நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப் படும். திமுக அரசு, ரியல் எஸ்டேட் மூலமாக நிலத்தில் செய்த ஊழல்களை கடந்த ஐந்தாண்டுகளாக பார்த்தோம். ஆகாயத்தில் செய்த ஊழல்களை விமானம் மூலமாக பூச்சி மருந்து தெளித்த வகையில் பார்த்தோம். ஸ்பெக்ட்ரம் மூலமாக காற்றிலும் ஊழல் நிறைவு பெற்று விட்டது. நீரில் எப்படி ஊழல் செய்தார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு இப்போதுதான் என்று இல்லை. எழுபதுகளிலேயே இருந்தது. பல்வேறு திட்டங்கள் போட்டும், இன்று வரை உருப்படியான ஒரு திட்டமும் செயல்படுத்தப் படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் பட்டதுதான் வீராணம் திட்டம். சென்னை நகரிலிருந்து 222 கிலோ மீட்டரில் கடலூர் மாவட்டத்தில் உள்ளதுதான் வீராணம் ஏரி. வீராணம் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப் படாத நீரை எடுத்து, நெய்வேலிக்கு அருகிலுள்ள வடக்குத்து என்ற இடத்தில் அமைக்கப் பட இருந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து, சென்னை மாநகருக்கு 198 கிலோ மீட்டர் குழாய்கள் பதித்து, அதன் மூலமாக குடிநீரைச் சென்னைக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டம்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப் படுவதற்கு முன்பாக ஒரு விஷயம் நடந்தது. ஐம்பதுகளிலெல்லாம், பொதுப் பணிக்கான ஒப்பந்தம் வழங்குவதை ஒரு சில பொறியாளர்கள் முடிவெடுக்க அதிகாரம் கொடுக்கப் பட்டிருந்தது. 1954ம் ஆண்டு, சுந்தரம் என்ற ஐசிஎஸ் அதிகாரி, இது போல, தனி நபர் ஒருவருக்கு அதிகாரம் வழங்குவது மக்களாட்சி முறைக்கு உகந்ததல்ல என்றும், நான்கு துறைகளின் பொறியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து முடிவெடுக்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார். காமராஜர் காலத்தில், கக்கன் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த போது, பொறியாளர்கள் குழுவை அமைத்து, அதன் மூலம் முடிவெடுக்கலாம் என்று உத்தரவிடுகின்றனர். இது போல, பொறியாளர்கள் குழுவை அமைத்தனால் தான் காமராஜரால், ‘தமிழினத் தலைவராக’ பரிணமிக்க முடியவில்லையோ…. ?
காங்கிரஸ் ஆட்சி போனதும் திமுக ஆட்சியில் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக ஆகிறார். ‘எல்லா முடிவையும் பொறியாளர்கள் எடுத்தா, நாம எதுக்கு இருக்கோம்’ என்று தோன்றுகிறது அவருக்கு. உடனடியாக பொறியாளர்களிடம் கருத்து மற்றும் பெற்றுக் கொண்டு, முடிவை அரசு எடுக்கலாமா என்று ஒரு புது ஐடியாவை உருவாக்குகிறார். இது தொடர்பாக கோப்பு உருவாக்கப் பட்டு, பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, ஜுலை 69ல், இருக்கும் விதிகளே சரியாக இருக்கின்றன, அதனால் மாற்ற வேண்டாம் என்று கருணாநிதியே உத்தரவிட்டு, கோப்பை முடிக்கிறார்.
இதற்கு நடுவே, வீராணம் குழாய் அமைக்க வேண்டிய திட்டத்தைப் பற்றி பேச்சு கிளம்புகிறது. ‘வீராணம் போன்ற திட்டம் வந்தால், இந்த என்ஜினியர் பசங்கக் கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கனும், அதனால, கருத்த அவங்க சொல்லட்டும், முடிவ நாம எடுப்போம்‘ என்று திட்டமிட்ட கருணாநிதி, இது தொடர்பான அரசாணையை திருத்தி புதிய அரசாணை வெளியிடுகிறார். அரசாணை வெளியிடப்பட்டு, அது தொடர்பான விதிப் புத்தகங்களையும் மாற்றி உத்தரவிடப் படுகிறது. அமைச்சர்கள் குழு கூடி ஆலோசனை செய்து முடிவெடுக்கப் பட்ட 3ஜி ஏலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தந்தது. ஆண்டிமுத்து ராசா என்ற தனி நபர் எடுத்த முடிவு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதல்லவா ? அதே மெத்தட்தான் இது.
