மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஒரு முறை இவ்வாறு குறிப்பிட்டார். “இந்தியாவில் இரண்டு வகையான நீதிபதிகள் உண்டு. சட்டம் தெரிந்தவர்கள். சட்ட அமைச்சரை தெரிந்தவர்கள்” என்று.
இந்தியாவில், நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக இப்போது இருந்து வரும் கலேஜியம் முறையிலும் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், இந்த கலேஜியம் முறையில் சில மோசமான நீதிபதிகள் எப்படி நீதிபதியானார்களோ, அதே போல சில சிறப்பான நீதிபதிகளும் உருவாகியே இருக்கிறார்கள்.
நீதிபதிகளின் நியமனத்தில் அரசின் தலையிடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இருந்தே வந்திருக்கிறது. 1979ல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட், அலகாபாத் தலைமை நீதிபதியாக இருந்த யசோதானந்தனையும், பின்னால் சந்துர்க்கரையும் உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்க முயன்றபோது, அப்போது இருந்த மத்திய அரசின் எதிர்ப்பு காரணமாக நியமிக்க முடியாமல் போனது. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஜி.பி.சிங், மத்திய அரசு பரிந்துரைத்தவர்களை உயர்நீதிமன்ற நீதிபதியாக்க மறுத்த காரணத்தால், அவரது உச்சநீதிமன்ற நியமனத்தை தடுத்தது மத்திய அரசு. பி.என்.பகவதியின் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட இருந்த இமாச்சல பிரதேச தலைமை நீதிபதி பி.டி.தேசாய் மற்றும் பாட்நா தலைமை நீதிபதி சந்த்வாலியா ஆகியோரும், மத்திய அரசின் எதிர்ப்பால் உச்சநீதிமன்றம் செல்ல முடியாமல் போனது.
நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகள் உண்டா இல்லையா என்ற வழக்கு விசாரணையில், நான்கு நீதிபதிகள், இந்திரா காந்திக்கு பயந்து கொண்டு, அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய முடியும் என்று தீர்ப்பளித்தபோது, அடிப்படை உரிமைகள் நெருக்கடி நிலையின் போது கூட ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்த ஒரே காரணத்துக்காக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எச்.ஆர்.கன்னாவை, நியமிக்க மறுத்தார் இந்திரா காந்தி. கன்னா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பதவியை ராஜினாமா செய்தார்.
சமீப காலங்களிலும் அரசின் தலையீடு காரணமாக, பல நீதிபதிகள் நியாயமாக கிடைக்க வேண்டிய உச்சநீதிமன்ற நியமனங்களை இழந்தே இருக்கிறார்கள். 2007 முதல் 2010 வரை, ஏழு முறை நீதிபதி எச்.எல்.கோகலேவின் பெயர் நிராகரிக்கப்பட்டு, அவரை விட இளையவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். நீதிபதி ஏ.கே.பட்நாயக், க்யான் சுதா மிஷ்ரா, ஸ்வதந்தர் குமார், ஜி.எஸ்.சிங்வி, டி.கே.ஜெயின், சிரியாக் ஜோசப், ஏ.கே.கங்குலி மற்றும் ஏ.ஆர்.தவே ஆகியோரின் பெயர்கள் என்ன காரணத்தினாலோ, இரண்டு முறை நிராகரிக்கப்பட்டு, அவர்களை விட இளையவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.
வெளிப்படையாக, நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்து கொள்கிறார்கள் என்று இருந்தாலும், சட்ட அமைச்சகத்தின் கருத்து கேட்கப்பட்ட பின்னரே நியமனங்கள் நடைபெறுகின்றன. அவ்வாறு சட்ட அமைச்சகத்தின் கருத்து கேட்கப்படுகையில், சில நீதிபதிகளுக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், நீதிபதிகளின் குழுவின் முடிவே இறுதியானது. 1971 முதல், 1993 வரை, நீதிபதிகள் நியமனத்தில் அரசின் செல்வாக்கு அதிகமாக இருந்தது.
