இந்தியா சந்தித்த ஊழல்களில் பெரிய ஊழல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். போபர்ஸுக்கு அடுத்தபடியாக உர இறக்குமதி, சர்க்கரை இறக்குமதி, என்று சவப்பெட்டி வரை இந்த பட்டியல் நீண்டது.
ஆனால் பூச்சி மருந்து தெளிப்பதில் ஊழல் நடந்ததைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? பூச்சி மருந்திலும் ஊழல் நடந்தது. அதைக் கண்டு இந்தியாவே வியந்தது. அதுதான் கருணாநிதி. இதனால்தான் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்பவர் என்ற பெரும்பெயரைப் பெற்றார்.
கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களை தாக்காமல் இருப்பதற்கு பூச்சி மருந்து தெளிப்பதை பார்த்திருப்பீர்கள். அது போல, ஒரு பூச்சி மருந்து தொடர்பான விவகாரத்தைத்தான் நீதிபதி சர்க்காரியா விசாரித்தார்.
1970ம் ஆண்டு விவசாயத்தில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கோடு, மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்துகிறது. அதிகமாக பூச்சி தாக்கும் பகுதிகளில் விமானம் மூலமாக பூச்சி மருந்து தெளித்து, அதன் மூலம் விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதற்காக போதுமான நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஒரு ஏக்கருக்கு ரூ.7 க்கு மேற்படாமல், செலவிடப் படவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அப்படி ஒரு ஏக்கருக்கு ரூபாய் ஏழுக்கு மேல் செலவானால், அந்த செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்.
திமுகவின் திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்தவர், அன்பில் தர்மலிங்கம். அன்பில் தர்மலிங்கத்தை ராஜகோபால் என்பவர் சந்திக்கிறார். அறிமுகப் படுத்திக் கொள்கிறார். இந்த ராஜகோபால், பொதுப்பணித் துறையின் காண்ட்ராக்டர். பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர்களோடு கருணாநிதியின் நெருக்கம், அறிஞர் அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக அவர் இருந்த போதே தொடங்கி விட்டது.
அன்பிலுக்கு வேண்டியதை செய்து தருகிறார் ராஜகோபால். ராஜகோபாலுக்கு வேண்டியதை செய்து தர அன்பில் தயாராகிறார்.
மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து என்ற திட்டத்தை அறிவித்த உடனேயே, அன்பிலை சந்திக்கிறார் ராஜகோபால். ‘அண்ணே.. இந்த விமான கம்பேனிக் காரங்க பூச்சி மருந்து தெளிக்கறதுல, நெறய்ய சம்பாதிக்கிறாங்க… நாம இதுல தலையிட்டு, கமிஷன் வாங்கலாம்னே…’ என்ற யோசனை தெரிவிக்கிறார். கரும்பு தின்ன யாருக்குத்தான் கசக்கும் ? அன்பில் உடனடியாக ஆமோதிக்கிறார். மருந்துத் தெளிப்பு கம்பேனிகளோடு பேச்சுவார்த்தையை தொடங்க உத்தரவிடுகிறார். கம்பேனியின் பிரதிநிதிகள் அழைக்கப் பட்டு, ஒரு ஏக்கருக்கு எத்தனை ரூபாய்க்கு மருந்து தெளிக்க இயலும் என்று கேட்கப் படுகிறார்கள். ஒரு ஏக்கருக்கு 7 ரூபாய்க்கு தெளிக்க இயலும் என்றே அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
மத்திய அரசு நிர்ணயித்த விலையில் மருந்து தெளித்தால் பிறகு அது திமுக ஆட்சியா ? திமுகவின் வரலாறு என்ன ? பாரம்பரியம் என்ன ? மத்திய அரசு ஒரு ஏக்கருக்கு ரூபாய் ஏழு நிர்ணயித்திருந்தாலும், நீங்கள் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 9 என்று டெண்டர் கொடுங்கள். அந்த 9 ரூபாயில் ஒரு ஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷனாக கொடுங்கள் என்று பேசுகிறார் அன்பில். முக்கிய நிபந்தனை என்னவென்றால், பூச்சி மருந்து தெளிக்கும் வரையெல்லாம் காத்திருக்க முடியாது. கமிஷனை உடனடியாக தந்து விட வேண்டும் என்பதே. ஏழு ரூபாய்க்கு மருந்து தெளித்தாலே லாபம். இதில் கமிஷன் போக 8 ரூபாய் 60 காசுக்கு மருந்து தெளிக்க வேண்டுமென்றால் தனியார் முதலாளிகளுக்கு கசக்குமா என்ன ? உடனடியாக ஒப்புக் கொள்கிறார்கள்.
