அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்ற நாள் 16 மே 2007. ஆம் ஆ.ராசா அன்றுதான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விரிவாக ஆராய ஆரம்பித்தால் தலை சுற்றுகிறது. ஏனெனில் அத்தனை நிறுவனங்கள்…. அத்தனை நபர்கள்… சிபிஐ 80 ஆயிரம் பக்கம் குற்றப் பத்திரிக்கையை முதல் பகுதியாக வெளியிட்டிருக்கிறதென்றால், இன்னும் வரக்கூடிய மற்ற பகுதிகளில் எத்தனை பூதங்கள் வெளி வருமோ தெரியவில்லை.
மே 2007ல் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறைக்கு பொறுப்பேற்கிறார். இவர் வந்த அதே காலத்தில், ஆர்.கே.சந்தோலியா என்று அழைக்கப் படும் ரவீந்தர குமார் சந்தோலியா, ராசாவின் தனிச் செயலராக பொறுப்பேற்கிறார். ராஜா பொறுப்பேற்றதும், விபரம் தெரியாத ஒரு குழந்தையின் கையில் கொடுத்த விலை மதிப்பற்ற பொருளை என்ன செய்யுமோ, அது போலத்தான் தொலைத் தொடர்புத் துறையை நிர்வாகம் செய்தார்.
இன்று சிபிஐ ஆல், குற்றம் சாட்டப் பட்டிருக்கும், டிபி ரியாலிட்டீஸின் ஷாகீத் பல்வா, வினோத் கோயங்கா, சஞ்சய் சந்திரா, ஆகிய தொழில் அதிபர்களோடு, ராசாவுக்கு ஏற்பட்ட நெருக்கம், புதிதாக ஏற்பட்டதல்ல.. சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த போது, டிபி ரியாலிட்டீஸ் மற்றும் யூனிடெக் நிறுவனங்களின் பல்வேறு ப்ராஜெக்டுகளுக்கு அத்துறை அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறுவதற்காக ராசாவை சந்தித்த வகையில் நல்ல நெருக்கம் இருந்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியில் வந்ததனால், மற்ற விஷயங்கள் விசாரிக்கப் படவில்லை. ராசா சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த காலத்தில் அவர் அளித்த தடையில்லா சான்றுகளை ஆராய்ந்தால், மேலும் பல பூதங்கள் வெளி வரலாம்.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் படி, முதலில் விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு, அனுமதி கடிதம் (Letter of Intent) கொடுக்கப் படும். அந்தக் கடிதத்தில், 7 நாட்களுக்குள் லைசென்ஸ் பெறுவதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும், 15 நாட்களுக்குள், நுழைவு கட்டணம், வங்கி உத்தரவாதம் ஆகிவற்றை சமர்ப்பித்து லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம் என்பது தான் விதி. இந்த விதி எப்படி மீறப்பட்டது என்பதை பிறகு பார்க்கலாம்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கோரி, தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் அளிப்பதற்கு கடைசி நாள் என்று எதுவும் இல்லாததால், ராசா வந்த பிறகும், இது போன்ற விண்ணப்பங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு வந்து கொண்டிருந்த விண்ணப்பங்கள், ராசா பதவியேற்றதும், அதிக அளவில் வரத் தொடங்கின.
யூனிடெக் என்ற நிறுவனத்தின் பிரதான தொழில், ரியல் எஸ்டேட். மும்பை மற்றும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவதுதான் யூனிடெக்கின் அடிப்படைத் தொழில். இப்படிப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், எதற்காக தொலைத் தொடர்புத் தொழிலில் ஈடுபட வேண்டும் ? வேறு ஒன்றும் காரணம் அல்லல. ராசாவைப் போன்ற, விசுவாசமான ஒரு நபர் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகும் போது, யூனிடெக் எப்படி சும்மா இருக்க முடியும் ? ராசா, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகியிருந்தால், யூனிடெக் நிறுவனம், நிச்சயம் விமானப் போக்குவரத்துத் துறையில் இறங்கியிருக்கும்.
