முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா ? படக்கூடாதல்லவா. அதைப் போலத்தானே மானமில்லாதவன் தான் அவமானப் படுத்தப் பட்டதாக கூவுவது ?
அப்படி கூவும் மானங்கெட்டவன் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா ?
அது வேறு யாரும் அல்ல. சவுக்காலும், அதன் வாசகர்களாலும் குருமாராஜ் என்று அன்போடு அழைக்கப் படும் காமராஜ் தான் அது.
குருமாராஜ் சார்பாக, அவரது நண்பர்கள் பல பேர், சவுக்கிடம், காமராஜ் முன்பு போல் இல்லை, அவர் மிகவும் பலகீனமாக இருக்கிறார், அவரை விட்டு விடுங்கள். ஜாபர் சேட்டோடு, அவர் முன்பு போல நெருக்கம் பாராட்டுவது இல்லை என்று பல முறை கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் சொன்னதை சவுக்கு நம்பாவிட்டாலும், பெரியவர்கள் சொன்னதற்கு மரியாதை அளித்து, பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற அணுகுமுறையை கடைபிடித்தது. ஆனால், குருமாராஜின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதும், இன்னும், ஜாபர் சேட்டின் கைப்பாவையாகவே செயல்பட்டு வருகிறார் என்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம், சென்னை மாநகர குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் (Chief Metropolitan Magistrate) என்டிடிவி இந்து தொலைக்காட்சி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் குருமாராஜ்.
மான நஷ்ட வழக்கு தொடர்வதற்கு, குருமாராஜ் கூறிய காரணம், இந்திய ஜனநாயகத்தை காத்த மாதரசி, நீரா ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தில், குருமாராஜின் மனைவி ஜெயசுதா பணியாற்றினார் என்று அத்தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாம். இதனால் இல்லாத மானம் நஷ்டப் படுத்தப் பட்டு விட்டது என்று வழக்கு தொடுத்துள்ளார் குருமாராஜ்.
இவ்வாறு தொடுத்த வழக்கிலாவது ஏதாவது நியாயம் இருக்கிறதா என்றால் துளியும் இல்லை. நீரா ராடியாவின் நிறுவனத்தில் ஜெயசுதா பணியாற்றினார் என்பது, சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக சொன்ன தகவல். இத்தகவல் உண்மையா இல்லையா என்பது, சிபிஐ விசாரணையின் முடிவிலேயே தெரிய வரும். மேலும், குருமாராஜின் வீட்டில் கைப்பற்றப் பட்ட ஆவணங்களின் பட்டியலை சிபிஐ இது வரை வெளியிடவில்லை. இந்தப் பட்டியலை காமராஜ் வெளியிடத் தயாரா ?
மேலும், என்டிடிவி இந்து தொலைக்காட்சி வெளியிட்டதாக சொல்லப் படும் இந்த செய்தியை வெளியிட்டது அந்த தொலைக்காட்சி மட்டுமல்ல. சிஎன்என்.ஐபிஎன், டைம்ஸ் நவ், என்டிடிவி 24 X 7 ஆகிய தொலைக்காட்சிகளும் தான்.
இது போக, டெஹல்கா, டெக்கான் ஹெரால்ட், இந்துஸ்தான் டைம்ஸ், டெலிகிராஃப் ஆகிய நாளேடுகளும் குருமாராஜ் மனைவி ஜெயசுதா வைஷ்ணவி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தில் பணி புரிகிறார் என்ற செய்தியை வெளியிட்டன.
அவர்கள் மீதெல்லாம் மான நஷ்ட வழக்கு தொடுக்காமல், என்டிடிவி இந்து தொலைக்காட்சி மீது மட்டும், வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் என்ன ?
இங்கேதான் ஜாபர் சேட் வருகிறார். என்டிடிவி இந்து தொலைக்காட்சியின் ஆசிரியர் சஞ்சய் பின்டோ என்பவர், ஜாபர் சேட் தொலைபேசியில் கேட்டுக் கொண்டதற்குப் பிறகும், ட்ராலி பாய்ஸ் வீட்டு மனை பெற்ற விபரத்தையும், தமிழ்நாடு வீட்டு வசதித் துறையின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல்களையும் பற்றி செய்தி வெளியிட்டதால், கடும் கோபம் அடைந்த ஜாபர் சேட், சஞ்சய் பின்டோவிற்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காகவே குருமாராஜை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
ஜாபர் சேட்டின் தொழில் கூட்டாளியான (என்ன தொழில் என்றெல்லாம் கேட்காதீர்கள்… கண்றாவி) குருமாராஜை இது போன்ற ஒரு வழக்கை தொடுக்க வைத்துள்ளார்.
தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது என்று வழக்கு தொடுத்திருக்கிறாரே குருமா ராஜ் ?