அப்போதெல்லாம் கருப்புப் பணம் இப்போது இருப்பது போல சகஜமாக புழக்கத்தில் இல்லை. நாசூக்காக ஹவாலா வழியாகவோ, சுவிட்சர்லாந்திலோ பணத்தைப் போடும் வழக்கம் அப்போது வளர்ந்திருக்கவில்லை. ஆகையால் அந்த தனியார் நிறுவனங்கள், நாங்கள் கொடுக்கும் அத்தனை பணத்துக்கும் ரசீது வேண்டும் என்று கேட்கிறார்கள். நூதனமான யோசனைக்கு வருகிறார் அன்பில். அதன்படி, பொன்னி ஏஜென்சீஸ் என்று ஒரு நிறுவனத்தை தொடங்குகிறார். மருந்து தெளிக்க ஆர்டர் பெறும் விமானக் கம்பெனிகள் அந்த பொன்னி ஏஜென்சீஸோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, பொன்னி ஏஜென்சீஸ், அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக, ஒரு ஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷன் தருவதென்று…. இந்த ஏற்பாட்டின் படி, 75 ஆயிரம் முன்பணமாக அன்பில் தர்மலிங்கத்திற்கு கொடுக்கப் படுகிறது. இந்தப் பணம் கொடுக்கப் படுகையில் அன்பில் திமுகவின் மாவட்டச் செயலாளர் அவ்வளவுதான். வெறும் 75 ஆயிரம் தானே என்று நினைத்து விடாதீர்கள். 75 ஆயிரம் 1970ல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ஒரு பவுன் 147 ரூபாய். 75 ஆயிரத்தின் மதிப்பு என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தற்போது போலவே, அப்போதும் திமுகவில் அனைவருக்கும் பேராசைதான். உரியவர்களுக்கு பங்கு முறையாக சேரவில்லை. பூச்சி மருந்து தெளிப்பதில் ஊழல் செய்தவர்கள், விவசாயத்துறை அமைச்சருக்கு பங்கு தராமல் விட்டு விட்டார்கள். வேளாண் துறை அமைச்சராக அப்போது இருந்தவர், சத்தியவாணி முத்து. தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக்கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கி நடத்தி வந்தவர், பின்னாளில் தமிழர் அனைவரையுமே முன்னேற்றத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறதே.. தனியாக எதற்கு ஒரு கழகம் என்று தனது தாழ்த்தப் பட்டோர் முன்னேற்றக் கழகத்தை திமுவோடு இணைத்து விட்டார். அவர்தான் அப்போது விவசாயத்துறை அமைச்சர்.
தான் விவசாயத்துறை அமைச்சராக இருக்கும்போது, தனக்கே தெரியாமல் யார் இந்த முடிவை எடுத்தது என்று வெகுண்டெழுந்த சத்தியவாணி முத்து, உடனடியாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் தன்னை 1970 ஜுன் மாதம் 4ம் தேதி தன்னை வந்து சந்திக்குமாறு உத்தரவிடுகிறார்.
