அரசு வழக்கறிஞரான பவானி சிங் அவர்களை கர்நாடக மாநில அரசே மாற்றிய நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி, திரு. சவுஹான் அவர்கள் இந்த வழக்கினை பவானி சிங் அவர்களே தொடர்ந்து அரசு சார்பில் நடத்தலாம் என்று முடிவு செய்தார்.
பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தரப்பினருக்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர்தான் பவானி சிங். இவருக்கு முன்பு இந்தப் பதவியில் வழக்கறிஞர் ஆச்சார்யா என்பவர் இருந்து, மிகவும் திறம்பட அரசுக்காக வாதாடி வந்தார்.
அவரை அந்தப் பதவியி லிருந்து நீக்கியதே கொடுமையான ஒரு சம்பவம். அவருக்குப் பல வழிகளிலும் தொந்தரவுகளைக் கொடுத்ததால், அவரே மனம் வெதும்பி 17-1-2013 அன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக இருந்தபோது, அவர் மீது ஜெயலலிதா தரப்பில் இட்டுக்கட்டிப் பல புகார்கள் சொல்லப்பட்டதுடன், அங்கே பா.ஜ.க. ஆட்சி இருந்த போது, சென்னையிலிருந்து அதிகார பலம் மிக்க ஒரு குழு, பெங்களூர் சென்று, முகாமிட்டு செல்வாக்கு வேலைகளைச் செய்ததின் விளைவாக, கனத்த மனதுடன், வெளிப்படையாக தனது மனச் சங்கடத்தைத் தெரிவித்து விட்டு இந்த வழக்கி லிருந்தே தன்னை விடுவித்துக் கொண்டார். சிறப்பு அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.வி. ஆச்சார்யா பதவி விலகல் கடிதத்தை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிய போது, தலைமை நீதிபதியாக இருந்த திரு. விக்ரமஜித் சென் அவர்கள் அந்தப் பதவி விலகலை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தத் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்ற பிறகு, இடைக் காலத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றவர் திரு. ஸ்ரீதர் ராவ். அவர் ஆச்சார்யா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொண்டார். ஆச்சார்யா அவர்கள் விலகிய பின், அவருடைய இடத்திற்கு கர்நாடக அரசால் அரசு வழக்கறிஞராக, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதற்காக நியமிக்கப்பட்டவர்தான் பவானி சிங். ஆனால் அவரது அணுகுமுறைகளும், நடைமுறைகளும் குற்றவாளி களுக்கு ஆதரவாகவே இருந்து வந்தன. ஜெய லலிதாவின் சாட்சியங்களை விசாரித்து முடிந்ததற்குப் பின் அரசு வழக்கறிஞர் தான் முறைப்படி தன் வாதங்களை எடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஜெயலலிதாவின் வழக் கறிஞர் பி. குமார் தன்னுடைய வாதங்களை எடுத்து வைக்கத் தொடங்கிய போது, அதை ஆட்சேபித் திருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதைக் கண்டு கொள்ளாமலேயே இருந்து விட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கர்நாடக அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு வாகனவதி; திரு. பவானி சிங் அவர்களை, அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டுமென்று கர்நாடக அரசு பரிந்துரையே செய்யவில்லை” என்றும், “கர்நாடக அரசு வேறு நான்கு வழக்கறிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களிலே ஒருவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமைநீதிபதி நியமித்துக் கொள்ளலாம்” என்றும் பரிந்துரை செய்த மிக முக்கியமான விவரத்தைக் குறிப்பிட்டார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
அப்போது கர்நாடக மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பு நீதிபதி ஒருவர் இருந்தார். அவர்தான் இந்த வழக்கில் ஏற்கனவே அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொண்டார். ஆனால் பொறுப்பு தலைமை நீதிபதி, கர்நாடக அரசு ஏற்கனவே பரிந்துரை செய்த நான்கு வழக்கறிஞர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல், தன்னிச்சையாக இந்த பவானி சிங் என்பவரை அரசு
வழக்கறிஞராக நியமித்தார்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவுக்குப் பிறகு, அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டு, இதனை விசாரித்த டி.எஸ்.பி. சம்பந்தம் என்பவர்தான், சட்டப்படி ஆற்றிட வேண்டிய கடமையை மறந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போதும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு விசாரணை அதிகாரியை அதே வழக்கில் சாட்சி யாகப் பதிவு செய்ய வேண்டுமென்றால், நீதிமன்றம்தான் அவரை “சம்மன்”” செய்து அழைக்க வேண்டும். அந்தக் குறைந்தபட்ச சட்ட நடைமுறைகூட இந்த வழக்கிலே பின்பற்றப்படவில்லை. கடைசி சாட்சியாக (99வது சாட்சி) டி.எஸ்.