#மக்கழே. இந்த வார்த்தை இந்தத் தேர்தலில் மிக மிக பிரபலமான ஒரு வார்த்தை. இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர், டைட்டானிக் கப்பலின் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் டைட்டானிக் கப்பல் போல மூழ்கப் போகிறாரா… அல்லது, டைட்டானிக்கில் இருக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தினரான வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி, பிஜேபி, பச்சமுத்து உடையார் மற்றும் ஏ.சி.சண்முகம் முதலியாரை கரை சேர்க்கப் போகிறாரா என்பது மே 16 அன்று தெரியும்.
இரண்டு பெரிய கட்சிகள் பற்றி எழுதியாகிவிட்டது. அடுத்து யாரைப் பற்றி. கேப்டன் தானே. இந்தியா முழுவதும் மோடியின் முகமுடியை போட்டுக் கொண்டு பாரதிய ஜனதா நடமாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அந்த அணியை கரையேற்ற வந்த கேப்டன் நான்தான் என்று விஜயகாந்த் தன்னை நினைத்துக் கொண்டு இருக்கிறார். மற்றவர்களுக்கும் அப்படியே காட்டிக் கொண்டு இருக்கிறார்.
காங்கிரஸ் தன்னுடைய கடந்த காலத் தவறுகளால் காலாவதியாகிப் போய் இருக்கிறது. இடதுசாரிகள் மிகவும் பலவீனமான நிலையில் சிறிய வட்டத்திற்குள் முடக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் கோஷம் சுரத்தில்லாமல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. வைகோவின் தாரை தப்படைகளின் சுருதி குறைந்துவிட்டது. இரு பெரிய திராவிடக் கட்சிகளும் நம்மை ஏமாற்றி விட்டனவே என மக்கள் நொந்து கொண்டிருக்கையில் உருவானதுதான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்.
1996ல் மன்னார்குடி மாஃபியாவின் ஆட்டத்தில் மக்கள் கதிகலங்கியிருந்த நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் மட்டும் அரசியலுக்கு வர ஒத்துக் கொண்டு, காங்கிரசை ஆதரிக்கவும் முன்வந்திருந்தால், நரசிம்மராவ் தனித்துப் போட்டியிட ஒத்துக்கொண்டிருப்பார். தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியே உருவாகி இருக்காது. ஆனால், அப்போது ரஜினிகாந்த் பின் வாங்க, மூப்பனார் வெளியேற, மற்றவை வரலாறு.
மிகப் பெரிய அளவில் ரஜினிக்கு செல்வாக்கிருந்தும் அவர் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவர் அப்படி ஒரு வேளை அரசியலுக்கு வந்து இருந்தால், இந்த அமைப்பில் இருந்து கொண்டு, உருப்படியாக ஏதாவது செய்திருப்பாரா இல்லையா என்று நம்மால் சொல்லமுடியாவிட்டாலும், நிச்சயமாக அவர் தான் தோன்றித்தனமாக, அடாவடித்தனமாக நடந்து கொண்டிருக்கமாட்டார். அந்த அளவில் அரசியல் சற்றுப் பொறுத்துக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கோ திரைப்படங்களில் ஈட்டியதை தேர்தல்களில் விட்டுவிடுவோமோ என்ற அச்சம். ஒதுங்கிவிட்டார். அதனால் தமிழகத்திற்கு ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. ஆனால், கொள்ளை லாபம் ஒருவருக்கு கிடைத்தது. அந்த லாபத்தை ஈட்டியவர் ‘கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் கேப்டன்.
பெரிய அளவில் விஜயகாந்த் வெற்றிப் படங்களைக் கொடுத்து விடவில்லை. ஒரு வெள்ளிவிழா படம் கொடுத்தால், பத்து படம் ஊற்றிக்கொள்ளும். ஆனால் பி அண்ட் சி செண்டர்களில், சிறு நகரங்களில், கிராமங்களில் அவரது அடிதடி ஸ்டைலுக்கு ஒரு மவுசு இருந்ததை மறுக்க முடியாது. ரஜினி பின்வாங்கிய சூழலில், திராவிடக்கட்சிகள் மீதான வெறுப்பினைப் பயன்படுத்திக் கொள்ள ஓரளவு செல்வாக்குடைய எவராலும் முடியும் என்று சரியாகக் கணித்தே 2000-க்குப் பிறகு அரசியலில் காலடி எடுத்துவைக்கிறார் விஜயகாந்த். இப்போது குறிப்பிடத் தகுந்த தலைவராகவும் ஆகிவிட்டார்.