இதையடுத்து அன்பில் தர்மலிங்கத்திற்கும், ராஜகோபாலுக்கும் கிலி எடுக்கிறது. இந்த அம்மையார் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டால் என்ன செய்வது என்று ? உடனடியாக விமான கம்பெனி நபர்களை அழைத்து, சத்தியவாணி முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில், ஏக்கருக்கு 9 ரூபாய்க்கு குறைவாக மருந்து தெளிக்க இயலாது, என்று கூறி விடுங்கள். அந்த அம்மா மீண்டும் வலியுறுத்தினால், அதற்கு குறைவாக பூச்சி மருந்து அடித்தால், பூச்சிக்கு பதிலாக நாங்கள்தான் சாக வேண்டும் என்று கூறி விடுங்கள் என்று கூறி விடுகிறார் அன்பில் தர்மலிங்கம்.
சத்தியவாணி முத்துவோடு கம்பெரி பிரதிநிதிகளின் மீட்டிங் நடக்கிறது. சத்தியவாணி முத்து ஒரு ஏக்கருக்கு 8.25க்கு மேல் தர முடியாது என்று உறுதியாக நிற்கிறார். விமான கம்பெனிகள் 9 ரூபாய் என்பதில் உறுதியாக நிற்கின்றன. கம்பெனி பிரதிநிதிகளின் பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்த சத்தியவாணி முத்து, 8.25க்கு மருந்து தெளிக்க முன்வருபவர்கள், விவசாயத்துறை இயக்குநரை சந்திக்கலாம், மற்றவர்கள் கிளம்புங்கள் காற்று வரட்டும் என்று கூறி விடுகிறார். நடந்த விஷயங்களை அப்படியே கோப்பில் பதிவு செய்கிறார்.
ஏற்கனவே, வேலையை முடித்துக் கொடுக்கிறேன் என்று ‘அட்வான்ஸ் லஞ்சத்தை’ பெற்றுக் கொண்ட அன்பிலுக்கு திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல இருந்தது. உடனடியாக முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்கிறார். இதுக்குத்தான் பொம்பளைங்களை அமைச்சரவையில சேக்கக் கூடாதுன்னு சொன்னேன். இப்போ பாத்தீங்களா…. எவ்வளவு அழகா ஒரு ஊழல் பண்ணோம். இந்த அம்மா இப்போ ஆட்டையை கலைக்கப் பாக்குது என்று புலம்புகிறார். கருணாநிதி முதலமைச்சர் அல்லவா ? அதுவும் விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதை அறிந்தவர் அல்லவா ?
கருணாநிதிக்கு வந்ததே கோபம்….. நான் முதலமைச்சராக இருக்கிறேன்… இந்த அம்மையாருக்கு என்ன இப்படி ஒரு துணிச்சல் என்று, தலைமைச் செயலாளராக இருந்த ஈ.பி.ராயப்பாவை அழைக்கிறார். உடனடியாக ஒரு ஏக்கர் 9 ரூபாய்க்கு பூச்சி மருந்து தெளிக்க ஆணை வெளியிடுமாறு உத்தரவிடுகிறார். அமைச்சர் கையெழுத்து வேண்டியதில்லை. கோப்பில் நான் கையெழுத்திடுகிறேன் என்று கூறுகிறார்.
ராயப்பாவும், அப்படியே அவர் உத்தவை நிறைவேற்றுகிறார். இப்படி போடப்பட்ட உத்தரவில் கையெழுத்திட ஒரு அதிகாரி வேண்டுமல்லவா ? அந்த அதிகாரிதான் ஈ.பி.ராயப்பா. அது வரை, ஐஏஎஸ் பணியில் மூத்தவர்களை தலைமைச் செயலாளராக நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது. அந்த வழக்கத்தை மாற்றி, ராயப்பாவை விட பணி மூத்தவர்கள் எட்டு பேரை ஓரங்கட்டி விட்டு, ஈ.பி.ராயப்பாவை தலைமைச் செயலாளராக்கி உத்தரவிடுகிறார் கருணாநிதி. இதற்கு கைமாறாக, ராயப்பாவும், பூச்சி மருந்து தெளிப்பது தொடர்பான கோப்பில் கையெழுத்திடுகிறார்.