பி. சம்பந்தத்தை ரகசியமாகக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கச் செய்தார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த இந்த அதிகாரி, அரசு அதிகாரி என்ற முறையில் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சாட்சியாக விசாரிக் கப்பட்டு, சாட்சி ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் ஆட்சேபிக்கவில்லை. இதே பொறுப்பு விசாரணை அதிகாரிதான், அரசு வழக்கறிஞரை மீறி, நேரடியாகச் சிறப்பு நீதிபதிக்கு இந்த வழக்கு தொடர்பாக மறு விசாரணை செய்யப்பட வேண்டுமென்று முன்பு கடிதம் எழுதியவர். இதுகுறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாம் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, டி.எஸ்.பி.. சம்பந்தத்தின் கோரிக்கையை நிராகரித்த துடன், தமிழகத்தின் தற்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி செயல்படும் பொறுப்பு விசாரணை அதிகாரி சம்பந்தத்தையும் கண்டித்தது.
பவானி சிங் பொறுப்பேற்றவுடன் அரசுத் தரப்பு சாட்சிகள் 259 பேரின் சாட்சிய விபரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆவண சாட்சியங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள இரண்டு மாதம் அவகாசம்
வேண்டுமென்று கோரி 28-2-2013 அன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது சிறப்பு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அவர் கேட்ட அவகாசமும் தரப்படவில்லை. அதற்காக அவர் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யவே இல்லை.
சட்டத்திற்குப் புறம்பான இப்படிப்பட்ட காரியங் களையெல்லாம் கண்டபிறகு தான், இந்த வழக்கில் அரசுத் தரப்புடன் இணைந்து, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட எங்களை அனுமதிக்க வேண்டுமென்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு. கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா எழுத்துப்பூர்வமாக உங்கள் கருத்து களை எழுதித் தாக்கல் செய்யலாமே தவிர, வாதாட அனுமதியில்லை என்று தெரிவித்து விட்டார்.
இந்த முக்கியமான வழக்கின் சான்றாவணங்களாக உள்ள கைப்பற்றப்பட்ட நகைகள் சென்னை ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் உள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின் போது, அந்தச் சொத்துக்
களான நகைகள் எல்லாம் நீதிமன்றத்தின் பொறுப் பிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். இறுதி வாதம் நடைபெறுவதற்கு முன்பாக, அந்த நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது பற்றி சிறப்பு நீதிமன்றம் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த நகைகளைக் கொண்டு வந்து விசாரணை நடத்து வதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் தீர்ப்பளித்து விட வேண்டுமென்று நீதிபதி பாலகிருஷ்ணா அவசரப் பட்டது, அவர் தன் பதவி ஓய்வுக்கு முன்பாகவே தீர்ப்பளித்திட வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் போலும்! நகைகளை நீதிமன்றத்திற்கே கொண்டு வந்து பார்வையிடாமல், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியாது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக, தான் குறிப்பிடுகின்ற நீதிபதிதான் இருக்க வேண்டுமென்று ஜெயலலிதா தரப்பினர் தொடுத்த வழக்கில், கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகும், அதைப்பற்றி ஜெயலலிதா தரப்பினர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்தது. 15-11-2013 அன்று இதற்குப் பதிலளித்த கர்நாடக அரசு, “பாலகிருஷ்ணாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பு செய்வது குறித்துப் பரிசீலிக்கும்படி கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு தெரிவித்து, உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 அன்று உத்தரவு பிறப்பித்தது. அதேநாளில் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு பாலகிருஷ்ணா எழுதிய கடிதத்தில்; தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் தொடர்ந்து தனி நீதிபதியாகப் பணியாற்ற முடியாது என்றும், செப்டம்பர் 30 அன்றே தன்னை விடுவிக்கும்படியும் கேட்டிருந்தார். அவ்வாறே அவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக முடிகவுடரை தனி நீதிபதியாகப் பொறுப்பேற்க நியமிக்குமாறு, உயர்நீதி மன்றத்திலிருந்து ஆணை பெறப்பட்டு, அக்டோபர் 3 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அக்டோபர் 9 அன்று, பாலகிருஷ்ணாவைத் தொடர்ந்து, தனி