நடிகர் வடிவேலு ஒரு படத்தில் வக்கீல் வண்டு முருகனாக நடித்திருப்பார். அதில் அவரை கைது போலீஸ் கைது செய்துவிடும். சிறையில் அடைக்கப்பட்ட வக்கீல் வண்டுமுருகன், தன்னுடைய உதவியாளர்கள் ஜாமீன் பெற்று வருவார்கள் என்று காத்திருப்பார். ஆனால், அவர்கள் வெறும் கையோடு வந்து,
“அண்ணே எல்லா மார்கெட்டுக்கும் போனோம். நெய் மீன் இருக்குன்றான்… நெத்திலி மீன் இருக்குன்றான்… வாளை மீன் இருக்குன்றான்… வஞ்சிரம் மீன் இருக்குன்றான்… ஆனா ஜாமீன் மட்டும் இல்லவே இல்லைன்னு சொல்லிட்டாங்கண்ணே… கடல்லயே இல்லையாம்”
என்பார்கள். அதே போலத்தான் தற்போது ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பந்தாடிக் கொண்டு இருக்கிறார்கள். 😀😀😀
மகாலட்சுமி என்ற மோசடிப் பேர்வழியைப் பயன்படுத்தி, எப்படியாவது சவுக்கு தளத்தை முடக்க வேண்டும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. நீதித்துறைப் பிரிவுத் தலைவர் சி.டி.செல்வம் எடுத்த முயற்சி, இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
ஒரு நீதிபதிக்கு அதிகாரமே இல்லாத நிலையில், சவுக்கு தளம் நடத்துபவரையும், அதன் வடிவமைப்பாளரையும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். ஜாபர் சேட் உரையாடல்கள் வெளியிடப்பட்ட 1 பிப்ரவரி அன்று வடிவமைப்பாளர் முருகைய்யன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, பிப்ரவரி 28 அன்று அளித்த இடைக்காலத் தீர்ப்பில், தி.மு.க. நீதித்துறை தலைவர் சி.டி.செல்வம், சவுக்கு தளத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரைக்கும், தனித்தனியாக புகார் அளிக்கலாம், அந்தப் புகார்களின் பேரில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யலாம் என்று மொத்தமாக ஒரு உத்தரவை போட்டார். அந்த உத்தரவின் நோக்கம் என்னவென்றால், சவுக்கு தளத்தில் உள்ள 500 கட்டுரைகளுக்கும் 500 வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பதே.
மகாலட்சுமி அளித்த புகாரில் சென்னை மாநகர காவல்துறை பதிவு செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து, முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு வழங்கப்பட்ட அதே நாளில், சென்னை மாநகர காவல்துறை மற்றொரு வழக்கை பதிவு செய்தது. மகாலட்சுமியை மிரட்டி 50 லட்ச ரூபாய் கேட்டதாக மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு அது. அந்தப் புகாரில், மகாலட்சுமியின் தம்பியின் மனைவி, மகாலட்சுமியின் முதல் கணவர், முதல் கணவரின் தம்பி, சன் டிவி ராஜா மீது புகார் கொடுத்த அகிலா, அகிலாவின் நண்பர் கண்ணன், மற்றும் சங்கர் ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் ஐந்து பேரையும் விட்டு விட்ட காவல்துறை, சங்கரை மட்டும் வலை வீசி தேடி வருகிறது. அகிலா, மகாலட்சுமியின் தம்பி மனைவி ஆகியோர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள். தினந்தோறும் அவர்கள் செய்தி வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல், அவர்கள் அனைவரும் தலைமறைவாக இருக்கிறார்கள் என்று காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், சங்கரை பிடிக்க மட்டும் தனிப்படை அமைத்துள்ளதாக சி.டி.செல்வத்திடம் தெரிவித்தது.
