இலக்கியவாதிகள், கவிஞர்களைப் பார்த்தால் எப்போதுமே பிரமிப்பு உண்டு. உடலை வில் போல வளைத்து ஜிம்னாசியம் செய்யும் வீராங்கனைகளைப் பார்ப்பது போல, நம்மால் இது முடியாது என்ற பிரமிப்பு எப்போதும் உண்டு. நாம் அன்றாடம் சாதாரணமாக பார்க்கும் காட்சிகளை இவர்கள் மட்டும் எப்படி வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படும்.
நாளடைவில், இந்த இலக்கியவாதிகளின் உட்சண்டைகளும், அவர்களின் நடவடிக்கைகளும் முகம் சுளிக்க வைத்து, கவிதைகளை விட்டே காத தூரம் ஓட வைத்தன. யார்தான் இலக்கியவாதி, எதுதான் நல்ல கவிதை என்ற சந்தேகங்கள் படிப்பவனுக்கு, வாசகனுக்கு வரவேண்டும். ஆனால் எழுதுபவர்களுக்குளேயே அந்த சந்தேகமும் சண்டைகளும் வந்தால் ? வாசகன் எப்போதும் பரிதாபத்துக்கு உரியவன்.
12 வயதில் தமிழ்வாணன் கதைகளும், பாக்கெட் நாவல்களையும் படித்து விட்டு திரிந்த காலம் அது. ஜெயகாந்தன் கதை ஒன்றை ஒரே ஒரு முறை படிக்க நேர்ந்த போது இது ராஜேஷ்குமார் கதை போல இல்லை என்றே தோன்றியது. பின்னர் சில வருடங்கள் கழித்து, ஜெயகாந்தனை படிக்க நேர்ந்தபோது, ஜெயகாந்தனின் கதைகளை ஒன்று விடாமல் படிக்க கட்டாயப்படுத்தியது.
சென்னைக்கு வந்த புதிதில், சேரி மக்களைப் பார்த்து அச்சமும் அருவருப்பும் ஏற்பட்டதுண்டு. ஜெயகாந்தனின் படைப்புகள், அதே சேரி மக்களை புதிய பரிமாணத்தில் நேசத்தோடு பார்க்க வைத்தன. கதை எழுதலாம் என்ற ஆசைகளை, ஜெயகாந்தனின் எழுத்துக்கள் முடித்து வைத்தன.
ஒரு தலைமுறையை ஆகர்ஷித்த ஆளுமை ஜெயகாந்தனுடையது. ஜெயகாந்தன் உயரத்தை வேறு யாராவது அடைய முடியுமா என்பது சந்தேகமே.
ஜெயகாந்தன் தொட்ட உயரத்தை தொடக்கூடிய திறமையும், ஆளுமையும் உள்ள படைப்பாளிகள் தமிழில் இருந்தாலும், மாறிய காலகட்டம் அவர்களுக்கு அந்த வாய்ப்பை நிராகரித்தது. தொடர்கதைகளுக்காகவே வார இதழ்கள் விற்ற காலமெல்லாம் போய், தொடர்கதைகள் என்ற வடிவமே இன்று அழிக்கப்பட்டுள்ள சூழலில் இருக்கிறோம்.
