மே 18. மொழியால் இணக்கமாக இணைந்திருந்த ஈழத் தமிழர்களை, விலங்குகளை சுடுவது போல அழித்த நாள். வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
எத்தனை போராட்டங்கள் ? எத்தனை மறியல்கள் ? எத்தனை பட்டினிப்போர்கள் ? ஆனால், இந்தியா சிங்கள அரசுக்கு போரை நடத்த செய்த உதவிகளை ஒரு போதும் நிறுத்தவில்லை. உணர்வாளர்களால் அந்தப் போராட்டங்களைத் தவிர வேறு எதுவுமே செய்ய இயலவில்லை.
அந்த படுகொலைகளுக்குப் பிறகு இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்கள், அடுக்கடுக்காக வெளியாகிக் கொண்டே இருந்த பின்னாலும் சர்வதேச விசாரணையை உருவாக்க முடியவில்லை. இலங்கை அரசின் தந்திரமான நடவடிக்கைகளாலும், இந்திய அரசின் துரோகத்தாலும், ஐ.நா மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராக எடுத்து வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் தோல்வியையே தழுவின. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக, எந்த சிங்கள அரசின் மீது குற்ற்சசாட்டோ, அதே சிங்கள அரசு தன் மீதான குற்றச்சாட்டுகளை தானே விசாரித்துக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கத்திய நாடுகள் நிபந்தனையாக விதித்தன. அதைக்கூட செய்ய மறுத்தது ராஜபட்சே அரசு.
சேனல் 4 நிறுவனம் வீடியோ ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்ட பின்னரும் உலக நாடுகள் அதன் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இல்லை. உக்ரைனில் ரஷ்யா தலையிடுகிறது என்ற ஒரே காரணத்துக்காக உலக நாடுகள் அனைத்தும் இணைந்து, அவ்வளவு பெரிய நாடான ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்றன. ஆனால், வெளிப்படையான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களான ஆதாரங்கள் அனைத்தும் உலக சமுதாயத்தின் முன்னால் வைக்கப்பட்ட பிறகும், இலங்கையை கண்டிக்க எந்த நாடும் முன் வரவில்லை. உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த பின்னரும் கூட, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் சம்பிரதாயமான கண்டிப்புகளோடு நிறுத்திக் கொள்கின்றன. இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்குக் கூட இல்லாத வலிமை, இலங்கை போன்ற ஒரு சாதாரண நாட்டுக்கு எங்கணம் வந்தது என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது.
தற்போது முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட தமிழர்கள் விடிவுகாலம் எப்போது என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது தப்பித்து ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு அகதியாக சென்று விடலாமா என்று மன்றாடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்காவது நல்ல வாழ்வை அமைத்துத் தரலாம் என்று கள்ளத்தோணிகளில் கடலுக்குள் சென்று மாட்டிக் கொள்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அகதிகளாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்றால் இல்லை. சிறப்பு முகாம் என்ற பெயரில், வயதில் இளையவர்களாக இருப்பவர்களை புலிகள் என்று சந்தேகப்பட்டு அடைத்து வைத்துள்ளது அதிமுக, திமுக இரு அரசுகளும்.
2009ல் ஈழப்போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தபோது, ஆட்சியில் இருந்த திமுக, மத்திய கூட்ணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியோட சேர்ந்து இழைத்த துரோகங்களைப் பற்றி பல முறை எழுதியாயிற்று. மீண்டும் மீண்டும் அதை எழுதுவதால் எரிச்சல்தான் மேலிடுகிறது. மரணம் நம் அனைவருக்கும்தான் வருமென்றாலும், குண்டுகள் நம் மீது வீசப்பட்டு, கையிழந்து, காலிழந்து துடிதுடித்துச் சாவதென்பதை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது.
