2011 தேர்தல் களத்தில் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தாலும் பிரதானமாக பேசப்பட்ட முக்கியமான விஷயம் ஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த ஊழல், தொடர்பாக பத்திரிக்கைகளில் பரவலாக 2ஜி, 3ஜி என ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப் பட்டாலும், நமக்கு புரிந்ததெல்லாம், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்பது மட்டும் தான். பொதுவாக கிராமப்புறங்களில் இதைப் பற்றி பெரிய அளவில் புரிதல் இல்லை என்று பேசப்பட்டாலும், “செல்போன்ல ஒரு பெரிய அமவுன்ட்ட அடிச்சுட்டாங்கப்பா” என்பது வரை கிராம மக்களுக்கு புரிந்திருக்கிறது. படித்தவர்கள் மத்தியிலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று விவாதிக்கப் பட்டாலும், இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலின் பின்னணி என்ன, இது எப்படி நடந்தது, என்ற விரிவான புரிதல்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ? மின்காந்த அலைகள் மூலமாக ஒலியை கடத்த முடியும் என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பின் விளைவே வானொலி. இதைத் தான் ஆங்கிலத்தில் ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கிறார்கள். அதே போல, தொலைபேசிச் சேவைகள், தொண்ணூறுகள் வரை, கம்பி மூலமான இணைப்புகள் வழியாகவே வழங்கப் பட்டு வந்தன. அதன் பிறகு ஏற்பட்ட தொழில் நுட்பப் புரட்சி காரணமாக காற்றின் வழியாக உரையாடல்களை அனுப்ப முடியும் என்ற நிலை வந்த்து. இதன் முடிவே, 1ஜி எனப்படும் முதல் தலைமுறை சேவைகள். 1 என்பது முதல் என்பதற்கும், ஜி என்பது ஜெனரேஷன் (தலைமுறை) என்பதன் சுருக்கமாகவும் 1ஜி என அழைக்கப் படுகிறது.
இந்த தொழில்நுட்பம் மிக மிக வசதியாகவும், கம்பிவட இணைப்பு இல்லாத இடத்திலும் பெரிதும் பயன் பட்டது. உயரமான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் பணிபுரியும், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவத்தினருக்கு, இந்த சேவை பெரிய அளவில் பயன்படும் என்பதை உணர்ந்த அரசு, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உரிமையை தனியார் நிறுவனங்கள் எதற்கும் தராமல், ராணுவம் மற்றும் காவல்துறை பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதித்தது.
முதல் தலைமுறை தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய பின்னடைவு, ஒரு பக்கம் இருக்கும் நபர் பேசி முடித்த பிறகே, அடுத்த பக்கத்தில் இருக்கும் நபர் பேச முடியும். மேலும், 1ஜி தொழில்நுட்பத்தில் பேசுவதற்காக பயன்படுத்தப் படும் கருவிகள் அதிக பேட்டரி சக்தியை இழுக்கும். இதனால் இந்தக் கருவிகள் அளவிலும் பெரிதாக இருக்கும். இன்று சாலைகளில் மணிக்கணக்கில் செல்போன்களை காதோடு இணைத்த படி, இளைஞர்களும், இளைஞிகளும் பேசிக் கொண்டு செல்வதை பார்க்கிறோம். இதற்குப் பதிலாக, ஓவர் என்று சொன்ன பிறகுதான் பேசமுடியும் என்ற நிலை இருந்தால், நிம்மதியாக ‘கடலை’ போட முடியுமா ? குறுஞ்செய்தி அனுப்ப முடியுமா ? வாழ்க்கை எத்தனை கடினமாக இருந்திருக்கும்…. ? அப்பப்பா செல்போன் இல்லாத வாழ்க்கையா ? நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறதல்லவா ?
இந்த சூழலில் தான் 2ஜி வருகிறது. 2ஜி அறிமுகப் படுத்தப் படுத்தப் படுவதற்கு முன்பு, தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தொலைபேசி என்றாலே லேண்ட்லைன் மட்டும் தான். அதுவும், அரசு தொலைபேசி தான். உங்கள் எக்சேஞ்சின் அளவைப் பொறுத்து, பதிவு செய்து விட்டு காத்திருக்க வேண்டும். இணைப்பு வழங்கப் படுவதற்கு, ஒரு ஆண்டு ஆகலாம், இரண்டு ஆண்டு ஆகலாம், ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம். 1991ல் தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலுக்கு வந்ததும், தொலைத் தொடர்புத் துறையிலும் பெரும் மாற்றம் வருகிறது.
இதையொட்டி, இந்த அலைக்கற்றை மற்றும், தொலைபேசி சேவையை வரைமுறைப் படுத்துவதற்காக, 1994ம் ஆண்டில், தேசிய தொலைத் தொடர்பு கொள்கை ஒன்றை வகுக்கிறது மத்திய அரசு. அதன் படி, நான்கு மெட்ரோ நகரங்களில் தலா இரண்டு நிறுவனங்கள் செல்போன் சேவையை தொடங்கலாம் என்று அனுமதி அளிக்கப் படுகிறது. தொடங்கிய புதிதில், இன்கம்மிங் 16 ரூபாய், அவுட் கோயிங் 16 ரூபாய்.
இந்த அளவுக்கு விலை மிக மிக அதிகமாக இருந்த காரணத்தால், பெரும் செல்வந்தர்களைத் தவிர, செல்போன் சேவையை பயன்படுத்துவதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இப்படி இருந்தால் ஒன்றும் சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்தது. அதன் அடிப்படையில், தொலைத் தொடர்பு கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய ஒரு குழு அமைக்கப் பட்டு, அந்தக் குழு புதிய விதிகளை நிர்ணயித்தது.