ராசாவின் தனிச் செயலர் சந்தோலியா, இந்த விண்ணப்பங்களின் மீது தனிக் கவனத்தை செலுத்தத் தொடங்கினார். தினந்தோறும், இன்று எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன என்பதை கவனமாக பரிசீலித்தார். 24.09.2007 அன்று விண்ணப்பங்களை பெறும் அதிகாரியிடம், யூனிடெக் நிறுவனத்திடமிருந்து விண்ணப்பம் வந்து விட்டதா என்று கேட்டறிந்தார். யூனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பம் வந்து விட்டது என்பது அறிந்ததும் “நிறுத்து….. எல்லாத்தையும் நிறுத்து” இனி எந்த விண்ணப்பமும் வாங்கக் கூடாது என்று உத்தரவிடுகிறார். தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகளோ, “சார் அப்படியெல்லாம் திடீரென்று நிறுத்த முடியாது“ என்ற கூறியதும், “சரி, ஏன் நிறுத்தக் கூடாது என்பதற்கு ஒரு நோட் போட்டு அனுப்புங்கள்“ என்று கூறுகிறார்.
அதிகாரிகளும், 10.10.2007 வரை விண்ணப்பங்களை வாங்கலாம் என்று உத்தேசமாக ஒரு தேதியை நிர்ணயித்து நோட் போட்டு அனுப்புகிறார்கள்.
இதற்குள், யூனிடெக் நிறுவனம் அவசர அவசரமாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்காக 8 புதிய நிறுவனங்களை தொடங்குகிறது. ஒரே நாளில் எப்படி எட்டு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன என்று வாயைப் பிளக்காதீர்கள்… ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்துக் கொண்டு மேலும் எப்படி கொள்ளையடிக்கலாம் என்று துடிப்பவர்களுக்கு 8 நிறுவனங்களை தொடங்குவது பெரிய வேலையா என்ன ? 800 நிறுவனங்களை தொடங்குவார்கள்.
அஸ்க்கா ப்ராஜெக்ட்ஸ், நஹான் ப்ராப்பர்ட்டீஸ், யூனிடெக் பில்டர்ஸ் & எஸ்டேட்ஸ், யூனிடெக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ், ஆஸாரே ப்ராப்பர்டீஸ், அடானீஸ் ப்ராஜெக்ட்ஸ், ஹட்ஸன் ப்ராப்பர்டீஸ், மற்றும் வோல்கா ப்ராப்பர்டீஸ் என்று எட்டு நிறுவனங்களை தொடங்குகிறார்கள். இந்த நிறுவனங்களுக்கெல்லாம், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைத்ததும் அத்தனை நிறுவனங்களும், யூனிடெக் வயர்லெஸ் குழுமம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டன. ரியல் எஸ்டெட் நிறுவனங்கள் எப்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களாக ஒரே நாளில் மாறின என்றெல்லாம் கேட்காதீர்கள்… பிசினெஸ்ல இதெல்லாம் சகஜமப்பா. பிறகு, யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ப்ரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தோடு அத்தனை நிறுவனங்களும் இணைக்கப் பட்டன.
யூனிடெக் நிறுவனத்தோடு சேர்ந்து இதில் பயன் பெற்ற மற்றொரு நிறுவனம் ஸ்வான் டெலிகாம். ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை முழுக்க முழுக்க கட்டுப்படுத்துவது டிபி ரியாலிட்டீஸ் எனப்படும் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனம். இப்போது தகத்தகாய கதிரவனோடு சேர்ந்து திஹாரில் பொழுதைக் கழிக்கும் ஷாகீத் உஸ்மான் பல்வாவைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது, 2009 நவம்பரில், போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவின் 50வது பெரிய பணக்காரர் என்று செய்தி வெளியிட்ட போது. டிபி ரியாலிட்டீஸ் எனப்படும் டைனமிக் பல்வாஸ் ரியாலிட்டீஸ் நிறுவனம் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு, பல நூறு கோடி மதிப்புள்ள நிலங்களை வளைத்த போதுதான் யார் இந்த பல்வா என்று கவனிக்கப் படத் தொடங்கினார்.
