அன்பார்ந்த வாசகர்களே……
சவுக்கு தளத்தோடு தொடர்ந்து பயணித்து வந்த அன்பு உறவுகளே…….
சவுக்கு தளம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பல்வேறு வாசகர்கள் துடிதுடித்தனர். தொலைபேசியிலும் முகநூல் வழியாகவும் என்ன ஆயிற்று… ஏது ஆயிற்று என்று பதறினர். மின்னஞ்சல்கள் குவிந்தன.
ஆனால், எதிரிகளோ எக்காளமிட்டனர். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் கூத்தாடினர். யார் அந்த எதிரிகள் ? ஊழலில் திளைக்கும் உயர் உயர் அதிகாரிகள், ஊழலையே உண்டு உயிர்வாழும் அரசியல்வாதிகள், அதிகாரத்தை அள்ளி அள்ளிப் பருகும் மக்கள் விரோத சக்திகள், இவர்கள்தான்.
நீதிபதி சி.டி.செல்வம் ஒவ்வொரு வாரமும், இந்த வழக்கை பிரத்யேகமாக விசாரிக்கிறார். அரசுத் தலைமை வழக்கறிஞரை அழைத்து, இன்னும் ஏன் சவுக்கு முடக்கப்படவில்லை என்று கேள்விக்கணைகளை தொடுக்கிறார். சவுக்கு நடத்தும் நபரை ஏன் கைது செய்யவில்லை எனத் துளைத்தெடுக்கிறார்.
சவுக்கு தளம் உயிரைக் கொடுத்து உருவாக்கிய தளம். இந்த தளம் நடத்தியதற்காக பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நட்பின் அடிப்படையில் பத்து பைசா வாங்காமல், தளத்தை வடிவமைத்துக் கொடுத்த முருகைய்யன் 25 நாட்கள் சிறையில் இருந்தார். மேலும் 25 நாட்கள், பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வந்து கையெழுத்திட்டுச் செல்கிறார். எதற்காக? சவுக்கு தளத்தை வடிவமைத்துக் கொடுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக. அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய ஒரு நீதிபதி, ஒரு அப்பாவியை 25 நாட்கள் சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்தார். இப்படி பலரின் உழைப்பில் செயல்பட்டுக் கொண்டிருந்த தளம் அது.
இப்படி பாடுபட்டு உருவாக்கிய இத்தளத்தை ஒரு சி.டி.செல்வம் முடக்கி விட முடியுமா என்ன ?
கண்ணீர் விட்டே வளர்த்தோம் இப்பயிரை சர்வேசா…
கருகத் திருவுளமோ ????
சரி. பிரச்சினை சவுக்கு.நெட்டுடன் தானே? அதை மூடிவிட்டோம். இப்போது புதிய தளத்திற்குச் செல்கிறோம். எம் வீச்சு இன்னமும் கூடுதலாகும். நன்றி நீதியரசர் அவர்களே.
சவுக்கு தளம் தமிழில் மட்டும் உள்ளது. ஆங்கிலத்தில் இல்லையே என்ற வருத்தம் பலரால் பகிரப்பட்டுள்ளது. இனி ஆங்கிலம் மற்றும் தமிழில்.
அச்சமின்றி, முதலாளிகளின் நெருக்கடியின்றி, விளம்பரதாரர் மிரட்டலின்றி, எவ்வித சமரசமும் இன்றி, எப்போதும் போலவே செய்திகளை இப்போது புதுப் பொலிவுடன் வாசகர்களுக்கு தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்த புதிய முயற்சியில் சவுக்கோடு துணை நின்ற, தொடர்ந்து நிற்கவிருக்கும் பல்வேறு அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்களின் அன்பும் ஆதரவும்
எப்போதும் போல தொடரும்
என்ற நம்பிக்கையுடன்
சவுக்கு ஆசிரியர் குழு.
happy.always we are all with you .
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் .போராளிகளை வீழ்த்த முடியாது .
Best of Luck for your great service. Carry on.
Congrats My Dear Friends,Continue Your Rebel Workss
Best Wishes for a Safe & Pleasant Journey!!! We are all with you.
