உடன்பிறப்பே,
பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களின் மனுவின் மீது உச்ச நீதிமன்றம் 2003ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின் முற்பகுதியை நேற்றைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அந்தத் தீர்ப்பின் அடுத்தடுத்த பகுதிகள் வருமாறு :- “அரசு அதிகாரியாக இருந்த திரு. எஸ்.எஸ். ஜவகர் ஐ.ஏ.எஸ்., முன்னாள் துணைச் செயலாளர், ஜனவரி 2003இல் அரசுத் தரப்பு சாட்சியாக சாட்சியம் அளித் துள்ளார். இவரே 2000ஆம் ஆண்டில் அரசுத் தரப்பு சாட்சியாக சாட்சியம் அளித்திருக்கிறார். 2003இல் குற்றஞ்சாட்டப்பட்டவரின் தூண்டுதலின் பேரில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, 2000ஆம் ஆண்டு அவர் அளித்த முதல் சாட்சியம் கட்டாயத்தின் பேரில் கூறப்பட்டது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த சாட்சி அடித்த பல்டி குறித்து அரசு வழக்கறிஞர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபோலவே என்.வி. பாலாஜி என்ற குற்றஞ்சாட்டப்பட்ட வர்களின் ஆடிட்டர் 2000ஆம் ஆண்டில் அளித்த சாட்சியத்திற்கும் மீண்டும் திரும்ப அழைத்த போது அளித்த சாட்சியத்திற்கும் இருந்த மாறுபாடுகள் குறித்து அரசு வழக்கறிஞர் கண்டுகொள்ளவே இல்லை”.
“இவர்களைப் போல மேலும் பல சாட்சிகள் மீண்டும் சாட்சியம் என்ற பெயரால் அழைக்கப்பட்ட போது, அவர்கள் எல்லாம் தாங்கள் முதலில் அளித்த சாட்சியம் கட்டாயத்தின் பேரில் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பல்டி அடித்த சாட்சிகள் என்று அரசு வழக்கறிஞர் சேர்க்கவில்லை””. “எந்தெந்த சாட்சிகள் இவ்வாறு மாறினார்கள் என்பதற்கு சில உதாரணங்களைத் தந்துள்ளோம். இதிலிருந்து குற்றஞ் சாட்டப்பட்டவர்களுடன்எந்த அளவிற்கு அரசுத் தரப்பினர் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது”
“மனுதாரரின் (பேராசிரியர்) வழக்கறிஞர் திரு. அந்த்யார்ஜுனா எங்கள் கவனத்திற்கு ஒன்றைக் கொண்டு வந்தார். முதல் குற்றவாளியிடம் (ஜெயலலிதா) விதி 313இன் படி நடத்தப்பட்ட விசாரணை குறித்து தெரிவித்து, சட்ட விதிமுறை களுக்கு அப்பாற்பட்ட முறையிலே அது நடந்ததாகக் கூறியிருக்கிறார். முதல் குற்றவாளி 24-2-2003 அன்று தாக்கல் செய்த மனுவில் அவர், தான் நேரில் ஆஜராகாமலிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவருடைய வழக்கறிஞர் மூலமாக கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவின் பாரா 5இல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையாக ஒரு வாரம் தேர்தல் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். சுரம் காரணமாக படுக்கையில் இருப்பதால் மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி பணித்திருக்கிறார்கள். எனவே 313வது விதியின்படி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை உள்ளது. மனுவின் 6வது பாராவில், அவர் இந்த வேண்டுகோளை தான் வகிக்கும் பதவி காரணமாகக் கொடுக்கவில்லை என்றும், உடல் நிலை காரணமாகவே தருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அரசு வழக்கறிஞர் இந்த மனு மீது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்றெல்லாம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து கர்நாடக மாநில உயர்நீதி மன்றத்திற்கு மாற்றிப் பிறப்பித்த தீர்ப்பில் தொடர்ந்து குறிப்பிட்ட முக்கிய கருத்துகள் :- The Supreme Court Judges said that “it is undisputed that witnesses have been recalled. Many of them had earlier been cross examined. We were informed that witnesses were recalled as senior counsel for Ms. Jayalalithaa had been busy attending to some other case filed against her when they were first examined.
