1980களில் சோவியத் யூனியனில் நடைபெற்று வந்த பெரிஸ்ட்ராய்கா (சீரமைப்பு) பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தபோது, நீண்ட வடு ஒன்று கோர்பசேவின் தலையினைப் பிளப்பது போலத் தெரிகிறதல்லவா அது போல சோவியத் யூனியனும் சிதறுண்டு போகப்போகிறது என நக்கலடித்தாராம் கண்ணூரைச் சேர்ந்த தோழர் ஒருவர்.
உண்மையில் அப்படித்தான் இறுதியில் நிகழ்ந்த்து. ஆனால் எவரும் சோவியத் யூனியன் சிதைவிலிருந்து சரியான பாடங்களைக் கற்றுக்கொள்ள முன்வரவில்லை. சோவியத்களை முடக்கி, அனைத்து அதிகாரங்களையும் கட்சியின் தலைமைப் பீடத்திற்குள் தக்கவைத்துக்கொண்ட லெனினின் முயற்சிகளுக்குக் கிடைத்த பெருந்தோல்வியாக இருக்குமோ சிதைவு என்ற ரீதியில் எவரும் சிந்திக்கத் தயாரில்லை.
தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடே ஒருமுறை ஸ்டாலினீயத்தைக் கைவிடவேண்டும், சமூக, அரசியல் யதார்த்தங்களுக்கேற்ப நமது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும் எனச் சொல்லி வகைதொகையாக மாட்டிக்கொண்டார், பொலிட் பீரோ உறுப்பினர்களின் கடும் கண்டனத்திற்குள்ளானார். அப்போது அவரைக் கண்டித்தவர்களில் ஒருவர் சிபிஎம்மின் தற்போதைய சீரழிவிற்கு முழுப்பொறுப்பேற்கவேண்டிய கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்.
ஏறத்தாழ ஒரு நூறாண்டுக்காலம் இந்திய பூர்ஷ்வாக்கள் எங்களை மைய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்ட முயற்சித்தும் வெற்றி பெறமுடியவில்லை ஆனால் பத்தாண்டுகளிலேயே அத்தகைய சாதனையினை நிகழ்த்திக்காட்டிவிட்டார் காரத் எனப் பொருமுகிறார் மூத்த மேற்கு வங்கத் தோழர் ஒருவர்.
அம்மாநிலத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக செங்கோலோச்சிய சிபிஎம் முதலில் மமதாவிடம் படுதோல்வி கண்டது. அண்மையில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலோ பாரதீய ஜனதா அதனை மூன்றாவது இடத்திற்கே தள்ளியிருக்கிறது.
கட்சித் தொண்டர்கள் காரத்மீது கடுங்கோபத்திலிருக்கின்றனர் என்கிறார் அந்த மேற்கு வங்கத் தலைவர். கட்சியின் அடிமட்டத்தில் பணியாற்றிய அனுபவம் ஏதுமின்றியே காரத் 2005ல் பொதுச் செயலாளராக்கப்படுகிறார். அப்பொறுப்பேற்கும் முன்பே கூட அவரது வறட்டுச் சித்தாந்த அணுகுமுறை பல மூத்த தலைவர்களுக்கு எரிச்சலூட்டியது.
66-வயதான காரத் அடுத்த ஆண்டு பதவியிலிருந்து விலகியாகவேண்டும். அவர் 76 வயதான ராமச்சந்திரன் பிள்ளையை அடுத்த செயலராக்க முயன்று வருவதாகத் தெரிகிறது. பிள்ளையைவிட மிக இளையவரான, 61 வயது சீத்தாரம் யெச்சூரி அப்பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதிலும் காரத் மிகுந்த அக்கறை காட்டுகிறார். ஏனெனில் யெச்சூரிக்கும் அவருக்கும் ஆகாது, ராமச்சந்திரனோ காரத்தின் தாசானுதாசன்.
