இன்றை தலைமுறை இல்லாமல், சென்ற தலைமுறைக்குக் கூட தெரியாத விபரம், நீதிபதி சர்க்காரியா திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்தும், அதன் தலைவர் கருணாநிதியின் ஊழல்கள் குறித்தும், வெளியிட்ட விசாரணை அறிக்கை.
இந்த அறிக்கை, திமுகவினர் எப்படியெல்லாம் புது புது யுக்திகளை கடைபிடித்து, ஊழலில் ஈடுபட்டனர் என்பதை விளக்குகிறது. அன்று முதல் இன்றைய இமாலய ஊழலை அரங்கேற்றிய கருணாநிதி, கொஞ்சமும் மாறவில்லை மாறப்போவதுமில்லை என்பதையே சர்க்காரியா கமிஷன் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
சர்க்காரியா என்ற பெயரைக் கேட்டாலே, இன்னும் கூட, திமுகவினருக்கு கிலி எடுக்கும். அப்படி சர்க்காரியா என்றவுடன் பயமுறுத்தும், அளவுக்கு என்ன அது என்ற கேள்வி எழுகிறதா ?
ரஞ்சித் சிங் சர்க்காரியா… இவர் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிக மிக திறமையான ஒரு நீதிபதி. திறமையானவர் மட்டுமல்ல. நியாயமானவரும் கூட…
இவர்தான் திமுகவினருக்கு இன்று வரை பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். இன்று வரை ஏன் பயத்தை ஏற்படுத்துகிறார் என்றால் காரணம் இருக்கிறது.
15 ஜுன் 1975 இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாளாக இன்று வரை வர்ணிக்கப் படுகிறது. அன்றுதான் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப் படுகிறது. இதையடுத்து, இந்திரா காந்தி, 1976ல், திமுக அரசை டிஸ்மிஸ் செய்கிறார். அரசு டிஸ்மிஸ் செய்யப் பட்டவுடன், 1976ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் திமுக அரசின் ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைக்கிறார் இந்திராகாந்தி.
அந்தக் கமிஷன் ஒரு நீண்ட விசாரணையை நடத்தி, தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். இந்த விசாரணை அறிக்கை மற்ற ஊழல் விசாரணைகளைப் போலவே கிடப்பில் போடப்பட்டது என்றாலும், இந்த விசாரணை அறிக்கையானது, அன்றைய திமுக ஆட்சி, இன்றைய ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு முன்னோடியாக எப்படியெல்லாம் செயல்பட்டுள்ளது என்பதும், அன்றைய நிர்வாகம் எப்படி இருந்தது என்பதையும் விளக்கும் ஒரு முக்கிய ஆவணம்.
திமுகவினர் இந்த சர்க்காரியா அறிக்கையைக் கண்டு இன்று வரை ஏன் பயப்படுகிறார்கள் என்றால், திமுக ஆட்சி நடத்திய லட்சணம் தெரிந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான். இன்று வரை அதற்குப் பயந்து, இந்த அறிக்கையின் நகல்கள் ஒன்று கூட விடாமல், அழிக்கப் பட்டு விட்டது என்று கூறப்படுகிறது. நெருக்கடி நிலையின் அத்துமீறல்களை விசாரிப்பதற்கென்று அமைக்கப் பட்ட ஷா கமிஷனின் அறிக்கையை இந்திரா காந்தி, இது போலத்தான் ஒரு நகல் விடாமல் அழித்து விட்டதாக தெரிகிறது. ஆனால், முன்னாள் ஜனதா கட்சித் தலைவர் செழியனின் முயற்சியால், அந்தப் புத்தகம் இப்போது புதிய வடிவில் கிடைக்கிறது.
ஆனால், சர்க்காரியா கமிஷன் அறிக்கைக்கு அந்த பாக்கியமெல்லாம் இல்லை. ஏறக்குறைய அனைத்து நகல்களுமே அழிக்கப் பட்டு விட்டதாகத்தான் தெரிகிறது.
திமுகவின் ஆட்சி அன்று எப்படி நடந்தது என்பதை அதிகாரிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் சர்க்காரியா இவ்வாறு கூறுகிறார்.
