மூழ்கினால் நல்லதுதானே ஆபத்தா என்று நண்பர்கள் எதிர்க் கேள்வி போடவேண்டாம். அப்புறம் அம்மாவும், கிஷோர் சாமியும் ஏகத்துக்குக் குதிப்பார்கள். இன்னொரு சுதாகரனே உருவாகிவிடக்கூடும் !

முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன்
விஷயத்திற்கு வருவோம். கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல்களில் தோல்வியடைந்து, சட்டப்பேரவையின் முக்கிய எதிர்க்கட்சி என்ற தகுதியையும் இழந்த திராவிட முன்னேற்றக் கழகம், மறுபடிம் மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்விய நிலையில், தான் குப்புற விழுந்த காரணத்தை அலசிக் கொண்டிருக்கிறது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? ஒருவேளை கைப்புண்ணையே பார்க்க முடியாத அளவுக்கு கண்ணில் புரை படர்ந்து விட்டதா என்றால் அதுவும் இல்லை. கண்டும் காணாததுபோல் இருந்து விட்டு, இப்போது புரையோடி, அறுவை சிகிச்சைத் தேவைப்படும் நேரத்தில், புண்ணுக்கு புனுகு பூசப் பார்க்கிறது திமுக மேலிடம். சென்னையில் திங்கட்கிழமை நடந்த உயர் நிலைக் குழு கூட்டத்தில், கட்சியின் தோல்விக்கான காரணங்களை, மாவட்டச் செயலாளர்களும், போட்டியிட்ட வேட்பாளர்களும், தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக இருந்தவர்களும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து தனித்தனியே அறிக்கை தயாரித்து தலைவர் கலைஞரிடம் தருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை தன்னுடைய 91-ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், உரிய நடவடிக்கைகளுக்குப் பிறகு, கட்சி வைரம் போல் ஒளிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால் இன்று திமுக என்ற அரசியல் இயக்கத்தை பீடித்திருக்கும் நோய் அதன் மாவட்டச் செயலாளர்களே என்று எல்லோருமே ஒப்புக் கொள்கிறார்கள். குறுநில மன்னர்கள் போல் வலம் வரும் இவர்கள் எல்லோருமே கட்சியின் தலைமைப் பொறுப்பேற்கத் துடியாய் துடிக்கும் மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதனால்தான் மாவட்டங்களைப் பிரித்து, இந்த மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தைக் குறைக்கும் ஒரு திட்டத்தையும் திமுக தலைமை முன் வைத்திருக்கிறது. தோல்வியைக் காரணம் காட்டி யாரையாவது வெளியேற்றினால், அவர்கள் உடனே போய் மு.க. அழகிரியின் அணியில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சமும் கட்சித் தலைமைக்கு இருக்கிறது. தறுதலையாய் பிள்ளைகளை வளர்த்து விட்டு பின்பு தவியாய்த் தவிக்கும் பெற்றோரின் நிலைதான் திமுகவுக்கு உருவாகியிருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரை கட்சியில் தன் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான போராட்டம் தொடங்கிய காலத்திலேயே, தனக்கு வேண்டிய, ஆனால் சமூகத்தில் எவ்வித நற்பெயரும் இல்லாத நபர்களை கட்சியில் ஊக்குவித்தார்.
சமுதாயத்தில் எவையெல்லாம் எதிர்மறையான, ஏற்றுக் கொள்ளத்தகாத குணங்களாக இருக்கின்றவோ, அவற்றையெல்லாம் கல்யாண குணங்களாக மாற்றும் வல்லமை படைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. மதுரையை நடுங்க வைத்தால் அவன் மாவீரன். காவல் நிலையத்தில் புகுந்து ஆதரவாளர்களை வெளியே கொண்டு வந்தால் அஞ்சாநெஞ்சன். ஊரில் அடாவடியாக அரசியல் நடத்துபவன் “முரட்டு பக்தன்” சிங்காரச் சென்னையை சீர்குலைக்கப் பார்ப்பவன் சிட்டாய்ப் பறந்து வேலை செய்யும் என் தம்பி கிட்டு. அவருக்கு சற்றும் குறைவில்லாமல் ஸ்டாலினும் அழகிரியும் நடந்து கொள்கிறார்கள். ஊரில் ஒரு கதை சொல்வார்கள். மாற்றான் தோட்டத்தில் இருந்து கத்திரிக்காயைத் திருடி வந்து தன்னுடைய அன்னையிடம் சமைக்கக் கொடுத்தான் ஒரு சிறுவன். சமைக்கும் போது அதில் விளக்கெண்ணெயை அதிகமாக ஊற்றி சமைத்துக் கொடுத்தாள் தாய். கசக்கிறதே என்று கேட்ட மகனிடம் திருடி சாப்பிட்டால் எல்லாமே கசக்கும் என்று சொன்னாள். ஆனால் திமுக தலைமை, தவறு செய்த தன்னுடைய பிள்ளைகளைப் பக்குவமாய்த் திருத்தாமல், கத்தரிக்காயை நன்றாக நல்லெண்ணெய் விட்டு வதக்கி, கொத்சு செய்து கொடுத்து பிள்ளையின் உடலைத் தேற்றும் தாய் போல் நடந்து கொள்கிறது. 