இசை நாற்காலிப் போட்டி தொடங்கி விட்டது நண்பர்களே… எதற்கு இப்போது இந்த இசை நாற்காலிப் போட்டி என்கிறீர்களா ? இந்தப் போட்டியை சவுக்கு நடத்தவில்லை நண்பர்களே…. இந்தப் போட்டியை தனிப்பட்ட யாரும் நடத்தவில்லை. ஆனால், ஐபிஎஸ் அதிகாரிகள் அவர்களாகவே, இந்தப் போட்டியை நடத்துகிறார்கள்.
சமீபத்தில் கூடுதல் டிஜிபி பதவி உயர்வு வழங்கப் பட்டதை அடுத்து, அடுத்த கட்ட பதவி உயர்வாக, டிஐஜியிலிருந்து, ஐஜி, எஸ்பி யிலிருந்து டிஎஸ்பி பதவி உயர்வுகள் அடுத்தடுத்து வர இருக்கின்றன. இந்த பதவி உயர்வுகளை ஒட்டியே, இசை நாற்காலிப் போட்டி நடந்து வருகிறது.
இந்த இசை நாற்காலிப் போட்டியில் கலந்து கொள்ளும் ‘காலிகள்’ யார் தெரியுமா ?
ஏற்கனவே, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் அருகே பணியாற்றுகிறார் என்று சவுக்கில் எழுதப் பட்டிருந்தது அல்லவா ? அந்த எம்.சி.சாரங்கன். பெரியய்யா, மவுரியா, ஸ்ரீதர், கே.என்.சத்தியமூர்த்தி, பாரி, எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்ரமணியன், தாமரைக்கண்ணன், செந்தாமரைக்கண்ணன், சேசஷாயி மற்றும் வரதராஜுலு, ஆகியோர்.
டிஐஜி பதவி உயர்வுக்குப் பிறகு, சாரங்கன் சென்னை மாநகரத்தின், தெற்கு இணை ஆணையாளர்.
டிஐஜி பதவி உயர்வுக்குப் பிறகு, பெரியய்யா மத்திய சென்னை இணை ஆணையாளர்.
மவுரியா, ரயில்வே துறையிலேயே, டிஐஜி.
மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர், புதிதாக உருவாக்கப் பட்ட பதவியில், குற்றப் பிரிவு இணை ஆணையாளர்.
தற்போது, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையாளராக இருக்கும் க.ந.சத்தியமூர்த்தி, போக்குவரத்து இணை ஆணையாளர்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாரி, மதுரை மாநகர காவல் ஆணையாளர்.
தென் மண்டல அமைப்புச் செயலாளர் மற்றும், தெற்கு மண்டல ஐஜியாக இருக்கும் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சென்னைக்கு வருகிறார்.
பாலசுப்ரமணியம், தெற்கு மண்டல ஐஜி.
தாமரைக்கண்ணன் மத்திய மண்டல இணை ஆணையாளர்.
செந்தாமரை கண்ணன், வடக்கு மண்டல சென்னை மாநகர இணை ஆணையாளர்.
தென்சென்னை இணை ஆணையாளர் சேஷசாயி, தன்னை மாற்றாமல் அதே பதவியில் நீடிக்க வேண்டும் என்று கோருகிறார்.
புறநகர் காவலில் உள்ள துணை ஆணையர் வரதராஜு, புறநகரிலேயே இணை ஆணையராக ஆகிறார்.
என்னடா, சவுக்கு உள்துறை செயலாளர் போல, பல்வேறு பதவிகளை வாரி வழங்குகிறதே என்று பார்க்கிறீர்களா ?
இதெல்லாம் சவுக்கு வழங்கிய பதவிகள் இல்லை. இந்தப் பதவிகளுக்கெல்லாம், வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் துடிக்கிறார்கள்.
