ரஷ்ய புரட்சியை விளக்கும் “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற புத்தகம் மிகப் பிரபலமான புத்தகம். ரஷ்ய புரட்சியை அற்புதமாக விளக்கும் நூல் அது.
அது போன்றதொரு புரட்சி இந்தியாவிலும் நடந்தது. அந்த புரட்சிக்கு சொந்தக்காரர் ஆ.ராசா. 10.01.2008 அன்று அவர் வழங்கிய அலைக்கற்றை ஒதுக்கீடுதான் அவர் செய்த புரட்சி.
இன்று நீலகிரி தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராசா, அலைக்கற்றை ஊழல் பற்றிக் கேள்வி பட்டாலே “அது ஊழலே அல்ல.. நான் செய்த புரட்சி” என்று கூறுகிறார். கேட்பவர்களே ஒரு கணம் திகைத்துப் போய் விடுகிறார்கள். கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் நான் புரட்சியாளன் என்கிறார்.
அவர் செய்த புரட்சிதான் என்ன என்பதை சற்றே பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.
176000000 கோடி…… இவ்வளவு பெரிய தொகை நஷ்டமானதற்கு காரணம், பத்திரிக்கையில் வந்த ஒரு செய்திதான் என்றால் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறதா ? ஆனால் அதுதான் உண்மை. நன்றாக யோசித்துப பாருங்கள். தினகரன் நாளேட்டில், கருணாநிதியின் அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பை ஒட்டித் தான் சர்ச்சைகள் வெடித்தெழுந்தன. இதையொட்டி, நடந்த தினகரன் ஊழியர்களின் கொலைகளும், கருணாநிதி குடும்பத்தில் பெரிய பிளவை ஏற்படுத்தின. அந்தப் பிளவையொட்டி, அது வரை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வைக்கப் பட்டு, அப்போது சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனார். அதற்குப் பிறகுதான இந்தியாவுக்கு பிடித்தது சனி. ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானதும், பத்திரிக்கைகள் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடவில்லை என்று வருத்தப் பட்டார் கருணாநிதி. அதற்கு காரணம் அவர் தலித் என்பதால் என்று குறைப்பட்டிருக்கிறார். ஒரு தலித்தை ஏன் முதலிலேயே தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்காமல், பேரனுக்கு கொடுத்தார் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது.
இன்று ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் புலனாய்வின் ஒரு பகுதியை முடித்து, 80 ஆயிரம் பக்க குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூட்டுச் சதியில் ஈடுபட்டு, போலி ஆவணங்களை தயாரித்து, போலி ஆவணங்களை அசல் போல பயன்படுத்தி, ஏமாற்றுதல், மோசடி, அரசுப் பணத்தை கையாடியது உள்ளிட்ட குற்றங்களை புரிந்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ஊழல் வெளி வந்த பிறகு, ஆ.ராசா, ராஜினாமா செய்வதற்கு முன், கருணாநிதி இந்த ஊழல் பற்றி என்ன கூறினார் என்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்வது நல்லது.
“ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும்தான் பூதாகாரமாக இந்தப் பிரச்சினையை ஆக்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்கு தூக்கிக்கொண்டுபோய் விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒருசிலர் பங்கிட்டு கொண்டதை போலவும் அதற்காக பாராளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள்.
ஸ்பெக்ட்ரம் பிரச்னையிலே என்ன நடைபெற்றது என்ற விவரத்தை நாடாளுமன்றத்திலே விவாதிக்கலாம் என்று ஆளுங்கட்சி சார்பிலே பலமுறை அழைத்தபோதும், விடாமல் கூட்டுக்குழுவே தேவையென்று விடாப்பிடியாக அவையை நடத்தவொட்டாமல் செய்தார்கள்.
தணிக்கைத்துறை அதிகாரியின் அறிக்கையிலே கூட – அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் இந்தத் தொகை உத்தேசமாகக் கணக்கிடப்பட்டதாகும் என்றும் தான் உள்ளது என்றும், நட்டத்தொகை விரைவில் துல்லியமாக கணக்கிடப்படும் என்றும் தற்போது அந்தத் துறையின் பொறுப்பையேற்றுள்ள கபில் சிபல் பேட்டியிலே சொல்லியிருக்கிறார்.”
கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், உண்மையை தீர விசாரிப்பதே மெய்” என்பதற்கேற்ப ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொன்னாலே அது உண்மையாகி விடும் என்பதை போல பழிசுமத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது.”
அடுத்து இளைஞர் ஒலி நாடா வெளியீட்டு விழாவில், “இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா – பகாசூரன் என்று ? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்குக் கேட்கிறார்களா என்ன?
ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை – ஒரு தாளிலே எழுதிக் காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம் – அன்றைக்கு ‘‘பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்’’ என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டுதான் படத்தைப் பார்த்தோம்.”
இது மட்டும் அல்ல…. ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி, ஊடகங்களில் பக்கம் பக்கமாக ஆதாரங்கள் தொடர்ந்து வெளி வரத் தொடங்கியதும், நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இமாலய ஊழலை, சோற்றில் முழுப் பூசணிக்காயை மறைப்பது போல மறைக்க முயற்சி செய்தனர்.
திமுக சார்பில் தமிழகமெங்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கூட்டங்கள் போட்டனர். திமுகவின் மேடைப் பேச்சாளர்களான சுப.வீரபாண்டியன், திருச்சி சிவா, உள்ளிட்டோர் மேடைக்கு மேடை ஆ.ராசா பழிவாங்கப் படுகிறார், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று பேசினார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்னும் ஒரு படி மேலே போய், 3ஜி ஏலத்தில், அரசுக்கு லாபம் ஏற்படுத்தித் தந்தவர் ஆ.ராசா என்றார். அவர் வெளியிட்ட அறிக்கையில் “3ஜி ஏலத்தின் மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு கஜானாவுக்கு வருவாய் தேடிக் கொடுத்தார். இப்படிப்பட்டவர் பல பழிகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் கொள்கை முடிவினை அமல்படுத்தியதால், அனுமானம் – கற்பனையான கணக்காக சொல்லப்பட்ட இழப்புதான் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று இன்றைய தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராலும், பல தரப்பாலும் சொல்லப்பட்ட பிறகும், குற்றத்தைச் சுமந்தவராக்கப்பட்டுள்ள விசித்திரத்தை நாடு பார்க்கிறது.
செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது.”
ஆ.ராசாவோ தன் பங்குக்கு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த அத்தனையும், பிரதமருக்கு தெரிந்தே நடந்தது. ஏழைகளுக்கு எளிய விலையில் செல்போன் சேவையை பெற்றுத் தந்ததற்காகவே நான் பழிவாங்கப் படுகிறேன் என்று, பேட்டியளித்தார். பல்வேறு ஊடகங்களில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தவறே நடக்கவில்லை என்று செய்திகள் வெளியிடச் செய்தார். ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில், “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு நான் எழுதிய கடிதமும், அவர் எழுதிய பதிலும் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது. இந்த ஒதுக்கீடு தவறு என்றோ, இதை நிறுத்தி வையுங்கள் என்றோ அவர் ஒருவரி கூட குறிப்பிடவில்லை. ஒருசில நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்த செல்போன் சேவை இன்று இந்தியாவின் குக்கிராமம் வரைக்கும் கிடைக்க செய்திருப்பதுதான் என் தவறு. ஒரு வீட்டை விற்றால் ஒருமுறைதான் பணம் கிடைக்கும். அதையே வாடக்கைக்கோ, குத்தகைக்கோ விட்டால், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் கிடைக்கும். அதுபோலத்தான் ஸ்பெக்ட்ரத்தை ஏல முறைக்கு பதில் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அரசுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க செய்திருக்கிறோம். இது தவறா? இது அநியாயமா ? ” என்றார்.