நீதிபதியாக, மாவட்ட நீதிபதி ஒருவரை நியமனம் செய்வது தொடர்பாக உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பதவியில் தொடர பாலகிருஷ்ணாவுக்கு விருப்பமில்லாததால், அக்டோபர் 28 அன்று நடைபெற்ற முழு நீதிமன்றக் கூட்டம், பதவியில் உள்ள ஒரு நீதிபதியை நியமிக்குமாறு நிர்வாகக் குழுவைக் கேட்டுக் கொண்டதன் அடிப்படை யில், 2013 அக்டோபர் 29 அன்று சொத்துக் குவிப்பு வழக்கில் வழக்கு விசாரணையை நடத்த ஜான் மைக்கேல் குன்ஹா அவர்களைத் தனி நீதிபதியாக நியமிக்க நிர்வாகக் குழு முடிவு செய்தது. இதற்கான அறிக்கை 2013 அக்டோபர் 31 அன்று வெளியிடப்பட்டு, நவம்பர் 7 அன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். எனவே ஜெயலலிதா தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்”” என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
கர்நாடக அரசு இவ்வாறு தெரிவித்த நிலையில், இதுபற்றி ஜெயலலிதா தரப்பினரின் கருத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர். அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாஃப்டே, “கர்நாடக அரசின் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும்”” என்று கூறினார். அதையும் ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா தரப்பினர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்கள். குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினருக்கு ஆதரவாகவும், அரசு தொடுத்துள்ள வழக்குக்குப் பாதகமாகவும் பவானி சிங், எந்தெந்த வகையில் நடந்து கொண்டார் என்பதற்கான பல சான்றுகளும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இறுதியில் ஜெயலலிதா தரப்பினரின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவரே அரசாங்க வழக்கறிஞராக நீடிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு பவானி சிங்கே நீடித்து வருகிறார்.
யார் அரசாங்க வழக்கறிஞராகத் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் கேட்கப்பட்டதோ, அதே அரசாங்க வழக்கறிஞர் பவானி சிங் தான் பிறகு தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், தன்னால் வாதாட இயலவில்லை என்றும், வழக்கினை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் கோரியிருக்கிறார் என்றால், அதிலே ஆழமாகப் பொதிந்துள்ள உண்மையை அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறதா? இல்லையா?
27-1-2014 அன்று நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகாமல் இருப்பதற்காக விலக்களிக்க வேண்டுமென்று கோரி, அவர்களுடைய
வழக்கறிஞர்கள் நீதிபதியின் முன்னால் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருப்பதால் அரசுப் பணி இருப்ப தாகவும், சசிகலாவுக்கு கண் வலி இருப்பதாகவும், சுதாகரனுக்கு மூட்டு வலி இருப்பதாகவும், இளவரசிக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், அதனால் நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என்றும்குறிப்பிட் டிருக்கிறார்கள். இதற்கு கழக வழக்கறிஞர், தாமரைச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டிய எதிர் தரப்பு வழக்கறிஞர், அதாவது அரசு வழக்கறிஞர் எந்த விதமான ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்பது மற்றொரு விந்தை. அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆட்சேபணை தெரிவிக்காத காரணத்தால், நீதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.
அப்போதுகூட நீதிபதி, “நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரும் மனுவில் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்படவில்லை. இருப்பினும் இந்த முறை மட்டும் இம்மனுக்களை ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அடுத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர், தங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளில் சோதனை செய்த போது கைப்பற்றப்பட்ட பொருள்களில் வழக்குக்குத் தொடர்பில்லாதவற்றை திரும்பக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஒரு மனுவினை புதிதாக தாக்கல் செய்தார். வழக்கு முடிவடையும் கட்டத்தில் இருக்கிற போது, இவ்வளவு நாட்களும் சும்மா இருந்து விட்டு திடீரென்று இப்படியொரு கோரிக்கையை குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் வைக்க வேண்டிய அவசியம் என்ன? எப்படியாவது வழக்கினைத் தாமதம் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம் என்பது தெளிவாகிறதல்லவா?