இந்த புதிய விதியின் படி தான் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை அமலுக்கு வருகிறது. 1999ல் இந்தக் கொள்கையை அமல்படுத்தியதற்கு காரணம், அப்போது செல்பேசி சேவையை நடத்துவதற்கு எந்த நிறுவனமும் முன்வரவேயில்லை என்பதுதான். லாபமில்லாத தொழில் இறங்க எந்த தொழில் அதிபர் முன்வருவார் ? போட்டியாளர்களே இல்லாத சூழலில் ஏலம் விட்டால் மட்டும் யார் ஏலத்தில் பங்கெடுத்திருக்கப் போகிறார்கள் ?
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையை அறிவித்த பிறகும் கூட, ரிலையன்ஸ், டாடா போன்ற வெகு சில நிறுவனங்களே சேவை நடத்துவதற்கு முன் வந்தன. 2001ல் புதிதாக விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு லைசென்சுகள் வழங்கப் பட்டன. அப்போது 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் லைசென்சுகள் வழங்கப் பட்டன. இவ்வாறு வழங்கப் பட்ட லைசென்சுகள் மூலம், அரசுக்கு கிடைத்த மொத்த வருவாய் 1658 கோடி ரூபாய்கள். 2001ல் இந்தத் தொகை கிடைத்ததற்கு காரணம், ஏராளமான ஸ்பெக்ட்ரம் அரசு வசம் இருந்ததும், போட்டியிட நிறுவனங்கள் குறைவாக இருந்ததும்.
2002, 2003 ஆண்டுகளில் செல்போன் சேவை ஓரளவுக்கு பரவலாக மக்களைச் சென்றடைய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களிடையே போட்டியும் ஆரம்பித்தது. இந்தப் போட்டி தொடங்கிய போது, போதுமான அளவு ஸ்பெக்ட்ரம் அரசு வசம் இருந்தது. இதன் நடுவே, 2004-2005 ஆண்டில், தொலைத் தொடர்புத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பு, 49லிருந்து 75 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது. இதன் அடிப்படையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் செல்போன் சேவையை தொடங்க முன்வரும் என்பதை உணர்ந்த செல்போன் சேவையை தொடங்க வரும் நிறுவனங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் விதி வகுக்கப் பட்டது. அதே நேரத்தில், லைசென்ஸை பெற்ற நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரத்தை பதுக்கக் கூடாது என்பதற்காக ஒரு ஏரியாவில், ஒரு நிறுவனத்துக்கு ஒரு லைசென்ஸுக்கு மேல் வழங்கக் கூடாது என்றும் நிர்ணயிக்கப் பட்டது.
2007ம் ஆண்டிற்குள், செல்போன் சேவை இந்தியாவில் உச்சத்தை அடைந்தது. வளர்ந்த நாடுகளை விட, இந்தியாவின் செல்பேசி எண்ணிக்கை அதிகமானது. இதில் உள்ள வருவாயை உணர்ந்த பல்வேறு நிறுவனங்கள் செல்போன் சேவையை தொடங்க போட்டி போட்டன.
தயாநிதி மாறன், ஏப்ரல் 2007ல், ட்ராய் என்று அழைக்கப் படும், தொலைத் தொடர்புத் துறை ஒழுங்கு ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில, ஏராளமான லைசென்சுகள் வழங்கப் பட்டு விட்டது. இது வரை 159 லைசென்சுகள் கொடுக்கப் பட்டு விட்டன. ஸ்பெக்ட்ரத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. அதனால், லைசென்சுகள் வழங்குவதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று ட்ராய் பரிந்துரைக்குமாறு கோருகிறார்.
ஆனால், ட்ராய் இந்த பரிந்துரைகளை ஏற்கவில்லை. இன்று தொலைத்தொடர்பு சந்தை இருக்கும் சூழலில், லைசென்சுகளுக்கான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டால் தான், சந்தாதாரர்களுக்கு குறைந்த விலையில் செல்போன் சேவையை அளிக்க முடியும் என்பதாலேயே ட்ராய் இந்த முடிவுக்கு வந்தது.
2ஜி பிரிவில், லைசென்சுகளை வழங்குவதற்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக ட்ராய் கவனமாகவே பரிந்துரைகளை வழங்கியிருந்தது. இது வரை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை இருந்தாலும், நிர்ணயிக்கப்படும் நுழைவுக் கட்டணமானது, இன்றைய சந்தை நிலவரத்தை ஒத்ததாக இல்லை என்று ட்ராய் குறிப்பிட்டது.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பதற்கும் தெளிவான விதிமுறைகள் வகுக்கப் பட்டிருந்தன. செல்பான் சேவையை தொடங்க விரும்பும் நிறுவனங்கள் முதலில் தொலைத் தொடர்புத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேதி வாரியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும். முதலில் வரும் விண்ணப்பத்துக்கு, அனுமதி கடிதம் ஒன்று கொடுக்கப் படும். முதலில் விண்ணப்பம் அளித்த நிறுவனத்துக்கு அனுமதி கடிதம் கொடுக்கப் பட்ட பின்னரே அடுத்த நிறுவனத்தின் விண்ணப்பம் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப் படும். ஒரே நாளில் இரண்டு நிறுவனங்களிடமிருந்து, ஒரே தொலைத் தொடர்பு வட்டத்துக்கு விண்ணப்பம் பெறப்படுமேயானால், முதலில் வந்த விண்ணப்பத்துக்கு அனுமதி கடிதம் வழங்கப் பட்ட பிறகே, குறைந்தது மறு நாள்தான் அடுத்த நிறுவனத்துக்கு அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும். இது போன்ற விதிமுறைகளை ஏற்படுத்தியதற்கான முக்கிய காரணம், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு சமநிலையை உருவாக்க வேண்டும் என்பதே.
