2002 -கலவரங்களின் போது கோர்தன் ஜடாஃபியா மாநில உள்துறை இணை அமைச்சராய் இருந்தார். அப்போதைய வன்முறைகளில் மோடியைப் போல இவருக்கும் பங்குண்டு என்று பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். 15 ஆண்டுகள் வி.ஹெ.ச்.பியில் இருந்த அவர் 90-களில்தான் பாஜகவில் இணைந்தார். நான் ஆர்.எஸ். எஸ்.ஸால் பணிக்கப்பட்டேன். கட்சியின் மாநிலச் செயலாளராகவும் ஆனேன் என்கிறார் அவர்.
மோடியின் சர்வாதிகாரப் போக்கிற்கு கண்டனம் தெரிவித்த மூன்று சங்கப் பிரமுகர்களில் ஜடாஃபியாவும் ஒருவர். இன்னொருவர், மோடி அரசில் வருவாய்த்துறை அமைச்சராயிருந்து அடையாளம் தெரியாத நபர்களால் 2003-ல் சுட்டுக்கொல்லப்பட்டார். மூன்றாமவர் பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் சஞ்சய் ஜோஷி அவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டும் குறுந்தகடு வெளியாக அவர் பதவி விலக நேரிட்டது. பின்னர் அது போலி புகைப்படம் என்று கண்டறியப்பட்டது.
சஞ்சய் ஜோஷி
ஜடாஃபியா 2002-ல் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் கட்சியிலிருந்தும். அவர் கூறினார்: “மோடிக்கு ஒரே ஒரு ஆங்கில எழுத்துதான் தெரியும் – ஐ – நான். அப்படி ஒரு சுயமோகி. என்னைக் கொலை செய்து விட முடியும் என்று கூட அவர் மிரட்டினார்.
”பிப்ரவரி 2005-ல் புலனாய்வுத்துறை நபர் என்னைப் பின் தொடர்வதைக் கவனித்தேன். ஏன் இப்படி என்று அவரையே கேட்டேன். அதுதான் எனக்கு உத்தரவு என்றார்.
”சில நாட்கள் கழித்து நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் என்னை ஏன் வேவு பார்க்கவேண்டும் என வெளிப்படையாகவே கேட்டேன். அப்போது இன்னொரு அமைச்சர் இது பற்றி விசாரிப்போம். ஆனால் அதைப் பற்றி இங்கு பேச வேண்டாமென்றார். ”முதல்வர் எதுவும் பேசவில்லை. ஆனால் அவரை வந்து சந்திக்குமாறு எனக்குச் சொல்லி அனுப்பப்பட்டது. சந்தித்தேன். உடன் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இருந்தார். அப்போது மோடி இது பற்றியெல்லாம் பகிரங்கமாக ஏன் பேசுகிறீர்கள் எனக்கேட்டார்.
என்னை போலீசார் பின் தொடரும் போது?’ நான் என்ன செய்ய? என்றேன். ”என்னை முறைத்தவாறே மோடி சொன்னார் ’உங்கள் கதை முடியப்போகிறது.’
எந்தக் கதை? என்னுடைய அரசியல் கதையா? இல்லை என் வாழ்க்கைக் கதையா? என்று கேட்டேன். அதற்கு மோடி பதில் சொல்லவில்லை. மாறாக ”நீங்கள் என்னைப் பற்றி அத்வானியிடமும் ஓம் மாத்தூரிடமும் புகார் கூறியிருக்கிறீர்கள்.” என்றார்.