இந்த டிபி ரியாலிட்டீஸ் எப்படிப் பட்ட நிறுவனம் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம். மும்பையில் வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 18,837 சதுர மீட்டர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அனாதை ஆசிரமம் நடத்தும் ஒரு ட்ரஸ்ட் வசம் பராமரிப்பதற்காக மட்டும் வக்ஃப் போர்ட் ஒப்படைத்திருந்தது. திடீரென்று ஒரு நாள் இந்த வக்ஃப் போர்ட் நிலத்தை நீல் கமல் ரியல்டர்ஸ் & பில்டர்ஸ் என்ற நிறுவனம் வாங்குகிறது. இந்த நீல்கமல் நிறுவனம், டிபி ரியாலிட்டீஸின் துணை நிறுவனம் என்பது கூடுதல் செய்தி. இது நடந்தது 2004ல். வக்ஃப் போர்டுக்கு இந்த விபரம் தெரிந்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்குள் ஷாகீத் உஸ்மான் பல்வா, இந்த இடத்தை ஆக்ரமித்து, பல அடுக்கு மாடிகளை கட்டத் தொடங்கி விட்டார். மும்பை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்த பிறகே, அக்டோபர் 2009ல் ஷாகீத் பல்வா மீது எஃப்ஐஆர் போடப்பட்டது. மும்பை தார்தியோ பகுதியில் 1120 சதுர அடி, இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் எவ்வளவு தெரியுமா ? 3 கோடியே 65 லட்சம். 2 லட்சத்துக்கும் அதிகமான சதுர அடி கொண்ட இந்த நிலத்தை ஷாகீத் பல்வாவின் நீல்கமல் நிறுவனம் எவ்வளவு கொடுத்து வாங்கியது தெரியுமா ? வெறும் 1 கோடி. இதுதான் டிபி ரியாலிட்டீஸ்.
சரி, யூனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பம் வந்து விட்டது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் விண்ணப்பமும் வந்து விட்டது. அவர்களோடு சேர்ந்து மற்ற நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. எப்படி மற்ற நிறுவனங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு, யூனிடெக் நிறுவனத்துக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் லைசென்ஸ் கொடுப்பது…. ? இங்கேதான் வருகிறார் தகத்தகாய கதிரவன்.
01.10.2007 தான் விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் என்று அறிவிக்கலாம் என்று முடிவெடுக்கப் படுகிறது. இதன் படி, 24.09.2007 அன்று பத்திரிக்கைகளுக்கு செய்தி ஒன்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தால் அனுப்பப் படுகிறது. அதன்படி, 1.10.2007 க்குப் பிறகு விண்ணப்பித்த நிறுவனங்களின் கோரிக்கை பரிசீலிக்கப் படமாட்டாது என்று அறிவிக்கப் படுகிறது.
சரி இதன்படி விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம் என்று பார்த்தால், யூனிடெக் மற்றும் ஸ்வான் விண்ணப்பித்த 24.09.2007 முதல் 01.10.2007 வரை மேலும் பல நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த விபரம் தெரிய வந்தது. ஓகே… இது சரிப்படாது என்று முடிவெடுத்த ராசா, 25.09.2007தான் கடைசி நாள், அதுக்கு மேல ஒரு நாள் கூட எக்ஸ்டென்ட் பண்ண முடியாது என்று முடிவெடுக்கிறார்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் ராசா. தற்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தால் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலிக்கையில், ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளதும், விண்ணப்பித்த அத்தனை நிறுவனங்களுக்கும் வழங்க போதுமான ஸ்பெக்ட்ரம் இல்லை என்பதும் தெரிய வருகிறது (என்னா ஒரு அக்கறை ?) அதனால், 25.09.20007 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்கலாம் என்று எழுதுகிறார்.
தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகளோ, ராசாவிடம், தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையில் உள்ள பத்தி 3.1.1ஐ சுட்டிக் காட்டுகிறார்கள். அதன் படி போதுமான அளவுக்கு ஸ்பெக்ட்ரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது லைசென்ஸ் பெற்றுள்ளவர்களுக்கும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும், போதுமான அளவுக்கு ஸ்பெக்ட்ரம் இருக்குமாறு பங்கீடு செய்ய வேண்டும் என்ற விதியையும், இது தொடர்பாக ட்ராய் பல்வேறு அறிவுரைகளை தொடர்ந்து வழங்கியுள்ளதையும் சுட்டிக் காட்டினர். சரியான அதிகப்பிரசங்கி அதிகாரிகளாக இருப்பார்கள் போலிருக்கிறதே…..? தகத்தகாய கதிரவனுக்கு தெரியாத விஷயமா ?
26.10.2007 அன்று ராசா, “இதோ பாருங்க பாஸு. நெறய்ய அப்ளிகேஷ்ன்ஸ் வந்துருக்கு… கொஞ்சம் தான் ஸ்பெக்ட்ரம் இருக்கு. என்ன பண்லாம்னு சொல்லுங்க” என்று சட்டத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுகிறார்.