அரசு எதிர்ப்பு தெரிவித்தால், அதை மீறி ஒருவரை நீதிபதியாக நியமிக்க முடியாத நிலை இருந்தது. ஜனதா அரசு இருந்த வரை, நீதிபதிகள் நியமனத்தில் எந்த பிரச்சினையும் எழாமலே இருந்தது. ஆனால், ஜனதா அரசு கவிழ்ந்து, காங்கிரஸ் ஆதரவில் சரண்சிங் பிரதமராக இருந்தபோதுதான், பல்வேறு நீதிபதிகளின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டன.
தங்களுக்கு பிடிக்காத நபர்களை நீதிபதியாக்க விடாமல் பழிவாங்குவதில், காங்கிரஸ் அரசு கை தேர்ந்தது. இந்திரா காந்தியின் தேர்தலை ரத்து செய்த நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா உச்சநீதிமன்றம் செல்ல முடியவில்லை. கர்நாடக முதலமைச்சராக இருந்த ஏ.ஆர்.அந்துலேவின் மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டது என்று தீர்ப்பளித்த காரணத்துக்காக நீதிபதி லென்டின் உச்சநீதிமன்றம் செல்ல முடியவில்லை. பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் நெருக்கடி நிலை காலத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அனுமதித்த காரணத்துக்கா நீதிபதி ரங்கராஜன் உச்சநீதிமன்றம் செல்ல முடியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிபதிகள் வருவார்கள் என்று தீர்ப்பளித்த ஒரே காரணத்துக்காக, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷாவை உச்சநீதிமன்றம் செல்ல விடாமல், நீதிபதிகளே தடுத்தார்கள்.
இந்த வரலாற்றின் பாதையில்தான் தற்போது மோடி அரசாங்கமும், மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தின் உச்சநீதிமன்ற நியமனத்தை தடுத்துள்ளது. கிட்டத்தட்ட நெருக்கடி நிலை காலகட்டத்தில், ஒட்டுமொத்த நீதித்துறையையும் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வர நினைத்த இந்திரா காந்தியைப் போலவே மோடி அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
சவுக்கு தளத்தில் மோடி குறித்து எழுதப்பட்டிருந்த தொடர் சிவலிங்கத்தின் மீது செந்தேள் தொடர் கட்டுரைகளில், மோடி ஒரு அகம்பாவம் பிடித்த நபர், தன் எதிரிகளை பழிவாங்குவதில் முனைப்பானவர், தன்னுடைய சுயநலத்துக்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார் என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரைகளை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் தற்போது கோபால் சுப்ரமணியத்தின் நீதிபதி நியமனத்தை தடுத்துள்ளது மோடி அரசு.
கோபால் சுப்ரமணியம், இந்தியாவின் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வாத்வா மற்றும் மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜியிடம் பணியாற்றியவர். மிக இளைய வயதில், உச்சநீதிமன்றத்தால், மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டவர்.
ராஜீவ் படுகொலை தொடர்பாக, பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா ஆணையத்தின் வழக்கறிஞராக பணியாற்றியவர். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்தவர். டெகல்கா ஸ்டிங் ஆபரேஷன் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடசாமி ஆணையத்தின் வழக்கறிஞர். 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி அஜ்மல் கசாப்புக்கு தண்டனை பெற்றுத் தந்தவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக சட்டம் தெரிந்தவர். அஸ்ஸாம் மாநிலத்தில், மன நல மருத்துவமனைகளில் பலர் சட்டவிரோமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெங்கடாச்சலைய்யா மற்றும் மோகன் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கூறுகிறது. அவரும் தன் அறிக்கையை அளிக்கிறார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை எப்படி தொடங்குகிறது தெரியுமா ?
‘ We have perused the excellent report submitted by Sri Gopal Subramanium, Senior Advocate. At the outset, we consider it our duty to place on record our deep appreciation of the time and energy spent by Sri Subramanium in inquiring into the situation. We have no hesitation in accepting the report in its entirety. There is one other aspect which requires immediate attention.