”எனக்கு வேறென்ன வழி இருக்கிறது… அது சரி என் கதை முடியப்போகிறதென்றால் முடியட்டும்…அதற்கான நேரம் வரும்போது இறக்கத்தான் போகிறேன்.. ஆனால் என்னை இப்படியெல்லாம் மிரட்டவேண்டாம்…”
கோர்தன் ஜடாஃபியா
ஜடாஃபியா ஏகப்பட்ட பாதுகாப்புடன் தான் எங்கும் செல்கிறார். கலவரங்களின்போது அவர் துணை உள்துறை அமைச்சராயிருந்தாரல்லவா. அதனால்தான் முன்னெச்செரிக்கை… ஆனால் ஹரேன் பாண்டியா ஜடாஃபியைப் போல் பாதுகாப்புப் பெற்றுக்கொள்ளவில்லை. கொல்லப்பட்டார். அவர் துணிச்சலானவர். அதோடு கூட தனக்கொன்றும் ஆகாது எனவும் அவர் நினைத்தார். அது பெருந்தவறு என்கிறார் ஜடாஃபியா.
நீண்ட நாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியரான பாண்டியா அழகாகவே இருப்பார், நல்ல உயரம். அவருக்கும் மோடிக்கும் தொடக்கத்திலிருந்தே மோதல். முதல்வரான பின் தான் நிச்சயம் வெல்லக்கூடிய தொகுதியை மோடி தேடினார். அஹமதாபாதிலுள்ள எல்லிஸ் பிரிட்ஜ்தான் அதற்கு சரியான களம் என நினைத்தார். ஆனால் அந்தப் பகுதியின் உறுப்பினரான பாண்டியா மோடிக்கு உதவ மறுத்துவிட்டார். வேறு யாராவது இளைஞனுக்காக விட்டுக்கொடுப்பேன் ஆனால் இந்தாளுக்கல்ல என்றாராம் பாண்டியா.
கலவரங்கள் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, மே மாதத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான விசாரணைக்குழுவின் முன் ஹரேன் பாண்டியா இரகசிய சாட்சியமளித்தார். பாண்டியா அப்போது என்ன சொல்லியிருப்பார் என்பது மோடிக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அந்தக் கட்டத்தில் மோடியின் தலைமை செயலர் பி.கே.மிஸ்ரா மாநில உளவுத்துறையின் டைரக்டர் ஜெனரலுக்கு பாண்டியா என்ன செய்கிறார், குறிப்பாக விசாரணைக் குழு உறுப்பினர்களை சந்தித்துப் பேசுகிறாரா என்பதைக் கண்காணிக்குமாறு உத்திரவிடுகிறார்.
அந்த ஆண்டு ஜூன் 7 அன்று டைரக்டர் ஜெனரல் பதிவு செய்கிறார்: ஹரேன்பாய் பாண்டியாவுக்கு ஏதோ சம்பந்தமிருக்கிறது. 9824030629 எண் தொடர்பான அனைத்து அழைப்புகள் குறித்த விவரங்களையும் மிஸ்ரா கோருகிறார்.
ஹரேன் பாண்ட்யா
அமைச்சர் ஹரேன் பாண்டியா கிருஷ்ணய்யரை சந்தித்ததாக நம்பப்படுகிறது. ஆனால் பாம்பே போலீசார் கடமைகளை விளக்கும் கையேட்டின்படி இப்படி ஒரு அமைச்சரை வேவுபார்க்கமுடியாது. எனவே எழுத்துமூலம் இதை உறுதிப்படுத்தவியலாது. அந்த குறிப்பிட்ட மொபைல் ஃபோன் நம்பர் ஹரேன்பாயுடையதுதான் என ஐந்து நாட்கள் கழித்து மிஸ்ராவிடம் தெரிவிக்கிறார்.
அதன் பிறகு பெயர் குறிப்பிடப்படாத ஓர் அமைச்சர் கிருஷ்ணய்யர் கமிஷன் முன் சாட்சியமளித்திருக்கிறார். சாட்சியத்தில் ரெயில் பெட்டி எரிந்துபோன இரவு மோடியின் இல்லத்தில் உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மறுநாள் இந்துக்கள் கொதித்தெழுவார்கள், போலீசார் கண்டுகொள்ள வேண்டாமென அக்கூட்டத்தில் முதல்வர் கூறியதாக அவ்வமைச்சர் தெரிவித்திருக்கிறார் என செய்திகள் கசியத் தொடங்கின.
