தைலாபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டு வரவேற்பறையே அவரது ’வளர்ச்சியை’ செய்தியாளர்களுக்கு பறைசாற்றியது. முதலில் சாதா ரக ஸ்டீல், பிரம்பு நாற்காலிகள், பின்னர் கண்கவர் வேலைப்பாடுடனான மேசை நாற்காலிகள் பின்னர் அமர்ந்தால் அமுங்கிவிடக்கூடிய அதி வசதி லெதர் சோஃபாக்கள், அவரைப் பார்ப்பதற்கும் ஆயிரத்தெட்டு கெடுபிடிகள், செய்தியாளருக்கு ஆண்டுக்கொரு முறை ஐந்து நட்சத்திர ஓட்டலில் மதுபானங்களுடன் விருந்து, சென்னையில் ஒரு தொடுப்பு இப்படியாக அசுர வளர்ச்சி.
பணமும், செல்வாக்கும் கொழிக்கத் தொடங்கின. இதில் ருசி கண்ட பூனையான மருத்துவர் அய்யா, கம்யூனிசம், தமிழ் உணர்வு, கொள்கை, கோட்பாடு, அனைத்தையும், பணம் சம்பாதிக்க ஒரு அருமையான வழி என்று உணர்ந்தார்.
சில்லரை வாணிபத்தை ஒழிக்கும், எம்என்சிக்களுக்கு எதிராகவும், குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம், சில்லரை வணிகத்தில் இறங்குவதற்கு எதிராகவும், பெரும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ், சில நாட்களிலேயே, சத்தம் இல்லாமல், கொள்கையை கக்கத்தில் செறுகிக் கொண்டு, அமைதியானது இதற்கு ஒரு உதாரணம்.
பாட்டாளி மக்கள் கட்சி, தங்கள் கட்சியின் சின்னமாக, மாங்கனிக்குப் பதிலாக, குரங்கைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். தொடர்ந்து செழிக்க அணி மாறுவதே சரியான வழி என்பதை உணர்ந்த ராமதாஸ் தேர்தலுக்கு தேர்தல் திமுக, அ இ அதிமுக என்று கிளைக்குக் கிளை சற்றும் கூச்சப்படாமல் தாவிக்கொண்டிருந்தார். ஒரு கட்டம் வரை அது பெரும் பயனளித்ததும் மறுக்கமுடியாத உண்மை.
1998ல் அ இஅ திமுக கூட்டணியில் இடம்பெற்று மத்திய அரசிலும், அடுத்த ஆண்டு திமுக அணியில், மீண்டும் வாஜ்பேயி அமைச்சரவையில் என்று மேலே பார்த்தோம். அது மட்டுமல்ல. 2001ல் சட்டமன்றத் தேர்தல்களின்போது. மத்தியில் திமுகவுடன் கூட்டணி அரசில் பங்கேற்பு என்றாலும் மாநிலத்தில் அ இஅதிமுக பக்கம் சென்றது பாமக. ஜெயலலிதாவை, போயஸ் தோட்டம் சென்று சந்தித்த, ராமதாஸ், தங்களுக்கு எத்தனை இடம் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு “அன்புச் சகோதரி முடிவு செய்வார்“ என்று சகோதர பாசத்தை கொட்டினார். 20 எம்எல்ஏக்களையும் பெற்றார்.
ஆனால் பதவிப் பிரமாண நிகழ்ச்சிக்குக் கூட மிகத் தாமதமாகச் சொல்லி அனுப்பி அவரை வரவிடாமல் செய்தார் அம்மையார். அந்த அவமானத்தையும் விழுங்கிக்கொண்டார். தன் மகன் அன்புமணியை மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்க அ இஅதிமுக ஆதரவு கோரி நடையாய் நடந்தார். சட்டமன்றத் தேர்தல் கூட்டணியின்போதே அப்படி ஓர் ஒப்பந்தமிருந்ததாம். எந்த ஒப்பந்தத்தையும் அநாயசமாக மீறும் புரட்சியைச் செய்பவர்தானே ஜெ. கடுக்காய் கொடுத்துவிட்டார். சரியான ஆத்திரம். 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் திமுக அணியில் இணைந்த முதல் கட்சியே பாமகதான்.
மிதமிஞ்சிய மமதையில் ஆட்சி நடத்தி பல தரப்பினரின் வெறுப்பினை சம்பாதித்துக்கொண்டிருந்த ஜெ படுதோல்வி அடைந்தார். அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அன்புமணி நல்வாழ்வுத்துறையின் காபினெட் அமைச்சரானார். திமுகதுணையுடன் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006ம் ஆண்டு நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலிலும், திமுக கூட்டணியில் இடம் பெற்று, 18 இடங்களில் வென்றது பாமக.
இரண்டு தேர்தல்களில் ஒரே கூட்டணியில் இருந்தது இராமதாசுக்கு உறுத்தியிருக்கவேண்டும். அல்லது 2009 தேர்தல்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோற்றுவிடும் என்று தோன்றியிருக்கவேண்டும். எனவே மீண்டும் தாவினார்.
அப்போது ஜெயலலிதாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார், இராமதாஸ்:.
”அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம். ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை-மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன”
ஆனால் முதல் முறையாக அணி மாற்றம் அவருக்குப் பெரும் பின்னடைவையே கொடுத்தது. 2009 பொதுத் தேர்தல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு நெப்போலியனின் வாட்டர் லூ வாக மைந்தது.
போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி மண்ணைக் கவ்வியது. இந்தத் தேர்தலில், தேர்தலுக்குத் தேர்தல் அணி தாவும், இந்தக் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் எண்ணியது மட்டுமல்லாமல், திமுகவும் கங்கணம் கட்டிக் கொண்டுவேலை செய்தது. இதனாலேயே, பாமக, அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வியது.
போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை நிர்க்கதியாய் விட்டுவிட்டு அனைத்தையும் தனியார்க்கு தாரை வார்க்கும் முயற்சியிலிருந்து எவ்வித அடிப்படை வசதி இல்லாமலிருந்தாலும் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதித்தது வரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு குடும்ப கஜானாவை நிரப்பியவண்ணம் இருந்தார் அன்புமணி. வண்டவாளமெல்லாம் மெல்ல மெல்ல தண்டவாளம் ஏறுகிறது இப்போது.
கட்சி தொடங்கிய காலத்தில் “என் கட்சியில் யாராவது ஊழல் செய்தால், அவர்களை சவுக்கால் அடியுங்கள்“ என்று சொன்ன மருத்தவர் ராமதாஸ், முன்னாள் நக்சலைட்டுகளை தன் கட்சியின் கொள்கையை வகுப்பவர்களாக வைத்திருந்த மருத்துவர் ராமதாஸ், அம்பேத்கரின் கொள்கையை உயர்திப் பிடிப்பதற்கென்றே, கட்சியின் கொடியில் நீலத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் லட்சியத்தோடு தன் கட்சியின் கொடியில் சிகப்பு நிறத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், சில்லரைக் காசுகளை பெற்றுக் கொண்டு, ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் ராமதாஸ் எப்படியெல்லாம் மாறிப்போனார் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றனர்.