அப்படி சொந்தங்களையெல்லாம் இழந்து குற்றுயிராக இருப்பவர்களும் முகாம்களுக்குள் இரண்டாந்தர குடிமக்களாக இருத்தி வைக்கப்பட்டு இருக்கின்றனர். இலங்கையில் உள்ளவர்களை காப்பாற்றுவதை விடுங்கள். குறைந்தபட்சம், தமிழகத்தில் சிறப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டவர்களைக் கூட விடுவிக்க நம்மால் முடியவில்லை.
2009ல் நடந்து முடிந்த குற்றங்களுக்காக ஒவ்வொருவராக குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் காலம் கடந்து விட்டது. மாற்றி மாற்றி குறை சொல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி ஈழத் தமிழர்களின் நலனுக்காக ஏதாவது செய்யுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. மோடி வெற்றிபெற்றதும், முதலில் உரையாடுவது ராஜபட்சேவாகத்தான் இருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறையில் இருக்கும் அதிகாரிகளை மீறி, மோடி ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்து விடுவார் என்றும் நம்பிக்கை இல்லை. மோடி வந்தால் ஈழத் தமிழர்கள் வாழ்வு வளம் பெறும் என்று வைகோ, அவருக்கு அளிக்கப்பட்ட ஆறு சீட்டுகளுக்காக கூறிக்கொண்டு இருக்கலாமே தவிர, அது எந்த விதத்திலும் இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதில்லை.
கொல்லப்பட்டவர்களின் நினைவு தினத்தைக் கூட அனுசரிக்கமுடியாமல் மஹிந்தா அரசு தடை விதிக்கிறது. தனி ஈழப் போராட்டங்கள் தொடர்வதற்கு முன்னர் இருந்ததைவிடவும் படுமோசமான நிலையில் அங்கே தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவும், உலக நாடுகளும் கைவிரித்தாகிவிட்டது. ஆயுதப்போராட்டங்களை இனி கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது. இந்நிலையில் அங்கிருக்கும் சிங்கள முற்போக்காளர்களுடன் இணைந்து, கொடுங்கோல் அரசிற்கெதிராக ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுப்பதுதான், அந்நாட்டு அரசியல் சட்டம் உறுதிசெய்யும் அடிப்படை உரிமைகளுடனாவது தமிழர்கள் வாழ ஒரே வழி. குறிப்பாக இங்கே தோள் தட்டும், மீசை முறுக்கும், வெட்டிப்பேச்சு வீரர்களை ஈழத் தமிழர்கள் நம்பவே கூடாது.
2009ல் பா ஜ க ஆட்சிக்கு வரும், சமரசத்திற்குச் செல்லாதீர்கள் என நம்பிக்கையளித்தது யார், இரட்டை கோபுரத்தகர்ப்பிற்குப் பின்னர் உலகளாவிய அளவில் ஆயுதப் போராட்டங்கள் குறித்தான அணுகுமுறை தலைகீழாக மாறிவிட்டது என்பதை எடுத்துச் சொல்லத் தவறியது யார்? இங்கே நாள் தோறும் கர்ஜிக்கும் தமிழுணர்வாளர்களே.
