இந்திய கடற்படை தளபதி எஸ்.பி.சர்மா அவர்களோடு, கருணாநிதி நடத்திய பேச்சுவார்த்தையில் நடந்த விபரங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள சவுக்கு வாசகர்கள் ஆவலாக இருப்பீர்கள். இதோ அந்த பேச்சுவார்த்தையின் விபரங்கள்.
கருணாநிதி வாங்க சர்மா. எப்படி இருக்கீங்க ?
சர்மா நான் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க ?
கருணாநிதி நான் உங்கள வரச்சொன்ன விஷயம்…
சர்மா தெரியும் சார். மீனவர்கள் கொல்லப் படுகிற விவகாரம் தானே… அதுல என்னன்னா ?
கருணாநிதி நான் வரச் சொன்ன விஷயம் அது இல்லை.
சர்மா வேற என்ன சார்…. ?
கருணாநிதி இளைஞன் படம் பார்த்தீர்களா ?
சர்மா சார் எனக்கு தமிழ் தெரியாது.. மேலும் நான் படம் பார்ப்பதில்லை
கருணாநிதி இளைஞன் படம் பார்க்க தமிழ் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. நான் தானே வசனம் எழுதியிருக்கிறேன். அந்தப் படத்தை நன்றாக ரசித்துப் பார்த்தவர் ஆற்காடு வீராச்சாமி தான். அவருக்கு காது சரியான மந்தம். அதனால், தமிழ் தெரியாவிட்டால் நீங்கள் நன்றாக ரசிக்கலாம்.
சர்மா இல்லை சார். எனக்கு, கடற்படை வேலைகளே சரியாக இருக்கும்.
கருணாநிதி அந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரியாமல் பேசுகிறீர்கள். அந்தப் படமும், கப்பற்படை சம்பந்தப் பட்ட படம் தான். இதற்காக ஒரு முழு கப்பலையே செய்திருக்கிறேன். வேண்டுமென்றால், இந்திய கடற்படை எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்துவதாக இருந்தால், அந்தக் கப்பலையும், என் சார்பாக, அன்பு இளவல் மார்ட்டினின் ஒப்புதலோடு, கடற்படைக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன்.
சர்மா கப்பல் தொடர்பாக நான் போதுமான பயிற்சி எடுத்திருக்கிறேன் சார்.
கருணாநிதி. கப்பல் பற்றி தெரியும். ஆனால் போர்த்தந்திரங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ? அந்தப் படத்தில் மீரா ஜாஸ்மினை மெக்கானிக்கல் என்ஜினியராக சித்தரித்திருக்கிறேன். அவர் பீரங்கி எப்படி கட்டுவது என்று சொல்லிக் கொடுப்பார். அதைப் பார்த்து நீங்களும் கற்றுக் கொண்டீர்களேயானால், போர் நடக்கும் சமயங்களில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
சர்மா சார்.. இந்த மீனவர்கள் படுகொலை பற்றி…
கருணாநிதி இளைஞன் படத்திலும், மீன் பிடித்தலைப் பற்றி சில காட்சிகள் வருகின்றன… அதைப் பார்த்தால், நீங்கள் கடலில் இருக்கும் போது மீன் பிடிப்பதற்கு உதவும்.
சர்மா சார். வேறு விஷயங்கள் இருந்தால் சொல்லுங்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது.
கருணாநிதி எனக்கு வேறு வேலை இல்லையே. இது வரை 1278 முறை பார்த்திருக்கிறேன். எப்படியாவது என் வாழ் நாளுக்குள், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி முறையாவது பார்க்க வேண்டும்.
சர்மா சார் உங்களுக்கு 87 வயதாகிறது. எப்படி அதற்குள் இத்தனை முறை….
கருணாநிதி இப்போது புதிதாக, வயதை குறைப்பதற்கு ஊட்டச் சத்து உண்டு வருகிறேன். தம்பி நித்தி தான் ஏற்பாடு செய்தார். மருந்து விலை அதிகம். ஒரு வாரத்திற்கே நான்கு லட்ச ரூபாய் செலவாகிறது. அதனால், என் இளமை வெகு விரைவில் திரும்பி விடும்.
சர்மா சரி பரவாயில்லை சார். இன்னொரு நாளைக்கு வருகிறேன். அப்போது பார்க்கலாம்.
