“ஒரு வீணாய்ப் போனவனின் வழக்கை விசாரிக்க நான் எனது விலை மதிக்க முடியாத 45 நிமிடங்களை செலவிட்டு விட்டேன். உங்களால் ஒரு இணைய தளத்தைக் கூட தடை செய்ய முடியாதா ? கூகிள் மற்றும் யாஹூவுக்கும், இந்த தளத்தை தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறேன்”
சவுக்கு தளத்தை மீண்டும் இரண்டாவது முறையாக தடை செய்யும் உத்தரவை பிறப்பித்த நீதிபதி சி.டி.செல்வம் நீதிமன்றத்தில் பேசிய வார்தைகளே இவை.
திமுக பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட நில அபகரிப்பு தொடர்பானவை உள்ளிட்ட பல்வேறு வழக்குக்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வது, அல்லது குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்வது என்று எப்படியெல்லாம் காப்பாற்ற முடியுமோ அப்படியெல்லாம் காப்பாற்றுபவர்தான் செல்வம்.
கலைஞர் தமிழினத் தலீவரின் மகன் மு.க.அழகிரியின் குலக்கொழுந்து, இந்தியாவின் சிசில் பி டிமிலி, துரை தயாநிதி கிரானைட் வழக்கில் எக்கு தப்பாக சிக்கிக்கொள்ள, முன் ஜாமீன் கோரி மறுக்கப்பட்ட பிறகும் அவர் போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஸ்காட்லண்ட் யார்டின் தமிழகப் பிரிவினர் ஏறத்தாழ ஒரு மாதம் தேடோ தேடென்று தேடுகின்றனர், ஆனால் பாவம் அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லையாம்.
இந்நிலையில் மீண்டும் ஒரு முன் ஜாமீன் மனு. அது நமது நீதியரசர் முன் தான் விசாரணைக்கு வருகிறது. முதல் முன் ஜாமீன்
மனு நிராகரிக்கப்பட்டும் இன்னமும் அந்த உத்திரவை மதிக்காமல் ஒளிந்திருந்து இப்போது என்னிடம் முன் ஜாமீன் கேட்கிறாயா, துடிக்கிறது மீசை, வெடிக்கிறது கோபம் என்று பொங்கி எழவில்லை. நம்மவர் மாறாக ரெண்டு நாள் போக்கு காட்டிவிட்டு இறுதியில் முன் ஜாமீன் அளித்து உத்திரவிடுகிறார். அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஒரு நாள் கூட போலீஸ் லாக் அப்பில் இல்லாமல் தப்பித்த வீராதி வீரர் துரை தயாநிதி. இது பற்றி ஊடகங்களில் கேள்வி எழுப்பப்படவில்லையே.. சவுக்கு பேசுகிறதே. அதுதான் கோபம் போலும் செல்வம் பெருமானாருக்கு.
திமுக வழக்கறிஞர்கள் ஆஜரானால், விவாதமே இல்லாமல் கேட்கும் உத்தரவுகளை பிறப்பிப்பார். அரசுத் தரப்பை ஒரு பேச்சுக்காக கூட என்ன ஏது என்று கேட்கமாட்டார். அவர் தனது திமுக விசுவாசத்துக்காக பிறப்பிக்கும் உத்தரவுகள் நாடறிந்தது. ஆனால், அவரை விமர்சனம் செய்பவர்கள் கூட, அவர் பணம் வாங்கிக் கொண்டு இப்படி உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டார் என்றே கூறுகிறார்கள். அவரிடம் உத்தரவுகளைப் பெறும் திமுக வழக்கறிஞர்கள் ஒரு முறை எழுந்து அவர் முன்னால் மை லார்ட் என்று சொல்லுவதற்கு 2 முதல் 5 லட்சம் வரை வாங்குகிறார்கள் என்பது செல்வத்துக்கு தெரியாதா ? அப்படி ஒரு தயாள குணம் படைத்தவரா என்ன செல்வம் ?
அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர் ஊழல் பேர்வழி அல்ல என்றே அடித்துக் கூறுகிறார்கள். ஆனால் ஒரு அஇஅதிமுக அமைச்சருக்கும் செல்வம் உதவியிருக்கிறாரே !!! அதற்கென்ன விளக்கம்?