அதற்கு அடுத்து இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அந்தக் கோப்பை பார்வையிட்ட, சத்தியவாணி முத்து, 9 ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தான் எழுதிய குறிப்பு கோப்பிலிருந்து காணாமல் போனது கண்டு அதிர்கிறார். அதிர்ந்து என்ன செய்வது ? உத்தரவுகள் வழங்கப்பட்டு, வேலையே முடிந்து விட்டது.
ஆனால், இந்த சம்பவத்தில் இருந்து சத்தியவாணி முத்து பாடம் கற்றுக் கொண்டார் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. அதன் பிறகு, அவர் மீது, கப்பல் கட்டுமானத்தில், ஊழல் புகார் எழுந்தது
அடுத்த நிதியாண்டில் தொடங்குகிறது அடுத்த அத்தியாயம். இது 1971-72 இந்த அத்தியாயத்தில் பல திருப்பங்கள். இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன, அன்பில் தர்மலிங்கம், விவசாயத்துறை அமைச்சராகிறார். ஏற்கனவே பூச்சி மருந்து விவகாரத்தில் ருசி கண்ட கருணாநிதியும், அன்பில் தர்மலிங்கத்தை அமைச்சராக்குவதில், அதுவும் விவசாயத்துறை அமைச்சராக்குவதில் துளியும் தயக்கம் காட்டவில்லை.
இந்த முறை, நேரடியாக விமான கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்குகிறார் தர்மலிங்கம். விமானக் கம்பெனிகளின் பிரதிநிதிகளிடம், ‘பாருங்க பாஸ். போனவாட்டி ஒரு ஏக்கருக்கு 40 காசு குடுத்தீங்க. இப்போ விலைவாசி ஏறிப்போயிருச்சு. அதனால, ஒரு ஏக்கருக்கு 1 ரூபா கமிஷனா கொடுத்துடுங்க. உங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 11 ரூபாய் தர்றோம்’ என்று பேசுகிறார். அதிர்ந்து போன விமானக் கம்பெனிக்காரர்கள், அவ்வளவு தர முடியாது, ஒரு ஏக்கருக்கு 80 காசு கமிஷனாகத் தருகிறோம், அதற்கு ரசீது தாருங்கள் என்று கூறுகிறார்கள். இதற்கு ஒப்புக் கொண்ட தர்மலிங்கம், ராஜகோபால் மூலமாக கொடுங்கள் என்று கூறுகிறார். இந்த இடத்தில் தான் கதையில் ட்விஸ்ட் வருகிறது. ராஜேகோபால் இந்த விவகாரத்தில் நிறைய ‘உள்குத்து’ செய்வதாக அன்பில் சந்தேகிக்கிறார். அதனால், ராஜகோபாலை கழற்றி விட முடிவு செய்து, விவசாயத் துறை செயலாளராக இருந்த வேதநாராயணனை அழைக்கிறார். ‘நீங்கள் நேரடியாக கம்பெனிகளிடம் பேசுங்கள். முதலமைச்சர் ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் கமிஷன் வேண்டும் என்று விரும்புகிறார். 90 பைசாவுக்கு குறைய மாட்டார். மேலும் 25 சதவிகித கமிஷன் முன்னதாகவே கொடுக்கப் பட வேண்டும்’ என்றும் கூறுகிறார். இதன்படி, விஷயம் விமான கம்பெனிகளுக்கு சொல்லப் படுகிறது. எழுத்து பூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்து ஆகாமலேயே பணியைத் தொடங்க அவர்கள் பணிக்கப் படுகிறார்கள். அதன்படியே, பணியையும் தொடங்குகிறார்கள்.
