சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை ! – 8 – கருணாநிதி கடிதம்

You may also like...

3 Responses

 1. சுட்டெரிகிறது
  அடி வயிறு
  கும்மிருட்டிலும்
  கோடை வெய்யிலின்
  அதே கோரம்
  கோவாலபுரத்தில்
  சொட்டு தண்ணிர் இல்லாமல்
  கானல் மட்டும்.

  எங்கிருந்தோ எழுந்த
  புகைமூட்டம்
  சிஐடி நகரை சூழ்ந்திருக்கிறது.

  சாக்கடைச் சேற்றுக்குள்
  மொக்கு தவளை ஒன்று
  கால நேரம் பார்க்காமல்
  வக்கு வக்கென்று
  இடைவெளியில்லாமல்.
  நிசப்த வேளையிலும்,

  தண்ணீர் என்று ஏமாந்து
  திரும்பிய பூச்சி புழு குருவிகள்,
  தவளைகளை சபித்துக்கொண்டு
  ஏக்கத்தோடு வானத்தை நோக்கி
  ஏதோ சபிக்கின்றன,

  வழிப்போக்கன்
  சாக்கடைப்பக்கம் ஒதுங்கி
  வெற்றிலைச் சாற்றையும்
  சிறுநீரையும் கழித்து
  கலந்துவிட்டு போகிறான்,

  எதையும் பொருட்படுத்தாமல்
  சந்தன குளியலில்
  தலை நனைந்த
  மொக்கு தவளை
  சாக்கடைக்குள்
  தொடர்ந்து குரூரமாக
  வக்கு வக்கென்று,

  • நஞ்சுண்டமூர்த்தி says:

   // எதையும் பொருட்படுத்தாமல்
   சந்தன குளியலில்
   தலை நனைந்த
   மொக்கு தவளை
   சாக்கடைக்குள்
   தொடர்ந்து குரூரமாக
   வக்கு வக்கென்று //

   நச்சென்று மொக்குத்தவளையின் மண்டையில் போட்டார் ஊர்க்குருவி – சபாஷ்.

 2. //அவர்களுக்கு இருக்கும் மன தைரியமெல்லாம், “நாம் எத்தனை கோடிக்குச் சொத்துக்களைக் குவித்தாலும், நீதிமன்றத்தில் வாய்தாக்களைப் பெற்று, வரம்பின்றி இழுத்தடித்து, எத்தனை ஆண்டுகளை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின்படி கழித்து விடலாம்; மக்களோ நாம் எதைச் செய்தாலும், நம்மை நம்பி, வாக்களிக்கிறார்கள்”” என்பதுதான்!//

  அந்த நியாயம் கட்டுமரத்துக்கும் பொதுவானதே.

  //இதுதான் சொத்துக் குவிப்பு வழக்கின் பதினாறு ஆண்டுக் கால வரலாறு! இந்த வழக்கின் தீர்ப்பைத்தான் தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது;

  2ஜீ ஸ்பெக்ரம் வழக்கையும் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

  //இந்தியா முழுதும் உள்ள வழக்கறிஞர்களும், நீதித்துறை ஆர்வலர்களும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.//

  நாமுந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் அப்பொலோ ஆஸ்ப்பத்திரியில் தயாளுவை அனுமதித்ததை, ராமகிருஸ்ணா மருத்துவமனையில் கட்டுமரம் ஆளவந்தான் கமலின் பரிமாணத்தில் படுத்துக்கிடந்ததையும் கவனிக்க தவறவில்லை.

  //அந்தத் தீர்ப்பு வரக்கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை! பார்வையை மறைத்திடும் பனித்திரை விலகியே தீரும்! உண்மையை உலகம் உணரும்!//

  கட்டுமரத்தின் குடும்பம் செய்த ஆகாயத்தை முட்டுமளவுக்கான ஊழலை மத்திய மானில அதிகாரங்களை வைத்துக்கொண்டு நீதித்துறையின் கண்களில் மண்ணை கொட்டினாலும் ஆண்டவன் தீர்ப்பு என்று ஒன்று உண்டு பாமரன் நம்புகின்றான் எனக்கும் அதில் ஓரளவு நம்பிக்கையுண்டு..

  நான் குறிப்பிடுவது என்னவென்றால் ஜெயலலிதா ஊழல் குற்றவாளியென்றால் நிச்சியம் தண்டனை பெறவேண்டும், அதில் மாற்றுக்கருத்து கிடையாது அதேபோல ஊழலும் சந்தற்பவாத அழுக்காறு அரசியல் செய்து ஈழத்தில் எனது இனத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்ற கட்டுமரம் நாசமாகிப்போகவேண்டும் என்பதே.

Leave a Reply

Your email address will not be published.