அன்பார்ந்த வாசகர்களே……
சவுக்கு தளத்தோடு தொடர்ந்து பயணித்து வந்த அன்பு உறவுகளே…….
சவுக்கு தளம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பல்வேறு வாசகர்கள் துடிதுடித்தனர். தொலைபேசியிலும் முகநூல் வழியாகவும் என்ன ஆயிற்று… ஏது ஆயிற்று என்று பதறினர். மின்னஞ்சல்கள் குவிந்தன.
ஆனால், எதிரிகளோ எக்காளமிட்டனர். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் கூத்தாடினர். யார் அந்த எதிரிகள் ? ஊழலில் திளைக்கும் உயர் உயர் அதிகாரிகள், ஊழலையே உண்டு உயிர்வாழும் அரசியல்வாதிகள், அதிகாரத்தை அள்ளி அள்ளிப் பருகும் மக்கள் விரோத சக்திகள், இவர்கள்தான்.
நீதிபதி சி.டி.செல்வம் ஒவ்வொரு வாரமும், இந்த வழக்கை பிரத்யேகமாக விசாரிக்கிறார். அரசுத் தலைமை வழக்கறிஞரை அழைத்து, இன்னும் ஏன் சவுக்கு முடக்கப்படவில்லை என்று கேள்விக்கணைகளை தொடுக்கிறார். சவுக்கு நடத்தும் நபரை ஏன் கைது செய்யவில்லை எனத் துளைத்தெடுக்கிறார்.
சவுக்கு தளம் உயிரைக் கொடுத்து உருவாக்கிய தளம். இந்த தளம் நடத்தியதற்காக பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நட்பின் அடிப்படையில் பத்து பைசா வாங்காமல், தளத்தை வடிவமைத்துக் கொடுத்த முருகைய்யன் 25 நாட்கள் சிறையில் இருந்தார். மேலும் 25 நாட்கள், பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வந்து கையெழுத்திட்டுச் செல்கிறார். எதற்காக? சவுக்கு தளத்தை வடிவமைத்துக் கொடுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக. அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய ஒரு நீதிபதி, ஒரு அப்பாவியை 25 நாட்கள் சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்தார். இப்படி பலரின் உழைப்பில் செயல்பட்டுக் கொண்டிருந்த தளம் அது.
இப்படி பாடுபட்டு உருவாக்கிய இத்தளத்தை ஒரு சி.டி.செல்வம் முடக்கி விட முடியுமா என்ன ?
கண்ணீர் விட்டே வளர்த்தோம் இப்பயிரை சர்வேசா…
கருகத் திருவுளமோ ????
சரி. பிரச்சினை சவுக்கு.நெட்டுடன் தானே? அதை மூடிவிட்டோம். இப்போது புதிய தளத்திற்குச் செல்கிறோம். எம் வீச்சு இன்னமும் கூடுதலாகும். நன்றி நீதியரசர் அவர்களே.
சவுக்கு தளம் தமிழில் மட்டும் உள்ளது. ஆங்கிலத்தில் இல்லையே என்ற வருத்தம் பலரால் பகிரப்பட்டுள்ளது. இனி ஆங்கிலம் மற்றும் தமிழில்.
அச்சமின்றி, முதலாளிகளின் நெருக்கடியின்றி, விளம்பரதாரர் மிரட்டலின்றி, எவ்வித சமரசமும் இன்றி, எப்போதும் போலவே செய்திகளை இப்போது புதுப் பொலிவுடன் வாசகர்களுக்கு தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்த புதிய முயற்சியில் சவுக்கோடு துணை நின்ற, தொடர்ந்து நிற்கவிருக்கும் பல்வேறு அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்களின் அன்பும் ஆதரவும்
எப்போதும் போல தொடரும்
என்ற நம்பிக்கையுடன்
சவுக்கு ஆசிரியர் குழு.
அதிகார வர்க்கத்தின் மீது சவுக்கடி தொடரட்டும் ,வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் !
நான் வாழும் காலத்தில் நான் அதிகபட்சமாக ஆச்சரியப்பட்ட ஒரு தைரியசாலி நீங்க தான். வாழ்த்துகள்.
