உடன்பிறப்பே,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது மூன்றாவது முறையாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பைநடத்தி வரும் நேரத்தில், அவர் மீது கடந்த காலத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று, அவற்றில் விசாரணை நீதிமன்றத்தில் சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்ட போதிலும், பின்னர் மேல் முறையீடு செய்து அதன் மூலம் தப்பித்துக் கொண்டிருக்கிறார். எல்லா வகையிலும் எவ்வளவோ முயன்றும், தப்பிக்க முடியாத சில வழக்குகளை எப்படியோ வாய்தாக்களுக்கு மேல் வரலாறு கண்டிராத வகையில், “கின்னஸ்”ஆவணத்திலே இடம் பிடிக்கக்கூடிய வகையில் வாய்தாக்களை வாங்கி, தீர்ப்புகளை தள்ளிப் போட்டு வருகிறார்! அத்தகைய வழக்குகளில் மிக முக்கியமான ஒன்றுதான் பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு.
இந்த வழக்கு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? எத்தனை வாய்தாக்கள் வாங்கப்பட்டன? என்ற விவரங்களைத் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் ஊழல் செய்தவர்கள் மீதான வழக்குகள் எல்லாம் ஒரு சில மாதங்களிலேயே முடிவுற்று, அவர்கள் தண்டனை அனுபவிக்கும் இந்நாளில், முறைகேடு களைச் செய்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை குவித்துள்ள ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சராகவே இருந்து கொண்டு, எப்படியெல்லாம் நீதியை வளைக்கவும் நெரிக்கவும் முயற்சி செய்கிறார் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
அதற்காகத்தான் இந்த வழக்கிலும், வேறு சில வழக்குகளிலும் இவர் எப்படியெல்லாம் நீதி பரிபாலன நெறிமுறைகளைச் சவாலுக்கு அழைத்திடும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார் என்பதைத் தொடர்ந்து விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெரும் பான்மையாக இருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது என்ற குற்றச்சாட்டைச் சுமத்தி மத்திய அரசினால் கலைக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதன் முறையாக தமிழகத் தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியிட்ட விவரப்படி, ஜெயலலிதா முதல் முறையாக, முதல் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்து மதிப்பு அதாவது 1-7-1991 அன்றைய தேதியில் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய்.
1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு மே திங்கள் வரையில் ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதலமைச்சர். ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை ஐந்தாண்டுகள் அனுபவித்து முடிந்த பிறகு 30-4-1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாயாகும்.
ஜெயலலிதா முதலமைச்சராக பதவியில் இருந்த போதே, தமிழகத்தில் பெருமளவுக்கு ஊழல்கள் பல்கிப் பெருகி நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி, 15-4-1995 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அப்போது தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி அவர்களிடம் 539 பக்கங்கள் கொண்ட ஊழல் குற்றப்பட்டியலை, நானும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும், மற்றும் முரசொலி மாறன், நாஞ்சிலார், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், என்.வி.என். சோமு, ரகுமான்கான் ஆகியோரும் சென்று கொடுத்தோம்.
அந்தக் குற்றச்சாட்டுப் பட்டியலில் மொத்தம் 28 ஊழல்களை வரிசைப்படுத்தியிருந்தோம். அதில் 25வது குற்றச்சாட்டுதான், ஜெயலலிதா வருமானத்தை மீறி அதிகச் சொத்து சேர்த்தது பற்றியதாகும். அதில், “தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும், அவரது வீட்டில், அவருடன் வசிக்கும் அவருடைய தொழில் கூட்டாளிகளான சசிகலாவும், அவரது சகோதரர்களும் தமிழகம் முழுவதும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்கி மலையெனக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதா முதல்வரானதிலிருந்து அவருக்கு நெருக்கமானவர்கள் சொத்துக்களை வாங்குவதில் ஈடுபட்டிருக்கும் வகையும் வேகமும் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதுடன் எப்படி இவர்களால் இப்படிச் செய்ய
முடிகிறது என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று தொடங்கி 15-4-1995 தேதியிட்ட “இந்தியா டுடே”” இதழில் வெளிவந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு விவரங்களை யெல்லாம் தெரிவித்திருந்தோம். இந்தச் செய்தி தமிழ்நாட்டு மக்களும் இந்திய மக்களும் நன்கறிந்த செய்திதான். நாமாக இட்டுக் கட்டிப் பரப்பிய செய்தியல்ல.