ஆனால் அவரது குணாதிசயங்கள், நடத்தை எதுவும் அவரைப் பொதுவாழ்வுக்கு ஏற்றவராகக் காட்டவில்லை. தனிப்பட்ட முறையில் மிக மோசமாக பலரிடம் நடந்துகொண்டிருக்கிறார் அவர்.
நகமும் சதையுமாக இருந்த இப்ராஹீம் ராவுத்தரும் விஜயகாந்த்தும் எப்படிப் பிரிந்தனர் ? இப்போது ராவுத்தர் அ.இ.தி.மு.க.வில் இருக்கிறார், நன்றி இல்லாதவர் கேப்டன் என்கிறார்.
விஜயகாந்தின் அண்ணன் பால்ராஜும் புலம்பிப் புலம்பி, இறுதியில் அவரும் அஇஅதிமுகவில் சங்கமித்துவிட்டார். ஏதாவது உதவி அங்கே கிடைக்காதா என்ற நப்பாசையில்.
”விஜயகாந்த் ஊருக்கே உதவி செய்றதா பேப்பர்ல வருது.. அது உண்மைன்னா அவரோட சொந்த தம்பி, தங்கைகள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்யலாமே? நாங்க அவருகிட்ட உதவி கேட்டு ஓஞ்சு போயிட்டோம். சாகப்போற காலத்துல இனி அவரே வந்து உதவி பண்ண நினைச்சாலும் அது எங்களுக்கு வேண்டாம். கண்ணதாசன் எப்பவோ எழுதுன பாட்டு.. ஆனா இன்னைக்கும் அதுதான் உண்மையா இருக்கு.. அதான் சார்.. ‘அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகத்துலே..’” என்கிறார் விஜயகாந்தின் அண்ணன் பால்ராஜ்.
ஏதோ காரணங்களுக்காக மனைவியை விட்டுப் பிரிந்து, அவரை பரிதவிக்கவிட்டு, இதுவரை அவரை மனைவி என்று ஏற்றுக்கொள்ளவும் மறுத்து வந்த நரேந்திர மோடியுடன் சரியாகவே கூட்டு சேர்ந்திருக்கிறார் விஜயகாந்த்.
சொந்த வாழ்வில் நேர்மையற்று, மிக நெருக்கமானவர்களுக்குக் கூட எவ்வித உதவியும் செய்ய மறுக்கும் விஜயகாந்த் போன்றோர் நெஞ்சில் ஈரமிருக்கும் என நினைப்பதே அறிவீனம்.
இவரது மகன்களில் ஒருவனுக்கு நாய் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு. அவர் வளர்க்கும் நாய்கள் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. ஐரோப்பாவிலிருந்து பல இலட்ச ரூபாய் செலவில் மிக அரிதான நாயினங்களை இறக்குமதி செய்கின்றனர். ஆனால் வறுமையில் வாடும் சொந்த சகோதரருக்கு உதவி செய்யமாட்டார். இவர்தான் நாட்டு மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்போகிறார்.
பண்ருட்டி இராமச்சந்திரனைத் தேடிப்பிடித்து அழைத்து வந்து அரசியல் ஆலோசகராக அவரை வெளியுலகுக்குக் காண்பித்துவிட்டு, பிறகு அவரை எல்லா வழிகளிலும் அவமானப்படுத்தி கட்சியை விட்டு வெளியேறச் செய்தார்.
திருச்சியில் ஒரு தொண்டரை பகிரங்கமாகவே அறைந்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மைக் சரியாக வேலை செய்யவில்லை என்று சினந்து அருகில் இருந்த உதவியாளர் பார்த்தசாரதியைத் தலையில் ஓங்கிக்குட்டியதை நான் பார்த்திருக்கிறேன்.