இந்த புதிய விதிமுறைகளை ட்ராய் அனுப்பியது ஆகஸ்ட் 2007ல். தயாநிதி மாறன் ட்ராய்க்கு கடிதம் எழுதியது ஏப்ரல் 2007ல். இதற்கு நடுவே ஒரு முக்கிய விஷயம் நடந்தது.
இந்த இடத்தில்தான் கதையில ஒரு ட்விஸ்ட். அந்த ட்விஸ்ட்தான் ஆண்டிமுத்து ராசா.
தொடரும்.
நீங்கள் ஒரு விஷயத்தை தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள்.நீங்கள் மட்டுமல்ல அதி மு க அனுதாபிகள் என்ற போர்வையில் நிறைய பேர் தவறான செய்திகளை பரப்புகிறீர்கள் அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் நான் தி மு க அனுதாபி அதிமுக அனுதாபி என பார்க்கவில்லை நடுநிலய்யாளன் என்கிற முறையில் தெரிவிக்கிறேன் சரி தவறு என முடிவு செய்யுங்கள் திராவிடம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தத்தையும் தாண்டி நல்ல விஷயங்கள் இருப்பதால் நல்லது என படுவோரே அதை பின்பற்றட்டும் அதை தி மு க வினால் தான் எடுத்து செல்ல வேண்டும் என்பதில்லை அதற்கான சுமந்து செல்லும் பொருள் ஒரு அரசியல் கட்சியாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் திராவிடம் வழக்கு ஒழிந்து விட்ட தாக நினைத்து கொள்ளுவார்கள் அல்லது விரும்புவர்கள் எல்லாம் ஒரு சித்தாந்தம் சிதைந்து விட்டது போல
நினைத்து வேண்டுமானால் கருதி கொள்ளலாம் அதனால் என்ன பயன் இன்னொரு மாற்று வழி நல்லதாக இருப்பதாக காண்பித்தால் அதையும் ஏற்று கொள்ளும் பக்குவம் தான் திராவிடம் என்பதற்கு சித்தாந்த ரீதியான பொருள். மெய்பொருள் காண்பது அறிவு என்பது தான் இதன் சாராம்சம் அப்பிடி இருக்கையில் பயப்பட் தேவையில்லை அனால் ஊடக செய்திகள் அனைத்திலும் ஊக செய்திகளை ஒரு மஞ்சள் பத்திரிக்கை போல வெளியிடும் கலாச்சாரம் தான் இப்போது வட இந்தியாவிலி உள்ள ஊடகங்கள் மிக திறமையாக செய்து வருகின்றன .. இந்தியா முழுவதும் ஓன்று விடாமல் மிக சிறிய ஊடகம் முதல் பெரிய கார்போரேட் ஊடக நிறுவனங்கள் வரை எதையும் விடாமல் திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரம் மிக துல்லியமா ரகசிய சதி எண்ணத்தோடு பரப்பி வருகிறார்கள் இதை திட்டமிட்டு செய்பவர்கள்..பார்க்கவும் வடக்கில் டெல்லி யில் இருந்து மூன்று ஊடகங்கள் தமிழ் நாட்டில் உள்ள மூன்று தமிழ் பத்திரிகைகள் [தினமலர், தின தநதி குரூப் , மற்றும் குமுதம் ]அனைத்துக்கும் சேர்த்த மாதிரி சுமார் 450 கோடி ரூபாசெலவில் [வெளி நாட்டில் உள்ள தம்புராஸ் இயக்கத்தினர் ரகசிய கணக்கு மூலம் பெற்ற வெளிநாட்டு நிதி இங்கு உள்ள துக்ளக் சோ, ஜெயா டிவி இயக்குனர் சுப்ரமணிய சுவாமி , ஆகிய மூவரும் அதி மு க வில் ஜெ , சசிகலா குடும்பம் ,மற்றும் ஜெயா டிவி யில் தலைமை பார்ட்னர்களை வைத்து ஆக இந்த ஏழு பேர் கொண்ட குழு இந்த 450 கோடி சதி திட்டத்துக்கு ஊடகத்தை மிக சரியாக பயன் படுத்தி வருகிறார்கள் இதில் தின தந்திக்கு மட்டும் 90 முதல் 100 கோடி வரை பொய் கருத்து கணிப்புக்கு செலவிட்டு உள்ளார்கள் .. !!!அவர்கள் பத்திரிகையிலும் தந்தி டிவி சானலிலும் நாற்பது இடங்களும் அதி மு க விற்கே என்ப்பது போல பொய் கணிப்பை வெளியிட்டு மோசம் செய்கிறார்கள் …!!! தின மலர் க்கு இதில் கணிசமான் பங்கு போய் சேர்ந்து உள்ளது. அவர்களும் அவர்கள் பங்குக்கு தந்தி பத்திரிக்கை போலவே பொய் செய்தி வெளியிடுகிறார்கள் …!!! இதை போல வட இந்தியாவிலும் மோடி க்கு வேண்டிய ஊடகங்களை வைத்து மேற் சொன்ன ஏழு பேர் குழு வில் சுப்ரமணிய சாமி மூலம் மூன்று டிவி [ஹிந்தி சேனல் ]மூலம் இங்கு அ.தி.மு.க தான் அதிக இடங்களை பிடிக்கும் என்று தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் பண்ணி வருகிறார்கள். இதுவும் ஒரு ஊக செய்தி தான் இதை மறுப்பவர்கள் அவர்கள் தரப்பு நியாயம் சொல்லுவார்கள். அதை போல தான் கனிமொழி தப்பே விவகாரமும் காஞ்சி சங்கராச்சாரியார் நீதிபதி ரகசிய உரையாடல் டேப் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்து உள்ளதே அப்பா அது பொய் தானே. அது போல ஊடகங்கள் நினைத்தால் எதையும் பொய்யாக திரிக்க முடியும். கனிமொழி டேப் விஷயமும் அது போல தான் இப்ப புரிகிறதா நான் எல்துவதில் தவறு உள்ளதா
நெல்சன்,
நான் திமுகவின் எதிரியும் இல்லை, அதிமுகவின் நண்பனும் இல்லை. ஒரு நல்ல ஜனநாயக ஆட்சியை எதிர்பார்த்து காத்து இருக்கும் சாதாரண இந்திய குடிமகன்.
இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
நான் முன்னமே கூறியதுபோல் திராவிடம் அண்ணவிற்க்கு பிறகு இறந்துவிட்டது.
சவுக்கின் இந்த இருகட்டுரைகளை படித்து தெளியவும்
http://savukku.in/3193
http://savukku.in/3195
நன்றி நண்பரே அது போல அதிமுக வில் எம் ஜி ஆரின் உண்மை முகம் பற்றி ஏன் தெளிவாக ஒரு நீண்ட கட்டுரை ஏன் வர மாட்டாமல் தடுக்கிறது என்பது தான் கேள்வி. எம.ஜி ஆர் பற்றி ஒரு பழைய கண்ணதாசன் எழுதிய நூல் உள்ளது https://twitter.com/Ottapaanai/status/454889440955994112 இதை எல்லாம் வெளியிட துணிந்தால் சவுக்கு உண்மை தான் எழதுகிறார்கள் என நம்பலாம். எம்ஜி ஆரின் இன்னொரு முகம் பற்றி எழுத ஆரம்பித்தால் அவரா இப்பிடி என்கிற அளவுக்கு மிக நம்ப முடியாத 100 சதவீத உண்மை ஆதாரகளுடன் கூடிய அருவெறுப்பான பல ரகசிய செய்திகள் உண்டு. அதையும் எழுதுங்கள் என்று தான் சொல்லுகிறேன். மற்ற படி தவறு செய்தார்களா இல்லையா என்பது நீதிமன்றம் சொல்லும் வரை ஸ்பெக்ட்ரம் வழக்கில் காத்து இருப்போம். மெய்பொருள் காண்பது அறிவு.
இன்னும் சொல்லுவதானால் வழக்கு விசாரணையில் உள்ள போதே நாமாகவே ஊழல் நடந்ததை போல ஊர்ஜிதபடுத்தி கொண்டிருப்பது சரி தானா. நீதி மன்ற இறுதி தீர்ப்பு வரட்டும் அப்போது இந்த கட்டுரையின் தன்மை தெரிந்து விடும்
சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் சிறையில் இருந்தும் ஆ ராசா விடம் இருந்து எந்த உருப்பிடியான ஆதாரங்களை சிபிஐ யினால் பெற முடியவில்லை. மட்டுமல்ல ஆ ராசா தனது வருமான கணக்கு விபரத்தில் 55 லட்சம் நச்ட கணக்கு தானே காட்டி உள்ளார். மேலும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனையிலயும் எதையும் சிபிஐ பெறவில்லை. அவரது பினாமி என்று சந்தேகித்தவர்களிடம் பெற்றவையும் பலன் இல்லா ஆதாரங்கள் மேலும் நீதி மன்றம் இன்னும் கூடி வழக்கை நடத்தமுடியாத படிக்கு திணறி வருவதாக எண்ணம் வருகிறது. இன்னும் எந்த ஆதாரத்துக்காக waiting ? ஆக இந்த கட்டுரைப்படி கற்பனையாக வேண்டுமானால் வழக்கு ஜோடிக்கலாம் பொறுத்து இருந்து பார்ப்போம். ஆ ராசா வின் பேட்டியை பாருங்கள் https://twitter.com/THIRAVIDAKALAI/status/454232962393841665
ஸ்பெக்ரம் என்பது ஊழலே இல்லை, 176 க்குப்பின் 10 சுழியமே இல்லை, ராசா பொய் சொல்லவே இல்லை, கருணாநிதி ஊழல் வாதியே இல்லை,
கனிமொழி கூட்டுச் சேரவே இல்லை, சிறை சென்றது திருட்டுக்கு இல்ல, சிபிஐ கூறுவது உண்மையும் இல்லை, சவுக்காலே அடித்தாலும் வேறொன்றும் இல்லை.