(இந்த வழக்கில் 76 சாட்சிகள் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டவர்கள். ஏன் அவர்களை மீண்டும் அழைத்தீர்கள் என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞருக்கு அவர் மீதுள்ள வேறு பல வழக்குகளில் ஆஜராக வேண்டிய பணிகள் இருந்த காரணத்தினால் தற்போது மீண்டும் அந்தச் சாட்சிகள் திரும்ப அழைக்கப்படுகிறார்கள் என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள்.) இப்படி சாட்சிகளை அழைத்தது பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
“The Bench said that the fact that witnesses were recalled for cross examination on flimsy grounds after Ms. Jayalalithaa assumed power as Chief Minister and the Public Prosecutor appointed by her Government did not oppose and / or gave consent to application for recall of witnesses was indicative of how “judicial process is being subverted””
அதாவது, “ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சாதாரணமான ஏதோவொரு காரணத்தைக் கூறி இந்த சாட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஜெயலலிதாவின் அரசினால் நியமிக்கப்பட்ட அரசாங்க வழக்கறிஞர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனுமதி கொடுத்திருக்கிறார். இது ஒன்றே எந்த அளவிற்கு நீதி இந்த வழக்கிலே திசை திருப்பப்பட்டுள்ளது என்பதை நன்றாக விளக்குகின்றது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பிலே கூறினார்கள்.
“It does appear that the new public prosecutor is hand-in-glove with the accused thereby creating a reasonable apprehension of likelihood of failure of justice in the minds of the public at large. There is strong indication that the process of justice is being subverted”
(அரசின் புதிய வழக்கறிஞர் குற்றவாளிகளோடு (ஜெயலலிதா குழுவினரோடு) இணைந்து செயல் படுவது நன்றாகத் தெரிகிறது. அதன் காரணமாக பொதுவாக நீதி கிடைக்காது என்ற ஒரு நம்பத்தகுந்த ஐயம் மக்கள் மனதிலே எழுந்துள்ளது. நீதி திசை திரும்பிச் செல்வது நிச்சயமாக தெரிகின்றது)
“313வது விதிப்படி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்போது, ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் இருக்க தாக்கல் செய்த தவறான மனுவிற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பே தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வருந்தத்தக்கது. (The conduct of the Public Prosecutor in not opposing such a frivolous application has to be deprecated”).
ஜெயலலிதா நேரில் ஆஜராகாமல் இருக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி கொடுத்ததற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை இந்தத் தீர்ப்பிலே தெரிவித்திருப்பதோடு, “நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும், உங்களை விட சட்டம் பெரியது. நேரில் ஆஜராகாமல் இருக்க விதிவிலக்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு அவரது மனுவிலே காரணங்கள் கூறப்படவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீதியின் பாதையிலே குறுக்கிட்ட செயல்தான் நடைபெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
((The Judges took serious exception to the trial court dispensing with the personal appearance of Ms. Jayalalithaa and said “be you ever so high, the law is above you. The grounds cited by her in the application were not all mitigating circumstances to have granted dispensation of personal appearance. To say the least, that was a ploy adopted to circumvent the due process of law)
நீதிபதிகள் தீர்ப்புரையை முடிக்கும்போது மேலும் கூறுகிறார்கள் –
((In our view, the petitioner has raised many justifiable and reasonable apprehensions of miscarriage of justice and likelihood of bias, which would require our interference)
அதாவது “எங்களின் கருத்தின்படி; மனுதாரர் (பேராசிரியர்) நியாயப்பூர்வமான, அர்த்தம் பொதிந்த சந்தேகங்களை எழுப்பி, அதாவது நீதி திசை திரும்பியும், பாரபட்சமாகவும் செல்வதால் எங்களுடைய குறுக்கீடு அவசியம் தேவை என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றிட வேண்டுமென்று நமது பேராசிரியர் வைத்த வேண்டுகோள் மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இவ்வாறெல்லாம் தெரிவித்ததோடு, பின்வரும் முடிவுகளை அறிவித் தார்கள். அதாவது, 1. “செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு; 1997ன் சி.சி. எண். 7 வழக்கில் தீய நோக்கத்தோடு, வேண்டுமென்றே அரசு வழக்கறிஞரின் உதவியோடு நேர்மையான சுதந்திரமான விசாரணையைக் குலைப்பதற்காக தலையிட்டுள்ளது”.