நமக்கு முன்பே, சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தமிழக ஆளுநரிடம் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் போடுவதற்கான அனுமதி கோரியிருந்ததால், ஆளுநர் அதற்கான அனுமதியை சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு கடிதத்தின் மூலம் வழங்கினார். இதன் காரணமாக சுப்பிரமணிய சுவாமி மீது கோபம் கொண்ட அ.தி.மு.க. வினர் 6-4-1995 அன்று சென்னையில் நடைபெற்ற ஜனதா கட்சிப் பொதுக் கூட்டத்தில் அவர் மீதும், சந்திரலேகா மீதும் கற்களையும், செருப்புகளையும் வீசி ரகளை செய்தனர். வழக்கு தொடுப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கினார் என்பதற்காக 27-4-1995 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில், ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களைத் திரும்பப் பெறக் கோரும் தீர்மானம் ஒன்றையே அ.தி.மு.க.வினர் நிறைவேற்றினர்.
டாக்டர் சுப்பிரமணிய சுவாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 1996 ஜூன் 14ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக் கூறியிருந்தார். அதையேற்றுக் கொண்ட நீதிமன்றம்
விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது. அதை அப்போது போலீஸ் அதிகாரியாக இருந்த லத்திகா சரண், புகார் மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் அதிகாரி வி.சி. பெருமாளுக்கு 26.6.1996 அன்று உத்தரவிட்டார். விசாரணையைத் தடுத்திட ஜெயலலிதா உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, விசாரணை சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், பின்னர் தடையை நீக்கி விசாரணையைத் தொடர உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கிலே ஜெயலலிதா, பிறகு உயர்நீதி மன்றத்திலே தனக்கு முன் ஜாமீன் கோரினார். அதனை நிராகரித்து, உயர்நீதிமன்றம் ஜெயலலிதா மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் வழக்கிற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்றும், அரசியல் பகை காரணமாக இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல என்றும் தீர்ப்பு கூறியது.
மூத்த போலீஸ் அதிகாரி திரு.வி.சி.பெருமாள் முதல் நிலை விசாரணையை முடித்து, குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான பூர்வாங்க ஆதாரங்கள் இருந்ததால், விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும், விரிவான விசாரணை அதிகாரியாக திரு. நல்லம்ம நாயுடு அவர்களை நியமனம் செய்தும் 7-9-1996 அன்று உத்தரவிட்டார். அதன்படி 18-9-1996 அன்று முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தார். தொடர் விசாரணையை மேற்கொள்ள திரு.நல்லம்ம நாயுடுவுக்கு உதவியாக, 16 காவல் துறை இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதோடு, அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். ஜெயலலிதா தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாங்கிய அசையா சொத்துக்களின் விவரங்களை நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக 16-10-1996 அன்று முதன்மை அமர்வு நீதிமன்றத்திடம் ஒப்புதலும் பெறப்பட்டது. 6-12-1996 அன்று ஜெயலலிதாவின் சென்னை வீட்டையும், ஐதராபாத் திராட்சை தோட்டத்தையும் நேரில் சோதனையிடுவதற்கான அனுமதியினையும் நீதிமன்றத்திடம் பெறப்பட்டு, அவ்வாறே சோதனைகளும் நடைபெற்றன. அந்த நேரத்தில் ஜெயலலிதா வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தார். விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு, ஜெயலலிதாவைச் சிறையில் சந்தித்து, அவரது வீட்டைச் சோதனை செய்யும்போது, ஜெயலலிதா தரப்பிலே பாஸ்கரன், விஜயன் ஆகிய இருவரையும் தனது தரப்புப் பிரதிநிதிகளாக