இப்போது புதிய சிக்கலாக, கடந்த ஆண்டு செய்த வேலைக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்றும், அதை முதலில் பைசல் செய்ய வேண்டும் என்றும் கம்பெனிகள் போர்க்கொடி தூக்குகின்றன. இதே இப்போதைய கருணாநிதியாக இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியிருப்பார். அப்போது அந்த அளவுக்கு கருணாநிதி தேர்ச்சி பெறவில்லை. முன் பணம் மட்டுமே வந்திருந்தது. முழு கமிஷனும் வரவில்லை. மருந்துக் கம்பெனிகளிடம் ஒழுங்காக பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை வசூல் செய்ய துப்பில்லாத அன்பில் தர்மலிங்கத்தை 12.09.1971 அன்று பதவி நீக்கம் செய்து விட்டு, ப.உ.சண்முகத்தை வேளாண் அமைச்சராக்குகிறார். அடுத்தாக கருணாநிதி பிறப்பித்த உத்தரவு, ‘கம்பெனிகள் ஏக்கருக்கு 90 பைசா என்று ஒப்புக் கொண்டபடி கொடுக்கவில்லை. அதனால் அவர்களுக்கு சேர வேண்டிய தொகைகள் அத்தனையையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு வேளை வங்கியிலிருந்து பணம் எடுக்கப் பட்டு, டிமாண்ட் டிராப்டாக இருந்தாலும், அதையும் நிறுத்த வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்தவும் என்று உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை, கருணாநிதியின் செயலாளர், வைத்தியலிங்கம் நிறைவேற்றுகிறார். கம்பெனிகள் அரண்டு போய், வேளாண் துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்தித்த போது, அவர் தனக்கு எதுவும் தெரியாதென்று முதலமைச்சரை கை காட்டுகிறார்.
கம்பெனிக்காரர்களுக்கு இக்கட்டில் சென்று மாட்டிக் கொண்டோம் என்பது புரிகிறது. வேறு வழியின்றி, 1,17,273 ரூபாயை வசூல் செய்து, கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுக்கிறார்கள். அவர் அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு, விவசாயத்துறை செயலாளருக்கு, கம்பெனிகளுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் போது, சாட்சியம் அளித்த கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கம், தனது சாட்சியத்தில் “என்னைப் பொறுத்த வரையில், குற்ற நோக்கமோ, உள்நோக்கம் கொண்டோ, தெரிந்தோ, எனது சொந்த ஆதாயத்துக்காகவோ, இந்தப் பணம் பெற்றுக் கொள்ளப் படவில்லை. நான் செய்ததெல்லாம் அந்தப் பணத்தை முதலமைச்சருக்கு சேர்ப்பிக்கும் தீங்கில்லாத ஒரு கருவியாக இருந்ததுதான்”.
இந்த ஊழலைப் பற்றி தனது முடிவை பதிவு செய்கையில், நீதிபதி சர்க்காரியா
“இந்தச் செயல்வகை எல்லாம் முதலமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரின் வாய்மொழி உத்தரவுகளினால் விளைந்ததாகும். மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் இந்த ஆப்பரேட்டர்கள் (கம்பெனிக்காரர்கள்) முதலில் கவரப்பட்டு மீளமுடியாத ஒரு சிக்கலில் மாட்டிவிடப்பட்டு, அவர்கள் “வழிக்குக் கொண்டுவரப்படும் வரை” நிர்பந்தப் படுத்தப் பட்டனர். முதலமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்குப் பணிய வேண்டியதாயிற்று. இந்தக் கட்டாயக் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால், தங்கள் கதி சர்வநாசம்தான் என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.”
2010ம் ஆண்டு அன்பில் தர்மலிங்கம் சிலை திறக்கப் பட்டதை ஒட்டி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்
“என்னையும் உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார் எத்தனையோ கோபதாபங்கள் எம்மிடையே ஊடல்கள் உறவுகள்! எதையும் உரிமையுடன் உணர்வு கலந்த உண்மை நட்புடன் கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும் என் நட்பையும் எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன்”
என்று குறிப்பிடுகிறார்.