2006-ஆம் ஆண்டில் இருந்து 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சிக்காலத்தில்தான் அக்கட்சியைக் குறித்த மக்களின் மதிப்பீடு அதலபாதாளத்தில் வீழ்ந்தது. நிலத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்த காலத்தில், அக்கட்சியைச் சேர்ந்த பலரும் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். பெரும்பாலும் எல்லா மாவட்டத்திலும் நில அபகரிப்பு வழக்கில் சிக்காத திமுககாரர்களே இல்லை என்ற அளவுக்கு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கட்சித் தலைமை அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை. திருச்சியில் திமுக அலுவலகம் கட்டப்பட்டிருக்கும் இடமே அபகரிப்பு நிலம்தான் என்ற அளவுக்கு நிலைமை தறிகெட்டுப் போனது. சாலையோரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, அதை விற்று பிள்ளைகளைக் கரையேற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த குடும்பங்கள், ரியல் எஸ்டேட் திமிங்கிலங்களின் வாயில் மாட்டிக் கொண்டார்கள். பலர் வலுக்கட்டாயமாக நிலங்களை விற்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர். திமுகவின் திருச்சி மாநாட்டில் பேசிய கருணாநிதியே, நேருவின் தம்பி இராமஜெயம் உயிரோடு இல்லாவிட்டாலும், அவர் தன்னுடைய நிலத்தை இந்த மாநாடு நடத்துவதற்கு வழங்கி பங்களிப்பு செய்திருக்கிறார் என்றார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கிறது அந்த நிலம். இத்தனை ஏக்கர் நிலம் எப்படி வாங்கப்பட்டது என்பது குறித்து தலைமைக்கு அக்கறையில்லை. மாநாடு நடத்துவதற்கு நிலம் கிடைத்தால் போதும் என்பதோடு அதன் கவலை முடிந்து விட்டது. குறிப்பிட்ட சில மாவட்டச் செயலாளர்களைத் தவிர எல்லோருமே இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் வரம்பு மீறி, சட்டத்தை மீறி அல்லது வளைத்து, காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு குதியாட்டம் போட்டார்கள். தனக்கு விசுவாசமாக இருந்ததால் தலைமையும் அவர்களின் அடாவடிகளைக் கண்டுகொள்வதில்லை. இது ஒரு புறமிருக்க, திமுகவில் ஒரு புது கலாச்சாரம் தொடங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிட முன் வருபவர்களின் செல்வாக்கு என்ன என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தேர்தலில் யார் அதிகம் செலவு செய்வார்கள் என்பதே ஒரு தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. பொறியியல் கல்லூரி நடத்துபவர்கள், சாராய ஆலை அதிபர்கள், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், பெரும் வியாபாரிகள் என கோடியில் புரள்பவர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டார்கள், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர.
இந்த சீரழிவு 2006லேயே தொடங்கி இப்போது மிகக் கோரமாகியிருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, இந்தத் தொகுதியில் இன்னார்தான் நிறுத்தப்படுவார். இன்னார்தான் மந்திரியாவார் என்று முன்னரே யூகித்துவிடும் அளவுக்கு நிலைமை உருவாகியது. பொந்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு கொழுத்துப் போன பெருச்சாளிகளாக இவர்கள் மாறிப் போனார்கள். புதிதாக வருபவர்களுக்கு எந்த வாய்ப்பும் இருக்காது என்ற நிலைமையில், இளைஞர்கள் பெரும்பாலும் திமுகவில் இருந்து விலகியே நின்றார்கள். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் புதிய வாக்காளர்களின் வாக்குகளை திமுக பெற முடியவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆளும் அஇஅதிமுக ஒன்றும் யோக்கியர்களின் கூடாரம் இல்லைதான் என்றாலும், அக்கட்சியைப் பொறுத்தவரை இரண்டாம் கட்டத் தலைவர்கள் கீழ் நிலையில் நடைபெறும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. (தலைமை தவறு செய்தால் கேட்க முடியாது என்பது வேறு!).
அஇஅதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வரும் நாட்களில் எல்லாம் தவம் கிடந்து, அவர் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கிடந்த தொண்டர்கள் பலர் இன்று சட்டப் பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களாக நுழைந்திருக்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் தொடர்ந்து கட்சி வேலை செய்யும் தொண்டனுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அத்தகைய ஒரு நிலைமை திமுகவில் இன்று இல்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம். தேர்தல் தோல்வி வரும் நேரத்தில் ஈவு இரக்கம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் திமுகவிலோ இரண்டாம் கட்டத் தலைவர்கள் எல்லோருமே தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட பிள்ளைகளாக நிற்கிறார்கள். சிறு கோல் கொண்டு ஓங்குவதற்குக் கூட தலைமையால் இயலாது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு திமுக குறித்தை மதிப்பீட்டை முற்றிலுமாக சிதைத்து விட்டது. அதில் சிக்கிய ஆ. ராசாவுக்கு மீண்டும் சீட் கொடுத்தது. காலையில் இருந்து இரவு தூங்கும் வரை காங்கிரசை வசவு பாடி விட்டு, தூக்கத்தில் திடீரென எழுந்து பிதற்றுவது போல், மதச்சார்பின்மையைப் பாதுகாக்க காங்கிரசைத் தேர்தலுக்குப் பிறகு ஆதரிப்போம் என்றார் கருணாநிதி. நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருப்பதைக் கணிக்க அவரால் முடியவில்லை.
பொதுவாகவே யதார்த்தங்கள் எதனையும் கலைஞர் உணர்ந்ததாகவோ அல்லது கீழ்மட்டத் தலைவர்கள் அவருக்கு உணர்த்த முயல்வதாகவோ தெரியவில்லை.