ஜெயபால். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாகவே “ரவுடியாக ஃபார்ம்” ஆகி இருந்தவர். எந்தப் பஞ்சாயத்து என்றாலும் அண்ணன் தலைமையில்தான் நடக்கும். நாகப்பட்டினம் மாவட்ட ரவுடி பட்டியலில் இருந்தவர்.
01.11.2006 அன்று நாகப்பட்டினத்தில் ஒரு பஞ்சாயத்து நடக்கிறது. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின் படி, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் என்கிற ராஜமாணிக்கம். மீனவர். 1.11.2006ம் தேதி சக்திவேல் அக்கரைப்பேட்டை சமுதாய கூடத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் (சக்திவேல் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் பெட்ரோல் பங்க் ஜெயபால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அவர் அமைச்சராகவில்லை.), மோகன்தாஸ், கவிமணி ஆகிய 3 பேரும் சேர்ந்து சக்திவேலை பிடித்துக் கொள்ள குமார் என்பவர் அரிவாளால் சக்திவேலின் தலையில் வெட்டினார். மேலும் சிலரது வீட்டு ஜன்னல்கள் கல்வீசி அடித்து நொறுக்கப்பட்டன.
இதில் நாகை ஒன்றியக் குழு துணைத் தலைவர் திருவளர்ச்செல்வன் மனைவி கவிதா என்பவரின் மீது கல் பட்டு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த கவிதாவுக்கும், சக்திவேலுவுக்கும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையின் ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் 28 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு நாகை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. கால ஓட்டத்தில் இந்த வழக்கு அப்படியே நிலுவையில் இருந்த நிலையில், ரவுடி ஜெயபால் அமைச்சராகிறார்.
அமைச்சரானதும் வெளிநாட்டுக்கெல்லாம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமல்லவா ? அதற்கு பாஸ்போர்ட் வேண்டுமல்லவா ? பாஸ்போர்ட் எப்படி எடுப்பது ? மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அந்த விண்ணப்பத்தை காவல்துறையிடம் சரிப்பார்ப்பதற்காக அனுப்புவார்கள். காவல்துறையினர் விண்ணப்பதாரர் மீது, கிரிமினல் வழக்கு எதுவும் நிலுவையில் இருக்கிறதா என்பதை சரி பார்த்து சான்றிதழ் அளிப்பார்கள்.
கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்க தடை உள்ளது. இந்திய பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 6 (2) (f) என்ன கூறுகிறதென்றால்
(f) that proceedings in respect of an offence alleged to have been committed by the applicant are pending before a criminal court in India; etc.” (f) that proceedings in respect of an offence alleged to have been committed by the applicant are pending before a criminal court in India;
இவ்வாறாக கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் வாங்குவதற்கு இன்னொரு குறுக்கு வழி உள்ளது. அந்த வழி என்னவென்றால், அகில இந்தியப் பணி அதிகாரிகள் (All India Service Officers) ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், தங்களுக்கு நன்கு தெரிந்தவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை சான்றிதழ் வழங்கலாம். அப்படி உயர் அதிகாரிகளால் பரிந்துரை சான்றிதழ் வழங்கப்பட்டால், காவல்துறை சரிபார்ப்பு இன்றியே கடவுச்சீட்டு வழங்கப்படும்.
ரவுடி ஜெயபால் ஜெயலலிதாவின் அரசாங்கத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மீன்வளத் துறையின் செயலாளராக இருப்பவர் ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ். அந்த அதிகாரியிடம் எனக்கு சான்றிதழ் வழங்குங்கள் என்று ரவுடி ஜெயபால் கேட்டதும், அந்த அதிகாரியும் இயல்பாக நம்பி கையெழுத்து போடுகிறார்.
ரவுடி ஜெயபாலின் இருப்பிடமோ அக்கரைப்பேட்டை. ஆனால், அவர் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக டாடா நகர் என்ற இடத்தில் ஒதுக்கப்பட்ட மற்றொரு மீனவரின் வீட்டில் குடியிருப்பது போல முகவரியை அளித்தார். இது மட்டுமல்லாமல், ரவுடிகள் பட்டியலில் இருந்ததையும், தன் மீது கொலை முயற்சி வழக்கு இருந்ததையும் மறைத்து ககன் தீப் சிங் பேடியிடம் சான்றிதழ் பெற்றார் ரவுடி ஜெயபால்.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்கிறார். தனது பொதுநல வழக்கில் ரவுடிகள் பட்டியலில் இருக்கும் ஒருவர், தன் மீது கொலை முயற்சி வழக்கு இருப்பதை மறைத்து, அக்கரைப் பேட்டையில் குடியிருந்த இவர், எண் B 32 டாடா நகர், நாகப்பட்டினம் என்ற முகவரியில், சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட வீட்டில் குடியிருப்பதாக பொய்யான முகவரி அளித்து பாஸ்போர்ட் பெற்றிருப்பதாகவும், எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்கிறார்.