“இந்த விசாரணையின் போது இக்கமிஷனின் கவனத்திற்கு அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகள் சில வந்துள்ளன. மற்றபடி அப்பழுக்கற்ற பணிப்பதிவேட்டினைக் கொண்டிருக்கும் சில முதுநிலை ஐஏஎஸ் அதிகாரிகள் கூடத் தாங்கள் தவறாக நடக்கிறோம் என்பதை முழுவதும் தெரிந்தே தங்களது கடமையிலிருந்து தவறியுள்ளனர். அமைச்சர் வாய்மொழியாக பிறப்பித்த கட்டளைகளை நிறைவேற்றியதைத் தவிர வேறு வழி ஏதும் தங்களுக்கு இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். அமைச்சர் சார்பில் பேச்சு வார்த்தைகளை நடத்தி லஞ்சம் வாங்கித் தரும் அளவிற்கு தங்களை பயன்படுத்திக் கொள்வதை அவர்கள் அனுமதித்துள்ளனர். “
அப்போது இருந்த அதிகாரிகள் வழி தவறி, அமைச்சர்கள் பேச்சைக் கேட்டு செயல்பட்டதற்கு சர்க்காரியா தனது கண்டனத்தை இவ்வாறு பதிவு செய்தார்.
“தவறாக நடந்து கொண்டாக குற்றம் சாட்டப்படுவதற்கு அமைச்சரை சம்பந்தப்படுத்திக் கூறுவதற்கு நேரடி சாட்சியம் ஏதுமில்லாவிடின், அரசு அதிகாரி, அரசனை விட, அரசன் போல் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், அமைச்சரின் நல்லெண்ணத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக முறைதவறிச் செயல்பட்டார் என்று அனுமானிக்க வேண்டும். அசட்டையாகவும், மெத்தனமாகவும், அஞ்சி அஞ்சிச் சாகும் கோழையாகவும், உள்ள இத்தகைய அரசு அதிகாரியால் அதிகாரவர்க்கம் முழுவதும் நேர்மை கெட்டு விடுகிறது. அதனால் அத்தகையவரிடம் பரிவு எதுவும் காட்ட வேண்டியதில்லை“
திமுகவின் ஆட்சி இப்படித்தான் இருந்தது என்று சர்க்காரியா பதிவு செய்திருக்கிறார். சர்க்காரியா நடத்திய விசாரணை பற்றி மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வழக்கமாக விசாரணை கமிஷன்களுக்கென்று ஒரு அளவு கோல் உண்டு. அது, அந்த கமிஷனை அமைத்த ஆட்சியாளர்கள் என்ன விரும்பிகிறார்களோ, அவ்வாறே அறிக்கை கொடுப்பதற்கு வசதியாக, நீதிமன்றங்களில் கடைபிடிக்கப் படும் “சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப் பட்டது“ என்ற அளவு கோலை பின்பற்றாமல், தங்கள் இஷ்டத்திற்கு, நடத்துவது. தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சில விசாரணைக் கமிஷன்களும் அவ்வாறே நடைபெற்றன. ஒரு உரையாடல் வெளியானது எப்படி என்று அமைக்கப் பட்ட ஒரு விசாரணை கமிஷன், அந்த உரையாடலை பகிரங்கமாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து வெளியிட்டவரை கடைசி வரை விசாரிக்காமலேயே தனது அறிக்கையை அளித்தது குறிப்பிடத் தகுந்தது. அந்த அளவுக்கு ‘விரிவான’ விசாரணையை அந்த ஆணையம் நடத்தியது.
ஆனால், சர்க்காரியா, ஒரு குற்றவியல் நீதிமன்றத்தில் கடைபிடிக்கப் படும் அனைத்து நடைமுறைகளையும் தவறாமல் கடைபிடித்தார். பூர்வாங்கமான ஆதாரங்கள் பல குற்றச் சாட்டுகளில் இருந்தும், சந்தேகத்திற்கு இடமில்லா வகையில் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று பல குற்றச் சாட்டுகளை நிராகரித்தார்.
இவ்வளவு சிறப்பாக விசாரணை நடத்தி, சாட்சிகளை விசாரணை செய்து, ஆவணங்களை பரிசீலித்தும் அளிக்கப் பட்ட ஒரு விசாரணை ஆணையத்தின் அறிக்கை அரசியல் காரணங்களுக்காக குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. நெருக்கடி நிலைக்குப் பிறகு, திமுகவோடு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது. இதையடுத்து, இந்திராகாந்தி, இந்த விசாரணை கமிஷனின் பரிந்துரையை குப்பையில் போட்டார் இந்திரா காந்தி.