நண்பரோடு ஒரு நாள் தைலாபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர் ஒரு முக்கியமான பத்திரிக்கையாளர். திமுக அரசில் நடக்கும் ஊழல்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் அந்த நண்பருக்கு கிடைத்ததால், அதை மருத்துவர் அய்யாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதன் முறையாக அவரைச் சந்திக்கச் சென்றார். காலை 9.30 மணிக்கு தைலாபுரம் சென்றவர், மருத்துவரைச் சந்திக்க மதியம் 2 மணி ஆகி விட்டது.
அது வரை, தொண்டர்களோடு தொண்டர்களாக, மரத்தடியில் நண்பரோடு காத்துக் கிடந்தோம்.
அங்கே மருத்துவரைச் சந்திக்க இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். தனிமையில் ரகசியமாக சந்திக்க வேண்டியி ருந்ததால், கூட்டம் குறையும் வரை காத்திருக்கலாம் என்றார் நண்பர்.
மதியம் சுமார் 12.30 மணிக்கு, ஒரு ஹோண்டா எஸ்யுவி வண்டி வந்தது. அந்த வண்டியில் மருத்துவர் அய்யாவின் மருமகள் சவும்யா வந்து இறங்கினார். வண்டியின் டிக்கியை திறந்ததும், சுமார் 50க்கும் மேற்பட்ட, சென்னை சில்க்ஸின் பட்டுப் புடவை டப்பாக்கள் இருந்தன. அங்கே கூடியிருந்த, தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு அய்யாவின் மருமகளுக்கு அந்தப் பெட்டியை தூக்கிச் செல்ல உதவிக்கு ஓடினர். ஐம்பது பட்டுப் புடவைகள் என்றால் விலை என்ன இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதான் மருத்துவர் அய்யாவின் இன்றைய நிலை.
அதற்குப் பிறகு, நண்பர், திமுக அரசுக்கு எதிரான ஆவணங்களை மருத்துவர் அய்யாவிடம் வழங்க, அந்த ஆவணங்களை வைத்து, ராமதாஸ், பல நாட்கள் அறிக்கை யுத்தம் நடத்தி, கருணாநிதிக்கு, காலில் தைத்த முள்ளாய் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது, வேறு கதை.
2009 படு தோல்வியிலிருந்து எளிதில் இராமதாஸ் மீளமுடியவில்லை. 2011 பொதுத் தேர்தலில் மீண்டும் அணி மாறினார். ஊஹூம் பயனில்லை. அந்த அணி தோல்வியடைந்தது, பாமக மூன்றே மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இக் கட்டத்தில்தான் மருத்துவர் ராமதாசின் இன்னொரு முகம் வெளிப்பட்டது. 80 களில் பிற்படுத்தப்பட்ட வன்னியர்களின் பிரதிநிதியாக அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அயராது போராடுபவர், தலித்த்துக்கள் ஒடுக்கப்படுவது, இழிவுபடுத்தப்படுவது அறமல்ல, தவிரவும் அவர்களுடன் இணைந்து போராடும்போது வன்னிய இனத்தின் செல்வாக்கும் கூடும் என்று சரியாகவே புரிந்துகொண்டு அதற்கேற்ப அரசியல் பாதையை வழிவகுத்துக்கொண்டவர், தொடர் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் வன்னிய சாதி வெறியை வளர்ப்பதே தான் அரசியலில் குறிப்பிடத் தக்க சக்தியாக விளங்கமுடியும் என்று கணக்கிட்டார். சமூகக் காவலர் சமூக விரோதியானார்.
இந்த நேரத்தில்தான், ராமதாஸுக்கு கை கொடுத்தது, தருமபுரியில் நடந்த காதல் திருமணமும், அதையொட்டி நடந்த தீவைப்பு சம்பவங்களும். நவம்பர் 2012ல் இயல்பாக நடந்த ஒரு காதல் திருமணம், 300 தலித் வீடுகளுக்கு வன்னியர் உள்ளிட்ட சாதி இந்துக்களால் தீ வைத்து எரிக்கப்படுவதில் சென்று முடிந்தது. சரிந்த தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த, இந்த சம்பவத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார் ராமதாஸ்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சாதீய மோதல்கள் என்பது என்பது நீறுபூத்த நெருப்பாகவே எப்போதும் இருந்து வருகிறது. ஆதிக்க சாதியினருக்கும் தலித்துகளுக்கும் இடையே மோதல் வெடிக்க ஒரு சிறு பொறி போதுமானதாக இருந்து வருகிறது. மக்களிடையே ஆழமாக ஊறிய சாதிய உணர்வு எத்தனை தலைமுறை மாறினாலும் மேலும் மேலும் வளர்ந்து வருகிறதே தவிர, சற்றும் குறைந்தபாடில்லை. நான்கு தசாப்தங்களுக்கும் மேலான திராவிடக் கட்சிகளின் ஆட்சியோ, நாகரீக வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ, இந்த சாதி உணர்வை தணிக்கத் தவறிய நிலையில் சாதிய மோதல்கள் நடைபெறாமல் தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஆளும் கட்சிக்கே இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே இந்த சாதிய உணர்வுகளையும், மோதல்களையும் தங்கள் சுய ஆதாயத்துக்காக தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றன.
தென்மாவட்டங்களைப் போல கடுமையான சாதி மோதல்கள் வட தமிழகத்தில் இல்லை என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியும், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியும், தலித் வன்னியர் இடையேயான மோதல்களை கூர்மைப்படுத்தின. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி, தலித் மக்கள் அணிதிரள ஒரு களமாக அமைந்தது. இதுநாள் வரை தாக்கப்படும் இடத்தில் இருந்த தலித்துகள், திருப்பித் தாக்கும் நிலையை எடுத்ததால், தலித்துகள் வன்னியர்கள் இடையேயான மோதல்கள் அதிகரித்தன.
ஒரு கட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் கைகோர்த்ததையடுத்து, இரு சமூகத்தினரிடையேயான மோதல்கள் தணிந்தன. ராமதாஸை வைத்து அம்பேத்கர் சிலைகளைத் திருமாவளவன் திறக்க வைத்ததும், ராமதாஸுக்கு அம்பேத்கர் சுடர் விருது கொடுத்ததும், இருவரும் ஈழம் தொடர்பான போராட்டங்களில் ஒன்றாகக் கலந்து கொண்டதும், இரு சமூகத்தினரிடையே முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வில்லையென்றாலும், மோதல் இல்லாத நிலையை உருவாக்கியது. இந்த உறவு தேர்தல் களத்திலும் தொடர்ந்ததால், சாதீய மோதல்கள் கவலைகொள்ளும் அளவுக்கு ஏற்படவில்லை.
ஆனால் தோல்வியால் துவண்டிருந்த ராமதாசுக்கு தருமபுரி ஒரு புதிய ஆயுதத்தை அளித்தது. சமுதாயத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் ஆபத்தான ஆயுதமான சாதி வெறியைத் தூண்டும் ஆயுதத்தை கையில் எடுத்தார் அவர். அரசியல் ரீதியாக இது தனக்கு மிகப்பெரிய ஆதரவையும் பலத்தையும் உருவாக்கும் என்று டாக்டர் ராமதாஸ் போட்ட கணக்கே அவரது சாதி வெறியை உருவாக்கும் தொடர் நடவடிக்கைகள்.
