டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசானார். தலித் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து தன் சமூகத்தினரையே பகைத்துக்கொண்ட சூழலில் ‘தமிழ்க்குடிதாங்கி’ என்றெல்லாம் தலித் அமைப்பினர் அவரை வாழ்த்தினர்.
இன்றோ மிக மோசமான, ஆபத்தான தலித் விரோத அரசியல் பேசுகிறார். பணம், பகட்டு, அதிகாரம் இவற்றுக்காகவும், தன் குடும்பத்தினரின் நலனுக்காகவும் எதையும் துறந்துவிடத் தயாராயிருக்கும் சராசரி அரசியல்வாதியாகிவிட்டார்.
தமிழகத்தின் மிக மிக முக்கியமான தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர். ஆனால், காலம் அவரை மிக மிக கடைந்தெடுத்த ஒரு சந்தர்ப்பவாதியாக மாற்றி, புயலில் சிக்கிய ஓலைக்குடிசையின் கூரையாக மாற்றிப் போட்டிருக்கிறது.
ஒரு சாதாரண மருத்துவராகத்தான் தன் பொது வாழ்வை துவக்கினார் மருத்துவர் ராமதாஸ். திண்டிவனத்தில் பழைய பாலத்தின் அருகேதான் அவரது கிளினிக் இருந்தது. மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்ததாகவும், அவரது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட அவர் மிகுந்த மரியாதையோடு நடத்தியதாகவும் தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
வன்னிய சமுதாய மக்கள் ஒரு கணிசமாக வாக்கு வங்கியாக இருந்தாலும், தொடர்ந்து, சட்டமன்றம், அரசு நிர்வாகம் போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை என்பது அவர்களின் மிகப் பெரிய மனக்குறையாய் இருந்தது. இது போன்ற நிராகரிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்றுதான் பெரும்பான்மை வன்னிய மக்கள் நினைத்தனர்.
இந்தச் சூழலில்தான், வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வருகிறார் மருத்துவர் ராமதாஸ். 1980களில், வன்னிய சமுதாயத்தின் இந்தக் குமுறல் அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் தனி இட ஒதுக்கீடு பெரியதொரு போராட்டமாக வெடித்தது. தென் மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து போனது. இந்தப் போராட்டம் நடக்கையில், மீன்சுருட்டியில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போடப்பட்டன. போக்குவரத்து 10 நாட்களுக்கு முற்றிலும் ஸ்தம்பித்தது.
அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், பேச்சுவார்த்தையின் மூலம், இந்தப் பிரச்சினையை முடிக்காமல், அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த மோகன்தாஸ் என்ற காவல்துறை அதிகாரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, போராட்டத்தை அடக்க முற்பட்டார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் இறந்தனர்.
அந்தப் போராட்டம், மருத்துவர் ராமதாசை வன்னிய மக்கள் மத்தியில் பெரிய சக்தியாக அடையாளம் காட்டியது. அந்த அங்கீகாரத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் உண்மையிலேயே முயன்றார்.
அப்போது வன்னியர் சங்கத்தின் முக்கிய முழக்கம், “தேர்தல் பாதை, திருடர் பாதை” “தேர்தலை புறக்கணியுங்கள்” என்பதுதான். இந்த முழக்கம், 80களின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஓரளவு பரவலாக கால் ஊன்றியிருந்த நக்சலைட் இயக்கங்களின் பார்வையை வன்னியர் சங்கத்தின் பக்கம் திருப்பின.
ஆனால் 80களின் இறுதியிலேயே நக்சலைட் இயக்கங்கள், காவல்துறையின் கொடிய அடக்குமுறையாலும், இப்போது போல தகவல் தொடர்பு அப்போது வளர்ந்திருக்க வில்லை என்பதாலும், சிதைந்து போயிருந்தன. அப்போது நக்சலைட் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்த, கருத்தியலாளர்களாகவும், அறிவு ஜீவிகளாகவும் அறியப்பட்ட, பேராசிரியர்களும், கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும் நக்சலைட் இயக்கத்தின் சிதைவின் பின்னணியில், தங்களை வன்னியர் சங்கத்தோடு இணைத்துக் கொண்டனர்.
அந்தக்கட்டத்தில்தான் மருத்துவர் ராமதாஸ் இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம் தந்த பலத்தில், வன்னியர் சங்கத்தை ஓர் அரசியல் இயக்கமாகவும் உருவாக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.