ஜெயமோகன். ஜெயமோகனின் எல்லாப் படைப்புகளையும் படித்ததில்லை. நாஞ்சில் நாட்டு நடை ஏற்படுத்தும் சில உறுத்தல்கள், அவரின் படைப்புகளை தேடிப் போகாமல் தவிர்க்கச் செய்தது. ஆனால் பயணங்களின் போதும், நண்பர்கள் சுட்டி அனுப்பும்போதும் தவறாமல் அவருடைய தளத்தை வாசித்துவிடுவதுண்டு. ஜெயமோகன் பிரமிக்க வைக்கும் எழுத்தாளர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தட்டச்சு பயிலகத்தில், தட்டச்சு இயந்திரத்தின் இடதுபுறம் வைக்கப்பட்டுள்ள விஷயங்களை இயந்திரத்தனமாக தட்டச்சு செய்யும் வேகத்தில் படைப்புகளை வெளியிடுபவர். ஆனால், அவரது படைப்புகள் ஒவ்வொன்றும், சிலாகிக்கப்படுகிறது, சீர்தூக்கிப் பார்க்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது. அவரை உலகில் அனைத்தும் அறிந்த ஞானி என்றும் கொண்டாடக் கூடிய ஒரு கூட்டமும் அவரைச் சுற்றி இருக்கிறது. அவரின் உழைப்பு மலைக்க வைக்கக் கூடியது. பத்திரிக்கையாளர்களுக்கு டெட்லைன் வருவதற்குள் ஒரு கட்டுரையை எழுதி முடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. ஆனால் ஜெயமோகனோ, அனாயசமாக எழுதிக் குவிக்கிறார்.
ஒரு புறம் எழுதிக் குவித்துக் கொண்டே, மற்றொரு புறம் படித்துத் தள்ளுகிறார். வாசகர்களின் அத்தனை கடிதங்களுக்கும் பதில் எழுதுகிறார்.
ஜெயகாந்தனின் உயரத்தை அடைந்தாரோ இல்லையோ, ஆனால், ஜெயகாந்தனுக்கே உரிய கம்பீரம் / ஆணவம் ஜெயமோகனிடம் இருக்கிறது. என் படைப்புகளை படிக்காதவர்கள் என்னிடம் உரையாடாதீர்கள் என்கிறார். தமிழில் பல சொற்கள் நான் உருவாக்கியவை என்கிறார்.
ஜெயமோகனின் இது போன்ற கருத்துகள், அவருக்கு எதிரிகளை உருவாக்குவது இயல்பே. இந்து மதத்தை ஞான மரபு என்று போற்றும் அவரை இடதுசாரிகள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்கள் கடுமையாக விமர்சிப்பது இயல்பே. ஜெயமோகனும் சர்சைகளுக்கு சளைத்தவர் அல்ல. கருணாநிதியை இலக்கியவாதி இல்லை என்பது முதல் வைரமுத்து கவிஞரே அல்ல என்பது வரை, அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு, அதற்காக எழும் எதிர்ப்புகளை சமாளிப்பவர். கனிமொழியை ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியபோது, இதுவரை அவர் ஒரு நல்ல கவிதை கூட எழுதவில்லையே என்று சொன்னவர். அதுவும், திமுக ஆட்சி காலத்தில். பிறகு இவரை கனிமொழி மனநோயாளி என்று சொன்னதெல்லாம் தனிக் கதை. அப்போது கனிமொழி பெண்ணென்பதால் அவரைத் தாக்குகிறார் என்று யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. இன்று ஜெயமோகனை பிராண்டும் பெண் இலக்கியவாதிகள், யாரும் அப்போது எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை.
தற்போது எழுந்திருக்கும் எதிர்ப்புக்கான காரணம் என்ன ? எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுத்தாளர்கள் பற்றி வெளியிட்ட ஒரு பட்டியலை விமர்சித்து எழுதிய ஜெயமோகன் இவ்வாறு எழுதியிருந்தார்.
“பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள்மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.
இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது . பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்து விடுகிறது . கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?’என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.”
இதுதான் அத்தனை சர்ச்கைளுக்கும் காரணம். ஜெயமோகனின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய அத்தனை பெண் படைப்பாளிகள் மற்றும் ஓரிரண்டு கவிதைகள் எழுதியதால் தங்களை ஆகச்சிறந்த இலக்கிய மற்றும் பெண்ணியவாதி என்று நினைத்துக் கொள்ளும் அத்தனை பெண் படைப்பாளிகளும் சேர்ந்து ஓரு கூட்டு கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள்.
