We accordingly direct that in cases of sitting MPs and MLAs, who have charges framed against them under offences of the Representation of the People Act, the trials are concluded as speedy as possible and in no case later than one year from the date of framing of charges.
குற்றச்சாட்டுக்கள் வரையப்பட்ட காலத்திலிருந்து ஒரு ஆண்டுக்குள், அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும், முடிக்கப்பட வேண்டும். வழக்குகள் தினந்தோறும் நடத்தப்பட வேண்டும். தவிர்க்க இயலாத தாமதம் ஏற்பட்டால் தாமதத்துக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதி, தலைமை நீதிபதிக்கு இது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும். இதுதான் இந்த ஆண்டு மார்ச் 10 அன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா மற்றும் குரியன் ஜோசப் அளித்த இடைக்கால தீர்ப்பு.
திங்கட்கிழமை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் செல்லமேஸ்வர் அடங்கிய அமர்வு, பெங்களுரில் நடந்து வரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்று வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பு அளித்து உள்ளது.
இரண்டு செய்திகளும் முரணான செய்திகள் போலத் தோன்றலாம். உண்மைதான். ஜெயலலிதா வழக்கில் தடை விதித்துள்ள மனுவும் விசித்திரமானது. சொத்துக் குவிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங். சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரசு வழக்கறிஞரின் வாதங்கள் மற்றும், எதிரித் தரப்பு வாதங்கள், ஆகிய இரண்டும் முடிவடைந்ததும், தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்த நிலையில்தான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
பவானி சிங் மட்டுமே என் வழக்கில் வாதாடும் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்ற வினோதமான வழக்கை குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார். அந்த வழக்கையும், உச்சநீதிமன்றம் சிரமேற்கொண்டு விசாரித்து, ஜெயலலிதா கேட்ட பெட்ரோமாக்ஸ் லைட்தான் சிறந்தது. வேறு பந்தமெல்லாம் கிடையாது என்று தீர்ப்பளித்தது. அடுத்து, செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெற இருந்த நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு கொடுத்து, அவரையே தொடர்ந்து தீர்ப்பளிக்கச் செய்ய வேண்டும் என்று மற்றொரு விசித்திர வழக்கை தொடுத்தார் ஜெயலலிதா. அதையும் விசாரித்தார்கள் நீதி நாயகர்கள். பேரம் படியவில்லையோ என்னவோ… பாலகிருஷ்ணா எனக்கு பணி நீட்டிப்பு வேண்டாம் என்று கூறி விட்டார். அதனால் வேறு வழியில்லாமல், ஜெயலலிதாவின் விருப்பத்தை உச்ச நீதிமன்ற நீதி நாயகர்களால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது.
அதன் பிறகு, பெங்களுரு வழக்கில் இறுதி வாதங்கள் தொடங்க இருந்தது. தொடங்கும் நேரத்தில், பவானி சிங் “ரெஸ்பெக்டட் சார், அஸ் ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்” என்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றம் வர இயலாது என்று கூறினார். நீதிபதியும், இரண்டு முறை பொறுத்துப் பார்த்தார். மூன்றாவது நாள் அதே காரணத்தை கூறியதும், எரிச்சலடைந்த நீதிபதி, பவானி சிங்கின் ஒரு நாள் ஊதியமான 65 ஆயிரத்தை அபராதமாக விதித்தார். அப்போதும் சிங் வரவில்லை. மறுநாள் மீண்டும் ஒரு 65 ஆயிரத்தை அபராதமாக விதித்ததும், பவானி சிங் நீதிமன்றம் வந்தார். வந்து இரண்டு வார்த்தைகள் பேசி விட்டு, மயக்கமடைந்ததைப் போல உட்கார்ந்து கொள்வார். பிறகு, அவரது உதவியாளர் வாதிட்டார். தனக்கு 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றார் பவானி சிங். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா, பவானி சிங்கின் தகிடுதத்தங்கள் முழுமையையும் அறிந்து, விரிவான ஒரு தீர்ப்பை வழங்கினார்.
“இந்த வழக்கில் வாதங்கள் 02.08.2013 அன்று தொடங்கின. எதிரிகள் தரப்பில் வாதங்கள் 16.08.2013 அன்று முடிவடைந்தன. அரசுத் தரப்பு 23.08.2013 அன்று தொடங்கிய வாதங்கள் 27.08.2013 அன்று நின்று போயின. இந்த வழக்கு 27.08.2013 முதல் தினந்தோறும் தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், எத்தனையோ முறை தேதி வழங்கினாலும், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வாய்தா வாங்குகிறார். மருத்தவ சான்றிதழை அளிக்கிறார். மருத்துவ சான்று அளித்த மருத்துவரின் பெயரைக் கூறுமாறு நீதிமன்றம் கேட்டபோது, கடைசி வரை கொடுக்காமல் மறுத்துள்ளார். இதனால், ஒவ்வொரு முறையும், என்ன காரணத்தினாலோ, இந்த வழக்கை தாமதப்படுத்துவதில் மிகுந்த முனைப்பு காட்டுகிறார்.