குழாய் அமைக்க விரும்புபோவோர் வரலாம் என்று டெண்டர் வெளியிடப் படுகிறது. இந்த டெண்டரில், 5 நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன. ஐந்து நிறுவனங்களில், சத்யநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனம் தேர்ந்தெடுக்கப் படுகிறது. ஏறக்குறைய ஒரே விலையை சொல்லியிருந்த மற்றொரு நிறுவனம் தாராப்பூர் என்ற நிறுவனம்.
ஒரு வேலைக்காக டெண்டர் கோரப்படும் சமயங்களில், தரம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முன்னனுபவம் மற்றும், கூறப்பட்டுள்ள விலை ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து நிறுவனங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி, சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதே அரசுத் துறைகளில் வழக்கம்.
ஆனால் ஏறக்குறைய சமநிலையில் இருந்த தாராப்பூர் நிறுவனத்தோடோ, போட்டியிட்ட மற்ற நிறுவனங்களான, இன்டியன் ஹ்யூம் பைப்ஸ், கேரளா ப்ரேமோ பைப் மற்றும், யுனிவர்சல் பைப்பிங் கன்ஸ்ட்ரக்ஷ்ன் போன்ற எந்த நிறுவனத்தோடோ, பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் டெண்டரில் அளித்த விலையை குறைப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப் படவில்லை.
இதற்குப் பிறகு, சத்யநாராயணா நிறுவனம், கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களை நேரில் ஆய்வு செய்து, அந்த நிறுவனங்களுக்கு, இத்திட்டத்திற்கு தேவையான குழாய்களை தயாரிக்கும் அளவுக்கு வசதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அதன் பிறகு, இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கலாம் என்று, பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் குறிப்பு எழுதுகிறார்.
இந்தக் குறிப்பு அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்சாவிடம், (இந்தப் பெயர் உள்ளவர்களே ஊழலில் சம்மந்தப் பட்டிருக்கிறார்கள் என்பது என்ன ஒரு ஆச்சர்யம் ?) அளிக்கிறார். அவர் தலைமைப் பொறியாளரை அழைத்து, “இதோ பாருங்க பாஸு… முதலில், வேலைக்கான ஆணையை வழங்கி விட்டு, அதன் பிறகு, தகுதி இருக்கிறதா என்று பார்ப்போம். முதலமைச்சர் விருப்பப் படி நடந்து கொள்ளுங்க. அவ்ளோதான் சொல்லிட்டேன்” என்று கூறுகிறார். அதன் பிறகு, இந்தக் கோப்பு, அப்போதைய நிதித் துறைச் செயலாளரிடம் போகிறது.
இப்போது இருப்பது போல, ஆட்சியாளர்களுக்கு காது கிழியும் வகையில் ஜால்ரா அடிக்கும் அதிகாரிகள் அப்போது இல்லை. அப்போதைய நிதித்துறை செயலாளர், கோப்பை விரிவாக ஆராய்ந்து தன் அறிக்கையை அளிக்கிறார். அவர் தனது அறிக்கையில், முதலில் இந்நிறுவனங்களின் தொழிற்சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்தால் தான் இந்த நிறுவனம் சரியான நிறுவனமா இல்லையா என்பதை முடிவு செய்ய இயலும். இவர்கள் கூறும் வசதிகள் இல்லாவிட்டால் டெண்டரை நிராகரிக்க வேண்டும். மேலும், வெளிநாட்டில் உள்ள தொழிற்சாலையை நேரில் ஆய்வு செய்தால், அந்த நிறுவனங்களோடு, நேரடியாக ஒப்பந்தம் செய்து, அரசுக்கான செலவை குறைக்கவும் வழி இருக்கும் என்று கூறுகிறார். மேலும், சத்யநாராயணா நிறுவனம், அது நிறுவ இருக்கும் தொழிற்சாலைக்காக 75 சதவிகிதத் தொகையை வட்டியில்லாத முன்பணமாக வழங்க வேண்டும் என்று கேட்பது, முறையற்ற செயல், ஆகவே, அனைத்து நிறுவனங்களோடும் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று எழுதுகிறார்.