தமிழகம் மற்றும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான எத்தனையோ கொடுமைகள் மற்றும் வன் கொடுமைகளுக்கு எதிராக கூட்டறிக்கையோ, கூட்டாத அறிக்கையோ வெளியிட எந்த முன் முயற்சியும் எடுக்காத இந்த பெண் படைப்பாளிகள்தான், ஜெயமோகனுக்கு எதிராக கச்சை கட்டி களமாடியிருக்கிறார்கள்.
இப்படி ஒட்டு மொத்தமாக ஜெயமோகனுக்கு எதிராக இவர்கள் களமாடுவதன் காரணம் என்ன என்றால், ஜெயமோகனின் கூற்றில் ஒளிந்திருக்கும் உண்மைதான். ” பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள்மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்” இந்த வாக்கியத்தை ஜெயமோகன், பெண்கள் தங்கள் உடல்களை பயன்படுத்தி வெளிச்சம் பெறுகிறார்கள் என்ற நோக்கில் ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்று பெண் படைப்பாளிகள் கூறுகிறார்கள்.
ஜெயமோகன் அந்தப் பொருளில்தான் எழுதினாரா என்பதுதான் இங்கே விவாதிக்கப்பட வேண்டியது. ஜெயமோகனின் படைப்புகளை வாசித்தவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் விஷயம், ஜெயமோகனின் படைப்புகளில் பெண்கள் மிகவும் கவுரவமாகவும், இன்னும் சொல்லப்போனால், பல நேர்வுகளில் ஆண்களை விட, அறிவானவர்களாகவும், நேர்த்தியானவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே. அவர் கதைகளில் சித்தரிக்கப் பட்டுள்ள பெண்கள் பற்றிக் கூட நாம் பல நூறு பக்கங்கள் பேசமுடியும். அவர்கள் அனைவருமே மேலானவர்கள், ஆண்மையின் அடிப்படையிலேயே உறைந்திருக்கும் தீய சக்தியை மிக சாதாரணமாக எதிர்கொள்பவர்கள். அப்படிப்பட்ட பெண் கதாபாத்திரங்களை படைக்கும் ஒரு நபர், பெண்கள் தங்கள் உடல்களைப் பயன்படுத்தி, வெளிச்சம் தேடுகிறார்கள் என்று கற்பிக்கப்படும் அர்த்தம் உண்மையைச் சார்ந்து இருப்பதாகத் தெரியவில்லை. கதைகளில் எழுதினால் அவர் அப்படித்தானா என்ற கேள்வியை எழுப்புபவர்கள் மீண்டும் அவரை ஆரம்பத்தில் இருந்து தான் படிக்க வேண்டும்.
இந்த சர்ச்சைக்குப் பிறகு இது தொடர்பாக ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையில், பெண் படைப்பாளிகள் போதுமான அளவுக்கு எழுதுவதில்லை என்பதுதான் எனது வருத்தம் என்று குறிப்பிடுகிறார். ஜெயமோகனைப் போல, ஒரு நாளுக்கு 22 மணி நேரம் எழுத்தும், மீதமுள்ள 2 மணி நேரம் மட்டும், வம்பிழுப்பது என்று இருப்பது அனைவருக்கும் சாத்தியமில்லைதான். குறிப்பாக, பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே படைப்புகளை வெளியிடும் பெண்களுக்கு நிச்சயமாக அது சாத்தியம் இல்லை. ஆனால், அவர் குறிப்பிட்டுள்ளது போல, குறிப்பிடத்தகுந்த படைப்புகளை தொடர்ச்சியாக உருவாக்கும் பெண் படைப்பாளிகள் இங்கே யார் ? ஒரே ஒரு கவிதை நூல் வெளியிட்டு விட்டு, தன்னை பெண் கவிதாயினியாக கருதிக் கொள்வது. அல்லது இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று, இலக்கியம் விவாதித்து விட்டு தன்னை இலக்கியவாதியாக கருதிக் கொள்வது, அல்லது, இலக்கியவாதிகளோடு நட்பு இருப்பதாலேயே தன்னை இலக்கியவாதியாக கருதிக் கொள்வது என்ற இருட்டறை மனப்பான்மையில்தான் பெரும்பான்மையான பெண் படைப்பாளிகள் இருக்கிறார்கள். இதில் விதிவிலக்குகள் உண்டு.