நண்பர்களே! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி என்னால் எழுதப்பட்ட கட்டுரை 04/02/2011 அன்று விகடனில் பிரசுரிக்கப்பட்டது. அதற்கான லிங்க் இதோ
http://news.vikatan.com/article.php?module=news&aid=965
படித்துவிட்டு உங்களது விமர்சனத்தை இங்கேயே பதிவு செய்யுங்கள். திமுக இதற்கு மேலும் வெற்றிபெற்றால் உங்கள் கோமணம் உங்களது இல்லை. அனைவருக்கும் புரியும் படி எழுதி உள்ளேன். நண்பர்களுக்கு இதை அனுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மேற்கண்ட எனது கட்டுரையின் தொடர்ச்சி, 12/02/2011 அன்று எழுதியது
2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எனது இரண்டாவது கட்டுரை. எனது முந்தைய கட்டுரையை புரிந்து கொண்டு இதை படித்தால் ஒரு தொடர்ச்சி கிட்டும்…………
சில நாட்களுக்கு முன் பிரபல பொதுநல வக்கீல் திரு பிரசாந்த் பூசன் 2ஜி சம்பந்தமாக ஒரு பொது நலன் வழக்கை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தார். அதில் CAG இல் குறிப்பிட்டது போல் நாட்டுக்கு 1,76,000 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதால் முறைகேடாக வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்துவிட்டு புதிய ஏலமுறையில் தகுதி உள்ள நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை விசாரித்த நீபதிகள் CAG கணக்கை வைத்து மட்டும் உரிமங்களை ரத்து செய்ய முடியாது. இதில் அரசின் கருத்துக்களையும் கேட்க வேண்டியுள்ளது என்றனர். இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு நீதிபதிகளை திருப்பி சில கேள்விகளை கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஒன்று, 1 .76 லட்சம் கோடி இழப்பை கணக்கிட்டது அரசை சார்ந்த மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு “constitutional” firm . அதில் பணி புரியும் கணக்காளர்கள் மிகுந்த அனுபவம் திறமை நிறைந்தவர்கள். அப்படி இருக்கையில் நீதிபதிகள் அரசின் கருத்தை கேட்கவேண்டியுள்ளது என்று கூறியதன் மூலம் CAG ஒரு தனியார் நிறுவனம் போல் சித்தரிக்க பட்டுள்ளது. இரண்டாவது, குற்றம் சுமத்த பட்டுள்ளதே மத்திய அரசை சார்ந்த ஒரு அமைச்சர் மீதும் மற்றும் அதை கண்டும் காணாமல் இருந்த பிரதமர் மீதும் என்பதுதான். அப்படி இருக்கையில் இந்த விசயத்தில் மத்திய அரசின் கருத்தை கேட்கவேண்டியுள்ளது என்பது ஏற்புடையதல்ல. மத்திய அரசு தவறு செய்துள்ளது என்றுதான் நீதி தேடி நீதிபதிகளிடம் வந்தோம். நீதிபதி மீண்டும் ஊழலில் சம்பந்தப்பட்ட மத்திய அரசிடமே கருத்து கேட்பது எந்த வகையில் நியாயம்.
அடுத்தபடியாக சில நாட்களுக்கு முன் திரு கபில்சிபல் நாட்டுக்கு எந்த இழப்பும் இல்லை. “௦” லாஸ் என்று கூறினார். அதை தொடர்ந்து இன்று(11.02.2011) ஒரு தனியார் ஆங்கில செய்தி தொலைகாட்சிக்கு(இந்த தொலைகாட்சியை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரும் நீரா ராடியா உரையாடல் மற்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தபட்டவர்) அளித்த பேட்டியில் திரும்பவும் அதையே கூறியுள்ளார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம். ஒருவர் சில மாதங்களுக்கு முன் ஒரு ஹோட்டலை 80 கோடிக்கு வாங்கி அதை இன்று 125 கோடிக்கு விற்றதாக ஒரு உதாரணம் கூறினார். இது எப்படி சட்டப்படி சரியோ அதே போலதான் 1250 கோடி கொடுத்து அலைகற்றை உரிமம் வாங்கியவர்கள் சில நாட்களில் அதில் 45 % to 60% பங்குகளை மட்டும் 4500 கோடிக்கு விற்றுள்ளனர். இதில் என்ன தவறு இருக்கிறது என்றார். மக்களை மடையர்கள் என்றே நினைத்து விட்டார். அவருக்கு எனது சுலபமான கேள்வி?
போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட், உரிமம் வாங்கியவுடன் உடனே சேவையை தொடங்குதல் போன்ற அனைத்து தகுதிகளும் உடைய S.TEL நிறுவனம் 13,000 கோடி கொடுத்து அலைகற்றை உரிமம் வாங்க தயாராக இருந்தபொழுதும் அவர்களுக்கு உரிமம் அளிக்காதது ஏன்?
SWAN,UNITECH போன்ற பல நிறுவனங்கள் தொலை தொடர்பு துறையில் அனுபவமே இல்லாதவர்கள். இந்த நிறுவனங்கள் கட்டுமான துறையை சேர்ந்தவை. உரிமம் வாங்கினாலும் சேவையை தொடங்க தேவையான வசதியோ, அனுபவமோ இல்லாதவை. அது மட்டும் இல்லை. இவர்கள் சில லட்சங்களை மட்டுமே முதலீடாக செய்து தற்காலிகமாக இந்த தொலை தொடர்பு நிறுவனங்களை தொடங்கி குறுக்கு வழியில் அலைகற்றை உரிமங்களை பெற்றுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. ஆதலால்தான் அலைகற்றை உரிமத்தை 1250 கோடிக்கு வாங்கி அதில் 45 % to 60% பங்குகளை 4500 கோடிக்கு விற்று காரியம் முடிந்தவுடன் மீதம் உள்ளதை வைத்து சேவையை இன்றுவரை தொடங்கவில்லை.
SAWN, UNITECH உள்ளிட்ட பல தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு அரசு வங்கிகளில் இருந்து மொத்தம்11,000 கோடிவரை கடனாக வழங்கப்பட்டுள்ளதாக CBI வட்டார செய்திகள் சொல்கின்றனர். எனவே கடனை வழங்கிய வங்கி அதிகாரிகளும் கைது செய்யபடலாம் என்று செய்திகள் வருகிறது. இந்த கடனை வழங்கியபோது மத்திய நிதி அமைச்சராக இருந்தது (2008 – இல் இந்த ஆண்டை நியாபகம் வைத்து கொள்ளுங்கள்) தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர்.