Sri Subramanium, though worked in his capacity as Commissioner appointed by this Court, appears to have put himself to personal expenditure in tens of thousands of rupees. We request him to furnish an account so that at least there should be some restitution of the money spent by him.
நீதிமன்றம் ஒரு விவகாரத்தை விசாரிக்கச் சொல்லி விட்டது என்ற ஒரே காரணத்துக்காக, தனது சொந்தப் பணத்தை செலவழித்து நீதிமன்றத்தில் சிறப்பாக ஒரு அறிக்கையை அளித்தவர். அது நடந்த ஆண்டு 1994ம் ஆண்டு.
அதன் பின் பல்வேறு முக்கிய வழக்குகளில், இவரது திறமை மற்றும் சட்ட அறிவு காரணமாக இவரை, நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக (Amicus Curiae) பல்வேறு வழக்குகளில் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி இவர் நியமிக்கப்பட்ட ஒரு வழக்குதான் இன்று இவர் நீதிபதியாவதற்கு தடையாக நிற்கிறது.
சோராபுதீன் சேக் போலி என்கவுன்டர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக கோபால் சுப்ரமணியம் இருந்ததே இன்று மோடி அரசு, அவரது நீதிபதி நியமனத்துக்கு தடை கோர காரணமாக இருக்கிறது.
சோரபுதீன் சேக் விவகாரத்திலும் என்ன நடந்தது என்பதை தனக்கு நீதிபதி பதவி வேண்டாம் என்று தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் கோபால் சுப்ரமணியம். இணைப்பு
ருபாபுதீன் சேக் (சோராபுதின் சேக் வழக்கில் மனுதாரர்) வழக்கைப் பொறுத்தவரை, நான் நீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்குக்காக காத்திருந்தபோது, நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி மற்றும் தல்வீர் பண்டாரி என்னை நீதிமன்றத்துக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர். நானும் ஒப்புக் கொண்டேன். சோராபுத்தீன் காணாமல் போன விவகாரத்தில் பதில் வழங்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பலாம் என்று பரிந்துரைத்தேன். காணாமல் போன அவரின் மனைவி கவுசர் பீ யை உடனடியாக ஆஜர் செய்ய வேண்டும் என்று உத்தரவிடலாம் என்றும் பரிந்துரை செய்தேன். அப்போது கவுசர் பீ கொல்லப்பட்டு எரிக்கப்பட்டு விட்டார் என்று குஜராத் வழக்குரைஞர் கூறினார்.
அப்போதும் மாநில அரசுக்கு மதிப்பளித்து, குஜராத் ஐபிஎஸ் அதிகாரி கீதா ஜோஹ்ரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கலாம் என்றே பரிந்துரை செய்தேன். கீதா ஜோஹ்ரி புலனாய்வு செய்தபோதுதான் இந்த வழக்கில் நேரில் பார்த்த ஒரே சாட்சியான துள்சிராம் ப்ரஜாபதியும் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது. இதன் பிறகு வேறு வழியே இன்றிதான் நான் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தேன்” என்று கூறுகிறார் கோபால் சுப்ரமணியம்.
இன்று மோடிக்கு வலது இடது கரங்களாகவும், கண்களும் காதுகளுமாகவும் இருக்கும் அமீத் ஷா, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்தார். அமீத் ஷா வுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போது கூட, அவர் குஜராத் மாநிலத்தில் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில்தான், அமீத் ஷாவை உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பினார் மோடி.
மோடி மற்றும் அமீத் ஷாவின் நட்பு, கிட்டத்தட்ட ஜெயலலிதா சசிகலா நட்பு போல. தனக்குத் தெரிந்தும் தெரியாமலும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த சசிகலாவை என்றாவது ஜெயலலிதா விட்டுத் தருகிறாரா ?