தன்னை இலக்கியவாதி மற்றும் பெண்ணியவாதி என்று கருதிக்கொள்ளும் பெரும்பான்மையான பெண்கள், நல்ல படைப்புகளை உருவாக்குவதில் காட்டும் ஆர்வத்தை விட, முகநூலில் நடக்கும் குழாயடிச் சண்டைகளில் பெரும் ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். இந்தக் குழாயடிச் சண்டைகளை ஆண்கள் ரசித்து, நகைச்சுவையாகவோ, அல்லது வன்மத்தோடோ கருத்திடுகையில், ஆணாதிக்கவாதிகளின் ஆணவம் என்று புதிதாக ஒரு சர்ச்சையை தொடங்குகிறார்கள் அல்லது, கூட்டு சேர்ந்து ஆண்களை வசைபாடுகிறார்கள்.
படைப்புகளை உருவாக்குவதை விட, முகநூல் குழாயடிச் சண்டைகளில் ஆர்வம் காட்டும், இலக்கியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இந்த பெண்களுக்கும், சீரியல் பார்த்துக் கொண்டு, எவ்வித படிப்பறிவும் இல்லாமல், பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தலை வெடிக்க விவாதம் செய்யும் சாதாரண குடும்பப் பெண்ணுக்கும் என்ன வேறுபாடு ?
இதில் கையெழுத்திட்டுள்ள பல “பெண்ணிய மற்றும் இலக்கியவாதிகள்”, தனிப்பட்ட முறையில் உரையாடுகையில், “அவளோட கவிதை விகடன்ல எப்படி வந்துச்சுன்னு தெரியுமா….., கல்கில எப்படி வந்துச்சுன்னு தெரியுமா……, இவ இப்போ யாரு கூட இருக்கான்னு தெரியுமா…… நேத்து வரைக்கும் அவன் கூட இருக்கிறா தெரியுமா… ? நேத்து வரைக்கும் அவனோட இருந்துட்டு, இன்னைக்கு அவனை அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டா…… இவ அவனை ஏமாத்துனதால அவன் குடிக்க ஆரம்பிச்சுட்டான், ஆனா அவ அவன் கூட சந்தோஷமா இருக்கா” என்று சலிப்பு ஏற்படுத்தும் வகையில் புறம் பேசக்கூடியவர்களே.
இந்தப் பெண்களின் கூட்டறிக்கையில் கையெழுத்திட சம்மதிக்காத சர்ச்சைக்குரிய மற்றொரு பெண் கவிஞரான லீனா மணிமேகலை, இந்த அறிக்கை குறித்து இவ்வாறு எழுதுகிறார் “ஜெயமோகனுக்கு எதிராக “பெண்” எழுத்தாளர்கள் வெளியிடும் கூட்டறிக்கையை வாசிக்க கிடைத்தது.ஜெயமோகன், பெண் எழுத்தாளர்கள் மீது வைத்திருக்கும் நிந்தனைகளை ‘பெண்ணியம்’ பேசும் பல பெண் எழுத்தாளர்கள் சக பெண் எழுத்தாளர்கள் மீது கூசாமல் வைத்திருக்கிறார்கள்! ஆதிக்க குணமும் துவேசமும் வெறுப்பும் காழ்ப்பும் பெண்ணியம் பேசும் குழுக்களிடமும் மலிந்திருக்கின்றன என்பது தான் நான் அனுபவத்தில் கண்ட அதிர்ச்சிகரமான உண்மை. எதேச்சதிகாரமும், கொடூரமான குழு மனப்பான்மையும் நிரம்பியவர்களாக,பெண்ணியம் பேசுபவர்கள் போலீஸ் உடை அணியாதது தான் பாக்கி. பதிப்பு நிறுவனங்களை அண்டி வாழும் சில பெண்ணியவாதிகள் அவற்றின் அங்கீகாரத்திற்காக சக பெண்ணை இழிவு செய்ய எத்தகைய தூரத்திற்கும் போகத் தயங்காதவர்கள். பெண்கள் ஒற்றுமை என்பதெல்லாம் சுத்த போலித்தனம். சமத்துவ உணர்வுடைய ஆண்களும் இருக்கிறார்கள். அதிகாரமும் ஆணவமும் சனநாயகத் தன்மையற்ற குணமும் ஆக பெண்களும் இருக்கிறார்கள். ஜெயமோகன் செக்சிஸ்ட் (பால் நிந்தனையாளர்) என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இந்த கூட்டறிக்கை விடும் பெண்ணியவாதிகள் பலரும் போலிகள் என்பதும்.”