அப்போது உள்ளதற்கும் இப்போது உள்ளதற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன தெரியுமா ? அப்போது இந்திரா காந்தியின் காலில் திமுக விழுந்ததும், கொடுத்த வாக்கை காப்பாற்றினார் இந்திரா. திமுகவோடு கூட்டணி அமைத்தவுடன், சர்க்காரியா விசாரணையை கல்லறைக்குள் புதைத்தார். ஆனால், இன்றும், திமுக காலில் விழுந்தது. ஆனால், காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் விசாரணையில், திமுகவுக்கு அந்த அளவுக்கு உதவியைச் செய்யவில்லை செய்யவில்லை. ‘மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும்’ என்பது போல, உதவி செய்கிறோம்.. ஆனால் செய்ய மாட்டோம் என்று தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது. அவர் ‘இந்திரா’ இவர் ‘தந்திரா’ இல்லையா ?
உச்ச நீதிமன்றம் என்ற ஒன்று இல்லாவிட்டால், ஸ்பெக்ட்ரம் விசாரணையும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை புதைக்கப் பட்ட, அதே கல்லறையில் புதைக்கப் பட்டிருக்கும்.
புதைக்கப் பட்ட அந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை….
உங்களுக்கு ஒரு பரம்பரைச் கட்டிடம் ஒன்று ஒன்று இருக்கிறது. அந்தக் கட்டிடத்தில் ஒருவர் பல ஆண்டுகளாக குடியிருக்கிறார். அந்தக் கட்டிடத்தில் தொழில் செய்வதால், அவருக்கு மாதந்தோறும் ஒரு லட்ச ரூபாய் வருமானம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுவோம். ஆனால் உங்களுக்கு அவர் வருடத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வாடகையாகத் தருகிறார் என்றால் ஒப்புக் கொள்வீர்களா ? அதே போலத்தான், சென்னை மவுன்ட் ரோடில் இருந்த க்ளோப் தியேட்டரின் கதையும்.
சென்னை அண்ணா சாலை எல்ஐஜி அருகே, ஒரு பெரிய கட்டிடம் இருக்கிறதல்லவா ? அதுதான் அந்தக் கட்டிடம். முதலில் க்ளோப் தியேட்டராக இருந்து, நியூ க்ளோபாக மாறி, பிறகு அலங்கார் தியேட்டராக மாறி, இப்போது ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாக மாறி இருக்கிறது.
அந்தக் கட்டிடம் குஷால்தாஸ் என்பரின் பரம்பரைச் சொத்தாகும். இந்த கட்டிடத்தை வரதராஜன் பிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால் தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். ஆனால், தியேட்டர் நடத்துவதால் இவருக்கு வாரந்தோறும் வருமானம் 8000 ரூபாய். ஆண்டுக்கு நாலு லட்சத்து பதினாலாயிரம். வரதராஜப் பிள்ளைக்கு கிடைக்கும் இந்த வருமானத்தைப் பார்த்தும், எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை காலம் முடிவடைந்ததும், குத்தகையை புதுப்பிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார்.
வாரம் 5000 லாபம் பார்க்கும் வரதராஜப் பிள்ளை விடுவாரா ? எனக்கே விற்று விடுங்கள் என்று அடிமாட்டு விலைக்கு கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு, பல்வேறு விசாரணைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம், குஷால் தாஸூக்கு ஆதரவாக தீர்பபளிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.
வரதராஜப் பிள்ளைக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை. அய்யய்யோ… ‘வடை போச்சே’ என்று மிரள்கிறார். சரி உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிப்பது. நாம் சட்டத்தையே மாற்றுவோம். நடப்பது திமுக ஆட்சிதானே என்று திமுக அரசின் அதிகார மையங்களை அணுக தீர்மானிக்கிறார். திமுகவின் அதிகார மையங்கள் என்றதும், கோபாலபுரம், சிஐடி காலனி என்று எண்ணாதீர்கள். அப்போதெல்லாம் அமைச்சர்களும் அதிகார மையங்களாக இருந்தார்கள். அப்போதும் அதிகாரமாக இருந்தது, மாறன் சகோதரர்களின் தந்தை முரசொலி மாறன்.
