“ஹலோ தலைவரே… 2ஜி விவகாரத்துல சிபிஐ விசாரணை பற்றி பரபரப்பான தகவல் வந்துகிட்டுருக்கு தலைவரே…“
“என்ன தகவல் பா ? “
“நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டுல ரெய்டு நடந்தத ஒட்டி அவர் ரொம்ப கலக்கத்துல இருக்காராம் தலைவரே..! “
“அப்புறம்“
“பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்ன்ற மாதிரி, சிபிஐ ரெய்டு முடிஞ்ச உடனேயே, அடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை பண்ணியிருக்காங்களாம் தலைவரே.. “
“என்னப்பா அதிர்ச்சி தகவல்களா சொல்ற… ? “
“ஆமாம் தலைவரே…. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காமராஜோட பாஸ்போர்ட்ட சோதனை போட்டதுல, ஹவாலா பணத்தை முதலீடு செய்ய பல வெளிநாடுகளுக்கு அவர் போயிட்டு வந்ததும், அவர் போன தேதிகள்ள பணம் வெளிநாட்டு வங்கிகள்ள முதலீடு செய்யப் பட்ருக்கதும் தெரிய வந்திருக்கு தலைவரே….“
“பாவம்பா அவரு“
“நீங்கதான் அவர பாவம்னு சொல்றீங்க…. ஆனா, பல பேர், அவருக்கு இதேல்லாம் பத்தாது, இன்னும் வேணும்னு சொல்றாங்க தலைவரே.. “
“ஆளு ரொம்ப நொடிஞ்சு போயிருப்பாரே.. “
“ரொம்ப நொடிஞ்சு போன மாதிரியெல்லாம் தெரியல… ஆனா கொஞ்சம் கலக்கமாத்தான் இருக்காரு….“
“வழக்கமா காஸ்மாபாலிட்டன் கிளப்புல தான் உற்சாக பானம் அருந்துவாரு… இப்போல்லாம் அங்க போறதில்லையாம் தலைவரே. “
“ஏன்பா… அங்க போனாத்தானே, பல பெரிய மனுஷங்க சகவாசம்லாம் கிடைக்கும் ? “
“நீங்க சொல்றது சரிதான் தலைவரே… அந்த பெரிய மனுஷங்கல்லாம், சிபிஐ ரெய்டுக்கு பின்னாடி, அவரை பாத்துட்டு மூஞ்ச திருப்பிக்கிட்டு போறாங்கன்னு ரொம்ப வருத்தப் பட்றாரு தலைவரே.. “
“அய்யோ பாவம்பா… சரி, அவரு ஏதோ டிவி மேல மான நஷ்ட வழக்கு போட்ருக்காராமே….“
“அதுக்குப் பின்னாடி ஒரு பெரிய கதை இருக்குது தலைவரே… என்டிடிவி இந்து ன்னு ஒரு டிவி இருக்குது… அந்த டிவி பல ஊழல்கள வெளிய கொண்டு வந்துருக்குது. அது அரசாங்கத்துல பல பேரை டென்ஷன் ஆக்கியிருக்குது. “
“ஊழல வெளியக் கொண்டு வந்தா அரசாங்கம் டென்ஷன் ஆகத்தானேப்பா செய்யும் ? “
“அது சரிதான். ஆனா, அரசாங்கம் என்ன நெனைக்குதுன்னா, அதுக்கு அந்த டிவி நிர்வாகம் பொறுப்பு இல்ல… அந்த டிவில வேலை பாக்குற, குளிர்ந்த மதுபான வகை பேரைக் கொண்ட ஒரு நிருபர் தான் காரணம்னு அரசாங்கம் நெனைக்குது தலைவரே…“
“ஏம்பா… அரசாங்கத்துக்கு வேற வேலை இல்லையா… முதல்வர், இதெல்லாமா பாத்துக்கிட்டு இருப்பாரு ? “
“என்னா தலைவரே நீங்க….. அரசாங்கம்னா என்ன முதல்வரா… ? அவருக்கு பாராட்டு விழாவுக்கு போறதுக்கு, எந்த நடிகை துணி கம்மியா போட்டுருக்காங்களோ, அவங்களுக்கு கலைமாமணி விருது கொடுக்கறதுக்கே நேரம் பத்தலை… அவரு போய் இதெல்லாம் பாத்துக்கிட்டு இருப்பாரா ? “
“நீ சொல்றதும் சரிதான். இந்த வருஷம் கலைமாமணி விருதுக்கு, நடிகை தமன்னா, அனுஷ்காவெல்லாம் தேர்ந்தெடுக்கறதப் பாத்தா, நீ சொல்றது சரிதான் போலருக்கு. அப்போ முதல்வர் பண்ணலன்னா வேற யாருப்பா பண்ணது… ? “