கைப்பற்றப்பட்ட பொருள்களைத் திரும்பக் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு ஆட்சேபணையைத் தெரிவிக்குமாறு நீதிபதி அரசு வழக்கறிஞரைக் கேட்டதற்கு, அரசு வழக்கறிஞர் இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும், 2 வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டார். (ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி, வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க எடுக்கப்படும் முயற்சி தெரிகிறதல்லவா?)
எதற்காக அவ்வளவு கால அவகாசம்? அதுவும், குற்றவாளிகள் பாணியில், அரசு வழக்கறிஞரே கேட்டார்! அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ 2014, ஜனவரி 31ஆம்
தேதிக்குள் ஆட்சேபணை மனுவினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போதும் அரசு வழக்கறிஞர் தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதால் ஒரு வார கால அவகாச மாவது வேண்டுமென்று பிடிவாதமாகக் கேட்ட போது, நீதிபதி அதனை ஏற்காமல் நிராகரித்து விட்டார்.
அரசு வழக்கறிஞர் இவ்வாறு கால அவகாசம் கேட்டபோது, அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “இது குற்றவியல்
நீதிமன்றமா அல்லது ஒத்திவைப்பு நீதி மன்றமா?”என்று முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார்.
மேலும் நீதிபதி அவர்கள், “இந்த வழக்கு விசாரணை கடந்த பதினைந்து ஆண்டுகளாகநடந்து வருகிறது. விசாரணை நடந்த நாட்களைக் காட்டிலும், ஒத்தி வைக்கப்பட்ட நாட்கள்தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததின் நோக்கம், விசாரணை தினமும் நடந்து விரைவில் வழக்கினை முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.
இனியாவது வழக்கு தடையேதும் இல்லாமல் நடக்க வேண்டும்”” என்றெல்லாம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கருத்து தெரிவித்திருக்கிறார்.
2014, ஜனவரி 20ஆம் தேதியன்று விசாரணை நடந்த போது, சென்னையிலிருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்ட அசையும் சொத்துக்கள் தொடர்பான அத்தனை விவரங்களையும், பரிசுப் பொருள்களின் பட்டியலையும் தங்களுக்கு வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்து, நீதிபதி அப்போது அதனைத் தள்ளுபடி செய்தார்.
மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கை விரைந்து முடிக்க வசதியாக, வழக்கறிஞர்களின் இறுதி வாதம் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், உச்சநீதிமன்ற உத்தர வின்படி தினமும் விசாரணை நடக்கும் என்றும், முதலில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்த பின், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறி ஞர் வாதம் செய்ய வேண்டும் என்றும், இறுதிக் கட்ட வாதம் தொடங்குவதை எந்த நிலையிலும் காலம் கடத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
(தொடரும்)
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி
———————————————————-
மே13′ நிகழ இருப்பது
ஆண்டவன் கட்டளை..
ஈழத்து வேதனையின்
ஏக்க விளைச்சல்.
கோபப்படாமல் ஐயா
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
வெளியில் நீங்கள் வேசமிட்டு
நாடகம் ஆடினாலும்
உங்கள் கள்ளமான
உள்ளுணர்வில்
இப்படித்தான் நடக்கும் என்று
கருக்கட்டி
ஊற்றெடுத்த உண்மை
உத்தியோக பூர்வமாக
பிரசவமாகப்போகும் பொழுது.
காலதேவன் உங்களுக்கு
கட்டை இறுக்கப்போகும்
கனிவான கடைசி நாள்.
சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள்
இப்போதே நீங்கள் தத்தளிப்பது
தெரிகிறது
இருந்தும்
இது சிறிய ஆரம்பம் மட்டுமே.
தொடர இருப்பது பெருங்கதை
.
நவீன நரசிம்மர் உங்களுக்கு
இனி நிரந்தர ஆட்சி விடுமுறை
ஆனாலும் நீங்கள்
தொடர்ந்து அரச விருந்தினர்
அதற்கான மூலங்கள்
உங்களை சுற்றி படர்ந்து விட்டன.