கீழ் வெண்மணி சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல் எழுதினார். அதில் தலித் விவசாயிகளையும், பெண்களையும், குழந்தைகளையும் தீயிலிட்டுக் கொளுத்திய அந்த பண்ணையாருக்கு ஆண்மைக் குறைவு, பிறழ் மனம் படைத்தவன் என்று எழுதினார்.
இடதுசாரிகள் ஒரு உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தை இந்திரா பார்த்தசாரதி கொச்சைப் படுத்தி விட்டார் என்று கடுமையாக விமர்சித்தார்கள். இந்திரா பார்த்தசாரதி கொடுத்த விளக்கம் மிக மிக சிறப்பானதாக இருந்தது.
குழந்தையை தீயிலிட்டுக் கொளுத்துபவன் எப்படி ஒரு சராசரியான மனிதனாக இருக்க முடியும் ? அவன் மனநிலை பிறழ்ந்தவனாக மட்டுமே இருக்க முடியும். அதனால்தான் அப்படி எழுதினேன் என்று கூறினார்.
அது போல, ஜெயமோகனுக்கு எதிராக இப்படி கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ள பெண்கள், “நீ யாரடா என் படைப்பை நிராகரிக்க… ? நீ யாரடா என் படைப்பை மதிப்பிட ? நீ யாரடா நான் படைப்பாளி இல்லை என்று சொல்ல ?” என்று தங்கள் படைப்புகளின் வழியாக பேசுவதை விடுத்து, ஜெயமோகனை ஆபாசமாக வசைபாடுவதன் மூலம், தங்கள் கையாலாகத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
நீ என்ன எழுதுகிறாய் ஜெயமோகன் என்று யாருக்கும் கேள்வி எழுப்பத் திராணி இல்லை என்பதாகவே படுகிறது. எப்படி முடியும்? ஆகவே, மீண்டும் மீண்டும் எந்த விவாதத்துக்கும் சளைக்காமல் பதில் கொடுக்கும் ஒருவரை “பாலியல் அவதூறு” செய்து காலம் காலமாக செய்யும் முத்திரை குத்துதலை இப்போதும் செய்து விட்டால் தன் மடத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று செயல்படுவதாகவே இங்கு பொருள் படுகிறது. நாகம்மையைப் போலவும் நீலியைப் போலவும் ஜ்வாலமுகியைப் போலவும் ஒரு பெண் சித்திரத்தை உருவாக்க முடிந்த தற்கால எழுத்தாளர்கள் யாருமில்லை என்கிறார் இடதுசாரி நண்பர். பல தரப்புகளும் உள்ளூர வழிபடும், சிலாகிக்கும் ஒரு பிம்பமாக ஜெயமோகன் மாறிப் போனதே ஒரு வகையில் தேவையே இல்லாமல், நல்ல விவாதமாக ஆகியிருக்கக் கூடிய விஷயத்தை பொதுவெளி தனி நபர் தாக்குதல் அவதூறு என்று மாறிப் போனதற்கு காரணம்.