சர்க்காரியா கமிஷனில் அளிக்கப் பட்டுள்ள சாட்சியங்களின் படி, வரதராஜ பிள்ளை முதலில் முரசொலி மாறனை அணுகுகிறார். அவர் அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்குமாறு அறிவுறுத்துகிறார். ப.உ.சண்முகத்தை சந்தித்த போது, இது தொடர்பான சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கிறார். முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் ப.உ.சண்முகத்துக்கு கொடுக்கப் படுகிறது. இதற்குப் பிறகு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த வரதராஜ பிள்ளையிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டால், வெறும் 40 ஆயிரம் தான் கொடுத்திருக்கிறீர்கள், சட்டம் திருத்தப் படுவதற்கு மேலும் 60 ஆயிரம் தேவைப்படும் என்று கருணாநிதி கூறியதாகவும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் வரதராஜ பிள்ளை தன்னிடம் 60 ஆயிரம் இல்லை என்றும், 30 ஆயிரம் தான் மேற்கொண்டு தர முடியும் என்று சொன்னதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி பின்னர் ஒரு நாளில் 30 ஆயிரத்தை ஒரு பழுப்பு நிறக் கவரில் வைத்து பெற்றுக் கொண்டதாகவும் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்தப் பணம் பெற்ற பிறகு, மந்தகதியில் செயல்படும் அரசு இயந்திரம் மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறது. உடனடியாக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. எம்எல்ஏக்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கொடுக்கப் பட வேண்டிய வரைவுச் சட்டம், முதல் நாள்தான் கொடுக்கப் படுகிறது. அவசர அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டு, தபாலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினால், தாமதமாகும் என்று, ஒரு அதிகாரி விமானத்தில் டெல்லி சென்று, குடியரசுத் தலைவரின் ஒப்பந்ததை பெற்று வருகிறார். இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரிஜினல் உரிமையாளரிடம் சேர வேண்டிய சொத்து, ‘ஆட்டையைப் போட்டவருக்கு’ வந்து சேர்ந்தது.
இது அவசியமற்ற சட்டத் திருத்தம் என்று குறிப்பு எழுதிய அரசு அதிகாரி மிரட்டப் படுகிறார்.
இந்த விசாரணையின் முடிவில் நீதிபதி சர்க்காரியா “இந்தச் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்து விவாதித்து நிறைவேற்றுவதில், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும், உணவு வருவாய்த்துறை அமைச்சர் ப.உ.சண்முகமும், சட்டத் துறை அமைச்சர் மாதவனும், வரதராஜ பிள்ளைக்கு மறைமுகமாக உதவ வேண்டும் என்ற தீய நோக்கத்துக்காக உந்தப் பட்டிருக்கின்றனர்.” என்று கூறுகிறார் நீதிபதி சர்க்காரியா.
தொடரும்.
இப்படிலாம் எழுத வெக்கமா இல்லையாடா
Mja Mayuram ஆம்பளத்தன்மான பதிவுகளே போடமாட்டீங்களா ஒரே பொட்ட பதிவாகவே இருக்கிறது .. நான்கூட சர்க்காரியா கமிசன் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள் போலன்னு நினைச்சு படிச்சா ஒருத்தனோட அரிப்பை நல்ல சொரிஞ்சிட்டிருக்கான் …அறிவே இல்லாத கொமாளிங்ககிட்ட பேசுவது கடினம் …சர்க்காரியா கமிசன்னு சொன்னாலே திமுகாகாரன் இதுவரை பயபுடுரானுன்கலாம் …எண்டா டுபுக்கு அப்புடி பயந்தா ஒன்னோட எஜமானி நடிகை கிட்ட சொல்லி அதே சர்காரியாவை திருப்ப தூசு தட்ட சொல்லவேண்டியதுதானே நாங்கத்தான் நாயாபேயா கோர்டுக்கு அலைய விட்டுருக்கொம்ல முடிஞ்சா திருப்பி எங்கள் மீது வழக்கு தொடுக்கவேண்டியதுதானே …..போங்கடா போங்க இதுவரை எந்த வழக்கும் இல்லாத ஒரே சுத்தமான் மனிதர் டாக்டர் கலைஞர் மட்டும்தான் இதுதாண்டா உண்மை இதை ஜீரணிக்க முடியாதவன் திருட்டுப்பயலாகத்தன் இருப்பான்….ஒன்னேமுக்கால் வருடம் தேச துரோக குற்றம் சுமத்தி இந்த பயல்களை நடிகை தூக்கிப்போட்டு மிதிச்சி உள்ளே தள்ளுச்சி இப்ப எங்க மறுபடியும் தூக்கிப்போட்டு மிதிச்சிடுமொன்னு பொட்டைங்க எல்லாம் ஜட்டியை துவசிகிட்டு நிக்கிறானுங்க …மானங்கேட்டவனுங்களுக்கு பெச்சப்பாறு …லோள்ளப்பாறு ..அட தூ
அருமை
சேட்டு அநியாயமாக சம்பாதித்தது. அதனால்தான் அவனிடம் பிடுங்கப்பட்டிருக்கின்றது. எப்படியோ தமிழனிடம்தானே வந்திருக்கின்றது.