அத்தகைய செய்திகளின் அடிப்படையில் பாண்டியா கட்சிக் கட்டுப்பாட்டை மீறி விட்டார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மோடி கட்சிக்குள் வலியுறுத்துகிறார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹரேன் பாண்டியா பதவி விலகவேண்டி வருகிறது.
கதை அத்துடன் முடியவில்லை. டிசம்பர் மாத சட்ட மன்றத் தேர்தல்களில் ஹரேன் பாண்டியாவிற்கு எல்லிஸ் பிரிட்ஜில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முன்னர் மோடிக்காக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக பாண்டியா மறுத்ததையும் இங்கே நினைவுகூரலாம். ”மோடி எதையும் மறப்பவரல்ல மன்னிப்பவருமல்ல… ஒரு அரசியல்வாதிக்கு இப்படி ஒரு பழிவாங்குமெண்ணம் இருத்தல் கூடாது,” என்கிறார் ஒரு பா.ஜ.க. தலைவர்.
இவ்வாறு பாண்டியா 15 ஆண்டுகள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்த தொகுதி அவருக்கு மறுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் மன்றாடியும் மோடி மசியவில்லை.
நவம்பர் மாத இறுதியில் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதன் தாஸ் தேவி மோடியை சந்தித்து சங்கத் தலைவர் கே.எஸ். சுதர்ஷன், துணைத் தலைவர் மோகன் பகவத், வாஜ்பேயி, அத்வானி அனைவருமே ஹரேன் பாண்டியா மீண்டும் போட்டியிட விரும்புகின்றனர். தேவையில்லாமல் கட்சிக்குள் பிளவுகளை உருவாக்கவேண்டாம் என்று வாதாடினார். ஊஹூம் பயனில்லை. மதன் தாஸ் தேவிக்கே இல்லை என்று சொன்ன நிலையில் நாகபுரியிலிருந்து மற்றவர்கள் ஃபோனில் தொடர்புகொண்டு மீண்டும் வற்புறுத்துவார்கள் என்பதை உணர்ந்து மோடி மிகக் களைத்து போய் விட்டதாகக் கூறி மருத்துவமனை சென்று படுத்துக்கொண்டுவிட்டார்.
பாண்டியா மருத்துவமனைக்கு நேரே சென்று மோடியிடம் கூறினார் ”இப்படியெல்லாம் பயந்தாங் கொள்ளித்தனமாக ஓடி ஒளிய வேண்டாம். இப்போது என்னிடம் துணிச்சலுடன் சொல்லுங்கள் அத்தொகுதி எனக்கில்லை என்று” அவர் ஏன் பதில் சொல்கிறார்?
மருத்துவமனையிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து வெளிவந்த மோடி எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியை புதிய நபர் ஒருவருக்கு ஒதுக்கினார். டிசம்பர் தேர்தல்களில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது.
அப்புறம் யார் கேள்வி கேட்கப் போகிறார்கள்? பாண்டியாதான் பாவம் ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவரையும் சந்தித்து மோடி சங்கத்தையும் கட்சியையும் தன் சொந்த நலனுக்காக அழித்தேவிடுவார் எனப் புலம்பினார்.
மோடியிடம் மோத முடியாத அவர்களோ பாண்டியாவையும் இழக்கத் தயாரில்லை. எனவே அவரை கட்சியின் தேசிய செயற் குழு உறுப்பினராகவோ அல்லது கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளராகவோ ஆக்கி புதுடில்லிக்கு அழைத்து கொண்டு விடலாம் என நினைத்தனர்.