நித்யானந்தாவை எக்ஸ்போஸ் செய்கிறேன் என்று, ரஞ்சிதா என்ற பெண்மணி, படுக்கையில் நெருக்கமாக இருந்ததை ஃப்ரேம் ஃப்ரேமாக வெளியிட்டு, பத்திரிக்கை வியாபாரத்தையும் தனது வியாபாரத்தையும் பெருக்கியுள்ளாரே குருமாராஜ், ரஞ்சிதாவின் மானத்தைப் பற்றி கவலைப் பட்டாரா ?
குருமாராஜின் விவாதத்தின் படியே ஒரு பேச்சுக்காக ஜெயசுதா அந்த நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றே வைத்துக் கொள்வோம். இதனால் ஒன்றும் பெரிய அவமானம் நேர்ந்து விடவில்லையே… ! ஆனால், படுக்கையில் ஒரு ஆணோடு அந்தரங்கமாக இருக்கும், ஒரு பெண்ணின் புகைப்படங்களை வெளியிடுவதற்கு குருமாராஜுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? இவ்வாறு, படுக்கையறையில் ஒளிந்திருந்து படம் பிடிப்பதற்கு பெயர் இன்வெஸ்டிகேட்டீவ் ஜர்னலிசம் இல்லை….. போர்னோக்ராஃபி.
ரஞ்சிதாவை படம் பிடித்துப் போட்டீர்களே.. குருமாராஜ். ஜாபர் சேட் கடந்த வாரம், ஐதராபாத் சென்று, ஐந்து நட்சத்திர ஓட்டலில், அழகிகளோடு உல்லாசமாக இருந்தாரே… அந்தப் படத்தை போட வேண்டியதுதானே… ? அதற்கு கூட பணத்தை செலவு செய்யாமல், ஓசியில் விமான டிக்கெட், நட்சத்திர ஓட்டல் அறை, ஓசி வாகனம், (கருமம், சென்னையிலிருந்து அழைத்துச் சென்ற பெண்ணும் ஓசியாம்) என்று தன் வாழ்க்கையையே ஓசியில் நடத்தும் ஜாபர் சேட்டைப் பற்றி எழுத வேண்டியதுதானே… ?
ரஞ்சிதா நடிகை… பெண்.. அவள் மீது எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும், யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற திமிர்தானே ?
நேரிடையாக சொல்ல முடியாவிட்டாலும் இன்னொரு விஷயத்தையும் தெரியப் படுத்த வேண்டும். சென்னையில், வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியோடு, ஒரு மருத்துவ தொண்டு நிறுவனம் நடந்து வருகிறது. அந்த தொண்டு நிறுவனத்தின் மேனேஜ்மேன்ட் மாறி, ஒரு நல்ல அதிகாரி நியமிக்கப் படுகிறார். அங்கே ஒரு பெண் நல்ல நிர்வாகியாக இருக்கிறார். அந்த அதிகாரியும், அந்தப் பெண்ணும் சேர்ந்து, அது வரை அந்த தொண்டு நிறுவனங்களில் நடந்து வந்த ஊழல்களை மேலும் நடைபெறாவண்ணம் மாறுதல்களை செய்கிறார்கள்.
இந்த மாறுதல்களால், அந்த நிறுவனத்தில் இது நாள் வரை கொள்ளையடித்து வந்த நபருக்கு கடும் பொருள் நஷ்டம். மேலும் கொள்ளையடிக்காமல் தடுக்கப் படுகிறார். இந்த நபர் குருமாராஜுக்கு நெருங்கிய நண்பர்.
குருமாராஜிடம் இந்த விஷயம் சொல்லப் பட்டதும், குருமா ராஜ் என்ன செய்தார் தெரியுமா ? அந்தப் பெண்மணி, அந்த நிறுவனத்திலேயே இரண்டு பேரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்றும், வெளியில் பல பேரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் செய்தி வெளியிட்டார். ஒரே வாரத்தில் அந்தப் பெண்மணி தனது வேலையை துறந்து வெளியேறினார்.
இதுதான் குருமாராஜ். வைஷ்ணவி கம்யூனிகேஷ்ன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் உங்கள் மனைவியைப் பற்றி இப்படி செய்தி வெளியிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் குருமாராஜ் ?
இப்படிப் பட்ட வஞ்சனைகளை யார் செய்வார் என்று பாரதி கூறியிருக்கிறான் தெரியுமா ?
நெஞ்சில் உரமும், நேர்மை திறமும் இல்லாதவர்கள் தான் இப்படிப் பட்ட செயல்களை செய்வார்கள் என்று கூறியிருக்கிறான்.