நண்பர்களே! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி என்னால் எழுதப்பட்ட கட்டுரை 04/02/2011 அன்று விகடனில் பிரசுரிக்கப்பட்டது. அதற்கான லிங்க் இதோ
http://news.vikatan.com/article.php?module=news&aid=965
படித்துவிட்டு உங்களது விமர்சனத்தை இங்கேயே பதிவு செய்யுங்கள். திமுக இதற்கு மேலும் வெற்றிபெற்றால் உங்கள் கோமணம் உங்களது இல்லை. அனைவருக்கும் புரியும் படி எழுதி உள்ளேன். நண்பர்களுக்கு இதை அனுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நன்றி.
உங்க கோவணத்தோட பதற்றம் தெரியுது.
Well done mr.tamillwikileakes
Dear Admin,
Plz send me the karunanidhi’s bank statement for swiss bank account if u have
ஒன்றரை யுகங்களின் முன்
ஒன்றும் தெரியவில்லை,
கால கொடுமை கருவாகி
கலியுகத்தின்
மூல முழுமுதலாய்
பாவப் பிடாரி ஒன்று
பிறப்பெடுத்த கதை கேளீர்,
மாலை முடிந் திரவாகி
நடுச்சாமம்
கோட்டன் கூவ,
பேய் உலாவ பிடாரி வழி சந்தித்து
காதலாகி கை கோர்த்து
சூதகத்தில் காமம் தலைக்கேற
சுடுகாட்டில் புணர்ந்தெழுந்து
சுக்கிலம் இடம்மாறி,
காலக் கொடும் பதிவில்
கழகமொன்று குடும்பமாகி
கூடி உலை வைத்து கூறுபோட்ட
வாளும் வள்ளுவனின்
நாசம் பிறந்த கதை.
நடுச்சாமம் இருட்டு மழை
நாய் குரைத்து ஓலமிட
கண்மூடி கைதிறந்து
ஆண் மகவு அண்ணாந்து
வைகறையில்
ஓலமிட்டு அலறியது
புரண்டு படுத்து உடல் புரட்டி
தவழ்ந்து மலம் தின்று
புலைஞனாகி
கவிண்டு கண்ணடித்து
வீராணம் ஏரியிலே
விளையாட்டை முதலாக்கி
காகத்தின் கறுப்பில் கண்ணாடி பூட்டி
சூழ்ச்சி திருவினையாய்
சூது அது திருவிளமாய்
நாற்புறமும் கடை விரித்து
ஊழல் பல கண்டு
உறக்கமின்றி அறம்பாடி,
புறம்போக்கு நிலங்களையும்
பொது சனத்தின் பாதையையும்
கறந்து,
முரசொலிக்கும்,
கோவால புரத்துக்கும்
கொள்ளை கழகம்
அறிவாலயத்துக்கும்
சுரண்டி
குடிலமைத்து,
தினமொரு மகுடி ஊதி
சாரைப் பாம்பின் தலை முழுகி
காகிதப்பூ நாயகியின் கால் தழுவி
சேறெடுத்து குறி புதைத்து
கனிமொழியை பெற்றெடுத்து,
துவண்ட ஒரு பொழுது
தோல்வியை தவிர்ப்பதற்காய்
புறம்போக்கில் அமைந்திருந்த
கோவாலபுரத்து குடி வீட்டை
தானம் என்று சதிராடி,
தொல்காப்பியத்தின் தோளேறி
கண்ணதாசன் கவிதைகளில்
கல்லெறிந்து
போல்லாப் பிழையுடனே
பொய்யுரைத்து நூலெழுதி
நல்லவன்போல்
நாயகன்போல் பாவனாகி
நுண்ணியமாய் பொய்யுரைத்து,
காவலனாம் பெரியார் என்றும்
கண்மணி
அண்ணாவென்றும் கரகரத்து
நாயிற் கேவலமாய் புணர்ச்சி செய்து.