நீதிமன்றத்தின் வழக்கு உத்தரவுகளை பார்வையிட்டதில், ஒவ்வொரு முறை இந்த வழக்கு முடியும் தருவாயை நெருங்கும்போது, இந்த வழக்கை விரைவாக முடிப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், நீதிமன்றத்தோடு ஒத்துழைக்காதது மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறையும், நீதிமன்றத்தோடு மோதும் போக்கை கடைபிடித்துள்ளது தெளிவாக தெரிய வருகிறது. மேலும், அவருக்கு நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் எண்ணம் துளியும் இல்லை என்பதும் தெரிய வருகிறது. இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் அரசு வழக்கறிஞரை நீதிமன்றத்தோடு ஒத்துழைக்க நெருக்கடி தந்தே ஆக வேண்டும் என்ற அசாதாரண சூழலில் வேறு வழியின்றி அவரை ஒத்துழைக்க வைக்க இந்த நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில், இந்த ஆணைக்கு தடை விதித்தாலோ, இந்த ஆணையை மாற்றினாலோ, இந்த வழக்கை விரைவாக முடிக்க நினைக்கும், நீதிபதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
மேலும், இந்த நீதிமன்ற குறிப்புகளைப் பார்வையிடுகையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், நேரில் ஆஜராகாமல், ஒவ்வொரு முறையும் மனுத்தாக்கல் செய்வதும், வாதங்களை தொடங்க விடாமல் தாமதப்படுத்துவதும், என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, அதன் மூலம், விசாரணை நீதிமன்றத்தை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான் 14.03.2014 அன்று ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது (65 ஆயிரம் அபராதம் விதித்த உத்தரவு) குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களாலும், அரசுத் தரப்பாலும், எந்த அளவுக்கு நீதிமன்றம் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது அந்த உத்தரவு மிக மிக தெளிவாக, எடுத்துரைக்கிறது. இந்த உத்தரவு மிக மிக நியாயமானதும், சரியானதும் ஆகும். இதன் காரணமாக, இந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை”
இந்த உத்தரவில் என்ன அய்யா தவறு ? ஒரு நீதிமன்றத்தில் மருத்துவ சான்றிதழ் தெரிவித்து விட்டு, அந்த மருத்துவரின் பெயரைக் கூட சொல்லாமல் மறைக்கும் ஒரு அயோக்கியனின் ஒரு நாள் ஊதியத்தை பிடிப்பதில் என்ன தவறு ? இந்த பவானி சிங், அரசுத் தரப்போடு கூட்டு சேர்ந்து கொண்டு, ஜெயலலிதாவை காப்பாற்றத் துடிக்கும் துடிப்பை நீதிமன்றம் தடை செய்தது நியாயமான காரியமா இல்லையா ? இதில் என்ன தவறு இருக்கிறது ? ஆனால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், பவானி சிங் செய்த மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் சவுஹான் ஆகியோர், சொத்துக் குவிப்பு வழக்கு நடத்துவதற்கு மூன்று வார காலம் தடை விதித்துள்ளனர். எதற்காகவென்றால், பவானி சிங் சிகிச்சை எடுக்க வேண்டுமாம்.
உச்சநீதிமன்றம் தன்னுடைய உத்தரவில், “மனுதாரர் (பவானி சிங்) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுதாரருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், அவர்தான் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்பதால், அவர் வேலையை வேறு யாரிடமும் வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிகிச்சை எடுக்க மூன்று வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மூன்று வார காலத்துக்கு பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குக்கு தடை விதிக்கிறோம். 28 ஏப்ரல் 2014 வரை இந்த தடை. 28 ஏப்ரல் 2014க்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்ந்து, தினந்தோறும் நடக்க வேண்டும். அப்போதும் பவானி சிங்குக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர் பெங்களுரு உயர் நீதிமன்றத்தை அணுகி வேறு அரசு வழக்கறிஞரை நியமிக்குமாறு நாங்கள் அவரை கேட்டுக் கொள்வோம்.”