2. “தங்கள் முந்திய வாக்குமூலங்களை மாற்றிக் கூறிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ, மறு விசாரணை செய்யவோ முயற்சிக்காமல் அரசு வழக்கறிஞர் கடமையிலிருந்து தவறியிருப்பது, அரசு வழக்கறிஞர் துறை, ஜெயலலிதா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கு வழியமைத்துக் கொடுக்க ரகசியமாக முடிவு செய்து செயல்பட்டுள்ளது. இதன்மூலம் நீதி நிர்வாகத்தில் தலையிட்டுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது”.
3.”முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா சென்னையிலேயே இருக்கும் பொழுது இந்திய குற்றவியல் சட்டம் 313வது பிரிவின்கீழ் அவர் நேரில் ஆஜராகாமல் இருப்பதற்கு அரசு வழக்கறிஞர் ஒப்புதல் அளித்திருப்பது, அரசு வழக்கறிஞர் சுதந்திரமாகச் செயல்படவில்லை; முதல் குற்றவாளி யான செல்வி ஜெயலலிதாவின் விருப்பப்படியே செயல்படுகிறார் என்பதைத் தெரிவிக்கிறது”.
4. “1997ன் சி.சி. எண். 7 வழக்கில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சட்ட விரோதத் தலையீடும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அரசு வழக்கறிஞர் சட்ட விரோத உதவியளித்ததும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவையும், இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 313வது பிரிவையும் மீறிய செயலாகும். எல்லா வற்றையும் விட, இது குற்றவியல் நீதி முறையைக் குலைக்க மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியாகும்”.
மேலும் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இத்தீர்ப் பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான குறிப்புகள் வருமாறு :-
“தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கில் போதுமான முதல் நிலை ஆதாரங்கள் இருப்பதாகவே நீதிமன்றம் கருதுகின்றபடியால் இவ்வழக்கை தமிழ்நாட்டில் நடத்தினால் நியாயம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
எனவே இவ்வழக்கு வேறு மாநிலத் திற்கு மாற்றப்பட வேண்டிய வழக்கேயாகும்”.
“கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, கர்நாடக அரசோடு கலந்து பேசி, இந்த வழக்கிற்காக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆறு வார காலத்திற்குள் பெங்களூரில் அமைக்க வேண்டும்”.
“குற்றவியல் வழக்குகளில் பயிற்சி பெற்ற முதுநிலை வழக்கறிஞர் ஒருவரை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிப்பதுடன், அவருக்கு இளநிலை வழக்கறிஞர் ஒருவரும் அமர்த்தப்பட வேண்டும்”.
“தலைமை நீதிபதியினால் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர் ஏற்கனவே பிறழ் சாட்சியம் அளித்த – பல்டி அடித்த அரசுத் தரப்பு சாட்சிகளை (ழடிளவடைந) மீண்டும் அழைத்து மறு விசாரணை செய்வதுடன், வேண்டுமென்றே மாற்றி சாட்சியமளித்த அந்தச் சாட்சிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை தனியே எடுக்கவும் அறிவுறுத்தப்படுகின்றது”.
“சாட்சிகளுக்கு மிரட்டுதல் இருப்பதாக கருதும் பட்சத்தில், அவர்களுக்கு கர்நாடக அரசு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்”.
“குற்றவாளிகள் அனைவரும் கேள்வி எழுப்பப் படும்போது நீதிமன்றத்தில் தவறாது ஆஜராவதுடன், இவ்வழக்கை தினமும் (னுயடைல க்ஷயளளை) எடுத்து விசாரிக்க வேண்டும்”.
“வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு நீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்”.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் 18-11-2003 அன்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பையொட்டி செய்தியாளர்கள் என்னிடம் அப்போது கருத்து கேட்ட போது “எத்தகைய தீர்ப்பை நாங்கள் கோரினோமோ, அதே வகையிலான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. எங்களது கோரிக் கையை ஆராய்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் இருந்து, நீதி, சட்டம் ஆகியவற்றுக்குப் புறம்பான வகையில் தமிழ்நாட்டில் இந்த விசாரணை நடந்திருப்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. நேர்மையான முறையில் நீதி கிடைப் பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதற்கு ஜெயலலிதா தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் பொதுச் செயலாளராக அப்போதிருந்த இன்றைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களும் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்று வலியுறுத் தினார்கள்.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கினை விரைவாக விசாரிக்க வேண்டுமென்றும், அன்றாடம் விசாரிக்க வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்து; அது வெளிவந்தது 18-11-2003. அப்போது தமிழகத்தில் நடைபெற்றது அ.தி.மு.க. ஆட்சி. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்று, சென்னை தனி நீதிமன்றம், வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை எப்போது பிறப்பித்தது தெரியுமா ?