இதன் பின்னும்
நச்சு பாஷாணமான
உங்கள் நாக்கு
நிச்சியம் உறங்க மறுக்கலாம்
என்ன செய்ய
உங்கள் குடும்பத்தலைவிகள்
குஞ்சம்மா பொன்னம்மா தவிர
கேட்பதற்கு இனி எவரும் வரப்போவதில்லை.
எச்சில் சிதற நீங்கள் எடுத்துவிட்ட
பத்தடுக்கு பொய் எல்லாம்
திரும்பி நின்று கும்மியடிக்கப்போகும்
கோரப் பொழுது.
இப்பொழுதே பத்திரிகைகள்மேல்
நீங்கள் எரிந்து விழுவது
சிரிப்பூட்டுகிறது.
அரை நாள் உண்ணாவிரதம்
அபத்தம் என்று
நீங்களே உணர்ந்துகொண்டதால்
இனி காற்றாடக்கூட
கடற்கரைக்கு போகமுடியாது.
சில நேரம்
கம்பி எண்ணவேண்டிய காலம்.
வெட்கமாக இருக்கிறதா
உதவிக்கு ஒத்தூதிய குஞ்சாமணியும்
குதிப்பேன் நிமிர்வேன் என்று
கோசமிட்ட தருமர்களும்
செத்த மாட்டின் உண்ணிபோல
மெல்ல விட்டகலப்போகும்
விகாரப்பொழுது.
இதே மே மாதம்
இரண்டாயிரத்து ஒன்பது
பதின் மூன்றளவில்.
ஒரு அதிகாலைப் பொழுது
ஆறு நாட்கள் அன்ன ஆகாரம்
இல்லாமல் கிடந்த
என் அன்னையையும்
இரண்டு தங்கைகளையும்
உன் அன்னை சூனியாவின்
எரி குண்டுக்கு இரையாக்கிய தினம்.
திகதி என்னவென்று தெரியாத
திகிலடைந்த பொழுதுகள்.
குடிநீர் இல்லாத கோடை வெய்யில்.
நடுநிசியிலும் குண்டுமழை.
உப்புக்கடற்கரையில்
பதுங்கு குழிக்குள் பனித்த
உவர்ப்பு நீர்கூட
இரத்தமும் மலமும் கலந்த கலவையாக.
ஆறு பொழுதுகள்
அந்த உப்பு நீரே உணவாகி
கோரக்குண்டில் சிதறி
என் தாயும் சகோதரிகளும்
செத்து மடிந்ததை அறிவீரோ?
காலை ஒரு கண்மணியிடம்
கோப்பியும் இட்லியும்
மாலை ஒரு மங்கையிடம்
மணக்கும் புறியாணி
செமியாக்குணம் போக்க
சுற்றி கதை அளந்து சிரிப்பூட்டும்
ஒரு செலுக் கூட்டம்.
நல்லெண்ணெய் தோசை
நாட்டுக்கோழி சூப்பு
பல்லிடுக்கில் தங்கிவிடா
மெல்லிய மீன் பொரியல்
சில்லென்று பருகிவிட
சிறப்பான மினரல் நீர்
பாலும் பழமும்
படுத்தவுடன் பெருத்த குசு.
இப்படியா ஐயா எங்கள் வாழ்வு
எரிகுண்டை எதிர்கொண்டு
இழவுகளை மடிதாங்கி
பட்டினியில் பாய்விரித்து
செத்து மடிந்த கதை
சத்தியமாய் அறியீரோ
நல்லதோர் வீணை செய்து-அதன்
நலன் கெடுத்து புழுதியில்
எறிந்தீர் கண்டோம்-நிச்சியம்
பதில் சொல்லுவாள் சிவசக்தி
சூத்திரம் என்னென்று
காண்பீர் என்பேன்,
பொல்லா எம் வாழ்வு-ஒரு
பொறியளவு புரிந்தீரோ-அதன்
வல்லமை காண்பீர் காண்
வரும் பொழுதுகளில்.
நல்லவை எல்லாம் போக
நடைப்பிணமாக நீர்-வண்டியில்
தள்ளிட ஆளில்லாமல்
தவித்திட நேரும் சொல்வேன்
சத்தியம் இதுவே யென்பேன்
சாவிலும் சபித்தே நிற்போம்.