விவசாயிகளுக்காகவும், விவசாய வளர்ச்சிக்காகவும், மத்திய அரசு உருவாக்கிய பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் ஒரு விவகாரத்தில் எப்படி பணம் பண்ணியிருக்கிறார் கருணாநிதி என்ற பார்த்தீர்களா ?
அன்று பூச்சிக் கொல்லி மருந்து. இன்று ஸ்பெக்ட்ரம். தொகை வேறு முறை ஒன்றே. அடித்ததும் ஒரே நபர்தான். உதவிய நபர்களே வேறுபடுகின்றனர்.
அவர்தான் கருணாநிதி.
தொடரும்
உங்கள் கருத்துக்கள் மக்களை குழப்பும் வழி முறை மட்டுமே. இதில் மிகைபடுத்தப்பட்ட செய்திகள் அதிகம் உள்ளன சவுக்குக்கு இது அழகல்ல
இது நடைபெற்றதற்கான ஆதாரங்கள் ஒன்று கூட வைக்காமல் சொல்லப்படும் விஷயங்கள் எப்படி? உண்மையாக எடுத்துக் கொள்ளமுடியும். சத்தியவாணி முத்து கடிதம் நகல் கிடையாது. அப்போது நகல் எடுக்க முடியாது சரி. போட்டோ ஆதாரங்கள் கூட இல்லையே. இல்லை இது பற்றி அதிகாரிகள் எழுதிய புத்தக குறிப்புகள் இருந்தால் இதன் உண்மை தெரியும். இல்லை நடுநிலை பத்திரிகை ஆதாரங்களை வைத்தால் நம்பிக்கை வரலாம். ஆனால் அப்படி எதுவும் இந்த விஷயத்தில் இல்லையே. சர்க்காரியா கமிஷன் ஊழல் தான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உண்மை நிலை வெளிவரவேண்டும்.
அரசியல் கட்சிகள் ஆதாயம் அடையாமல் வெறும் முதலாளிகளுக்கு வாரிக் கொடுக்கும் செயலை செய்யாது. அவன்க ஒன்னும் தொழிலாளிக்கு வாரிக் கொடுத்தடலை. முதலாளிகளும் திருட்டுப் பயல்கள் தானே. திருட்டு கணக்கு எழுதுபவர்கள் கருப்பு பண முதலைகள் தானே.
பத்து ஆள் செய்யவேண்டியதை 5 ஆள் வைத்து செய்து அதிலும் லாபம் பார்ப்பவன்கள் முதலாளிகள். அதில் கமிஷன் வாங்குவது அரசியல் கட்சிகளின் வாடிக்கையான நிர்பந்தம். தேர்தலுக்கு அதை தானே செலவு செய்யறாங்க. ஆனால் அது எந்தளவுக்கு அதிக ஊழலாக போகிறது என்பது தான் இன்றைய மக்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் அது எந்தளவுக்கு மிகப்பெரிய ஊழலாக காட்டப்படுகிறது என்பது மக்களுக்கு தெளிவாக வேண்டும்.
