தொழில் அதிபர் ராசாத்தி அம்மாளைப் பற்றி சவுக்கில் படித்திருக்கிறீர்கள். ராசாத்தி அம்மாளின் மற்றொரு பரிமாணம் உங்களுக்குத் தெரியுமா ? தெரியாது. அதுதான் ராசாத்தி அம்மாள் இலக்கியவாதி என்பது.
நேற்று, சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக, தமிழ்ச்சங்கமத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடந்தது. முதல் நிகழ்ச்சியாக ரபீந்திரநாத் தாகூரின் படைப்புகளை வெளியிடும் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்க, இந்தியாவின் மிகச்சிறந்த இலக்கியவாதியும், தமிழ் உணர்வாளருமான ராசாத்தி அம்மாளை விட பொறுத்தமானவர் யார் ? சில தலைக்கனம் பிடித்த தறுக்கர்கள், வில்லங்கம் செய்யும் விபிடணர்கள், பொறாமை பிடித்த பொச்சரிப்புக் காரர்கள், ராசாத்தி அம்மாள் எப்படி தமிழுணர்வாளர் என்று கேட்கக் கூடும்.
நீரா ராடியா என்ற மாதரசி, ராசாத்தி அம்மாளிடம் தொலைபேசியில் உரையாடும் போது கூட, அவரிடம் ஆங்கிலத்தில் பேச விருப்பம் இல்லாததால், ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசி விட்டு, பேச்சையே முடித்துக் கொண்டு, அவர் ஆடிட்டர் ரத்தினத்திடம் தொலைபேசியை ஒப்படைத்தவர் ராசாத்தி என்பதை அந்த தறுக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு காரணத்தை சொல்கிறேன். கனிமொழியின் முதல் கவிதைத் தொகுதியின் பெயர் என்ன ? “கருவறை வாசனை“ அந்தக் கருவறைக்கு சொந்தக்காரரான ராசாத்தி அம்மாளை விட இலக்கிய நிகழ்ச்சியை தொடங்கிவைக்க வேறு யாருக்கு தகுதி இருக்கிறது ?
அந்த அடிப்படையில் தான் ராசாத்தி அம்மாள் நேற்றைய நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் வரவேற்புரை ஆற்றிய தமிழ்ச்சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் (??????) இளையபாரதியின் ஜால்ரா சத்தம் காதைப் பிளந்தது. எடுத்தவுடன், கருணாநிதி இருக்கும் திசையை நோக்கி ஒரு கும்பிடு போட்டு விட்டு நிகழ்ச்சியை தொடங்கினார். அடுத்ததாக, போட்டாரே பாருங்கள் ஒரு போடு.. தொட்டதெல்லாம் துலங்கும் கரத்துக்குச் சொந்தக்காரரான எங்கள் சின்னம்மா (கனிமொழியாம்) இந்த நிகழ்ச்சியை நடத்துவதாலேயே இந்நிகழ்ச்சி பெருமை அடைகிறது என்றார். அதற்கு மேல தாங்க முடியவில்லை.
இந்தக் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல், பொருளாதார வல்லுனர் அமர்த்யா சென்னின் மகள் ஆந்த்ரா தேவரேன் வேறு தாகூரைப் பற்றி பேச வந்திருந்தார். நல்ல வேளை அவருக்கு தமிழ் தெரியாததால், திரு திருவென்று விழித்தக் கொண்டு அமர்ந்திருந்தார்.
அடுத்து ஒரு மகிழ்ச்சிகரமான தகவலை சவுக்கு உங்களுக்குத் தர இருக்கிறது. இலக்கியவாதி ராசாத்தி அம்மாளின் மற்றொரு பரிமாணம் அது. தொழில் அதிபர் ராசாத்தி அம்மாளுக்கு இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட், அகமதாபாத், இந்தியன் பிசினெஸ் ஸ்கூல், ஐதராபாத், ஹார்வார்ட் பல்கலைகழகம், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகிய இடங்களிலிருந்து, ராசாத்தி அம்மாளுக்கு, கெஸ்ட் லெக்சர் கொடுக்க அழைப்பு வந்திருக்கிறது. கெஸ்ட் லெக்சர் என்றதும் லாலா கடை மிக்சர் என்று எளிதாக எண்ணி விடாதீர்கள். மிக மிக பெருமையான விஷயம் அது.
தமிழையும் தன்மானத்தையும் கருணாநிதியின் காலடியில் அடகு வைத்த ஈரோடு தமிழன்பன் மற்றும், அப்துல் ரகுமான்
எதற்காக இந்த அழைப்பு ? அப்படி என்ன செய்து விட்டார் ராசாத்தி அம்மாள் என்ற கேள்விகளெல்லாம் உங்கள் மனதில் நிழலாடும். இருங்கள் சொல்கிறேன்.
நம்ப தொழில் அதிபர் அக்டோபர் 2004ல் ஒரு நிறுவனத்தை தொடங்குகிறார்கள். அந்த நிறுவனத்தின் பெயர் வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ். கம்பேனி தொடங்கும் போது, சொல்லும் போதே, அழுகையா வருது சார். வெறும் ஒரு லட்ச ரூபாய் சார். ஒரு லட்சம் ரூபாய். இவ்ளோ பெரிய தொழில் அதிபர் வெறும் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டுல ஒரு நிறுவனம் தொடங்கறாங்கன்னா பாருங்க சார்.