இந்நிலையில் அங்குள்ள தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தங்கள் எதிர்காலம் குறித்து ஆய்வுசெய்து உரிய முடிவெடுக்கட்டும். இந்நாட்டுத் தமிழுணர்வாளர்கள் இந்திய அரசும் மற்ற பன்னாட்டு அரசுகளும் ஈழத்தமிழர்களுக்கு அனைத்து தளங்களிலும் நீதி வேண்டும், தற்போதைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தட்டும் . பாகிஸ்தானையும் சீனத்தையும் மிகப் பெரிய எதிரிகளாக பாவிக்கும் பாஜக அரசு உருவாகும் வேளையில், மோடியோ உடனிருப்பவர்களோ இலங்கையில் எங்கே அந்நாடுகளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைத்துவிடுமோ என்றஞ்சி ராஜபக்சேயை தாஜா செய்யவே விரும்புவர். இவ்வாறு மாறியிருக்கும் சூழலில் வட இந்திய சக்திகளுக்கும் நிலைமையினை சரிவர உணர்த்தவேண்டும். இனியும் தனிக்கச்சேரி செய்து பயனில்லை
It is unfortunate that eight lakhs tamils in Tamil Nadu could not do anything for their brothers and sisters killed in Srilanka. This would not have happened in the case of Malayalies or Punjabies. Tamil people are fanatics but do not have co-operation.They are divided on the basis of politics. Periyar, Karunannidhi,MGR and Jeyalalitha are their Gods and guides. Rulers of Tamil Nadu for the past fifty years are from cinema background without enough academic qualification. So, they are not only foolish but selfish. If only Karunannidhi and family had withdrawn from the central Government then, and resigned from state assembly at the time of war ,lakhs of tamil lives could have been saved. Those escaped death in the war are facing inexplicale torture in Srilanka at present. They face life and death everyday. Unless Tamil nadu changes its character and fight collectively there no scope for the remaining lankan tamils in the near future.The plight of tamils in Srilanka is very sad and heartbreaking.
Tamil Eelam was possible in 1984 with strong Indira Gandhi!Tamils should have accepted provincial model of de-facto Eelam of bit novice Rajiv Gandhi!Prabakaran, sinned by aligning with west for money and power by killing Rajiv, fellow tamil leaders and Tamil Eelam dream.With last strong Prabakaran ,isolated from people and killed, Tamil eelam is dead!We,Tamils have to know pragmatism of knowing our power under any given circumstances and grow up! Mere jingoism and egoism lead only to self destruction for Tamils at Tamilnadu and Eelam!That is the exact reason for present Tamil fishermen’s and Eelam tamil’s sad plight!Nambikai Nagaraj
இந்தியாவில் நல்லாட்சி மலர போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.நல்லது நடக்கும் என நம்பவும். தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக திரு பொன் ராதாவும்,உலக நாயகன் நம்ம அன்புவும் கண்டிப்பாக வலியுறுத்துவார்கள் சவுக்கு இனைய நண்பர்களே….
ஈழத்தில் விதைக்கப்பட்ட எம் உறவுகளுக்கு என் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன்.. மே பதினாறு இந்தியாவில் காங்கிரசுக்கு சவக்குழி வெட்டியாச்சி..இனி இனபடுகொலைகளுக்கு காரணமான அந்நிய சோனியாவின் கண்கிராச்ஸ் அழிந்து போகும்.அதற்க்கு துணைபோன திமுக வும் அழிந்து போகும்.
my take on genoside
ive Years before this day we Indians were watching the results of Indian General Elections in which the “Secular” UPA won. But the Landmass which is downside of the Indian sub continent was facing a situation which was supposed to be the end of so called civil war. In other words the “Genocide” of Tamil people, I as a tamilan did not do anything for the “EMPOWERMENT” of my race, and the effect was complete eradication of my siblings in the island, due to “EMPOWERMENT” of Srilankan Army by Indian and many other countries. I as a Tamilan, who can write only in Internet about my feelings, have written this article.
“If you are not interested just scroll down to the bottom………….!”
http://humblemenview.blogspot.in/2014/05/may-19-miserable-mystery-of-tamils.html
மே பதினெட்டு.
ஐந்து ஆண்டுகள் கடந்தும்
நெஞ்சை விட்டு அகலாமல்
அடி மனதில்
ஆற்றமுடியாத ரணமாக
கனன்ற வெப்ப சுருதி
உள்ளத்தில் பெரு வடுவாக
ஒரு சுனாமியின் தயார் நிலையில்
உறைந்து கிடக்கிறது,
2009 மே மாத(மு)ம்
முள்ளிவாய்க்கால் பரப்பில்
நிகழ்த்தப்பட்ட
நவீன நரபலியான இனப் படுகொலை,
விசாரணை வளயத்துள்
கொண்டு வர தடைகள் பல இருந்தாலும்
உலகம் முழுவதும் வாழும்
பள்ளிக் குழந்தைகளுக்கு
சரித்திர பாடமாக
ஈழத்து இனப்படுகொலை
ஆவணப்படுத்தப்பட்டு விட்டது.