தலித் இளைஞர்கள் மற்ற சாதிப் பெண்களோடு காதல் வயப்படுவதும், அவர்கள் பெற்றோர்கள் சம்மதிக்காத காரணத்தால் அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொள்வதும், காலம் காலமாக தமிழகத்தில் நடந்து வருபவையே. அவற்றுள் சில திருமணங்கள் முறிந்தும் போகின்றன.. கல்லூரியில் படிக்கும் இளம்பருவத்தினர் காதல் வயப்படுகையில் அவர்கள் சாதி பார்ப்பதில்லை. அவர்களுக்கு அந்த வயதில் உள்ள ஈர்ப்பு, சாதி, பொருளாதாரம் போன்ற எதைப்பற்றியும் சிந்திக்க வைப்பதில்லை. இது போன்ற திருமணங்களால், தலித் அல்லாத சாதியைச் சேர்ந்த ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்கள், கடுமையாக கோபமடைகிறார்கள் என்பதும் உண்மையே. “எந்த சாதியா இருந்தாலும் பண்ணி வச்சுருப்போம். போயும் போயும் இந்த ஈன சாதிக்காரனப் போயி கட்டிக்கிட்டு வந்து நிக்கிறாளே“ என்ற வசனம் இயல்பாக கேட்கக் கூடிய வசனம். தலித் அல்லாத சாதியில் உள்ள பெற்றோர்களின் இந்த உணர்வு ஒட்டு மொத்த தலித் அல்லாத சாதிகளை இணைக்க உதவும் என்று கருதினார் ராமதாஸ்.
இதை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, அனைத்து சாதியினர் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அந்த கூட்டமைப்பில் தலித்துகளுக்கு இடமில்லை என்றார். ஏன் தலித்துகளுக்கு இடமில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியதற்கு, இதை விளக்கிச் சொல்ல வேண்டுமா என்று வெளிப்படையாகவே பேசினார். தொடக்கத்தில், இந்தக் கூட்டமைப்பில் பங்கு கொண்டு சிக்கிக் கொண்ட இஸ்லாமிய அமைப்புகள், அவசர அவசரமாக கழற்றிக் கொண்டன.
தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் நடத்தி தலித்துகளுக்கு எதிராக பேசினார் ராமதாஸ். தமிழகமெங்கும் ராமதாஸ் நடத்திய கூட்டணியில், சாதிக்கட்சித் தலைவர்கள் பங்கு கொண்டார்கள். தேவர், கவுண்டர், பிள்ளைமார், வேளாளர்கள், முதலியார்கள், நாயக்கர்கள், செட்டியார்கள், என்று பெரும்பாலான சாதித் தலைவர்கள் பங்கு பெற்றார்கள். ஆனால், இந்த ஆதிக்க சாதிகளுக்குள் இருந்த உள் முரண்கள், தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இருந்த முரண் காரணமாக பெரிதாகாது என்று ராமதாஸ் தப்பு கணக்குப் போட்டார். தேவர் சாதியின் சார்பாக ராமதாஸின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பி.டி.அரசகுமார், ராமதாஸ் முன்னிலையிலேயே தேவர் சாதி வன்னியர் சாதியை விட உயர்ந்தது என்று பேசினார். மேலும், வன்னியர்களைப் போல, தேவர் சாதியினருக்கு பறையர்கள் எதிரிகளல்ல. தேவர் சாதியினரோடு காலம் காலமாக மோதி வருவது பள்ளர்களே. தென் மாவட்டங்களில், முக்குலத்தோர், பள்ளர்கள் இடையே காதல் திருமணங்கள் கூட அரிதாகவே இருக்கிறது. இதனால், ராமதாஸின் காதல் நாடகம் குறித்த பேச்சுக்கள் மற்ற சாதியினரிடையே பெரிய அளவில் எடுபடவில்லை. மேலும், அவர்களுக்கு இடையேயான உள் முரண்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. தமிழகமெங்கும் ராமதாஸ் நடத்திய கலந்துரையாடல் கூட்டங்களுக்கும் பெரிய அளவில் ஆதரவு இல்லை.
தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இதன் அடிப்படையில் சாதித் தலைவர்களை ஒருங்கிணைக்கலாம் என்றும் ராமதாஸ் எடுத்த முயற்சிகள் தோல்வியையே தழுவின. ஆனால் ராமதாஸ் புலிவாலைப் பிடித்தது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அனைத்து சமுதாயத் தலைவர்கள் என்ற .கூட்டணியைத் தொடங்கினால் ஒவ்வொரு தலைவரும் திருவாழத்தான்களாக இருக்கிறார்களே என்று ராமதாஸே வியந்துபோனார். அவர்களை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு மலைப்பு ஏற்பட்டது என்னவோ உண்மை. ஏனென்றால் ஒவ்வொரு சாதிக்கும் குறைந்தது 5 முதல் ஆறு சங்கங்கள் இருந்தன. அத்தனை சங்கங்கள் இருந்ததன் காரணமே அந்தச் சங்கத் தலைவர்களின் சுயநலம்தான். நான்தான் தலைவராக வேண்டும் என்று தனித்தனித்தனியாக சங்கம் தொடங்கும் நபர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படிப்பட்ட தலைவர்களை அழைத்து அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஏற்படுத்தினால் அது விளங்குமா ? தான் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டோம் என்பதை ராமதாஸ் தாமதமாகத்தான் உணர்ந்தார். தன்னோடு அனைத்து சமுதாயக் கூட்டமைப்பில் வந்து இணைந்த சாதிச் சங்கத் தலைவர்கள், அந்தந்த சாதிகளின் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் ராமதாஸ் தாமதமாகவே உணர்ந்தார்.
ஆனால் இதற்குள் விஷயம் கைமீறிப் போய் விட்டது. காதல் திருமணங்களுக்கு எதிரான ராமதாஸின் நிலைபாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இடது சாரிகள் உள்ளிட்ட நடுநிலையாளர்கள் வெளிப்படையாகவே பாட்டாளி மக்கள் கட்சியையும், ராமதாஸையும் கண்டித்தனர். இளைஞர்கள் மத்தியில் ராமதாஸின் காதல் எதிர்ப்பு நிலைபாடு நகைப்புக்குள்ளானது. பெரும்பாலான வன்னியர்களே ராமதாஸுக்கு கிறுக்கு பிடித்து விட்டதா என்று வருத்தப்பட்டனர். ஆனால் புலிவாலைப் பிடித்த ராமதாஸ் அதை எப்படி விடுவது என்று தெரியாமல் தொடர்ந்து அந்தப் பாதையிலேயே பயணிக்கத் தொடங்கினார்.
அது அழிவுப்பாதை என்பதை ஒரு பழுத்த அரசியல்வாதியான ராமதாஸ் உணரத்தவறினார். அந்த அழிவுப்பாதை மரக்காணத்தில் ஒரு மோசமான கலவரம் உருவாகக் காரணமாக இருந்து, சிறை செல்லும் அளவுக்கு அவரை இட்டுச் சென்றது. சித்திரை விழா அன்று, காவல்துறையினர் மிகச் சிறப்பாக பணியாற்றியதால், பெரும் கலவரம் தடுக்கப்பட்டள்ளது. தலித் மக்கள் பெரும்பாலாக குடியிருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் கலவரம் பரவும் அபாயம் இருந்தும், காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கை, காரணமாக தடுக்கப்பட்டது. காவல்துறையினர் சற்றே அலட்சியமாக இருந்திருந்தால், பெரும் கலவரம் மூண்டு, உயிரிழப்புகள் நேரிட்டிருக்கும்.