10-9-2004. அதாவது பத்து மாதங்களுக்குப் பிறகுதான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் மீதே, அ.தி.மு.க. அரசு எவ்வளவு மெத்தனப் போக்குடன் நடவடிக்கை எடுத்தது என்பது விளங்குகிறதல்லவா?
அதற்குப் பிறகு தற்போது 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் வழக்கு முடிந்தபாடில்லை. காரணம், இடையிடையே பல்வேறு சாக்குபோக்கு களைக் காரணமாகக் காட்டி, சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்திட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, வரிசை வரிசையாக வாய்தாக்கள் பெற்றதுதானே தவிர வேறல்ல.
அன்புள்ள,
மு.க.
(தொடரும்)
அம்மாவுக்கு தமிழ்நாட்டை சுருட்டி சுருட்டி மூட்டு வலி வந்துடுச்சு – கொடநாட்டு பங்களாவில் அமர்ந்து பொறுமையாக சுருட்டிய பணத்தை எண்ணட்டும்.
இந்த வயசான காலத்துலே, மூட்டு வலிக்கு மருந்து தேச்சிக்கிட்டு, காசி ராமேஸ்வரம்னு போற வழிக்கு புண்ணியம் தேடிக்கொள்ளட்டும்.
ப்ரியங்கா பாப்பவ அடுத்த சி.எம்மா கொண்டு வாங்க – அந்த பாப்பவோட சிரிப்புக்கே 8 கோடி தமிழனின் ஓட்டும் ஜொள்ளும் சரியாப் போச்சு.
ஜெயலலிதாவை விட ப்ரியங்கா இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார் – அவருக்கும் அடுத்த பிரதமராகும் ஆசை வந்துவிட்டது –
கருப்பாண்டி தமிழன், வெள்ளைத்தோலை பார்த்தால் ஜொள்ளூவிட்டு அந்த ஜொள்ளிலேயே சர்ர்ர்ருனு வழுக்கி விழுந்து ஓட்டு போட்டுடுவான்.
காலங்காத்தாலே எழுந்ததும், அன்று மலர்ந்த புதிய ரோஜாவைப் போன்ற உள்ளத்தைக் கொள்ளை கொள்ளூம் ப்ரியங்காவின் அழகிய முகத்தையும் முத்துப்பல் சிரிப்பையும் பார்த்தால்:
“அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்”
போன்ற காலத்தால் அழியாத தமிழ் தேசிய கீதங்களை பாடிய வண்ணம், துள்ளி எழுந்து மளமளனு காலைக்கடன்களை செய்துமுடிக்க வசதியாயிருக்கும் – இவ்வளவு அழகான ப்ரியங்கா அம்மாவை தமிழகத்தின் முதல்வராக்கினால், வேட்டி கட்டிய இளைய தலைமுறை தமிழர்கள் குதூகலத்துடன் ஓடியாடி கூஜா தூக்கவும் வசதியாயிருக்கும்.
ஜெயலலிதா என்ன பெரிய சுதந்திர தியாகியா?
“முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ”
போன்ற பாடல்களில் மயங்கி இளித்தவாயன் தமிழன் போட்ட ஓட்டுதானே? – அப்புறமென்ன தயக்கம்?
அம்மாவுக்கு வயசாயிடுச்சு – ரிடையர்மென்ட் கொடுத்து அந்த டெல்லி பாப்பாவுக்கு ஓட்ட குத்துங்க – பழைய அம்பாஸடர் வண்டியை காயலாங்கடையில் தள்ளிவிட்டு லேட்டஸ்ட் மாடல் BMW வாங்குவதில்லையா?. அப்படித்தான் இதுவும்.
THE BEST 😀 You should show your anger like this my dear NM.
Mr.M.K.SIR WHERE IS A SHAIRKAR COMMISION KINDLY FIND OUT FIRST AND WRITE DOWN UR OWN HISTORY
இதைப் பற்றி ஜெயலலிதா எழுதுவாரோ என்னவோ?
Savukku,
Where is Tasmac Tamil?
I m waiting for that
Will start again after election results bro.