வழக்கமாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், மூன்றாவது நாள் விசாரணைக்கு வரும். ஆனால் சி.டிசெல்வத்தின் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கே குறைந்தது 15 நாட்கள் ஆகும். என்ன காரணமென்று கேட்டால், “லார்ட்ஷிப் எப்போ சொல்றாரோ அப்போதான் லிஸ்ட் பண்ணனும். இல்லன்னா லார்ட்ஷிப் சத்தம் போடுவாரு” என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் விசாரிக்க நேரமில்லாத செல்வத்துக்கு சவுக்கு தளத்தை தடை செய்யும் வழக்கை மட்டும் விசாரிப்பதில் தணியாத ஆர்வம். ஒவ்வொரு வாரமும் அந்த வழக்கை பிரத்யோக வழக்காக மதியம் 2.15 மணிக்கு எடுத்து விசாரிப்பார். அப்படி விசாரிக்கும் சமயங்களில், அரசு வழக்கறிஞரை அழைப்பார். இது ஏதோ சட்டச் சிக்கல் வாய்ந்த வழக்கு போல, தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞரே (State Public Prosecutor) நேராக வந்து ஆஜராவார். அரசு வழக்கறிஞரை மிரட்டும் தொனியில் “ஏன் அவனை இன்னும் கைது செய்யவில்லை ?” என்று கேட்பார். அவரும் வழக்கம் போல, சிறப்புப் படை, தனிப்படை, அதிரடிப் படை, காலாட்படை, குதிரைப்படை ஆகிய அத்தனை படைகளையும் அமைத்து இருக்கிறோம் என்று கூறுவார். செல்வத்துக்கு கோபம் மண்டைக்கு ஏறும். “நீங்கள்லாம் போலீஸா என்னய்யா… ஒருத்தனை பிடிக்கிறதுக்கு இத்தனை நாளா… உங்களுக்கெல்லாம் எவன் வேலை கொடுத்தது?” என்று இஷ்டத்துக்கும் கத்துவார். அரசு வழக்கறிஞரும் அமைதியாக கேட்டுக் கொள்வார். செல்வத்தின் ஆத்திரம் எந்த அளவுக்கு போய் விட்டதென்றால், ஒரு வழக்கில் முன் ஜாமீன் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று கூறியதும், அந்த ஜாமீன் வழங்கிய நீதிபதியையே வெளிப்படையாக நீதிமன்றத்தில் விமர்சிக்கும் அளவுக்கு நிதானம் தவறிப் போய், கள்ளைக் குடித்த மந்திபோல் சித்தம் கலங்கித் திரிகிறார். இந்த வழக்கை இவ்வளவு அவசரமாக விசாரிக்கும் சி.டி.செல்வம், ஜாபர் சேட் மற்றும் கனிமொழி உரையாடல்கள் மீது சிபிஐ விசாரணை கோரி தொடுத்த வழக்கை மார்ச் 10ம் தேதி தள்ளுபடி செய்தார். தீர்ப்பை வழங்கினால், தேர்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றம் செல்வார்கள் என்பதால், இன்று வரை, இந்த வழக்கின் தீர்ப்பு நகலை வழங்காமல் வைத்துக் கொண்டு, சீட்டிங் செல்வமாகி விட்டார். இன்று வரை, இந்த வழக்கின் கட்டு, சி.டி.செல்வம் அறையிலேயே உள்ளது.
இது ஒரு புறம் இருக்க, இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட வழக்குக்கும், அடுத்து பதிவு செய்ய உள்ள வழக்குகளுக்கும் சேர்த்து, ஒரு முன்ஜாமீன் மனுவை சங்கர் சார்பில், வழக்கறிஞர் மணிகண்டன் தாக்கல் செய்கிறார். இரண்டாவது ஜாமீன் மனு, நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. மனு விசாரணைக்கு வந்ததும், நீதிபதி தேவதாஸ், இது தொடர்பான ஒரு வழக்கில் ஏற்கனவே நீதிபதி நாகமுத்து உத்தரவு பிறப்பித்திருப்பதால், இந்த வழக்கையும் அவரிடம் அனுப்பவும் என்று உத்தரவு போடுகிறார்.
ஒரு நீதிபதி, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு அனுப்புங்கள் என்று கூறினால், உடனே மற்றொரு நீதிபதியிடம் சென்று விடாது. அந்த வழக்கின் கட்டு, தலைமை நீதிபதியிடம் எடுத்து செல்லப்படும். அவர், அந்த வழக்கை எந்த நீதிபதியிடம் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து உத்தரவிடுவார். அதன் பிறகுதான் புதிய நீதிபதி வசம் வழக்குப் போகும். அப்படி நீதிபதி தேவதாஸ் விசாரிக்க மறுத்ததும், வழக்கு தலைமை நீதிபதியிடம் சென்று, வேறு நீதிபதியிடம் மாற்றப்பட ஒரு வாரம் ஆகி விடும். அதன் பிறகு அருணா ஜெகதீசன். அவர் மட்டும் உடனடியாக விசாரித்து விடுவாரா என்ன? அவரும் கேஸ் கட்டை வாங்கி கையில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமாக இழுத்தடித்துக் கொண்டு இருந்தார். இதையடுத்து சங்கரின் வழக்கறிஞர் என்ற முறையில் வழக்கறிஞர் மணிகண்டன், இது ஒரு சாதாரண முன்ஜாமீன் வழக்கு. இதைப் போய் இப்படி தாமதம் செய்கிறீர்களே என்று கேட்டார். உடனே அம்மையார் கோபத்தில் வெகுண்டெழுந்து, நீங்கள் வேறு நீதிபதியிடம் போய் இந்த வழக்குப் பற்றிப் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். ஆனால், அந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு உத்தரவு எதையும் போடவில்லை. வழக்கை தன் வசமே வைத்துக் கொண்டார்.