அந்த அளவு அகங்காரம். வெள்ளித் திரையில் வேண்டுமானால் ஹீரோ. ஒரே அடியில் பத்து பேரை வீழ்த்தலாம் .நிஜ வாழ்க்கையில் அப்படியெல்லாம் நடந்துவிடாது. வருது வருது, விலகு விலகு, இந்தப் பாணியெல்லாம் ஜனநாயகத்தில் சரிப்பட்டு வராது என்பதை அவர் உணரவே இல்லை. சட்டமன்றத்தில் கூட நாக்கைத் துருத்திக்கொண்டு முதல்வருடன் மோத, அவர் கேலிப்பொருளானார். யாரும் அவரது துணிச்சலைப் பாராட்டிவிடவில்லை.
தீவுத்திடலில் தேமுதிக மாநாடு ஒன்று முடிந்து மக்கள் திரும்பிக்கொண்டிருக்கையில், விஜயகாந்தின் இரு மகன்களும் பயணித்த காருக்கு வழிவிடுமாறு அல்லக்கைகள் செய்த அலப்பறை இன்று நினைத்தாலும் பகீரென்கிறது. யாரோ ஒருவராவது சக்கரத்திற்கடியில் மாட்டப்போகிறார், சிலராவது தள்ளுமுள்ளில் காயமடையப்போகின்றனர் என்று பதறும் அளவு ஆர்ப்பரிப்பும் மிரட்டலும் அன்று.
ஜெ., மு.க., மம்தா, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் இப்படிப் பல தலைவர்களும் ஒவ்வொரு வகையில் இறுமாப்புடன் நடந்துகொள்வர். அவர்களை அணுகுவது மிகக் கடினம். கையில் கிடைத்ததை வீசி எறியும் பழக்கம் கூட பலருக்கு உண்டு.
ஆனால் இன்னமும் பெரிய அளவில் தனது செல்வாக்கை நிரூபிக்கமுடியாத விஜயகாந்த் இப்போதே இவ்வளவு ஆட்டம் ஆடுகிறார். அவர் கனவு காண்பதுபோல் முதல்வராகிவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் ?
அதாவது தாங்கவே முடியாத, தாங்கக்கூடாத ஒரு நபர் விஜயகாந்தென்றால் அது மிகையாகாது.
உளுந்தூர்பேட்டை ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் விஜயகாந்த் நகைச்சுவை
அவரது கொள்கை புடலங்காயெல்லாம் ஒரு புறமிருக்கட்டும் எப்படி கட்சியை நடத்துகிறார். அவரிடமிருந்து விலகிப்போகும் ஒவ்வொருவரும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அவரது தம்பி சுதீஷ் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மோடியை நாம் ஏதாவது கேட்கமுடிகிறதா, அல்லது ஜெவை? , அதே வரிசையில்தான் இவர்.
குடும்ப அரசியலில், நான் எந்த திராவிடக் கட்சிக்கும் சளைத்தவன் இல்லை என்பதையே விஜயகாந்த் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். கட்சியின் பெயரில் திராவிடத்தை வைத்துக் கொண்டிருப்பதாலோ என்னவோ, கருணாநிதியை விட மோசமாகவே இந்த விஷயத்தில் நடந்து கொள்கிறார் விஜயகாந்த். கட்சியில் மனைவி மற்றும் மைத்துனரைத் தாண்டி, வேறு ஒருவருக்குமே அதிகாரம் இல்லை என்பதே இன்றைய நிலை. கூட்டணி பேச்சுவார்தைகளில் கூட, மைத்துனரும் மனைவியும் மட்டுமே முடிவெடுத்தனர். கடந்த தேர்தல் போல இந்தத் தேர்தலில் சிறுமைப்பட வேண்டாம் என்று நினைத்தே பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்தலுக்கு முன்பாகவே விலகினார்.
தேர்தலில் நிற்பதும் புறக்கணிப்பதும் கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டல்ல சொந்த லாபத்திற்காகவே ஒவ்வொரு முறையும் பேரம் பேசுகிறார் என எல்லோருமே பேசும் அளவு கட்சி தொடங்கி ஏழெட்டு ஆண்டுகளிலேயே பெயரைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார். தொகுதியையாவது கவனித்துக்கொள்கிறாரா என்றால் அதுவுமில்லை.