கருணாநிதி அது எப்படி… தப்பிக்கலாம் என்று பார்க்கிறீர்களா ? பேராசிரியர் அன்பழகன் கட்சியை விட்டு விலகி விடுவேன் என்று மிரட்டிய பின்னும் 40 முறை பார்க்க வைத்தேன் தெரியுமா ? நண்பரான வாலியையே 68 முறை பார்க்க வைத்தேன் தெரியுமா ? நீங்கள் மட்டும் தப்பித்தால் எப்படி ?
சர்மா. ஆனால் சார்….
கருணாநிதி அதெல்லாம் முடியாது… இங்கே பாருங்கள். எல்சிடி டிவி இருக்கிறது… இது தம்பி கஸ்பர் வாங்கிக் கொடுத்தது. புது டிவிடி ப்ளேயர் வைத்திருக்கிறேன். இது தம்பி காமராஜ் வாங்கிக் கொடுத்தது. உடனே போடுகிறேன். பாருங்கள்.
ஜாபர். சார்… ஒரு விஷயம்.
கருணாநிதி பாருங்க நம்ப தம்பி ஜாபரே, உங்களை பார்க்கச் சொல்லுகிறார்.
ஜாபர் சேட் அது இல்லை சார். நான் திண்டுக்கல்லில் ரூம் போட்டு உல்லாசமாக இருந்திருக்கிறேன். ஐதராபாத்தில் ரூம் போட்டு உல்லாசமாக இருந்திருக்கிறேன். கோயம்பத்தூரில் ரூம் போட்டு உல்லாசமாக இருந்திருக்கிறேன். ஆனால் நடுக்கடலிலே ஒரு முறை கூட உல்லாசமாக இருந்தது இல்லை சார். சர்மா கிட்ட சொல்லி, ஒரு முறை கப்பலில் நடுக்கடலில் ரூம் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்கள் சார்.
கருணாநிதி யோவ். இளைஞன் பாருய்யா.. அதை விட உல்லாசமாக இருக்கலாம். கம்முனு படத்தப் பாரு.
படம் தொடங்குகிறது.
பத்து நிமிடம் கழித்து ஒரு துப்பாக்கிச் சத்தம். பாதுகாப்பு அதிகாரிகள் பயந்து ஓடி வருகிறார்கள்.
கடற்படை அதிகாரி சர்மா துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
அரசு செய்திக் குறிப்பு.
இன்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப் படுவது குறித்து, கடற்படை தளபதி சர்மா அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். முதல்வரின் உருக்கமான பேச்சைக் கேட்டு, மிகவும் சோகமடைந்த கடற்படை தளபதி சர்மா, முதல்வர் தடுத்தும் கேளாமல், தனது கைத்துப்பாக்கியை எடுத்து தற்கொலை செய்து கொண்டார். முதலமைச்சர் டாக்டர் கலைஞர் சர்மாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, தமிழருக்காக உயிரிழந்த வடவர் சர்மா பெயரில், ஒரு நினைவு சமத்துவபுரம் அமைக்கப் படும் என்றும், சர்மாவின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டார்.
இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்ட திராவிடர் கழகத் தலைவர் வீரமணி,
வடவரே மயங்கும் அளவுக்கு பேசக் கூடியவர் தமிழர் தலைவர் டாக்டர் கலைஞர் மட்டுமே என்றும், அவருக்கு பெரியார் திடலில் “வடவரை வளைத்த வல்லவர்“ என்ற பட்டம் திராவிடர் கழகம் சார்பில் வழங்கப் படம் என்றும் தெரிவித்தார்.
நம்ப ஜாபர் சேட் கழுத்திலே செயினப் பாத்தீங்களா ? ஐபிஎஸ் ஆபீசர் மாதிரி இருய்யான்னா, பொம்பள மாதிரி கழுத்தில செயின போட்டுக்கிட்டு, மைனர் மாதிரி சுத்திக்கிட்டு வர்றாரு. வர்ற கோவத்துக்கு இந்த ஆள ரூம்ல கட்டிப் போட்டு, 5 நாளைக்கு தொடர்ந்து இளைஞன் படம் பாக்க வைக்கனும்னு தோணுது. என்ன சொல்கிறீர்கள் வாசகர்களே….