சட்டத்துறை அமைச்சகம் 01.11.2007 அன்று, ராசாவுக்கு பதில் அனுப்புகிறது. “இந்த விவகாரம் மிக மிக முக்கியமானது. அதனால், இந்த விவகாரத்தை ஒரு அமைச்சரவை குழுவுக்கு அனுப்பி விவாதித்த பின் முடிவெடுக்கலாம்” என்று கூறுகிறார்கள்.
நடந்தது, நடவாதது, கொடுத்தது, கொடுக்காதது, எடுத்தது எடுக்காதது என அனைத்தும் அறிந்த ஆண்டிமுத்து ராசா எதற்காக அமைச்சரவை குழுவுக்கு இதை அனுப்ப வேண்டும் ? அது மட்டுமல்லாமல், தனக்கு கிடைக்க வேண்டிய பங்கை, மற்ற அமைச்சர்களோடு பகிர்ந்து கொள்ள நேரிட்டால்….. ?
நானே ஒரு அமைச்சரவை குழு, நான் எதற்கு இன்னொரு குழுவிடம் அனுப்ப வேண்டும் என்று, முடிவெடுக்கிறார் ஆண்டிமுத்து ராசா..
தொடரும்.
There is only one power ruling this whole world.we can say them corporate america or illuminatis… These people are their servants.. All the money going to them…. These people are getting very few..if they are not responding to them..those people get punishment. Who ever they may be.
நீங்கள் ஒரு விஷயத்தை தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள்.நீங்கள் மட்டுமல்ல அதி மு க அனுதாபிகள் என்ற போர்வையில் நிறைய பேர் தவறான செய்திகளை பரப்புகிறீர்கள் அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் நான் தி மு க அனுதாபி அதிமுக அனுதாபி என பார்க்கவில்லை நடுநிலய்யாளன் என்கிற முறையில் தெரிவிக்கிறேன் சரி தவறு என முடிவு செய்யுங்கள் திராவிடம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தத்தையும் தாண்டி நல்ல விஷயங்கள் இருப்பதால் நல்லது என படுவோரே அதை பின்பற்றட்டும் அதை தி மு க வினால் தான் எடுத்து செல்ல வேண்டும் என்பதில்லை அதற்கான சுமந்து செல்லும் பொருள் ஒரு அரசியல் கட்சியாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் திராவிடம் வழக்கு ஒழிந்து விட்ட தாக நினைத்து கொள்ளுவார்கள் அல்லது விரும்புவர்கள் எல்லாம் ஒரு சித்தாந்தம் சிதைந்து விட்டது போல
நினைத்து வேண்டுமானால் கருதி கொள்ளலாம் அதனால் என்ன பயன் இன்னொரு மாற்று வழி நல்லதாக இருப்பதாக காண்பித்தால் அதையும் ஏற்று கொள்ளும் பக்குவம் தான் திராவிடம் என்பதற்கு சித்தாந்த ரீதியான பொருள். மெய்பொருள் காண்பது அறிவு என்பது தான் இதன் சாராம்சம் அப்பிடி இருக்கையில் பயப்பட் தேவையில்லை அனால் ஊடக செய்திகள் அனைத்திலும் ஊக செய்திகளை ஒரு மஞ்சள் பத்திரிக்கை போல வெளியிடும் கலாச்சாரம் தான் இப்போது வட இந்தியாவிலி உள்ள ஊடகங்கள் மிக திறமையாக செய்து வருகின்றன .. இந்தியா முழுவதும் ஓன்று விடாமல் மிக சிறிய ஊடகம் முதல் பெரிய கார்போரேட் ஊடக நிறுவனங்கள் வரை எதையும் விடாமல் திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரம் மிக துல்லியமா ரகசிய சதி எண்ணத்தோடு பரப்பி வருகிறார்கள் இதை திட்டமிட்டு செய்பவர்கள்..பார்க்கவும் வடக்கில் டெல்லி யில் இருந்து மூன்று ஊடகங்கள் தமிழ் நாட்டில் உள்ள மூன்று தமிழ் பத்திரிகைகள் [தினமலர், தின தநதி குரூப் , மற்றும் குமுதம் ]அனைத்துக்கும் சேர்த்த மாதிரி சுமார் 450 கோடி ரூபாசெலவில் [வெளி நாட்டில் உள்ள தம்புராஸ் இயக்கத்தினர் ரகசிய கணக்கு மூலம் பெற்ற வெளிநாட்டு நிதி இங்கு உள்ள துக்ளக் சோ, ஜெயா டிவி இயக்குனர் சுப்ரமணிய சுவாமி , ஆகிய மூவரும் அதி மு க வில் ஜெ , சசிகலா குடும்பம் ,மற்றும் ஜெயா டிவி யில் தலைமை பார்ட்னர்களை வைத்து ஆக இந்த ஏழு பேர் கொண்ட குழு இந்த 450 கோடி சதி திட்டத்துக்கு ஊடகத்தை மிக சரியாக பயன் படுத்தி வருகிறார்கள் இதில் தின தந்திக்கு மட்டும் 90 முதல் 100 கோடி வரை பொய் கருத்து கணிப்புக்கு செலவிட்டு உள்ளார்கள் .. !!!