அதுபோலத்தான் அமீத் ஷாவும் மோடியும். மோடி நினைத்ததை செய்து முடிக்கும் அடியாளாகத்தான் அமீத் ஷா செயல்பட்டு வந்திருக்கிறார். மோடியின் புகழைப் பரப்ப, அவரை கொலை செய்ய திட்டமிட்டு வந்ததாக இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணை கொலை செய்ய வேண்டுமென்றால் கொலை செய்கிறார் அமீத் ஷா. 10 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சோராபுதீன் ஷேக் என்ற கடத்தல் காரனை தீவிரவாதி என்று சித்தரித்து கொலை செய்ய வேண்டுமென்றால் கொலை செய்கிறார் ஷா. மோடி விரும்பும் பெண்ணை காவல்துறையை விட்டு, 24 மணி நேரமும் பின் தொடரச் செய்ய வேண்டுமென்றால் செய்து முடிக்கிறார் ஷா. இப்படிப்பட்ட நபரை சிறையில் வைக்க காரணமாக இருந்த கோபால் சுப்ரமணியத்தை எப்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக அனுமதிப்பார்கள் மோடியும் அமீத் ஷாவும் ?
தற்போது உளவுத்துறை மற்றும் சிபிஐயால் பரப்பப்படும் செய்திகள், கோயபல்ஸ் பிரச்சார வகையைச் சேர்ந்தவை. என்ஜிஓக்கள் குறித்து எப்படி ஒரு அறிக்கையை திட்டமிட்டு பரப்பியது மோடி அரசு என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதே போல, சேற்றை வாரியடிக்கும் மற்றொரு உத்தியே, கோபால் சுப்ரமணியம் குறித்து ஊடகங்களில் கசியவிடப்படும் அறிக்கைகள்.
ஜெயலலிதா எப்படி தன்னுடைய அமைச்சர்களை அடிமைகளாக வைத்திருக்கிறாரோ, அதே போலத்தான் மோடியும் தன்னுடைய அமைச்சர்களை அடிமைகளாக வைத்திருக்கிறார். கோபால் சுப்ரமணியத்தின் நண்பர்களான, மூத்த வழக்கறிஞர்கள் அருண் ஜேட்லியும், ரவி சங்கர் பிரசாத்தும், மோடியின் இந்த மோசடி காரியத்துக்கு உறுதுணையாக அமைதி காக்கிறார்கள். அவர்களுக்கு, கோபால் சுப்ரமணியம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பது நன்றாகவே தெரியும். கோபால் சுப்ரமணியம் எப்படிப்பட்ட வழக்கறிஞர் என்பதும் நன்றாகத் தெரியும். ஆனால், ஜெயலலிதாவின் அடிமைகள் எப்படி வாய் திறப்பதில்லையோ, அது போலத்தானே மோடியின் அடிமைகளும் ?
மோடியும், அமீத் ஷாவும் சேர்ந்து, ஒட்டு மொத்த நீதித்துறையையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியே கோபால் சுப்ரமணியத்தை நீதிபதியாக்க விடாத இந்த நடவடிக்கை. அமீத் ஷா கட்டாயமாக ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்ட நீதிபதி ஜே.டி.உத்பத், இரண்டாவது நாளே மாற்றப்படுகிறார்.
பெரும்பாலான ஊடகங்களை தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்து, தனக்கு துதிபாடுவதற்காக தயாரித்து வைத்துள்ள மோடி, இதே போல நீதித்துறையையும், தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை விரிவாக்கி, பல்வேறு விளக்கங்களை அளித்து, அச்சட்டத்தை மாண்புள்ளதாக ஆக்கிய உச்சநீதிமன்றம்தான் எழுபதுகளில், நெருக்கடி நிலையில், அடிப்படை உரிமைகள் கிடையாது என்று தீர்ப்பளித்தவர்கள்தான் இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
நெருக்கடி நிலையில் ஊடகங்களுக்கு அரசு கட்டுப்பாடு விதித்தது. ஆனால், தற்போது மோடி அரசில், ஊடகங்களே அந்தக் கட்டுப்பாடுகளை தாங்களாக விதித்துக் கொண்டு, மோடிக்கு துதிபாடுவதையே வேலையாகக் கொண்டுள்ளன.
