கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து விதமான க்ரானைட் க்வாரி நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன என்று ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகமெங்கும் வருவாய்த்துறை மற்றும் கனிமத்துறை அதிகாரிகள் பரபரப்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தார் ஜெயலலிதா. அந்த ஆய்வுக்குழு தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் அள்ளுவது தொடர்பாக விரிவான ஆய்வுகளை நடத்தியது. அதன் பின், இந்த ஆய்வுக் குழு, கார்னெட், இலுமினைட், ரூட்டைல் போன்ற தாதுப்பொருட்கள் எடுப்பதில் நடந்த முறைகேடுகளை ஆய்வு செய்ய, திருநெல்வேலி, மதுரை, திருச்சி மற்றும் கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களிலும் இந்த ஆய்வு விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் இன்னும் முழுமையாக முடிவுபெறவில்லை. தமிழக அரசு, ஆய்வுக்கான ஆணைகளை வெளியிட்டபோது, தெளிவாக வெளியிடப்பட்ட ஆணை என்னவென்றால், விவி மினரெல்ஸ் மற்றும் ட்ரான்ஸ்வேர்ல்ட் கார்னெட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் போக்குவரத்து பர்மிட் வழங்கப்படக் கூடாது என்பதே.
போக்குவரத்து பர்மிட் வழங்கக் கூடாது என்பதுதான் முக்கியமான உத்தரவு. ஏனென்றால், ஏற்கனவே எடுத்து வைத்திருந்த கார்னெட், இலுமினைட் உள்ளிட்ட தாதுப் பொருட்களை வைகுண்டராஜனால் ஏற்றுமதி செய்ய இயலாது.
க்ரானைட், இலுமினைட், லைம்னைட், ஸிர்க்கான், ரூட்டைல் போன்ற விலை உயர்ந்த தாதுப்பொருட்களை எடுத்து ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு விதி முறைகள் உள்ளன. இவற்றை வரண்முறை செய்ய பல்வேறு சட்டங்கள் உள்ளன. Mineral Conservation and Development Rules, 1988, Mines and Minerals (Development and Regulation ) Act, 1957. Mineral Concession Rules, 1960 என்பது போன்ற பல்வேறு சட்டங்கள் உள்ளன. இந்த சட்டத்திட்டங்களின் படி, உரிய முறையில் விண்ணப்பித்து, உரிமம் பெற்ற பிறகே க்ரானைட் தொழிலில் ஈடுபடு முடியும்.
இப்படி பல கட்டுப்பாடுகள் உண்டு. இந்த விதிகள் அனைத்தையும் பின்பற்றுவது போல பின்பற்றியே தொழில் செய்து வருகிறார் வைகுண்டராஜன். வைகுண்டராஜனின் ஸ்டைலே தனி. உதாரணத்துக்கு, சர்வே நம்பர் 210/23ல் க்வாரி நடக்கிறது என்று அனுமதி பெற்றுக் கொண்டு, அதைச் சுற்றி இருக்கும் அத்தனை இடங்களிலும் அள்ளி எடுப்பார். அவரை மீறி, ஒரு பயல் உள்ளே சென்று ஆய்வு நடத்த முடியாது.
தாதுமணல் எடுக்க தடை செய்து ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவே, அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அளித்த அறிக்கைக்குப் பிறகுதான். தாதுமணல் கொள்ளை, குறிப்பாக, வைகுண்டராஜன் என்ற மணல் மாஃபியா தலைவன் நடத்தும் கொள்ளைகள் குறித்து விரிவாக அறிக்கை அளித்த ஆஷிஷ் குமார், இரண்டே நாட்களில் மாற்றப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றும் அதிகாரத்தை தன் கையில் வைத்திருக்கும் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இந்த மாற்றம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தாதுமணல் கொள்ளளையையே ஒழிக்கப் போவது போல கமிட்டியெல்லாம் அறிவித்து அறிவிப்பு வெளியிட்டார் ஜெயலலிதா.