காரத் பதவியேற்றபோது சிபிஎம் நாடாளுமன்றத்தில் 43 இடங்களைப் பெற்றிருந்தது. காங்கிரஸ், மற்றும் பாஜகவிற்கு மாற்றான சக்திகளுக்கு அது தலைமை தாங்கியது. மன்மோகன் சிங் தலைமையில் 2004ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உருவாவதற்கு முக்கிய காரணமே அன்றைய சிபிஎம் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித். அவருக்கும் சோனியாவிற்கும் நல்லுறவிருந்த்து. பாஜகவிற்கெதிரான கட்சிகளும் அவரை மதித்தன.
சுர்ஜித்திற்கு இந்திய அரசியலின் அனைத்து நெளிவு சுளிவுகளும் நன்கு பரிச்சயமானவை, ஆனால் காரத்தோ சற்று அசட்டுத் தனமாகவே நடந்து வந்திருக்கிறார். இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பில் வீண் பிடிவாதம் பிடித்து, காங்கிரசிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்ப்ப் பெற்று அக்கட்சியை முலாயம் சிங் பக்கம் தள்ளியது காரத்தான். பின்னர் நடந்த தேர்தல்களில் 43லிருந்து 15 ஆகக் குறைந்த்து சிபிஎம்மின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை. அந்த வீழ்ச்சிக்குக் காரணம் அவசரப்பட்டு காங்கிரசிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப்பெற்றதுதான் எனப் பின்னர் கட்சி ஒத்துக்கொண்டது.
( அதனால் கட்சியின் செயல்பாட்டிலோ அல்லது காரத்தின் அணுகுமுறையிலோ மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்பது வேறு கதை.)
முலாயம் சிங்கும் காங்கிரசும் நெருங்கிவந்த நேரத்தில் உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள முயன்றார் காரத். இது முட்டாள்தனமான முயற்சி, காரத்தும் ராமச்சந்திரனும் விவரமில்லாமல் விளையாடுகின்றனர், பொலிட் பீரோவின் மற்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் இரகசியமாக மாயாவதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர், இது பெருந் தவறு என யெச்சூரி கண்டித்தார். ஆனால் கட்சியின் மற்ற மூத்த சகாக்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
காரத் தான் முதிர்ச்சியற்றவர் என்பதைத் தொடக்கத்திலிருந்தே காட்டி வந்திருக்கிறார். 1996ல் ஜோதி பாசு பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது ஏகப்பட்ட இரகளை செய்து குறுக்கே விழுந்து தடுத்தவர் அவர்தான். (மிகப் பெரும் வரலாற்றுத் தவறு அதுவென பின்னர் ஜோதி பாசுவே குறிப்பிட்டார்.)
(யெச்சூரி கூட ஒரு கட்ட்த்தில் ஜோதி பாசு பிரதமராவதை ஆதரிக்கத்தான் செய்தார். ஆனால் மத்தியக் கமிட்டியில் கராத் கோஷ்டியினரே பெரும்பான்மையினராய் இருந்த்தால் அவரும் காரத் பக்கம் சேர்ந்துகொண்டார். ஆனாலும் அவ்விருவருக்கும் நெருக்கம் கிடையாது.)
அதே போன்று 2004ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்தது காரத் உள்ளிட்ட இளம் தலைவர்கள்தான் என சுர்ஜித் புலம்பினார். மறுபடி மறுபடி இற்றுப்போன வாதங்களையே அவர்கள் முன்வைக்கின்றனர், நக்சலைட்டுகள் போல் நடந்துகொள்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். சில காலம் கட்சிக் கூட்டங்களில் பங்குபெறுவதைக் கூட தவிர்த்துவந்தார் சுர்ஜித். அப்புறம் பிரம்மப் பிரயத்தனம் செய்துதான் சமாதானப் படுத்தினார்கள்.