அப்போது அரசியல் சித்தாந்த ரீதியாக மிகப் பெரிய அறிவு ஜீவிகளாக இருந்த, திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகியோர், பாட்டாளி மக்கள் கட்சி என்று இக்கட்சிக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர். பாட்டாளி என்ற பெயர் வருவதற்கு காரணம், இவர்கள் இருவரைப் போன்ற முன்னாள் நக்சலைட்டுகள் தான். அப்போது இவர்களோடு இணைந்து இருந்தவர், இப்போது பிரபா.கல்விமணி என்று அறியப் படும் பேராசிரியர் கல்யாணி.
வன்னியர்கள் மட்டுமல்லாமல் பாட்டாளி மக்கள் அனைவருக்காகவும் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயரிடப் பட்டது.
கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் பாணியில் மிகப் பிற்படுத்தப்பட்டோரையும் தலித்துக்களையும் இணைத்து ஆட்சியையே பிடித்துவிடமுடியும் என்பது டாக்டரின் கனவு. கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகிய இருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் என்று, தனித்தனியே இரண்டு அறிக்கைகளை அளிக்கின்றனர்.
அந்த அறிக்கைகளில், தமிழ்வழிக் கல்வி, பிற்பட்டோர்-தாழ்த்தப் பட்டோர் ஒற்றுமை, உழைப்பாளி மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் போன்ற முற்போக்கான பல கொள்கைகள் அதில் இடம் பெற்றன.
இந்த இரண்டு அறிக்கைகளும், பேராசிரியர் கல்யாணியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பல முறை விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் மூர்த்தி அவர்கள், ஒரு அரசியல் கட்சி என்பது, சாதிகளின் கூட்டமைப்பே. அதனால், அனைத்து சாதியினருக்கும், உரிய அங்கீகாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் வழங்கப் பட வேண்டும் என்று முன் மொழிந்தார். இவரின் இந்த வாதத்தை மருத்துவர் ராமதாஸ் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
அதன் படியே, வள்ளிநாயகம் என்ற தலித்துதான், பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டார். சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, உரிய அங்கீகாரம் வழங்கப் பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 13 ஆண்டுகளாக சிறையில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கும், குணங்குடி ஹனீபா, பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளராக நியமிக்கப் பட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் ஏற்கப் பட்டு, தலித்துகளுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல இடங்களில் மருத்துவர் ராமதாஸ் போராட்டங்களை நடத்தினார். பல இடங்களில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.
பேராசிரியர் மூர்த்தி, கருணா மனோகரன், பேராசிரியர் கல்யாணி போன்றோருடன், பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்தும் நிர்வாகக் குழுவில், பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தீரன், விமலா மூர்த்தி போன்ற பலர் இருந்து மருத்துவர் ராமதாசோடு சேர்ந்து, கட்சியை திறம்பட வழிநடத்தினர்.
“தடா” சட்டத்தை எதிர்த்து, அடக்குமுறை சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை மருத்துவர் ராமதாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து தொடங்கி, தமிழகம் முழுக்க, தடா சட்டத்தை எதிர்த்து இயக்கங்களை நடத்தினார்.
இது தவிர தமிழகம் முழுக்கவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிகழ்வுகளில், மருத்துவர் ராமாதாசோடு இணைந்த அணி, பல்வேறு செயற்பாடுகளை நிகழ்த்தியது. தமிழகம் முழுக்க, தலித்துகள் தொடர்பான பிரச்சினைகளில், மருத்துவர் ராமதாஸ் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்று, அவருடன் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள்.