பெண்கள், அன்னையர் என்று அவர் எழுதியது பல ஆயிரம் பக்கங்கள் இருக்கும். எதையும் இவர்கள் யாரும் படித்தாரும் இல்லை. உதாரணமாக, ஜெயமோகனை அறியாத நண்பர்களுக்கு, அவர் நாவலில் இருந்து ஒரிரு வரிகள் பெண்கள் பற்றி.
// இவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இவர்கள் பெற்ற குழந்தைகள் கொல்கிறார்கள். கொல்லப் படுகிறார்கள். அதிகாரங்களைக் கட்டி எழுப்புகிறார்கள். அவற்றை எதிர்த்துப் புரட்சியும் செய்கிறார்கள். அவர்களுடைய வியர்வையும் ரத்தமும் பூமியைப் புரட்டிப் புரட்டிப் போடுகின்றன. ஆனால் சம்பந்தமற்ற வேறு ஒரு உலகில் கருணையுடன் சமைத்துப் பசியாற்றி, தட்டித் தூங்க வைத்து, அபயமும் தையிரியமும் தந்து இவர்கள் வாழ்கிறார்கள்.
பெண்களால் நடத்தப் பட்டால் புரட்சிகள் இவ்வாறு ரத்த வாடை வீசி இருக்குமா? கண்டிப்பாக இத்தனை குழந்தைகள் கொல்லப் பட்டிருக்காது. ஆண்களின் அமைப்புகளும் அரசுகளும் ஆண்களைப் போலவே இருக்கின்றன.//
இடதுசாரி சித்தாந்தம் பேசுபவர்களுக்கும் முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர்களும் ஜெயமோகனை இதுதான் நேரம் என்று சுற்றி நின்று வசை பாட என்ன காரணம்? அவர் எழுப்பும் கேள்விகள். //ஹெலன் டெமூத்தை படுக்கை அறைக்குப் பயன் படுத்திவிட்டுக் கூசாமல் தூக்கி எறிந்த மார்க்க்ஸுக்கு ஜென்னி மீது என்ன மரியாதை இருந்திருக்க முடியும்? ஃப்ரெஞ்சுக் காதலிக்காக குரூப்ஸ்கயாவை துரத்திவிடத் தயாராக இருந்த லெனினுக்கு பெண்கள் மாற்றி அணியும் உடை அன்றி வேறு என்ன?//
ஜெயமோகனுடைய கேள்விகள் முகத்திற் அறைகின்றன. கசப்பை உணர வைக்கின்றன. அவற்றை எதிர்கொண்டு விவாதிக்க இயலாதவர்களே ஆபாசமாக வசை பாடுகிறார்கள்.
ஜெயமோகனுடையை கட்டுரைகளில் ஒன்று “நிழல் நாடுவதில்லை நெடுமரம்” அதில் இப்படி சொல்கிறார். ‘நல்ல எழுத்தாளர்கள் ஒருபோதும் நிழல்களில் நிற்பதில்லை”.
தன் படைப்புகளை முன்நிறுத்தி, என் படைப்புகள் எனக்காக பேசட்டும் என்று கூற துணிச்சல் இல்லாத இந்த பெண் இலக்கியவாதிகள், “பெண்கள்” என்ற குடைக்குள் புகுந்து கொண்டு, முழங்குவதற்கும், தலித் என்ற குடைக்கும் புகுந்து கொண்டு, என்னை அபாண்டமாக குற்றம் சாட்டி விட்டார்கள் என்று ஆண்டிமுத்து ராசா புலம்புவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இன்று ஜெயமோகனுக்கு எதிராக ஆவேசத்தோடு பொங்கி எழுந்து அறிக்கையை வெளியிட்ட “சாவின் உதடுகள்” இணையதளத்தில், கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஒரு கட்டுரையின் இணைப்பைத் தருகிறேன். சமகால இலக்கிய அரங்கில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இவர்களை புரிந்து கொள்ளுங்கள்.