இத்தனைக்கும் காரத் கிரிக்கெட் இரசிகர். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெறும் மற்ற அரசியல்வாதிகள்போல் அல்லாது படாடோபங்களை அறவே தவிர்ப்பவர்தான் காரத்.. சுந்தரய்யா தொடங்கி வேறு எந்த பொதுச் செயலாளரையும்விட ஆழ்ந்த புலமை பெற்றவர். ஆயின் என்ன? வறட்டு சித்தாந்தி. நூல்களைத் தாண்டி பட்டறிவு அவருக்கு இல்லை என்கிறார் ஒரு சிபிஎம் தலைவர்.
உலகமயமாதலின் பின்னணியில் ஏற்பட்டு வரும் சமூகச் சூழலை சரியாக இடதுசாரிகள் சரிவர உணரவில்லை என்கிறார் முன்னாள் டில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் சுதா பை. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகும் தொடர்ந்து காலாவதியாகிப்போன கருத்தியல்களை உடும்புப் பிடியாக பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றனர், மூர்க்கமான அமெரிக்க எதிர்ப்பையும் அவர்கள் கைவிடமறுக்கின்றனர். மற்ற இந்தியக் கட்சிகளை பூர்ஷ்வா அமைப்புக்கள் என்ற நோக்கிலேயே பார்ப்பதால் அவற்றுடன் உடன்படிக்கைகள் ஏற்படுத்திக்கொண்டு ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்புக்களையும் மறுபடி மறுபடி தவறவிடுகின்றனர் என்றும் குறைகூறுகிறார் பை.
அத்தகைய தவறுகளுக்கெல்லாம் முழுமுதற்காரணம் காரத்தான் என்கிறார் அவரைக் கடுமையாக கட்சி மட்டங்களில் விமர்சித்து வரும் பொலிட்பீரோ உறுப்பினர் ஒருவர். மேற்கு வங்கத்தில் கட்சியை குட்டிச்சுவராக்கியதும் காரத்தே. சிபிஎம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்ட நிலையில் அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக மறுத்தபோது மேற்கு வங்க மார்க்சிஸ்டுகள் அவர் கட்சியில் நீடிக்கவேண்டும் என்றும் அவரைக் குடியரசுத் தலைவராக்கிவிடவேண்டும் எனவும் குரல் கொடுத்தனர். ஆனால் காரத் கோஷ்டி அத்தகைய முயற்சிகளை முறியடித்த்து.
அகம்பாவத்தினாலும் அசட்டுத்தனத்தினாலும் பல பெருந்தவறுகள் புரிந்து கட்சி சீர்குலைவதற்கு வித்திட்டுவிட்டார் காரத் என டில்லி சிபிஎம் தலைவர் ஒருவர் குறிப்பிடுகிறார். மேற்கு வங்க சட்டமன்றத்தில் சிபிஎம் கூட்டணி 294லிருந்து 69 ஆக வீழ்ச்சியடைந்த்து காரத் தலைமையில்தான்.
பாசு பிரதமராவதைத் தடுத்ததிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்ப்ப் பெற்றது வரை காரத் செய்தது எல்லாமே தற்கொலைக்குச் சமம். காங்கிரசிற்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்து எங்கள் தோழமைக் கட்சிகளையும் பகைத்துக்கொண்டோம், என்கிறார் தற்போது டில்லியில் தங்கியிருக்கும் மேற்கு வங்க சிபிஎம் தலைவர் ஒருவர்.
ஆனால் வசதியாக எல்லாவற்றையும் காரத் தலைமையில் கட்டமுடியாது. மேற்கு வங்க கட்சித் தலைமையும் தானே பல தவறுகளைச் செய்த்து என்கிறார் இன்னொரு தோழர். எங்கள் அடாவடியைக் கண்டு மக்கள் பலர் மனம் நொந்து போனதால்தான் நாங்கள் படுதோல்வியடைந்தோம் என்கிறார் அவர்.