தஞ்சை மாவட்டம் குடிதாங்கி என்ற கிராமத்திற்கு வந்திருந்த தலித் ஒருவரின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லவேண்டுமானால் சாதி இந்துக்கள் வாழும் தெரு வழியேதான் எடுத்துச் செல்லவேண்டும் என்ற நிலையில், அவ்வாறு எடுத்துச் செல்ல வன்னியர் தலைவர்கள் மறுக்க, பெரும் பிரச்சினையாகி, நேரடியாக இராமதாஸ் சென்று அவர்களிடம் மன்றாடியும் பயனில்லை. இறுதியில் உடல் எங்கு இறந்தாரோ அந்தவீட்டின் பின் புறத்திலேயே புதைக்கப்பட்டது. அடுத்து ஒரு தலித் அப்பகுதியில் இறக்கும்போது சாதி இந்துக்கள் வாழும் தெருக்கள் வழியாகவே எடுத்துச் சென்று உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வேன் என சூளுரைத்து, அவ்வாறே செய்தும் காட்டியபோதுதான், திருமாவளவன் அவருக்குத் தமிழ்க்குடிதாங்கி பட்டமும் வழங்கி கவுரவித்தார். இந்தப் போராட்டம் மருத்துவர் ராமதாஸின் அரசியல் வாழ்வில் ஒரு மிக முக்கிய திருப்புமுனை. உள்ளபடியே, தலித்துகளின் மீது உள்ளார்ந்த அன்போடுதான் ராமதாஸ் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். ராமதாஸோடு அப்போது பணியாற்றியவர்கள், இவர் இன்னொரு பெரியாராக உருவாகும் அளவுக்கு சிறந்த தலைவராக வருவார் என்றே நம்பினார்கள். ஆனால், ராமதாஸின் பின்னோக்கிய வளர்ச்சி, பின்னாளில் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
சாவு செய்தி சொல்லுதல், இறந்த மாடுகளின் தோலை உரித்தல் போன்ற இழிச் செயல்களில் இறங்குமாறு தலித் மக்கள் வற்புறுத்தப் படமாட்டார்கள் என தலித் தலைவர் இளையபெருமாளுடன் 10-அம்ச ஒப்பந்தம் கூட போட்டார் இராமதாஸ். இப்படியாக 90களின் முற்பகுதி வரை தலித் மக்களின் நல்லெண்ணத்தையும் பெற்றார் அவர்.
தொடக்கம் உண்மையிலேயே நம்பிக்கையூட்டுவதாகத்தான் இருந்தது. அவர் திண்டிவனத்தில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரைச் சந்தித்தவர்கள் சொல்கிறார்கள். அவர் மேசையின் மேல் ஒரு “சைபால்“ டப்பா வைத்திருப்பாராம். வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளிடம், மருத்துவ கட்டணத்தை அந்த டப்பாவில் போடச் சொல்லுவாராம்“. யாராவது அவரைப் பார்க்க வந்தால், அந்த டப்பாவிலிருந்து, சில்லரைக் காசுகளை எடுத்து, அருகில் உள்ள தேநீர்க் கடையில் பால் வாங்கி வந்து, கொடுத்து உபசரிப்பார் என்று கூறுகிறார்கள்.
அப்போதெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம், தனது மகன் அன்புமணி பற்றி, எப்போதும் குறை பட்டுக் கொள்வார் என்கிறார்கள். தனக்கு நெருக்கமானவர்களிடம், “பாருங்க சார், படிக்கவே மாட்டேங்குறான். எப்ப பாத்தாலும், அவங்க வீட்டுலேயே (சம்பந்தி கிருஷ்ணசாமி ) கெடக்குறான். பாருங்க இவன் டாக்டராவான்னு நம்பி, டிட்கோவுல 20 லட்ச ரூபா லோனப் போட்டு, மருத்துவமனை கட்டியிருக்கேன். இவன் என்னடான்னா படிக்கவே மாட்டேங்குறான். லோன எப்படிக் கட்டப் போறேன்னு தெரியல“ என்று புலம்புவார் என்று கூறுகிறார்கள். இப்போது லோன் திருப்பிக் கட்ட கஷ்டப் படக்கூடிய நிலையிலா டாக்டர் இருக்கிறார் ? இதுதான் அன்றைய மருத்துவர் ராமதாஸ்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட, சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டார்.
இதற்கு அவரோடு இணைந்து பணியாற்றிய பேராசிரியர் கல்யாணி போன்றோர் மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றனர். பேராசிரியர் கல்யாணியிடம் பேசிய போது, மருத்துவர் ராமதாஸ், அவரைப் போன்ற பேராசிரியர்களும், முன்னாள் நக்சலைட்டுகளும், வழங்கும் ஆலோசனைகளை உடனடியாக கேட்டுக் கொண்டு செயல்படுத்துவார் என்று நினைவு கூறுகிறார்.
இன்றைக்கு இருப்பது போன்ற வன்னியர் அறக்கட்டளையும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களும், அப்போது ராமதாஸிடம் இல்லை. ஒரே ஒரு கார் வைத்திருந்தாராம். அந்தக் காருக்கும் பெட்ரோல் போட்டு கட்டுப்படியாகாது என்பதால், கூட்டங்களுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், பேருந்தில் சென்று இறங்குவார். இறங்கிய இடத்திலிருந்து கட்சிக்காரர்கள் ராமதாசை காரில் அழைத்துச் செல்லுவார்கள் என்று, திண்டிவனத்தில், ராமதாசோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.