இறுதியாக, சிஏஜி அறிக்கை வெளி வந்ததும், வேறு வழியின்றி ஆ.ராசா ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். ராஜினாமா செய்த பிறகும் கூட, இந்த விவகாரத்தை திசைத் திருப்பி, ராசா தலித் என்பதால் ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார் என்ற வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். தனது அறிக்கையில்
“தி.மு.க. தலைமைக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும், பிள்ளைப் பிராயத்தில் இருந்து தன்மான இயக்கத்தின் வழி பற்றி நடந்து வருபவரும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் போன்ற அரசியல் சமுதாய சீர்திருத்த தலைவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்பவரும், என் உள்ளம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவராக விளங்கி வருபவரும்; பழைய திருச்சி மாவட்டம்-பெரம்பலூர் பகுதியில் பட்டிக்காட்டு பொட்டலில் பூத்துக் குலுங்கி வரும் புரட்சியாளருமான அருமைத் தம்பி ராசா- தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கும், அந்த வாய்ப்பை வழங்கிய தலைமைக்கழகத்திற்கும் என்றென்றும் நம்பிக்கைக்குரியவராகவும்; ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து `தலித்` இனத்தின் தகத்தகாய கதிரவனாகவும் விளங்குபவர் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக அறிவார்கள்.”
இந்த ஊழலை விட, இதை மறைக்க ஆ.ராசாவும், அவர் கருணாநிதியும் மேற்கொண்ட முயற்சிகள் கடும் கோபத்தை வரவழைக்கின்றன. எத்தனை மோசடிகள் ? எத்தனை பித்தலாட்டங்கள் ? பிரதமரைக் கேட்டுத்தான் அத்தனை முடிவுகளும் எடுக்கப் பட்டன என்றார் ஆ.ராசா. பிரதமரோ அவர் பங்குக்கு, எத்தனை மழுப்பலான பதிலை அளிக்க முடியுமோ, அவ்வளவு மழுப்பலான பதிலை அளித்தார்.
திமுகவுக்கு சற்றும் சளைக்காத வண்ணம், காங்கிரஸ் கட்சியும் தன் பங்குக்கு இந்த ஊழலை மறைப்பதற்கான அத்தனை வேலைகளிலும் இறங்கியது. பல கோடி ரூபாய் செலவில் நடைபெறும் பாராளுமன்றம், கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணை வேண்டி எதிர்க்கட்சிகளால் முடக்கப் பட்ட போது, சற்றும் கவலைப்படாமல், இறுமாப்போடு இருந்தது.
அரசியல் காட்சிகள் மாறிய பிறகு, பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. திமுகவின் ஆதரவை பெரிதும் நம்பியிருந்த யுபிஏ 1 அரசாங்கத்தில் திமுகவின் செல்வாக்கு, அசைக்க முடியாததாக இருந்தது. மத்திய அரசில் திமுக என்ன நினைத்தாலும் செய்ய முடியும் என்ற நிலையை அது உருவாக்கியது. ஆனால், 2009 பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரசுக்கு திமுகவின் தயவு பெரிய அளவில் தேவைப்படவில்லை. ஆனால் காங்கிரசின் தயவு திமுகவுக்கு தேவைப்பட்டது.
இந்த மிகப் பெரிய ஊழலை யாருக்குமே தெரியாமல், மறைத்து விடலாம் என்று ஆ.ராசா நினைத்திருப்பார் என்றே தோன்றுகிறது. ஆனால், இந்த ஊழல் இது போல மறைக்கக் கூடிய ஊழலா என்ன ?
ஆ.ராசாவால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறப்பட்ட நிறுவனங்களான, ஸ்வான் டெலிகாம், (டிபி ரியாலிட்டீஸ்), யூனிடெக், டாடா டெலிசர்வீசஸ் ஆகிய அத்தனை நிறுவனங்களும், பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே தங்களின் பங்குகளை துபாயின் எடிசலாட், நார்வேயின் டெலிநார், ஜப்பானின் டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு விற்றன. இது போல பங்குகளை விற்பனை செய்தால், பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்கள், இந்த விபரங்களை பங்கு வர்த்தகத்தை கட்டுப் படுத்தும் அமைப்பான ‘செபி’ க்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த விபரங்கள் செபிக்கு தெரிவித்தவுடன், குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்று, இரண்டே மாதங்களில் பல ஆயிரம் கோடி லாபம் பார்த்த விபரம் வணிக ஊடகங்களில் வெளி வந்த போதுதான், எத்தனை பெரிய மோசடி நடந்திருக்கிறது என்ற விஷயம் வெளி வந்தது.
