திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள திரு.கே.பாஸ்கரன் ஐஏஎஸ் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
அவர் நிற்கும் பொசிஷனைப் பார்த்தால் அவருக்கு உட்காரும் இடத்தில் கட்டி இருப்பது போல தோன்றுகிறது. பாஸ்கர் சார், உடனே டாக்டர பார்த்து ட்ரீட்மெண்ட் எடுங்க சார். இப்படியே இருந்தா, கலெக்டர் ஆபீசுல பைல் எப்படி பாப்பீங்க ? கலெக்டருக்கு அருகே, கருணாநிதி கழிவு நீரகற்று வாரியத்தின் தலைவராக உள்ள, நித்தி என்கிற நித்தியானந்தம். இவர் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் உள்ள கழிப்பிடங்கள் அனைத்தும் சுத்தமாக பராமரிப்பு செய்யப் படும் என்று எதிர்ப்பார்கப் படுவதால், இவரது தேர்தல் களம், ஏராளமான எதிர்ப்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.