அம்மாநிலத்தில் சிபிஎம் கொடிகட்டப் பறந்தபோது அங்கு வாழ்ந்த தனியார் நிறுவன அதிகாரி ரவி நெடுங்காடி இளைஞர்களின் மன நிலையினைக் கட்சி உணரத் தவறிவிட்டது எனக் குறிப்பிடுகிறார். மும்பய் ஆனால் என்ன டில்லி ஆனால் என்ன கல்கத்தாவானால் என்ன எல்லாவிடத்திலும் இளைஞர்களின் அபிலாஷைகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன என்பது அக் கட்சிக்குப் புரியவில்லை என்றார் அவர்.
1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) யிலிருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மூத்த தலைவர்கள் கடும்போக்காளர்கள் அல்லது தீவிரவாதிகள் எனலாம். ஆனால் அவர்களுக்கு அடிமட்ட அரசியல் தெரிந்திருந்தது, மாறும் சமூக, அரசியல் சூழல்களை நன்கு உணர்ந்தவர்களாயிருந்தனர்.
பிரகாஷ் காரத் போன்ற இளந்தலைமுறையினரை தலைமைப் பீடத்தில் அமரச் செய்தவர் மறைந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட். 37 வயதில் காரத், 47 வயதில் ராமச் சந்திரன் பிள்ளை, 33 வயதிலேயே யெச்சூரி என்று இளைஞர் பட்டாளம் தலைமைக்கு உயர்த்தப்பட்ட்து. தொடர்ந்து சுனில் மைத்ராவும் பி.இராமச்சந்திரனும்.
மேற்கு வங்கத்தில் மாநில பொதுச் செயலர் பிரமோத் தாஸ் குப்தாவும் பிமன் போஸ், சுபாஷ் சக்கரவர்த்தி, அனில் பிஸ்வாஸ், புத்த்தேவ் பட்டாசார்யா எனப் பல இளைஞர்களையும், கேரளாவில் ஏ.கே கோபாலன் தன் பங்கிற்கு பல இளைஞர்களையும் ஊக்குவித்தனர், முக்கிய பதவிகளில் அமர்த்தினர்.
ஆனால் அத்தகைய அணுகுமுறையின் காரணமாகப் பயன்பெற்ற காரத்தோ இளைஞர்களைக் வளர்த்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
கடந்த கட்சி காங்கிரசில் மேற்கு வங்க சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சூர்யகாந்த மிஸ்ரா, தமிழகத்தைச் சேர்ந்த சிஐடியூ தொழிற்சங்கத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் மற்றும் கேரளாவிலிருந்து எம்.ஏ.பேபி ஆகியோர் பொலிட் பீரோவிற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
(சில குற்றச்சாட்டுக்களுக்குள்ளான உ.இரா.வரதராசனை கட்சியில் பதவி இறக்கம் செய்து அவமானப்படுத்தி மனம் வெதும்பச் செய்த்தில் தோழர் ஏ.கே.பிக்கு முக்கிய பங்குண்டு. அப்பின்னணியில்தான் வரதராசன் தற்கொலை செய்துகொண்டார் என்பதால் கட்சியின் அணுகுமுறை குறித்து பல தரப்புக்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அப்போதுதான் ஏ.கே.பி சிஐடியூவின் அகில இந்தியத் தலைவராகி பின்னர் பொலிட் பீரோவிலும் நுழைகிறார். ஊடக விமர்சனங்கள் அல்லது கீழ் மட்டக் கொதிப்பு எம்மை என்ன செய்யும் என்று காரத் சவால் விடுவது போன்றுதான் அவரது அந்தச் செயல்பாடு அமைந்தது.)
கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசியவாத இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டு அவற்றை தம் கட்டுக்குள் வைத்திருந்த கதை நிறைய உண்டு. தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைமை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. நேபாளத்தில் கூட அப்படித்தான். ஆனால் அவ்வாறு தேசிய இயக்கங்களுடன் ஒத்துப்போய் தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள நம் கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைப் புறக்கணித்து, அவப்பெயரையும் சம்பாதித்துக்கொண்டனர் என்கிறார் வரலாற்றாசிரியர் எம்.ஜி.எஸ் நாராயணன்.