“தேர்தல் பாதை திருடர் பாதை“ என்று வன்னியர் சங்கம் எந்த முழக்கத்தை முன் வைத்ததோ, அந்த முழக்கம் மருத்துவர் ராமதாஸ் விஷயத்தில் உண்மையாகிப் போனது.
தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம் செய்து அதன் காரணமாகவும் அரசின் அடக்குமுறையினை அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. பெரிதாக அத்தகைய பிரச்சாரம் எடுபடாத நிலையில் தேர்தல்களத்தில் இறங்கினர்.
1989ல் நடைபெற்ற தேர்தலில் ஓரிடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லையாயினும், தனித்துப் போட்டியிட்டு, 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்றது பாமக.
1991 நாடாளுமன்றத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்தது கட்சி. ஏழு இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியுற்றாலும் கணிசமான வாக்குக்களைப் பெற்றது. குறிப்பாக தர்மபுரியில் போட்டியிட்ட பு.த.இளங்கோவன் திமுகவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தடாலடி அரசியல் மூலமாகவே பாமக செல்வாக்கு பரவக்காரணமாயிருந்த இளங்கோவன் இன்று கட்சியிலில்லை. அன்புமணிக்குப் போட்டியாகிவிடுவார் என்பதால் அவரை வெளியேறச் செய்தார் ராமதாஸ்.
அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாமக ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அப்பொழுது பாமகவின் சின்னம் யானை. அந்தத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன். யானை சின்னத்தில் வெற்றி பெற்றதால், முதல் நாள் சட்ட மன்றத்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் யானையில் அழைத்து வரப்பட்டார்.
பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருந்தாலும், 1992ல் அக்கட்சி நடத்திய “தமிழர் வாழ்வுரிமை மாநாடு” பாட்டாளி மக்கள் கட்சியின் பலத்தையும், உணர்வையும் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
1992 என்பது, ராஜீவ் மரணத்துக்கு மறு ஆண்டு. அப்போது “தடா” என்ற கடுமையான ஆள் தூக்கிச் சட்டம் அமலில் இருந்தது. விடுதலைப் புலிகள், பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே, தடா சட்டம் பாயும் என்தான ஒரு சூழல் அது.
அந்தச் சூழலில், பிரபாகரன் படங்களையும், புலிக் கொடிகளையும் ஏந்தி, பெரியார் திடலில், “தமிழர் வாழ்வுரிமை மாநாடு” நடை பெற்றது. மிகப் பெரும் பலத்தோடு அப்போது ஆட்சியில் இருந்த, காவல்துறையை வைத்து, நீதிபதியின் மருமகன் மேலெல்லாம் கஞ்சா வழக்கு போடும் நிலையில் செல்வி.ஜெயலலிதா இருந்தார். இருந்த போதும், பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இந்த மாநாடு, ஜெயலலிதாவை திகைக்க வைத்தது.
சட்டமன்றத்தில் கடுமையாக பாமகவைத் தாக்கிப் பேசினார். பண்ருட்டியை பதிலளிக்கவே விடவில்லை. 22.03.1995 அன்று இராமதாஸ் கைது செய்யப்பட்டார். சிறையில் ராமதாஸின் உடல் நிலை சீர்கெடவும், அவரது மனைவி சரஸ்வதி, ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகே, ராமதாஸ் விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது ராமதாஸ் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, இவ்வாறு குறிப்பிட்டார். “ஒரு சில தலைவர்களுக்கு கூட்டம் போடத் தெரியும். ஊர்வலம் நடத்தத் தெரியும். தொண்டர்களைத் தூண்டி வன்முறையில் ஈடுபடச் செய்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கத் தெரியும். ஆனால் காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விட்டால் அவர்கள் பேசிய வசனங்கள் காற்றில் பறந்து ஓடி விடும். தொண்டர்களின் நினைவும் மறந்து விடும். சிறையின் அசௌகரியங்களை சிறிது நேரம் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல் எப்படியாவது வெளியே வந்து விடத் தோன்றும். அதற்குத் தயாராக இடுப்பு வலி, தலைவலி, திருகுவலி, நெஞ்சுவலி, என்று இது வரை இல்லாத வலிகள் எல்லாம் திடீரென்று முளைத்து விடும்.
