? பல்வேறு வழக்குகளின் பணத்தை வாங்கிக் கொண்டு சுற்றுச் சூழலுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி எலிப்பி தர்மாராவைப் பற்றி எழுதுவது குற்றமா ? கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல், தங்களுக்கு தெரிந்தவர்களை அரசு ஊழியர்களாக நியமித்த அத்தனை நீதிபதிகளையும் பற்றி எழுதுவது குற்றமா ?
ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றி இந்தத் தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று அங்கலாய்க்கிறீர்களே செல்வம்…. உலகத்திலேயே ஊழல் பேர்விழிகள் இந்த அதிகாரிகள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், உங்களைப் போன்ற நீதிபதிகளோடு ஒப்பிடுகையில் அவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. அதிகாரிகளை விசாரிக்கவாவது அமைப்புகள் இருக்கின்றன. நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஆனால் உங்களைப் போன்ற ஊழல் நீதிபதிகளை விசாரிக்க அல்ல… விமர்சிக்கக் கூட வழியில்லாத அவலச் சூழல்தான் இங்கே நிலவுகிறது. கட்டுப்பாடோ, விமர்சனமோ இல்லாத அதிகார மையங்கள் ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் ஆபத்து. அப்படிப்பட்ட அதிகார மையங்களாகத்தான் உங்களைப் போன்ற நீதிபதிகள் விளங்குகிறீர்கள்.
அடுத்ததாக “இது அனைத்தும், இத்தளத்தை நடத்துவது யார் என்பதை வெளியில் சொல்லக் கூட துணிச்சல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் இணைய தளம் நடத்த வழிவகை செய்யும் நிறுவனங்கள், இணைய தளம் நடத்துவதற்கு, அந்த இணையதளங்களை நடத்துபவர்கள் அவர்களின் விபரங்களையும், முகவரிகளையும் வழங்க வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளனர். ஆனால், இந்த நேர்வை பொறுத்தவரை, பெயரும், முகவரியும் தவறாக வழங்கப்பட்டுள்ளன.” என்று கூறுகிறீர்கள்.
யார் நடத்துவது என்று விபரங்கள் இல்லாதபோதே தளத்தை வடிவமைத்தவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறீர்கள். நடத்துபவர் யாரென்று தெரிந்தால் அவனை என்கவுன்டரில் சுட உத்தரவிடமாட்டீர்கள் ?
அடுத்ததாக “இந்தத் தளத்தில் உள்ள விஷயங்கள் எந்த அளவுக்கு அவமானகரமானதாகவும், வெறுக்கத்தக்கனவாகவும், ஆபத்தானதாகவும் உள்ளதென்றால், அவற்றை இந்த நீதிமன்றத்தில் ஆணையில் எழுத முடியாத அளவுக்கு உள்ளது. இது போன்ற தளங்கள் தொடர்ந்து நடக்க அனுமதிக்கப்பட்டால் சமுதாயத்துக்கு இதனால் நேரும் தீங்கை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. காதலிப்பவர்கள் திருமணம் புரிய மாட்டார்கள். பல தம்பதிகள் பிரிந்து போவார்கள், பல குழந்தைகள், பெற்றோரோடு இணைந்திருப்பதற்கு பதிலாக யாரோ ஒரு பெற்றோரின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அவலம் நேரிடும். இது போல சொல்லிக் கொண்டே போகலாம்.”
அவமானகரமானதும், வெறுக்கத்தக்கதும், ஆபத்தானதும் எது தெரியுமா செல்வம் ? நீங்கள் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று மனு அளித்துள்ளேன் என வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் நேரடியாக மனுவாக தெரிவித்தும், அந்த நீதிபதி தொடர்ந்து அந்த வழக்கை விசாரிப்பதோடு அல்லாமல், ஒரு கட்டுரை சரியில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தளத்தையும் தடை செய்வதே. இது ஆபத்தானது மட்டுமல்ல. ஆபாசமானதும் கூட. கூடுதலாக அறிவில்லாததும் கூட. முகநூலில் ஒரு அவதூறு பதிவு வந்ததற்காக, முகநூலை தடைசெய்வதற்கு ஒப்பாகும் இது.
இணையத்தில் இன்று 42 லட்சம் தளங்கள், வெறும் நீலப்படங்களை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா செல்வம் ? அமெரிக்காவே தடை செய்தும் கூட, குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்கள் வைத்துள்ள இணையதளங்களும் செயல்பாட்டில் இருக்கத்தான் செய்கிறது. அதை விடவா சமுதாயத்துக்கு சவுக்கு தளத்தால் தீங்கு நேர்ந்து விடப் போகிறது ? அந்த தளங்கள் எத்தகைய தீங்கை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா ? அத்தகைய ஆபாச தளங்களை கட்டுப்படுத்த என்றாவது முயன்றிருக்கிறீர்களா செல்வம் ? அதை விடவா சவுக்கு தளம் ஆபத்தானது ?