ஆனால் அதையும் தடுக்க முயற்சித்தார் மோடி. புதுடில்லியிலிருந்து ஹரேன் இன்னும் சிக்கல்களைக் உருவாக்கலாமே என்ற அச்சம் அவருக்கு என்கிறார் ஜடாஃபியா.
மூன்று மாதங்கள் கழித்து, 2003 மார்ச்சில், புதுடில்லிக்கு அவரை மாற்றும் உத்திரவு ஃபாக்ஸ் மூலமாகக் கிடைத்த மறு நாளே ஹரேன் பாண்டியா கொலை செய்யப்பட்டார். குஜராத் போலீசாரும், சிபிஐயும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, லஷ்கர் ஏ டாய்பா மற்றும் துபாய் டான் தாவுத் இப்ராஹிம் இவர்களின் கூட்டு சதி பாண்டியாவின் கொலை என அறிவித்தன. 12 பேர் கைதானார்கள். ஆனால் எட்டாண்டுகள் கழித்து குஜராத் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது, வழக்கே மகா அபத்தம், விசாரணையை சொதப்பி விட்டிருக்கின்றனர், வேண்டுமென்றே சில பேரை மட்டுமே விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருக்கின்றனர். அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. பலர் தேவையில்லாமல் பெரும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். பொதுமக்கள் பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றனர் நீதிபதிகள்.
பாண்டியாவின் தந்தை வித்தல்பாய் தன் மகன் மோடியின் உத்திரவின் பேரில் கொல்லப்பட்டார் எனக் கூறி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டார். அவரது குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கலவரங்களுக்குப் பிறகு ஓராண்டுக் காலம் மாநில புலனாய்வுத்துறைத் தலைவராயிருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் ஹரேன் பாண்டியாவின் நடமாட்டங்கள் சந்திப்புக்கள் பற்றி தொடர்ந்து முதல்வர் அலுவலகம் தகவல் கேட்டது என்கிறார்.
ஜடாஃபியா கூறினார்: “மோடி தான் கொலைக்குப் பின்னணியில் இருந்தார் என நான் சொல்லவில்லை. அப்படி ஆதாரம் ஏதும் என்னிடமில்லை. ஆனால் மோடியை எதிர்ப்பவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுகிறது அல்லது அவர்கள் இறந்தே போகின்றனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.”
இது போக யார் யாரெல்லாம் பாண்டியா கொலை வழக்கு விசாரணை நடத்தியிருக்கின்றனர் பாருங்கள் : குஜராத் மாநில டைரக்டர் ஜெனரல் போலி என்கௌண்டர் புகழ் வன்ஜாரா, தற்போது சிறையில். சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்ட போது அதற்கு உதவ அனுப்பப்பட்டவர் அபய் சூடாசாமா, சோராபுத்தீன் மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்தது தொடர்பான வழக்கில் வன்ஜாராவுக்கு உடந்தை என்று கைதாயிருப்பவர். மோடிக்கு நெருக்கமானவரும் துணை உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் இயங்கிய மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலில் இருந்த இரண்டு அதிகாரிகளும் இருந்தனர் என்று கூறப்படுகிறது. போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி இப்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ஷா. ஒரு கட்டத்தில் குஜராத் பக்கமே தலை வைத்துப் படுக்காதீர்கள் என உத்திரவிட்டது உச்சநீதிமன்றம். அவர் தற்போது பா.ஜ.க.வின் உத்திரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளர்.
இஷ்ரத் ஜஹான் மற்றும் மூவர் கொல்லப்பட்ட வழக்கில் குஜராத் உயர் நீதி மன்றம் 2011 நவம்பரில் தீர்ப்பு வழங்கியது. கொல்லப்பட்ட நால்வரும் லஷ்கர் ஏ டாய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மோடியைக் கொல்லத் திட்டமிட்டிருந்தனர் என்பது போலீஸ் குற்றச்சாட்டு. ஆனால் அவர்களது குடும்பத்தினர் குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்தனர்.