இதையடுத்து, வழக்கறிஞர் மணிகண்டன், இந்த வழக்கை நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க மறுத்து விட்டார். எனவே, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுங்கள் என்று கடிதம் அளிக்கிறார். உடனே, தலைமை நீதிபதி, சங்கரின் வழக்கை நீதிபதி சொக்கலிங்கத்திடம் அனுப்பி, வழக்கை விசாரிக்குமாறு உத்தரவு போடுகிறார். இதையடுத்து உயர்நீதிமன்ற அலுவலர்கள், நீதிபதி சொக்கலிங்கத்திடம், தலைமை நீதிபதியின் உத்தரவு பற்றி கூறுகின்றனர். அவர் அதைப் பரிசீலித்துவிட்டு, மணிகண்டன் வழக்கறிஞராக இருந்து வாதாடும் வழக்குகள் எதையும் என்னுடைய நீதிமன்றத்திற்கு கொண்டு வராதீர்கள் என்று கூறி விடுகிறார். அது எதற்காக என்றால், காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கில் பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழு தன் அறிக்கையை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் நகல் வேண்டுமென்று, மணிகண்டன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, உயர்நீதிமன்றப் பதிவாளராக இருந்தவர்தான் நீதிபதி சொக்கலிங்கம். அந்த வாய்க்கா தகராறு காரணமாக, என்னிடம் வழக்கை கொண்டு வராதீர்கள் என்று அவர் சொல்லி விட்டார். திரும்பவும் மொதல்ல இருந்து.
மீண்டும் தலைமை நீதிபதியிடம் செல்கிறது வழக்கு. அவர் இங்கி பிங்கி பாங்கி போட்டு, இந்த முறை யாரிடம் அனுப்பலாம் என்று யோசித்து, பி.ராஜேந்திரன் நீதிபதியிடம் இதை அனுப்புங்கள் என்று உத்தரவிடுகிறார். அவர் சும்மாவே அப்பா டக்கர் போல பேசுவார். ஏற்கனவே சவுக்கு தளத்தில் அவரைப் பற்றி எழுதியிருப்பதால் சும்மா விடுவாரா? அல்வா கிடைத்தது போலல்லவா அவருக்கு? கடந்த புதன் கிழமை, நீதிபதி ராஜேந்திரனிடம் இந்த வழக்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. தலைமை நீதிபதி உத்தரவு போட்டுள்ளார் நீங்கள் இதை விசாரிக்க வேண்டுமென்று கூறியதும், “ஓ இதுவா…. ஐ எம் வெரி பிஸி டில் மண்டே. மண்டேவுக்கு அப்புறமா இதை எடுத்துட்டு வாங்க” என்று கூறி விட்டார். உயர்நீதிமன்ற அலுவலர்கள் நீதி தேவன் சொல்லும்போது என்ன செய்ய முடியும்? எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
மீண்டும் திங்கட்கிழமைக்குப் பிறகு, நீதிபதி ராஜேந்திரன் மனது வைத்தால் உண்டு. இல்லையென்றால், அவர் மேலும் ஒரு வாரம் இழுத்தடிப்பார். அதன்பிறகு இல்லை நான் விசாரிக்க மாட்டேன் என்று கூறுவார். அதற்குள், ஏப்ரல் மாதம் முடிந்து விடும். பிறகு ஒரு மாதம் கோடை விடுமுறை. இன்னும் ஒரு ரெண்டு மாசம் அலையட்டுமே என்ற எண்ணம் இந்த நீதிபதிகளுக்கு.
ஒரு சாதாரண க்ளர்க். அதுவும் சஸ்பெண்ட் ஆன க்ளர்க்கு. அவன் மேல் உள்ள வழக்கில் ஜாமீன் தருவதா? வேண்டாமா? என்று முடிவு செய்ய இத்தனை தயக்கம். ஒரு க்ளர்க் பயலைப் பார்த்து இப்படி பயப்படும் நீதிபதிகள், அதிகார மையத்தில் உள்ளவர்களைப் பார்த்து எப்படி பயப்படுவார்கள்? என்று யோசித்துப் பாருங்கள்.
நீதி தேவதையின் கண்களில் கட்டியிருக்கும் கருப்புத் துணி எதற்காக தெரியுமா? யார் நம் முன்னே இருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சட்டப்படி நியாயப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இந்த நீதிபதிகள் எப்படி தெரியுமா? முதலில் அந்த கருப்புத் துணியை நீக்கி, யார் சம்பந்தப்பட்ட வழக்கு? யார் வழக்கறிஞர்? பசையுள்ள வழக்கா? பசையில்லாத வழக்கா? வழக்கறிஞர் என்ன ஜாதி? வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்ன ஜாதி? வழக்கறிஞர் எந்த கட்சி? சம்பந்தப்பட்டவர் எந்தக் கட்சி? என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்த பிறகே, வழக்கு குறித்து யோசிப்பார்கள். அதற்குப் பிறகுதான் சட்டப் புத்தகத்தையே திறப்பார்கள். ஏற்கனவே எடுத்து வைத்த முடிவின்படி, அதற்கு ஏற்றார்ப் போல தீர்ப்புகளைத் தேடுவார்கள்.