நவீன தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் விளைவாக பொருளாதாரக் கட்டமைப்பு வழுக்கு மரமாகியிருக்கிறது. அதில் ஏறும் மனிதனின் மனநிலையை திமுகவால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதையும் இழப்பதற்கு தயாராக இல்லாத ஒரு சமூகம், எதை செய்தாவது முன்னேற வேண்டும் எனத்துடிக்கும் சமூகம், அதன் காரணமாக கடவுள் நம்பிக்கையை நாடி நரம்புகளில் புகுத்திக் கொண்டு, திருப்பதி்க்கும் பழனிக்கும் பாதயாத்திரைப் போகும் சமூகத்தின் எண்ணவோட்டம் திமுக தலைமைக்குப் புரியவில்லை.
ஆனால் கலைஞர் தனது அறிக்கைகளில் பகுத்தறிவாளனாகக் காட்டிக்கொள்ளும் அதே நேரத்தில், திமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வீதியில் இறங்கி தொண்டன் பிரச்சாரம் செய்யும் அதே காலத்தில், ஸ்டாலின் மனைவி கோயில் கோயிலாக வலம் வருகிறார். கருணாநிதியின் துணைவியார் சாமியார் சாமியாராகப் பார்த்து பிரசாதம் பெறுகிறார். கனிமொழியைக் காப்பாற்ற யாகங்கள் நடத்தப்படுகின்றன.
90களின் இறுதியில் நெற்றியில் குங்குமத்தோடும் திருநீற்றோடும் கடலூரில் தொண்டர் ஒருவர் வரவேற்றபோது, கலைஞர். ”என்னை வரவேற்க ஒரு இளைஞன் வாசலுக்கு ஓடி வந்தார். அவர் பெயர் ஆதி சங்கர். அவரது நெற்றில் வடிவது குங்குமமா… ரத்தமா என தெரியவில்லை. பகுத்தறிவு கட்சியில் இருந்துகொண்டு இப்படி குங்குமம் வைக்கலாமா?” என்று திருமண விழா ஒன்றில் கொதித்தார். குங்குமப் பொட்டுவைத்து கருணாநிதியின் கோபத்துக்கு ஆளான அதே ஆதி சங்கருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடலூர் தொகுதியில் எம்.பி. சீட் கொடுத்து நாடாளுமன்றத்துக்கும் அனுப்பினார் கருணாநிதி. தலைமை தனது பகுத்தறிவு நிலைகளில் நேர்மை கடைபிடிக்கவில்லை என்பது தொண்டனுக்கும் தெரியும். மக்களுக்கும்தான். இந்நிலையில் அதன் அகங்காரம் கலந்த பாசாங்கு கட்சியை மக்களிடமிருந்து அந்நியப் படுத்தியது எனலாம்.
இன்றைய பொருளாதார நிகழ்வுகளின் மேலுமொரு பரிமாணம் மேல் மற்றும் இடைநிலை சாதியினர் தலித் மக்களுக்கெதிராகவும், சிறுபான்மையினருக்கெதிராகவும் அணி திரள்வதுதான். அத்தகைய திரட்டலை தீர்க்கமாக எதிர்க்காமல், கொடுமைகள் நடக்கும்போது பொத்தாம் பொதுவாக, மென்று விழுங்கி அறிக்கைகள் விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமிய தலித் அமைப்புக்களுடன் கூட்டணி அமைப்பதால் என்ன பயன்?
தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களிடம் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் அத்தகைய கூட்டணியும் படுதோல்விக்குக் காரணம் எனப் புலம்பியிருக்கின்றனர். இந்நிலையில் அரசியல் என்பதே தங்களை வளப்படுத்திக்கொள்ள என்ற ரீதியில் செயல்படும் கலைஞர் வகையறா இனிவரும் தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகளையும் மனிதநேய மக்கள் கட்சியையும் சற்று தள்ளிவைக்கவும் முற்படலாம். 2002 கலவரங்கள்போது கூட கருணாநிதி வாய் திறக்கவில்லையே.
காங்கிரஸ் உருக்குலைந்து, மதச்சார்பின்மை ஒரு கெட்டவார்த்தையாக மாறிவிடக்கூடிய சூழலில் இந்து மத தீவிரவாதம் ஆல்போல் தழைக்கக்கூடும், அதன் விளைவாய் சிறுபான்மையினர் மீதான திமுகவின் ’காதலும்’ கூட பட்டுப்போகலாம்.
எதைப் பற்றியுமே கவலைப்படாமல், காலாவதியாகிப் போன சொல்லாடல்களால் இன்னும் மக்களைக் கவர நினைக்கிறது தலைமை. கலைஞர் வசனம் எழுதி அண்மையில் எந்தத் திரைப்படமும் வெற்றி பெற்றதாக தெரியவில்லை. மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட தாய், உலகப் புகழ் பெற்ற மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலின் அடிப்படையில் உருவான திரைப்படம், ஒரு வாரம் கூட திரையரங்குகளில் ஓடவில்லை. இதில் நடித்த வித்தகக் கவிஞர் விஜய் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை கருணாநிதியின் அரசியல் சொற்போர்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.
1940-களில் பயன்படுத்திய பொருளற்ற, மேனாமினுக்கி வார்த்தைகளையேப் பேசி, அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கியிருக்கிறேன் என்று அழுது, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று ஒப்பாரி வைத்து, வாதங்கள் தோற்கும் போது வசவுகளை முன்னிறுத்தி, பார்ப்பனர்களை வசைபாடி, கடவுளர்களை கண்டித்து இன்னமும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர்.
ஊமைப் பட உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்த சார்லி சாப்ளின், திரைப்படம் பேச ஆரம்பித்ததும் திணறிப் போனார். சுதாரித்துக் கொண்டு, தன் பாணியை மாற்றி திரைப்படங்கள் தயாரிக்க முன்வந்தார். ஆனாலும் அவ்வாறு அவர் இயக்கிய பேசும் படங்களில் இரண்டே இரண்டுதான் வெற்றி பெற்றன. திமுகவுக்கோ இந்த சுதாரிப்பு தோன்றவேயில்லை.