தொடரும்
உங்களுக்கும் எத்தனை பூஜ்ஜியங்கள் போடனும்றதுல குழப்பம். ஆனா…..
Hang all currupted politicians infront of Public to teach lesson ..
சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் சிறையில் இருந்தும் ஆ ராசா விடம் இருந்து எந்த உருப்பிடியான ஆதாரங்களை சிபிஐ யினால் பெற முடியவில்லை. மட்டுமல்ல ஆ ராசா தனது வருமான கணக்கு விபரத்தில் 55 லட்சம் நச்ட கணக்கு தானே காட்டி உள்ளார். மேலும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனையிலயும் எதையும் சிபிஐ பெறவில்லை. அவரது பினாமி என்று சந்தேகித்தவர்களிடம் பெற்றவையும் பலன் இல்லா ஆதாரங்கள் மேலும் நீதி மன்றம் இன்னும் கூடி வழக்கை நடத்தமுடியாத படிக்கு திணறி வருவதாக எண்ணம் வருகிறது. இன்னும் எந்த ஆதாரத்துக்காக waiting ? ஆக இந்த கட்டுரைப்படி கற்பனையாக வேண்டுமானால் வழக்கு ஜோடிக்கலாம் பொறுத்து இருந்து பார்ப்போம். ஆ ராசா வின் பேட்டியை பாருங்கள் https://twitter.com/THIRAVIDAKALAI/status/454232962393841665
இன்னும் சொல்லுவதானால் வழக்கு விசாரணையில் உள்ள போதே நாமாகவே ஊழல் நடந்ததை போல ஊர்ஜிதபடுத்தி கொண்டிருப்பது சரி தானா. நீதி மன்ற இறுதி தீர்ப்பு வரட்டும் அப்போது இந்த கட்டுரையின் தன்மை தெரிந்து விடும்
திருடர்கள் முன்னேற்ற கழகம் ……வாழ்க கட்டுமரம்
small correction
திருட்டு முட்டாள் கழகம்
சீ ! சீ! இந்த முகரைகளை பார்த்தாலே பாவம் !
எவ்வளவு பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது நாவடக்கம் தேவை சார் நமக்குள்ள எப்புடி வேணாலும் பேசாலாம் போது இடத்தில் பார்த்து பேசணும். மத்தபடி உங்கள் கோபத்தில் நியாம் உண்டு
நாதா பசி.நல்ல பேரு.இனி எல்லோரும் அன்போடு இவ்வாறே அழைக்கட்டும்.ரீகவுண்ட் எம்பி.
குட்டிநாடு மலேசியா பல இலட்சம் இந்தியர்களுக்கு வேலை கொடுக்கிறது. குட்டி சிங்கப்பூர் துப்புரவு தொழிலாளிகளாக இலட்சம் இந்தியர்களை வைத்திருக்கிறது, தமிழர்கள் வாழமுடியாது என்று கூறப்படும் ஶ்ரீலங்காவில் பல இலட்சம் இந்தியர்கள் தொழிலாளிகளாகவும் முதலாளிகளாகவும் முத்தையா முரளிதரனாகவும் வாழமுடிகிறது.
ஆனால் இந்தியாவில் அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்கள் தவிர்ந்தவர்கள் தன்னிறைவுடன் வாழமுடியவில்லை, 120 கோடி மக்கள் தொகையில் 100 கோடி மக்கள் ஏழைகள், (பலருக்கு இந்தியாவில் ஒரு அரசாங்கம் இருப்பதே தெரியாது என்று ஒரு புள்ளி விபரம் தெரியப்படுத்துகிறது. ) அதனால் சவூதி அரேபியா, குவைத், டோகா. போன்ற முப்பதுக்கு மேற்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் கூலிகளாகவும் அடிமட்ட துப்புரவு தொழிலாளிகளாகவும் அடிமைகள்போல காலம் கடத்தி வருகின்றனர், குடும்பத்துடனும் தாய் தந்தையர்கள் போன்றோருடன் அந்த மக்களால் இணைந்து வாழமுடியவில்லை. திருமனம் முடித்தது ஒரு மாதத்தில் குடும்பத்தை பிரிந்து சென்றவர்களின் எண்ணிக்கை விபரிக்க முடியாதவை.