ககன்தீப் சிங் பேடியின் அறிக்கை அளிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. ஜெயலலிதா அந்த அறிக்கையை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஜெயா டிவியில் பங்குதாரராக இருக்கும் வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுப்பார் ஜெயலலிதா என்று நம்புவதே முட்டாள்த்தனம்.
ஒரு இடத்தில் கனிமவளங்களை வெட்டி எடுக்க, சம்பந்தப்பட்டவர் மாநில அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த மாவட்ட ஆட்சியர், அந்த விண்ணப்பத்தை பெற்று, சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையின் இயக்குநருக்கு அந்த விண்ணப்பத்தை அனுப்புவார். அந்த விண்ணப்பம் அரசின் தொழில் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அரசின் அனுமதி கிடைத்ததும் Mineral Concession Rules, 1960 விதி 22 (6)ன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய அரசின் கனிமவளத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் கனிமவளத் துறை, ஐந்து ஆண்டுகளுக்கு கனிமவளம் குறிப்பிட்ட பகுதியில் கனிமங்களை எடுக்க, அனுமதி தரும். அந்த விண்ணப்பத்தில், எப்படி கனிமம் எடுக்கப் போகிறோம், எந்தெந்தப் பகுதியில் கனிமம் எடுக்கப் போகிறோம் என்பது குறித்து விரிவான திட்ட வரைவுகளையும் அனுப்ப வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வீடு கட்டுவதற்கான திட்ட வரைபடம் போல அனுப்பப்பட வேண்டும்.
ஐந்து ஆண்டு அனுமதி முடியும் தருவாயில், அது முடிவதற்கு 120 நாட்களுக்கு முன்பாக, மீண்டும் சம்பந்தப்பட்ட நிறுவனம், மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். 120 நாட்களுக்குள் விண்ணப்பிக்க தவறினால், விளக்கம் கேட்கப்பட்டு, கனிமம் எடுப்பதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இது தவிரவும், மத்திய அரசுக்கு நிறுவனம் அனுப்பிய திட்டத்தில் விதிமீறல் இருந்தால் தலையிட்டு, அனுமதியை ரத்து செய்யவும் உரிமை உண்டு. இதுதான் விதி.
வைகுண்டராஜனின் ட்ரான்ஸ்கார்நெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதி 31.03.2012 அன்று முடிவடைகிறது. டிசம்பர் 2011க்கு உள்ளாகவே மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், வைகுண்டராஜனை கேட்பதற்கு யார் இருக்கிறார்கள் ? எந்த விண்ணப்பத்தையும் அந்த நிறுவனம் அனுப்பவில்லை. இதையடுத்து உங்கள் கனிமவளம் எடுக்கும் அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு, மத்திய கனிம வளத்துறை ஒரு அறிவிக்கையை அனுப்புகிறது.
இதையடுத்து தப்பும் தவறுமாக, அவசர அவசரமாக 01.10.2013 அன்று வைகுண்டராஜனின் நிறுவனம், இரண்டு வரைவுத் திட்டங்களை அனுப்புகிறது. அந்த வரைவுத் திட்டத்தை ஆராய்ந்த மத்திய அரசு, உங்கள் வரைவுத் திட்டம் முழுக்க தப்பும் தவறுமாக இருக்கிறது. இக்கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள தவறுகளை சரி செய்து அனுப்பினால் மட்டுமே, லைசென்ஸை புதுப்பிக்க முடியும் என்று கடிதம் அனுப்புகிறது. மத்திய அரசு சுட்டிக்காட்டிய எந்தத் தவறையும் சரிசெய்யாமலேயே, குருட்டாம்போக்கில் ஒரு பதிலை மத்திய அரசுக்கு ட்ரான்ஸ்வேர்ல்ட் கார்நெட் நிறுவனம் அனுப்புகிறது.