இதுதான் அந்த உத்தரவு. பவானி சிங்கை விட்டால், ஒட்டு மொத்த கர்நாடக மாநிலத்தில் வேறு வழக்கறிஞர்களே இல்லையா ? இவர் மட்டும்தான் சட்டம் பயின்றவரா ? அப்படியா யாருமே இல்லாமல் போய் விட்டார்கள் ? உடம்பு சரியில்லாத கழுதைக்கு நீதிமன்றத்தில் என்ன வேலை ? மருத்துவமனையில் படுத்து சிகிச்சை எடுக்க வேண்டியதுதானே ? இது ஒரு புறம் இருக்கட்டும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஒரு வாதத்துக்காக சரி என்றே ஏற்றுக்கொள்வோம். இந்த உத்தரவின்படி, மூன்று வாரங்கள் கழித்து பவானி சிங் ஆஜராக வேண்டும். அப்படி இல்லையென்றால், வேறு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்துக்குத்தானே உத்தரவு போட்டிருக்க வேண்டும் ? அந்த தீர்ப்பின் வாசகங்களை கவனமாக பாருங்கள். ” அப்போதும் பவானி சிங்குக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர் பெங்களுரு உயர் நீதிமன்றத்தை அணுகி வேறு அரசு வழக்கறிஞரை நியமிக்குமாறு நாங்கள் அவரை கேட்டுக் கொள்வோம்”. மூன்று வாரங்களில் பவானி சிங்குக்கு உடல் நிலை சரியில்லை என்றால், வேறு வழக்கறிஞரை கர்நாடக உயர்நீதிமன்றம் நியமித்து, இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்றுதானே உத்தரவிட்டிருக்க வேண்டும் ?
இதில்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தந்திரம் அடங்கி இருக்கிறது. மூன்று வாரங்கள் கழித்து இந்த வழக்கு மீண்டும் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வரும். அப்போது, பவானி சிங், உட்காரும் இடத்தில் கட்டி என்று ஒரு புது மனுவை தாக்கல் செய்வார். உட்காரும் இடத்தில் கட்டியோடு ஒரு வழக்கறிஞரை வாதாடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, மனித உரிமை மீறலாகும். அந்த கட்டி சரியாகும் வரை, சிறப்பு நீதிமன்றம் காத்திருக்க வேண்டும். கட்டியின் தற்போதைய வளர்ச்சி அல்லது கிளர்ச்சி குறித்து, கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர், எங்கள் முன்னால் ஒரு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கட்டி சரியாகும் வரை, வழக்கை கட்டி வைக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு போடுவார்கள்.
இதற்காகத்தான் இந்த வழக்கை நிலுவையில் வைத்திருக்கின்றனர் செல்லமேஸ்வர் மற்றும் சவுகான் ஆகிய நீதியரசர்கள். இந்த அமர்வில் மூத்த நீதிபதியான சவுகான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு நெருக்கமோ நெருக்கம். அவர் என்ன சொன்னாலும் செய்வார். மற்றொரு நீதிபதியான செல்லமேஸ்வரின் பெயரும், உச்சநீதிமன்றத்தில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த பிரகஸ்பதிகள்தான், தடை விதித்து தீர்ப்பெழுதியுள்ளனர்.
பவானி சிங்குக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது குறித்து, வரலாற்றை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம்.
1996ல், ஜெயலலிதா அரசு படுதோல்வியடைந்ததை அடுத்து, மத்திய அரசும் மாநில அரசும் மள மளவென்று ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் வழக்குகளை தொடுத்தன. முதன் முதலாக வழக்கில் சிக்கியவர், அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த ஆதிராஜாராம். வழக்கறிஞர் விஜயனை வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்தார். அந்த வழக்கை மாநில புலனாய்வுத் துறை விசாரித்ததும், குற்றவாளிகள் பிடிக்கப்படவேயில்லை. உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதும், வழக்கு சூடு பிடித்தது. ஆதி ராஜாராம் மீது பிடிவாரண்ட் போடப்பட்டது. உடனடியாக ஆதிராஜாராம், மருத்துவமனையில் நெஞ்சு வலி என்ற அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு எப்போது வேண்டுமானாலும் நெஞ்சு வலி வரலாம். ஆனால், அது பரிசோதனையில் தெரியாது என்று கூறினார்.