ஈழ இனப்படுகொலையின் சூத்திரதாரி
இந்தியா.
இதுதான் பள்ளிக் குழந்தைகளுக்கான
பாலபோதினியின்
முதலாவது பாடம்.
ஈழத் தமிழ் இனத்தின் ஒரு பகுதி
சவக் காடாக
இரத்தச் சகதிக்குள்
இரண்டறக் கலந்திருந்த காட்சிகளும்,
இந்தியாவின் தலையீட்டினால்
சிங்களவன் அகலக் கால் வைத்து
முள்ளிவாய்க்கால் செருக்களமானதும்
நாதியற்று ஈனசுரத்தில்
கூவி குளறிய ஓலங்களும்
நிழற் படமாக அல்லாமல்
நிதர்சனமாக
கண்முன் நிழலாடுகின்றன,
மந்தம் தலைக்கேறி
மறந்து போனவர்களுக்கான
மறு வாசிப்பே இந்த பதிவு.
அடி மனதில்
ஆத்திரம் கொப்பளித்தாலும்
அரசியல் ஆத்மாக்களின்
காட்டிக் கொடுப்புக்களாலும்
கள்ளத் தொடர்புகளாலும்
ஆற்றாமையும்
தேற்றமுடியாத வெறுமையும் மட்டுமே
தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறது.
கண்ணுக்கு முன்னே
வெடித்து கருகிப்போன சந்ததியை,
தாயை, தகப்பனை,
கழுத்தறுக்கப்பட்ட தம்பியை
கற்பழித்து கொல்லப்பட்ட தங்கையை
குடல் பிதுங்கி கண்மூடிய
குழந்தையை மட்டுமல்லாமல்
நர மாமிஷ மிருகங்களின்
நிந்தனைகளையும்
எவராலும் மறக்க முடியவில்லை.
சிங்களவன் பொது எதிரி
அவன் சண்டைக்கு வந்தது வியப்பல்ல,
அவனுடன் தலைவன் சமர் புரிந்ததும்
அதிசயமல்ல.
நேபாளத்தில் அவதரித்த புத்தனின்
பெயரை சொல்லிக் கொண்டு
மேற்கு வங்காளம் ஒரிசாவிலிருந்து
நாடு கடத்தப்பட்ட ஒரு கூட்டம்
ஈழத்தை மேச்சல்க் காடாக்கி
மிடறு முறித்து
இன்னும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது.
புத்தன், காந்தி பிறந்த மண்ணென்று
போலி பெருமை கூறிக்கொண்டாலும்,
நரகாசுரனும் தாடகையும் சகுனியும்
எட்டப்பனும்
பிறப்பெடுத்த வழித்தடத்தில்
வந்தவர்கள் என்பதால்
கருணாநிதி, சிதம்பரம், பிரணாப்
சிவ்சங்கர் மேனன், மன்மோகன்
ஆகிய புல்லுருவிகள்
இனப்படுகொலையின் பின்
காட்டுமிராண்டிப் பட்டியலின்
கடைசி பதிவில் இடம்பிடித்துக்கொண்டனர்.
காட்டெருமை கரடி கருங்குரங்கு
நூட்டிமையில் நிறம் மாறும் பச்சோந்தி
மூஞ்சூறு
ஆற்று முதலை, அண்டங்காகம்
அவை காட்டு மிராண்டிகளை விடவும்
மேலான பண்பு கொண்டவை.
இந்திய அரசியல் சாக்கடைக்கு வெளியே
ஐந்தறிவு, நான்கறிவு விலங்குகள்
உயர்ந்து நிற்கின்றன.
அமெரிக்காவையும் ஐநாவையும்
வளைத்துப்போடக்கூடிய சூனியம்
இந்திய அரசியலுக்கு தெரிந்திருக்கிறது.