டாக்டர் ராமதாஸை கைது செய்து ரிமாண்ட் செய்யும்போது, அதை எப்படியும் தடுக்கும் எண்ணத்தில் திடீரென இடுப்புவலி, நெஞ்சுவலி என்று மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அங்கு மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்பு, காவலர்கள் அவரை ரிமாண்டு செய்ய முற்பட்டவுடன் வேறு வழியின்றி சிறையில் உள்ள அசௌகரியங்களை பொறுத்துக் கொள்ள முடியாமலும், பழகிப் போன சுகங்களை விட்டுக் கொடுக்க முடியாமலும், தன்னை உடனே விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி தனது மனைவி மூலமாக எனக்கு ஒரு வேண்டுகோள் அனுப்பியிருக்கிறார்.
டாக்டர் ராமதாஸின் மனைவி எனக்கு அளித்துள்ள வேண்டுகோளை ஏற்று ஒரு பெண்மணியின் துயரை இன்னொரு பெண்மணியால்தான் புரிந்துகொள்ள முடியும் என்பதால் டாக்டர் ராமதாஸை உடனடியாக வேலூர் சிறையிலிருந்து விடுவிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.” இதுதான் ஜெயலலிதாவின் அறிக்கை. இதே ஜெயலலிதா, ராமதாஸை மீண்டும் கைது செய்தது வரலாறு.
1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, அப்போது, “திவாரி காங்கிரஸ்“ என்ற ஒரு “உப்புமா“ கட்சியை நடத்திக் கொண்டருந்த வாழப்பாடி ராமமூர்த்தியோடு சேர்ந்து போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது.
பாமக ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்றாலும், அந்த ஆண்டு தேர்தலில் அடித்த “ஜெயலலிதா எதிர்ப்பு அலையையும்“ மீறி, பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
1998ம் ஆண்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எப்படியாவது தன் பலத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த செல்வி ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டு சேர்ந்தார். அவரும் அழைத்தார். இவரும் இசைந்தார். அக்கூட்டணி பாரதீய ஜனதாவுடன் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பாஜகவுடன் கை கோர்ப்பது ஜெவுக்கு எளிதாக இருந்திருக்கலாம். அவர்தான் 1992லேயே பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படவேண்டும், பாபர் மசூதி இந்துக்களிடம் ஒப்படைக்கப்படலாம் எனப் பேசியவராயிற்றே, தனது இறைப் பற்றை மறைக்காதவர்.
ஆனால் இராமதாஸ் எப்படி அந்த அணியில்? அம்பேத்கர், பெரியார் காரல் மார்க்ஸ் படங்களையெல்லாம் லெட்டர் பேடில் போட்டுக்கொண்டு?
அதைவிடவும் அதிர்ச்சி அளித்ததது அவர் ஜெவுடன் கூட்டணி அமைத்ததே. சிறந்த பேச்சாளர் இல்லையென்றாலும் முழங்குவதில் ஒன்றும் குறைவிருக்காது. ஜெயலலிதாவோடு கூட்டணி அமைப்பதென்பது பெற்ற தாயையே பெண்டாளுவதாகும் எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் இராமதாஸ்.
அஇஅதிமுக கூட்டணி குறித்து முடிவெடுக்கக் கூட்டப்பட்ட கட்சியின் பொதுக்குழுவைப் புறக்கணித்த கட்சித் தலைவர் தீரன் பொதுக்குழுவினருக்கும் பத்திரிகையாளருக்கும் ராமதாசின் தாய் உறவு கூற்றையே மேற்கோள் காட்டிவிட்டார். அதற்கு என்ன பதில் சொல்வது? கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் தீரன். போராட்டங்களில் பங்கேற்று, போலீஸ் தடியடியில் பார்வை பாதிக்கப்பட்டவர் தீரன். அரசியல் அநாதையானார். அவரே பின்னாளில் அஇஅதிமுகவில் இணைந்தது இன்னமும் சோகம்,
சரி யாரிருந்தால் என்ன இல்லாவிடில் என்ன? அப்போது கோவை குண்டு வெடிப்புக்கள் வேறு. தமிழகத்தில் திமுக-தமாகா அணி படுதோல்வி அடைந்தது. ராமதாசின் பங்கிற்கு நான்கு இடங்கள். போதாதா அமைச்சர் பதவி கோர ?
மூன்று அமைச்சர்கள். ஒருவர் ஒன்றுக்கும் உதவாத வேலூர் சண்முகம். இன்னொருவர் கட்சியின் பொதுச் செயலாளர் தலித் எழில்மலை. மற்றொருவர், பொன்னுச்சாமி. வன்னியர்களின் கடும் எதிர்ப்பை மீறி எழில்மலைக்கு நலவாழ்வுத் துறை இணை அமைச்சர் பொறுப்பை வாங்கிக்கொடுத்ததாகப் பெருமை அடித்துக்கொள்வார் இராமதாஸ் அப்போது.