மேலிருந்து கீழ்வரை அனைவரும் திருடர். இந்த நாட்டில் பிழைக்க முடியாதென அவனவன் அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் துண்டைக்காணோம் துணியைக்காணோமென ஓடுகிறான்.
“ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே” என்று தொப்புள்கொடி உறவையெல்லாம் ஆப்படித்து நடுத்தெருவில் விட்டுவிட்டு டெல்லிக்கு கூஜா தூக்க ஓடும் இவர்களது தேசபக்தி எனும் முகமூடியை முதலில் கிழித்தெறியுங்கள்.
பாக்கிஸ்தான் போல் பாரதமாதாவை தூக்கி கடாசிவிட்டு, தமிழ்த்தேசத்தை சீனாவின் பெடரேசனாக உருவாக்கினால், ஓரளவு தமிழன் பிழைக்க முடியும் – இல்லாவிட்டால் புலம்பிக்கொண்டே சாகவேண்டியதுதான்.
இவ்வளவு சுருட்டியும் இந்த ஒற்றைக்கண் கொள்ளைக்காரனுக்கு இந்த தள்ளாத வயதிலும் பேராசை விடவில்லையா?
நாளை பொசுக்குனு மண்டையைப் போட்டால், பத்து பைசா எடுத்துச் செல்லமுடியுமா? – பிணத்தை தூக்குவதற்கு முன்பே குடும்பத்தில் சொத்துத் தகராறும், வெட்டுக்குத்தும் ஆரம்பித்துவிடும்.
ஒரு சொட்டு கண்ணீர் கூட எந்த தமிழனும் சிந்த மாட்டான் – தமிழகத்தை பிடித்த தரித்திரியம் போய்சேர்ந்ததென பெருமூச்சு விடுவான்.
Totally agree.
நாடிழந்த அகதியாய் ஈழத்தாய் கதறுகிறாள் – தொப்புள்கொடி உறவுகளை சிங்களன் அறுக்க, கற்பழிக்க இந்திய ராணுவத்தை அனுப்பி உதவினான் பார்ப்பனன் – அவனுக்கு பாதபூஜை செய்து காவடி தூக்குகிறார் தமிழினத்தலைவர்.
பார்ப்பனர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கிவிட்டோமென விஸ்வரூபமெடுக்கிறான் ஆரியக்கூத்தாடி. இந்த இன அழிவுக்கு விலை தமிழ்த்தேசியமென முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சூளுரைக்கிறான் மறத்தமிழன்.
அமெரிக்காவை ஓடஓட விரட்டியடித்து விட்டு காஷ்மீர் ஜிஹாத்துக்கு தயாராகிறான் தாலிபான். இந்த காபிர் நாட்டில் இனி பிழைக்க முடியாதென லட்சக்கணக்கான காபிர்கள் அரேபியாவில் டாய்லட் கழுவி பிழைக்க ஓடுகின்றனர்
குருட்டுக்கிழவி பாரதமாதா சிங்கள வெறியன் ரஜபக்சேவுக்கு தலையணை மந்திரம் ஓதுகிறாள். காபிரின் கையாலாகாத்தனத்தை பார்த்து பாக்கிஸ்தான் கைகொட்டி சிரிக்கிறான். சைனா அருணாசலத்தையும் லடாக்கையும் மளமளவென முழுங்குகிறான்.
எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?. நான் சுருட்டிய பில்லியன்கள் பத்திரமாய் இருந்தால் போதுமென்று மண்டையைப் போடும் நேரத்தில் மஞ்சள் துண்டை போர்த்திக் கொண்டு டெல்லிக்கு ஓடுகிறார் தானைத்தலைவர்.
போனால் போகட்டும் போடாவென்று டாஸ்மாக் அடித்துவிட்டு தெருமுனையில் சொறிநாய்க்கு பக்கத்தில் சுருண்டு படுக்கிறான் இளித்தவாயன் தமிழன்.
“அல்லாஹ், பாங்கு சத்தம் கேக்குது. தொழுகைக்கு நேரமாச்சுனு” பாய் உன் வழி உனக்கு என் வழி எனக்குனு போய்க்கினே இருக்கிறார்.
The biggest Evil in India giving his lecture !!!!
எப்படிப்பட்ட தலைவர் எங்கள் மஞ்சள் துண்டார். படிக்கும் போது சர்க்காரியா நினைவுக்கே வரமாட்டேன்குறாரே