நியமனம் செய்யவும், வீட்டைச் சோதனையிடவும் ஒப்புதல் பெற்றார். அவ்வாறே 7-12-1996 முதல் 12-12-1996 வரை ஜெயலலிதாவின் வீடும், ஐதராபாத் திராட்சை தோட்டமும் காவல் துறையினரால் சோதனையிடப்பட்டன. சோதனையின் போது வீட்டில் இருந்த தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருள்கள். ஆவணங்கள் மற்றும் ரொக்கத் தொகை கைப்பற்றப்பட்டு வெள்ளிப் பொருள்களைத் தவிர மற்றவை நீதிமன்றப் பொறுப்பிலே ஒப்படைக்கப்பட்டன. (வெள்ளிப் பொருள்கள் வீட்டிலே வைக்கப்பட்டு பாஸ்கரன் என்பவர் பொறுப்பிலே விடப்பட்டன) விசாரணை அறிக்கை கொடுத்த பின், 1997 ஜூன் 4ஆம் தேதி சென்னை தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
மறுநாள், 5-6-1997 அன்று வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சம்மன்கள் அனுப்பப்பட்டன. 1997 அக்டோபர் 21ஆம் தேதியன்று 2, 3 மற்றும் நான்காம் குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து நான்கு குற்றவாளிகள் மீதும் தனி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில் 39 சாட்சிகளைத் தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதையும், தனி நீதிபதி நியமனம் செய்யப்பட்டதையும் எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றியே விசாரணைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதால் ஜெயலலிதா தரப்பினரின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீடும் 14-5-1999 அன்று நீதிபதிகள் ஜி.டி.நானாவதி, எஸ்.பி.குர்துக்கர் ஆகியோரால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா தரப்பினர் மீதான விசாரணைக்குத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதும், தனி நீதிபதி நியமனம் செய்யப்பட்டதும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி சரியானது என்பது நிலை நாட்டப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் 2001 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வழக்கில் முதல் குற்றவாளி யாகச் சேர்க்கப்பட்டுள்ளவர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்ட பிறகு, இந்த வழக்கு விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. ஜெயலலிதா பதவியேற்றதே செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி, 21-9-2001 அன்று ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து இறங்கினார். ஆனால் அவர் மீதான வேறு சில குற்றச்சாட்டுகள் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மேல் முறையீட்டில் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், ஜெயலலிதா மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2-3-2002இல் முதலமைச் சராக பதவியேற்றார். ஜெயலலிதா மற்றும் மூன்று பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னையில், முதலாவது தனி நீதிமன்றத்தில், அ.தி.மு.க. ஆட்சியில், நீதிபதி ஆர்.ராஜமாணிக்கம் அவர்கள் முன்பு மீண்டும் 2002ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. அப்போது சென்னையில் நடந்து வந்த விசாரணையில் ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து, 2002 நவம்பர் முதல் 2003 பிப்ரவரி 21ஆம் தேதி வரை மறு விசாரணை நடந்தது. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அந்தச் சாட்சிகள் ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்திற்கு மாற்றாக மறு சாட்சியம் அளித்தனர். அதைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313 விதியின்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல், நீதிமன்ற உத்தரவின்படி அவர்களிடம் நேரில் சென்று கேள்வி கேட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. நடைமுறைக்கு மாறான இந்த முறைகேட்டினை எதிர்த்து ஆட்சேபித் திருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர், அ.