வழக்கறிஞர் செல்வாக்கான வழக்கறிஞராக இருந்தால், தனிப்பட்ட முறையில் பேசி டீலிங்கை முடிப்பார்கள். இவையெல்லாம் திரைக்குப் பின்னால் நடப்பவை. நீதிமன்றத்தில் பார்க்க வேண்டுமே… அய்யய்யய்யோ… அப்படி ஒரு மயிர் கூச்செறியும் விவாதம் நடக்கும். சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து வருவார்கள். சட்டப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியையும் எத்தனை நுணுக்கமாக அலச முடியுமோ அத்தனை நுணுக்கமாக அலசுவார்கள். இந்த பேரங்கள், டீலிங்குகளில் ஈடுபடாதவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கணக்கு எடுத்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய நீதிபதிகளே தேறுவார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
சரி இப்போது மீண்டும் ஜாமீன் விவகாரத்துக்கு வருவோம். இந்த முன் ஜாமீன் மனு இப்படி மீண்டும் மீண்டும் தள்ளிப் போடப்பட்டு, நீதிபதிகளால் பந்தாடப்படுவதன் பின்னணியில் யார் இருப்பது தெரியுமா? பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் சதீஷ் அக்னிஹோத்ரிதான்.
இவர் எப்படியாவது அ.தி.மு.க. நீதிப் பிரிவின் தலைவராக கடும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சமீபத்திய தகவல்.
ஜெயலலிதா மீது நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், சம்பந்தப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிப்பது தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கை நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்து, சட்டத்துக்கு புறம்பான ஒரு தீர்ப்பை வழங்கினார்.
அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி பணித்தது, நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரிதான் என்கிறது நீதிமன்ற வட்டாரங்கள். உச்சநீதிமன்றம் ஏப்ரல்-19 அன்று அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாத வழக்கை சந்தித்தே ஆக வேண்டும். அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி பணித்தது, நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரிதான் என்கிறது நீதிமன்ற வட்டாரங்கள். உச்சநீதிமன்றம் ஜனவரி-30 அன்று அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாத வழக்கை சந்தித்தே ஆக வேண்டும். அந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ளது இதுதான் “the Criminal Court is directed to complete the trial within four months from the date of receipt of this Judgment”.
தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு மாறுதல் உத்தரவு பிறப்பிப்பது சென்னை உயர்நீதிமன்றமே. நீதித்துறை நடுவர், துணை நீதிபதி, கூடுதல் அமர்வு நீதிபதி, மாவட்ட நீதிபதி என்று அத்தனை பதவிகளுக்கும், மாறுதல் உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றமே பிறப்பிக்கும்.
இந்த மாறுதல் உத்தரவுகளை பிறப்பிப்பது, மாறுதல் குழு (Transfer Committee) என்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு. இதில் தலைமை நீதிபதி, மூத்த இரண்டு நீதிபதிகள் ஆகியோர் உறுப்பினர்கள். இன்றைய நிலையில் இந்த குழுவில் இருப்பவர்கள் நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன் மற்றும் நீதிபதி பால் வசந்தகுமார் மற்றும் தலைமை நீதிபதி. இந்த நீதிபதிகள் விவாதித்து, நெடு நாட்கள் தாமதமான மாற்றல் உத்தரவுகளை பிறப்பித்தனர். ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பாகவே பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய உத்தரவு இந்த உத்தரவு. இந்த மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் 16.04.2014.
இந்த மாறுதல் உத்தரவில்தான் பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த தட்சிணாமூர்த்தி மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக மாலதி என்ற நீதிபதி நியமிக்கப்படுகிறார். இது மிக மிக சாதாரணமாக நடந்த மாற்றம். இந்த மாறுதல் உத்தரவுக்கும் ஒப்புதல் அளித்தது பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் சதீஷ் அக்னிஹோத்ரி
மறுநாள் காலையில் வந்ததும் முதல் வேலையாக நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன் மற்றும் பால் வசந்தகுமாரை அழைத்தார். தட்சிணாமூர்த்தியை மாற்றும் உத்தரவை ரத்து செய்யலாம் என்று கூறுகிறார். அவர்கள் இருவரும், இது சாதாரண மாறுதல் உத்தரவுதானே… எதற்காக ரத்து செய்ய வேண்டும்? மேலும் மாலதி நல்ல நீதிபதியல்லவா என்கிறார்கள். தலைமை நீதிபதி, இல்லை, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை இந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. அதனால், மாறுதல் உத்தரவை ரத்து செய்து விடலாம் என்று கூறுகிறார். நீதிபதி பால் வசந்தகுமார், அப்போதும் மறுக்கிறார். இல்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதிமன்றத்துக்குத்தான். நீதிபதிக்கு இல்லை. ஆகையால் மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டியதில்லை என்று கூறுகிறார். நீதிபதி சித்ரா வெங்கட்ராமனும் இதை ஆமோதிக்கிறார்.