2006ல் ஒரு காங்கிரஸ் பிரிவுடன் கைகோர்க்க அம்மாநில சிபிஎம் முன்வந்த்து ஆனால் பொலிட் பீரோ அனுமதி மறுத்தது.
யார் பெரியவர் என்ற மோதல் காரணமாகத்தான் அப்படி நடந்தது. மாநிலச் செயலர் பினரயி விஜயன் அகில இந்தியத் தலைமையைக் கலந்தாலோசிக்காமலேயே அப் போட்டி காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத்துவங்கினார். பின்னர்தான் காரத்திடம் அது பற்றிச் சொன்னார். தன்னை மதிக்காமல் பினரயி செயல்பட்ட்தாக நினைத்த காரத் அக்கூட்டணி ஏற்படவிடாமல் செய்தார். நட்டம் யாருக்கு, சிபிஎம்முக்குத் தானே?
அச்சுதானந்தன் விருப்பம்போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை வேண்டும் எனக்கோரப்பட்டபோது, எந்த உறுதியான முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தினார் காரத். ஆனால் தனது அதிரடி செயல்பாடுகளால் பலரது கவனத்தையும் கவர்ந்து குறிப்பிட்த்தகுந்த தலைவராய் அச்சுதானந்தன் வளர்ந்துவிட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் துவங்கினார் காரத். ஆனால் பயனில்லை என்கிறார் ஒரு கேரளத் தலைவர்.
(கேரள விவகாரங்களைப் பொறுத்தவரை கட்டுரையாளர் பினரயி விஜயன் கோஷ்டியினரின் கருத்துக்களையே பிரதிபலிக்கிறார். ஆனால் விஜயன் மீது பல்வேறு ஊழல், அராஜக்க் குற்றச்சாட்டுக்கள் உண்டு என்பதை மறக்கலாகாது.)
கராத்திற்கும் யெச்சூரிக்குமிடையேயான பனிப்போர் குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். டிவியில் அவர் வலம் வந்தாலும் யெச்சூரி கட்சியில் காரத்திற்கு அடுத்த முக்கிய தலைவர் என்ற நிலை இல்லை. கட்சி விவகாரங்கள் ராமச்சந்திரன் பிள்ளையிடம் ஒப்படைக்க்ப்பட்டிருக்கிறது. அப்பொறுப்பில் இருப்பவரே பொதுவாக அடுத்த பொதுச் செயலாளராவார்கள்.
அண்மைக்காலங்களில் சிபிஎம் நடத்திய போராட்டங்களில் தென் பகுதியில் நடந்த 18-நாள் யாத்திரைக்கு பிள்ளையும், கிழக்கில் 13-நாள் யாத்திரைக்கு காரத்தும், வடபகுதி 9-நாள் யாத்திரைக்கு பிருந்தா காரத்தும் மேற்கில் 8-நாள் யாத்திரைக்கு யெச்சூரியும் தலைமை தாங்கினர். யாருக்கு என்ன முக்கியத்துவம் என்பது இதிலிருந்து தெரிகிறதல்லவா?
ஆனால் இதைப் பற்றியெல்லாம் இனி யார் கவலைப் படப்போகிறார்கள்? கட்சிதான் ஒரேயடியாக தேய்ந்து வருகிறதே. வெறும் 11 இடங்கள் நாடாளுமன்றத்தில். சிபிஐக்கு ஓர் இடம்கூட இல்லை.
1978ல் மேற்கு வங்கத்தின் சால்கியாவில் நடந்த மாநாட்டில் கட்சி நாடு தழுவிய அளவில் மக்கள் இயக்கமாக மாற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்ட்து. 36 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது நிலை என்ன? கட்சியின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார் பிரகாஷ் காரத்.