மீன் மார்க்கெட்டுக்கு நேரடியாக செல்ல இணைப்பு
There are 1000 blogs are there to write such nonsense like this. How mach savukku got to avoid write about curreption? now savukku is broken. chenge name of this site newsavukku to Brokensavukku.
Y u r not writing about karuna,and other fuckers,don’t write all these bullshit stories,feeling sleepy
I couldn’t believe its written by savukku
இவர்களை பெண்ணியவாதிகள் என்று சொல்வதை விட பெண்ணாதிக்கவாதிகள் என்று சொல்வது பொருத்தம். ஆனால் இதை ஒப்புக்கொள்ளமாட்டர்கள், இதை சொன்னால் நம்மை ஆணாதிக்கவாதி என்பார்கள்.
உண்மை சில சமையம் சுடும் 🙂
வழக்கறிஞர்களின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல். 20.06.2014 வெள்ளிக்கிழமை அன்று தனிவழக்கு ஒன்றில் ஆஜராக கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோயில் மாவட்ட நீதிமன்றத்துக்கு சென்ற சுசிந்தரம் காவல் நிலய உதவி ஆய்வாளர் மீது ஒரு சில குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் வழக்குரைஞர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை இதுவரைக்கும் சட்டம் ஒழுங்கை பற்றி வாய்கிழிய பேசும் எந்த அரசியல்வாதியும் கண்டிக்கவில்லை. இதுகுறித்து விரிவான கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.
If the same type of articles is going to continue then I am going to quit reading savukku site…
I am NOT SURE SOME THING HAPPEN TO SAVUKKU (ARE IN U BEHIND THE BARS)
Tamilare! Why this kola veri? When so many other corrupt crook indians are roaming free, u imagine savukku may be behind bars?He may be under pressure but will big-bang soon!Hope for best for good people, not worst!-Nambikai Nagaraj Dubai
Yes Nambikai Nagaraj,
That is y I am saying savukku is not eligible to roam free, because he is against for corrupt.:):):):):):):):):):):):):):):):):):):):)
Want to see him as a old savukku not this uppuma article from him
want to see his strong words.
Lets hope savukku will wont continue this uppuma (sooji) articles in future.
there are many more people are available to write this type of upuma articles.
Mr. tamilar , you are a uppuma fellow..not savukku’s this article..His article shows how knowledgeable he’s about EVERYTHING including literature and writers..you fellows just need some “paraparappu” only always for your “arippu”…
I am the new reader for this site
கூடிய விரைவில், ஜாஃபர் சேட், நரேந்திரபால் சிங், ராஜமாணிக்கம், சம்பத்குமார் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும், செல்வம், கர்ணன், ஜோதிமணி, எலிப்பிதர்மராவ் போன்ற இன்னாள்/முன்னாள் நீதிபதிகளும், வண்டு முருகங்களும், ஆ.ராசா, கனிமொழி, கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா போன்ற ஊழல் அரசியல்வாதிகளும் கூட …….
…. ஆஹா, நாங்களும் சவுக்கு வாசகர்கள்தான் என்று வடிவேலு போல வண்டியில் ஏறிக் கொண்டு இந்த ஜானைப் போல நாங்களும் இப்போ சவுக்கு படிக்கிறோம் என்று கமெண்ட் போடுவார்கள் !!!
அவர்களைப் பற்றி எழுதுவதை சவுக்கு நிறுத்தியாகிவிட்டதே, குஷிதான்.