அந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மண்டல கடவுச் சீட்டு அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி, நாகப்பட்டினம் காவல்துறை ஆகியோருக்கு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கு விசாரணைக்கு வந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டது 29 ஜனவரி 2014.
இந்த பொதுநல வழக்கு இன்று வரை நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், கோடை விடுமுறையில் சென்னை உயர்நீதிமன்றம் மூடப்படும் நிலையில், வழக்கு ஒன்றை தாக்கல் செய்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால். அந்த வழக்கில், 24.04.2014 அன்று அவர் மீது நாகப்பட்டினத்தில் நிலுவையில் இருக்கும் கொலை முயற்சி வழக்கில் புகார் கொடுத்தவர், மற்றும் காயம் பட்டவர் ஆகிய இருவரும் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதிக் கொடுத்திருப்பதாகவும், அதன் படி தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்யுமாறும் அந்த மனுவில் கோருகிறார்.
இந்த வழக்கு நீதிநாயகன், நீதிக்கோமான், நீதி ஒளி, நீதியின் சிகரம், மற்றும் திமுக நீதிப்பிரிவு தலைவர் மற்றும் பொதுச்செயலாளரான சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு வரும் நாள் 25 ஏப்ரல் 2014.
வழக்கமாக இது போல எந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும், அரசுத் தரப்பை பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடும். அரசுத் தரப்பில், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்வார்கள். குறிப்பாக காவல்துறையின் ஜீப் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், வழக்கை ரத்து செய்யவே கூடாது என்று மனு தாக்கல் செய்வார்கள். அந்த பதில் மனுவின் அடிப்படையில், வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு, நீதிமன்றம் ரத்து செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்யும்.
ஆனால் இந்த வழக்கில் முதல் குற்றவாளி யார் ? தமிழகத்தின் மீன் வளத்துறை அமைச்சர் அல்லவா ? அவர் மீதான வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றெல்லாம் உத்தரவிடுவது நியாயமாகுமா ? அவர் என்ன சாதாரண ரவுடியா ? அமைச்சரான ரவுடி அல்லவா ?
உடனடியாக சற்றும் தாமதமின்றி நீதி வழங்கினார் சி.டி.செல்வம். வழக்கின் புகார்தாரர் தனக்கு வழக்கு நடத்த விருப்பமில்லை என்று வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். இதில் காயம்பட்டதாக கூறப்படும் கவிதாவும் அவ்வாறே வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். அது மட்டுமின்றி, அவருக்கு ஏற்பட்ட காயம், சிறு காயம்தான். ஆகையால், உடனடியாக இந்த வழக்கை ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டார் சி.டி.செல்வம். இதே போல எல்லா வழக்குகளையும் வேகமாக முடித்து வைக்கிறாரா சி.டி.செல்வம் என்றால் இல்லை.
2ஜி வழக்கில் தடயங்களை அழிக்க முயன்ற ஜாபர் சேட் மற்றும் கருணாநிதி மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் மார்ச் 15ம் தேதி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார் செல்வம். அந்த தீர்ப்பு நகல் கேட்டு முறையாக விண்ணப்பிக்கப்பட்டது. அவ்விண்ணப்பத்திற்கு ஏப்ரல் 30 வரை எவ்வித பதிலும் இல்லை, தீர்ப்பு நகல் கிடைத்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்பதையும் நோக்கலாம். தள்ளுபடி ஆகிவிட்டது, மேல் முறையீடும் செய்யமுடியாது என்ற நிலை. “இப்ப என்ன செய்வீங்க” என்று பொதுவாழ்வில் தூய்மை கோருவோரைக் கண்டு நகைப்பது போலத்தானிருக்கிறது இந்த அற்புத அணுகுமுறை..