(கட்சி ஒன்றும் கட்டுரையாளர் சொல்லுவதைப் போல ஒரேயடியாக மறைந்துவிடப் போவதில்லை. அமைப்பு ரீதியான தொழில் நிறுவன்ங்களின் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் ஆதரவு சிபிஎம்மிற்கு ஓரளவு இருக்கத்தான் செய்யும். சிபிஐ போன்று ஒரேயடியாகக் கேவலப்பட்டுவிடவில்லை. ஆயினும் கடும் சரிவை சிபிஎம் சந்தித்திருக்கிறது. அப்படி ஏதும் நிகழ்ந்துவிட்ட்தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எவரும் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. தற்காலிகப் பின்னடைவுதான். மக்களுடன் களத்தில் நிற்போம். இறுதி வெற்றி எங்களுக்கே. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற ரீதியில்தான் தோழர்கள் முழங்கிவருகின்றனர். வழக்கம் போல் எங்கள் பங்கிற்கு சில உண்மைகளை தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கவனத்திற்காக இங்கே முன் வைக்கிறோம்…ஓபன் எனும் ஆங்கில வார ஏட்டில் என்.பி.உல்லேக் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் – த.நா.கோபாலன்)
For more than 30 years Marxists were in power in West Bengal. What are their achievements? Modi was able to create good infrastructure for the development of the State. Mere ideologies will not help. Marxists could not even understand the requirements of the people or their pulse. They should wake up from the self imposed slumber of ideologies.
They are always surviving with the support of the strong local party and subsequently claim that without their support the strong party could not have won. It is proved now that they have practiced self deception for such a long time.
Many trade union leaders are using the party to develop themselves and that too at the cost of the poor labourer.
I will cite real example: A labourer was dismissed by a company. He went to the union office and complained. The local leader came and had a “meaningful” discussion with the proprietor and received money from both sides. He told the labourer that whatever he paid was for the development of the party. The innocent labourer did not know that he received money from the proprietor. He was satisfied with what he received.
You list the assets and means of living of the communist leaders (MLAs and MPs) 30 years back and compare with the present status. We can easily understand how they have sacrificed for the poor labourers.
People are not blind.
CPM deserves it. Even Cong won 4 MP seats in WB, CPM got only 2 on par with BJP (BJP got 2). I don’t know what Modi achieved in Gujarat. I think he is not like CPM leaders. I believe he achieved some but using advertisements he makes 5 as 500 and makes us believe 500 🙂 . He is clever campaigner, good friend of Adhani, Ambani brothers and big corporate folks more than that we know nothing about him.
Saniyangal mothamaga olinthaal nallathu naatukku
தவறுகளை புரிந்து கொள்ளாத சிபிஎம் தலைமையால் கட்சி பேருக்குத்தான் இருக்கப்போகிறது. தோல்விக்கு பொறுப்பேற்று பொலிட்பீரோ உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியிருக்கவேண்டும். குறைந்தது காரத்தாவது உடனே விலகியிருக்கவேண்டும். பிரகாசு காரத்தும் அவர் மனைவி பிருந்தா காரத்தும் எதுக்கு பொலிட்பீரோவில் உறுப்பினர்களாக இருக்கவேண்டும். இது தவறென எந்த தோழருக்கும் தோன்றவில்லையா? இவர்கள் அடுத்தவன் காது கிழிய தருக்கம் பண்ணுவார்களே கட்சித்தலைமைக்கு எதிராக எதுவும் சொல்லாமல் வாய் மூடி அடிமையாக தான் இருப்பார்களோ. பிருந்தாவிற்கு பதில் தகுதியான வேறொருவர் கட்சியில் இல்லையா? அவரை பொலிட்பீரோ உறுப்பினராக்கி இருக்கலாமே? காங்கிரசுக்கு இராகுல் சிபிஎம்-க்கு காரத். விளங்கிடும்.