இதே நிதி அமைச்சர்தான் வசதி இல்லாத ஏழை மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி கடனாக (Educational Loan) அரசு வங்கியில் வெறும் 25,000 or 50,000 ரூபாயை உதவியாக பெற ஆயிரம் விதிமுறைகளை கொண்டுவந்தவர். மாணவர்களை பாடாய் படுத்தி எடுத்தவர். ஏழைகளை கிள்ளு கீரையாகவும், கேவலமாகவும் நினைக்கும் ஒருவர் மத்திய நிதியமைச்சர். இவருக்கு வோட்டு போட்ட மக்கள்தான் இவரின் உண்மையான நிறத்தை புரிந்துகொள்ளவேண்டும்.
பிறகு இவர் (2008 November பிறகுதான்) உள்துறை அமைச்சராக மாற்றபட்டார். இவருக்கும் 2 ஜி ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எப்படி? தகுதி இல்லாத நிறுவனங்கள் வங்கியில் கடன் பெற்றதே இவர் நிதியமைச்சராக இருந்தபோதுதானே. இவ்வளவு பெரிய கடன் இவருக்கு (நிதியமைச்சருக்கு)தெரியாமல் கொடுத்திருக்க துளியும் வாய்ப்பில்லை. எனவே முன்னாள் மத்திய நிதியமைச்சரும் கைது செய்யப்படவேண்டும்.
2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். சிவகங்கை தொகுதியில் அந்த அமைச்சர் முதலில் தோற்றதாகவும் பின்னர் வெற்றிபெற்றதாகவும் அறிவிக்கபட்டார் என்றும் எல்லோருக்கும் தெரியும். அவர் தோற்று இருந்திருந்தால் இந்நேரம் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்ட குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் மற்றும் அனைவரும் ஜெயிலில் இருந்திருப்பார்கள். எப்படி?
அந்த அமைச்சர் தேர்தலில் தோற்கப்போகும் போகும் செய்தி அறிந்த நிமிடத்தில் அதிகம் பதறியது அந்த குடும்பத்தலைவர்தான். ஆம் இது மிக உண்மை. காரணம் அவர் தோற்று இருந்தால் மத்திய அரசின் காபினெட் அமைச்சரவையில் தனக்கு சாதகமாகவும், 2ஜி ஊழல் ரகசியங்களை காக்கவும் (தனது கட்சியை சாராத) ஒரு வலுவான ஆளும் இல்லாமல் போய்விடும். எனவேதான் கடைசி நேரத்தில் அந்த அமைச்சர் தோற்றார் என்ற மக்கள் தீர்ப்பு திருத்தப்பட்டு செயற்கையாக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்ததால் இதை சுலபமாக அந்த குடும்பத்தலைவர் செய்து முடித்தார். இதற்கு பிராயசித்தமாக அந்த அமைச்சர் இன்றுவரை தனது விசுவாத்தை அந்த குடும்பத்துக்கு தந்துகொண்டிருக்கிறார். அதுமட்டும் இல்லை காபினெட் அமைச்சரவையில் எடுக்கபடும் முக்கிய முடிவுகள், 2ஜி ஊழல் சம்பந்தமாக அரசு எடுக்கும் ரகசிய நடவடிக்கைகள் அனைத்தும் இந்த அமைச்சர் மூலம் குடும்பத்தலைவருக்கு உடனுக்குடன் வந்தவண்ணம் உள்ளது. சுருக்கமாக “ஒற்றன்” என்றே சொல்லலாம். இல்லை என்றால் இந்நேரம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஜெயிலில் களி தின்று கொண்டிருப்பார்கள்.
அடுத்த கூத்து கபில்சிபலால் நியமிக்கபட்ட நீதிபதி சிவராஜ் பாட்டிலின் விசாரணை அறிக்கை. அதில் 2003 ஆண்டில் இருந்தே அலைகற்றை உரிமம் வழங்கியது தவறு என்று கூறப்பட்டுள்ளது. முதலில் வருபவருக்கே உரிமம் என்ற கொள்கையை கொண்டுவந்ததே அப்போதைய NDA அரசுதான். எனவே 2003 இல் இருந்தே தவறு நடந்துள்ளது என்கிறார். மீண்டும் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியது பத்தவில்லை போலும்.
தங்களுக்கு சாதகமாக ஒரு விசாரனை அறிக்கையை தயார் செய்து அதை CBI யிடம் தினிப்பது குற்றவாளிகளை தப்பிக்க வைக்க செய்யும் நாடகம்.
உச்ச நீதிமன்றமே 2001 ஆம் ஆண்டில் இருந்தே விசாரிக்க CBI இடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படி இருக்கையில் விசாரணை கமிஷன் அமைக்க அவசியம் என்ன? இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் இவரது அறிக்கையை CBI இடம் கொடுக்க போகிறாராம். அதை பின்பற்றி CBI விசாரணை நடத்த வேண்டுமாம். ஏற்கனவே உச்சநீதிமன்றம் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் CBI தன்னிச்சையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கண்டித்து கூறியுள்ளது. இந்த சமயத்தில் பாட்டிலின் அறிக்கையை வைத்து CBI விசாரணை நடத்தவேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார். கபில்சிபல் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்திடம். CBI இடம் அல்ல.CBI இடம் திணிப்பது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செயல். அவரது நடவடிக்கை மற்றும் தொலைக்காட்சி பேட்டியை வைத்து “Contempt of Court” பெட்டிஷனை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்து மீண்டும் ஒரு கொட்டு கொட்டலாம். வக்கீல்கள் இதை செய்வார்களா?
எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut, twitter என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.
நன்றி.
நான் அனுப்பிய விபரங்களை முழுவதுமாக படித்து மெய்பொருள் காண்பது தான் அறிவு வெறும் ஒரு தரப்பினரின் ஊடக செய்திகளை வைத்து கொண்டு தவறான கணிப்பில் எழுதப்பட்ட கட்டுரையாக தான் உள்ளது. ஆராய்ந்து பார்த்தால் எது உண்மை என புரியும்
putin nelson # தாங்கள் இணைத்துள்ள விவரங்களை படித்தேன் – பார்த்தேன். நன்றி வணக்கம்.