அமலாக்கப்பிரிவால் அடுத்து கைது செய்யப்பட்டவர், மன்னார்குடி மாஃபியாவைச் சேர்ந்த டிடிவி.பாஸ்கரன். இவரை கைது செய்து, சிறையில் அடைக்க செல்லும் வழியிலேயே நெஞ்சு வலி என்றார். அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதும், உடனடியாக ஏ.சி அறையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் இருந்த அறையில், வண்ணத் தொலைக்காட்சி, வீடியோ கேசட் ப்ளேயர் ஆகியவை வழங்கப்பட்டன. அவருக்கு செல்போனும் வழங்கப்பட்டது. தினந்தோறும் பல்வேறு பார்வையாளர்கள் அவரை பார்த்துச் சென்றனர். ஆனால் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றதும், மருத்தவர்கள், அவர் உடல் நிலை சரியில்லை என்று கூறி, அவரை பார்க்க அனுமதி மறுத்தனர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றம் சென்று விசாரிக்க உத்தரவு பெற்று வந்தனர். அதிகாரிகள் வந்த போது, பாஸ்கரன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அடுத்தது உடன்பிறவா சகோதரி சசிகலா. 2 ஜனவரி அன்று சசிகலா கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. சிறையிலிருந்து அவர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் அவரது நோய்க்கு சிகிச்சை அளிக்க, போதுமான வசதிகள் இல்லையென்று கூறி, அப்போல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஜுன் 1997ல் அவர் நீதிமன்றத்துக்கு வரத் தவறினார். அவர் வழக்கறிஞர்கள், சசிகலாவால் நடக்கவே முடியாது என்று கூறினர். நீதிபதியோ, இந்தக் கதையெல்லாம் கூறாதீர்கள். அடுத்த வாய்தாவுக்கு வந்தே தீர வேண்டும். வரவில்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன் என்றார். ஜுன் 25 1997 அன்று, ஆம்புலன்ஸில் வந்து, இரண்டு செவிலியர்கள் புடைசூழ, நீதிமன்றத்தின் உள்ளே ஸ்ட்ரெச்சரில் வந்தார் சசிகலா. கையில் க்ளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. நீதிபதி சம்பந்தம், நான் நீதிபதி என்பது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். நீதிபதி பேசுவதையே புரியாதது போல பார்த்துக் கொண்டிருந்தார் சசிகலா. எரிச்சலான நீதிபதி, உடனடியாக சசிகலாவை அப்படியே அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். பயந்து போன சசிகலா, நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது என்றார். அரசு மருத்துவர் குழு சசிகலாவை பரிசோதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி. சசிகலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நல்ல ஆரோக்யத்துடன், சரியான மனநிலையில் இருக்கிறார் என்று சான்றளித்தனர். அதன் பிறகு, நீதிமன்றத்துக்கு வரும்போதெல்லாம் வீல் சேரில்தான் வருவார் சசிகலா. சசிகலாவை நீதிமன்றத்துக்கு வரும்படி கட்டாயப்படுத்திய நீதிபதியின் பெயர் சம்பந்தம். இந்த சம்பந்தம்தான், மேயர் சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளையின் சட்ட ஆலோசகராக அவர் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது (சின்னம்மா… நோட் பண்ணுங்கம்மா)
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்போது கடைபிடித்த உத்தியை தற்போது அரசு வழக்கறிஞர் கடைபிடித்து வருகிறார். இதே வழக்கில் பிறப்பிக்கப்பட்ட மற்றொரு உத்தரவும் விவாதிக்கப்பட வேண்டியது.
கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கிய ஒரு தீர்ப்பு ஒரு ஊழல் வழக்கின் போக்கையே திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலோ, அல்லது மற்ற வழக்குகளிலோ, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கையிலோ, அல்லது அதற்கு முன்னதாகவோ, அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை நீதிமன்றத்தில் இணைத்து உத்தரவு பிறப்பிப்பார்கள். அந்த உத்தரவு எதற்காகவென்றால், வழக்கு முடிவதற்குள், சம்பந்தப்பட்டவர், சொத்தை விற்று விடக்கூடாது என்பதற்காக. ஜாபர் சேட் மீது தொடரப்பட்ட வழக்கில் கூட, அவர் வாங்கிய வீட்டு மனைக்கு இணைப்பாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த இணைப்பாணையை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமோ, அல்லது, அந்த சொத்து இருக்கும் இடத்தில் உள்ள நீதிமன்றமோ பிறப்பிக்கலாம். இப்படி ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த 22 நிறுவனங்களின் சொத்துக்களுக்கு இணைப்பாணை பிறப்பித்திருந்தது, இந்த இணைப்பாணை பிறப்பிக்கப்பட்ட ஆண்டு 2000. இதன் பிறகு, 2003ம் ஆண்டில், இந்த வழக்கை தமிழகத்திலிருந்து பெங்களுருக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது பின்னால் நடந்தது. 2000ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்துத்தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள் ஜெயலலிதா உள்ளிட்டோர்.