பரம வைரிகளாக இருந்தாலும்
பாகிஸ்தானையும் சீனாவையும்
ஈழத்து இனப்படுகொலைக்குள்
இழுத்து போடக்கூடிய சூட்சுமம்
சிவ்சங்கர் மேனனுக்கும்
சிதம்பரம் கருணாநிதிக்கு புரிந்திருக்கிறது.
வறுமையையும் ஊழலையும்
மூலதனமாக வைத்துக்கொண்டு
மின்சாரம், தண்ணீர் இல்லாமல்
அரசியல் வித்தை செய்து
வல்லரசு என்று வயிறு வளர்க்கும்
இந்தியாவை “வேட்டைவாளி”
என்று சொல்வதில்
யாருக்கும் எந்த தயக்கமும் இருக்காது.
இந்தியாவின் வழிபாட்டு அரசியலும்
ஈழத்து சுதந்திர வேட்கையும்
தொடர்வுபடுத்த முடியாதவைதான்
ஏணி வைத்தாலும் எட்டாதது.
ஒன்றுக்கும் ஒன்பதுக்கும் உள்ள இடைவெளி
இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் உண்டு
இந்தியனுக்கு தேவை
ஈழத்தின் பெயரால்
இழவெடுத்த அரசியல்.
இனப்படுகொலை செய்த பின்னும் கூட
இன்றுவரை இந்திய அரசியல்
நாற்றத்தை விட்டு
நாகரீக உலகத்துக்கு வரவில்லை.
ஈழத்திலும் பச்சோந்திகள் உண்டு
அவைக்கு ஆயுட்காலம் அதிகமில்லை
அந்த பச்சோந்திகள்
அதிக பட்ஷம் இந்தியாவை தொங்கலாம்
அல்லது
ராஜபக்ஷவை துதிபாடலாம்.
ஈழ கோட்பாட்டின் இலக்கை
தமிழீழ தாகத்தை
குப்பிக்குள் அடைத்து வைத்து
குடை பிடித்து காவல் காக்க முடியாது.
ஈழத்து மக்களின் சுதந்திர தாகம்
முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிடும் என்றால்
இன்றைக்கு ஈழத்து முற்றத்தில்
இராணுவத்துக்கு வேலை இருந்திருக்காது.
சுதந்திரமும் விடுதலைக்கான பயணமும்
ஈழத்தமிழனுக்கு
செத்துப்போவதில்த்தான் முடியுமென்றால்
அது விதியாக இருக்கலாம்.
இன்று
இனப்படுகொலை நிகழ்வின்
ஐந்தாம் ஆண்டு கறுப்பு நாள்
நடந்து முடிந்த ஈழப்போராட்டத்தின்
எச்சங்கள்
நடமாட தொடங்கிய
வழித்தடத்தின் ஒரு சந்திப்பு.
ஊர்க்குருவி-
ஒரு தனித்துவமான இரங்கற்பா! சற்று வேகமாகவும், அதே சமயம் விவேகமாகவும் செயல்படுவோம்.முதலில் புகையில்லா இந்தியாவை தந்த அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிக்கொண்டு, மீண்டும் அவருக்கு சுகாதாரத்துறை கிடைக்கப்பெற்று மதுவில்லா இந்தியா படைக்க அனைத்து தமிழர்களும் ஒருங்கே குரல்கொடுப்போம். 2009-ல் ரணமாகிய எங்கள் மனம் தமிழ் ஈழம் மலர்ந்த பின்தான் கொண்டாட்டங்களில் நாட்டம் கொள்ளும் என சூளுரைப்போம்.
dmk,admk மீது மாறிமாறி சவாரிசெய்து இலவசங்களிலும்,டாஸ்மாக்கிலும் மதிமயங்கிய நாம் மண்ணின் மைந்தர்களுக்கு வாய்பளிபோம். அது 2g புகழ் ராஜா வே ஆனாலும் சரி!