இப்ராஹிம் ராவுத்தர் சுட்டிக்காட்டுகிறார். அவர் எம்.எல்.ஏ வா இருக்குற ரிஷிவந்தியம் தொகுதி ‘’தானே’’ புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில்தானே இருக்குது..? இருந்தும் அவர் ‘’தானே புயலுக்காக அம்மக்களுக்கு என்ன செஞ்சார்..? நிவாரண உதவிகளை செய்யறேன்னுட்டு புறப்பட்டு போனவரு, மூணு போர்வையையும், நாலு பேர்க்கு அடியையும் கொடுத்துட்டு திரும்பி வந்துட்டாரு..வேற எதையும் அவர் செஞ்ச மாதிரி தெரியலையே.. அவரை எப்படி மக்கள் தலைவனா ஏத்துக்க முடியும் ?”
சரி இவரது கட்சி குறிப்பிடத் தகுந்த அளவாவது வளர்ந்திருக்கிறதென்றால் அதன் காரணமென்ன? ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 5,000 வாக்குக்களாவது வாங்கிவிடுவார் என்ற கணிப்பு, ஏதோ வாங்கவும் செய்தார் இரண்டு தேர்தல்களில். ஏன் இப்படியெல்லாம் ? அப்போதிருந்த அரசியல் சூழல் காரணமாக, காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்றே சொல்ல வேண்டும். 1991ல், ராஜீவ் காந்தி இறக்காமல் இருந்திருந்தால், இன்று பொன்மனச் செல்வி இப்படியொரு தலைவியாக உருவெடுத்திருப்பாரா என்பது கேள்விக்குறியே. அதே போலத்தான் மக்கழ் தலைவரின் நிலையும்.
காங்கிரசிற்கு மாற்றாக உருவான திராவிட இயக்கங்கள் திவாலாகிப்போயின, மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன, இடதுசாரிக் கட்சிகள் அந்த வெற்றிடத்தை நிரப்பமுடியவில்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என நிர்க்கதியாய் அலையும் வாக்காளர்களும் மாறி மாறி ஒவ்வொரு திசையில் அலைபாய்கின்றனர், அவ்வளவுதான்.
விஜயகாந்துக்கு 2011 தேர்தலில் கிடைத்த வெற்றி, திமுக எதிர்ப்பு ஓட்டு என்பதை புரிந்து கொள்ளத் தவறி விட்டார். அது தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்குக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறார். அவர் எப்போதாவது நிலையிலிருந்தாலல்லவா உண்மை விளங்கும்? போதையில் சட்டமன்றத்திற்கு வருவதாக முதல்வர் ஜெ. சாடியது அருவருப்பாக இருந்தது என்றாலும் கூட, மது அருந்தாமல் பிரச்சாரத்திற்கு அவர் வருவதே இல்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
அரசியல்வாதிகள் பலர் மது அருந்துகின்றனர்தாம். எல்லோருக்குமே தெரிந்த விஷயம் அது. ஆனால் அந்தப் பழக்கத்தை வெட்டவெளிக்கு எடுத்துக் கொண்டு வந்தவர் கேப்டன் தான். அப் பழக்கத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துக்கொண்டு சென்று மிகத் தவறான முன்னுதாரணமாகிவிட்டார்
பத்திரிக்கையாளர்களிடம் விஜயகாந்த் நடந்து கொள்வதைப் போல, தமிழகத்தில் எந்த தலைவரும் இது வரை நடந்து கொண்டதில்லை. கேள்விக்கு பதில் சொல்லாமல், “குதர்க்கமா கேள்வி கேட்காதய்யா… நீ ஜெயா டிவி தானே… ?” என்று வாய்க்கு வந்தபடி திட்டுவது, அடிக்கப் பாய்வது, இதெல்லாம் விஜயகாந்த் எவ்விதப் பக்குவமும் இல்லை என்பதையே காட்டுகிறது.