சேஷசாயி, கண்ணே பாப்பா கனிமொழியின் வகுப்புத் தோழியும், இந்து நாளேட்டில் ஒன்றாகப் பணியாற்றியவருமான தனது மனைவி மூலமாக முயற்சிக்கிறார். சேஷசாயி சார், ஸ்டாலின் வீட்டில் கக்கூஸ் கழுவுபவர், தாம்பரத்தில் இருக்கிறார். சவுக்கிடம் முகவரி வாங்கிக் கொண்டு, அவரை அணுகினால், மத்திய சென்னை அல்ல, மாலத்தீவுக்கும் இணை ஆணையராக ஆகலாம்.
பத்திரிக்கையாளர் மன்றத்தின் அருகே, குதிரை மேய்த்துக் கொண்டிருக்கும் சாரங்கன், தொல்.திருமாவளவன் என்ற ப்ரோக்கரை அணுகியிருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. இவர் அணுகும் அடிப்படை என்ன என்றால், சென்னை மாநகரில் ஒரு தலித் இணை ஆணையராவது வேண்டும் என்பதுதான். ஏனெனில், இவர் இணை ஆணையராக ஆனால், இவர் சரகத்தில் ஒரு தலித் கூட கவலைப் படமாட்டான். அனைவரது கண்ணீரையும் துடைப்பார்.
இது போல, ஒவ்வொரு அதிகாரியும், கருணாநிதியின் முதலைப் பண்ணை குடும்பத்தில் உள்ள பல பேரில் ஆளுக்கு ஒவ்வொருவரை அணுகி, எப்படியாவது எனக்கு இந்தப் பதவியை வாங்கி கொடுங்கள் என்று கோரி வருகிறார்கள்.
இதில் சிலர் பெரும் தொகையையும் கொடுத்திருக்கிறார்கள். இசை நாற்காலிப் போட்டியில் ஜெயிப்பதற்கு கூட நேர்மையான வழியை கடைபிடிக்க மறுக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொருவரும், ஆளுக்கு ஒருவரை பிடித்து, எப்படியாவது பசையான பதவிகளை பிடித்து விடலாம் என்று கடும் முயற்சி எடுக்கிறார்கள்.
வடிவேலு சொன்னது போல, “உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு“ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. திமுக ஆட்சி என்பது அணையப் போகும் விளக்கு. இந்த அணையப் போகும் விளக்கின் வெளிச்சத்தில் குளிர் காயலாம் என்று துடிக்கும் இந்த அறிவிலிகளை என்னவென்று சொல்வது… ? ஐபிஎஸ் அதிகாரி என்பவர்கள், அரசு எந்தப் பதவி கொடுத்தாலும், அந்தப் பதவியில் பணியாற்ற வேண்டும். ஆனால், இது போல, கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும், மதுரையிலும், கோவையிலும், பெங்களுரிலும், ஆளும் வர்க்கத்தின் காலடியில் தவம் கிடக்கும் இந்த அதிகாரிகள், இந்தப் பதவியை பெற்ற பிறகு எப்படி இருப்பார்கள் ?
சவுக்கு வாசகர்கள், சவுக்கை படிக்கிறார்கள் என்பதற்காக, உங்கள் மீது பொய் வழக்கு போட்டு உங்களை சிறையில் தள்ளச் சொன்னால் தயங்குவார்கள் என்றா நினைக்கிறீர்கள் ?
சவுக்கை ரவுடிகளை வைத்து அடித்துத் துவையுங்கள் என்று உத்தரவிட்டால் செய்ய மாட்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்…. இவர்களைப் பற்றி எழுதியது குறைவு தோழர்களே…. எழுதவே முடியாத செய்திகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.
பல்லைக் கடித்துக் கொண்டு அந்தக் கருமத்தையெல்லாம் சவுக்கு எழுதாமல் இருக்கிறது.
உள்துறைச் செயலாளர் ஊரில் இல்லை. கருணாநிதி டெல்லி செல்கிறார். கூடுதல் முதல்வர் ஜாபர் சேட், முன்னதாகவே டெல்லி செல்கிறார். அதனால், இந்த மாறுதல் ஆணைகள், பிப்ரவரி 2ம் தேதிக்குப் பிறகு தான் என்று கூறுகிறார்கள்.
அன்று இசை நாற்காலியின் முடிவுகள் தெரிய வரும்.