(ஜெயலலிதாவைப் பொறுத்த வரை 1991-96 அட்டகாசங்கள், 2001-06 மமதை இவை கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. பேரழிவின் எல்லைக்குச் சென்றாலும் சற்று நின்று யோசிக்கிறார், கலைஞரும் அவருக்குக் கைகொடுக்கிறார்!)
கடைசியாக மு.க. அழகிரி. அவர் திமுகவின் வெற்றியைப் பாதிக்கவில்லை என்று எல்லோரும் வாதிடுகிறார்கள். உணவு விடுதி அதிபரின் மகன், அதன் வெளியே நின்று கொண்டு எங்கள் கடை சாம்பார் ஊசிப் போய் விட்டது என்று கூவிக் கொண்டிருந்தால், அங்கேப் போய் சாப்பிட பைத்தியக்காரன் மட்டுமே முன் வருவான். கடை வாசலில் இருந்து பையனை அப்புறப்படுத்தியது திமுக. அவன் ஊர் ஊராய் போய் ஊசிப் போன சாம்பார் புராணம் பாடினான். ஹோட்டல் வாசலில் கேட்ட குரல் தமிழகம் முழுவதும் கேட்டது. வியாபாரம் படுத்து விட்டது.
அஇஅதிமுக மீதான அதிருப்தியை பயன்படுத்தியே ஆட்சிக்கு வரமுடிவதால் மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் திமுகவிற்கு எழவில்லை. ஆனால் வரலாறு காணாத தோல்வி, ஓர் இடத்தில் கூட வெற்றி பெறமுடியாத அவலம், இப்புதிய நெருக்கடிகளை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் விழிக்கிறது கட்சி. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்று கோரிக்கை வைத்து தப்பிக்கப்பார்க்கிறது.
அது நடவாது. தலைவரே காரியம் கைமீறிப்போய்விட்டது. கட்சியின் போக்கில் பாரதூர மாற்றங்கள் ஏற்படாவிடில் கட்டுமரம் மூழ்குவது உறுதி. எங்கள் பங்கு ஊதிவிட்டோம். மற்றபடி உங்கள் விருப்பம்.
கலைஞர் பிறந்தநாள் கவிதைக்கு ஒருவரின் எசப்பாட்டு:
அஞ்சுகம் பெற்ற நஞ்சே…!
திருக்குவளை
தந்த தெருப்பொறுக்கி…!
தமிழ் பேசி
எடுத்த பிச்சையில்
தழைத்தோங்கியவன் நீ.
தமிழர்தம் அடிவருடி ,
பதவி பஞ்சனை சுகம் கண்ட கருங்காலி;
தமிழுக்கு நீ இழைத்த அநீதி,
தமிழ் உள்ளவரை பேசும்,
எடுத்துரைக்க நா கூசும்;
உன் குடி வாழ
தமிழர்தம் வாழ்வழித்தாய்…!
என் தமிழ் தலைவனை
கருவறுத்தாய்.
நஞ்சுறும்
உன் வாய் படித்த
மந்திரத் தமிழ்
இனியும்
மயக்காது எங்களை.
இதுதானா
ஈரோடு
உனக்கு கற்பித்த பேரேடு…?
அண்ணா
தோற்றுவித்த
அரும்பெரும் பொற்குவை..?
புறக்குருடா…!
தமிழ் பேசி பிழைத்த நீ – இனி
பேச மொழியின்றி சாவாய்…!
இசைத்தமிழ் பேசி
வயிறு வளர்த்த வயோதிகா – இனி
தமிழ் உன்னை
வசை பாடிக் கொல்லும்.
நீ செத்தொழியும் நாள்
எமக்கு திருநாள் ஆகும்.
– நீல எழில்வண்ணன்,
அதற்கு என் பதில் பாட்டு: இது ஊர்குருவிக்கு சமர்பனம்…
தமிழ் வேரருக்க வந்த
பார்வதி மகனே…
வெல்வெட்டிதுறையை
ரத்தவெள்ளத்துறையாக்கிய
நாசகார நாயே…
பார்வதி தாய்க்கும்
எரமு தாய்க்கு மட்டுமில்லை…
தமிழர்களை ஈன்ற
அத்துனை தாய்க்கும் நீ துரோகி…
மூன்று லட்சம் தமிழர்களை நீ கருவருத்தாய்…
தம்பிமார்களை நீ கொன்ற அநீதி..
தரணி உள்ளவரை பேசும்…
உன் பெயர் சொல்ல நா கூசும்…
வீரம் என்று விவேகத்தை இழந்தவனே…
இதுவா ஐயா ஜீவா கற்பித்த பேரேடு?
புறக்குருடா…
தமிழால் பிழைத்த நீ…
வாய்க்குள் ஈ புகுந்து சாவாய்..
நீ செத்தும் கெடுத்த சீதகாதி…
Hi,
my father worked for dmk party more than 20 years till now he not got a single post in higher level still he is in the same level ,at the same time like my father my neighbour father works for AIADMK now he is an MLA of my village.
This is the small example which has taken place in my life.
From this u come to know how the DMK party is?