ரிப்போர்ட்டரை அடிக்கப் பாயும் விஜயகாந்த்
அவர் பேசும் பொதுக்கூட்டங்களில் அவர் தொண்டர்களை நடத்தும் முறை அருவருப்பை ஏற்படுத்துகிறது. “ஏய்.. சத்தம் போடாதடா… வாயை மூடுடா… நான் அங்க எறங்கி வருவேன்.. வந்தா அவ்வளவுதான். கத்தறவன் ஏடிஎம்கே… டாஸ்மாக்குக்கு போயிட்டு இங்க வந்துருக்கான்” என்று இவர் செய்வது காமெடியாக இருந்தாலும், இது வரை எந்த அரசியல் கட்சித் தலைவரும் இதை மேடையில் செய்ததில்லை. பொதுக்கூட்டங்கள் என்ன தியான மண்டபங்களா, அல்லது நூலகங்களா…. ஒவ்வொரு தொண்டரும் கத்தத்தான் செய்வான். தலைவரே குடித்து விட்டு வருகையில், தொண்டன் குடிக்காமலா வருவான். கத்தத்தான் செய்வான். ஆனால், விஜயகாந்துக்கோ ஆக்ஷன் என்று இயக்குநர் சொன்னதும் ஏற்படும் அமைதி போல தான் மைக்கைப் பிடித்ததும் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறார். திமுக பொதுக்கூட்டத்தில் கத்தாத தொண்டர்களா ? திருமாவளவன் கூட்டங்களில் கத்தாத தொண்டர்களா ? ஒரு சாதாரண பொதுக்கூட்டத்தை நடத்தத் தெரியாதவர், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.
ஒரு கட்சித் தலைவனாக வளர்ந்து விட்டோம். கொஞ்சமாவது பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த முனைப்பும் விஜயகாந்திடம் இல்லை. வெளிப்படையாகவே “நான் கொஞ்சம் முன்ன பின்னதான் பேசுவேன். நீங்க பாத்து எழுதிக்கங்க” என்று கூறுகிறார். திமுகவில் ஒரு வட்டச் செயலாளர் கூட இவ்வளவு மோசமாக பேசுவதில்லை. எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதே தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்.
விஜயகாந்த் தன் கட்சியை நடத்துவது, அதிமுகவை விட மிக மிக கேவலமாக இருக்கிறது என்பதையே, அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.
இந்நிலையில் அவருக்கென்று எந்த விதமான வாக்கு வங்கியிருக்கிறது என்று சரியாகச் சொல்ல இயலவில்லை. அவர் சார்ந்த ரெட்டியார்/நாயக்கர் சமூக வாக்குகள், அவரது இரசிகர் கூட்டம், தலித் அமைப்புக்கள் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் என்று சில பிரிவினரை அடையாளப்படுத்தலாம்தான். ஆனால் அவர்கள் எத்தனை இலட்சம் வாக்காளர்களாக இருக்கக்கூடும் என்பதை துல்லியமாகக் கணக்கிட்டுவிடமுடியாது. அவரது செல்வாக்கு அவரது நடத்தையின் காரணமாக சரிந்திக்கிருதென்றே கருதப்படுகிறது.
இந்நிலையில்தான் மேடைக்கு மேடை விஜயகாந்த் மோடியின் பெயரை உச்சரிக்கிறார், மோடியை குஜராத்தின் பெரியார் என்றே அழைக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும் அளவு கிராமப் புறங்களில் மோடியைப் பற்றி மக்கள் அறிந்திருக்காத நிலையில் இவர் இப்படிப் பேசிப் பேசி மோடியின் ஆளுமையை கட்டமைக்கிறார். அது தமிழ்ச் சமூகத்திற்கு விஜயகாந்த் செய்யும் பெரும் துரோகம்.