இவர் நிதித்துறை செயலராக இருந்தால் இவர் சொன்னதையெல்லாம் கேட்க வேண்டுமா என்ன ? ‘போடா வெண்ணை’ என்று, சத்ய நாராயணா பிரதர்ஸ் நிறுவனம் அளித்த டெண்டர் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது என்று முடிவெடுக்கப் படுகிறது.
இதன் பிறகு, பொதுப்பணித் துறை அமைச்சர் சாதிக் பாட்சா, கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வநாதன், மற்றும் தலைமைப் பொறியாளர் உசேன் ஆகியோர், ஈரான், மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கு சென்று தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதற்காக செல்கிறார்கள். உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றும். பொதுப்பணித்துறை அமைச்சர் செல்கிறார், தலைமைப் பொறியாளர் செல்கிறார்…. கூடுதல் தலைமைச் செயலாளர் எதற்காக செல்கிறார் என்று தோன்றுமே…. ? வேறு ஒன்றும் இல்லை… அவர் வெளிநாடு சுற்றிப் பார்க்க வேண்டாமா ?
நன்றாக ஊர் சுற்றிப் பார்த்து விட்டு, திரும்பி வந்து, ஆய்வுக் குழு கூட்டாக தொழில் நுட்ப அறிக்கை அளிப்பதற்கு பதிலாக, தலைமைப் பொறியாளர் உசேன் மட்டும், ‘சுருக்கமான அறிக்கை’ ஒன்றை சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கை தொழில் நுட்ப அறிக்கை போல இல்லாமல், ‘சுற்றுப் பயணக் குறிப்பு’ போல இருந்தது என்று நீதிபதி சர்க்காரியா குறிப்பிடுகிறார். பேக்டரியை பாருங்கன்னா, இவர்கள் கிரேக்க நாட்டில், ‘பெல்லி டான்ஸ்’ பார்த்திருப்பார்கள். அப்புறம் எப்படி தொழில் நுட்ப அறிக்கை சமர்ப்பிப்பது ?
சுற்றுப் பயணம் முடிந்ததும், சத்யநாராயணா பிரதர்ஸுக்கு ஆணை வழங்கலாம். அவர்கள் டக்கராக வேலையை முடிப்பார்கள் என்று முடிவெடுக்கப் படுகிறது. தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட டெண்டர், நிரந்தரமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. தொழிற்சாலை அமைப்பதற்காக 75 சதவிகித முன்பணம் வட்டியில்லாமல் வழங்கவும் உத்தரவிடப் படுகிறது. இந்த நிதித் துறைச் செயலாளர் இருக்கிறாரே…. அப்போதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது போல முன்பணம் வழங்கக் கூடாது என்று கூறுகிறார். ஓரளவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு நின்றிருப்பார் போலிருக்கிறது.. இல்லையென்றால், பொதுப்பணித்துறை அமைச்சரும், முதலமைச்சரும் ரொம்ப நல்லவர்கள் என்று லெட்டர் எழுதி வைத்து விட்டு, தூக்கில் தொங்கியிருப்பார்.
ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவே தொழில் நுட்ப ஒப்புதல் தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்ற விதியை மாற்றி, அதிகாரங்கள் அனைத்தும் பொதுப்பணித் துறை அமைச்சராகிய தன்னிடம் வரும் வகையில் விதிகளை மாற்றி, முழு அதிகாரத்தையும் கைப்பற்றிய கருணாநிதியின் நடவடிக்கைகள், அதன் நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது என்று நீதிபதி சர்க்காரியா குறிப்பிடுகிறார்.
மேலும், வீராணம் திட்டம் வரப்போகிறது என்பதை அறிந்தே, முடிந்து போன ஒரு கோப்புக்கு மீண்டும் உயிர் கொடுத்து, விதிகளில் திருத்தம் ஏற்படுத்தப் பட்டது என்பதும், இத்திருத்தத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது என்கிறார் சர்க்காரியா.