இரு நீதிபதி அமர்வு மோதல் மரணம் போலியானது. மறுபடி வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்ப்பளித்தது.
எந்த அமைப்பு இந்த மறு விசாரணையை நடத்தலாம் என நீதிபதிகள் கேட்டபோது அட்வகேட் ஜெனரல் குஜராத் போலீசுக்கு இன்னுமொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரினார். இவ்வழக்கில் போலீசாரே குற்றவாளிகள். எனவே தேசிய அமைப்பு ஏதேனும் ஒன்று விசாரிக்கலாம் என கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக வாதாடிய வழக்கறிஞர் கூறினார்.
அட்வகேட் ஜெனரல் கடுமையாக எதிர்த்தும் இறுதியில் நீதிமன்றம் வழக்கு மறுவிசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தார்.
தவிரவும் உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில்தான் 2003-06க்கிடையே நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் 20 போலி மோதல் மரணங்கள் குறித்த விசாரணை மூன்று மாதங்களில் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என உத்திரவிட்டது. அமித் ஷா பிரச்சினை வேறு.
முன்னரெல்லாம் ஒவ்வொரு மோதல் மரணத்தையும் கொண்டாடுவார் மோடி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் பாராட்டுவார். 2007 டிசம்பரில், சோராபுத்தீன் கொலை குறித்து பரபரப்பாகப் பேசப்பட்ட நேரத்தில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோ-ரா-பு-த்தீன் என ஒவ்வொரு எழுத்தாக உரக்க உச்சரித்து தீனில் இழுக்கிறார் வேண்டுமென்றே அது முஸ்லீம் என்று சுட்டிக்காட்டுகிறாராம். “காங்கிரஸ்காரர்கள் மோடி சோராபுத்தீனைக் கொன்றுவிட்டார் என்கின்றனர்… நீங்கள் சொல்லுங்கள் என்ன செய்யலாம்?” என்கிறார். திரண்டிருந்த கூட்டம் கர்ஜிக்கிறது – “கொல்லுங்கள் கொல்லுங்கள் அவனை…”
செமினார் என்ற பிரபல இதழில் கலவரங்களுக்குப் பிறகு எழுதிய கட்டுரை ஒன்றில் உளவியலாளர் அஷீஷ் நந்தி 1980-களின் இறுதியில் மோடி சாதாரண பாஜக நிர்வாகியாக இருந்தபோது பேட்டி கண்டதை நினைவுகூர்ந்தார்.
நீண்ட நேரம் சென்றது அப்பேட்டி. உளவியல் ரீதியாக ஃபாசிஸ்ட்டுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நான் உணர்ந்தேன். கருத்தியல், நடத்தை, சிந்தனை ஓட்டம் இவற்றைவைத்து ஒருவரை ஃபாசிஸ்ட் என்று கணிக்கமுடியும்.. அப்படியே நான் அவரை வகைப்படுத்துகிறேன். நான் ஒன்றும் அவரை வசை பாடவில்லை.
பத்திரிக்கையாளர் ஆஷிஷ் நந்தி
யதேச்சாதிகார ஆளுமைகளை நீண்ட காலம் மருத்துவ ரீதியாக உளவியல் ரீதியாக ஆய்வு செய்து அடையாளம் காணப்பட்ட அனைத்து குணாதிசயங்களும் நரேந்திர மோடியிடம் ஒரு சேர குடிகொண்டிருக்கிறது. கடும் நிலைப்பாடுகள், எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்துவது, உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள, வன்முறையின் மீதொரு மோகம், தனக்கிருக்கும் தீவிர இலட்சியங்களையும் அச்சத்தையும் மறைப்பது, எல்லோரையும் சந்தேகிப்பது, தான் விரும்புவது வெறுப்பது எதுவாயிருந்தாலும் அதனை ஒரு வெறியுடனேயே செய்வது, இவையனைத்தையும் நான் அன்று மோடியிடம் கண்டேன். ஏதோ இந்தப் பிரபஞ்சமே இந்தியாவை எதிர்த்து சதி செய்வது போலவும் ஒவ்வொரு முஸ்லீமும் எதிர்கால பயங்கரவாதி என்பது போலவும் அவர் அன்று பேசியது இன்னமும் பசுமையாக என் நினைவிலிருக்கிறது.