நெற்றிக் கண்ணைத் திறந்தால் குற்றம் குற்றமே என்று போட்டிருக்கிறீர்களே…. நெற்றிக் கண்ணை விடுங்கள். உங்களுக்கு கண் இருக்கிறதா முதலில்… பார்வையற்றவன் கூட நேர்மையாக உழைத்துப் பிழைக்கிறானே….. கண்ணிருந்தும் குருடனாக, காலிருந்தும் முடவனாக இருக்கும் குருமாராஜ் அவர்களே…. இப்போது கூட சிந்திக்கமாட்டீர்களா ?
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், நக்கீரனை முடக்க ஜெயலலிதா தொடர்ந்து வழக்கு மேல் வழக்காக போட்டுக் கொண்டிருந்த போது, இந்த பத்திரிகையாளர்கள் உங்களுக்கு எப்படி தோள் கொடுத்தார்கள் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
அப்படிப் பட்ட பத்திரிக்கையாளர்கள், உங்கள் வீட்டை சோதனை செய்த போது, முணுமுணுக்கக் கூட இல்லையே ஏன் என்று சிந்தித்தீர்களா குருமாராஜ் ?
குருமாராஜ் சார், உங்கள் மனைவி ஜெயசுதாவைப் போன்ற உழைப்பாளியை சவுக்கு பார்த்ததே இல்லை சார். நினைத்தாலே மனது பெருமைப் படுகிறது சார்.
வீட்டு வசதி வாரியத்திற்கு கொடுத்த விண்ணப்பத்தில் தான் ஒரு விவசாயி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வருட வருமானம் ஆண்டுக்கு 1.50 லட்சம் என்று குறிப்பிட்டுருக்கிறார். அப்போ மாத வருமானம் 12,500 ரூபாய். இவ்ளுண்டு மாத வருமானத்தை வைத்துக் கொண்டு இரண்டே தவணையில் ஒரு கோடியே இருபத்தாறு லட்சம் கட்டியிருக்கிறார் என்றால் உங்கள் மனைவியைப் போல ஒரு உழைப்பாளியைப் பார்க்க முடியுமா ? நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது குருமாராஜ் சார்.
இது பத்தாது என்று இரவு நேரத்தில் சேரிக் குழந்தைகளுக்கு உங்கள் மனைவி ஜெயசுதா பாடம் எடுக்கிறார் என்ற செய்தியை கேள்விப் பட்டவுடன்…. அப்பப்பா…. புல்லரிக்கிறது சாரே…
ஞான் எந்து ஒரு புண்ணியம் செஞ்சு.. நிங்களோடே, ஈ லோகத்தில் ஜனிக்க ?
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நோக்கமே, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்குவதுதானே… ? அதனால்தானே, மாநகராட்சியிலோ, நகராட்சியிலோ, இந்தியாவின் எந்த இடத்திலும், சொந்த வீடோ, வீட்டு மனையோ, அடுக்கு மாடியோ இருக்கக் கூடாது என்று விதிமுறை வகுத்துள்ளார்கள். மனைவியை வைத்து, அந்த விண்ணப்பத்தில் ஒரு பொய்யான உறுதிமொழியை கொடுத்து, கருணாநிதியின் காலை கழுவி 2 கோடி ரூபாய் வீட்டு மனையி 1.26 கோடிக்கு வாங்கி, அதில் அடுக்கு மாடி வீடு கட்டி 6 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளீர்களே… குருமாராஜ்…
நீங்கள் மானத்தைப் பற்றிப் பேசலாமா ?
நீங்கள் மானநஷ்ட வழக்கு போட்டதன் உடனடி விளைவு என்ன தெரியுமா ?
உங்கள் மனைவி பெயரில் திருவான்மியூரில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள வீட்டு மனையை ரத்து செய்ய அரசுக்கும், வீட்டு வசதி வாரியத்திற்கும் புகார் அனுப்பப் படுகிறது. அதன் நகல் வேண்டுமென்று எங்கேயும் அலையாதீர்கள். சவுக்கே அதை உங்களுக்காக பதிப்பிக்கிறது. இப்போ என்ன செய்வீங்க… வெவ்வெவ்வே…..
தேன் கூட்டில் கை வைத்து விட்டீர்கள் குருமாராஜ். இதன் விளைவுகளை நீங்கள்தான் அறுவடை செய்ய வேண்டும். நீங்கள் தொடர்ந்துள்ள வழக்கு, யாரையும் அச்சுறுத்தி விடாது. அந்த வழக்கில் சவுக்கு தன்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொண்டு, இந்த தகிடுதண்டா ஆவணங்களையெல்லாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீங்கள் எப்படிப் பட்ட நபர் என்பதை நீதிமன்றத்திலும் நிரூபிக்கும் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியோடு சவுக்கு அறிவிக்கிறது.