அனைத்து சமுதாயத் தலைவர்களின் கூட்டமைப்பு எதிர்ப்பார்த்த வெற்றியைத் தராததால், வருடா வருடம் பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு விழாவை சிறப்பாக கொண்டாடி மற்ற கட்சிகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும், பாராளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டணி வைப்பதற்காக திராவிடக் கட்சிகள் கெஞ்ச வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் ராமதாஸ்.
வடநெமிலி நில விவகாரம் தொடர்பாக ப்ரதீப் யாதவ் ஐஏஎஸ் மற்றும் ஜாங்கிட் ஐபிஎஸ் மீது நில அபகரிப்புப் புகார் எழுந்து, அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த நில அபகரிப்பில் நிலத்தை பறிகொடுத்த கிராம மக்கள் அனைவரும் மிகுந்த ஏழை வன்னியர்கள். மத்திய உள்துறையில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் ப்ரதீப் யாதவ். இந்த ப்ரதீப் யாதவ் மூலமாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தொடர்பு கொள்ளப்பட்டு, சித்திரை முழு நிலவு விழாவுக்கு அகிலேஷை சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள வைப்பதென்று ஏற்பாடானது. இதற்கு கைமாறாக ப்ரதீப் யாதவ் மீதான வழக்கை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெற வேண்டும் என்பதே திரைமறைவு ஒப்பந்தம். முதலில் வருகிறேன் என்று ஒப்புக் கொண்டார் அகிலேஷ் யாதவ். அதன் அடிப்படையில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் அகிலேஷ் தமிழகம் வந்ததன் உண்மையான நோக்கம், ஜெயலலிதாவை சந்தித்து, நாளைய மூன்றாவது அணிக்கு ஒரு அடித்தளம் அமைப்பதே என்று சொல்லப்பட்டது.
சென்னை வந்த அகிலேஷ் பாட்டாளி மக்கள் கட்சியோடு இணைந்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு திரும்பச் சென்று விட்டார். ப்ரதீப் யாதவ் மீதான வழக்கு தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பலவீனமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தனியாக நடத்தும் மாநாட்டுக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு ஊடக கவனம் இருக்காது என்பதை ராமதாஸ் நன்றாக உணர்ந்தே இருந்தார். பிறகு ஊடக கவனத்தை சித்திரைப் பெருவிழா மீது எப்படித் திருப்புவது ?
அதற்காக ராமதாஸ் கையாண்ட மலிவான உத்தியே சாதி வெறி மற்றும் வன்முறை. ராமதாஸின் அரசியல் பலம் குறையக் குறைய அவர் மிக மிக பதற்றமானார் என்பதை அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பில் காண முடிந்தது. ராமதாஸின் வழக்கம் மற்றும் பாணி என்னவென்றால், அவர் ஒரு பக்குவமடைந்த அரசியல்வாதி போல பேசுவார். காடுவெட்டி குரு, சகட்டுமேனிக்கு கழிசடை அரசியல்வாதி போல பேசுவார். ராமதாஸ் அதைக் கண்டும் காணாமல் இருப்பார். ஆனால் தருமபுரி கலவரத்துக்குப் பின் ராமதாஸ் வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசத் தொடங்கினார். ஒரு மனிதனின் மறுபக்கம் அவன் பலவீனத்தில் வெளிப்படும். அப்படிப்பட்ட ராமதாஸின் மறுபக்கம், அவர் பலமிழந்து, வலுவிழந்து இருக்கும் சூழலில் பகிரங்கமாக வெளிப்பட்டது.
ஒரு கட்டத்தில் தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு, வன்னியப் பெண்களை வளைத்து ஏமாற்றுகின்றனர் என்று பேசும் அளவுக்கு சென்றார். வன்னியப் பெண்கள் ஒரு ஜீன்ஸ் பேண்டுக்கும், கூலிங் க்ளாஸுக்கும் மயங்கி விடும் அளவுக்கா இருக்கிறார்கள் ?
சித்திரைப் பெருவிழாவில் ராமதாஸ் எப்படிப் பேசினார் என்பதை ஜுனியர் விகடன் வெளியிட்டது.
“ஒரு சமுதாயத்தினரால் மற்ற சமுதாயத்தினருக்குப் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதையெல்லாம் நாங்கள் பேசினால், சாதியைப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்கின்றனர். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. அவர்களோடு இணைந்து நெருக்கமாக வாழவே விரும்புகிறோம். அவர்களைப் பார்த்து மற்ற சமுதாயங்கள் அஞ்சக்கூடிய அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம், காவல் துறைதான். நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்கிறீர்களா? அல்லது, தவறு செய்கிறவர்களை எங்களையே தண்டிக்கச் சொல்கிறீர்களா?” என்று பேசிக்கொண்டே போன ராமதாஸ், அச்சில் ஏற்றமுடியாத சில வார்த்தைகளை உச்சரித்துவிட்டு, ”உங்களுக்குத் திராணி இல்லையா? தெம்பு இல்லையா? நீங்கள் ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுறீங்க? எங்க சாதிப் பெண்களை எல்லாம் அவன் கூட்டிக்கிட்டுப் போவான். நாங்க பேசாம இருக்கணுமா? நீயும் (போலீஸ்!) நடவடிக்கை எடுக்க மாட்டே… நீயும் அவங்களை உள்ளே தள்ள மாட்டே… அது சம்பந்தமாக கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை குண்டாஸ்ல போட மாட்டே… அப்புறம் என்ன நாடு இது? குரு சொல்வதைப்போல் நான் கண் சிமிட்டினால் போதும்… ஒரு இடத்தில்கூட அவர்கள் உள்ளே நுழைய முடியாது. இதுவரை நான் இப்படிப் பேசினது இல்லை. ஆனால், இந்த போலீஸ் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது இப்படித் தோணுது. போலீஸில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதவர்கள் அனைவரும் எங்கள் கட்சி… ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
எனக்கு ஏன் பாதுகாப்பு அதிகம் கொடுக்கிறீர்கள்? யாரால் அச்சுறுத்தல்? காடுவெட்டி குருவுக்குப் பாதுகாப்பு கொடுக்க மறுக்கிறீர்கள். அன்புமணி நல்லவர் என்று சொல்லி அவருக்கும் பாதுகாப்பு இல்லை. உங்க மந்திரிக்கு எல்லாம் பாதுகாப்பு. அவர்கள் எல்லாம் கெட்டவர்களா?” என்றபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. “
தருமபுரி மற்றும் வட தமிழகத்தின் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம், வன்னியர்கள் மிக மிக பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது. கவுண்டர், முதலியார், செட்டியார், பிள்ளைமார் போன்ற சாதி இந்துக்களைப் போல வன்னியர் சமூகம் முன்னேறிய சமூகம் கிடையாது. மிக மிக சாதாரணமான சமூகமே வன்னியர் சமூகம். அதனால்தான் அந்த சமூகத்துக்கும், தலித் சமூகத்துக்கும் பெரிய அளவில் மோதல்கள் இல்லாமல் இருந்தது. அந்த பிற்பட்ட சமூகத்துக்கு ஒரு பெரிய பலத்தை உருவாக்கித் தந்தவர் மருத்துவர் ராமதாஸ். எண்பதுகளில் இட ஒதுக்கீடு வேண்டி ராமதாஸ் நடத்திய மிகப்பெரிய போராட்டமே பாட்டாளி மக்கள் கட்சியை பெரும் பலம் உள்ள அரசியல் சக்தியாக உருவாக வைத்தது. பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணிக்காக, கருணாநிதியும், ஜெயலலிதாவும், தைலாபுரத் தோட்டத்தின் கதவுகள் திறக்காதா என்று காத்திருந்தனர். அந்த அளவுக் வன்னியர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தார் ராமதாஸ்.