ஆனால், பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி இல்லை. இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். கடைசியாக ஒரு அஸ்திரத்தை எடுக்கிறார் நீதிபதி பால் வசந்தகுமார். நாம் இப்போது இந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்தோமென்றால், இதற்கு அரசியல் சாயம் பூசப்படும். அதனால் இதை இப்படியே விட்டு விடலாம் என்கிறார். ஆனால் நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி தன்னுடைய பெட்ரோமாக்ஸ் லைட் கோரிக்கையில் தீர்மானமாக இருக்கிறார். இல்லை, தட்சிணாமூர்த்தி ஏற்கனவே வழக்கை விசாரிக்கத் தொடங்கி விட்டார். அதனால் இப்போது மாற்றினால்தான் அதற்கு அரசியல் சாயம் பூசப்படும். எனவே, மாறுதல் உத்தரவை ரத்து செய்து விடலாம் என்று கூறுகிறார்.
ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டின் மீது இத்தனை பிடிவாதமாக இருக்கும் ஒரு தலைமை நீதிபதியிடம் இளைய நீதிபதிகள் எவ்வளவுதான் முரண்டு பிடிக்க முடியும். வேறு வழியின்றி கையெழுத்து போட்டு கொடுக்கிறார்கள். மாறுதல் உத்தரவு போட்ட மறு நாளே, 17.04.2014 அன்றே தட்சிணாமூர்த்தியின் மாறுதல் ரத்து செய்யப்படுகிறது.
சரி. தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, ஏன் இப்படித் துடிக்கிறார்? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை அவருக்கு எதற்கு ? என்ன காரணமென்றால், பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதிமன்றத்தின் நீதிபதியாக தட்சிணாமூர்த்தியின் இடத்தில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி மாலதி மிக மிக நேர்மையான நீதிபதி. எந்த அழுத்தத்துக்கும் வளைந்து கொடுக்காதவர். நீதி தேவதை கண்களைக் கட்டியிருப்பது போலவே, தன் கண்களையும் கட்டிக்கொண்டு, சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பெழுதக் கூடியவர்.
நீதிபதி மாலதியின் திறமைக்கு ஒரு உதாரணம். அரை டஜனுக்கும் மேல் பதிவு செய்யப்பட்ட சுடுகாட்டுக் கூரை ஊழல் தொடர்பான வழக்குகள் அத்தனையும் வீணாகிப் போன நிலையில், கடைசி வழக்காக இருந்த ஒரே வழக்கை, ஒரு நீதிபதி எப்படி விசாரிக்க வேண்டுமோ, அப்படி விசாரித்தார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்டது, மாநிலங்களவை எம்.பி செல்வகணபதி என்றோ, அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் என்றோ, கவலையே படவில்லை அவர். ஆவணங்கள் என்ன சொல்கின்றன, சாட்சிகள் என்ன சொல்கின்றன என்பதை மட்டும் பரிசீலித்தார். இறுதியாக, செல்வகணபதி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று கொஞ்சமும் தயங்காமல் தீர்ப்பளித்தா. நீதிபதி மாலதி, கொஞ்சம் சாய்ந்திருந்தால், எத்தனை கோடிகளை செல்வகணபதி அளித்திருப்பார் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.
இப்படிப்பட்ட நீதிபதியான மாலதி, ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கை விசாரித்தால் முடிவு எப்படி இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ ? இதனால்தான் பொறுப்பு தலைமை நீதிபதி அந்த பெட்ரோமாக்ஸ் லைட் மீது காதலாக இருக்கிறாரா என்பதை நம்மால் சொல்ல இயலாது. ஆனால், ஒரே நாளில் மீண்டும் பெட்ரோமாக்ஸ் லைட்டை அதே எழும்பூர் நீதிமன்றத்தில் நியமித்தே தீர வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி பிடிவாதம் பிடிக்க என்ன காரணம் இருக்க முடியும் ?
பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி ஜெயலலிதாவோடு ஒரு ஒப்பந்தத்தில் இறங்கியுள்ளதாகவும், நீதிபதி மாலதி வழக்கை விசாரித்தால், ஜெயலலிதா தண்டிக்க வாய்ப்பு உள்ளதால் மாலதியை மாற்றியே தீர வேண்டும் என்று, அரசு வழக்கறிஞர்களில் ஒருவர் பொறுப்பு தலைமை நீதிபதியை ரகசியமாக சந்தித்ததாகவும், அதன் பின்னரே நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி நீதிபதி மாலதியை மாற்றியே தீர வேண்டும் என்று தலைகீழாக நின்றதாகவும் சில சவுக்கு வாசகர்கள் சொல்கிறார்கள். இதையெல்லாம் நாம் நம்ப முடியுமா என்ன ? சவுக்கு வாசகர்கள் இருக்கிறார்களே !!!! அவர்கள் பல நேரத்தில் உண்மையை பேசுகிறார்கள். சில நேரங்களில் பொய்யையும் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவது சில நேரமா, பல நேரமா என்பது எங்களுக்குத் தெரியாது.
பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி ஏன் அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே வேண்டும் என்று கேட்கிறார் தெரியுமா ? காரணம் இல்லாமல் இல்லை. ஜெயலலிதா வழக்கை விசாரிக்கும் நீதிபதி தட்சிணாமூர்த்தி எப்படிப்பட்டவர் தெரியுமா ? தெரிந்து கொள்ளுங்கள்.