இந்த ஆணையத்தின் முன் சாட்சியமளித்த நிர்வாகப் பொறியாளர் சிவராமன் “முதலமைச்சர் விருப்பப் படி திருவாளர்கள் சத்தியநாராயணா பிரதர்ஸ் அனுப்பிய டெண்டரை நான் பரிந்துரை செய்யவில்லை என்றால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். இக்காரணத்தினால்தான் நான் என் முடிவை மாற்றிக் கொண்டு அதிகாரத்திற்கு பணிந்தேன். உலகிலுள்ள எல்லா நாடுகளில் இருந்தும் டெண்டர்கள் கேட்ட பிறகு, குறிப்பாக ஒரு டெண்டரை தற்காலிகமாக ஏற்றுக் கொள்வது என்பதை என்னுடைய 31 ஆண்டுகாலப் பணி அனுபவத்தில் நான் பார்த்ததில்லை. வீராணம் திட்டத்தில் தான் இவ்வாறு ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளதிலிருந்து, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒவ்வொருவரும் எப்படி மிரட்டப் பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.
சரி… இவ்ளோ கஷ்டப் பட்டு, சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு, கருணாநிதியும், அமைச்சர் பொதுப்பணித் துறை அமைச்சர் சாதிக் பாட்சாவும், எதற்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறதல்லவா ? இதற்கான விடையை அந்நிறுவனத்தின் உரிமையாளர் சத்யநாராயணாவின் மகன், புருஷோத்தம் தனது அறிக்கையில் விளக்குகிறார். பல்வேறு தவணைகளில் எப்படி 21 லட்சம் ரூபாய் லஞ்சமாக கருணாநிதிக்கு கொடுக்கப் பட்டது என்பதை எடுத்துக் கூறுகிறார்.
வீராணம் திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பு, 16 கோடி. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலைப் பார்த்து விட்டு 26 கோடி ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையாக தோன்றாமல் போகலாம். இத்திட்டம் மதிப்பீடு செய்யப் பட்ட போது, சென்னை அண்ணா சாலையில் வீட்டோடு சேரத்து, 1240 சதுர அடி இடத்தை மாறன் ரூ.45,000/- க்கு வாங்கியுள்ளார் என்பதை வைத்து அந்தக் காலத்து பண மதிப்பை புரிந்து கொள்ளுங்கள்.
தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நெருங்கிய தொடர்பால், நஷ்டப் படுவது என்றுமே மக்கள் பணமாகத்தான் இருக்கிறது.
முரசொலி மாறனுக்கு சென்னை பச்சையப்பன் கல்லூரியை நடத்தும், பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராக வேண்டுடமென விருப்பம். பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராவது. பச்சையப்பன் ட்ரஸ்ட் என்பது பாரம்பரியமிக்க ஒரு ட்ரஸ்டாகும். இந்த ட்ரஸ்டில் உறுப்பினர் ஆவது சமுதாயத்தில் மிகப் பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கும்.
அதனால் எப்படியாவது இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக வேண்டுமென மாறன் விரும்பினார். 1970ல் பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சத்யநாராயணாவின் மருமகன் புருஷோத்தம் என்பவரோடு, மாறன் “வாங்க பழகலாம்” என்று பழகத் தொடங்குகிறார்.
புருஷோத்தமுக்கு மாறனின் நட்பு என்ன கசக்கவா செய்யும் ? இவர் தொழில் அதிபர். மாறன், முதலமைச்சரின் மருமகன். அவரும், நெருங்கிப் பழகுகிறார். 1970 ஜனவரியில், பச்சையப்பன் ட்ரஸ்ட் அறங்காவலராக இருந்த எம்ஏஎம்.முத்தையா செட்டியார் இறக்கிறார். அவர் இறந்தவுடன், மாறன், ‘அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்’ என்று அந்தக் காலியிடத்தில் தான் உறுப்பினராக வேண்டும் என்று தனது விருப்பத்தை புருஷோத்தமிடம் தெரிவிக்கிறார். முதலமைச்சரின் மருமகனை எதிர்த்து, வேறு யாரும் தேர்ந்தெடுக்கப் பட்டு விட முடியுமா என்ன ?