தனக்கென்று கொள்கையோ, கோட்பாடுகளோ இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் விஜயகாந்த் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். இந்தத் தேர்தலில் கூட, இறுதி வரை கூட்டணி பற்றிய நிலைப்பாட்டை அறிவிக்காமல், ஒரு புறம் திமுகவோடும், இன்னொரு புறம் காங்கிரஸோடும், மற்றொரு புறம் பிஜேபியோடும் கூட்டணி பேச்சுவார்தைகளை நடத்திக் கொண்டிருந்தார். ஆட்சி அஸ்தமனம் ஆகும் சூழலில் இருந்த மன்மோகன் சிங்கை சந்தித்து, தமிழகத்தின் நலன்கள் குறித்துப் பேசினேன் என்று விஜயகாந்த் கூறியதுதான் வேடிக்கையின் உச்சம். இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் பணம் இருந்தது என்பது மட்டுமே அரசியல் நோக்கர்களின் கருத்து. ஆனால், விஜயகாந்தோ, உளுந்தூர் பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்துகிறார்.
சட்டப்பேரவையில் ஆகட்டும், பேரவைக்கு வெளியே ஆகட்டும், எந்த மக்கள் பிரச்சினைக்காகவும், விஜயகாந்தோ, எந்த போராட்டமும் நடத்தியதாக தெரியவில்லை. ஒரு கட்சியில் இருந்து ஒரு எம்எல்ஏவோ, இரண்டு எம்எல்ஏவோ வேறு கட்சிக்கு தாவுவது இயல்பான விஷயம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒன்பது எம்.எல்.ஏக்கள் அவரிடமிருந்து பிரிந்து சென்றிருக்கிறார்கள் என்பது உதாசீனப்படுத்தும் விஷயம் அல்ல. இது உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். குறை விஜயகாந்திடம்தான் இருக்கிறது என்பதே.
இப்படிப்பட்ட ஒரு தலைவருக்கா வாக்களிக்கப் போகிறீர்கள் மக்கழே ?
ஆக்கம் : த.நா.கோபாலன் மற்றும் சவுக்கு
Ok..we can remove vijayakkanth….then whom we are going to select Corruption MK and JAYA, Padhavi asai piditha – Aam Adami party or Ellariyum kudika solligara SEEMAN aa.
Vijayakkanth padika vilaya endralum…………Nalla Manathu irrukirathu.Neenga solluvathu ellam entha evidencum illa…..Summa Annanuku seiyla appuram thambiku seiylanu sollurathu ellam summa…entha avanga personal matter…..
Vijayakkanth oru etharthamana act…. panna theriyatha manithar…..
//திமுகவில் ஒரு வட்டச் செயலாளர் கூட இவ்வளவு மோசமாக பேசுவதில்லை. //
Pesi pesi thaan nammaku nammam pottanka…
Nanga kuda eppadi sollalam…..
Neenga seeman and AAP party ku support panni thaan eluthuringa….SEEMAN enna Elai pennai ya kalyanam seitharu….
Why AAP party get support from Congress to form government in delhi.
You don’t like modi..that is the reason you start blaming vijayakkanth…….
சற்று முன்பு தான் விஜயகாந்த் பிரச்சாரம் வில்லிவக்காம் தொகுதியில் நேரில் முதல் முறையா கண்டேன். அவர் ஒரு கட்சி தலைவர் போல் பேசவில்லை ஏதோ வட்ட செயல்ளார் மாதிரி பேசுறாரு. செம்ம காமடி போங்க!
விளங்கிடும்.
வடி வேலு சொன்ன மாதிரி தாண்ணியில கப்பல் ஓட்டுறவன் தான் கேப்டன்.எப்பவும் தண்ணியில இருக்குற ஆளுக்கு எப்படி கேப்டன்னு பேரு வந்துச்சு?,இந்த வார்த்தைய பயன் படுத்தகூடாதுன்னு யாராச்சும் தடை வாங்ககூடாதா?
Amma Jalra 🙂
ஐயா என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். கொள்ளை அடிபதுதான் இன்று உள்ள மோசமான கொடுமை. விலை வாசி ஏற்றத்திற்கு கரணம் அரசியல் வாதிகள் லட்ச கணக்கான கொடிகளை கொள்ளை அடித்ததுதான். விஜயகாந்த் கொள்ளை அடிக்காமல் நல்லது செய்ய முடிந்தால் நல்லதுதானே.
மக்களே எனத் திருத்துங்கள்.
அவரு உச்சரிப்பை சவுக்கு அப்படியே எழுதியுள்ளது.அதனை முதலில் கவனியுங்கள் சவுக்கு தவறாக எழுதவில்லை.