நரியின் குணமெடுத்து
கோடி ஊழல் கொடிகட்டி
கால் முடங்கி கண் அழுகி
நீசனாகி கிடந்தபோதும்
நாற்கடகம் நிறை சுமந்த நாடகத்தை
கூலருடன் குடிலமைத்து
சாகின்றேன் என்று சதிராடி
ஈழத்தமிழினத்தின்
வாழ்வில்
போல்லாத பெருங்கதையாய்
சாவுக்கும்
பிடிபடாமல் சண்டாளன்
மீண்டும் தலை நிமிர்த்தி,
கோரத்தனமான
குதர்க்கம் பேசி
மீண்டும் தேர்தலுக்காய்
வீல் செயரில்
ஆமை உருவத்தில் அமர்ந்திருந்து
காண்டாமிருகம்போல்
பாவாடை பேசும்
பான்னடை நாயகனே.
நீ
பிறக்காமல் இருந்திருந்தால்.
ஊர்க்குருவி.
ஸாம்ஸன், ‘சவுக்கு,’
1. என்னுடைய மின்னஞ்சல் முகவரியை ஸாம்ஸனின் பின்னூட்டத்திலிருந்து எடுத்து விடவும். 23 மின்னஞ்சல்கள் வந்துவிட்டன – இந்த ஆவணத்தைக் கேட்டு. இவற்றுக்கெல்லாமும், இன்னமும் வருபவைக்கும் பதில் அனுப்ப எனக்குத் திராணியில்லை. மேற்கொண்டு ஸ்பேம் வராதிருக்கவும் இது முக்கியம். செய்வீர்களா ‘சவுக்கு?’
2. ஆனால் – இந்த ஆவணத்தை – சர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கையை – http://othisaivu.wordpress.com/2011/06/16/post-50/ பக்கத்தில் உள்ள சுட்டிகளிலிருந்து, தாராளமாகத் தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.
3. மற்றபடி இந்த இயக்கம் தொடர்பான பல பதிவுகளைப் படித்து அரசியறிவு மேலதிகமாகப் பெறலாம். 😉
திராவிட (எதிர்ப்)பக்கங்கள்…
http://othisaivu.wordpress.com/page-2/
நன்றி.
Young generations are curiously awaiting for long time, about to know sarkaria commission’s hidden secret.
pls continue.. TQ…
உண்மையை உங்களது மனசாட்சியை வைத்து சொல்லுங்கள் சர்கார்ரியா கமிஷன் எதற்கு போடப்பட்டது ஸ்பெக்ட்ரம் ஊழல் ஏன் வெளி வந்தது என்பது அப்பொழது குற்றசாட்டுகள் சொன்ன எம்ஜிஆர் என்ன சொன்னார் ஏன் சொன்னார் என்பதனை மோகனகுமாரமங்கலம் ஆவியை கேட்டால் சொல்லும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று சொன்ன தால் பிஎஸ்என்எல் தறபொதைய நிலையை தெரிவியுங்கள் நிலக்கரி ஊழல் என்றதால் மின்சாரம் இல்லாமையால் அவதியுறும் அனைத்து தொழில் மற்றும் மக்களின் நிலையினையும் தெரிவியுங்கள் மேலும் http://profit.ndtv.com/news/opinions/article-opinion-a-sensible-strategy-for-india-avoid-economic-grandstanding-385308?pfrom=home-otherstories இதனையும் படித்து பார்த்து சொல்லுங்கள் போதும் அப்பாவி மக்களை ஏமாற்றுவது
appo thalivaru yokkirungeereengala???
முகில் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. ஊழல் நடக்கவில்லை, தவறாக ஊழல் என்று சொல்கிறார்கள் என்று சொல்கிறாரா? மனசாட்சியைத்தொட்டு சொல்லவேண்டும் என்றால் என்ன அர்த்தம்.ஒவொருவருக்கும் ஒருவித மனம்.அதை உள் ஆராய்ந்து,உண்மை உணர்ந்து எதை சொல்லவேண்டும். இவரின் கருத்து குழப்பத்தை விளைவிக்கிறது.
Ada paavingala!! Dae nee yenga kaila kedacha, setha da Karuna
Super keep going