But i have a faith definitely DMK strikes again ..iam waiting..as a thodan in 2014 till my end i will be the thodan.Engaluku DMK pathavi perumai elai nan DMK thodan endru soluvathu perumai tan.
pongada poi pullakuttikala padikka vaingada, thodanam thodan, Muthalla olunga type panna kathukko.
hi
I don’t find the meeting of the D M K discussing the past attitudes and errors with them if they realize it they may have an oppurtnity
As far as my concerned if the D M k must realize and learn lessons from its own activities it may once again from government
“சமுதாயத்தில் எவையெல்லாம் எதிர்மறையான, ஏற்றுக் கொள்ளத்தகாத குணங்களாக இருக்கின்றவோ, அவற்றையெல்லாம் கல்யாண குணங்களாக மாற்றும் வல்லமை படைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி”. அவ்வளவுதான். இதோடு நிறுத்தி இருக்கலாம். இதுக்கு மேல திமுகவை பற்றியும், முகவை பற்றியும் மக்களுக்கு புரிந்து கொள்ள வேறொன்றும் இல்லை. இந்த கட்டுரையை இவ்வளவு நீட்டி முழங்க ஒன்றுமில்லை. முக குடும்பத்தின் கடைசி நபர் திமுகவில் உள்ளவரை எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எனது வாக்களிக்கும் முறை டிபால்ட் செட்டிங். அதாவது ரெட்டலையில் வாக்களிப்பது. என்னை போன்று பெரும்பாலனவரின் எண்ணமும் அதுவே.
உலகமே வியந்த, 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், மீண்டும், லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்து, மூன்று அல்லது நான்கு லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கவும் தயங்க மாட்டார்கள் என்ற மக்களின் எண்ணமே, தி.மு.க.,வுக்கு, ஜீரோவை பரிசாக கொடுத்துள்ளார்கள். அரசியல் தொழிலை நேர்மையாக செய்யத் தெரியாதவர்கள்தான், தேர்தல் கமிஷனைப் பற்றியும், தேர்தல் நடைமுறைகளைப் பற்றியும் குறை கூறுகின்றனர். தாம் ஜெயித்தால் ஜனநாயகம்; எதிர்க்கட்சி ஜெயித்தால் பணநாயகம் என்று கூறும் இவர்கள் பணம் கொடுக்கவில்லையா, இவர்கள் கூறுவதைக் கேட்க, மக்கள், இனியும் முட்டாளாக இல்லை., இவர்கள் யாருக்கு சீட் கொடுத்தார்கள் கட்சிக்காக மாடாய் உழைத்த குப்பனுக்கும் சுப்பனுக்குமா,இல்லையே, ஒன்று ஊழல் செய்து பணம் வைத்திருந்தால் சீட்டு அல்லது பெரிய கோட்டிச்வரன் எவனோ அவனை பார்த்துதானே கொடுத்தார்கள், இதை, இவர்கள் உணர்ந்து குடும்பத்தை அரசியலில் இருந்து விளக்கி தங்களை திருத்தி கொள்வது நல்லது , இல்லாவிட்டால் டெபாசிட்டையும் இழக்க நேரிடும்.
சிறுபான்மையினரா? மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனர் யார்? ஜவகரிருல்லா.
யார் இந்த ஜவகரிருல்லா? அல்-உம்மா என்ற பெயரில் ஒரு தீவிர வாத இயக்கத்தை நிறுவிய இருவருள் ஒருவர். மற்றவர் பாஷா என்கிற பழனிபாபா, இப்போது உயிருடன் இல்லை.
கோவையில் குண்டுவெடிப்புச் செய்து கோவையின் வர்த்தகத்தையே பல பத்தாண்டுகளுக்குப் பின் தள்ளிய இயக்கம் அல்-உம்மா. இப்போதும் பெங்களூரு குண்டுவெடிப்பை நிகழ்த்திய இயக்கம் அல்-உம்மா.
அல்-உம்மா தடை செய்யப்பட்ட பின்னர் சிமி ஆனது, சிமி தமிழ் நாட்டில் தடை செய்யப் பட்ட பின்னர் பாபுலர் ஃப்ரொண்ட் ஆஃப் இந்தியா ஆனது. பின்னர் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆனது. இந்தப் பெயர் முஸ்லிம்களைக் குறிப்பதால் தமது “மதச் சார்பின்மை” வெளியே தெரிந்துவிடும் என்பதால் மனித நேய மக்கள் கட்சி என்று பெயரை வைத்துக் கொண்டது.
சவுக்குக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தும் இவற்றை மறைத்து விட்டு கருணா நிதி மனித நேய மக்கள் கட்சியை விலக்கி வைத்து விடுவார் என்று எழுதுகிறது என்றால் அதில் உள்நோக்கம் இருக்கிறது. நேற்று காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் 117 ஆவது பிறந்த நாள் நிகழ்விலும், ஜூன் மூன்றாம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் நிகழ்விலும் மனித நேய மக்கள் கட்சியின் ஜவகரிருல்லா மிஸ்ஸிங். காரணம்? ஏற்கனவே கருணா நிதி விழித்துக் கொண்டுவிட்டார். அவருக்கும் உளவுத் துறைத் தகவல்கள் உண்டு. அவரும் தேர்தலில் வாக்கு விவரங்களை அலசிப் பார்ப்பவர்தான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளிலேயே ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அதிமுக வாங்கி இருப்பது அவருக்கும் தெரியும். அதன் பொருள்? முஸ்லிம்கள் பெருவாரியாக திமுகவுக்கு வாக்களிக்க வில்லை. காரணம்?
அமைதி விரும்பும் முஸ்லிம்கள் தங்கள் பிரதிநிதியாக ஜவகரிருல்லாவையும் மனித நேய(?) மக்கள் கட்சியையும் அங்கீகரிக்க வில்லை. வெறுமே ரத்தக் களரியை விரும்பும் சில முஸ்லிம்கள் மட்டுமே ஜவகரிருல்லா (மனித நேய(?) மக்கள் கட்சி) பின்னால் நிற்கின்றனர்.