I like Vijayakanth for the stupid comedy that he does on stage, so i dont want him to be wiped out but should exist with a vote share of 4-5%. If there is one leader who has become the biggest comedy piece ever in the history of TN politics, its Vijayakanth…
போதையில் உளறினாலும் இவரது யதார்த்தமான பேச்சு ரசிக்க கூடியதாக உள்ளது என்பதை நிறைய நபர்கள் சொல்ல கேள்விபட்டு இருக்கிறேன் . இருப்பினும் பரவலாக உள்ள இவரது ஓட்டு வங்கி சிலமுடிவுகளை தீர்மானிக்ககூடியது என்பதை மறுபதற்கில்லை .
அருமை மிக, அருமை ஐயா!
சவுக்கு மற்றும் கோபாலன் ஐயா அவர்களுக்கு நன்றி !!
போதை (விஜய)காந்த் பற்றி தெளிவாக உண்மையை சொன்னீர்கள்
கொஞ்சமாவது “போதை”காந்தின் அடிமைகள் இந்த உண்மையை புரிஞ்சுக்கணும் .
இந்த விசயங்களை போதை காந்தின் அடிமைகளிடம் அவர்கள் “தெளிவாக” இருக்கும் பொழுது சவுக்கு நண்பர்கள் கூற வேண்டும் ..
அந்த அடிமைகளும் அவர்கள் தலைவன் போல “தெளிவாக” இருக்கும் நேரம் குறைவு தான் ..கொஞ்சம் முயற்சி பண்ணுங்க மக்கழே!!
என்ன செய்வீர்களா !! செய்வீர்களா !!
tnvoice தெரிவித்துள்ள விருப்பம் உடனடியாக நிறைவேறினால் தமிழ்ச்சமூகம் நலம் பெறும். முயன்று பாருங்கள் தோழர்களே.
ivanellaam…. mmmmm ennatha sollaa
I do not agree with your points in this artile (this shows your descrimination). There are multiple politicians in tamil nadu with the worst quality and worse behavior.
You have no guts to write about them.
For your information, there are previous articles criticizing Karunanidhi (http://savukku.in/5752) and Jayalalitha(http://savukku.in/5748), please do not write without reading the other articles.
He has guts to write even about Modi, jayalalitha, Karunanidhi etc…
so please do not bluff “You have no guts to write about them.” he has written even about the corruption in judiciary.
காமராஜர், எம்ஜீஆர், கருணாநிதி ஆகியோர் பெரிய அளவுக்கு படித்தவர்கள் அல்ல. விஜயகாந்தும் அப்படியே.
ஆனால் காமராஜரிடம் சிந்தனை, மனித நேயம், பண்பு, பொறுமை, கட்டுப்பாடு ஆகியவைகள் நிறையவே இருந்தன.
எம்ஜீஆர் சினிமா நடிகனாக இருந்ததால் நிறைய மக்கள் செல்வாக்கு எம்ஜீஆருக்கு இருந்தது. அதேபோல அளவுக்கதிகமாக பெண் மோகமும் அது சம்பந்தமாக பலருடன் முரண்படவேண்டிய சூழலும் இருந்தது ஆனாலும் மனிதாபிமானம் ஏழைகளுக்கு உதவும் விருப்பமும் இருந்தது. சொத்து சேர்க்கும் பேராசை எம்ஜீஆரிடம் இருக்கவில்லை.
கருணாநிதிக்கு கட்டுக்கடங்காமல் அனைத்து ஆசைகளும் இருந்தன, அதே நேரத்தில் தந்தரமும் சூதும் வஞ்சகமும் ஏமாற்றும் திறனும் கருணாநிதியின் இரத்தத்தில் இரண்டறக்கலந்திருந்தது, அதே நேரத்தில் கருணாநிதியிடம் அபார ஞாபகசக்தி, பாவனை, கற்பனா சக்தி,பேச்சுத்திறன் இருந்தது. கருணாநிதி இன்றைக்கு வீழ்ந்து நிலமட்டத்தில் கிடந்தாலும் அவை இன்னும் இருக்கிறது.