மத்திய அரசு குறிப்பிட்டிருந்த எந்தத் தவறுகளையும் சரி செய்யாத காரணத்தால், விதிகளின்படி, கனிமவளம் எடுக்க ட்ரான்ஸ்வேர்ல்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு உத்தரவிடுகிறது. அந்த உத்தரவின் நகல் மாநில அரசுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த உத்தரவை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கே உள்ளது.
இந்த நேரத்தில்தான், வைகுண்டராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். உயர்நீதிமன்றத்தை அணுகி, ஏராளமான முறைகேடுகள் நடந்த காரணத்தால் கனிம வளம் எடுக்க தடை செய்த மாநில அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரவில்லை. மாறாக, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோருகிறார்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நன்றாக கவனிக்க வேண்டும். மாநில அரசு ககன்தீப் சிங் பேடி தலைமையில் கமிட்டி அமைத்து, முறைகேடுகள் காரணமாக, கனிமவளம் எடுக்கும் நடவடிக்கைகளை ரத்து செய்து, கனிமங்களை லாரிகளில் எடுத்துச் செல்வதை தடை செய்தது தனி நடவடிக்கை. உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்பாத காரணத்தால், மத்திய அரசு அனுமதியை ரத்து செய்தது தனி நடவடிக்கை. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை.
ஆனால், வைகுண்டராஜன் தனது மனுவில், மாநில அரசு தடை விதித்த காரணத்தால், மத்திய அரசு, சுரங்கத்துக்கான அனுமதியை ரத்து செய்து விட்டது என்று குறிப்பிடுகிறார்.
இப்போது சென்னை உயர்நீதிமன்றம் ஆராய வேண்டியது என்ன ? மாநில அரசின் நடவடிக்கை காரணமாக மத்திய அரசு சுரங்க அனுமதியை ரத்து செய்ததா ? மத்திய அரசின் உத்தரவு சட்டப்படி சரியா ? என்று ஆராய்ந்து சரி என்றும் சொல்லலாம். தவறு என்று உத்தரவையும் ரத்து செய்யலாம்.
இதற்கு சம்பந்தமே இல்லாமல் இது வரை வெட்டி வைத்திருந்த கனிமங்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கிறேன் என்று ஒரு நீதிபதி தீர்ப்பளித்தால் அது முட்டாள்த்தனமான தீர்ப்பா, உள்நோக்கம் கொண்ட தீர்ப்பா ? ஏன் உள்நோக்கம் கொண்ட தீர்ப்பா என்ற சந்தேகம் வருகிறது என்றால், வைகுண்டராஜன் உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்ய வேண்டும் என்று கோருவது, மத்திய அரசின் சுரங்கத்துக்கான ரத்து செய்த உத்தரவை. அது சரியா, தவறா என்று உத்தரவிடுவது மட்டுமே நீதிமன்றத்தின் அதிகாரத்துக்குள் வரும். ஏனென்றால், மாநில அரசின் உத்தரவுகளை எதிர்த்து, வைகுண்டராஜன் வழக்கே தாக்கல் செய்யவில்லை.
சரி. இப்படி ஒரு சிறப்பான உத்தரவை பிறப்பித்த அந்த நீதி நாயகன் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்குமே…..!!! அவர் வேறு யாருமல்ல. சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நீதிநாயகன் கர்ணன்தான் அது.