அமைச்சர் ஜெயபாலுக்கு இப்படி ஒரு உத்தரவை போட்டு செல்வம் மறுவாழ்வு அளித்ததன் பின்னணி என்ன? தலைமை நீதிபதி அடங்கிய அமர்வின் முன்பாக, பொய்யான தகவல்கள் அளித்து, ஆள் மாறாட்டம் செய்த பின் பாஸ்போர்ட் பெற்றதற்காக தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பது செல்வத்துக்கு தெரியாதா ? நிச்சயம் தெரியும். அந்த வழக்கு குறித்த செய்திகள் விரிவாகவே ஊடகங்களில் வந்திருந்தன.
சி.டி.செல்வம் சவுக்கு மட்டும் படிப்பதில்லை. செய்தித்தாள்களும் படிப்பவர்தான். அவருக்கு இந்த செய்தி தெரியாமல் இருக்க வாயப்பு இல்லை. சரி அய்யா. ஒரு வாதத்துக்கு தெரியாது என்றே வைத்துக் கொள்வோம். இந்த வழக்கில் அவர் ஏன் இப்படி அவசரம் காட்ட வேண்டும் ? அரசுத் தரப்பின் பதில் என்ன என்று கூட கேட்காமல் ஏன் இவ்வளவு விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் ? வழக்கு தாக்கல் செய்த அன்றே மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டிய அவசரம் என்ன ? அவசியம் என்ன ? பெரும்பாலான வழக்குகளை கோடை விடுமுறைக்கு பிறகு தள்ளி வைக்கும் செல்வம் இந்த வழக்கை மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக விசாரித்தார் ?
ஏற்கனவே சவுக்கு தளத்தில் எழுதியது போல, சி.டி.செல்வத்தின் நீதிமன்றத்தில் மட்டும் ஒரு வழக்கை தாக்கல் செய்தால், அது விசாரணைக்கு வருவதற்கே குறைந்தது 10 நாட்களாகும். ஆனால், ரவுடி ஜெயபால், மன்னிக்கவும் அமைச்சர் ஜெயபால் 24 ஏப்ரலில் மனுதாரரோடு சமாதானம் ஆகிறார். எங்கே சமாதானம் ஆகிறார் ? நாகப்பட்டினத்தில்.
நாகப்பட்டினத்தில் சமாதானம் ஆனவர், அன்றே அதை வழக்காக தயார் செய்து நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு வந்து 24 ஏப்ரல் அன்றே தாக்கல் செய்தாரா ? செய்ய வாய்ப்பில்லையே ? ஏன் வாய்ப்பில்லை ?- அன்றுதான் தமிழகத்தில் மக்களவை தேர்தல் ! அன்று எப்படி வழக்கு தாக்கல் செய்திருக்க முடியும் ? இந்த மர்மங்களையெல்லாம் அவிழ்க்க வேண்டியவர் செல்வம்தான்.
புரட்சித் தலைவி அம்மா அவர்களே…. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் நோட் பண்ணுங்க. நீங்க வேர்வை சிந்தி, உடலை வருத்தி, ஹெலிகாப்டரில் பறந்து பறந்து, பாக்கவே சகிக்காத மக்களையெல்லாம் வேறு வழியில்லாம பாத்து, “செய்வீர்களா…. செய்வீர்களா” னு கேட்டு, அமைச்சர்களையெல்லாம் வெரட்டி தேர்தல் வேலையை செய்யச் சொன்னா, தேர்தல் அன்னைக்கு இந்த ரவுடி அமைச்சர் என்ன வேலை பண்ணிக்கிட்டு இருக்கார் பாத்தீங்களா ? இரட்டை இலைச் சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்கிறாங்களா, இல்லையான்னு சரி பாக்கறதை விட்டுட்டு, சமாதானம் பேசிக்கிட்டு இருந்திருக்கார் பாருங்க. எந்த லட்சணத்துல உங்க அமைச்சர்கள்லாம் தேர்தல் வேலை பாக்கறாங்க பாத்தீங்களா ? இதை மனசுல வச்சுக்கிட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுங்கம்மா…
சரி. செல்வம் சார். நீங்க விஷயத்துக்கு வாங்க. எதுக்கு உங்களுக்கு இப்படி அவசரம் ? அமைச்சர் ஜெயபால் அதிமுக அமைச்சர்னு தெரியுமா தெரியாதா ? இந்த வழக்குக்கு வழக்கமா உங்க முன்னாடி வந்து ஆர்டர் வாங்கும் சண்முகசுந்தரமும் வரலை. பி.எஸ்.ராமனும் வரலையே…. யாரோ துரைராஜ் னு ஒரு வக்கீல் பேரு போட்ருக்காங்களே…. ? அவர் வந்ததால் அப்படி ஒரு தீர்ப்பா? சொல்லுங்கய்யா… ஜட்ஜய்யா.. ? சொல்லுங்க
இதுபோக அரசு வழக்கறிஞர் எமலியாஸ் என்று ஒருவர் இருக்கிறார். அவர் செல்வத்தின் நீதிமன்றத்தில்தான் அரசு வழக்கறிஞராக இருக்கிறார். அவருடைய வேலை என்ன ? தலைமை நீதிபதி முன்பாக, ஒரு பாஸ்போர்ட் மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதை சொல்ல வேண்டுமா இல்லையா ? அவரும் அமைதியாக நீதிநாயகன் சொல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம் ? என்ன அர்த்தம்ங்கறேன்…. ?