உன் வாழ்வினில் குறுக்கே நாங்கள்
வந் திடர் செய்ததுண்டோ
ஏனென்று கேட்டு யாரும்
இன்னலை தந்ததுண்டோ
மூவிரு மணம் புரிந்தீர்
முலைப்பாலை மருந்தாய் கொண்டீர்
கோடியில் ஊழல் கண்டீர்
குடும்பமே கழகம் என்றீர்
மானுடம் காணா பொய்யும்
மலைபோல நஞ்சும் தாங்கி
போராடி களத்தில் நின்ற-என்
பிறப்பையே அழித்தாய் நேற்று.
எங்களை கொன்றொழித்தீர்
இனமானம் காக்க வெந்த-முத்து
குமரனையும் லூசன் என்றீர்
தீ சுட்ட வேதனையால்
சினங்கொண்ட சீமான் தன்னை
வல் வினை சாட்டி பொல்லா
செல்லினில் அடைத்தீர் கண்டோம்.
பதவியை விட்டுச்சென்று-நீ
பாடையில் போனாலும் காண்-என்
தாயவள் வயிற்றெரிவும்
தங்கையர் ஏம்பலிப்பும்
கூடவே எரிந்து மாண்ட
குழந்தைகள் விடலை பெண்கள்
காவலாய் நின்று காத்து
காவியமாகிப்போன
வீரரின் அழிவில் எல்லாம்
வினையாகிப் போனீர் ஐயா.
நாசமாய் போவீர் என்று
நான் மட்டும் சொல்லவில்லை.
ஊரெல்லாம் சொல்லக்கண்டேன்
உலகமே திட்ட கண்டேன்.
இனி எம்மிலும் கீழாய் உம்மை-நீர்
உணர்ந்திடும் நாளை காண்பீர்.
நல்லவை எல்லாம் உன்னை
நாடிடா தென்பேன் கொள்வீர்.
புத்திர சோகம் கொண்டு
புண்பட்ட எம்மைப் போலே
சத்தியமாக நீரும்
தண்டனை கொள்ள வேண்டும்
நிச்சியம் நடக்கும் நாளை
நிமிர்ந்து நாம் ஈழம் காண்போம்
கட்டுமரம் தாத்தாவின் மடலை படிக்கவே எரிச்சல் வருகின்றது. வழக்குப்பற்றிய வர்ணனைகள் எல்லாவற்றையும் தொகுத்து வெளியிட்டுவிட்டால் இந்த பாழ்பட்டுப்போன ஊழல்ப் பெருச்சாளி கருணாநிதி பரிசுத்தமானவன் என்று ஒரு மரம் தடிகூட சொல்லுமா, அல்லது கருணாநிதியின் மனச்சாட்சிதான் ஒத்துக்கொள்ளுமா. இந்த மனிதனின் அந்திமகாலத்தை காணவேண்டுமென்று எத்தனை கோடி மக்கள் விரும்பியும் கடவுள் கண் திறக்கவுமில்லை விதி திரும்பிப் பார்க்கவுமில்லை.
சவுக்கு தயவு செய்து ஒரு மன நிம்மதிக்காக கட்டுமரம் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை டாஸ்மாக் தமிழ் போன்றோரின் உதவியுடன் ஒரு கிளுகிளுப்பு தொடராக வெளியிட்டால் என்போன்ற பலகோடி தமிழர்களுக்கும் ஒரு விழாக்கால மகிழ்ச்சி கிடைக்கும்,
செய்வீர்களா?…………….
அன்பார்ந்த ஊர்க்குருவி, கட்டுமரத்தைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், சொத்துக் குவிப்பு வழக்கில் நடந்தது குறித்து அவர் எழுதி வருவது ஒரு ஆவணம். ஒரு சாதாரண ஊழல் வழக்கு எத்தனை ஆண்டுகளாக, எத்தனை தந்திரங்களை பயன்படுத்தி 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது என்பதை நாம் பதிவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களால் இப்படி செய்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
Dear Savukku, though you are right, I endorse the view of Oorkkuruvi for obvious reasons.Whether Karina has the guts to write on the same lines about 2G and all other sins committed by him and his family during the past so many years. Karuna has no moral right to write about Jaya if he looks back at what his family acquired during the past years when he was in office. Whether any Tamil can forget what he has done to Eelam Tamil. “Pinam thinnum kazhugugal”