ராமதாஸ் தொடங்கிய பொங்கு தமிழ் அறக்கட்டளை, அலை ஓசை செய்தித்தாள், மக்கள் தொலைக்காட்சி போன்றவைகள் அற்புதமான மாற்று முயற்சிகள். தமிழ் மொழிக்கு அருமையான பங்களிப்பை செய்தவை. ராமதாஸின் தமிழார்வத்தையும், தமிழ் மொழியின் மீதான நேசத்தையும் ஒப்பிட்டால் கருணாநிதியை விட ஒரு படி மேல் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மாற்று நிதி நிலை அறிக்கை வெளியிடும் ராமதாஸின் முயற்சிகள் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கடைபிடிக்க வேண்டியவை.
அப்படிப்பட்ட ராமதாஸ் பி.டி.அரசக்குமார், மணிகண்டன் போன்ற அல்லு சில்லுகளோடு கைகோர்த்து, தனது தரத்தை தானே தாழ்த்திக் கொண்டார். என்ன செய்கிறோம் என்று தெரியாமல், மிக மிக மோசமான புதைகுழியில் விழுந்தார் ராமதாஸ். தான் பேசும் பேச்சுக்களும், தான் எடுக்கும் நடவடிக்கைகளும், வன்னியர் மற்றும் தலித்துகளுக்கிடையே மிக மிக மோசமான பகையை உருவாக்கும் என்பது ராமதாஸுக்கு தெரியாதது அல்ல. அப்படி ஒரு பகை உருவாக வேண்டும் என்பதைத் தெரிந்தே செய்தார் ராமதாஸ். சம்பந்தமே இல்லாமல், ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும், திருமாவளவனை வம்புக்கு இழுத்தார். திருமாவளவன்தான் எல்லா கலவரத்துக்கும் காரணம் என்றார். ஆனால், ஆச்சர்யப்படும் வகையில், ராமதாஸோடு பல வயது குறைந்தவரான திருமாவளவன், மிக மிக பக்குவமாக செயல்பட்டார். “ராமதாஸுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள இடதுசாரிகளும், பெரியாரிஸ்டுகளும், பகுத்தறிவாளர்களும் ராமதாஸுக்கு பதில் சொல்ல வேண்டும். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்களை, அனைத்து ஆதிக்க சாதியினரும் ஒன்று கூடி எதிர்த்தால் சமூகம் என்ன ஆகும் ? ஒரு ஊரில் உள்ள அத்தனை சாதியினரும் சேர்ந்து தலித்துகளை தாக்கத் தொடங்கினால் தலித்துகள் எங்கே போவார்கள் ? “ என்று ஒரு மூத்த அரசியல்வாதி போல ரியாக்ட் செய்தார். மேலும் அவர், “ராமதாஸ் எங்களுக்கு எதிரி அல்ல. ராமாஸை வைத்து பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளைத் திறந்து வைத்தவன் நான். ராமதாஸுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. எதற்காக எங்களை இப்படி இழிவு படுத்திப் பேசுகிறார், எதற்காக எங்களை எதிரிகளாகப் பார்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை“ என்றார். திருமாவளவனின் இந்தப் பேச்சு, அவரை பக்குவப்பட்ட அரசியல்வாதியாக காண்பித்த அதே நேரம், ராமதாஸை பக்குவமிழந்த இரண்டாம் தர அரசியல்வாதியாகவும் அடையாளப்படுத்தியது.
இரண்டு திராவிடக் கட்சிகளாலும் அனாதையாக்கப் பட்ட ராமதாஸ் கடைசியாக தஞ்சம் புகுந்தது காவிக் கூடாரத்தில். எந்த நடிகரை, குடிகாரன், அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தாரோ, அதே நடிகருடன் கூட்டணி சேரும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார். முக்கிய தொகுதிகளை விட்டுக் கொடுத்து, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, வேறு வழியே இன்றி, காவிக் கூடாரத்தில் தஞ்சம் புகுந்ததற்கான ஒரே காரணம், அவரது மகன் அன்புமணி.
மத்திய அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி, உட்கட்டமைப்பு இல்லாத இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையே, நாளை ஆட்சி அமைக்கும் கனவில் இருக்கும் பிஜேபியின் காலடியில் சரணடைந்து, கேப்டனின் நிழலில் அன்புமணியை வாழச் செய்திருக்கிறது.
அலைக்கற்றை ஊழலில் கூட நாட்டுக்கு இழப்பே தவிர, பொது மக்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால், சுகாதாரம், குடி ஒழிப்பு, புகை ஒழிப்பு, பசுமை என்று பேசும் மருத்துவர் அய்யாவின் மகன் செய்த காரியம் என்ன தெரியுமா ? இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி, 2008-2009ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பிக்கிறது. மருத்துவக் கவுன்சிலின் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, உட்கட்டமைப்பு வசதிகளோ, பேராசிரியர்களோ இக்கல்லூரியில் இல்லை, அதனால் அனுமதி தர வேண்டியதில்லை என்று கூறுகின்றனர். சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி, இவராக ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு ஆய்வு செய்து, அனைத்தும் சரியாக இருப்பதாக அறிக்கை அளிக்க வைத்து, அதன் மூலம் அந்தக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தார்.
பின்னாளில், சிபிஐ அந்தக் கல்லூரியை சோதனையிட்ட போது, உட்கட்டமைப்பு வசதிகள் இன்னமும் செய்யப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி மீது, சிபிஐ வழக்கு பதிவு செய்து, குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளோ, பேராசிரியர்களோ, இல்லாத மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு வரும் மருத்துவர்களிடம், உங்கள் பெற்றோரையோ, மனைவியையோ, குழந்தைகளையோ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள்….. !!! அப்படிப்பட்ட நபர்தான் அன்புமணி ராமதாஸ்.
இந்த வழக்கில் சிறை செல்வோம் என்று அஞ்சியே அன்புமணி பிஜேபி கூட்டணியை வலியுறுத்திப் பெற்றார்.
அந்த அடிப்படையில்தான், மார்க்சியம் பேசிய ராமதாஸ், இன்று காவிக் கூடாரத்தில் காலடி வைத்துள்ளார். தலித் மக்களுக்காக குரல் கொடுத்து தமிழ்க் குடிதாங்கியான ராமதாஸ் இன்று விஜயகாந்தோடு கரம் கோர்த்து, டாஸ்மாக்கைத் தாங்கும் தமிழ்க் குடிதாங்கியாகி விட்டார்.