ஒரு வழக்கு, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, அது தொடர்பான வழக்குகுளை, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் முறை. இதுதான் இந்திய நீதித்துறை நடைமுறை. ஆனால், வழக்கு பெங்களுருக்கு மாற்றப்பட்ட பின்னரும், நீதிபதி அருணா ஜெகதீசன், இந்த வழக்கை எடுத்து விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதன் பின்னணியில் இருப்பவர், தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சதீஷ் அக்னிஹோத்ரி. இவர் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி, முதலில், நீதிபதி தேவதாஸிடம் கேட்டுக் கொண்டதாகவும், அவர் மறுக்கவே, நீதிபதி அருணா ஜெகதீசனிடம் வழக்கை அனுப்பி வைத்ததாகவும் கூறுகின்றன நீதிமன்ற வட்டாரங்கள்.
நீதிபதி அருணா ஜெகதீசன் மாவட்ட நீதிபதியாக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியானவர் அவர் கணவர் ஜெகதீசனும் வழக்கறிஞர். இவர் எளிமையானவர். எளிமையானவர் என்றதும், பந்தா பகட்டையெல்லாம் விரும்பாதவர் என்று நினைத்து விடாதீர்கள். எளிதில் அணுகக் கூடிய நீதிபதி என்றே இவருக்கு உயர்நீதிமன்றத்தில் பெயர். இவரை அணுக, வழக்கறிஞரான இவர் கணவர் ஜெகதீசனை அணுகினால் போதுமானது. இவர் மாவட்ட நீதிபதியா இருந்தபபோது, இவரின் கட்டுப்பாட்டில் உள்ள நடுவர் நீதிமன்றங்களில், இவர் கணவர் ஏதாவது ஒரு வழக்குக்காக சென்றால், உடனே அருணா ஜெகதீசன், சம்பந்தப்பட்ட நடுவரை அழைத்து, “இன்னைக்கு சார் வருவார். பாத்துக்கங்க” என்று கூறுவார். அதாவது என்னவென்றால், ஜெகதீசன் கேட்கும் உத்தரவை அந்த நடுவர் பிறப்பிக்க வேண்டும். தவறியவர்களின் வருடாந்திர ரகசிய அறிக்கையில் மோசமான குறிப்புகள் அருணா ஜெகதீசனால் எழுதப்படும். அப்படி மீறும் துணிச்சல் உள்ள நடுவர்கள் ஒருவர் கூட கிடையாது என்பதுதான் யதார்த்தம்.
சரி. விஷயத்துக்கு வருவோம். நீதிபதி அருணா ஜெகதீசன் 22 நிறுவனங்களின் சொத்துக்களை இணைத்த உத்தரவை ரத்து செய்ததோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. இணைக்கப்பட்ட இந்த சொத்துக்களின் சொந்தக்காரர்கள், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களா, இல்லையா என்பதே தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதற்குப் பெயர் என்ன தெரியுமா ? அதிகப்பிரசங்கித்தனம். சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள சொத்துக்கள், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்களா இல்லையா என்பதை, பல்வேறு சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் மூலம் விசாரணை செய்து கொண்டிருப்பது பெங்களுரு சிறப்பு நீதிமன்றம். சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், இந்த விவகாரத்துக்குள் செல்வதற்கு உயர்நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால், ஜெயலலிதாவுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பித்துள்ளார் அருணா ஜெகதீசன்.
இந்த வழக்கில் மற்றொரு சிறப்பு நடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர்தான் பவானி சிங். அவர்தான் அருணா ஜெகதீசன் நீதிபதி முன்பாக ஆஜராகி வாதாடியிருக்க வேண்டும். ஆனால், அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர் யார் தெரியுமா ? அதிமுக வழக்கறிஞர்களில் ஒருவராக வழக்கறிஞர் இன்பதுரை. அதிமுக அடிமைகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இன்பதுரையும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்பதுரை உறுப்பினராக இருக்கும் ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளருக்கு எதிரான வழக்கில், அந்தக் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரே அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி, இவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு நீதிபதி அந்த வழக்கை விசாரிக்கும் வேடிக்கையை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ? அந்த வேடிக்கை ஜெயலலிதாவின் வழக்கில் நடந்துள்ளது. இப்படியொரு தீர்ப்பை வழங்கியதோடு நிற்கவில்லை நீதிபதி அருணா ஜெகதீசன். இந்தத் தீர்ப்பை பத்திரிக்கைகளுக்கு வழங்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் பத்திரிக்கையாளர்கள், இந்தத் தீர்ப்பை முழுமையாக கையால் எழுதி செய்தி வெளியிட்டனர். டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தியாளர் சுப்பிரமணி மட்டுமே சிறப்பான முறையில் செய்தி வெளியிட்டிருந்தார். மற்ற ஊடகங்கள் இதைத் தொட்டும் தொடாமலும் விட்டு விட்டன.