அவர்கள் பத்திரிகையிலும் தந்தி டிவி சானலிலும் நாற்பது இடங்களும் அதி மு க விற்கே என்ப்பது போல பொய் கணிப்பை வெளியிட்டு மோசம் செய்கிறார்கள் …!!! தின மலர் க்கு இதில் கணிசமான் பங்கு போய் சேர்ந்து உள்ளது. அவர்களும் அவர்கள் பங்குக்கு தந்தி பத்திரிக்கை போலவே பொய் செய்தி வெளியிடுகிறார்கள் …!!! இதை போல வட இந்தியாவிலும் மோடி க்கு வேண்டிய ஊடகங்களை வைத்து மேற் சொன்ன ஏழு பேர் குழு வில் சுப்ரமணிய சாமி மூலம் மூன்று டிவி [ஹிந்தி சேனல் ]மூலம் இங்கு அ.தி.மு.க தான் அதிக இடங்களை பிடிக்கும் என்று தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் பண்ணி வருகிறார்கள். இதுவும் ஒரு ஊக செய்தி தான் இதை மறுப்பவர்கள் அவர்கள் தரப்பு நியாயம் சொல்லுவார்கள். அதை போல தான் கனிமொழி தப்பே விவகாரமும் காஞ்சி சங்கராச்சாரியார் நீதிபதி ரகசிய உரையாடல் டேப் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்து உள்ளதே அப்பா அது பொய் தானே. அது போல ஊடகங்கள் நினைத்தால் எதையும் பொய்யாக திரிக்க முடியும். கனிமொழி டேப் விஷயமும் அது போல தான் இப்ப புரிகிறதா நான் எல்துவதில் தவறு உள்ளதா
mika arumaiyana pathivu.
Mர்.சவுக்கு, செம்படி சித்தர் பட்டத்தை நமது நண்பர் நெல்சனுக்கு தரவும். இவரும் நல்லாவே வக்காலத்து வாங்குகிறார்
அரசியலுக்கு அப்பாற்பட்ட நீதிபதிகளை பழிக்கிறார் கருணாநிதி, ஏழு பேர் விடுதலையை அரசியல் ஆக்குகிறார் . பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீருடன் பேட்டி கொடுத்தது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது . சவுக்காரே , தயவு செய்து இதனை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் .
இன்னும் சொல்லுவதானால் வழக்கு விசாரணையில் உள்ள போதே நாமாகவே ஊழல் நடந்ததை போல ஊர்ஜிதபடுத்தி கொண்டிருப்பது சரி தானா. நீதி மன்ற இறுதி தீர்ப்பு வரட்டும் அப்போது இந்த கட்டுரையின் தன்மை தெரிந்து விடும்
சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் சிறையில் இருந்தும் ஆ ராசா விடம் இருந்து எந்த உருப்பிடியான ஆதாரங்களை சிபிஐ யினால் பெற முடியவில்லை. மட்டுமல்ல ஆ ராசா தனது வருமான கணக்கு விபரத்தில் 55 லட்சம் நச்ட கணக்கு தானே காட்டி உள்ளார். மேலும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனையிலயும் எதையும் சிபிஐ பெறவில்லை. அவரது பினாமி என்று சந்தேகித்தவர்களிடம் பெற்றவையும் பலன் இல்லா ஆதாரங்கள் மேலும் நீதி மன்றம் இன்னும் கூடி வழக்கை நடத்தமுடியாத படிக்கு திணறி வருவதாக எண்ணம் வருகிறது. இன்னும் எந்த ஆதாரத்துக்காக waiting ? ஆக இந்த கட்டுரைப்படி கற்பனையாக வேண்டுமானால் வழக்கு ஜோடிக்கலாம் பொறுத்து இருந்து பார்ப்போம். ஆ ராசா வின் பேட்டியை பாருங்கள் https://twitter.com/THIRAVIDAKALAI/status/454232962393841665
இந்த ஸ்பெக்ரம் என்ற கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எவரும் வெளியிலிருந்து திட்டமிட்டு அடி தடி ஈட்டி கம்பு துப்பாக்கியுடன் உட் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அல்லவே.