ஏப்ரல் 30 2014 அன்று, இது வரை வெட்டி வைத்திருந்த கனிமங்களை எடுத்துச் செல்வதற்கு, வைகுண்டராஜன் நிறுவனத்துக்கு எந்தத் தடையும் இல்லை என்று உத்தரவிடுகிறார் நீதியரசர். மே மாதம் முழுக்க, வைகுண்டராஜன் இது வரை எடுத்து வைத்திருந்த கனிமங்களை வெளியேற்றி ஏற்றுமதி செய்து முடித்து விட்டார். கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் நீதிமன்றம் திறக்கப்பட்ட பிறகும், இதற்கான உத்தரவு கர்ணனால் நீடிக்கப்பட்டது. தற்போது 7 ஜுன் வரை இந்த உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தாதுமணல் கொள்ளை குறித்து அறிக்கை அளிக்கப்பட்டது முதல் சூடு பிடித்த இந்த விவகாரம், தொடர்ந்துவிசாரணை வளையத்திலேயே இருந்து வருகிறது. ஆனால் விசாரணை தொடங்கியதுமே, தூத்துக்குடியில் இடைப் பட்ட ஒரு வாரத்திற்குள்ளே தாது மணல் கொள்ளையர்கள் பல்வேறு முறைகேடுகளை மறைத்தனர். ஆய்வு செய்ய சென்ற சிறப்புக் குழுவுடன் மீனவ மக்களும் உடன் சென்றதால் முறைகேடுகளை மறைத்தததை காட்டிக் கொடுத்து, பத்திரிக்கைகள் மூலம் இவை அம்பலமாகியது.
தூத்துக்குடி தாது மணல் கொள்ளை அம்பலமான பிறகு, நெல்லை மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு முறைகேடான தடயங்களை எல்லாம் மூடி மறைத்தனர்.
தாதுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவான ஆட்களால், ஒவ்வொரு மீனவ கிராம மக்களையும் பிளவுபடுத்த எண்ணற்ற சதி வேலைகள் காவல்துறையினர் துணையோடு மேற்கொள்ளப் பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் அனைவரும் அறிவிக்கப்படாத தாதுமணல் நிறுவன ஊழியர் போல் செயல்பட்டு வருகின்றனர்.
தாதுமணல் கொள்ளையை எதிர்த்து கடந்த ஆறு மாதமாக இடையறாது போராடி வந்த கூத்தென்குழி கிராமத்தில், சூன் 14ஆம் நாள் தாதுமணல் கொள்ளையர்களின் அடியாட்கள் காவல் துறை துணையுடன் ஊருக்குள் புகுந்து வெடிகுண்டு வீசி ஊரையே நிலை குலைய வைத்தனர்.
ஊர் மக்களை இந்த அளவுக்கு கடுமையாக மிரட்டி வைத்திருக்கும் வைகுண்டராஜன்தான் தற்போது நீதிமன்றம் மூலமாக அரசாங்கத்தையே மிரட்டி வருகிறார்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக ஆஜராகி வாதாடிய, டி.என்.ராஜகோபாலன், இவ்வழக்கில் நடந்தவற்றை சரியாகவே வாதாடி பதிவு செய்துள்ளார். ஆனால், கர்ணனோ, தனக்கு சாதகமாக உண்மைகளை வளைத்து, வைகுண்டராஜனின் கொள்ளை தங்கு தடையின்றி நடக்க உதவி செய்துள்ளார். ஏற்கனவே எடுக்கப்பட்ட தாதுமணல்களை வைகுண்டராஜன் எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடும் கர்ணனுக்கு, வைகுண்டராஜன் ஏற்கனவே எடுத்த தாதுமணல்களை எடுக்கிறாரா, அல்லது புதிதாக தாதுமணல் அள்ளுகிறாரா என்பது தெரியுமா ? கர்ணன் அங்கே நேராகச் சென்று பார்க்கப் போகிறாரா ?
மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், சார் நாங்கள்லாம் அந்தப் பக்கம் போகவே முடியாது. போனா உயிரோட வருவோமான்னு தெரியாது என்கிறார். இதுதான் யதாரத்த நிலைமை.
மாநில அரசின் உத்தரவுகளை எதிர்த்து வழக்கே தாக்கல் செய்யாத நிலையில், மாநில அரசு எடுக்கப்பட்ட தாது மணல்களை எடுத்துச் செல்ல தடை விதித்துள்ள நிலையில், தாதுமணலை எடுத்துச் செல்ல உத்தரவிட்டதன் மூலம், மாநில அரசின் தடை உத்தரவை செல்லாததாக்கி இருக்கிறார் கர்ண மகராஜா.