ஆனால் விஜயகாந்திடம் சினிமா நடிகன் இன்ற பிம்பம்தவிர வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒன்றுமில்லாத கண்ணாடி குவளை சிலகாலங்களுக்கு பகட்டாக இருக்கமுடியும் எதற்கும் உதவாதென்று வெளிவட்டாரங்களால் அறியப்படும்போது தூக்கி வீசப்படும் அப்போது விழும் இடத்தைப்பொறுத்து விதி தீர்மானத்தை எழுதும்.
விஜயகாந்தும் சராசரி மனிதன் என்பதால் தற்போது இருக்கும் செல்வாக்கை தக்க வைப்பது சரிய விடுவது அவரது அறிவு பொறுத்த விடயம்.அவருக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது அவ்வளவே.
‘தீதும் நன்றும் பிறர் தரவாரா”
SUPER THALAIVA…
நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் ஆனால் இந்த kuttachattai finland denmark newzland போன்ற நாடுகளில் உள்ள தலைவர்களை பார்த்து சொன்னால் சரி ஆனால் இங்கு அனைவரும் ஊழல் வாதிகள் எனக்கு விஜயகாந்த்தின் நேர்மை புடித்து இருக்கிறது அவளவுதான்.
why should he help his brother and relatives? Don’t you think every one has right to choose whom to help.
சொந்த வாழ்வில் நேர்மையற்று, மிக நெருக்கமானவர்களுக்குக் கூட எவ்வித உதவியும் செய்ய மறுக்கும் விஜயகாந்த் போன்றோர் நெஞ்சில் ஈரமிருக்கும் என நினைப்பதே அறிவீனம்.
What kind of stupidity you see in this? I don’t see any.
May be, you have to raise the same questions about all leaders. Do you know any political man who does not consume liquors? In DMK and ADMK, all are real honest and have a clean personal life?
Dont force your personal views into Reader’s mind.
Thanks
Sam
Please read the article again… For your all comments , you have the answer in this same articles.
Write statement in this article
அவர் பேசும் பொதுக்கூட்டங்களில் அவர் தொண்டர்களை நடத்தும் முறை அருவருப்பை ஏற்படுத்துகிறது. “ஏய்.. சத்தம் போடாதடா… வாயை மூடுடா… நான் அங்க எறங்கி வருவேன்.. வந்தா அவ்வளவுதான். கத்தறவன் ஏடிஎம்கே… டாஸ்மாக்குக்கு போயிட்டு இங்க வந்துருக்கான்” என்று இவர் செய்வது காமெடியாக இருந்தாலும், இது வரை எந்த அரசியல் கட்சித் தலைவரும் இதை மேடையில் செய்ததில்லை. பொதுக்கூட்டங்கள் என்ன தியான மண்டபங்களா, அல்லது நூலகங்களா…. ஒவ்வொரு தொண்டரும் கத்தத்தான் செய்வான். தலைவரே குடித்து விட்டு வருகையில், தொண்டன் குடிக்காமலா வருவான். கத்தத்தான் செய்வான். ஆனால், விஜயகாந்துக்கோ ஆக்ஷன் என்று இயக்குநர் சொன்னதும் ஏற்படும் அமைதி போல தான் மைக்கைப் பிடித்ததும் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறார். திமுக பொதுக்கூட்டத்தில் கத்தாத தொண்டர்களா ? திருமாவளவன் கூட்டங்களில் கத்தாத தொண்டர்களா ? ஒரு சாதாரண பொதுக்கூட்டத்தை நடத்தத் தெரியாதவர், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.!!!????????????
savkku
your indirect/secular KUSUMBU is exposed but you should understand that WE ARE NOT A FOOL.. don’t be a over smart!!!!!!!!!
For Tamilnadu’s sake Vaiko, Suba.udayakumar and velmurugan and tamil movements join hands together
தமிழக அரசியலில் தேமுதிக என்னும் கட்சி மிக விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.
இந்த தேர்தலில் அது நடக்க வாய்ப்பு உண்டு.
ithu nadakka vendum illaiyenil thamilarkal tamilnattai vittu odividuvathu nallathu..