கட்டாயமாக பர்தா அணியச் சொல்வதை எந்த முஸ்லிம் பெண்ணும் விரும்பவில்லை. குறிப்பாக இளம் பெண்கள் இதை வெறுக்கிறார்கள். அவர்கள் தமது அடிமைத்தனத்துக்கு இது அச்சாரம் என்று உணர்ந்திருக்கிறார்கள். இந்தப் பெண்ணடிமைப் புகுத்தலுக்குக் காரணம் ஜைனுல்லாபுதீன் போன்றோரும், தவுகீத் ஜமாத்துகளும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இளம் முஸ்லிம் பெண்கள் இந்த மத வெறியர்களின் அடுத்த நடவடிக்கை பாகிஸ்தான் தாலிபான் போல, முஸ்லிம் பெண்களின் கல்விக்குக் கேடு விளைவிக்கும், ஒரு மலாலா இந்திய, தமிழ் மண்ணில் உருவாகக் கூடாது என்று விழிப்போடு இருக்கிறார்கள். இதற்கு அவ்ர்கள் தேர்ந்தெடுத்த ஆயுதம் அமைதியான வாக்குச் சீட்டு. பெண்ணடிமைத் தனத்தைப் புகுத்தும் ஜைனுலாபுதீன் இருக்கும் கூட்டணிக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய மகளிரும் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். இதைக் கருணா நிதி உண்ர்ந்திருக்கிறார். அவர் அதை உணர்ந்து விட்டார் என்பதை ஜவகரிருல்லாக்களும், ஜைனுல்லாபுதீங்களும் கூட உணர்ந்து விட்டார்கள்.
சவுக்கு விழித்துக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் என்ற போர்வையில் தீவிரவாதிகளும் மத வெறியர்களும் வளர சவுக்கு தன்னை அறியாமல் துணை போய் விடக் கூடாது. இந்தக் கட்டுரை அந்தப் பாதையில் பயணிக்கிறது. சவுக்கின் நலனுக்காகவும், இந்த நாட்டின் அமைதிக்காகவும், அமைதி விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களின் நலனுக்காகவும், அப்பாவி இஸ்லாமிய சகோதரிகளின் பேண்ணுரிமைக்காகவுமே இதை நான் முன்வைக்கிறேன்.
நிறைய தவறான தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். அல்-உம்மா பாஷாவும், பழனி பாபாவும் வேறு வேறு நபர்கள். பழனிபாபா என்பவர் ஜிகாத் என்ற அமைப்பை நடத்தினார். பல ஆண்டுகளுக்கு முன்பே கொலையானவர். பாஷாவுக்கும், ஜவாஹிருல்லாவுக்கும் தொடர்பே கிடையாது. ஜவாஹிருல்லா ஒரு பேராசிரியர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பது அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவே மனித நேய மக்கள் கட்சி.
கருத்து சொல்வதற்கு முன் சரியான தகவல்களை திரட்டிக்கொள்ளுங்கள்.
அல்-உம்மா பாஷாவும் பழனி பாபாவும் வெவ்வேறு ஆட்கள் என்ற தகவலுக்கு நன்றி.
ஆனால் எம்.எச். ஜவகரிருல்லாதான் அல்-உம்மாவை நிறுவியவர் என்ற உண்மையையும், அதே ஜவகரிருல்லாதான் மனித நேய(?) மக்கள் கட்சித் தலைவராகவும் தற்போது எம்.எல்.ஏ ஆகவும் உள்ளார் என்ற உண்மையையும் மறுக்காமல் இருந்ததற்கும் நன்றி. ஆக நான் சொல்ல வந்த தகவல் இதுதான். அல்-உம்மா என்ற தீவிரவாத இயக்கத்தை நிறுவிய ஜவகரிருல்லா இப்போது மனித நேய(?) மக்கள் கட்சி என்ற பசுத்தோலைப் போர்த்தி வந்திருக்கிறார். இப்படிப்பட்டவர்களுடன் கூட்டணி வைத்து அவரை என்.எல்.ஏ ஆக்கிய அதிமுகவும் ஜெயலலிதாவும் நாட்டுக்குக் கேடு விளைத்திருக்கிறார்கள். அதுபோலவே கருணாநிதியும் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து அவர்கள் வளரத் துணை செய்திருக்கிறார்.
சவுக்கின் இப்போதைய கவலை அவர்கள் மேலும் வளர முடியாமல் போய்விடுமோ, கூட்டணி பலம் இருந்தால்தானே தீவிரவாத அல்-உம்மா மனித நேயப் போர்வையில் வளர முடியும் என்பதாக இருக்கக் கூடாது என்பதே என் அவா.
Noor you are looks like one religious terrorist, you always supporting one party
http://sekarsgz.blogspot.in/2011/05/1970.html
Now a days when I read any media I think still DMK rules in the state Kindly see this url http://www.vinavu.com/2014/06/10/aiadmk-ec-collaboration/
which I think unbiased analysis about Tamilnadu MP elction
Not just District secretary, entire DMK cadres are rowdies nothing else.
Common people never wanted to vote for this rowdy gang.
In 1996, coward Rajini unnecessarily made Muppanar to align with DMK and gave life to DMK. Else people were so angry with JJ that they were ready to welcome Rajini or Muppanar as CM.
Again in 1999, arrogant Tamil Brahmins Subramaniya Swamy and JJ, toppled BJP Govt and made BJP move towards DMK and gave DMK new life in Centre.