உண்மையை உங்களது மனசாட்சியை வைத்து சொல்லுங்கள் சர்கார்ரியா கமிஷன் எதற்கு போடப்பட்டது ஸ்பெக்ட்ரம் ஊழல் ஏன் வெளி வந்தது என்பது அப்பொழது குற்றசாட்டுகள் சொன்ன எம்ஜிஆர் என்ன சொன்னார் ஏன் சொன்னார் என்பதனை மோகனகுமாரமங்கலம் ஆவியை கேட்டால் சொல்லும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று சொன்ன தால் பிஎஸ்என்எல் தறபொதைய நிலையை தெரிவியுங்கள் நிலக்கரி ஊழல் என்றதால் மின்சாரம் இல்லாமையால் அவதியுறும் அனைத்து தொழில் மற்றும் மக்களின் நிலையினையும் தெரிவியுங்கள் மேலும் http://profit.ndtv.com/news/opinions/article-opinion-a-sensible-strategy-for-india-avoid-economic-grandstanding-385308?pfrom=home-otherstories இதனையும் படித்து பார்த்து சொல்லுங்கள் போதும் அப்பாவி மக்களை ஏமாற்றுவது Sorry to say these In emergency period Governor’s rule you can get any statement from any body why sarkaria commission refuse for cross exams by aggrieved party similarly why the PAC not accept Mr.Raja disposition statement and also not call him for any clarification eventhough he is rady to give.so kindly unbiased in your news
அபத்தமான குறியீடுகள் ..உங்களுக்கு இந்த விஷயத்தில் எவ்வளவு தெரியும் என்பதை விளக்கி எழுதினால் அர்த்தம் உண்டு. அதை விடுத்து அர்த்தமில்லாத மறைமுக குறியீடுகளும் சுட்டிகளும் இடுவது வேடிக்கையாக இருக்கிறது. If you have some thing to say come out openly. Your link is showing about India’s GDP performance
in 2013 which is irrelevant to this article. People who have lived and observed during this 70s politics will know about how accurate this Savukku article. If you have more to say, say with substance.
Antha mulaippaal patri Oru katturai poottal innum sssirrrappaga irukkum….
மாட்டுப்பால், ஆட்டுப்பால், நாய்ப்பால், நரிப்பால் என்று ஒவ்வொன்றும் சுட்டி தனித்தன்மையுடன் கூறப்பட்டாலும், முலைப்பால் என்று அவை விளிக்கப்படுவதில்லை. முலைப்பால் என்பது மானுடத்தில் மிக புனிதமாக கருதப்படும் ஒப்பற்ற ஒரு மருந்து, அதைக்கூட கவர்ந்து சுயநலவாதி கருணா தினமும் புஷ்டிக்காக குடிப்பதாக நம்பகமான தகவல்கள் உண்டு.
Could be correct
தலைவர்தான் ஊழலில் அரிச்சுவடி ஆரம்பித்தவர் போலும் என்றே நினைத்தேன் ஆனால் தலைவர் அப்பவே “விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர்” என பட்டமே வாங்கி இருக்கிறார் :p
வயது எப்போது மாறினாலும் மாறாதது அந்த (திருட்டு) புத்தி மட்டுமே
காற்று வெளி
கரி
ஊற்று நீர்
ஆற்று மணல்
பூச்சி மருந்து
நிலம்
வான் அலை
வாய் பேச்சு
மாற்றான் மனைவி
மலை
சவப் பெட்டி
சங்கத் தமிழ்
சுடு காடு
தினகரன் ஊழியர்கள்
திரைப்படம்
ஈழ மக்கள்
முலைப்பால்
அனைத்திலும் முறைகேடு செய்து வாழ்வு கண்டவன் என்றால் ஊழல் மலை கருணாநிதி.
தொடரும்…………….
சங்கர்,
தொடர்ந்து எழுதுங்கள்.
எத்தனை வகை ஊழல்கள்? எத்தனை வகை வில்லங்கங்கள்?.
தெட்சிணாமூர்த்தி திறமைக்காரன்தான்யா!
இதையெல்லாம் ஒருவாட்டி படிச்சிருந்தாலே ஜெ. யாருக்கும் தெரியாமல் சிக்கிக் கொள்ள முதடியாதபடி ஊழல் செஞ்சிருக்கலாம்.
ஆனா ஒண்ணு, வட இந்திய முதலமைச்சர்களெல்லாம் 90களில் தான் இந்த கட்டத்துக்கே வந்தார்கள்.
அய்யாவும், அம்மாவும் இதையெல்லாம் தாண்டி எங்கோ போய்விட்டார்கள். அவர்கள் அடிப்படை சேவைகளில் கை வைப்பதில்லை என நினைக்கிறேன். அதை அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் விட்டு விட்டார்கள் போல. .