சவுக்கு சங்கர் ,சவுக்கு தளத்தை , இடது சாரிகளுக்கு , வாடகைக்கு விடுட்டரா? இல்லே மஹாலக்ஷ்மி, CT .செல்வம் சிக்கலில் மாட்டி அவஸ்தையா?ஆமை புகுந்த இடமும் ,இடது சாரி புகுந்த இடமும், கேரளா,மேற்கு வங்காளம் போல உருப்படும்!(திரிபுரா விதி விலக்கு,நிருபன் சக்கரவர்த்தி,மாணிக் சர்க்கார் போன்ற காந்தியை விட உயர்ந்த எளிய மனிதர்களால்!)
-நம்பிக்கை நாகராஜ்-துபாய்
கட்டுரை நன்று. இவ்வரிகளைத் தவிர – //இந்து மதத்தை ஞான மரபு என்று போற்றும் அவரை இடதுசாரிகள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்கள் கடுமையாக விமர்சிப்பது இயல்பே // இடதுசாரிகள் கண்களை மூடிக்கொண்ட பூனை என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.
கணவரோ, உடன்பிறப்போ, குடும்பத்தில் எவரோ உயிரைப் பணயம் வைத்து, உழைத்துப் பிடித்த மீன்களையும், தாமும்கூட வாய்க்காலிலோ, உப்பங்கழியிலோ இறங்கிப் பிடித்த மீன்களையும், வாழ்க்கைக்காக விற்றுப் பிழைக்கும் மீன்விற்கும் பெண்களை இப்படியா கேவலப் படுத்துவீர்கள்?
அவர்களுக்குள் வருகின்ற சண்டை அந்த வர்க்கத்தின் அன்றாடங் காய்ச்சுவதற்காக வருவது. ஏழ்மையால், வறுமையால், வாழ்க்கைச் சூழலால், கந்துவட்டிக் கடன்களால், வீட்டு ஆண்களின் குடிப் பழக்கத்தால் எனப் பலவிதக் கஷ்டங்களில் அடிபட்டு வெறுப்புற்றிருக்கும் அவர்கள் சிறு பொறியிலும் சினம் கொள்ளுதல் இயல்பே.
தாம் அறிவுஜீவி என்றும், முற்போக்கான சிந்தனையாளர் என்றும், வர்க்கப் போராளி என்றும், பெண்ணுரிமைப் போராளி என்றும், பெரியாரியம் பேசும் பகுத்தறிவாளி என்றும் சொல்லிக் கொள்ளும் பெண் எழுத்தாளர்கள் பத்துமணி சமாச்சாரம் என்று தமக்குள் அடித்துக் கொள்ளும் சக்களத்திச் சண்டையை வக்கற்ற நிலையிலிருக்கும் மீனவப் பெண்டிரோடு ஒப்பிட்டமை வேதனை தரும் விஷயம். இதுவா இடது சாரிச் சிந்தனையோட்டம்?
Many such poor women selling fish or vegetable on the roads or markets behave with true kindness and affection from the root of their hearts without any expectations. We can understand and feel their kindness (like that of a mother) when we compare them with the sales girls sitting in front of the computer in super markets. I know an old lady in a market where the vegetables will be kept for sales on the sides of the road on a gunny cloth. She is treating me like her own son. I only pay for what i purchase, nothing more. She does not expect anything more. Actually she is giving one or two pieces more and therefor I am indebted to her.
I don’t want to tell anything about the so called intellectuals.
Galileo! I 1000 times fully agree with you! I too was a customer in Thanjavur ,in 1989-90, to a very old 75 yr poor lady, eyes affected lady, ugly at its worst, in conventional intellectual terms,selling green oranges which is sour and got at cheap rates from markets by this old lady to sell at road side in a gunny bag!She was the best humanitarian and most beautiful mother like figure for me! I never bargain any with her and buy for the sake of her business! She always give one or more as though a mom gives to her son!Life is beautiful but made ugly and complicated by Lazy communists,blood sucking capitalists, educated idiots called activists.writers,divisive language, nationalistic ,community and religious fanatics!
Simple Scientific life without violence and with old values, not corrupted by power, money, fame mongers is the only solution!-Nambikai Nagaraj-Dubai