ஒன்று மட்டும் புரிகிறது…அவர்களை மாரிதி நபர்களையும் கட்சிகளையும் நம்பி வாக்களித்த மக்கள் தான் உண்மையான ஏமாளிகள்..கோமாளிகள்….
உயர்வர்க்கர்த்திர்க்காக (ஆண்டி முத்து ராசா உள்பட )பத்திரிக்கைகளும் (சவுக்கு உள்பட )நீதி துறைகளும் (சிடிஎஸ்),காவல் துறைகளும் ( ஜாபர் சேட்)வளைந்து கொடுக்கும் என்பது தெள்ள தெளிவாகிறது… ஆனாலும் ராசா “தலித்” என்பதால் பழிவாங்க படுகிறார் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்ட திமுகவின் தந்திரத்தை இந்த மக்கள் எந்தளவு ஏற்பார்கள்.??.
ஜெயலலிதாவை ஊழல் ராணி என்று தெரிந்தும் அரியணை ஏற்றியது நமது மக்கள் தானே….அரசியல் விழிப்புணர்ச்சி இல்லாதவரை..இலவசங்களை அறிவித்து வாக்குகள் பெரும் நிலையை ஒழிக்காதவரை…பணத்திற்கு வாக்கை விற்பதை தடுக்காதவரை..மதுவை ஒழிக்கதவரை…..நாம் யாரையும் குற்றம் சொல்லி ஒன்னும் ஆகா போவது இல்லை. அனைவரும் “புதிய நம்பிக்கை” “புதிய அரசியலுக்கு” வாருங்கள்….நன்றி வணக்கம்…
அப்பா “ஆண்டி” ராசாவுக்கு இவ்வளவா ???விடாதிங்க சார் இவனையெல்லாம் புடிச்சி ஜெயில்ல போடுங்க…….தொண்டனே இவ்வளவு அடிசிருக்கானா அப்போ தலைவன் ??( கட்டுமரம் ). தயாநிதி மாறனுக்கும் , ராஜாவின் ராணி கனி மொழிக்கும் இதில் தொடர்பு உண்டு!
தயாநிதி மாறனுக்கும் இதில் தொடர்பு உண்டு!
இந்த கட்டுரை குறித்து நான்கு விஷயங்களை வாசகர்கள் படித்து விட்டு பின் முடிவு செய்யட்டும்
ஒன்று:
இப்ப அம்மா கட்சி பின்தங்குகிறது .. காரணம். pic.twitter.com/KbJh55KL3d
இரண்டு
2G ஸ்பெக்ட்ரம் – விளக்கமாக படிக்க : ##திரும்ப திரும்ப சிலர் 2Gயில் ஊழல் ஊழல் என்று கிளிப்பிள்ளையை போல சொல்லி (cont) http://tl.gd/n_1s1e5eq
அதிமுக விற்கு ஒரு சவால் இதை படிக்கவும் [ contd…] http://tl.gd/n_1s1bgem pic.twitter.com/fFTj6wMKLE pic.twitter.com/QaVx969Pzt
மூன்று:
2G வழக்கு பற்றி தெரியாதவர்கள் இந்த காணொளியை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்!!! http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_rJyFijp_tk … … … …
நான்கு{
2g ஊழல் என்பது ஆடிடர் ரிப்போர்ட் படி பார்த்தாலும் projected amount தானே ஒழிய ரியல் ஊழல் அல்ல என்பது supreme (cont) http://tl.gd/n_1s1aksr
India laye uzhal na enna nu theriyadha orey thalaivar unga karunanidhi nu solla varingey,
Then how much is the real amount involved? can you or Raja or karunanidhi or MMS can provide the figure right now. If not, until the amount is clear why not keep 176……as the looted money.
response to number 3:
It is Raja & co are accused here. You are about to provide a response against this. You dont need to care about others and damn say you are a culprit or not. you dont need to talk about jaya or others for your problem. She clearly misused the power that is why karunanidhi & co got another opportunity.
இதை தான் நானும் சொன்னேன் ஏன் நெருக்கடி நிலையில் திமுக மீது சர்காரியா கமிஷன் தற்போது 2 ஜி ஏன் அப்பொழுதும் இப்பொழுதும் குற்றவாளிகளாக இருப்பின் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கபடவில்லை(அப்பொழுதும் திமுக தயாராக இருந்ததது இப்பொழுதும் திமுக மற்றும் ராசா தயாராக இருந்தனரே.எவ்வாறு அனுமான மதிப்பு 2ஜியின் விலையை 3ஜியின் விலையிடன் கணக்கிடமுடியும்
ஒரு சித்திரிக்கப்பட்ட பொய்யாக புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை என்பது விரைவில் வெளி வரலாம் ஒரு பெரிய அரசியல் கட்சியை அதுவும் திராவிட கட்சியை அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு [துக்ளக் சோ போன்றவர்கள் ] செய்து வரும் ஒரு மிக பெரிய சதி வலை ஆக கூட இருக்கலாம் அல்லவா.? மெய்பொருள் காண்பது அறிவு எல்லாமே ஊக செய்திகள் தான் போல தெரிகிறது
நண்பர் நெல்சன்,
திராவிடம் பேசியே இரு தலைமுறைகளின்(1970 ) வாழ்க்கையை வீணாக்கியது போதும். இன்னும் அதைப்பிடித்து தொங்காதீர்கள்.
பெரியார் மற்றும் அண்ணாவிற்க்கு பிறகு திராவிடம் இறந்துவிட்டது.