இந்த வழக்கு கடந்த வாரம் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனித உரிமை பாதுகாப்பு நடுவத்தின் சார்பாக தங்களையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன். அவர் தனது மனுவில், வழக்கறிஞர்களாகிய நாங்கள் ஒரு உண்மை அறியும் குழு அமைத்து, தாதுமணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 14.08.2013 முதல் 21.08.2013 வரை சுற்றிப் பார்த்தோம். அவ்வாறு நாங்கள் பார்வையிட்டபோது, விதிகளை மீறி இயந்திரங்களை பயன்படுத்தி தாதுமணல் அள்ளப்பட்டு வருவது தெரிய வந்தது. மணலில் இருந்து தாதுக்களை பிரிக்கையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் அப்படியே கடலில் கலக்கப்பட்டது. இதன் காரணமாக, கடல் நீரே செந்நிறத்தில் மாறியுள்ளது. இந்த ரசாயனங்களின் கலப்பின் காரணமாக, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் உருவாகிறது.
இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, குழுவின் அறிக்கை நவம்பர் 2013ல் சமர்ப்பிக்கப்பட்டும், இது வரை வெளியாக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வைகுண்டராஜன் நிறுவனத்தின் தாதுமணல்களை விடுவிக்கும் இந்த வழக்கில் எங்களையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
மீனாட்சி என்ற மனித உரிமை பாதுகாப்பு நடுவத்தைச் சேர்ந்த ஒரு இளம் வழக்கறிஞர் இந்த மனு குறித்து நீதிபதி கர்ணனிடம் கூறினார். வந்ததே கோபம் கர்ணனுக்கு……. “யார் இந்த மனுதாரர் ?” என்றார். “இவர் அந்தப் பகுதியில் சமூக ஆர்வலர்” என்று கூறியதும் இன்னும் கோபமடைந்தார் கர்ணன்.
“சமூக ஆர்வலர் என்றால் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாரா ? எப்போது பார்த்தாலும் விளம்பரத்திற்காக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்வதே உங்களுக்கெல்லாம் வேலையாகப் போய் விட்டது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே உங்களுக்கு முழுநேர வேலையாகப் போய் விட்டது.
அரசாங்கம் லைசென்ஸ் தருகிறது. அவர்கள் லைசென்ஸ் பெற்று கனிமங்களை அள்ளுகிறார்கள். உங்களுக்கு என்ன வந்தது ? கடல் எங்கே இருக்கிறது ? ஊர் எங்கே இருக்கிறது. எதற்காக வந்து இங்கே தொல்லை தருகிறீர்கள் ? ” என்று 15 நிமிடம் கடுமையாக கத்தித் தீர்த்தார்.
அதன் பிறகு மத்திய அரசு வழக்கறிஞரின் பங்கு. அவர் எழுந்து, இதற்கு பதில் மனு டெல்லியில் இருந்து ஒப்புதல் பெற்று வர வேண்டும். டெல்லிக்கு பதில் மனு அனுப்பியுள்ளோம். வந்ததும் தாக்கல் செய்கிறோம் என்று கூறியதும் லார்ட்ஷிப் கர்ணன் இன்னும் கோபமடைந்தார்.
“டெல்லியில் இருந்து பதில் மனு வரும் வரை நான் காத்திருக்க வேண்டுமா ? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்…. இந்த நீதிமன்றத்தின் அதிகாரம் என்னவென்று தெரியுமா ? நீங்கள் பதில் மனு தாக்கல் செய்தாலும், தாக்கல் செய்யாவிட்டாலும் நான் திங்கட்கிழமை தீர்ப்பு சொல்லத்தான் போகிறேன். இது போன்ற முக்கியமான வழக்குகளில் தாமதம் செய்ய இயலாது” என்றார்.