இவர்களுக்கா உங்கள் ஓட்டு ?
இதே போன்று அதிமுக வை விமர்சித்தால் நீ சரியான ஆண் மகன். இல்லை யென்றால் நீ …..
செளம்யா எப்போதும் louie vitton handbaக் தான் யுஸ் பண்ணுவான்ங்க . ஒண்னோட விலை 1.5 லட்சம் ரூபாய்.
// சித்திரை விழா அன்று, காவல்துறையினர் மிகச் சிறப்பாக பணியாற்றியதால், பெரும் கலவரம் தடுக்கப்பட்டள்ளது. தலித் மக்கள் பெரும்பாலாக குடியிருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் கலவரம் பரவும் அபாயம் இருந்தும், காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கை, காரணமாக தடுக்கப்பட்டது. காவல்துறையினர் சற்றே அலட்சியமாக இருந்திருந்தால், பெரும் கலவரம் மூண்டு, உயிரிழப்புகள் நேரிட்டிருக்கும். //
விபத்து என்று சொல்லி பிறகு கொலை என்று உறுதி செய்யப்பட்டது. இருவர் கொலைசெய்யப்பட்டனர் அதற்கு முக்கிய காரணம் காவல்துறையின் பாதுகாப்பு குறைவு. பாதுக்காப்பு கொடுக்க முடியாதற்கு IPL Match க்கு பாதுகாப்பு கொடுத்ததால் கொடுக்க முடியவில்லை என்று முதல்வரே சொன்னார். நீங்கள் ஏன் பொய்யாக எழுத வேண்டும். இதேபோல் இன்னும் எத்தனை பொய்கள் இக்கட்டுரையில் இருக்கிறது என்று நீங்களே சொல்லிவிடுங்கள். தயவு செய்து நடுநிலையாக எழுதுங்கள் யாருக்கும் சார்பாக எழுதவேண்டாம்.
jaathi veriyargaluku indha naatil idamillai. viraivil thodangapadum AIPPF
இது தான் உங்கள் நடு நிலையா? ,இப்படி நடு நிலை பேசியவர்கள் தான் கரு.பழனியப்பன்,அமிர்,சரத் போன்றவர்கள் ,ஆனால் சேரன் பொன்னு ஓடிப்போன பிறகு தெரிந்தது இவர்களின் உன்மை சுயரூபம்உங்கள் முகத்திரையும் விரைவில் கிழியும்
ஸ்ரீதர் # மிக சரியான எடுத்துக்காட்டு …நன்றி வணக்கம்
ha ha haaaa !
//பெரும்பாலான வன்னியர்களே ராமதாஸுக்கு கிறுக்கு பிடித்து விட்டதா என்று வருத்தப்பட்டனர். //
வேடிக்கை! இந்த ஒரு வரியிலேயே தெரிந்து விட்டது சகோ,,,, உங்கள் கட்டுரை எவ்வளவு உண்மைத்தன்மை வாய்ந்தது என்று. ”
மேலும் “வெறி நாய்களை எப்படி எதிர்கொள்வது” என்ற சவுக்கு ஆச்சிமுத்து சங்கரின் முகநூல் பதிவில் கூட தேவர், பள்ளர், நாடார் போன்றோரை விட்டுவிட்டு வன்னியரின் பெயரை மட்டும் பயன்படுத்தியுள்ளதையும்,
அடிக்கடி வெள்ளாளரை விட வன்னியர்கள் கீழ், தேவரை விட வன்னியர்கள் கீழ் என்று கூறப்படுவதாக எழுதுவது என எல்லாவற்றையும் காணும் போது, இதில் உண்மையை சொல்லும் பாங்கு மட்டுமல்ல. சுய அரிப்பை சொறிந்து கொள்ளும் விவேகமும் ஒளிந்துள்ளது. கட்டுரையின் சாராம்சத்தில் குட்டு எப்போதும் தானாக வெளிப்பட்டு விடும். நடுநிலை’ன்னு ஒரு முகமூடி அணிந்து கொண்டு கொண்டையை மறைக்க முயலவேண்டாம். எதுவும் ஓர் நாள் தெரிந்துவிடும்
tanjore farmers who fights against meethane proj + kongu farmers who fight against GAIL , theni – who fight againt neutranium + udayakumar should seperate from AAP , every one has to start a party (Tamil nationalaist party) for TN sake
பா.மக, தேமுதிக,கொ.ம.மு.க,பாரிவள்ளல்(?) போன்றவர்கள் அரசியலை விட்டே துரத்தப்பட்டால் தான் தமிழ்நாடு உறுப்படும்.
வேறு எந்த கட்சியை நீங்கள் ஆதரிக்கிர்கள் சொல்லுங்கள்..
If there is 1 party that should be wiped out from Tamil Nadu, its PMK
Ramadass is the best person compared to other leaders
பாராட்ட மனம் உள்ளவர்கள் பாராட்டுங்கள் :
இன்று(16.04.14) பாட்டாளி மக்கள் கட்சி வெளியிடபட்ட தேர்தல் அறிக்கையில் வரவேற்க்கதக்க சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
.
இடஒதுக்கீடு விகிதா சாரத்தை மாநிலங்களின் நிலைமைக்கேற்ப ஒவ்வொரு மாநிலமும் தானே முடிவு செய்து கொள்ள தேவையான அரசியல் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.
பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்மொழி மூலமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்.
ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை முழுமையாகக் கற்க உறுதி செய்வதுடன் மொழிச் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்.
மது மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்துவோம்.உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி இந்தியாவை ‘புகையிலையில்லா நாடாக’ மாற்ற பாடுபடுவோம்.
விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து செய்யப்படும். அணு உலை அறவே தேவையில்லை என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு.
சில்லரை வணிகத்தில் நேரடி அந்திய மூதலீட்டை எதிர்ப்போம்.
தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்துவோம். பொதுத்துறை மூலமாக புதிய மின் திட்டங்களைத் தொடங்கவும், தேசிய மின் கட்டமைப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரும் வழித் தடத்தை தேவையான அளவில் உருவாக்கவும் பாடுவோம்.
வீடற்ற அனைவருக்கும் வீடு அளிப்பதற்கான திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றி அனைவருக்கும் உறைவிடம் என்ற கொள்கை நிறைவேற்ற துணை நிற்கும்.
இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய அரசு, ஆட்சிமொழிகள் ஆக்கிட வேண்டும். அதற்கான அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பாடுபடுவோம்.
இலங்கையில் பூர்வீமாக தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘தமிழீழம்’ அமைய வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்.
இந்தியா இலங்கைக்கு கொடுத்த கச்சதீவை மீண்டும் பெற்றுத் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பாடுபடுவோம்
நிச்சயமாக இது நல்ல தேர்தல் அறிக்கை தான் .. திமுக , அதிமுக போன்ற கட்சிகள் கூட இது போன்ற வளர்ச்சியை நோக்கிய விஷயங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை . இச்லவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கையாக உள்ளதுதான் இதன் சிறப்பு அம்சம் ..
tamilar # சாதி வெறியர்களிடம் நீங்கள் எதையும் எதிர்பர்க்கதீர்……அவர்களுக்கு வன்னியர்கள் மீது குறைகள் மட்டுமே கூர தெரியும்.