அடுத்ததாக நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம்தான் மிகுந்த நகைச்சுவையானது. “காதலிப்பவர்கள் திருமணம் புரிய மாட்டார்கள். பல தம்பதிகள் பிரிந்து போவார்கள், பல குழந்தைகள், பெற்றோரோடு இணைந்திருப்பதற்கு பதிலாக யாரோ ஒரு பெற்றோரின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அவலம் நேரிடும். இது போல சொல்லிக் கொண்டே போகலாம்.” இது போன்ற கிறுக்குத்தனமாக, முட்டாள்த் தனமான, அரை வேக்காட்டுத் தனமான, அறிவில்லாத பகுதிக்கு எந்த விளக்கமும் விரும்பவில்லை. ஆனால், சவுக்கு தளத்தின் மீது உங்களுக்கு இருந்த கட்டுப்படுத்த முடியாத கோபத்தை இந்த பகுதி வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
“இந்த வழக்கில் பிறப்பித்துள்ள இந்த இடைக்கால உத்தரவோடு இப்போதைக்கு இந்த விவகாரம் முடிவடைகிறது. ஆனால், இந்த தளத்தில் உள்ள ஒவ்வொரு மோசமான கட்டுரையும், தனித் தனி புகார்கள் அடிப்படையில் தனித்தனி வழக்குகள் பதிவு செய்ய உகந்தது. உத்தரவு நிலுவையில் இருப்பதனால், மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து வரலாம். அதை இந்த நீதிமன்றம் விசாரிக்கும்”
நீங்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் வழக்கில், சம்பந்தப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது என்றதும், வெளிப்படையாகவே அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளீர்கள். எப்படியாவது அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்பதில் உங்களுக்கு உள்ள வெறி, ” இந்த தளத்தில் உள்ள ஒவ்வொரு மோசமான கட்டுரையும், தனித் தனி புகார்கள் அடிப்படையில் தனித்தனி வழக்குகள் பதிவு செய்ய உகந்தது” இந்தப் பகுதியின் மூலம் வெளிப்படுகிறது.
ஒரு வழக்கில் முன்ஜாமீன் பெற்றாலும், அடுத்தடுத்து சவுக்கு தளத்தில் உள்ள 400 கட்டுரைகளுக்கு 400 வழக்கு பதிவு செய்யலாம்,
செய்ய வேண்டும் என்பதே இந்தப் பகுதியின் நோக்கம். கருணாநிதி இட்ட உத்தரவை நிறைவேற்றுவதில், இத்தனை முனைப்பு காட்டும் நீங்கள்தான் இந்த சமுதாயத்துக்கு மிகுந்த ஆபத்தானவர் செல்வம். இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி, பல்வேறு வழக்கறிஞர்களை தொடர்ந்து புகார் அளிக்கச் சொல்லுங்கள். இந்த தீர்ப்பின்படி காவல்துறை வழக்கு பதிவு செய்தே ஆக வேண்டும் என்பதற்கான உத்தரவுதான் இது என்று காவல்துறையிடம் கூறுங்கள். பதிவு செய்ய மறுத்தால், என் நீதிமன்றத்திலேயே வழக்கு தாக்கல் செய்யுங்கள் என்று நீங்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவிடம் சொல்லியிருப்பதும் எங்களுக்கு தெரியும் செல்வம்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகளின் பொறுப்பு (Portfolio) மாற்றப்படும். ஆனால், மார்ச் முதல் வாரத்தில் அனைத்து நீதிபதிகளின் பொறுப்பும் மாற்றப்பட்டும், நீங்கள் மட்டும் தொடர்ந்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்படும் 482 நீதிமன்றத்திலேயே இருக்க வேண்டும் என்று பொறுப்பு நீதிபதியான அக்னிஹோத்ரியிடம் மன்றாடி, இதைக் கேட்டுப் பெற்றீர்கள் என்பதும் தெரியும் செல்வம்.
உங்களைப் போல சவுக்கு பெரும் பணக்காரனல்ல செல்வம். பிறக்கும்போதே உங்களைப் போல வாயில் வெள்ளிக்கம்பியோடு பிறக்கவில்லை. ராவ் பகதூர் சர் ஆரோக்கியசாமி தாமரைசெல்வம் பன்னீர்செல்வத்தின் பேரனில்லை. மிராசு பரம்பரையின் வாரிசு இல்லை. செல்வச் செழிப்போடு வளர்ந்ததில்லை.