ஆனால் அமைச்சகத்தை நடத்தியதே அன்புமணியும் அவரது உதவியாளர் ஒருவரும்தான். எழில்மலை வெறும் டம்மி. எல்லா பேரத்தையும் அமைச்சரின் அறைக்கு உள்ளே அமர்ந்திருந்த அன்புமணியும். அந்த உதவியாளரும்தான் நடத்தி முடித்தனர். இது பற்றி பின்னாளில் எழில்மலை பலரிடமும் சொல்லிப் புலம்பியிருக்கிறார்.
அதையும் மீறி குட்கா தடை என்று அறிவித்து அதை நீக்கியதில் பல கோடிகள் பார்த்ததாகவும், அது முழுமையாக வந்து சேராததால் இராமதாசுக்குக் கடும் கோபம் என்று கூட சொல்லுவார்கள்.
மொத்தம் இருந்தது மூன்றே மூன்று அமைச்சர் பதவிகள். அந்த மூன்றில் இரண்டை தலித்துகளுக்கு அளித்தார் ராமதாஸ் என்பது பலருக்கு வியப்பான செய்தியாக இருக்கும். பொன்னுச்சாமி மற்றும் தலித் எழில்மலை ஆகியோர் தலித்துகள். சண்முகம் மட்டுமே வன்னியர். இப்படி இருந்த ராமதாஸ்தான் பின்னாளில் தலித்துகள் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வன்னியப் பெண்களை கவர்கிறார்கள் என்று பேசும் அளவுக்கு தரம் தாழ்ந்து போனார்.
பாமக பொறுப்பில் இருந்த பெட்ரோலியத் துறையில் இராமதாசின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது. ஆண்டுதோறும், நலிவடைந்த மற்றும், தலித்துகளுக்கு, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் வழங்குவதற்காக நேர்முகத் தேர்வு நடத்தும். இந்த நேர்முகத் தேர்வுக்கு, என்னுடைய நண்பரோடு, நானும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. டிஎம்எஸ் எதிரில் உள்ள, ஸ்ரீலேகா இன்டர்நேஷனல் ஹோட்டலில்தான் நேர்முகத் தேர்வு நடந்தது.
அங்கே இருந்த, நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரியின் பி.ஏ, விண்ணப்பித்திருந்த என் நண்பரைப் பார்த்துச் சொன்னது, “இந்த இன்டர்வ்யூ எல்லாம் வெரும் ஐ வாஷ் சார். நேரா, தைலாபுரம் தோட்டத்துக்கு போயி, டாக்டர பாருங்க. அவர் நெனச்சா உங்களுக்கு அலாட்மென்ட் உண்டு. ஒரு அலாட்மென்ட்டுக்கு ரெண்டு லட்சம் ஆகும்“ என்று கூறினார்.
இந்த 1998ற்குள், ராமதோசோடு, ஆரம்பகாலத்தில் இருந்த அறிவு ஜீவிகள் அனைவரும் சிறிது சிறிதாக அவர் கட்சி நடத்தும் போக்கைப் பார்த்து மனம் நொந்து விலகத் தொடங்கினர்.
1998ல் உருவான வாஜ்பேயி அரசு 13 மாதங்களே பதவியில் இருந்தது. இந்த 13 மாதங்களில், ராமதாஸ், பல கோடிகளுக்கு அதிபதி ஆனார்.
புரட்சித் தலைவி தனது ஆதரவை திடீரென்று வாபஸ் பெற்றார். ஆனால் இராமதாசோ வாழப்பாடியோ பதவி விலகத் தயாரில்லை. மதச்சார்பின்மை பேசுவதை விட வாஜ்பேயி/கார்கில் ஜோதியில் கலப்பது நல்லது என்று முடிவெடுத்து, திமுகவின் பின்னால் பாமகவும் வாழப்பாடியின் கட்சியும் அணிவகுத்தன. அந்த அணியே வெற்றி பெற்றது தமிழ்நாட்டில். இப்போது இராமதாசுக்கு 5 இடங்கள். ஆனால் தலித் முகம் எழில்மலை கழற்றிவிடப்பட்டார். தேர்தல் டிக்கெட் இல்லை எனத் தெரிந்தவுடன் கட்சியை விட்டு வெளியேறிய அவர் செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர்விட்டுக் கதறினார். அது அவருடைய தரம். பின்னர் அஇஅதிமுகவில் சங்கமித்தார். இப்போது எங்கிருக்கிறார் என்று அவரைத் தான் கேட்கவேண்டும். ஆனால் எதிலும் ஈடுபடவேண்டிய அவசியமில்லை இந்த தலித் போராளிக்கு. செட்டிலாகிவிட்டார்.