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, அதில் 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு நீண்ட நெடிய பாதையில் பயணித்துக் கொண்டே இருக்கிறது. இந்தப் பாதை எங்கே செல்லும் என்பது தெரியவேயில்லை.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இப்படி முடிவில்லாமல் பயணிப்பதற்கான முழுக் காரணமும், நீதித்துறையில் நிலவும் ஊழல் மட்டுமே. ஒரு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா போன்ற நபர்களால், ஒரு வழக்கை 17 ஆண்டுகள் இழுத்தடிக்க முடிகிறதென்றால், ஜெயலலிதாவை விட அதிக பணமும் அதிகாரமும் படைத்த அரசியல்வாதிகள் என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள் ?
1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு விஏஓவை இரண்டு ஆண்டுகளில் தண்டிக்கும் நீதிமன்றங்கள், 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்த ஒரு அரசியல்வாதியை 17 ஆண்டுகள் காப்பாற்றுகின்றன.
இப்படிப்பட்ட நீதித்துறையை விமர்சிக்கத்தான் இந்தியாவில் எந்த ஊடகமும் இல்லை. நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதத்தை கையில் வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். அப்படியும் மீறி ஓரிருவர் எழுதினால், எழுதியவன் மீது பொய் வழக்கு போட்டு, இரண்டு மாதமாக ஜாமீன் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். அப்படி எழுதப்படும் இணையதளத்தை முடக்குவதில் முனைப்பு காட்டுகிறார்கள். மேலும் பல்வேறு வழக்குகள் பாயும் என்று மிரட்டுகிறார்கள்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ற அத்தனை பேரும் ஊடகங்களாலும், பொதுமக்களாலும் விமர்சிக்கப்படுகையில், இவர்களுக்கு மட்டும் எதற்காக இப்படியொரு சலுகை ? வானத்திலிருந்து குதித்தவர்களா இவர்கள் ?
Be ye never so high, the law is above you என்றார் லார்ட் டென்னிங்.
அதற்கு நீதிபதிகள் மட்டும் விதிவிலக்கா என்ன ?
திராவிடர் இயக்கத்தை ,கருணாநிதியை பற்றி மட்டும் அவதூறாகவும் எழுதி பார்ப்பன பத்திரிக்கைகளுக்கும் பா.ஜ.க சங்பரிவாரங்களுக்கும் பாய்ன்ட் எடுத்துக் கொடுகாதீர்கள். பார்ப்பனர்கள், பார்ப்பன பத்திரிக்கைள் ஊழல் குறித்தோ ஈழ விவாகரத்தில் தமிழர்கள் மீது அக்கரையோடு கருணாநியை விமர்சித்தும் குறை கூறியும் எழுதவில்லை திராவிட இயக்கத்தின் குறியீடாகத்தான் பார்க்கிறார்கள் பா.ஜ.க ஆட்சியிலும் 2ஜி அளவிற்கு பெரிய ஊழல் நடந்துள்ளதையும் எழுதுங்கள். கருணாநிதியையும் அவரது குடும்பத்தாரையும் பின்னி பெடெலெடுக்கிற நீங்கள் ஜெயலலிதாவைபற்றி ஆளுங்கட்சி என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகவே தெரிகிறது..