மாறனின் பெயரை புருஷோத்தம் முன்மொழிந்து மாறன் பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராகிறார். பிறகு சிறிது நாட்களிலேயே, அந்த அறக்கட்டளையின் தலைவர் பதவியையும் கைப்பற்றுகிறார் மாறன்.
தலைவர் பதவியை மாறனுக்கு விட்டுக் கொடுத்த புருஷோத்தம் கைமாறாக எதுவுமே எதிர்ப்பார்க்க மாட்டாரா ? எதிர்ப்பார்த்தார். மாறனிடம், தங்கள் நிறுவனமான சத்தியநாராயணா பிரதர்ஸூக்கு, வீராணம் குழாய்கள் அமைக்கும் உத்தரவை பெற்றுத் தருமாறு கூறுகிறார்.
மாறன், “நான் காண்ட்ராக்ட் வாங்கித் தர்றேன்… பதிலுக்கு நீங்கள் என்ன தருவீர்கள்” என்று கேட்கிறார். என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, ஒப்பந்தத்தில் இரண்டரை சதவிகிதத்தை கமிஷனாகத் தர வேண்டும் என்று மாறன் கேட்கிறார்.
உடனே கணக்குப் போடுகிறார்கள். மொத்த திட்டச் செலவு 16 கோடி. அதில் இரண்டரை சதவிகிதம் என்பது 40 லட்சம். இந்தத் தொகையை கொடுத்து விடுங்கள் என்று மாறன் கூறவும், புருஷோத்தமும் ஒப்புக் கொள்கிறார்.
பூர்வாங்கப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதல்லவா ? அடுத்த கட்டத்திற்குப் போகிறார்கள். சத்யநாராயணா பிரதர்ஸ், நிறுவனத்திற்கு, பூர்வாங்கமாக ஒப்பந்தம் வழங்கி ஒரு உத்தரவு வேண்டுமென்று கேட்கிறார்கள். மாறன் மட்டும் சளைத்தவரா என்ன ? சரி உங்களுக்கு அது போல ஒரு உத்தரவு வழங்கப் படும். “அதுக்கு முன்னால பேசிய தொகையை குடுங்க” என்கிறார் மாறன்.
புருஷோத்தமுக்கு வேறு வழி…. தனது மாமனார் சத்தியநாராயணா ரெட்டியிடம் இந்தத் தகவலை தெரிவிக்கிறார். அவர், “இவ்வளவு பெரிய தொகையை மொத்தமாக தர இயலாது. அதனால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளச் சொல்லி பேசு” என்று கூறுகிறார்.
மாறனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. மொத்தமாக தர இயலாது. முதலில் 10 அல்லது 15 லட்சம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். மாறனோ, “நான் ஒன்றும் பெரிய தொகையை கேட்டு விடவில். மிக குறைந்த தொகையாகிய 40 லட்சத்தைத் தான் கேட்டுள்ளேன். குடுத்தா குடுங்க…. இல்லன்னா எவ்ளோ பேரு, ரெடியா இருக்காங்க தெரியுமா ? “ என்று கூறுகிறார்.
ஒரு வழியாக, மீதத் தொகைகளை பின்னால் தருவது என்றும், முதல் தவணையாக அட்வான்ஸாக ஒரு தொகை தரப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப் படுகிறது.
ஒப்பந்தப் புள்ளிகள் முடிவடைவதற்கு முன்பாகவே, பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, புருஷோத்தமும், அவர் மாமனார் சத்யநாராயணா ரெட்டியும், மாறனோடு சேர்ந்து கருணாநிதியின் இருப்பிடத்திற்குச் சென்று, கரன்சி நோட்டுக்களாக, 5 லட்ச ரூபாயை வழங்குகிறார்கள். இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பேசுவதெல்லாம், தமிழ் எங்கள் மூச்சு, இதயத்தின் வீச்சு, உயிரே போச்சு என்றெல்லாம் பேசுவபர்கள், துட்டு வாங்கும் விவகாரத்தில் மட்டும், தெலுங்கு ரெட்டியை தேர்ந்தெடுக்கிறார்கள் பார்த்தீர்களா…. ? பணத்துக்கு நிறமோ, மொழியோ ஏது…. ?