எது முக்கியமான வழக்கு. வைகுண்டராஜன் முக்கி முக்கி மணல் கொள்ளை அடிப்பது கர்ணனுக்கு முக்கியமான வழக்காம்.
இது மட்டும் இல்லை. வைகுண்டராஜன் சார்பாக ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல்.சுந்தரேஷ். இவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏஆர்.லட்சுமணனின் மகன். இவரைப் பற்றி தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில் இப்படி குறிப்பிடுகிறார் கர்ணன்.
On considering the facts and circumstances of the case and arguments advanced by the highly competent senior counsel for the petitioner Mr.ARL.Sundaresan.
எதற்கு இப்படி சுந்தரேசனுக்கு இப்படி ஒரு சொம்படிக்கிறார் கர்ணன் என்பது கர்ணனுக்கே வெளிச்சம்.
சரி. கர்ணன் இப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறாரே…. இதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள் ? தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் சதீஷ் அக்னிஹோத்ரிதான்.
கர்ணன் எப்படிப்பட்ட நீதிபதி, அவர் மீது எத்தனை ஊழல் புகார்கள். பத்திரிக்கையாளர்களை அழைத்து நான் தலித் என்பதால் எனக்கு உயர்நீதிமன்றத்தில் நல்ல துறைகள் வழங்கப்படுவதில்லை என்று பேசுபவர் என்பதெல்லாம் தெரிந்தும், அவரை, மின்சாரம், நில ஆக்ரமிப்பு, கனிமம் மற்றும் சுரங்கம், வனம், கூட்டுறவு என்ற முக்கியமான வழக்குகளை கவனிக்க மனசாட்சி உள்ள யாராவது ஒரு தலைமை நீதிபதி நியமிப்பாரா ? திருடனின் கையில் சாவியைக் கொடுப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு ?
கர்ணனைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும், கோடைக்கால விடுமுறையில், அவரை ஜாமீன் வழங்க நியமித்ததும், அப்போது கர்ணன் யாருக்கெல்லாம் ஜாமீன் வழங்கினார் என்பதும் சவுக்கு வாசகர்கள் அறிந்ததே. குற்றவியல் நடைமுறைப் பிரிவுச் சட்டம் பிரிவு 482ன் கீழ், சி.டி.செல்வம் இழைத்த அநியாயங்களை எல்லாம் நன்கு அறிந்திருந்தும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படும், வழக்குகளை மாற்றாமல், தொடர்ந்து சி.டி.செல்வமே கவனிக்க அனுமதித்தார் அக்னிஹோத்ரி.
இதனால்தான் பஞ்சாப் உயர்நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட இருந்தவரை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர விடாமல், ஜெயலலிதா மூலமாக தடுத்து வருகிறார் நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி.
இவரே சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இருந்தால், நீதியை வைகுண்டத்துக்கு அனுப்பி வைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறார் போலும்.
சரி. இப்படியெல்லாம் நீதிபதி கர்ணன் வைகுண்டராஜன் வழக்கில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் என்ன ? அவர் வைகுண்டராஜனிடம் லஞ்சம் வாங்கி விட்டு, இந்த வழக்கை விசாரிக்கிறாரா…. ? அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குகிறாரா என்ற அய்யம் எழும்.
நீதிபதி கர்ணன் லஞ்சம் வாங்கி விட்டுத்தான், வைகுண்டராஜனை கனிமக் கொள்ளை அடிக்க வைத்தாரா என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. வரும் திங்கட்கிழமை முதல் 7 ஜுலை முதல், நீதிபதிகளுக்கான பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதி கர்ணன் இதுவரை கவனித்து வந்த கனிமவளம் தொடர்பான வழக்குகளை கவனிக்க, நீதிபதி பி.ராஜேந்திரன் இனி கவனிப்பார்.