தி.மு.க. ஆட்சியினால் நியமனம் செய்யப்பட்டவர் என்ற காரணத்தால், எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இவற்றுக்கிடையேதான் இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யக்கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற ஏதுவாக இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும், இவ்வழக்கில் ஏற்கனவே 250 சாட்சிகள் விசாரிக்கப் பட்டு 2000ஆம் ஆண்டிலேயே அரசுத் தரப்பு விசாரணை முடிந்துவிட்ட நிலையில் ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் சாட்சிகளிடம் மறு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இந்த மறுவிசாரணையின் போது பல்வேறு சாட்சிகளும் தாங்கள் ஏற்கனவே அளித்த சாட்சியத்தை மாற்றிக் கூறி வருகின்றனர் என்றும், லஞ்ச ஒழிப்புத் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விசாரணை அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும், விசாரணை அதிகாரிகள் சாட்சியங்களை கலைத்து ஜெயலலிதாவையும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் விடுவிக்க முயற்சிக்கக் கூடும் என்பதால் தமிழகத்திற்கு வெளியே சுயேச்சையான ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். பேராசிரியர் அவர்களின் கோரிக்கையினை ஏற்று, உச்ச நீதிமன்றம், சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணைக்கு 2003 பிப்ரவரி 28ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. இம்மனுவை விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்து 2003 நவம்பர் 18ஆம் தேதி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வரியவா அவர்களும், எச்.கே. சீமா அவர்களும் அளித்த அந்தத் தீர்ப்பு மிக முக்கியமானது. அதன் முக்கிய பகுதிகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அந்தத் தீர்ப்பின் தொடக்கத்திலேயே நீதிபதிகள், “ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் மனுதாரரான (பேராசிரியர்) அரசியல் எதிரி என்ற முறையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த வாதம் ஏற்புடையதல்ல.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அவைக்குள்ளும், அவைக்கு வெளியேயும் முக்கியமானதோர் இடம் உண்டு. ஆட்சியிலே இருப்பவர்களைக் கண்காணிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்குண்டு. ஆட்சியிலே உள்ள கட்சியின் தவறான செயல்முறைகளையும், நடவடிக்கைகளை யும் எதிர்ப்பதுதான் அவர்களுடைய முக்கியமான ஆயுதமாகும். பொதுவாக மக்களுடைய குறைகளை எதிரொலிக்கக் கூடியவர்களே இவர்கள்தான். அந்த நிலையில் எதிர்க்கட்சி என்ற முறையில் மனுதாரர் (பேராசிரியர்) உண்மையில் மாநிலத்தின் அரசு நிர்வாகத்திலும், நீதி நிர்வாகத்திலும் அக்கறை உள்ளவராவார். அப்படிப்பட்டவரிடமிருந்து தாக்கல் செய்யப்படுகின்ற மனு, அரசியல் காரணத்திற்காக போடப்பட்ட ஒன்று என்று கூறி அலட்சியப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இந்த வழக்கில் மனுதாரர் (பேராசிரியர்) பல நியாயமானதும், ஏற்கத்தக்கதுமான காரணங் களை அதாவது இதிலே நீதி மறுக்கத்தக்க வகையிலும், ஒரு தலைப்பட்சமாகவும் வழங்கக்கூடிய நிலை ஏற்படலாம் என்று வலுவான ஐயங்களை எழுப்பியிருப்பதை எங்கள் கருத்தின் அடிப்படையில் ஏற்கிறோம்” என்று உச்ச நீதிமன்றம் 18-11-2003 அன்று தனது தீர்ப்பில் தெரிவித்தது.
அன்புள்ள,
மு.க.
(தொடரும்)
thayalu entha oru varumanamum illamal ivvalvu soththu serththathu eppadi?…..
கருணாநிதி குடும்பமும் பரிசுத்தவான்போல “சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர்கதை” என்று கடிதம் எழுத எப்படித்தான் முடிகிறது?