முதல் தவணை தொகை கொடுக்கப் பட்டவுடன், சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு வரிசையாக அரசுப் பணம் வழங்கப் படுகிறது. அதையொட்டி, பேசிய தொகையை தருமாறு, நெருக்கடி கொடுக்கப் படுகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசிடமிருந்து சத்யநாராயணா பிரதர்ஸுக்கு அரசு வழங்கிய மொத்தத் தொகை 3.9 கோடி. புருஷோத்தம், கருணாநிதிக்கு, நேரடியாகவும், மாறன் மூலமாகவும் வழங்கிய தொகை 32 லட்சம்.
இந்த தொகையை இவர் கருப்புப் பணத்திலிருந்து வழங்கியுள்ளார், அதனால், இவரும், இக்குற்றத்திற்கு உடந்தையானவர், இவர் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றெல்லாம் கருணாநிதி தரப்பில் வாதாடப் பட்டது. ஆனால், புருஷோத்தமன், தேதி வாரியாக, எந்தெந்த நாட்களில், வங்கியிலிருந்து, எவ்வளவு தொகை எடுக்கப் பட்டு, கருணாநிதியிடம் கொடுக்கப் பட்டது என்ற விபரங்களை கமிஷன் முன்பு தாக்கல் செய்தார்.
புருஷோத்தம் தனது சாட்சியத்தில், ஒரு முறை கருணாநிதியிடம் நேரடியாக பணத்தை எடுத்துச் சென்று கொடுத்ததை இப்படி விவரிக்கிறார்.
“கரன்ஸி நோட்டுக்களாக, 6 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு மாறன் வீட்டுக்குச் சென்றோம். மாறன் கருணாநிதி வீட்டிக்குக் கூட்டிச்சென்றார். பணம் அடங்கிய தோல் பெட்டியை மேசை மீது கருணாநிதி முன்னிலையில் வைத்தேன். கருணாநிதி பணத்தை எடுத்துக் கொண்டு காலிப் பெட்டியை திருப்பிக் கொடுத்தார்“
இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போது, சிவராமன் என்ற பொதுப்பணித்துறை அதிகாரி, தாராப்பூர் மற்றும், சத்யநாராயணா பிரதர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார். குழாய்கள் அமைக்கும் போது, அவற்றை சோதனை செய்து பார்க்க, 12 கோடி காலன் தண்ணீர் தேவைப்படும் என்றும் அந்தத் தண்ணீருக்கு ஆகும் செலவாக அரசு, தங்களுக்கு 96 லட்சம் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். தாராப்பூர் நிறுவனமோ, இது போன்ற ஏற்பாட்டிற்கு ஆகும் செலவை அவர்களே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தனர். ஆனால், இதையெல்லாம் யார் காதில் வாங்குவது…. ? இந்த ஆட்சேபணையையும் மீறி, சத்யநாராயணா நிறுவனத்துக்கே வேலை ஆணை வழங்கப் பட்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய கணக்காயர் (சிஏஜி) அறிக்கைதான் முதலில், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அதைப் போலவே, மாநில கணக்காயர் குழு, வீராணம் திட்டத்தை முழுமையாக ஆராய்ந்து, மொத்தம் எவ்வளவு மக்கள் பணம் விரயமாகியுள்ளது என்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் படி, கூடுதல் நிதிச் சலுகைகள், மிகையாக கொடுக்கப் பட்ட தொகை, தவிர்க்கத் தக்க செலவு, தரக்குறைவான குழாய்களால் ஏற்பட்ட நஷ்டம், தரக்குறைவான சிமெண்டு பயன்படுத்தியது, சோதனையிடப்படாத குழாய்களுக்கு சோதனை செய்ததாக வழங்கப் பட்ட தொகை, மேற்பார்வை பணிக்கான கூடுதல் செலவு என்று மொத்தத்தில் 7 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்று அறிக்கை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை மாநில கணக்காயர் சமர்ப்பித்ததால், அவரை தமிழின விரோதி, ஆரிய கைக்கூலி என்றெல்லாம் கருணாநிதியால் ஏச முடியவில்லை.
இந்த ஊழலில், கருணாநிதி மட்டும் தான் பணம் வாங்கினாரா மாறன் வாங்கவேயில்லையா என்ற கேள்வி எழும். மாமா வாங்கினால் என்ன மருமகன் வாங்கினால் என்ன.. இருந்தாலும், அவர் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டாமா ?