If you think nothing has happened, please listen the leaked audio tapes. I hope the the audio tapes doesn’t have and 2G converstation, but how Karunanidhi wing man, henchman and button man(mafia people) talk to Congress to get the key portfolio from the Congress cabinet.
I really don’t understand how people like you still believe in those corrupt peoples.
நீங்கள் ஒரு விஷயத்தை தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள்.நீங்கள் மட்டுமல்ல அதி மு க அனுதாபிகள் என்ற போர்வையில் நிறைய பேர் தவறான செய்திகளை பரப்புகிறீர்கள் அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் நான் தி மு க அனுதாபி அதிமுக அனுதாபி என பார்க்கவில்லை நடுநிலய்யாளன் என்கிற முறையில் தெரிவிக்கிறேன் சரி தவறு என முடிவு செய்யுங்கள் திராவிடம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தத்தையும் தாண்டி நல்ல விஷயங்கள் இருப்பதால் நல்லது என படுவோரே அதை பின்பற்றட்டும் அதை தி மு க வினால் தான் எடுத்து செல்ல வேண்டும் என்பதில்லை அதற்கான சுமந்து செல்லும் பொருள் ஒரு அரசியல் கட்சியாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் திராவிடம் வழக்கு ஒழிந்து விட்ட தாக நினைத்து கொள்ளுவார்கள் அல்லது விரும்புவர்கள் எல்லாம் ஒரு சித்தாந்தம் சிதைந்து விட்டது போல
நினைத்து வேண்டுமானால் கருதி கொள்ளலாம் அதனால் என்ன பயன் இன்னொரு மாற்று வழி நல்லதாக இருப்பதாக காண்பித்தால் அதையும் ஏற்று கொள்ளும் பக்குவம் தான் திராவிடம் என்பதற்கு சித்தாந்த ரீதியான பொருள். மெய்பொருள் காண்பது அறிவு என்பது தான் இதன் சாராம்சம் அப்பிடி இருக்கையில் பயப்பட் தேவையில்லை அனால் ஊடக செய்திகள் அனைத்திலும் ஊக செய்திகளை ஒரு மஞ்சள் பத்திரிக்கை போல வெளியிடும் கலாச்சாரம் தான் இப்போது வட இந்தியாவிலி உள்ள ஊடகங்கள் மிக திறமையாக செய்து வருகின்றன .. இந்தியா முழுவதும் ஓன்று விடாமல் மிக சிறிய ஊடகம் முதல் பெரிய கார்போரேட் ஊடக நிறுவனங்கள் வரை எதையும் விடாமல் திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரம் மிக துல்லியமா ரகசிய சதி எண்ணத்தோடு பரப்பி வருகிறார்கள் இதை திட்டமிட்டு செய்பவர்கள்..பார்க்கவும் வடக்கில் டெல்லி யில் இருந்து மூன்று ஊடகங்கள் தமிழ் நாட்டில் உள்ள மூன்று தமிழ் பத்திரிகைகள் [தினமலர், தின தநதி குரூப் , மற்றும் குமுதம் ]அனைத்துக்கும் சேர்த்த மாதிரி சுமார் 450 கோடி ரூபாசெலவில் [வெளி நாட்டில் உள்ள தம்புராஸ் இயக்கத்தினர் ரகசிய கணக்கு மூலம் பெற்ற வெளிநாட்டு நிதி இங்கு உள்ள துக்ளக் சோ, ஜெயா டிவி இயக்குனர் சுப்ரமணிய சுவாமி , ஆகிய மூவரும் அதி மு க வில் ஜெ , சசிகலா குடும்பம் ,மற்றும் ஜெயா டிவி யில் தலைமை பார்ட்னர்களை வைத்து ஆக இந்த ஏழு பேர் கொண்ட குழு இந்த 450 கோடி சதி திட்டத்துக்கு ஊடகத்தை மிக சரியாக பயன் படுத்தி வருகிறார்கள் இதில் தின தந்திக்கு மட்டும் 90 முதல் 100 கோடி வரை பொய் கருத்து கணிப்புக்கு செலவிட்டு உள்ளார்கள் .. !!!அவர்கள் பத்திரிகையிலும் தந்தி டிவி சானலிலும் நாற்பது இடங்களும் அதி மு க விற்கே என்ப்பது போல பொய் கணிப்பை வெளியிட்டு மோசம் செய்கிறார்கள் …!!! தின மலர் க்கு இதில் கணிசமான் பங்கு போய் சேர்ந்து உள்ளது. அவர்களும் அவர்கள் பங்குக்கு தந்தி பத்திரிக்கை போலவே பொய் செய்தி வெளியிடுகிறார்கள் …!!! இதை போல வட இந்தியாவிலும் மோடி க்கு வேண்டிய ஊடகங்களை வைத்து மேற் சொன்ன ஏழு பேர் குழு வில் சுப்ரமணிய சாமி மூலம் மூன்று டிவி [ஹிந்தி சேனல் ]மூலம் இங்கு அ.தி.மு.க தான் அதிக இடங்களை பிடிக்கும் என்று தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் பண்ணி வருகிறார்கள். இதுவும் ஒரு ஊக செய்தி தான் இதை மறுப்பவர்கள் அவர்கள் தரப்பு நியாயம் சொல்லுவார்கள். அதை போல தான் கனிமொழி தப்பே விவகாரமும் காஞ்சி சங்கராச்சாரியார் நீதிபதி ரகசிய உரையாடல் டேப் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்து உள்ளதே அப்பா அது பொய் தானே. அது போல ஊடகங்கள் நினைத்தால் எதையும் பொய்யாக திரிக்க முடியும். கனிமொழி டேப் விஷயமும் அது போல தான் இப்ப புரிகிறதா நான் எல்துவதில் தவறு உள்ளதா