Unakku enna theriyum Engal thalaivar Dr.Ramadoss Avargalaipatri.
கட்ட தொர # மரம்வெட்டி மரம்வெட்டின்னு இன்னும் எத்தனை காலத்துக்கு சொல்லுவீர்கள் முகமறியா நண்பரே! ……நாங்கள் எதற்காக மரம் வெட்டினோம்….காரணத்தை சரியாக சொல்லுங்க பார்ப்போம்….
திருச்சி சிறை என்ன திஹார் சிறையானாலும் பரவாயில்லை ..எதற்காக சிறை ??ஊழல் செய்தோமா?கொள்ளை அடிதோமா?வாய்தா வாங்கினோமா ????தன் இன மக்களுக்கான போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றோம்…பெண்களை பெற்றவர்களுக்கு தெரியும் நாடக காதலின் தீமையை. மருத்துவர் அய்யாவின் வழியில் பட்டாளம் வந்தாலும் கலங்காமல் மோதும் மாவீரன் காடுவெட்டியின் தலைமையில் நாங்கள் களம் பல காணுவோம் ..சிறை பல செல்வோம் எம் இன மக்களுக்காக…நன்றி வணக்கம் .
டிராமா வளவனின் கைபாவை………சவுக்கு……..
நான் அவ்வாறு நினைக்க வில்லை…சவுக்கு மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது..ஆனாலும் அதான் உண்மையாக தெரிகிறது. அப்படியா சவுக்காரே !
நன்றி வணக்கம்.
Stupid comments,
பி.டி.அரசகுமார், ராமதாஸ் முன்னிலையிலேயே தேவர் சாதி வன்னியர் சாதியை விட உயர்ந்தது என்று பேசினார்
அடப்போய்யா எங்கதான் ஊழல் நடக்கல, ஒரு மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கொடுத்ததே பிரச்சினையா பேசுறீங்க…. தொண்ணூறு சதவீத கல்லூரிகள் அனுமதி பெறுவதே அப்படித்தான்… நேரடியாகவே ஐந்து அனுமதிகளை பார்த்தவன் நான்..
MCI (மெடிகல் கவுன்சில் ஆப் இந்தியா) முன்னாள் தலைவர் கேதன் தேசாய் வீட்டில் 500 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது கேஸ் என்னவாச்சி ? ஆ ராசா தேர்வில் தகிடுதத்தம் பண்ணின மருத்துவ மாணவர் மற்றும் தகப்பானாருக்கு ஜாமீன் கொடுக்க ஒரு ஜட்ஜையே மிரட்டுனாறு… அந்த கேஸ் என்னாச்சி ?
இதுக்காக பெல்லுக்கு நான் சப்போர்ட்டுன்னு நினைச்சிடாதீங்க… எந்த கட்சிக்கும் சப்போர்ட்டு இல்லை…
ராஜா # அதெல்லாம் இவங்களுக்கு தெரியாது…ஆனாலும் ராமதாசும் வன்னியர்களையும் விமர்சனம் செய்தால் மட்டுமே இவர்களின் ஊடக வியாபாரம் சூடு பிடிக்கும்.
sariyaga sonneergal
முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் என்ற போர்வையில் இயங்கி வரும் சில டம்மி பீசுகளை பற்றி சவுக்கு எழுதினால் நன்றாக இருக்கும்.
இந்த அள்ளக் கைகள் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை சவுக்காரே,.கொஞ்சம் கவனியும்…
சாகுல் # சகோதரரே எனக்கு இசுலாமிய தலைவர்களில் மறைந்த மரியாதைக்குரிய திரு.பழனி பாபா அவர்களை ரொம்ப பிடிக்கும்.
அலைக்கற்றை ஊழலில் கூட நாட்டுக்கு இழப்பே தவிர, பொது மக்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால், சுகாதாரம், குடி ஒழிப்பு, புகை ஒழிப்பு, பசுமை என்று பேசும் மருத்துவர் அய்யாவின் மகன் செய்த காரியம் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி, 2008-2009ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பிக்கிறது. மருத்துவக் கவுன்சிலின் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, உட்கட்டமைப்பு வசதிகளோ, பேராசிரியர்களோ இக்கல்லூரியில் இல்லை, அதனால் அனுமதி தர வேண்டியதில்லை என்று கூறுகின்றனர். சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி, இவராக ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு ஆய்வு செய்து, அனைத்தும் சரியாக இருப்பதாக அறிக்கை அளிக்க வைத்து, அதன் மூலம் அந்தக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தார்.
சிபிஐ அந்தக் கல்லூரியை சோதனையிட்ட போது, உட்கட்டமைப்பு வசதிகள் இன்னமும் செய்யப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி மீது, சிபிஐ வழக்கு பதிவு செய்து, குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகளோ, பேராசிரியர்களோ, இல்லாத மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு வரும் மருத்துவர்களிடம், உங்கள் பெற்றோரையோ, மனைவியையோ, குழந்தைகளையோ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள்….. !!!
அப்படிப்பட்ட நபர்தான் பில் கிளிண்டன், பராக் ஒபாமா போன்றோரின் நெருங்கிய நண்பரான அன்புமணி ராமதாஸ்.
இந்த வழக்கில் சிறை செல்வோம் என்று அஞ்சியே அன்புமணி பிஜேபி கூட்டணியை வலியுறுத்திப் பெற்றார்.
அந்த அடிப்படையில்தான், ராமதாஸ், இன்று காவிக் கூடாரத்தில் காலடி வைத்துள்ளார். தலித் மக்களுக்காக குரல் கொடுத்து தமிழ்க் குடிதாங்கியான ராமதாஸ் இன்று விஜயகாந்தோடு கரம் கோர்த்து, டாஸ்மாக்கைத் தாங்கும் தமிழ்க் குடிதாங்கியாகி விட்டார்.
நாளுக்கு ஒரு அரசியற் கட்சி தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் (புதிய) சவுக்கு இவர்களுக்கா உங்கள் வோட் என்று நியாயமான கேள்வியை எழுப்பி வருகிறது. மோடி ஜெயலலிதா, கருணா, விஜயகாந், ராமதாசு, என்று தொடரும் விமர்சனம் காங்கிரஸ், வைகோ, திருமா ஆகியோரையும் உதிரியாக சாடி வருகிறது அப்படியென்றால் யாருக்குத்தான் வோட் பண்ணுவது என்ற கேள்வி பலரையும் சிந்திக்க வைக்கும். அப்படி ஒரு சிந்தனை என்னுள்ளும் எழுந்திருக்கிறது.
2011ல் கருணாவை மண் கௌவ வைக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் வேரோடியிருந்தது அந்த நேரத்தில் ஜெயலலிதாவை வெற்றிபெறவைப்பதன் மூலமே தீய சக்தி கருணாவை கண்டம் பண்ணலாம் என்று மக்கள் முடிவெடுத்திருந்தனர். அது சரியோ தப்போ அப்போதைக்கு அந்த போர்முலா தேவையாக இருந்தது
அந்த அடிப்படையில் இன்றைக்கு தீய சக்திகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால்
தீய சக்தி super No 1, காங்கிரஸ்
தீய சக்தி top No 1, (கருணாநிதி) திமுக இந்த இரு கட்சிகளும் தமிழ்நாட்டிலிருந்து துடைத்து அழிக்கப்படவேண்டும்.