சுபிக்ஷா என்றொரு டுபாக்கூர் நிறுவனம், பொதுமக்களையும், ஊழியர்களையும் ஏமாற்றியது குறித்து கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்த நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளது குறித்து நிதி அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவு (Serious Fraud Investigation Office) விசாரணை நடத்துகிறது. இணைப்பு சுபிக்ஷா நிறுவனம், நூற்றுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் மூலமாக, நிதி மோசடியில் ஈடுபட்டதாக புகார். சுபிக்ஷா நிறுவனத்தில் 23 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் ஐசிஐசிஐ நிறுவனமே, சுபிக்ஷா மீது புகார் அளிக்கிறது. இந்த விசாரணையை எதிர்த்து, சுபிக்ஷா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறது. கம்பெனிகள் சட்டத்தின் உரிய விதிகளின்படி, இந்த விசாரணை நடைபெறவில்லை, ஆகையால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோருகிறது. அதன்படி விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய அரசே, அந்த விசாரணையை வாபஸ் பெற்று, உரிய விதிகளின்படி, மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்த காரணத்தால், வழக்கு அத்தோடு முடித்து வைக்கப்படுகிறது.
இதையடுத்து சுபிக்ஷா நிறுவனத்தினர், சீரியஸ் ப்ராட் புலனாய்வு நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுக்கிறார்கள். அதாவது உயர்நீதிமன்றத்தில் பொய்யான தகவலை அளித்து விட்டார்களாம். இந்த வழக்குதான் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அரசு அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு (Private Complaint) தொடுப்பதென்றால் முதலில் அவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஐபிஎஸ் அதிகாரிகள். இவர்கள் மீது வழக்கு தொடர குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், புலனாய்வு அதிகாரிகள் மீது வழக்கு தொடரக் கூடாது என்று கம்பெனிகள் சட்டத்திலேயே பாதுகாப்பு இருக்கிறது. இது தவிரவும், புலனாய்வு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியது, ஐசிஐசிஐ வங்கியின் அம்பத்தூர் கிளைக்கு. அதிகாரிகள் இருப்பதோ புது டில்லியில்.
வழக்கு தொடரக் கூடிய இடம் இரண்டே இரண்டு. ஒன்று அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம். மற்றொன்று புது டில்லி. எழும்பூர் நீதிமன்றத்துக்கும், அந்தப் புலனாய்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தமே இல்லாமல் இந்த வழக்கை தட்சிணாமூர்த்தி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதோடு, அதிகாரிகளை நேரிர் ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பியிருக்கிறார். இந்த சம்மனை எதிர்த்து, அந்த அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தம் இல்லாமல் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று, சம்மன் அனுப்பிய நீதிபதி தட்சிணாமூர்த்தி ஒன்று அடி முட்டாளாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கடைந்தெடுத்த ஊழல் பேர்வழியாக இருக்க வேண்டும். தட்சிணாமூர்த்தி, மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் இருப்பவர். ஏறக்குறைய 15 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றியவர். அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அனுமதி இல்லாமல் வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்பது அடிப்படை. பாலபாடம். ஆகையால் தெரியாமல் இதை நீதிபதி செய்துள்ளார் என்பதை நம்ப இயலவில்லை. பிறகு ஏன் இப்படிச் செய்தார் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.
இந்த தட்சிணாமூர்த்திதான் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி.
இதை விட மற்றுமொரு கூடுதல் தகவல் இருக்கிறது. 2011ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்ட நீதிபதியாக தட்சிணாமூர்த்தி இருந்தபோது, ஒரு வாரமாக வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதுவும் நீதிமன்றத்தின் கதவுகளை இழுத்துப் பூட்டி வேலை நிறுத்தம் நடந்தது. ஒரு வாரமாக, அந்த வேலை நிறுத்தம் பற்றி, உயர்நீதிமன்றத்துக்கு எந்த அறிக்கையும் அனுப்பவில்லை தட்சிணாமூர்த்தி. செய்தித்தாள்களில் வந்த செய்தியைப் பார்த்த பிறகே, தலைமை நீதிபதி தெரிந்து கொண்டார். இதையடுத்து, தட்சிணாமூர்த்தி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இப்படிப்பட்ட பெட்ரோமாக்ஸ் லைட்தான், ஜெயலலிதா வழக்கின் மீது வெளிச்சம் காட்ட வேண்டும் என்று கூறுகிறார் பொறுப்பு தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி.
அவரை பொறுப்பு தலைமை நீதிபதி (Acting Chief Justice) என்று அழைப்பது, அவருக்கு பிடிக்கவில்லையாம். அனைவரும், தலைமை நீதிபதி என்றே அழைக்க வேண்டும் என்று வேறு சொல்லி வருகிறாராம்.
தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையம் என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம்தான் வசதியில்லாதவர்களுக்கு இலவச வழக்கறிஞர்களை அனுப்புவது, மக்கள் நீதிமன்றங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்கிறது. இந்த ஆணையத்தின் தலைவராக இப்போது இருப்பவர். இவர் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளார். இவருக்கு எப்படியாவது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகி விட வேண்டும் என்று கனவு. அப்படி ஆவதற்கு சிறந்த வழியாக இவர் கையாள்வது, தலைமை நீதிபதியாக இருப்பவர்களுக்கு, சப்ளை அன்ட் சர்வீஸ் செய்வது.
இதற்கு முன்பு இருந்த எலிப்பி தர்மாராவுக்கு அனைத்தும் இவர்தான். தற்போது உள்ள பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரிக்கும் எல்லாமும் இவர்தான். சமீபத்தில் திருச்சியில் சட்டப் பணிகள் ஆணையத்தின் விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரிதான் தலைமை தாங்கினார். அந்த விழாவுக்கு அவரது மனைவியும் வந்திருந்தார். வழக்கமாக நீதிமன்ற விழாக்களில், நீதிபதிகள் மனைவியோடு வந்திருந்தாலும், மேடையில் அமர மாட்டார்கள். சாதாரண பணிகளில் இருப்பவர்களே மேடையில் அமரா மாட்டார்கள். அதிலும், மனைவியாக இருப்பவர் வழக்கறிஞராக இருந்தால், நிச்சயம் அமர மாட்டார்கள். நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுபவர். இதுதான் இந்த தலைமை நீதிபதியின் லட்சணம்.
இவருக்கு இப்போது ஒரே ஆசை, கனவு லட்சியம் எல்லாமும். அது சென்னை உயர்நீதிமன்றத்தின் முழு நேர தலைமை நீதிபதியாக வேண்டும் என்பதே. அப்படி என்ன இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தில் என்கிறீர்களா ? இந்தியாவின் மற்ற நீதிமன்றங்களை விட, செல்வச் செழிப்பான நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் என்பதை, ஆந்திராவிலிருந்து வந்து இங்கே பணியாற்றிய எலிப்பி தர்மாராவ் அவர்களே ஒத்துக் கொள்வார். அதனால்தான், எப்படியாவது, இதே நீதிமன்றத்தில் முழு நேர தலைமை நீதிபதியாகி விட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார். அந்த துடிப்பின் விளைவே, அதிமுக நீதித்துறை பிரிவில் இவரை நுழைய வைத்திருக்கிறது.
நீதிபதி அருணா ஜெகதீசன் குறித்து ஏற்கனவே சவுக்கில் படித்திருப்பீர்கள். ஜெயலலிதாவுக்கு சாதகமாக ஒரு தீர்ப்பெழுதியவர். உடனே, இவர் அதிமுக நீதித்துறை பிரிவைச் சேர்ந்தவர் என்று அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். சமீபத்தில் முக.ஸ்டாலினின் பினாமி ராஜா சங்கர் வீட்டுத் திருமணம் நடந்தது. ராஜா சங்கர், முக ஸ்டாலினின் பினாமி, அவரது பல கோடி ரூபாய்களை உலகெங்கும் முதலீடு செய்துள்ளவர் என்பது ஊரறிந்த உண்மை. அந்த ராஜா சங்கர் வீட்டுத் திருமணத்தில் முதல் ஆளாய்ப் போய் நின்றவர் யார் தெரியுமா ? நீதிபதி அருணா ஜெகதீசன்தான். அருகில் இருப்பவர் மற்றொரு நீதிபதி வாசுகி.
இவர்கள் அருகில் இருப்பவர் பெயர் கேபி என்கிற கலியபெருமாள். தமிழகத்தில் உள்ள கீழமை நீதிபதிகளில் 80 சதவிகித நீதிபதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். இந்த நீதிபதிகளின் வீட்டு விஷேசம், விழாக்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவர்தான் கவனித்துக் கொள்வார். அவர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுகள், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கவனித்துக் கொள்பவர் இந்த கே.பி தான். இது போக வருடத்துக்கு இரு முறை, சென்னையில் உள்ள எம்.ஆர்.சி கிளப்பில், மது விருந்தும் அளிப்பார். இதுதான் இந்த நீதிபதிகளின் லட்சணம்.
அவர்களின் கேள்வி கேட்பார் இல்லாத சாம்ராஜ்யம் கேள்விக்குள்ளாக்கப் படுவதை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. தட்டிக் கேட்க வழியே இல்லாத சாம்ராஜ்யத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த நம்மை ஒருவன் கேள்வி கேட்பதா ? நம் ஊழல் முகத்திரையை கிழிப்பதா என்று கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இந்த நீதிபதிகளின் உண்மை முகத்தை இப்படி அம்பலப்படுத்துவதால்தான், சவுக்கு தளத்தை முடக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். சவுக்கு தளத்தை நடத்துபவரை வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓட ஓட விரட்டுகிறார்கள். ஒரு சாதாரண முன் ஜாமீன் மனுவை விசாரிக்க மூன்று மாதங்களாக இழுத்தடிக்கிறார்கள்.