சற்றே சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே. கலவரத்தில் ஈடுபட்டு, காவல்துறையின் வாகனத்தை அடித்து நொறுக்கிய ஒரு ரவுடி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்கிறார்கள். அவன்’ பெயரை ரவுடிகள் பட்டியலில் சேர்க்கிறார்கள். அந்த ரவுடி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்று அவராகிறார் ! அதுமட்டுமல்ல அமைச்சராகவும் ஆகி, தன் மீதுள்ள வழக்கை மறைத்து பாஸ்போர்ட் பெற்று, அது தொடர்பாக ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்தால், அவருக்கு ஓடோடியும் வந்து அனைத்து உதவிகளையும் செய்கிறது நீதிமன்றங்கள்.
இதையெல்லாம் அம்பலப்படுத்துகிறோம் என்பதால்தான் சவுக்கின் மீது காட்டமா? இப்படிப்பட்ட ஒரு ரவுடியைக் காப்பாற்றுவதைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்காகத்தான் சி.டி.செல்வம் சவுக்கை மூட முயற்சிக்கிறாரா?.
ஜெயபால் போன்ற ரவுடிகளும், செல்வம் போன்றவர்களும் சுகமாய் கேள்வி கேட்பாரின்றி வாழ, சவுக்கை மூடித்தானே தீர வேண்டும் ? நியாயம்தான் ஜட்ஜய்யா….
ஆனால் நீதி இன்னமும் மடிந்துவிடவில்லை இந்நாட்டில்.
நீதிவேண்டுமென்ற உணர்வும் கூட மை லார்ட் !!!
Savukkin pani thodara en vaazhthukal..
மொத்தத்துல அவன் நினைத்ததை சாதித்து விட்டானே ? அதுதானே உண்மை . savukku.net இருந்தது இப்போ savukku.in . ஏதோ ஒரு மாற்றம் .
சில தோல்விகளை ஒத்து கொள்ளுவது தான் வீரனுக்கு அழகு
வெட்டியான்
Ivaroda mudivugal nerungum velai vandhuvittadhu
So, It is difficult and hard to get the justice for the common and poor people of our nation from the court. What is the Way?. Are we in Republic Country?
இவர் மானாட மாயிலாட நிகழ்ச்சிக்கு ஜர்ஜா இருக்ககூட லாயக்கில்ல பேச்சபாரு…………”நான் எனது விலை மதிக்க முடியாத 45 நிமிடங்களை செலவிட்டு விட்டேன்” – டுபாகூர்
100 % உண்மை
I know this Emilia’s personally. He is from chinnathurai fisherman village in kanyakumari dist.
By birth he was from very poor family, struggled in his early ages to survive, but his dad worked hard and made him study law. When he was a student he was in DYFI part of CPM, after becoming as lawyer he joined AIADMK praising JJ. In one month he was appointed as PP In kuzhithurai court. No wonder he got corrupt and he will go any extend to get his things done, don’t even hesitate to eat someone’s shit to please them.
His wife Maya is a greedy person, maya and her dad has many criminal cases on them. Emilia’s will bribe all judges to make judgement in favor to them.
Emilia’s recommended his brother in law Maya’s brother as next PP. They have snatched land from several people and through bribe they made the judgement on their behalf.