அதுவும், அவங்க வீட்டுக் காரர், தொழில் தொடங்க அனுமதி தொடங்கல போலிருக்கு. அதனால, வீட்டுக்காரர் பேரை போடாம, முத்துக்குமாரசாமியின் மகள் னு பேரை போட்டு தொழில் தொடங்கியிருக்காங்கன்னா எவ்வளவு கஷ்டப் பட்ருக்காங்கன்னு நீங்களே சொல்லுங்க சார். நீங்களே சொல்லுங்க. ஒரு பெண் தொழில் அதிபர் ஆவதற்கு, இந்த சமூகம் எவ்வளவு நெருக்கடிகளை கொடுக்கிறது பார்த்தீர்களா ?
ராசாத்தி தொழில் தொடங்கும் போது இவரோடு சேர்ந்து மூன்று பேர் பங்குதாரர்கள். ரவிச்சந்திரன், கவிபிரசாத், மற்றும் செல்வமணி. ஆனால், தொழில் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள், அதாவது திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மற்ற மூவரும், ராசாத்தி அம்மாளை தனியே தவிக்க விட்டு விட்டு, ராஜினாமா செய்து விட்டு போய் விட்டார்கள் சார். போய் விட்டார்கள். அதிகப் பிரசங்கித் தனமாக, தன்னுடைய மகளை பார்ட்னராக சேர்த்துக் கொள்வதற்காக, இவர்கள் மூவரையும் அடித்துத் துரத்தி விட்டார்கள் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
அவர்கள் மூவரும் ராஜினாமா செய்து விட்டுப் போனதும், வேறு வழியின்றி, நமக்கு யாருமே ஆதரவு இல்லையென்று தன்னுடைய மகளையே பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறார் சார். யாருமே ஆதரவு தராத போது, பெற்ற மகள் விட்டு போய் விடுவாரா என்ன ?
இரண்டு பேரும் சேர்ந்து, தொழிலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். அப்படி உழைத்து, உழைத்து, உழைத்து, உழைத்து இன்றைக்கு வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸின் நிதி நிலை என்ன தெரியுமா ?
முதலீடு 5 கோடி
கையிருப்பு 5 கோடியே 74 லட்சம்
வசூலிக்கப் பட்ட கடன் 1 கோடியே 4 லட்சம்
வசூலிக்கப் படாத கடன் 6 கோடியே 70 லட்சம்
மொத்த சொத்து 16 கோடியே ஐந்து லட்சம்
வங்கி கையிருப்பு 1 கோடியே எண்பத்தியிரண்டு லட்சம்
இதர சொத்துக்கள் 1 கோடியே 79 லட்சம்
மொத்த செத்து 16 கோடி என்று குறிப்பிட்டிருந்தாலும், உதகமண்டலத்தில் வெஸ்ட் கேட் பெயரில் 500 கோடிக்கு வாங்கியுள்ள வின்ட்சர் டீ எஸ்டேட் இதில் சேர்க்கப் படவில்லை.
ஆனால், லாஜிஸ்டிக்ஸ் தொழிலில் இருப்பவர்களை விசாரித்தால், இந்த நிறுவனம் எந்த விதமான தொழிலும் செய்யவில்லை, இது ஒரு லெட்டர் பேட் கம்பேனி என்று கூறுகிறார்கள்.
பார்த்தீர்களா, நியாயமான தொழில் செய்யும் போது கூட வெளிப்படையாக செய்ய முடியாத ஒரு நிலைமை. என்ன கொடுமை சரவணன் இது ?
சவுக்கு வாசகர்கள் யாராவது, இது ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணம் என்று சொன்னீர்கள் என்றால், சவுக்குக்கு கெட்ட கோபம் வந்து விடும் சொல்லி விட்டேன்.
ராசாத்தி அம்மாள் இவ்வளவு பெரிய தொழில் அதிபராக இருந்தாலும், இன்னும் அவருக்கு சொந்தமாக ஒரு ஈமெயில் ஐடி கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவரின் ஆடிட்டர் ரத்தினத்தின் srirathnam@gmail.com என்ற ஈமெயில் ஐடியைத் தான் ஆவணங்களில் கொடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஏன் மேடம் ராசாத்தி மேடம். இவ்ளோ பெரிய தொழில் அதிபரா இருக்கீங்களே… ஒரு ஈமெயில் ஐடி சொந்தமாக ஓபன் பண்ணக் கூடாதா ?
ராசாத்தி அம்மாள் ஹார்வர்ட் பல்கலைகழகத்திலும், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸிலும் விரிவுரை ஆற்றி விட்டு வந்தவுடன், சவுக்கு வாசகர்கள் சார்பில் நாம் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்ன ?
மேடம் உங்க கழுத்துல இருக்கற செயின் நல்லா இருக்கு மேடம். புதுசா ஸ்பெக்ட்ரம் செயின்னு ஒன்னு வந்துருக்காமே, அதுவா மேடம் அது
தொழில் அதிபர்களை மதிக்க வேண்டும் அய்யா. மதிக்க வேண்டும்.