அதே போல நீதித்துறையைம் தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதில், மோடி வெற்றி பெறுவார் என்றே தோன்றுகிறது. நெருக்கடி நிலையில் இந்திராவின் மிரட்டல்களுக்குப் பணியாத எச்.ஆர் கண்ணா போல், ஒரு நீதிபதியாவது இருப்பார் என்ற நம்பிக்கை குறைவாகவே உள்ளது. சமீப காலங்களில் சதாசிவங்களையும் கர்ணன்களையும், சி.டி.செல்வங்களையும் போன்ற நீதிபதிகள் இருக்கையில், எச்.ஆர்.கண்ணாக்கள் இருக்க முடியுமா என்ன ?
Dear sir,
This is very great article about justice appoimnet an india. proceed your duty
Extremely biased article against Modi. Savukku deliberately ignored the other part of the story.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு நவம்பர் 15 2010 இல் இப்படி செய்தி வெளியிட்டது: “Documents accessed by TOI conclusively establish the SG’s efforts to coordinate between the agencies and the counsel of the telecom minister, whom they were to investigate…” சிபிஐயின் மறுப்புகளை புறக்கணித்து அன்றைய மத்திய அரசின் அரசு தலைமை வழக்கறிஞர் நடந்து கொண்டார். மட்டுமல்ல அவர்தான் சிபிஐ தரப்பில் ராசா விவகாரத்தில் வழக்கறிஞராக செயல்படுவேன் என பிடிவாதமும் பிடித்தார். இறுதியில் அவர் வழக்கறிஞராக இருப்பதை சிபிஐ விரும்பவில்லை என சிபிஐயே எழுத்து மூலமாக சொல்ல வேண்டிய நிலை வந்தது.
http://timesofindia.indiatimes.com/india/Centre-cites-2G-probe-Radia-links-to-oppose-Gopal-Subramaniams-appointment-as-SC-judge/articleshow/36852561.cms
http://www.tamilhindu.com/2014/07/vethal_tour/
எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட்டுங்கோ .KG பாலகிருஷணன் ன்னு ஒரு ஜடஜ் இல்ல இல்ல தலைமை நீதிபதி..அவர் சொத்து கேரளாவில் மட்டிமே 117 கோடி என பேசப்படுகிறதே..சவுக்கு ஒன்றும் எழுதவில்லையே.மிக சிறந்த ஊழல் சிகாமனியாமே
Hi
Feku’s party is trying to defame, obstruct or vilify Gopal Subramanium systematically, esp. in the mass media, usually with the aim of preventing his appointment to public office. Mr. Subramanium and Rohinton Nariman were among the youngest persons to be designated as senior advocates by the Supreme Court. A lawyer highly regarded by the late Justice J.S. Verma, it was Mr. Subramanium and his teams’ extraordinary effort which formed the basis of the Verma report which led to amendments to the rape law after the Delhi gang rape incident in Delhi in 2012. Mr. Subramanium has served as Additional Solicitor General and Solicitor General for over eight years. He worked on Ajmal Kasab’s appeal for a nominal fee of one rupee. The Central Bureau of Investigation, which trusted him with cases of national importance, such as those of Ajmal Kasab and David Headley, has now unfairly chosen to weasel out by giving the recent events a colour which they did not originally possess.