Its good that rowdy DMK party is about to extinct.
intha mayir pilakkum matha sarbinmai mathavatha pithatralgal ellam kalavathi agi vittathu athai savukku kai vittal nallathu.hindukalai muslimgal kondral vayai mudi kondu irupathu athe engavathu muslimgal kollapattal intha bajanayai arambipathu.ithai thaan makkal purakanithu vitargale innum en intha vetti bajanai.intha matha sarbinmai bajanayai pakistan,bangladesh,afghanisthan,middle east pondra nadukalil nadathinal savukkirku ubayogamada irukkum.makkalukkum nallathu pavam antha nattu makkal matha sarbinmai kadai virithen kolvarillai endru engi kondu irukirargal.
90களின் இறுதியில் நெற்றியில் குங்குமத்தோடும் திருநீற்றோடும் கடலூரில் தொண்டர் ஒருவர் வரவேற்றபோது, கலைஞர். ”என்னை வரவேற்க ஒரு இளைஞன் வாசலுக்கு ஓடி வந்தார். அவர் பெயர் ஆதி சங்கர். அவரது நெற்றில் வடிவது குங்குமமா… ரத்தமா என தெரியவில்லை. பகுத்தறிவு கட்சியில் இருந்துகொண்டு இப்படி குங்குமம் வைக்கலாமா?” என்று திருமண விழா ஒன்றில் கொதித்தார். குங்குமப் பொட்டுவைத்து கருணாநிதியின் கோபத்துக்கு ஆளான அதே ஆதி சங்கருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடலூர் தொகுதியில் எம்.பி. சீட் கொடுத்து நாடாளுமன்றத்துக்கும் அனுப்பினார் கருணாநிதி. தலைமை தனது பகுத்தறிவு நிலைகளில் நேர்மை கடைபிடிக்கவில்லை என்பது தொண்டனுக்கும் தெரியும். மக்களுக்கும்தான். இந்நிலையில் அதன் அகங்காரம் கலந்த பாசாங்கு கட்சியை மக்களிடமிருந்து அந்நியப் படுத்தியது எனலாம்.
Very good article.Karunannidhi and his family ruined not only the party but also entireTamilnadu.At present nobody can revive the DMK. This party is solely responsible for dividing tamils in the name of caste and religion. Karunannidhi introduced liquor and corruption into Tamilnadu and ruined the state. He is now paying back for all the sins committed. Let him suffer, saffocate, spend sleepless nights. He will leave a name behind as the most cunning, cruel and monstrous person lived on this earth.
உங்கள் பங்குக்கு ஊதியது கடைசியாக ஊதுவதுதானே ? ? ? . . .ஊ.. ஊ.. ஊ.. ஊ.. ஊ………..
எனக்கு ஓரு விஷயம் மீடியாக்களை பற்றி தான் புரிய வில்லை திமுக தோற்றாலும் திட்டுகின்றனர் ஜெயித்தாலும் திட்டுகின்றனர் ஓ சாதி மதம் பேதம் இல்லை என சொல்லி கொண்டு அதற்கு பாடுபடும் தலைவர்களை இவ்வாறு தான் திட்டுவதோ அல்லது அழிப்பதோ மனசாட்சி பத்திரிகா தர்மம் போன்றவைகள் நல்லவர்களுக்கு மட்டும் தான் போலும் வாழிய வாழ்க
ithai vida thelivu paduththa mudiyathu. ithai thi.mu.ka. therinthu,thelinthaal,yethirkalam.illavittal iranthakalam thaan.
*******எங்கள் பங்கு ஊதிவிட்டோம். மற்றபடி உங்கள் விருப்பம்.****** Double Super!!!
ஊர்க்குருவி சபாஷ் சபாஷ்…ரவி சுந்தரம் நன்றி ஆசிரியர் குழு சார்பாக
//எதையும் இழப்பதற்கு தயாராக இல்லாத ஒரு சமூகம், எதை செய்தாவது முன்னேற வேண்டும் எனத்துடிக்கும் சமூகம், அதன் காரணமாக கடவுள் நம்பிக்கையை நாடி நரம்புகளில் புகுத்திக் கொண்டு, திருப்பதி்க்கும் பழனிக்கும் பாதயாத்திரைப் போகும் // பிரமாதம்..உங்கள் சிந்தனையின் வீச்சு இந்த ஒரு சொல்லாடலில் தெரிகிறது. நான் தவறான ஆளுக்கு புகழ்மாலை சூட்டவில்லை என்பதில் பெருமித படுகிறேன்.
திமுக கட்சி அழிந்துபோனதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று வெளியேறவேண்டியவர் கட்டுமரம் கருணாநிதியே, கருணாநிதியின் திட்டங்களை குழுநிலையில் வெளியிடுவதற்கு ஒன்று கூடும் தெரிவுசெய்யப்பட்ட பக்கவாத்தியக்காரர்களை உயர்நிலை குழுவென்று பெயர்சூட்டி திட்டங்கள் வெளியிடப்படுகின்றன.
அங்கு புதிதாக எந்த கருத்தும் கட்டுமரத்துக்கு எதிராகவோ கட்டுமரத்தின் வாரிசுகளுக்கு எதிராகவோ உயர்நிலை பக்கவாத்தியக்காரர்கள் வெளிப்படுத்த முடியாது. கட்டுமரம் சொல்லுவதை பக்கவாத்தியக்காரர்கள் முன்மொழிந்து மீடியாக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் அதற்காகவே அந்தக் குழு கூடுகிறது.
கட்டுரையில் சொல்லிக்கொண்டதுபோல் கட்டுமரத்தின் வீழ்ச்சி சீர்செய்து நிமிர்த்திவிடக்கூடிய சரிவு அல்ல. இனி ஒருபோதும் எழுந்திருக்க முடியாத படு வீழ்ச்சி.
