கடந்த வாரம் ஜுனியர் விகடனில் வெளிவந்துள்ள இந்தச் செய்தியை பாருங்கள்.
‘காதில் விழுந்தது கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான். ஜீரணிக்கவே சிரமமாக இருந்தது!” என்ற கழுகார்…
”எவ்வளவுதான் சத்தான புட்டிப்பால் வந்தாலும், தாய்ப் பாலுக்கு இணையாகாது என்பார்கள். உடல் ஆரோக்கியத்தையும் திடசக்தியையும் கூட்டிக்கொள்ள நினைக்கும் சிலர், தாய்மார்கள் சிலரை இதற்காகவே பசையான பணம் கொடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறார்களாம். தமிழகத்தின் வி.ஐ.பி. ஒருவர், இம்மாதிரியான மேனியாவில் சிக்கி இருக்கிறார். அதிகார மிரட்டலால் பல இளம் தாய்கள் அவஸ்தைப்படுவதாக ஒரு ஸோர்ஸ் சொன்னபோது, வேதனை வயிற்றைப் புரட்டியது” என்றபடி கழுகார் பறந்துவிட… நாம்தான் விக்கித்துச் சிலையாக நின்றோம்!
அந்த விஐபி யாரென்று தெரியவில்லை. ஆனால், அந்த விஐபி யாராக இருந்தாலும், மனித உருவில் உள்ள விலங்கு என்றே சொல்லத் தோன்றுகிறது. பணம் இருக்கும் திமிரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதை கொண்டு அலையும் அந்த விஐபியைப் பற்றி நினைத்தாலே அறுவறுப்பும், குமட்டலும் வருகிறது. இந்த விஐபி, எய்ட்ஸ் நோயை உண்டு பண்ணும் எச்ஐவி வைரஸை விட மிகக் கொடுமையான நபர்.
அந்த நபர் மனித உருவில் இருக்கும் மிருகம் என்றே சவுக்கு கருதுகிறது.
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
கலைஞர் உரை :
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.