இது தான் உண்மை இந்த பயம் தான் ஜெ. வை விமர்சிக்கும் போது மட்டும் பட்டும் படாமல் எளிமையாக விமர்சிப்பார்கள். உண்மையில் கருணனனிதியை விட அதிகமாக ஸைலென்ட் கில்லர் என்பார்களே அது மாதிரியான ஊழல் பஞ்ச பூதங்களையும் தாண்டி ஜெ. செய்து வருகிற தில்லாலங்கடி சவுக்கின் கண்ணுக்கு தெரியவில்லை போலும் . ஆனால் கருணாநிதி பற்றி வாய்யெல்லாம் பல்லாக இனிக்க இனிக்க விமர்சிப்பது சவுக்கின் ஒர வஞ்சனை தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஜெ இன் சொத்து இன்றைய மதிப்பு https://twitter.com/THIRAVIDAKALAI/status/452701004752908288
அது போல 2g ஊழல் என்பது ஒரு மாயை என்பது போன்ற முழு கட்டுரை ஓன்று தயாராகி கொண்டிருக்கிறது வெளியிடுவீர்களா https://www.youtube.com/watch?v=_rJyFijp_tk
எம.ஜி ஆர் பற்றி ஒரு பழைய கண்ணதாசன் எழுதிய நூல் உள்ளது இதை வேண்டுமானால் படித்து அவரை பற்றி ஒரு கட்டுரை எழுதுவீர்களா லிங்க் இதோ https://twitter.com/Ottapaanai/status/454889440955994112
நீங்கள் ஒரு விஷயத்தை இன்னும் தெளிவாக தர மறுக்கிறீர்கள் கலைஞர் பற்றி இவ்வளவு விரிவாக அலசும் நீங்கள் ஜெ பற்றியும் அவரது பழைய வழக்குகள் பற்றியும் சொல்லவில்லையே ஏன் பயமா ??பிரபாகரனை கைது செய்து தூக்கில் போடுவோம் என்று சொன்ன வாய் இன்று சட்ட சபையில் நீலி கண்ணீர் வடிக்கிறதே அது மட்டும் என்ன நியாயம் ?? புரியவில்லையே சசிகலாவை வெளியில் அனுப்பி விட்டு மீண்டும் சேர்த்தது.. மன்னார்குடி கும்பலை வளர விட்டது. நூறு கோடிக்கு வளர்ப்பு மகன் திருமணம். அதே வளர்ப்பு மகனை கஞ்சா கேசில் சிறைக்கு அனுப்பியது. செரீனா என்று பெண்ணின் மீது கஞ்சா கேஸ் போட்டது. விடுதலைபுலிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னது. எஸ்மா, டெஸ்மா சட்டம் கொண்டு வந்து அரசு ஊழியர்களை சிறையில் அடைத்தது. பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டது. வாஜ்பாய் அரசை கவிழ்த்தது. ப.சிதம்பரம் மீது தாக்குதல் நடத்தியது. சந்திரலேகா என்கிற பெண் மீது ஆசிட் அடித்தது.சண்முகசுந்தரம் என்கிற வக்கீலை செருப்பால் அடித்தது. எம்.கே.பாலன் முதல் ராமஜெயம் வரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்காமல் இருப்பது. வேளாண்மை கல்லூரி மாணவிகளை உயிரோடு கொளுத்தியது . போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று அரிய தத்துவத்தை உதித்தது மகாமக குளத்தில் ஜெயா குளிப்பதை காண வந்த முந்நூறு பேர் மரணம் அடைந்தது. மின் வெட்டை சீர் செய்ய முடியாமல் சதா மத்திய அரசையே குறை சொல்வது. விலைவாசி உயர்வை பற்றி கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் இருப்பது.. ராஜீவ் கொலை வழக்கில் இரட்டை வேடம் போடுவது டான்சி ஊழல், கொடைக்காணல் பிலசன்ட்ஸ்டே ஹோட்டல் ஊழல், 9 கோடி கலர் டிவி ஊழல் , 200 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் ,வருமான வரி ஏய்ப்பு வழக்கு,200 கோடி ஸ்பிக் முதலீட்டு வழக்கு, 77 கோடி ரூபா,டிட்கோ முதலீட்டு பத்திர வழக்கு, 10 கோடி பரிசு பொருள் வழக்கு, 6 கோடி திராட்சை தோட்ட வழக்கு ,12 கோடி விளம்பர நிறுவன மோசடி வழக்கு ,200 கோடி கிரானைட் ஊழல் வழக்கு,18 கோடி வருமான வரி ஏய்ப்பு வழக்கு, 2 கோடி வெளிநாட்டு செக் நன்கொடை வழக்கு இப்பிடி 12 க்கும் அதிகமான ஊழல் வழக்குகளில் சிக்கிய ஜெ ஒவ்வொரு வழக்கிலும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி உருட்டி மிரட்டி இன்னும் பல சொல்ல முடியாத அளவிலான வேலைகளின் மூலமே 10 வழக்கிலி இருந்து விடுபட்டு உள்ளார்… இதை எல்லாம் பற்றி சொன்னால் ஒரு புக்கே போடலாம். ஆனால் கருணாநிதி ஐ மட்டும் வம்புக்கு இழுப்பது ஓரவஞ்சனை ..யார் மிக மோசமானவர் என்று பார்த்தால் அது ஜெ என்பது குழந்தைகள் கூட சொல்லும் ….
சவுக்கு கட்டுரைகளை படித்து விட்டுப் பேசுங்கள்.
welcome savukku
welcome savukku.
