ஆக்கர் வாங்கிய பம்பரம் குறித்து இந்து தமிழ் நாளேட்டில் ஒரு விமர்சனக் கட்டுரை வெளியாக, அதற்கு பதில் சொல்லும் வகையில் தஞ்சை இராமமூர்த்தி அந்நாளேட்டிற்கு கடிதம் ஒன்று எழுத அது மதிமுகவின் சங்கொலியில் வெளியாகியிருக்கிறது.
தஞ்சை இராமமூர்த்திக்கு 80 வயதாகிவிட்டதாமே. படித்தவுடன் அதிர்ந்துபோனேன். தமிழக அரசியலில் உரிய அங்கீகாரம் கிடைக்காமலேயே ஆண்டுகள் உருண்டோடிவிட்டனவே. கைத் தடியாய் இருக்கக்கூட அருகதை இல்லாதவர்கள் கைத்தடிகள் புடை சூழ வலம் வருகையில், தஞ்சையாருக்கு துணை அவரது கைத்தடி மட்டும்தான். என்ன கொடுமை இது.
அதைவிடவும் அவலம் அவர் வைகோ பக்கத்தில் நின்று மனம் மகிழ்வது, பிறகு அங்கிங்கெனாதபடி ஆக்கர் வாங்கியும் முழங்கிக்கொண்டிருக்கும், இப்போது பரிவாரத்தை பரிதாபகரமாக இறைஞ்சிக்கொண்டிருக்கும், வைகோவிற்கு வக்காலத்து வாங்குவதுதான்.
முத்தாய்ப்பான கொடுமை தஞ்சை சிங்கம் இராமமூர்த்தியை நான் மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டியிருக்கும் நிலைதான்.
சரி எனக்கேன் இப்பதட்டம் என்றால் அவர் நான் மிக மதிக்கும் ஒரு நபர். ஒரு கட்டத்தில் என் அரசியல் ஆசான் கூட எனச் சொல்லலாம். ஆசிரியராக, துவங்கி, திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு பிறகு காங்கிரசில் இணைந்தபோதுதான் எனக்கு அவரைத் தெரியவந்தது. மணிக்கணக்கில் பேசுவார். அற்புதமாகப் பேசுவார். வெட்டிப் பேச்செல்லாம் இல்லை. பொருள் பொதிந்திருக்கும். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர். திமுகவை விளாசித் தள்ளுவார் சற்றும் அஞ்சாமல். முற்போக்கு சிந்தனையாளர்.
1967ல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நேரத்தில், அப்போது சட்டக் கல்லூரியில் படித்து வந்த தஞ்சையார் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக்குழு என்ற அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்கு காமராசரை அறிமுகப்படுத்தினால் என்றால் அது மிகையாகாது. அவருக்குப் பின்னால் சுற்றிக்கொண்டிருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, வேலூர் தண்டபாணி, ஜகவீரபாண்டியன் உள்ளிட்டோர் பின்னாளில் பிரபலமாகின்றனர் இவர் மட்டும் பின் தங்கிவிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் அமைப்புக்கு தஞ்சையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திராவின் கவனத்தையும் கவர்ந்தார். மாணவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்தி அகில இந்தியத் தலைவர்களையெல்லாம் அழைத்து வந்து இடது சாரி சிந்தனைகளுக்கு உரமிட்டார். (அந்த வேகத்தில்தான் நான் மார்க்சிஸ்டானேன்.)
பின்னர் நடந்த மாணவர் காங்கிரஸ் முகாமெல்லாம் வெட்டிப்பேச்சு மேடைகளை. அரசியல் பொருளாதாரம் சமூகம் பற்றி ஆழமான விவாதமெல்லாம் இருக்காது. அப்போதைய தலைவருக்கு ஜால்ரா அடிப்பதில்தான் கவனம் இருக்கும்.
இராமமூர்த்தியின் அவர் போதாத காலம் காங்கிரஸ் உடைகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் காமராஜ் சிண்டிகேட் பக்கம் நிற்கிறார். தஞ்சையார் சரியாகவே, அவரது கொள்கைகளுக்கு நேர்மையாக, இந்திரா காங்கிரஸ் பக்கம் போகிறார். காமராசருக்கு மிக வருத்தம். பலரிடம் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார்.