ஆனால் அந்த மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிவரும் பொருளாதாரம், மற்றும் அன்றாடம் உள்நாட்டு மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப்பணம் அனைத்தும் ஒருசில அரசியல் நாதாரிகளால் ஊழல் செய்து கொள்ளையடிக்கப்படுகிறது.
2ஜி ஸ்பெக்ரம் ஊழலில் காவுகொள்ளப்பட்ட 176,000 00 00 00 00 கோடிகளும். அரசியல் வியாதிகளோ அரசாங்கமோ வானத்திலிருந்து கொண்டு வந்த பணமல்ல பலகோடி ஏழைகளின் இரத்தமும் வியர்வையும் வாழ்க்கை தியாகங்களும் கலந்த பணம்.
திருவாரூருலிருந்து சென்னைக்கு பயணம் செய்ய பணத்துக்கு வழியில்லாமல் களவாக திருட்டு ரெயிலில் வந்து அரசியள் செய்து அளவு கணக்கில்லாத மணம் முடித்து இந்திய பணக்காரர்களில் 11 இடத்திலிருக்கும் கறுணாநிதி, மக்களின் வாக்குப்பெற்றுக்குள்ளாமல் நியமனத்தில் பிரதமராக இருக்கும் மண்மோகன் சிங், நிதி மந்திரியாக இருந்துவரும் நாதாரி பசி போன்றவர்கள் நாட்டையும் மக்களின் ஏழ்மையையும் பயன்படுத்தி ஊழல் செய்து தின்று கொழுத்து தினம் மூன்றுமுறை போகம் செய்து வாழ்ந்து வருகின்றனர்,
சினிமா கூத்தாடிகள் இன்னும் ஒருபடி மேலேபோய் மக்களை அடிமைகளாக்கி சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். மக்கள் அறியாமையில் இந்த மூதேவிகளின் பசப்பு மாய்மாலத்தில் சிக்கி வெளியேறமுடியாத கலாச்சாரம் நாட்டில் விதைக்கப்பட்டிருக்கிறது.
சட்டம் நீதியை ஏழைகளால் நெருங்க முடியவில்லை, இலவசங்களையும் இனாம்களையும் அறிமுகப்படுத்தி மக்களை செயர்க்கையான அடிமைகளாக அனைத்து அர்சுகளும் நிர்மாணித்து வருகின்றன.
ஸ்பெக்ரத்தில் கருணாநிதி, மண்மோகன், கனிமொழி, ஆ ராசா, பசி ஆகியோர் கூட்டாக களவாடிய 176,000 கோடி ரூபாவும் முறைப்படி அபிவிருத்திக்கு செலவு செய்யப்பட்டிரந்ந்தால் 10,000 கிராமங்கள் தன்னிறைவு அடைந்திருக்கும்.
செய்த திருட்டையும் செய்துவிட்டு திசை திருப்பி பொய் தகவல்களை பரப்பும் கருணாநிதி போன்ற தற்குறிகளை முச்சந்தியில் நிறுத்தி வைத்து மலம் கரைத்து குளிப்பாட்டி கழுவில் ஏற்றினாலும் தர்மம் சாந்தி பெறாது.
வரவிருக்கும் தேர்தலில் இப்பேற்பட்ட தருத்திரங்களுக்கு வாக்களிக்கலாமா என்பதை கொஞ்சமாவது மக்கள் சிந்திக்கவேண்டும்.
The allocation was done in transparent manner with little corruption. After the entry of new companies, call rates have come to 10 paise per min from 2-3 rupees a minute earlier. If you are correct that few companies sold stake to foriegn players to make money. It was done only by tata tele services to docomo. But not even a whisper against tata group, only other companies without political support were targetted. Why CBI and JPC not allowing Raja to explain his case? Where is the justice?
Little corruption is right or what? Being corrupt is not a work of a MP/ government.
So from mega corruption it has come to little corruption. Is little corruption ok? Worldwide call charges have come down. so in india also it has come down. Not because of any “telecom puratchi” of Raja.