அறிவிலும், ஆற்றலிலும், சிந்தனையிலும், தைரியத்திலும் சிறந்து விளங்கும் பெண்மணியான ஜெயலலிதா அவர்கள் மட்டும் இந்த மாபியா கும்பலை தன்னுடன் சேர்த்தாமல், தமிழகத்திற்காக நியாயமாகவும், உண்மையாகவும் மக்கள் நலனுக்காக உழைத்திருந்தால் இன்றைக்கு தமிழகம் எவ்வளவோ முன்னேறி இருக்கும். அவரை அம்மா என்ற அழைக்கும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் இருந்திருக்கும்.
ஆனால், பணம், வளம், பதவி என்று இந்த சசிகலா மாபியா கும்பல் அவரை குறுகிய வழியில் அழைத்து சென்றதினால் தானும் சீரழிந்து, தம்மை நம்பிய நாட்டையும் சீரழித்து, இன்றைக்கு வழக்கு வாய்தா என்று அலைந்து கொண்டு இருக்கிறார்.
இரு தனி பெண்மணிகளுக்கு எதுக்குயா இவ்வளவு கோடி சொத்து? இந்த கேள்விக்கு பதில் கிடைக்காம என் மண்ட காஞ்சி போச்சியா. யாராவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா.
Excellent article! Corruption in the Judiciary is not being exposed. The current order of the SC to gag reporting related rape charges against SC judges is a good example. Why different rules for the Judiciary and the common and uncommon man?
Why are you deleted my comment…. what ever you think you can write that is your right but my single comment you can not resist…,
Hello Savukku
is this not applicable to Chidambaram. all election related case to finished within 5 years period and why Chidambaram case is only extended and still going on?? what was the reason?? if anybody speaks slowly with more lie then they are secular / 100% genuine??? is that way?????
Welcome back.
please let me know how to register in your site
nandri nalla arumai yana sethi …
பொய் வழக்கு இழக்கதான் செய்யும்
பொய் என்றால் அம்மையார் தனது அதிகார பயனில் சரிகட்டி இருப்பாரே 13 வழக்கு களில் தில்லாலங்கடி திருபுர சுந்தரி வேலை செய்து 10 வழக்குகளிலும் விடுபட்டார். அவர் ஆண்ட இரண்டு முறை முதல்வர் பதவியையும் வழக்கு களில் எப்பிடி விடுபடலாம் என்று சிந்திப்பது மூலமே தமிழ் நாட்டில் ஒரு திட்டமும் கடந்த 2 முறை முதல்வராகி இருந்த ஜெ. வால் செய்யமுடியாமல் போனது. காரணம் கடந்த 10 வருஷங்களும் இப்பிடியே வேஸ்ட் பண்ணியபின் இப்ப உள்ள 3 வழக்குகளும் அப்பிடி திள்ளலன்கடி வேலை செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஜெ பிரதமர் கனவில் மிதந்து வந்தார். அதனால் தான் இந்த 200 வாய்தா இப்போது புரிகிறதா பெங்களுரு வழக்கு சொத்து குவிப்பு என்பது அம்மா பேரில் உள்ள அசையும் அசையா சொத்து அடிப்படையில் ஆனது அது இல்லை என்று அம்மா வால் மறுக்க முடியாததால் தான் இத்தனை வருஷமாக வழக்கு வாய்தா ஆகி உள்ளது.ஊழல் நடக்க வில்லையென்றால் தைரியமாக வழக்கை எதிர் கொள்ள வேண்டியது தானே. நீங்கள் தான் புரட்சி சிங்கம் ஆச்சே .அம்மா மீது உள்ள ஊழலும் அப்போதைய அம்மா வின் மந்திரிகள் மீது உள்ள ஊழல் இலவச வேட்டி சேலை சத்து உணவு ஊழல் சுடுகாட்டு ஊழல் போக்குவரத்து ஊழல் டான்சி ஊழல் என்று எத்தனை செய்தார்கள் நம் மீது முதுகிலே ஆயிரம் வண்டி அழுக்கு எதிரே உள்ளவன் முதுகை பார்த்து கேலி செய்தானாம் ஒருத்தன் .. இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா….
அருமையான கட்டுரை. உண்மையில் இந்தியாவில் உங்கள் தளம் தவிர வேறு எந்த தளமும் பத்திரிக்கைகளும் இவ்வளவு
துணிச்சலாக எழுதுவதற்கு அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்று நான் அடித்து கூறுவேன் . பணபலம் அதிகார பலம் இருந்தால் இந்தியாவில் யாரும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நமது சட்டங்கள் ஓட்டியாக இருக்கிறது. பாவம் மக்கள் ஊடகங்களில் மற்றும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் உண்மை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீதித்துறையில் இவ்வளவு கேவலமான ஊழல்கள் நிறைந்திருந்தால் நமது நாடு வரும் 2015 லேயே வல்லரசு ஆகிவிடும்.