உடனே, வைகுண்டராஜன் வழக்கில் நியாயம் நடக்கும் என்று நினைத்து விடாதீர்கள். கனிமவளத்துறையே கர்ணன் நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்டாலும், வைகுண்டராஜன் வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு என்று பட்டியலிடப்பட்டுள்ளது. போர்ட்ஃபோலியோ மாற்றப்பட்டாலும் ஒரு நீதிபதி இதற்கு முன் விசாரித்த வழக்கில் தீர்ப்பு எப்போது சொல்வார்கள் என்றால், மொத்த வாதப் பிரதிவாதங்களும் முடிந்த பிறகு, இரு தரப்பும் பதில் மனு தாக்கல் செய்த பிறகே தீர்ப்பு சொல்வார்கள்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த வழக்கில் மத்திய அரசு இது வரை பதில் மனுவே தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் எப்படி திங்கட்கிழமை தீர்ப்பு சொல்லப் போகிறார் நீதிநாயகர் கர்ணன் ? இப்படி தனிப்பட்ட முறையில் வைகுண்டராஜன் வழக்கில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் என்ன ? இப்படி சம்பந்தம் இல்லாமல், சட்டவிரோதமாக ஒரு வழக்கில் கர்ணன் தீர்ப்பளிப்பதை, தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி ஏன் அனுமதிக்கிறார்…. ?
இதையெல்லாம் உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.
சவுக்கு தளத்தை தடை செய்ய நீதிமன்றங்கள் ஏன் துடிதுடிக்கின்றன என்பது இப்போது புரிகிறதா ?
கர்ணன் வாங்கியது எத்தனை கோடி ? …..
நிச்சயமா இது நீதி வணிகம் தான்.
i cannot understand why savukku sankar dont start a registered legal organisation/forum for justice and human rights and fight legally with credibility for boldly opposing illegal things/justice/police?Individualism is megalomaniac but collectivism/organisation will serve public cause! it is safe for him also!-Nambikai Nagaraj-Dubai
ஏன் Mr.karnan ஒவ்வொரு வாரமும் காளஹஸ்தி போகிறaar?
tharmam orunaal
nitchayam vellum.
கர்ணன்னு பேரு வச்சிருக்காரே, இவரு மகாபாரத கர்ணனா இல்ல இராமாயண (கும்ப)கர்ணனானு ரொம்ப நாளா ஒரே டவுட்டு…
ஊஹும்.. இது ஒரு புது ரகம்…. பாக்க இராமாயண கர்ணன் மாதிரி இருந்தாலும், இது காவாலி கர்ணன். மனசுல மகாபாரத கர்ணன்னு நெனப்பு, அதான்.. எப்போ பாத்தாலும் டீச்சர், இவன் என்ன கிள்ளி வக்கிறான், அவன் என்ன குட்டுரான்னு ஒப்பாரி வக்கிது…
இதெல்லாம்.. பூமிக்கு பாரம்.. வேறென்ன சொல்ல.
Welcome back, Savukku Shankar!
You made a real come back to your own form with this article, incorporating your brand of scanned copies of orders and what not. This is your unique strength, which traditional (!) writers do not possess. Let not your unique strength be wasted in the “Maya valai” of pseudo-secularism and misplaced “minority concerns”. There are dime a dozen writers to take care of secularism and minority concerns, but there is none other than you to expose corruption without caring about whoever it is, his or her political lineage or caste, religion or creed.
Let our country be rid of the corrupt persons in all walks of life and in this mission, please continue your good work.
Truth can never be banned. If Savukku maintains its truthful path, it can never be banned, however mighty the authority is.
You blocked me from your facebook page!! that’s your right, I’m not questioning your right, but I got screenshots with your reply, atleast don’t you think that you should give me a chance to counter before blocking!!!,, what ethics is posting a reply and blocking me so I won’t be able to counter it..,, It seems equivalent to shouting in front of a locked door!!!,
The details which I have posted in your comment box is taken from your article but you first thought I work for Justice karnan and then you thought I work for vaikundarajan!!,, very funny, This makes me arrive at the conclusion that you don’t want anybody questioning your articles,, again that’s your right so no problem,,
But if you don’t wish to let me air my opinion in your comments then delete my previous comments too, then you can write anything unquestioned!!