அடுத்த சாதியை தூண்டிவிட்டு குளிர்காயும் தீயசக்தி என்றால் கொள்கையற்ற பெரியையா சின்னையா கட்சியான பாமக வை சொல்லலாம்.
மற்றய கட்சிகளும் ஒன்றும் கொள்கை கோட்பாடு உடையவை அல்ல இருந்தாலும் யதார்த்தம் ஏதோ ஒன்றுக்கு வாக்களித்தாகவேண்டியிருக்கிறது. அதுபற்றியும் அலசினால் பரவாயில்லை.
வரலாற்றை திரும்பி பார்த்தது போல இருந்தது . அருமை ..
மரம் வெட்டிகளுக்கெல்லாம் சவுக்கு பதில் சொல்லாது.சவுக்கு யாருக்காகவும் பேசவில்லை.தில்லாலங்கடிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.பிடிகாதவர்கள் சவுக்கு பாக்கத்தை எதற்கு பார்க்க வேண்டும்?பேரினம் பேரினம் எனக்கூறிக்கொண்டே சிற்றினமாக இருங்கள்.மரத்தை வெட்டி ரோட்டில் போடுவதும்,வீடுகளை கொளுத்துவதும் தான் பேரினத்தின் வீரமா?ஏன் அவரவர் கைகளையும்,கால்களையும் வெட்டி போட்டுக்க வேண்டியதுதானே?மே மாதம் வருகிறது ராமதாஸை பார்த்து இருக்க சொல்லுங்க.திருச்சி ஜெயிலில் இடம் நிறைய காலியாத்தான் இருக்கு.
தம்பி திருச்சியா…….ரொம்ப கருத்தா பேசுது ………
ஏன் மரம்வெட்டிகளுக்கு பதில் சொல்ல முடியாதென்றால் பிறகு எதற்கு மரம்வெட்டிகளின் செய்தியை இங்கு வெளியிட வேண்டும்,..
பிடிக்காதவர்கள் ஏன் சவுக்கை பார்க்க வேண்டும் # இதற்கு சவுக்கு பதிலளித்தால் நன்றாக இருக்கும்.
உங்களால் முடிந்தால் ஜெயலலிதா பற்றி விரிவாக விளக்கமாக எழுத முடியுமா சவுக்காரே!!!
ada vennai…. appo nee jayalalitha pathi savukku ezhudinatha ellam padikave illaya????
regards,
Hem
ஹேமா அண்ணே “வென்னைஎல்லாம்” அப்புறம் விற்கலாம்.
ஜெயலலிதா பற்றி “விரிவாக” கேட்டேன்…மருத்துவர் அய்யாவை அப்படியே படித்தமாதிரி 1780 லிருந்து சவுக்கு எழுதி உள்ளது .அது மாதிரி உங்க புரட்சி தலைவியை பற்றி எழுத சொன்னேன் .
தம்பி மாமானந்தா……….சாரி ………ஹேமானந்தா……..ஜெயலலிதாவை பற்றி ..அப்படி என்ன தான் சவுக்கு எழுதியதை சொல்ல முடியுமா …….வெண்ண …நாதன் …..
ஹலோ சவுக்காரே !!
நீங்கள் இப்போ யாருக்காக பிரச்சாரம் செய்கின்றீர்கள்…சொல்லிவிட்டு செய்யுங்கள் நிறை குறைகளை நாங்களும் சொல்கிறோம்….சாதிவெறியில் வன்னியர்கள் மீது வன்மத்தை கக்கவேண்டாம்… ஆட்சியாரளர்கள்,பத்திரிகையாளர்கள்,தலித்திய சாதி வெறியர்கள்…. நடுசென்டர்கள் ..இப்படி பல தரப்பாலும் வன்னிய பேரினம் நவீன தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது…வன்னிய மக்களின் துணை கொண்டு, இனமான காவலர் மருத்துவர் அய்யா வழிகொண்டு ..இனமான சின்ன அய்யா தலைமையில் வீறு கொண்ட எழுவோம்….அனைவரும் வாக்களிப்பீர் மாங்கனிக்கு….வெற்றி நமதே
He is supporting AAP. Innuma Puriyala …
Dear savukku shankar,
Now a days you are becoming castiset person that too against Vanniyars and Dr. Ramadass.
Why don’t you highlight Dr. RAMADASS AND PMK s good things
Compare all political parties election portfolio I bet PMK election portfolio is the best ( i am not saying they are not corrupted compare to others they are very very minimal if u compare to jaya and kalaingar this is nothing.
PLEASE WASH YOUR EYES AND READ HIS PORTFOLIO.
பாராட்ட மனம் உள்ளவர்கள் பாராட்டுங்கள் :
இன்று(16.04.14) பாட்டாளி மக்கள் கட்சி வெளியிடபட்ட தேர்தல் அறிக்கையில் வரவேற்க்கதக்க சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
.
இடஒதுக்கீடு விகிதா சாரத்தை மாநிலங்களின் நிலைமைக்கேற்ப ஒவ்வொரு மாநிலமும் தானே முடிவு செய்து கொள்ள தேவையான அரசியல் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.
பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்மொழி மூலமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்.
ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை முழுமையாகக் கற்க உறுதி செய்வதுடன் மொழிச் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்.
மது மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்துவோம்.உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி இந்தியாவை ‘புகையிலையில்லா நாடாக’ மாற்ற பாடுபடுவோம்.
விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து செய்யப்படும். அணு உலை அறவே தேவையில்லை என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு.
சில்லரை வணிகத்தில் நேரடி அந்திய மூதலீட்டை எதிர்ப்போம்.
தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்துவோம். பொதுத்துறை மூலமாக புதிய மின் திட்டங்களைத் தொடங்கவும், தேசிய மின் கட்டமைப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரும் வழித் தடத்தை தேவையான அளவில் உருவாக்கவும் பாடுவோம்.
வீடற்ற அனைவருக்கும் வீடு அளிப்பதற்கான திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றி அனைவருக்கும் உறைவிடம் என்ற கொள்கை நிறைவேற்ற துணை நிற்கும்.
இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய அரசு, ஆட்சிமொழிகள் ஆக்கிட வேண்டும். அதற்கான அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பாடுபடுவோம்.
இலங்கையில் பூர்வீமாக தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘தமிழீழம்’ அமைய வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்.
இந்தியா இலங்கைக்கு கொடுத்த கச்சதீவை மீண்டும் பெற்றுத் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பாடுபடுவோம்
நிச்சயமாக இது நல்ல தேர்தல் அறிக்கை தான் .. திமுக , அதிமுக போன்ற கட்சிகள் கூட இது போன்ற வளர்ச்சியை நோக்கிய விஷயங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை . இச்லவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கையாக உள்ளதுதான் இதன் சிறப்பு அம்சம் ..
மிக சரியாக சொன்னீர்…… வெற்றி நமதே ……….