2ஜி வழக்கில் சிபிஐ விசாரணையே நேர்மையாக நடைபெறவில்லை
2ஜி வழக்கில் குடும்பத்தைக் காப்பாற்ற கருணாநிதி செய்த மிக முக்கியமான தந்திரம் வியக்க வைக்கக் கூடியது. 2ஜி விசாரணையை சிபிஐ தொடங்கியதும், ராசா கைது செய்யப்பட்டார். அப்போது கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் எப்படியும் அம்பலமாகும் என்பது கருணாநிதிக்கு தெரியும். காங்கிரஸ் கட்சி கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதி, குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் வேண்டும். ஆனால் கைது இருக்காது என்பதே. அதனால், சாட்சிகளை விசாரணை செய்கையில் பெயர் குறிப்பிடாமல், “மிஸ் கருணாநிதி” என்று குறிப்பிடப்பட்டது. அது தயாளு அம்மாளுக்கும், கனிமொழிக்கும் பொருந்தும் அல்லவா ? நேராக வந்து, கலைஞர் டிவியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியபோதுதான், கலைஞர் டிவியின் தலைமை நிதி அதிகாரி என்ற முறையில் அமிர்தத்தை விசாரணை செய்கிறார்கள். அதிகாரிகள் கேள்வியை தொடங்கியதுமே, அமிர்தம் நெஞ்சை பிடித்துக் கொள்கிறார். உடனே சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நிறுத்துகிறார்கள். அந்த இடத்தில் இருந்த சரத் குமாருக்கு கருணாநிதியிடமிருந்து போன் வருகிறது. “யோவ்… அமிர்தத்துக்கு நெஞ்சு வலிய்யா.. நீ ஒத்துக்க. நான் டெல்லியில பேசிட்றேன். ஒன்னும் நடக்காது” என்று கருணாநிதி கூறியதும், சரத் குமார் அப்படியே ஒப்புக் கொண்டு விடுகிறார். சிபிஐ சரத்குமாரை குற்றவாளியாக சேர்க்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோடு ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தத்தின்படி, அமிர்தம் சாட்சியாக சேர்க்கப்படுகிறார். அதே போல, 60 சதவிகித பங்குகளை வைத்திருந்த தயாளு அம்மாள் குற்றவாளியாக சேர்க்கப்படாமல் சாட்சியாக சேர்க்கப்படுகிறார். கனிமொழி குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார்.
கருணா குடும்பத்தின் சொத்து என்று இங்கு காட்டப்பட்டிருக்கும் பட்டியலின்படி முத்துவேல் கருணா உழைத்து சம்பாதித்த சொத்துக்களா என்பதையும் முக வெளிப்படுத்தினால் நன்று.
///ஜெயலலிதா முதல் முறையாக, முதல் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்து மதிப்பு அதாவது 1-7-1991 அன்றைய தேதியில் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். 30-4-1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாயாகும். ///
அந்த புள்ளிவிபரம் சரியானதாக இருந்தாலும் கருணாநிதி ஜெயலலிதாவின் ஊழல் பற்றி விமர்சனம் செய்ய ஒரி ஊசி முனையளவாகுதல் தகுதியுள்ள பிறவியா என்ற கேள்வி மலைபோல மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
கருணாநிதியின் இந்த கடிதத்தை வாசிக்கும் அப்பாவித்தனமான ஒரு சிலர் கருணாநிதி ஒரு பரிசுத்தமான பிறவி என்று எண்ணவும் தோன்றும். அப்படி ஒரு தோற்றம் யாரிடமாவது கருக்கட்டுமாக இருந்தால் அது பேராபத்தாக முடியும், எனவே கருணாநிதி இந்த கடிதத்தை வெளியிடுவதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார், உண்மையில் கருணா உத்தமர்தானா, இந்தக்கடிதம் சமூகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததா அல்லது அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடாக மக்களை திசை திருப்ப பயன்படுமா? என்ற விடயத்தையும் கருணாநிதியின் அடிப்படை நோக்கத்தையும் பகிரங்கப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு சவுக்கு தளத்துக்கு உண்டு என்பதை பணிவுடன் தெரியப்படுத்துகின்றேன்.