வைகுண்டராஜன் சார்பாக ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல்.சுந்தரேஷ். இவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏஆர்.லட்சுமணனின் தந்தை//தந்தையா? மகனா?
For a long time I thought the judges eat turd sanwiches now I know that they eat turd sandwiches soaked in urine
தேனெடுப்பவன் எவனாயிருந்தாலும் புறங்கை நக்கியது அந்தக்காலம். முழு நேரமும் புறங்கையை மட்டுமே நக்கிக் கொண்டு இருப்பது இந்தக் காலம். இதில் ஜாதி வித்தியாசம் கிடையாது. சவுக்கு வித்தியாசம் பார்க்காமல் சுழற்றுங்கள்.
It is so sad to see Corrupt Judges. I have no idea how this justice system will be reformed? God Help Us.
Is there no way to curb all these frauds?
hmm
முக்கியப் பொறுப்புகளில் தகுதியற்றவர்கள் அமர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு கர்ணன் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கிரனைட் குவாரி வழக்கில் நேர்மையாகச் செயல்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சகாயம் மற்றும் அன்சுல் மிஸ்ரா போன்ற அதிகாரிகளை ஒருவர் பின் ஒருவராக மாற்றிய ஜெ.விடம், வைகுண்ட ராஜனுக்கு எதிராக நியாயமான நடவடிக்கையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
“சவுக்கு தளத்தை தடை செய்ய நீதிமன்றங்கள் ஏன் துடிதுடிக்கின்றன என்பது இப்போது புரிகிறதா ?”
புரிந்தாலும் சொல்லுவதற்கு எதுவுமில்லை.
வேதாளம் சேரட்டும்
வெள்ளெருக்கு பூக்கட்டும்
பாதாள மூலி படரட்டும்
சேடன் குடி புகட்டும்
மூதேவி சென்றிருந்து வாழட்டும்
இந்த மன்றோரம் செய்யும் மாந்தர்களின் வீடுகளில்.
என்று மக்கள் எல்லாம் மண் அள்ளி திட்டட்டும்.
காலம் காலமாக பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்த சென்னை உயர்நீதி மன்றம் இப்போது தான் விலகி வருகிறது.., அது பொருக்கமாட்டாமல் இப்படி அவதூறு பரப்புவது உங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது..,,!!
இத்தனைக்கட்டுரைகள் நீதிபதிகளுக்கு எதிராக எழுதியுள்ளிர் ஆனால் அதில் பார்ப்பன நீதியரசர்களே இருந்துல்லையை? ஏன்?, அவர்கள் அனைவருமே யோக்கிய சிகாமணிகளா?,
உமது ஜாதி வெறி பல்லைக்காட்டுகிறது பார்த்து!!!
போப்பா….போய் புள்ள குட்டிய நல்லா படிக்கவை.
When irregularities or crimes are pointed out, don’t bring the caste into picture.
No one should have the attitude that the people from certain castes are fully authorised to commit any sorts of crimes.
Savukku has given the sources. He did not say anything off-hand. If possible, you prove how he is wrong.
Do you mean to say that what Karnan did is right?
If you think so, then you are against truth, progress and growth.
சவுக்கு தளத்தை தடை செய்ய நீதிமன்றங்கள் ஏன் துடிதுடிக்கின்றன என்பது இப்போது புரிகிறதா ? # நல்லாவே தெரியுது !!!
எல்லாம் பணம் .,பதவி .,சுகம் இதற்குதான் !!!!
with all due respects to savukku , this article appears to have been done in haste . i wish to post a rejoinder and seek ur permission to allow that also to be posted
With all due respects to my friend Kishore K Swamy, I would like the administration of Transworld Garnet to respond. And I would also like to know, in what capacity you would like to file a rejoinder. Let the offenders make their stand clear. It would be helpful for the central and state agencies too.