நிமிர்த்த முடியாது என்று சொல்லுவதன் தார்ப்பரீகம் என்னவென்றால் கட்டுமரம் கருணாநிதி கையை கட்டிக்கொண்டிருந்தாலும் கட்டுமரத்தின் வழி வந்த வாரிசுகள் ஆயிரக்கணக்கில் பெருகிக்கொண்டிருப்பதால் குல வழக்கப்படி குற்றச்செயல்களை போதனையாக பெற்று பழக்கப்பட்ட அவர்கள் தமது தேவையின் நிமித்தம் குளப்பங்களை அதிகரிப்பார்களே தவிர குறைப்பதற்கு சந்தற்பமில்லை. உதயநிதி ஸ்ராலின். துரை தயாநிதி அழகிரி தமது சந்ததிகளை உழைத்து வாழ பயிற்றுவிக்கப்போவதில்லை.
ஜெயலலிதாவுக்கு பின் சந்ததிகளின் வில்லங்கம் இல்லை ஜெயலலிதா தான் நினைத்தாலே தவிர அகலக்கால் வைக்க வாரிசுகள் இல்லை. கட்டுமரம் கருணாநிதிகூட ஜெயலலிதாவின் 18 ஆண்டுகளுக்கு முன்னைய சொத்துக்குவிப்பு வழக்கை மட்டுமே காலையும் மாலையும் விமர்சிக்க முடிகிறது புதிதாக சொல்லும் குற்றச்சாட்டுக்கள் தண்ணீர்த் தொட்டி தலைமை செயலகம் மருத்துவ மனையாக்கப்பட்டது. செம்மொழி பூங்கா கவனிக்கப்படவில்லை, சேது சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிற்து என்று கட்டுமரத்தால் நிறுவப்பட்ட ஊழல் திட்டங்களை இயலாமையில் எடுத்துக்கொடுத்து அடிவாங்கி வருகிறார்.
இன்னும் அதிகப்படியாக கணக்கிட்டாலும் கட்டுமரத்தின் ஆயுட்காலம் ஒன்பது வருடங்கள். இப்போதே ஞாபக மறதி, ஓலம், தூக்கமின்மை, பினாத்தல் வந்துவிட்டதாக சொல்லுகின்றனர். இன்னும் ஓரிரு வருடங்களில் எதுவும் நடக்கலாம்.
காங்கிரஸ் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி,
திமுக தமிழ்நாட்டை ஆண்ட கட்சி,
என்று வரலாறு சொல்லுவது தவிர்க்க முடியாது. மே 13 2011 உடன் திமுக முடிவுக்கு வந்துவிட்டது. என்பதையும் வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும்.
கோவில் முற்ற வளாகத்தில்
தோப்பாகி துகிலுடுத்தி
குருவியும் குயிலும்
காகமும் குடியிருக்க
பூத்து குலுங்கி நிழல் கொடுத்த
வேப்பமரத்தில் இருந்து
இறங்கிய சிற்றெறும்பு ஒன்று
தலைவரின் பேத்தியின்
அந்தரங்கத்தில் கடித்துவிட்டதால்
வேப்பமரம்
தறித்து அகற்றப்பட்டுவிட்டது.
இருப்பிடம் இல்லாமல்
வேப்பமர நிழலே வீடாக்கி
அந்தரங்க அனுமானம் செய்து
அன்றாடம் காய்ச்சி நாடோடி குடும்பம்
வேப்பமர அழிப்பால்
நிலைகுலைந்து போயின.
நித்தம் ஊர்காத்து உறங்கி
வேப்பமர நிழலில் நிலைகொண்ட
நாய் ஒன்று
மெத்தப்பெரிய வேதனையால்
சித்தம் கலங்கி சிதைந்து
அரற்றி ஊளையிட்டது.
காகமும் குருவியும் குயிலும்
வெவ்வேறு மரங்களை நாடின
ஆந்தையும் கோட்டானும்
இடம் கொடுக்கவில்லை
தாய் மரம் தறிபட்ட வேதனை
சாபமாகி சபித்துவிட்டு
வனாந்திரம் போய்விட்டன.
அருமையான தெளிவான கட்டுரை. அப்படியே கட்டுமரதிர்க்கு ஒரு நகல் அனுப்பிவிடுங்கள். திமுக அழிவது தமிழகதிற்கு நல்லது. ஒரு குடும்ப கட்சியான பின் அதற்க்கு திமுக உடன்பிறப்புகளிடம் மற்றும் தமிழக மக்களிடம் இருந்தும் ஆதரவு இல்லை என்பதை தெரிந்து கொள்ளட்டும். முடிந்தால் கருணாநிதி குடும்பத்தினர் இல்லாத ஒரு தலைவரை தேர்ந்து எடுத்து வருகின்ற தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் ஓரளவுக்கு முனேற்றம் ஏற்படும். அது நடக்குமா என்பதே சந்தேகம்.
ETHUTHAAN NATTAKUM MARUPADUM DMK VARUM KARANAM ADMK DMK ERANDILUM SAMAPARITHA MUTHALAIGAL MARI MARI KATHCHI NADATHI KATCHIGALAI MATRUVARGAL
DMK should have no place in TN. It should die. It is a historical mistake that has ruined TN. No doubt we Tanils need a separate country for the heritage of language and rich ancient culture. But it should not be at the behest of discredited individuals like Karuna. He has brought disrepute to the language and state and has spoiled the spirit. He should live long enough to see his wife & daughter in jail and his sons fighting on the streets and become like his eldest son falling at the feet of JJ and should feel humiliation in every moment of his remaining life.