முரசொலி கட்டிடம் கட்டும் பணி, சத்யநாராயணா பிரதர்ஸின் துணை நிறுவனமான மஹாலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படுகிறது. அதற்கான தொகையை மாறன் கொடுத்தார் என்று அவசரப்பட்டு முடிவெடுத்து விடாதீர்கள். தங்களிடம் சிக்கியவர்களை பட்டாபட்டி அண்டர்வேரோடு அனுப்புவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். வேலையையும், கட்டுமானப் பொருட்களையும், இலவசமாகவே மாறன் பெற்றார். இது குறித்து பதில் அளித்த மாறன், மஹாலட்சுமி கன்ஷ்ட்ரக்ஷன் நிறுவனம், சத்யநாராயணா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற விபரம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்….. ஊழலின் சாட்சியாக முரசொலிக் கட்டிடம் இன்றும் நிற்கிறது.
காலம் செல்லச் செல்ல, சத்யநாராயணா பிரதர்ஸ் தங்களுக்கு வழங்கப் பட்ட வேலையை செய்து முடிக்காமல் பணிகள் அப்படியே நின்று போகின்றன. அரைகுறையாக செய்யப் பட்ட பணிகளால் சாலையெங்கும் குழாய்கள் கிடந்தன.
இது குறித்து, கருணாநிதியின் முதன்மைச் செயலாளராக இருந்த ஆர்.நாகராஜன், தனது சாட்சியத்தில், “1975ம் ஆண்டு அக்டோபர் திங்களில் புருஷோத்தம் என்னை வந்து பார்த்தார். அப்போது நான் மட்டுமே அங்கு இருந்தேன். இந்த நிதி நெருக்கடி எப்படி ஏற்பட்டது என்று கேட்டேன். அவர் சொல்ல தயங்கினார். நான் வற்புறுத்திக் கேட்டேன். வீராணம் திட்டத்தை எங்கள் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதியுடன் முன்னரே செய்து கொண்ட ஏற்பாட்டின் படி, கமிஷன் தொகையாக 29 லட்சம் தரப்பட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகையை கொடுத்ததால், தம்முடைய தொழில் புழக்கத்துக்காக இருந்த நடைமுறை மூலதனம் அனைத்தும் முழுவதுமாக தீர்ந்து போய் விட்டது“ என்று சாட்சியம் அளித்துள்ளார்.
ஆக்கவும், அழிக்கவும் வல்லதுதானே அரசு ?
போட்ட திட்டம் வேலை நிறைவேறவில்லை. சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் ஏறக்குறைய நொடித்துப் போய் விட்டது. என்ன செய்வது…. ? ஒரு நபர் இறந்து விட்டால் பிரேதப் பரிசோதனை செய்து, இரங்கல் கூட்டம் போட வேண்டாமா…. ? அப்புறம் இறந்தவருக்கு என்ன மரியாதை ?
5.6.1974 அன்று, திருவாளர்கள் சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஆற்றிய சாதனைகள் குறித்து கருணாநிதி தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப் படுகிறது.
அக்கூட்டத்தில் சத்யநாராயணா நிறுவனம் குறித்து கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
“சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு தேவைப்படுகின்ற நிர்வாக மற்றும் வல்லுனர் அமைப்பு இல்லை. கால அட்டவணைப் படி தொழிற்சாலையை நடத்துவதற்கு போதுமான நிதி வசதிகளும் இல்லை. இப்படிப் பட்ட மாபெரும் திட்டத் நிறைவேற்றுவதற்குரிய திறமை, திருவாளர் சத்தியநாராயணா நிறுவனத்திடம் உண்டு எனக் கூறி அவர்கள் திறமை மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்து மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.“
கருணாநிதி என்று பொதுப்பணித் துறை அமைச்சரானாரோ, அந்த நாள் முதலாகவே ஊழலில் ஈடுபடத் தொடங்கினார். கருணாநிதி முரசொலி மாறன் என்று தமிழகத்தை கொள்ளையடித்த மிகப் பெரும் கொள்ளைக்காரர்களாகவே கருணாநிதியின் குடும்பம் உருவாகியது. ஆக்டோபஸ் போல வளர்ந்து இன்று தமிழகத்தையே சூறையாடிக் கொண்டிருக்கிறது. முரசொலி மாறன் பெற்றெடுத்த தவப்புதல்வர்கள், அவர்கள் பங்குக்கு, தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை ஊழல்களையும் செய்து விட்டு, அது வெளிவந்து அம்பலமான பின்னரும், “தமிழர்களே… தமிழர்களே… நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும்” என்று தயக்கமின்றிப் பேசுகிறார் கருணாநிதி.