தஞ்சையாருக்கு எம்பியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கும் சி.எஸ் போன்றோருக்கும் ஆகாது. இவருக்கு அறிவுச் செருக்கு வேறு அதிகம். பின்னர் இரண்டு காங்கிரசும் ஒன்றானபோது ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்டார். மூப்பனார் உட்பட அப்பகுதி பிரமுகர்கள் எவரும் இவரை விரும்பவில்லை. ஓரிரு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
பிறகு நெடுமாறனின் காமராஜ் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது நான் அவரை சந்திக்க நேர்ந்தது. “என்ன சார்? நீங்க போய் நெடுமாறனைப் போய் தலைவரா ஏத்துகிட்டு…..எவ்வளவு பெரிய ஆளாயிருந்து..” என நான் புலம்பினேன். “அதனாலென்ன. காங்கிரசில் இருந்திருந்தால் குமரி அனந்தனை அல்லவா தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்?” எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். அவர் நடப்பதிலும் சரி, பேச்சிலும் சரி ஒரு கம்பீரம் இருக்கும். அவர் நடந்து செல்வதையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவருக்கு ஏன் இப்படி ஒரு நிலை. பெருமூச்சுவிட்டு நான் நகர்ந்தேன்.
அங்கும் ஒன்றும் அதிக நாள் இல்லை. அப்புறம் ஏதோ தமிழ்த் தேசியவாதியானார். விவேகானந்தர் பற்றியெல்லாம் புத்தகம் எழுதினார். அதற்கு பழனி மாணிக்கத்திடம் முன்னுரை வாங்கிப்போட்டார். அவலம் அத்தோடு நிற்கவில்லை. சசிகலா நடராசன் விழாக்களிலெல்லாம் பங்கு பெறவேண்டியதாயிற்று. தஞ்சையின் பிரபல பேச்சாளர் வழக்கறிஞர் என்பதோடு அவர் பயணம் தேங்கிவிட்டது.
இப்போது கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என வைகோவிற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். என்னத்தை சொல்ல?
காங்கிரசில் நீடித்திருந்து அவரை சரியான முறையில் கட்சி பயன்படுத்திக்கொண்டிருந்தால் அல்லது அவர் இடதுசாரியாக ஆகியிருந்தால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கும். சமூகத்தின் சிந்தனையில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படக்கூட அவர் காரணமாயிருந்திருப்பார்.
ஈ.வே.கி சம்பத் போன்று அரசியல் விபத்துக்களால் முடங்கிப்போன இன்னொரு ஆளுமை எனதருமை தஞ்சையார். காலத்தின் கோலம்…..
தஞ்சையார் அவர்கள் 12/11/21 அன்று காலை வயதின் காரணமாக இயற்கை எய்தினார். குடந்தை அரசன் மீது போடப்பட்ட பல வழக்குகளில் விடுதலைப் பெற்றுத்தந்தார் ஐயாவின் சமூகநீதி சிந்தனையை என்றும் மறவேன்..
அய்யாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
தஞ்சை ராமமூர்த்தி ஒரு சிறந்த தலைவராக வந்திருக்க வேண்டியவர்.தமிழக அரசியலில் பல தலைவர்கள் கருணாநிதியின் அரசியல் சூழ்ச்சிகளுக்கும், தங்களது தவறான முடிவுகளாலும் ஒது(டு)க்கப்பட்டனர்.
அவர் இருக்கிறார் என்பதே இதைப்படித்தபின்தான் நினைவிற்கு வருகிறது.
EVK sampath ayya avarkalin arasiyal vibathu patri mudindhaal vilakkungal, DMK vin kora mugangalai paarkkalaam
TNG!
Good article as I too know and heard Thanjai Ramamurthy personally!
Howsoever one is good enough, he has to be pragmatic as per situations and change good with times!
That does not mean opportunism like many politicians!
That does not mean to be like adament obsessive left, liberal communists!
That mean, keep your views and stand clear and as well as trust you and grow up with time, situations and people!
If not, Time and tide , waits for none! In other words, in Kaliyug, time and situations make or mar all!
By the way dont club me as bramin, BJP, congress,DMK, ADMK or revolutionary!
Iam just a sensible middle class rags to riches guy by honesty and hardwork –Nambikai Nagaraj Dubai!
Nambikkai, this is TNG. how do u know thanjaiyaar? fr that town. am a native. u may write to me abt u on algop@rediffmail.com if u feel like tks
I would request Great JK (Jayakanthan)’s courageous to be documented.
I watched an interview of JK in youtube.
Q: Have you met MGR
JK: No. There was no reason to see him…
I don’t find any person who has not compromised on his political views like him
It is good that to know about the legendary people. Please consolidate them . So it becomes documented. The Gen next can look back