பிரதம மந்திரி, மன்மோகன் சிங். தொலைத்தொடர்பு மந்திரி, ஆண்டிமுத்து ராசா. தமிழ்நாடு முதலமைச்சர், முத்துவேலு கருணாநிதி. அவரது மகள், கருணாநிதி கனிமொழி. அத்துடன் இந்தியாவின் பொருளாதாரத்தை தம்வசம் வைத்திருக்கும் பெருத்த முதலைகளும் கூட்டுச்சேர்ந்து இந்த மோசடியையும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல மோசடிகளையும் செய்திருக்கின்றனர். இந்தியா என்றால் அரசியல் செல்வாக்கும் சட்டத்திலுள்ள ஓட்டைகளும்தான் சகலத்தையும் தீர்மானம் செய்யும் நாடு என்பது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் இந்த வழக்கு திருடர்களை தண்டிக்கும் என்று எவராவது நினைத்தால் அது உலக அதிசயமாகவே இருக்கும்.
இன்னும் ஒன்றை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் சிபிஐ. மற்றும் உச்ச நீதிமன்றம் என்பது இயந்திரங்களால் உருவான ஒன்றல்ல அங்கே இருப்பவர்கள் அனைவரும் ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக சேவகம் செய்து வருபவர்கள் என்பத்துதான் இந்தியாவின் வரலாறு.
இந்த நிலையில் சவால் என்பதெல்லாம் எனது மலம் மணமற்றது என்பது பொலவே ஆகும்
அப்பிடி ஒரேஅடியாக பொத்தாம்பொது வாக எதையும் நினைத்து கொள்ள வேண்டாம் ராசா மீது சிபிஐ வழக்கு பின்னர் எதுக்கு போடப்பட்டதாம்,?? ஒன்றரை வருடங்கள் எதற்காக திகார் சிறையில் இருந்தாராம் ??கனிமொழியும் சிறையில் பல மாதங்கள் இருந்து உள்ளாரே. நீங்கள் சொல்லுகிற மாதிரி கருணாநிதி குடும்பம் உலக அளவுக்கு அதிகாரம் பெற்றது என்றால் ஏன் இவ்வளவு காலம் சிறை வாசம் இருக்க வேண்டும், வழக்கு போடும் போதே அதிகாரபலம் கொண்டு அதை போடாமல் செய்து இருப்பார்களே.கூட்டணியில் இருக்கும் போது அதை கூட அவர்களால் செய்ய முடிய வில்லை என்றால் அதற்கு பேர் ஒரு அதிகாரமா ? ஒரு விஷயம் கருத்து சொல்லுபவர்கள் சொல்லுவதிலிருந்து தெரிகிறது என்ன வென்றால் கருணாநிதியை பிடிக்கவில்லை என்றால் எதையாவது வாய்க்கு வந்ததை கருத்து போட்டு விட வேண்டும் என்கிற மனதில் வேறு எதை எதிபார்க்க முடியும். ஆகவே தான் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் . ராசா மீது போட்டிருப்பது பொய் வழக்காக கூட இருக்கலாம் நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம். குற்றம் சாட்டப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாக மாட்டார். ஜெ மீது 14 ஊழல் வழக்குகள் இருந்தன . இப்போது மீதம் இருப்பது 3 வழக்குகள் தான். அது போல தான் ராசா மீதும். நீதிமன்றம் சொல்லுவதை ஏற்க அவரும் தயாராகி கொண்டு தான் இருக்கிறாரர் ஜெ போல தகிடு தத்தங்களை செய்து வழக்கில் இருந்து தப்பிக்க வில்லையே. ஆகவே பொறுத்து இருந்து பார்ப்போம்
தரமான எழிமையாக புரிந்துகொல்லக்கூடியவகையிலான பதிவு இதை வெகு ஜன ஏழைமக்களுக்கு கொண்டுசேர்க்க இணையத்தை தாண்டி பிரபலப்படுத்த ஏதேனும் ஐடியா தங்களுக்கு உண்டா? அப்படி செய்தால் மகிழ்ச்சி
சாதிக் பாட்சா எப்படி 2G வழக்கில் கொலை செய்யபட்டார் இந்த அப்ப்ரோவர் பற்றி நிறைய செய்ய்திகளை எதிர் பார்கிறேன்