வாழ்த்துகள் சவுக்காரே
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா கண்ணீர் விட்டல்லவா வளர்த்தோம்!
வீழ்வான் என்று நினைத்தாயோ!
நீதி அரசனே, என் சகோதரன் வீழ்வான் என்று நினைத்தாயோ!
இப்போது முன்னை விட அதிக பலமுள்ளதாக நிமிர்ந்து நிற்கும் சவுக்கு!
பனை மரம் போல் நிமிர்ந்து நிற்கும்!
உன்னைப்போல் ஒரு நாணலாக இல்லாமல்!
வாழ்த்துக்கள்
All the best Savukku, really shocked to see the website blocked.. I’ve already informed all my friend about your new avatar!! Keep going.. cleanse the society….
MRM from Riyadh, Saudi Arabia
OMG ! You are really great. At last we have been connected with Savukku again. Thanks a lot ! We wish you for the next bunch of challenges Mr. Savukku.
HEARTY WISHES WITH HAPPY TEARS !
Last time you got one crore
This time I wish you to get ten crore
HI
Happy to hear that savukku is back
Congrats
So when can we expect our tasmac tamil…
Savukku why can u do a survey about this election…
Salute for your right stand.
வாழ்த்துக்கள் நண்பரே
Please start a print medium publication, register SAVUKKU as a media. then let us see how C.T. Selvams can impose a ban.
Regards,
Hem
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பரே.
இன்னல் பல கடந்து வந்துள்ளமைக்கு நன்றி ..இப்படி வருவீர்கள் என்பதை நேற்றே எதிர்பார்த்தேன்..
you will always win boss,
வாழ்த்துக்கள்
கலக்குங்க… வாழ்த்துக்கள்
All the best but take care.
Welcome back savukku with full swing in tamil and english.
All the best!
KEEP ROCKING, WE ARE WITH YOU
Congrats Friend.
மனமார்ந்த வாழ்த்துக்கள் சவுக்கு!
சவுக்கு சொடுக்கட்டும் பணிசிறக்கட்டும்
It was expected….GOOD LUCK. We will be with U always
வாழ்த்துக்கள்…. 🙂
பனி சிறக்க வாழ்த்துகள்
சவுக்கு தளம் மூடப்பட்டது என்ற செய்தியைப்பார்த்த உடன் நான் சத்தியமாக கலங்க வில்லை…ஏனென்றல் இப்படி ஒன்று வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன்…சவுக்கு உங்கள் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன்…
Savukku Sir, When I came to knew about savukku was closed. I was so sad and disappointed . I was anxious and shared my disappointments to my friends and colleagues. I have learned from your life “a honest person cannot be survived easily in this corruption full of country and How difficult to survive in this corrupted society” You are the great, courageous and Honest person. I am very happy to Welcome you back!!! I am sure you will get lot more support than before. As much as I Can I will do promote your ideas and articles in my face book groups and in other social medias. I pray the almighty god to keep you healthy and strong . All the best Savukku Sir!!! Honorific word “Sir” really suits only to you.
All the Best … !
Wellcom nice come Fast
வாழ்த்துக்கள்….
ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் அடக்குமுறைக்கு அடங்காதீர்கள். நாங்கள் இருக்கிறோம் பின்னால்.
mikka makilcchi anna
Maapu vechitiyaee aapu.
Vaalga Valamudan
வாழ்த்துக்கள்….
Great Work ….
வாழ்த்துக்கள்.
Wish you all the best!
உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்…
Veezhvaenendru Ninaithaayo…….Hats Off…..
My wishes for great journalism
சோதனைகள் தான் நாம் எந்த தளத்தில் உறுதியாக நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் நேர்மையின் தளத்தில் நிமர்ந்த நன்னடை போட்டு வரும் சவுக்கு தோழர்களுக்கு என் வாழ்த்துகள்…
Welcome back bro
Great News !!!
வாழ்துக்கள்……. உங்க பணியில் என்னையும் இணைத்து கொள்ள விருப்பம் …..
வாழ்த்துக்கள் சகோதரா!