இன்றோ அத்தகைய மதிப்பீடுகள் அபத்தமானவை. போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸின் கைக்கூலிகள், மோடியின் சாதனைகளின் விளைவாய் அவருக்குக் கிடைத்திருக்கும் செல்வாக்கைக் கண்டு பொறாமை என்பார்கள். அத்தகைய உளவியல் ரீதியான மதிப்பீடுகள் தவறா? சரியா? என்பது ஒரு புறமிருக்க, அப்படியான ஆய்வுகள் கேலிப்பொருளாக ஆகிவிட்டிருப்பதே மோடியின் வெற்றி.
ஓயாத பிரச்சாரங்களுக்கப்பால் மோடியின் சாதனைகள் மறுக்கவியலாதுதான். அவர் ஒரு சிறந்த நிர்வாகியே. அவருக்கு வேண்டியது அதிகாரம், பணமல்ல – ஊழலில் திளைக்கும், பலவீனமான, எதையும் உருப்படியாக செய்யமுடியாத நம் அரசியல்வாதிகளைக் கண்டு மனம் நொந்திருக்கும் மக்களுக்கு மோடி போன்றவர்கள் பெரும் ஆறுதல் அளிக்கின்றனர்.
தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் வென்றுவிட்டார். செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. நகர்ப்புறங்களில் குறிப்பாக அவரை கொண்டாடுகின்றனர்.
பயங்கரவாதிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றியது அவர்தான்… கடவுளின் கிருபை மோடிக்கிருக்கிறது. அவர் சொன்னால் நான் எவரையும் கொல்லத்துணிவேன்…. அவர் ஒரு உத்தம மனிதர். இப்படிப் புகழாரங்கள்.
அதே நேரம் அவரை கட்டோடு வெறுப்பவர்களும் பலர் இருக்கின்றனர். போற்றுவோர் கண்டனம் தெரிவிப்போர் இரு சாராருமே மோடியின் அதிகாரம் வானளாவியது, தான் நினைத்ததை செய்துமுடிக்க எந்த அளவுக்கும் அவர் செல்வார், சட்டங்கள் அல்லது நெறிமுறைகள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல என்றுதான் கருதுகின்றனர்.
மோடியே தன்னை அப்படித்தான் உருவகப்படுத்திக்கொள்கிறார் எனலாம். அருண் ஜேட்லி அவருக்கு மிக நெருக்கமானவர். மோடியிடம் எதைப் பற்றியும் விவாதிக்கும் சுதந்திரம் உரிமை ஜேட்லிக்கு உண்டு. அவரிடம் மோடி குறைப்பட்டுக்கொள்வாராம் – ”என்ன நீங்கள் எப்போது பார்த்தாலும் கான்ஸ்டிட்யூஷன் கான்ஸ்டிட்யூஷன் என்று படுத்துறீங்க…”
ஆனால் அவருக்கும் சட்டம் தலைவலியைக் கொடுக்கவே செய்கிறது. கடும் முயற்சிகளின் விளைவாய் ஊழல் புகார்களை சுயாதீனமாக விசாரிக்கக்கூடிய லோக் ஆயுக்தா ஒருவர் நியமிக்கப்பட எட்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த டிசம்பரில்தான் மோடி ஒத்துக்கொண்டார்.
தொழிலதிபர்களுக்கு அவர் அளித்திருக்கும் பல்வேறு சலுகைகள் – இன்னமும் இரகசியமாக வைக்கப்பட்டிருப்பவை – சட்டபூர்வமானதுதானா என்று ஆராய லோக் ஆயுக்தாவால் முடியும்.