இவர்களிடம் மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டால் ?
முற்றும்
அடேங்கப்பா இவ்வளவு விஷயங்கள் இருந்தும் ஏன் கலைஞரையோ அன்றைய திமுக அமைச்சர்களையோ தண்டிக்கவே இல்லை. நீதிபதியே சந்தேகப்பட்டிரு்ககிறார் என்று உங்கள் கட்டுரை கூறுகிறது. ஆனால் ஏன் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. நிரூபிக்க முடியவில்லை என்று சர்க்காரியா கூறினார்? போற போக்கில் 2ஜியில் ஊழல் நடந்தது போலவும் சொல்கிறீர்கள்… அப்போ நீதிமன்றம் என்னா மயித்துக்கா இருக்கு? ஆதாரம் இருந்தா கொண்டுவாங்கன்னு சொன்னப்போ ஒங்கள மாதிரி அறிவுக்கொழுந்துக ஏன் ஷைனிகிட்ட போகாம விட்டீங்க?
Epaaaaaaaaaaaaaaaaaaaaaaaaadi sameeee. octopus a vida mosamya. emmadiyov. hindi ethirpu,naathigavaadham,thamizh moochu pechu, adukku vasanam itha paathe naanga emanthom. enga appatha appuchi elarum en intha kalavaani kootatha nambuchu terla. oorukku ooru pondaati inthaalukku.
கக்கனையும், காமராஜரையும் இந்த கொள்ளையர்கள் ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் மிக அதிகமான பங்கேற்ப்பு செய்து மக்களுடன் ஒட்டிக்கொண்டு ஆட்சி செய்யவிடாமல் செய்து விட்டனர். காமராஜர் இவர்களை வளர விட்டது தமிழர்கள் செய்த பாவம்.காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் காமராசர் இவர்களை போன்று தனி கட்சி ஆரம்பித்து ? எல்லாம் தமிழனின் தலை எழுத்து. மாறவேண்டும். நல்ல நேர்மையான ஆட்சி மலரவேண்டும். நன்றி திருவாளார் சவுக்கு சங்கர் அவர்களுக்கு.
சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் சிறையில் இருந்தும் ஆ ராசா விடம் இருந்து எந்த உருப்பிடியான ஆதாரங்களை சிபிஐ யினால் பெற முடியவில்லை. மட்டுமல்ல ஆ ராசா தனது வருமான கணக்கு விபரத்தில் 55 லட்சம் நச்ட கணக்கு தானே காட்டி உள்ளார். மேலும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனையிலயும் எதையும் சிபிஐ பெறவில்லை. அவரது பினாமி என்று சந்தேகித்தவர்களிடம் பெற்றவையும் பலன் இல்லா ஆதாரங்கள் மேலும் நீதி மன்றம் இன்னும் கூடி வழக்கை நடத்தமுடியாத படிக்கு திணறி வருவதாக எண்ணம் வருகிறது. இன்னும் எந்த ஆதாரத்துக்காக waiting ? ஆக இந்த கட்டுரைப்படி கற்பனையாக வேண்டுமானால் வழக்கு ஜோடிக்கலாம் பொறுத்து இருந்து பார்ப்போம். ஆ ராசா வின் பேட்டியை பாருங்கள் https://twitter.com/THIRAVIDAKALAI/status/454232962393841665
adengappa sami! thamizh naattula irukkuratha yellam vazhicchedutthu saappittu eppam vittachi. UPA I and II leyum cabinet posts vaanghi india fulla oozhal atthula neecchal pottachu. ini mel bakki vetru graham thaan. indiavula miccham meethi yethavathu vacchu anga poi settle aayidungada gopalapurathu komangala!