இந்தத் தளம் எப்படி உருவானது தெரியுமா சிரில் தாமரைச் செல்வம் ? நிர்வாணப்படுத்தப்பட்டு, இரவு முழுவதும் போலீசிடம் அடி வாங்கி, கை விலங்கிட்டு வீதிகளில் இழுத்து செல்லப்பட்டு, மீண்டும் பொய் வழக்கில் கைதாகி, பழைய வழக்குக்காக தினந்தோறும் நீதிமன்றத்துக்கு அலைந்து, குடும்பத்தை கவனிக்க முடியாமல், நாள்தோறும் போராட்டம் நடத்தி உருவான தளம் இது.
செல்வச் செழிப்போடு வளர்ந்து, திமுக அரசில் அரசு வழக்கறிஞராகி, கருணாநிதி தயவில் நீதிபதியாகி, கருணாநிதி சொல்லும்படியெல்லாம் தீர்ப்பு எழுதும் உங்களுக்குத் தெரியாது இந்த தளத்தின் அருமை.
உங்களைப் போல கோடிக்கணக்கில் சொத்துக்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், லட்சக்கணக்கான சவுக்கு வாசகர்களின் அன்பும் ஆதரவும் உண்டு. கடுமையாக ஆபத்துகளை சந்தித்து, உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய தளம் இது.
சி.டி.செல்வத்தின் சொத்துப் பட்டியல்
அத்தனை எளிதில் இந்த தளத்தை மரணிக்க விட்டு விட மாட்டோம். வாசகர்களும் விட மாட்டார்கள்.
அன்புடன்
சவுக்கு
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
கருணாநிதி எழுதிய உரை.
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.
சவுக்கு இந்த ஜனநாயகத்தின் அச்சாணி என்பதை புரிந்து கொள்ளுங்கள்
Super
சி டி செல்வத்தால் மிகவும் பாதிப்படைந்தவன் நான் அவர் அந்த பதவிக்கே அருகதையற்றவர் ஆதாரப்பூர்வ விபரங்களுக்கு —9788105274
ஊழல் நிதியரசர்களை நாடு கடத்த வேண்டும்
, சூது கவ்வும் மற்றும் பால் கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் அடாவடி ஆகிய கட்டுரைகள். இரண்டு பேர் ஏழு காதல் கட்டுரை http://www.savukku.net/ என்ற இணைய பக்கத்தில் இல்லை. அந்த பதிவுகளை மீண்டும் பதிவிடுங்கள்.
ஆம், சவுக்கு இந்த ஜனநாயகத்திற்கு தேவையான அச்சாணி என்பதை புரிந்து கொள்ளுங்கள், அச்சாணி இல்லாவிட்டால் இந்த ஜனநாயகம் சீர்குலைந்துவிடும்.
ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றி இந்தத் தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று அங்கலாய்க்கிறீர்களே செல்வம்…. உலகத்திலேயே ஊழல் பேர்விழிகள் இந்த அதிகாரிகள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், உங்களைப் போன்ற நீதிபதிகளோடு ஒப்பிடுகையில் அவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. அதிகாரிகளை விசாரிக்கவாவது அமைப்புகள் இருக்கின்றன. நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஆனால் உங்களைப் போன்ற ஊழல் நீதிபதிகளை விசாரிக்க அல்ல… விமர்சிக்கக் கூட வழியில்லாத அவலச் சூழல்தான் இங்கே நிலவுகிறது. கட்டுப்பாடோ, விமர்சனமோ இல்லாத அதிகார மையங்கள் ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் ஆபத்து. அப்படிப்பட்ட அதிகார மையங்களாகத்தான் உங்களைப் போன்ற நீதிபதிகள் விளங்குகிறீர்கள்.
இந்த களவாணிகள் இதனால் தான் பயபடாமல் லஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றை செய்கின்றனர். சவுக்கு விடாமல் இதற்கு விடிவு காலம் வரும் வரை போராடுங்கள். உங்களின் துணைக்கு நிறைய குழுக்களை அமைத்து வெற்றிபெறும் வரை போராடுங்கள்.
நீதிபதிகளின் ஊழல் விவகாரங்களை சவுக்கு அம்பலப்படுத்துகையில் பொது மக்கள் அனைவரும் வெகுவாக ரசிக்கவே செய்கிறார்கள் என்பது மட்டும் அல்ல நீதி துறையை எவ்வாறு சரி செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வையும் பெறுகிறார்கள். சவுக்கின் பணி மிக இன்றியமையாத,தேசத்தின் நலனை காக்கும் அதிஅவசியமான பணி ஆகும்.சவுக்கின் பணியை பாராட்டி விருது வழங்கவேண்டும்.