வன்னியர்களுக்கு அதிருப்தி எனவேயே எழில்மலையைத் தள்ளிவைக்க நேர்ந்தது எனச் சொல்லிக்கொண்டார் இராமதாஸ். ஏவலாள் ஏ கே மூர்த்தியும் சண்முகமும் அமைச்சர்களாயினர். மூர்த்தி இரயில்வேயிலும் சண்முகம் முதலில் நிலக்கரி பின்னர் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களைக் கண்காணிக்கும் துறையிலும் இணை அமைச்சர்கள். பணம் கூரையைப் பிய்த்துக்கொட்டத் தொடங்கியது.
வன்னிய சமுதாய மக்களுக்கோ தங்களுக்கு புதிதாக கிடைத்துள்ள அதிகாரம் பற்றி ஒரே பூரிப்பு. தங்கள் சமுதாயத்தை வாழ்வாங்கு வாழ வைக்க வந்து விட்டார் என்று மருத்தவர் ராமதாசை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஆனால், அவரைப் பொறுத்த வரை, வன்னிய சமுதாயம் என்பது, அவரது குடும்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை, மக்கள் வெகு தாமதமாகத்தான் உணர்ந்தார்கள். அவர்களது வெறுப்பும் எதிர்ப்பும் 2009ல் தான் வெளிப்பட்டது. அதுவரையிலான இராமதாசின் அபரிமித வளர்ச்சி பலரையும் வாய் பிளக்கவைத்தது.
தொடரும்.
இப்படி எழுதிதான் உன் அரிப்பை தீர்த்துக்கொள்ள முடியும். வேறு வழியில்லை.
அருமை
ஊர்குருவிக்கு செய்திக்கு தொடாடபில்லாத ஏதாவது ஒன்னு புலம்பரதே வேலையா போச்சு ஜெயலலிதாவ நோக்கு தெரியுமோ இல்லியோ.. ஆத்துல் அவுக ஷவுக்கியா இருக்கேலா..
ஊர்குருவிக்கு செய்திக்கு தொடாடபில்லாத ஏதாவது ஒன்னு புலம்பரதே வேலையா போச்சு.
ஜெயலலிதாவ நோக்கு தெரியுமோ இல்லியோ.. ஆத்துல் அவுக ஷவுக்கியா இருக்கேலா..
வன்னியர்களின் எழுச்சியை பார்த்து பொறாமை புழதிவாரி தூற்றுகிரீர் . செயலலிதாவும் கருணாநிதியும் பிறவியில் கோடிஸ்வரர்களா?
அடுத்து பா.ம.க தலைவர் ராமதாஸ்.. என்ன சொன்னார்? 10 நாட்களில் ரிலையன்ஸ் பிரஷ்-ஐ மூடா விட்டால் நடக்கிறதே வேற என்று 2007 மார்ச் 20 யில் அறிக்கை விட்டார். இன்று ரிலையன்ஸ் செல்பவர்களின் காலைத் தொட்டு போகாதீர்கள் என்று கதறுகிறார்.
இவர்கள் தான் மத்தியில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி கலந்து கொண்ட கூட்டத்தில் தான் இந்த மக்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்று மக்களை பார்த்து போகாதீர்கள் என்று காலில் விழ வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்திலேயே மன்மோகன் சிங், மற்றும் ப.சிதம்பரத்தின் காலில் விழுந்து ரிலையன்ஸ் பிரஷ்-ஐத் தடுத்து இருக்கலாமே?
அது வேற வாயி… இது நாற வாயி… 🙂
நல்ல கட்டுரை.
ஒருவேளை அன்புமணி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இந்நேரம் அய்யா ராமதாஸ் தமிழகத்தின் முக்கிய தலைவராக இருந்திருப்பார். அவரே முன்நின்று பல சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்திருப்பார்..
பதவி ஆசை ஒருமனிதனை இவ்வளவு கீழ்த்தர நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.
பி.டி.அரசகுமார், பொங்களூர் மணிகண்டன் போன்றவர்களோடு இணைந்து மட்டமான அரசியல் செய்யும் நிலைக்கு போன அய்யா ராமதாசை எண்ணி வருத்தப்படத்தான் முடியும்.
அப்போ ராமதாசு இப்போ சாதி (தாசு) ..