These stories happened back in 1998. No wonder how he is in high court.
High court seems to be the place for all thieves.
Let me know if you need more information about Emilia’s , maya & Stalin corruptions.
Mail id is newsavukku@gmail.com. Any information is welcome brother.
நிதிபதி சிடி செல்வத்தை சட்டப்படி கிழி கிழி என்று கிழித்தெடுக்கும் திரு. வாரண்ட் பாலா அவர்கள், இந்த சுட்டியை படியுங்கள்.
http://www.neethiyaithedy.org/?p=1248
படித்து பரப்புங்கள்…. பகிருங்கள்…..
Friends,
I must thank from my heart to folks like Savukku for exposing the corrupt Judges including this CTS.
This case itself is a classic example of how corrupt and blind the CTS is. Otherwise who in the right mind can give relief to person like Jeyapaul despite the fact. What to do, that is how ill-fate of TamilNadu political leadership has been.
Unless we start nailing the corrupt judges by writing comments, spreading truths ( http://indiancorruptjudges.com/ ) on net and among public, this ugliness will continue and we and our future generation will suffer.
it is wrong that ‘Sattaththil ulla Ottaigal’, from the reality, ‘Ottaiyin vilimbil thaan sattangal ottikkondullana’ is the correct one.
Otherwise how the corrupt lawyers and judges can defy the common sense and work towards to get the order like this to help the rowdy minister??
same across India. This should not deter as from fighting. So far i have spread awareness to 50 folks about savukku and various others site about corrupt persons, including Judiciary.
If each reader of this savukku does the same and whenever savukku team appeal for help, we should help them. that is the good starting point
Nenjarndha Nandri to Savukku team.
Ippadi ellam nadakkaratha paarthuttu thaan velinaadukku namma aaluga athigama oodi poraangannu ninaikiren. India vula manusanukku mathipe illa ye.
Selvam, unga peran pethi ellorum kandippa ungala kaarthithaan thuppu vaarkal.
Dear Savukku, don’t worry about folks like ‘appavi_tamilan’ (pls remove tamilan name, when u put discouraging comments’.
You are on right track and doing this courageous noble service to this country. Not only your children/grand-children, I have been taking backup of your every article and will show to my new born son when he grows up.
Infact i want to name my son as ‘sankar’ in salute of your service.
So keep up the good work. And let us know if you need any financial/other help to fight against the corrupt/criminals.
Kindly float one paypal or things like that for ‘Donation to Savukku for fight against the corrupt/criminal from the society’.
Mr. Selvam itha neenga padippeengala illianu theriyathu..Needhipathinu sollittu oru uyar pathavila irunthuttu Makkal sevai seyya vantha Thiruvaalar karunanidhikkum mattra arasiyalvaathigalukkum koona kumpidu podrathukku nalla maada naalu maadu vaangi Maanathoda Vazhalam..
This is democracy or what . Politicians and judge if they do like that what the common people expect from these kind of judges.
Lordship Selvam, Shame… Shame… Puppy Shame…
Thanks Savukku. If savukku is not there, these news won’t come out. Hats off to you. One thing clear is, it is easy to pay money to judge and get the favorable judgement.
Nice post hats off savukku.
who is calling this guy lordship….he should be called a pimp
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு. (வீணாய்ப் போன அநிதிபதி)
அருமை…அருமை….இந்த நீதிபதியின் பெருமைகளை அழகான கட்டுரையாக வெளியிட்டுள்ளீர்கள்.
கொடுமை…கொடுமை…இந்த கன்றாவியெல்லாம் பார்க்ககூடாது என்பதால்தான் நீதி தேவதை கண்ணை கட்டி கொண்டு உள்ளதோ? நான் படிக்கும் போது என்னுடைய ஆசிரியர் வேறு மாதிரி காரணம் சொன்னாரே?
Really Excellent Post By Savukku
மாநாடமைர் ஆட நிகழ்ச்சிக்கு தீர்ப்புசொல்ல தகுதி இல்லாத CT செளுவம் நீதி தொரைக்கே களங்கம்
nala judge
Another excellent post by Savukku.
Really, People believe in courts as their last resort for justice. In villages, many semi-literate / illiterate poor people believe and pray Judges as Gods while seeking justice.
But, if Judges of the court fail in their actions, what will they do?
CT Selvam dowser kili killinu kiliyuthu!!:)