“அரசாங்கம்னா, உளவுத்துறையோட மூத்த அதிகாரி தானே தலைவரே.. ? அவருதான் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டுன்னு தீர்மானிக்கறாரு… யாரு மந்திரியா இருக்கணும், யாரு இருக்கக் கூடாதுன்னு தீர்மானிக்கறாரு… யாருக்கு மெடல் குடுக்கனும், யாருக்கு குடுக்கக் கூடாதுன்னு தீர்மானிக்கறாரு… அவருதான் யாருக்கு எந்த போஸ்டிங் போடனும்னு தீர்மானிக்கறாரு.. பெரிய இடத்து சொத்தெல்லாம் அவருதான் நிர்வாகம் பண்றாரு… அவர விட்டா வேற யாரு தலைவரே… அரசாங்கம் ? “
“சரி மேல சொல்லு“
“அந்த அதிகாரிக்கு, அந்த நிருபர பாத்தா ஒரே கோபமாம். சவுக்குன்னு ஒருத்தன் வெப்சைட் நடத்தறானாம். அவன் அந்த அதிகாரிக்கு ரொம்ப கொடச்சல் குடுக்கறானாம். தமிழ்நாட்டுல மந்திரிகளும், உயர் அதிகாரிகளும், பத்திரிக்கை அதிபர்களுமே அந்த அதியாரிகயப் பாத்து நடுங்கும் போது, இந்த சவுக்குன்றவன் மட்டும் ரொம்ப கொடச்சல் குடுக்கறானாம். “
“சரி.. அந்த சவுக்குக்கு கொடச்சல் குடுக்க வேண்டியதுதானே… டிவி மேல ஏன் கேசப் போடனும் ? “
“அங்கதான் தலைவரே இருக்குது விஷயம். அந்த சவுக்குக்கு பல்வேறு வழிகள்ல கொடச்சல் குடுத்துப் பாத்துட்டாங்க.. அந்த ஆளோட கம்ப்யூட்டருக்கு வைரஸ் அனுப்பிப் பாத்தாங்க. வைரஸ் அனுப்பினாலும், வேலை கொஞ்சம் ஸ்லோ ஆகுதே தவிர, நின்னபாடில்ல. அந்த சவுக்க பாலோ பண்ண 24 மணி நேரமும் ஒரு சப்.இன்ஸ்பெக்டரையும், கான்ஸ்டபிளையும் போட்ருக்காங்க. நேத்து மந்தைவெளியில, அந்த சவுக்கு பைக்க நிறுத்திட்டு, அரை மணிநேரம் கழிச்சு வந்து பாத்தா அதிர்ச்சி ஆகுற அளவுக்கு, ப்ரேக்கையும் கட் பண்ணிப் பாத்துட்டாங்க… அவர் மேல இருக்கற தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்குல, தண்டனை வாங்கித் தர்றதுக்கு பல்வேறு வழியில நெருக்கடியும் கொடுத்துப் பாத்துட்டாங்க… துறை ரீதியான விசாரணையையும் முடுக்கி விட்டிருக்காங்க… சஸ்பென்ஷனுல இருக்கற அந்த ஆள, டிஸ்மிஸ் பண்றதுக்கு வேகமா ஏற்பாடும் பண்ணிக்கிட்டு இருக்காங்க… ஆனாலும் அந்த ஆள் அசராம, தொடர்ந்து அந்த அதிகாரிய போட்டு தாக்கிக்கிட்டு இருக்காறாம்… “
“சரி வேற என்ன திட்டம் வச்சுருக்காங்க “
“அதனால, அந்த குளிர்ந்து மதுபான வகை பெயர் கொண்ட அந்த நிருபர், சவுக்கோட ரொம்ப நெருங்கிப் பழகுறதுனால, அந்த நிருபர அட்டாக் பண்ணா சவுக்கு அடங்கிடும்னு நெனைக்கிறாங்க.. “
“சரி சவுக்கு தரப்புல என்ன சொல்றாங்க“
“அவங்ககிட்டயும் கேட்டேன் தலைவரே…. ஏற்கனவே காமராஜ் தரப்பு, ரெண்டு மூணு வழக்கறிஞர்களை வச்சு, சமாதானம் பேசியிருக்காங்க… சில பத்திரிக்கையாளர்களை வெச்சு, ‘சவுக்கு மேல இருக்கற கேசையெல்லாம் வாபஸ் வாங்கிக்கறோம். சவுக்குக்கு திரும்ப அரசாங்க வேலை கொடுத்துட்றோம். இவ்வளவு நாள் நடந்த கஷ்டத்துக்கு ஒரு பெரிய தொகைய நஷ்ட ஈடா கொடுக்கறோம். ‘நிறுத்து. எல்லாத்தையும் நிறுத்து’ ன்னு சொல்லிருக்காங்க…“
“சரி அதுக்கு சவுக்கு என்ன சொல்லிச்சாம் ? “
“தமிழ்நாடு பூரா உள்ள எல்லார் போனையும் ஒட்டுக் கேக்கறான் பார். அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்…
பத்திரிக்கைன்ற பேர்ல, சரோஜா தேவி நடத்திக்கிட்டு இருக்கான் பார்… அவன நிறுத்தச் சொல்லு… நான் நிறுத்தறேன்.