Recently, acting as amicus curiae in safeguarding the wealth of the Anantha Padmanabhaswamy temple, Mr. Subramanium went out of his way in cleaning its sacred tank and spending nearly a crore from his own pocket. The Intelligence Bureau report to the Law Ministry raises questions about Subramaniam’s ‘odd behaviour’ giving instances where it says Subramaniam relied on his spiritual instincts rather than rational logic. Subramanium, who spent 35 days in Trivandrum and in the temple complex and exposed large-scale pilferage of gold from the temple vaults, submitted a 575-page report that he could not take the credit for discovering any of the misdeeds and that it was divinely ordained and said “It was his morning ritual of (shutting) his mind and seeking guidance, which resulted in discoveries in this direction”. A devout person, Subramanium has also been accused of conducting poojas in the temple in violation of its customs. Answering the charge, Subramanium had told a news magazine in an interview that he had “undertaken a formal course on Tantra from a great scholar at Benares”. This odd behavior is considered detrimental by IB. Justice Kripal from the Supreme Court bench narrated an experience from the Delhi High Court. An IB report in the case of a prospective appointee mentioned that he was a drunkard. The appointment did not go through at that stage, but the Chief Justice of the Delhi High Court knew that the report was not true. When enquiries were made, it turned out that the appointee drank only on occasion while his friends were habitual drinkers. He was nicknamed ‘boozer’ because of the company he kept, even though he stayed sober. IB sleuths who were charged with finding out more information about the man stumbled on this nickname and drew a damning conclusion. The person concerned was later appointed to the Delhi High Court in a subsequent batch of appointments.
The CBI had earlier raised questions about Subramanium’s appointment pointing to references about him in the Radia tapes and his role in the 2G case. As S-G, he is said to have met with the lawyer for 2G scam accused, former telecom bandit A Raja, in his office in the presence of CBI officers in charge of the investigation, a behaviour that was considered improper. There is nothing unprofessional in meeting the lawyer of the spectrum bandit in the presence of CBI officers in his chamber. CBI officers can see, smell and hear your every move. Subramaniam, however, in a letter to then telecom minister Kapil Sibal, has denied having met the lawyer. The government says that a conversation between Nira Radia and some third person shows Mr. Subramanium in poor light. On the contrary, the conversation between Ms. Radia and industrialist Ratan Tata, where his name is mentioned, shows him in a very favourable light, since Ms. Radia says, ‘I am not sure that Mr. Subramanium will agree to what they say. He is an upright person. I think the spectrum bandit will be trying to get the AG’.
IB barks according to its master, first it was Italian madam, now its Feku. India was ill-served in the past by Mohan Kumaramangalam’s call of the early seventies. Four decades later, it is ill-served by the current law ministry’s subservience to partisan party interests and unfortunately, the new government is already displaying a tendency that with a brute majority anything is possible. Feku’s fanboys already started chanting that Intelligent Namo is to decide who is qualified to be a judge of the Supreme Court and amenable to the current Government and they don’t need obstructionist judges who will be a hindrance to the functioning of the new Government. Thats the current fate of India and we have more 58 months of waiting for Namo to make India become better than Europe and then Namo will think about ruling Asia with similarity to Ashoka.
கோபால் சுப்பிரமணியமோ மோடியையோ அமித் ஷாவையோ நேரடியாக குற்றம் சாட்டாமல் பின்வாங்குகிறார். சோராபுதீன் வழக்கில் தான் தற்செயலாகத்தான் நீதிமன்ற நண்பராக பொறுப்பேற்க நேர்ந்தது என்றும், மோடிக்கு எதிராகவோ, அமித் ஷாவுக்கு எதிராகவோ தனக்கு எந்தவித விரோதமும் இல்லை என்றும் உண்மையில் அமித் ஷாவுக்கு பிணை வழங்குவதை தான் ஆதரித்ததாகவும என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார்.-vinavu
I heard that Mr Gopal Subramiam is showing undue interest in the 2G scandal; more exactly favouring the accused’s. Any evidences to nullify that claim ?
கட்டுரையில் ஓரு தவறு உள்ளது அந்துலே மகாராஷ்ராவின் முன்னாள் முதல்வர் கர்நாடகா அல்ல மற்றபடி இந்தியாவில் ஓளிவுமறைவற்ற நிர்வாகம் குதிரை கொம்பு தான் போலிருக்கு சுயநலம் மட்டுமே என நம்பும் ஓரு பகுதி மக்களும் 80 சதவித படிப்றிவுஅற்றவர்களும் நிறைந்த நாட்டில் மீடியா உள்பட அனைவருமே குற்றவாளிகள்தான்
Dear Savukku. I am sorry to say that ” These days Savukku has become yet another magazine trying to impose their thinking on the readers conveniently ignoring some of the facts that could damage the points that they wish to impose’. The pity is that even savukku has fallen a prey and in his articles ignore a few points that are in favour of the opponent and paint a caste colour like ‘parpana’ (where it is not required or would add any strength to his arguments – not sure whom or which segment he wish to please) that has no relevance to the subject handled. Sorry to say Savukku has lost its balanced way of handling issues with straight forwardness for reasons best known to them. I can only feel sorry for the situation. With Best Regards
savukku’s standard going down the drain!!!