கீழே கருணாநிதி குடும்பத்தின் சொத்துக்கள் விபரம் தரப்படுகின்றது. அந்த விபரம் பல ஊடகங்களில் வெளியானதாக இருந்தாலும் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சமன் செய்து பார்க்க அந்த விபரம் மக்களுக்கு நிறையவே உதவும்.
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 4 கோடி.
21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு – 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு –
3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்’ மதிப்பு – தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
இவ்வளவு தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி… இதை படித்துக் கொண்டிருக்கும்போதே திறந்த வாயை மூடவில்லை…ஒரு தலைமுறைக்கு சொத்து சேர்த்தால் கூட ஒத்துகொள்ளலாம்…ஆனால் 10/50/100 தலைமுறைக்கு சொத்து சேற்பவனை, எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்து நடுரோட்டில் அம்மணமாக ஓட விடனும்….நடக்குமா??
கிராமத்து பண்ணை ஒன்றில் வேலைபார்த்த தந்தரசாலியான சுயநலவாதி பண்ணையாளன் ஒருவன் தான் வேலை பார்த்த பண்ணையில் பழுத்த வாழைப்பழங்களை சந்தையில் விற்று பணத்தை எடுத்துக்கொண்டு, எஜமானன் வீட்டுக்கென்று சில பழங்களை தலைச்சுமையாக சுமந்து எஜமான் வீட்டுக்கு கொண்டு சென்று பணத்தையும் பழங்களையும் கொடுத்து தான் ஒரு நேர்மையான கடின உடல் உழைப்பாளி போல் வெளிக்காட்டி வயிறு வளர்த்து வந்தான். பண்ணையாளன் தலைச்சுமையாக எஜமான் வீட்டிற்கு பழங்களை சுமந்து வரும்போது வழியில் நிற்கும் தனது குடும்பத்தினருக்கு ஒருபகுதி பழங்களை கொடுத்து திருட்டு வேலை செய்வதும் பழம் விற்ற பணத்தில் கையாடல் செய்வதும், எஜமானனுக்கு தெரிய வந்தது
வழியில் வைத்து பழங்களை தனது குடும்பத்தினருக்கு பிடுங்கிக்கொடுப்பதாலும் தலைச்சுமையில் கொண்டு சென்று வழியில் இளைப்பாறலுக்காக பழச்சுமையை இறக்கி ஏற்றி கொண்டு செல்வதால் சென்று சேரும் மீதிப் பழங்கள் நசுங்கி கசங்கி தரமற்று இருந்தது. எஜமானன் எப்படி இதை நிறுத்துவது என்று சிந்தித்தான் பண்ணையாளனுக்கு பாடம் புகட்ட எண்ணி வெளியில் சொல்லிக்கொள்ளாமல் பண்ணையாளனை தந்தரமாக ஏதோ காரணங்களை காட்டி வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டான். அதன்பிற்பாடு பண்ணையில் வேலைக்கு சேர்ந்த இன்னொருவன் விற்ற பழங்களுக்கு சரியான ரசீதுகளுடன் வீட்டுக்கான பழங்களை ஒரு வண்டியில் பாதுகாப்பாக மூடி கட்டி எஜமான் வீட்டுக்கு அனுப்பி வைத்தான், எஜமானுக்கு அது திருப்தியாக இருந்தது. பழங்கள் கசங்காமல் நசுங்காமல் எஜமானன் வீடு சென்று சேர்ந்தது.
ஆனால் திருட்டு பண்ணையாளனுக்கு நடந்த விபரம் புரிந்தாலும் வெளியாட்கள் தனது தில்லுமுல்லுகளை அறிந்திருக்கமாட்டார்கள் என்று தனதுபாட்டுக்கு தற்பெருமை பேசி வந்தான். ஆனால் கேட்பவர்கள் நமட்டு சிரிப்புடன் அவனை தாண்டி சென்றுகொண்டிருந்தனர்.