சாதி அரசியல் பேசி பிழைத்து கொண்டு தன் சமுதாயத்தை முன்னேற்றுகின்றேன் என்று கூறி கொண்டு மற்ற சாதியை மற்ற சாதி மக்களை பற்றி அவதுறாக பேசி தன் சாதி மக்களின் வாக்கு தன் கட்சிக்கு முழுவதும் கிடைக்க வேண்டுமென்று மனதில் வைத்து தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வருகிறார்
எப்படி ஹிந்து மக்கள் வாக்கிற்காக நாடு முழுவதும் ஹிந்து மக்களை தூண்டி விட்டு முஸ்லிம் மக்களுக்கும் ஹிந்து மக்களுகிடைய கலகம் செய்து ஹிந்து மக்களின் வாக்கை பெற்றுவிட நினைக்கும் RSS BJP மோடி போலவே ராம(சாதி)தாசும் தமிழ் நாட்டில் இதே போன்ற வழியை பின்பற்றி வாக்குகளை பெற எண்ணுகிறார் .
சரியான கூட்டணி தானே இது ” நாட்டு மக்களை பிளவும் செய்யும் கூட்டணி “
வணக்கம் சவுக்காரே !!
சாதிவெறி பத்திரிகை நடத்தும் நீங்கள் சாதிக்கு அப்பாற்பட்டு சர்வதேச பத்திரிக்கையாக வளம் வர முயற்சி செய்யுங்கள். நாங்களும் ஆதரிப்போம்…நடுநிலையான பத்திரிக்கைகளை மருத்துவர் அய்யா அவர்களும் ஆதரிப்பார்….
நாங்கள் மரம்வெட்டி தான்!அதன் காரணம் நாடே அறியும், நன்றி உள்ள 108 சாதிகளும் அறியும்…இன்று நாங்கள் “மரம் நட்டி”.. பசுமைத்தாயகம் மூலம் பல லட்ச மரக்கன்றுகளை நட்டு உள்ளோம். ஊழல் செய்யும் திராவிட “செல்வி செல்வர்”களுக்கு மத்தியில் “மரம்வெட்டி” வம்சத்தில் வந்த திரு.அன்புமணி ராமதாஸ் இந்திய சுகாதார அமைச்சராக உலக அரங்கத்தில் புகழ் பெற்றதை, சுகாதார துறையில் இந்தியாவிற்கு ஆற்றிய சேவைகளையும் திட்டங்களையும் நாடு மறந்திருக்காது. சாதி வெறி சவுக்காரே!!!.
நன்றி வணக்கம். பாக்கியராசன்- துபாய்.
வணக்கம் சவுக்கு!!
டேய்.. டேய்… நீங்க யாருன்னு (சவுக்கு) எங்களுக்கு தெரியும்! நாங்க(வன்னியர்ஸ்) யாருன்னு உங்களுக்கு தெரியும்!! நாம ரெண்டு பேரும் யாருன்னு தமிழ் நாட்டு மக்களுக்கே தெரியும்… உன்னிடம் ராமதாஸ் பற்றிய விளக்கத்தை யாரும் எதிர்ப்பார்க்க வில்லை.
சாதிக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு நடந்து கொள்ள சவுக்கு சாதி வெறி பத்திரிக்கையை கேட்டு கொள்கிறேன். நன்றி வணக்கம். பாக்கியராசன்- துபாய்
Dalit eylil malai might have expired
ராமதாஸ்
திருமா
விஜயகாந்த்
ஆகிய மும்மூர்த்திகள் ஆரம்பகாலத்தில் வேறு கட்சிகளின் அனுதாபிகளாக இருந்தாலும் திராவிடக்கட்சிகளின் சிதம்பலில் சிக்கித்தவித்து வெளியேற துடித்த அரசியல் தெரியாத அப்பாவித்தனமான மக்களின் புதிய சிந்தனைக்கோட்பாட்டுக்கு உரமூட்டுவார்கள் என நம்பப்பட்டவர்கள். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த மூவரும் வெவ்வேறு பெயர்களில் இயக்கங்கள் அமைத்திருந்தாலும் செயற்பாடு அனைத்தும் வாழும் வைரவர், வித்தமிழ் முத்தலர், குடும்பத்தலைவர், கோடரிக்காம்பு, கட்டுமரம், கருணாநிதியின் வழியிலிருந்து சற்றும் பிறழாமல் குறுநில மன்னர்களாக சிறு சர்வாதிகளாக அரசியல் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். கடவுள்தான் தமிழ்நாட்டை காப்பாற்றவேண்டும்.
Nalla thodar