சென்னை சங்கமம்ன்ற பேர்ல, அரசுப் பணத்தை கொள்ளையடிக்கிறான் பாரு, போலிப் பாதிரி… அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்…
எம்ஆர்எஃப் பேக்டரி கட்றேன்னு ஏழை விவசாயிகளோட நெலத்த புடுங்கி கொள்ளை லாபம் பாக்கறான் பார்.. அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்..
ஊரு பூரா ஊழல் செஞ்சு, சொத்து சொத்தா வாங்கிக் குவிச்சு, லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே உக்காந்துகிட்டு அராஜகம் பண்றான் பார்.. சுனில் குமார்.. அவன நிறுத்தச் சொல்லு… நான் நிறுத்தறேன்.
மக்கள் வரிப்பணத்துல வர்ற ரகசிய நிதிய எடுத்துட்டுப் போயி, ஐதராபாத்துலயும் டெல்லியிலயும் உல்லாசமா இருக்கறான் பார்.. சேட் கம்னாட்டி… அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்“ ன்னு சவுக்கு சொல்லிடுச்சாம் தலைவரே….“
“அடப்பாவமே… நெலம ரொம்ப கஷ்டம் தான்…“
“இப்போ காமராஜ் என்னதான் பண்ணப் போறாராம்….?“
“அதான் தலைவரே.. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்காரு…. இதோட இவரு சிக்கல் முடியல தலைவரே… அவரு வொய்ஃப் ஜெயசுதா பேருல திருவான்மியூர்ல ப்ளாட் வாங்கிருந்தாருல்ல தலைவரே..“
“ஆமா… அதக் கூட யாரோ ஒரு பெரிய ரியல் எஸ்டெட் கம்பேனியோட ஒப்பந்தம் போட்டு, பல கோடி லாபம் பாத்துட்டதா சொன்னியே… “
“ஆமா தலைவரே… இப்போ அதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்களாம் தலைவரே…“
“யாருய்யா அது ? “
“இவனுங்களுக்கு வேற யாரு ஆப்பு வெப்பா ? அந்த சவுக்கு டீம் தான் தலைவரே…. அந்த டீம்ல இருக்கற ஒரு வழக்கறிஞர், காமராஜ் ஒய்ப் ஜெயசுதா வீட்டு வசதி வாரியத்துக்கு தப்பான தகவல் கொடுத்து, சட்ட விரோதமா, அந்த திருவான்மியூர் ப்ளாட்ட வாங்கியிருக்காங்கன்னும், அந்த ஒதுக்கீட்ட ரத்து பண்ணணும்னும் புகார் கொடுத்துருக்காங்களாம். நடவடிக்கை எடுக்கலன்னா கோர்ட்டுல கேசு போடுவாங்களாம். இத நெனச்சு வேற காமராஜ் அண்ணன் கலக்கமா இருக்காராம் தலைவரே…“
“பாவம் தாம்பா அவரு…. “
“இதை விட ஒரு பெரிய பூகம்பத்த கிளப்பப் போறாங்க தலைவரே… “
“என்னப்பா அது… ? “
“சிபிஐ ரெய்டு நடத்துனாங்களே… பெசன்ட் நகர்ல உள்ள ஈஸ்வரி அபார்ட்மென்ட்ஸ்… அந்த வீட்ட காமராஜ் சொந்தமா வாங்கி பல வருஷம் ஆகுதாம். பல வருஷமா அந்த வீட்டுலதான் அவரு குடியிருக்காரு… “
“சரி அதுக்கு என்ன இப்போ ? “
“சொந்த வீட்டுல குடியிருக்கறத மறைச்சுட்டு, வருஷத்துக்கு, ரெண்டு லட்சத்து எண்பத்து ஒன்பதாயிரம் வாடகையா குடுக்கறதா.. வருமான வரித்துறைக்கு தகவல் குடுத்துருக்காராம் தலைவரே…“
“அதெல்லாம் அவரு எதிரிங்க சும்மா சொல்லுவாங்கப் பா….“
“என்னா தலைவரே…. காமராஜ் மேல சவுக்கு சொல்ற புகார் எதுக்கும் ஆதாரம் இல்லாம சொன்னதில்லையே தலைவரே…“