Dear Savukku, I read in few articles that there was an allegation against Mr, Gopal Subaramaniam that he was showing undue interest, trying to influence the 2 G case on behalf of Mr. Maran. How will you justify this?. I read that he was not clean as portrayed in this article.
Don’t know when the country can get rid of negative elements who keep inventing stories to stay relevant somehow and create trouble by falsehood. We need judges who are honest beyond doubt. We need judges who don’t support pseudo secular thinking. We need judges who don’t support terrorists. We want a clean India.
உங்கள் கருத்து தவறு. எம்.ஜி யார்.பாடியாது தான் நினிவிர்க்கு வருது.தருமம் தலை காக்கும். உண்மையை யாராலும் மறைக்கமுடியாது. அது தக்க சமயத்தில் பீறிட்டுக்கொண்டு எழும். அப்போது இவர்கள் எல்லாம் காணமல் போய் விடுவார்கள். தர்ம தேவதை இன்னும் தமது வேலையை செஇவதனாதால் தான் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. எனவே மோடியோ மகுடியோ சகுநியோ இல்ல இந்த காங்கிரஸ் காரர்களோ தர்மத்தின் கண்ணில் இருந்து தப்ப முடியாது.
மத்தியில் ரெண்டு தாடி கூட்டணி, மாநிலத்தில் ரெண்டு லேடி கூட்டணியை விட , நாட்டுக்கு கேடு காலம்தான்!
1967 முதல் வீண் ஆனா எல்லாம், சரி ஆக இன்னும் 100 வருஷம் ஆகும்!
தாடி , முண்டாசே, தேவலாம்னு ஆக்கிடும் போல!
படிச்சு எழுதி நம் நேரம் மட்டும் வீண்!
நம்பிக்கை நாகராஜ்-துபாய்
A law ministry official said the IB had in its report given instances where it says Subramanium relied on his spiritual instincts rather than rational logic. The report specifically mentioned the Parliament attack case of 2001 in which Subramanium was the Special Public Prosecutor and more recently the Sree Padmanabhaswamy temple case where he was an amicus curiae (friend of the court). In the latter case, Subramanium, who spent 35 days in Trivandrum and in the temple complex and exposed large-scale pilferage of gold from the temple vaults, submitted a 575-page report that he could not take the credit for discovering any of the misdeeds and that it was divinely ordained. “It was his morning ritual of (shutting) his mind and seeking guidance, which resulted in discoveries in this direction,” the report said.
A devout person, Subramanium has also been accused of conducting poojas in the temple in violation of its customs. Subramanium did not respond to ET queries despite repeated attempts including calls, emails and a visit to his Jorbagh office. Answering the charge, Subramanium had told a news magazine in an interview that he had “undertaken a formal course on Tantra from a great scholar at Benares”.
The CBI had earlier raised questions about Subramanium’s appointment pointing to references about him in the Radia tapes and his role in the 2G case. As S-G, he is said to have met with the lawyer for 2G scam accused, former telecom minister A Raja, in his office in the presence of CBI officers in charge of the investigation, a behaviour that was considered improper.
“ஜெயலலிதா எப்படி தன்னுடைய அமைச்சர்களை அடிமைகளாக வைத்திருக்கிறாரோ, அதே போலத்தான் மோடியும் தன்னுடைய அமைச்சர்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்”
So you mean to say that like Jayalalitha, Modi will win next term with overwhelming majority.
Very well said.