இன்று மீண்டும் ஒரு மீனவன் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு கொல்லப் பட்டிருக்கிறான்.
இதற்கும் ஒரு தந்தி டெல்லிக்குப் போகும். வேறு எந்த மாறுதலும் நடைபெறாது. நாளையும் மீனவன் கொல்லப் படுவான். நாளை மறுநாளும் கொல்லப் படுவான்.
இது தொடர்கதையாகவே இருக்கப் போகிறது.
நமது மீனவனையும், அவன் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க இந்திய அரசுக்கும் துப்பில்லை. தமிழக அரசுக்கும் துப்பில்லை. விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் இன்று இருந்திருந்தால், இது போல நம் மீனவனை சுட்டு விட்டு எக்காளமிடும் தைரியம் சிங்களக் கடற்படைக்கு வந்திருக்குமா ?
நம் தேசத்தில் பிறந்து, மீன் பிடித்தலை தொழிலாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக, மீனவன் கொல்லப் பட வேண்டுமா ? அவன் மனைவி விதவையாக வேண்டுமா ? அவன் பிள்ளைகள் அனாதையாக வேண்டுமா ?
குளிரூட்டப் பட்ட அறையில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு, இளைஞன் படத்தை 32 முறை பார்க்கும் நபரிடம், நாம் நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியாது.
தமிழர்களை கொல்வதை பொழுதுபோக்காக கொண்டிருக்கும், இத்தாலியின் அந்தோனியோ மொய்னோ விடமும் நாம் நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியாது.
என் மீனவனை பாதுகாக்காத, இந்தியக் கடற்படைக்கு எமது மண்ணில் இடம் எதற்கு ? என் வரிப்பணம் எதற்கு ? இந்தியக் கடற்படையை நம் மண்ணை விட்டு விரட்டியடிப்போம்.
நமது மீனவர்களை நாம் பாதுகாத்துக் கொள்ளுவோம். தமிழக மீனவனை பாதுகாக்க துப்பில்லாத, இந்திய கடற்படை வெளியேறட்டும். எமது மீனவனை பாதுகாக்க வக்கில்லாத, இந்திய ராணுவம், காஷ்மீரிகளை ஒடுக்க மட்டும் வேண்டுமா ? காஷ்மீரில் உள்ள ராணுவத்தில் உள்ள தமிழர்களை திரும்ப பெறு.