இது சவுக்குக்கு இவர்கள் விடும் மிரட்டல் அல்ல. மற்ற அனைவருக்கும் விடும் மிரட்டல். எங்கள் சாம்ராஜ்யத்தை கேள்விக்குள்ளாக்கினால் இதுதான் கதி என்பதே இவர்கள் அனைவருக்கும் உரக்கச் சொல்லும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம். 🔥🔥🔥
ஊழல் செயும் நீதி பதிகளை வெறி நாய்களை கொண்டு கடிக்க விட்டே கொல்லனும் .
Dear Savukku, don’t worry I will be one of person to help in any kind to you
Kasi rajan
savukuu , dont worry I am also one of person to help my best to you
kasi
இன்னும் சொல்லுவதானால் வழக்கு விசாரணையில் உள்ள போதே நாமாகவே ஊழல் நடந்ததை போல ஊர்ஜிதபடுத்தி கொண்டிருப்பது சரி தானா. நீதி மன்ற இறுதி தீர்ப்பு வரட்டும் அப்போது இந்த கட்டுரையின் தன்மை தெரிந்து விடும்
salute
pikkali passanga!
I curse their son & daughter will suffer for the sins they are making today. Nothing comes free, you have to pay the price for your corrupt money.
சவுக்கு , மனம் தளர விட வேண்டாம். உங்களுககு வாசகர் ஆதரவு உள்ளது. நிதி பற்றி கவலை வேண்டாம் . உங்கள் அக்கௌன்ட் மட்டும் சொல்லுங்கள் போதும்…முடிந்த உதவி செய்கிண்டொம்
படிச்சா தல சுத்துதேப்பா!!! எப்படியா இதெ ஒரு கோர்வையா எழுதின??? அருமை..இந்த எருமைகளை, அடி மாட்டை அடிக்கிற மாதிரி, அடிச்சி தோலை உறிச்சி……
வாழத்துகள் சகோ
yes, really very very torture to sankar sir. while reading i am get disappointment. how worst this judicial department is. viewers not only sankar all the people who need justice, who want justice, all are treated like the same what sankar sir experienced. my god how much pain sankar sir gets. writing all this with managing the pain is very great. god bless him. sankar sir really gives lamp against injustice. his writings leads good human justice. people make this valuable real incidents as lesson and fight to overcome from this atrocity. lawyers, judges are most criminal. they torture common people lot. we must find good solution to this kind of atrocity. so after reading this article every one write solution how to overcome, how we punish this justice fellows. what are the procedures now available to overcome this atrocity. kindly write what more things need to destroy this ugly judicial department. kindly list out. how we can help to the person who affected like this. giving money not solve this problem. money is need, but not fully solve. so list out 1) giving money 2) what other things we can do? we can meet via social media, organize fundamental steps and etc. so kindly list out all the needs. thank for sankars writing.
தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையம் என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம்தான் வசதியில்லாதவர்களுக்கு இலவச வழக்கறிஞர்களை அனுப்புவது, மக்கள் நீதிமன்றங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்கிறது. இந்த ஆணையத்தின் தலைவராக இப்போது இருப்பவர். இவர் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளார். இவருக்கு எப்படியாவது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகி விட வேண்டும் என்று கனவு………….. இவர் பெயரை சொல்லாமல் விட்டீரே
Savukku, pls post your account details or send it to my mail id. Though i may not agree with all your political views but you are one of the very few websites that has the courage to take on the corrupted judiciary which is very very important.
எல்லாம் சப்ளை செய்ய கூடியவர்ன்னா, எல்லாமுமா ? என்ன கொடுமை சவுக்கு சார் இது ! எப்படியும் ஒரு நாள் வரத்தான் போகிறது, அப்பொது தெரியும் சத்தியத்தின் பலம்.
Savukku Vasagargal eppothum ungal pakkam.
சவுக்கு , என்னால் முடிந்த உதவி செய்ய ( அணிலாக) விரும்புகிறேன்.தங்களது அக்கௌன்ட் விவரங்களை குடுங்கள்..இந்த ஊழலை ஒழிப்பது மிகவும் கடினம்தான்
மனுநீதி சோழன் ஆண்ட நாட்டில் நீதியை சாகடிக்கும் நீதிபதிகளின் கூடாரமாக மெட்ராஸ் ஐ கோர்ட் மாறியுள்ளது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது .நீதிபதிகள் கிரிமினல்கள் பினாமிகள் நடத்தும் பொது விழாக்களில் அன்பளிப்புக்கு ஆசைப்பட்டு கலந்து கொள்வது நீதித்துறை -அநீதி துறையாக மாரிவருவதையே காட்டுகிறது
கவலை வேண்டாம் சவுக்கரே!! நீதி வெல்லும்…வாசகர்கள் ஆகிய நாங்களும் உங்களோடு…. நன்றி வணக்கம்.
Why can’t you move Supreme court ?
Bail applications pending here in HC sir. Till they are dismissed, how to move SC ? And you know how expensive SC could be