மாற்றி மாற்றி சளைக்காமல் தொழிலதிபர்கள் தன்னைப் புகழ்வது மோடிக்குப் பிடித்திருக்கத்தான் வேண்டும். ஆனால் தேர்தல் நேரத்தில் தனக்கெதிராக சாதாரண மக்களைத் திருப்பி விட்டு விடுமோ என்ற அச்சம் மோடிக்கு உண்டு என்கின்றனர். ஆந்திராவின் தலைமை நிர்வாகி போல செயல்படுகிறார் என்று சொல்லிச் சொல்லி ஏற்றி விடப்பட்டு, முதலீடே தனது நிரந்தர வெற்றிக்கு உத்தரவாதம் என நினைத்து செயல்பட்டு, இறுதியில் படு தோல்வியை சந்தித்து, இன்னமும் மீளமுடியாமல் தவிக்கும் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு போல், தான் ஆகி விடுவோமோ என்ற கவலைகூட மோடிக்கு இருக்கலாம்.
ஒரு முன்னாள் முதல்வர் கூறுகிறார்…” மற்ற அரசியல்வாதிகள் தோல்வியை சந்திக்கத் தயாராயிருப்பார்கள்… தொடர்ந்து வெற்றி பெற்றே வந்தாலும் என்றேனும் ஒரு நாள் தோல்வி அடையக்கூடும் என்றும் அவர்களுக்குத் தெரியும். அதற்குத் தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்… ஆனால் மோடி அப்படி அல்ல… எப்போதும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும்… அத்தகைய அணுகுமுறை அவருக்கே நல்லதல்ல… ஏனெனில் தோல்வியை சந்திக்கும்போது சிறைக்குச் செல்லவும் நேரிடலாம்… அவருடைய செயல்பாடுகள் அப்படி… நான் மட்டும் நீண்ட நாட்கள் வாழ்ந்தேனானால் ஒன்று அவரை பிரதமராகப் பார்ப்பேன்… அல்லது சிறையில்தான்… இடைநிலை எதுவும் கிடையாது…”
ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் பெருமூச்சுவிட்டுக்கொண்டே சொன்னார்: மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள்போல… அதைக் கையால் எடுத்துப் போடவும் முடியாது…செருப்பால் அடிக்கவும் முடியாது !
கட்டுரை ஆசிரியர் : வினோத் ஜோஸ்.
நன்றி : தி கேரவன் மாத இதழ்
கட்டுரை ஆசிரியர் வினோத் கே ஜோஸ்
மொழியாக்கம் : த.நா.கோபாலன்
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
பல்வேறு பணிகள். கையில் வேறு சரியான அடி. இதன் மத்தியில் இந்த நீண்ட கட்டுரையை மொழிபெயர்ப்பதில் மிகுந்த உற்சாகமே. பல தகவல்கள் எனக்கும் புதிதுதான். 2012 மார்ச் மாதத்தில் வெளியான விநோத் ஜோசின் இந்த அற்புதமான ஆய்வுக் கட்டுரை மோடியைப் பற்றிப் புரிந்துகொள்ள மிக முக்கியமான ஒரு கருவி. உண்மையிலேயே மதச்சார்பின்மையில் நல்லிணக்கத்தில் அக்கறை கொண்டோர். இத் தமிழ் மொழிபெயர்ப்பை முழுவதுமாக தேர்தல் நேரத்தில் வெளியிட முன் வர வேண்டும். தமிழக இளைஞர்கள் மோடி மோகத்தில் இருக்கின்றனராம். அவர்களில் ஒரு சிலராவது தெரிந்து கொள்ளட்டுமே கோத்ரா நாயகனின் வேறு சில பரிமாணங்களை.
வழக்கம்போல் சவுக்காருக்கும் நன்றி.
ஃபாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் அனைவரும் இணைவோம்
த.நா.கோபாலன்.
மோடி கிட்டத்தட்ட அமைதிப்படை திரைப்படத்தில் வரும் அமாவாசை என்கிற நாகராஜ சோழன் எம்.ஏ என்பதையும், காவி உடையணிந்த ஹிட்லர் என்பதை உணர்த்துவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம். குஜராத் கலவரத்துக்காக மட்டும் மோடி எதிர்க்கப்பட வேண்டியவரல்ல. அவர் ஒரு கடைந்தெடுத்த ஃபாசிஸ்ட். இதை அவர் கட்சியினரே ஒப்புக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நபரிடம், இந்தியா ஒப்படைக்கப்படுவது எத்தகைய ஆபத்து என்பதை உணர்த்துவதும் இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் வெளி வந்த பிறகுதான், பெங்களுரைச் சேர்ந்த ஒரு பெண்ணை பின் தொடர குஜராத் மாநில காவல்துறை மற்றும் உளவுத்துறையை மோடி பயன்படுத்திய விவகாரம் வெளிவந்தது. இதுதான் மோடி.
அய்யா த.நா.கோபாலன் மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்தக் கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறார்.
கோபாலன் அய்யாவை நேரில் சந்தித்தபோது, பேருந்தில் கீழே விழுந்து கையில் அடிபட்டு விரல் வீங்கியிருந்தது. நேரில் பார்க்கும் வரை, அவர் கையில் அடிபட்டிருந்த விபரத்தை சொல்லவேயில்லை. இதை மொழிபெயர்க்க இயலுமா என்று கேட்டபோது, உடனடியாக ஒப்புக் கொண்டார். கையில் வலியோடு, வீக்கத்தையும் பொருட்படுத்தாமல் அவர் முழு கட்டுரையையும் மொழிபெயர்த்து அனுப்பினார்.
வலியை மறக்கச் செய்து, அவரை தொடர்ந்து பணியாற்றச் செய்த உத்வேகம் பரந்துபட்ட சமூகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் தீராத காதலையே உணர்த்துகிறது. அந்த காதல்தான் அவரையும், என்னையும், நம்மையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது.
பரந்துபட்ட சமூகத்தோடு நாம் கொண்டிருக்கும் காதலோடு தொடர்ந்து பயணிப்போம்.
அன்புடன்
சவுக்கு
Title of this article is apt but that scorpion is the need of the hour to protect that Idol. Remember BJP and Modi are the one’s supporting UCC!
MODI we need modi
PMK katchiya patthi oru katturai irukka.
Dear Savukku, All these abuses on modi are not new. Modi is facing all these, right from, 2002.
Never in history, so much effort has been put in to stop one man. This itself makes him more stronger. Answer to each and every accusation in these article can be given unless the people who keep sliging the mud ready to listen.
Today, this country need Modi. If modi loose, we will be the loosers, not him. This is my opinion.
Regards,
Vasudevan
Shocking but not surprised this man is dangerous than many put together. That is why many analysts in USA don’t approve of him. CIA may know about him much
More than what we know in India you can see how he is behaving and by sidelining all seniors including jaitely.
Even his spokespersons are so arrogant and abusive. He has picked them after all.
Amit shah looks scary and he is his right hand man
God save india
Your comment of “That is why many analysts in USA don’t approve of him. CIA may know about him much” is surprising.. do you expect USA government to give approval for INDIAN Leader??, do you expect the whole world wants India to grow??? pitty.. no doubt Mr.Modi has so many negative factors.. but in the current situation of our Nation which is ruined by Italian Mafia.. with well support of narrow minded self centered forces like Mulayam. Lallu, Mayavathi, Karunaidhi.. Sharad pawar.. we have no alternative other than Mr.Modi.. After all he can not damage India more than what the present Anti National mafia has done for the past 10 years..