சகோதரா, உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்…உங்களுடன் எப்போதும் என்னைப்போன்ற பலர் உடனிருப்போம்….
எப்போதும் உங்களுக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருப்போம்…கவலைவேண்டாம்..
வாழ்த்துகள். .Welcome back..
ஆப்பு இப்போ யாருக்கு ஆனாலும் நீங்கள் உங்கள் தோழர்களோடு வந்ததும் புதிய எழுச்சியாக புத்தம் புதிய எழுச்சியாக இருக்க வாழ்த்துக்களுடன் உங்களோடு பயனிப்போம்
நீ கலக்கு சித்தப்பு!
உற்சாகம் இல்லாமல் தான், இணையத்தை திறந்தேன். அனால் மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்க வைத்துவிடீர்கள்.சுழழட்டும் சவுக்கு.
ராஜா
Welcome back, You are the Hero…Keep rocking…
வாழ்த்துக்கள் சவுக்கு ….
வாழ்த்துகள் !!! தொடரட்டும் உங்கள் பணி !!! மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள் !!!
வாழ்த்துக்கள்
Happy to hear this.welcome new savukku
Congrats Bro we are with you..:)
வாழ்த்துக்கள் சார் ,உங்கள் சேவை நாட்டுக்கு தேவை .
விருப்பம் தெரிவிக்கும் வசதி உள்ள முகநூல் பக்கம் போல் வடிவமைத்தால் இன்னும் கூடுதல் பலம் கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து.. வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள்
Welcome
வாழ்த்துகள்…
வாழ்த்துக்கள்…
Very good. I gave you the title India’s Julian Assange and Edward Snowden which was acknowledged by Business Standard in Feb 2014. Happy to see in a new avatar.
என் நம்பிக்கை பலித்தது …
தப்பு பண்றவனே திமிறிக்கிட்டு திறியுரப்போ, அந்த தப்ப வெளிச்சம் போட்டு காட்டும் சவுக்கு எப்டி அடங்கி போகும்…..
இனி எதிரிகளுக்கு டரியல் ஆரம்பம் ……
..சவுக்கை முடக்க நினைத்த முட்டாள்கள் டரியல் ஆகபோகிறார்கள்…
மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
Welcome back! Continue your service to the public without fear. The common man is with you.
Congrats…!!!
Hearty wishes. Have a great time ahead
வாழுத்துக்கள் சவுக்கு , தொடரட்டும் உங்கள் மக்கள் பணி.
வாழ்த்துகள்…
Congrats Savukku!. We are with you,
உங்கள் உறுதி பற்றித் தெரிந்த காரணத்தால் திரும்பவும் வருவீர்கள் என்று உள்ளுணர்வு கூறியது.. வந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்….
Bravo !!!
mikka makilcchi anna
Yesterday I was so sad and shared my regret wit my frnds. Infact I doubted myself if I can survive in this grt country being a honest person. You have been a grt inspiration to many. Welcome back! All the very best Savukku!
In a world full of corrupt junks….something soothes and heals our hearts…! Emotions pour out of yur words Murugan…LONG LIVE SAVUKKU…..!
வாழ்த்துகள் ! மாபெரும் வெற்றியடைய விரும்புகிறேன்
நேத்து சவுக்குதளத்தை மூடுகிறோம் என்றதும் சவுக்கு பேஸ்புக் அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து போடுகிறார்கள் என்றே நினைத்தேன். இப்போ தெரியுது அது நீங்கதான் என்று :p
மிண்டும் அழுகிறேன் இன்று மகிழ்ச்சியில் . மிக நன்று .
super….
Good News…… we with u always
Thotarattum savukkin vilaasal
சவுக்கிற்கு வாழ்த்து
Happy to hear. Continue your services.
Congratulations. All the Best.
வாங்க.. வாங்க..! கலக்குங்க…
Great News!
ஆயிரம் கைகள் மறைத்தாலும் சூரியன் மறையாது என்பதை போல ஆயிரம் செல்வங்கள் வந்தாலும் சவுக்கு தளத்தை தடை செய்ய முடியாது.
வாழ்க சவுக்கு. வளர்க ஊழல் எதிர்ப்பு.
That is Good
வாழ்த்துக்கள் 🙂