“நீங்களே பாருங்க. “
“பாத்தீங்களா இந்த ஆவணம், 2006-2007 கணக்கு ஆண்டுக்கு காமராஜ் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கு. இதுல, அவரோட மொத்த வருமானம், 4,83,435 ன்னு கணக்கு காட்டியிருக்கார். “
“ஆமா. அது நக்கீரன்ல அவருக்கு குடுக்கற சம்பளம் தானேப் பா. கரெக்டாத்தானே காட்டியிருக்கார் ? “
“அடுத்த காலத்த பாருங்க தலைவரே… ப்ராக்கெட்ல 2,89,379ன்னு போட்ருக்கார் இல்ல…. ? அந்தப் பணத்தை கழிச்சுட்டு, மொத்த வருமானம் 1,94,055ன்னு காமிச்சுருக்காரா… ? “
“ஆமா…“
“சொந்த வீட்டுல குடியிருந்துக்கிட்டு, வாடகையா 2,89,379 குடுத்தேன்னு கணக்கு காட்றது அரசாங்கத்த ஏமாத்துறதுதானே தலைவரே….“
“கரெக்ட்டுப்பா“
“இவரு, ஊர்ல உள்ள ஊழலையெல்லாம் பத்தி இன்வெஸ்டிகேட்டீவ் ஜர்னலிசம் எழுதறாருன்னா, நாடு தாங்குமா தலைவரே…..“
“என்னப்பா, எவ்வளவோ கொள்ளையடிக்கிறாங்க.. வருமான வரியாவது ஒழுங்கா கட்டக் கூடாதா… ? “
“அதான் தலைவரே கொடுமை…. இந்த சவுக்கு டீம், இதப் பத்தியும் வருமான வரித் துறைக்கு புகார் கொடுக்கப் போறாங்களாம் தலைவரே….“
“அடுத்தவங்க பாவத்தக் கொட்டிக்கிட்டா இப்படித் தாம்பா கஷ்டப் படணும். ஈழத் தமிழர்கள் செத்துக்கிட்டு இருந்தப்போ, அந்தப் போலிப் பாதிரிய தொடர் எழுத வச்சு லட்சக்கணக்குல சம்பாதிச்சவங்க தானேப்பா இவங்க…“
“அது மட்டுமில்ல தலைவரே…. நக்கீரன் இதழ் இப்போ முன்ன மாதிரி சேல்ஸ் இல்லையாம்…. ஒன்றரை லட்சம் வித்துக்கிட்டிருந்த நக்கீரன், இன்னைக்கு வெறும் 60 ஆயிரம் தான் விக்குதாம். “
“அப்படியா ? “
“நக்கீரன் இணைய தளமும் இப்போ முன்னைப் போல பாப்புலரா இல்லையாம். அலெக்சா ரேட்டிங்குல, நக்கீரன் விகடன விட பின்னாடிப் போயிடுச்சாம். “
“அந்த 60 ஆயிரமும் விக்கக் கூடாதுப்பா….“
“சீக்கிரம் அதுவும் கொறஞ்சுடும் தலைவரே…“
“உளவுத் துறையில காமராஜப் பாத்து வணக்கம் வச்ச உயர் அதிகாரிகள் பல பேர் இருக்காங்க. ஆனா, இப்போ சாதாரண இன்ஸ்பெக்டர் கூட கண்டுக்க மாட்றாராம். “
“அப்போ காமராஜ் பாடு கஷ்டம்னு சொல்லு….“
“சவுக்கு டீம், இன்னும் காமராஜப் பத்தி பல்வேறு ஆதாரங்கள சேகரிச்சிக்கிட்டு இருக்காங்களாம். விரைவில் ஒன்னொன்னா வெளியிடப் போறாங்கன்னு அவங்க தரப்பு சொல்லுது தலைவரே…“
மிஸ்டு கால்.
நக்கீரன்ல, 20 வருஷமா வேலை செஞ்ச நவரச நாயகன் பேர் கொண்ட ஒரு மூத்த பத்திரிக்கையாளர், காமராஜோட ஊழல் போக்கைப் பாத்துட்டு மனசு ஒடஞ்சு வேலைய விட்டு நின்னுட்டாராம். “
2வது மிஸ்டு கால்
நக்கீரன் ஆசிரியர் கோபால், காமராஜ் மேல கோபமா இருந்தாலும், அவரும் ஏகப்பட்ட துட்டு சம்பாரிச்சுருக்கதால, காமராஜ வெளிய அனுப்பினா, நம்ப ஊழல் வெளியில வந்துடும்னு, கம்முனு இருக்காறாம்.