மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை. கரைகள் ஓய்வை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை என்பது போல, சவுக்கு ஓய்வை விரும்பினாலும் கருணாநிதி விடுவதில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் 2004ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 83 அதிகாரிகளின் தேர்ச்சி செல்லாது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. அந்த தேர்வு குறித்த வழக்கு மற்றும், மேல் முறையீடு ஆகிய விவகாரங்கள் குறித்து, சவுக்கு தளத்தில் மட்டுமே விரிவான இரண்டு கட்டுரைகள் வந்திருந்தன. இயல்பாகவே அதன் பின் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து, மகிழ்ச்சியோடு எழுதியிருக்கலாம். ஆனால், அதில் பாதிக்கப்பட்ட சில அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தெரியும். அவர்கள் நல்ல அதிகாரிகள் மற்றும் திறமையானவர்கள்தான். அவர்கள் வேதனையில் இருக்கையில், மீண்டும் தீர்ப்பு குறித்து திறனாய்வு செய்வது அவசியமில்லை என்பதாலேயே, அது குறித்து எழுதப்படவில்லை. ஆனால் கருணாநிதி விடுவாரா ?
இரண்டு நாட்களுக்கு முன் தன் கேள்வி பதில் அறிக்கையில் இப்படி குறிப்பிட்டிருந்தார் கருணாநிதி.
கேள்வி :- 83 தமிழக அதிகாரிகளை அதிரடியாக உச்ச நீதிமன்றம் பதவி நீக்கம் செய்திருக்கிறதே?
பதில் :- தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2005ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் வேலைக் காகத் தேர்ந்தெடுத்த 83 பேரை, உச்ச நீதிமன்றம் தற்போது தகுதி நீக்கம் செய்திருப்பது உண்மைதான். இந்தத் தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற புகாரை மையமாக வைத்து, சிலர் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச், 3-4-2011 அன்று 83 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில்தான், உச்ச நீதிமன்றம், 30-6-2014 அன்று உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்திருக்கிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சுமார் 15 பேர் இப்போது மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ.) வாக இருக்கிறார்கள். இவர்களைப் பணி நீக்கம் செய்தால், இவர்கள் கடந்த காலத்தில் பிறப்பித்த உத்தரவுகள் எல்லாம் செல்லாதவையா என்ற கேள்வி எழும். அதுபோலவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சுமார் 15 பேர் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர்களாக (ஏ.டி.எஸ்.பி.) பணியாற்றுகிறார்கள். இவர்கள் நடத்திய வழக்குகள், வாங்கிக் கொடுத்த தண்டனைகள் எல்லாம் செல்லுமா? இவர்கள் 9 ஆண்டுகள் பணி செய்த பிறகு நீக்கம் செய்யப்பட்டால், இவர்களின் எதிர்காலம் என்ன? இவர்கள் இனிமேலும் வேறு பணிகளிலே சேர வயது இடம் கொடுக்குமா? மீண்டும் தேர்வாணையக் கழகத் தேர்வுகளிலே இவர்கள் பங்கேற்க முடியுமா? இவர்களின் குடும்பங்களின் கதி என்ன?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றத்திலே சிலர் தற்போது வழக்குத் தொடுத்து, உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், திருத்தம் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பிலும், பாதிக்கப்பட்ட 83 பேர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்திலே புதிதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. ஆனால் இதைப்பற்றி யெல்லாம் கவலைப்பட வேண்டிய தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை!
இதுதான் கருணாநிதியின் அறிக்கை.
சரி. இந்த வழக்கில் தமிழக அரசு என்ன தகவல் சொல்ல வேண்டும் என்று கருணாநிதி எதிர்ப்பார்க்கிறார் ? டிஎன்பிஎஸ்சியில் என்ன நடக்கிறது என்று கருணாநிதிக்குத் தெரியாதா என்ன ?
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நியமனம் நியமிக்கப்பட்ட அத்தனை தேர்வாணைய உறுப்பினர் பதவிகளும் ஏலம் போடப்பட்டன. கருணாநிதி குடும்பத்தில் பெரிய குடும்பமும், சின்ன குடும்பமும் உறுப்பினர் பதவிகளை பிரித்துக் கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபடுவார்கள். சிஐடி காலனிக்கு ஒரு உறுப்பினர் என்றால், கோபாலபுரத்துக்கு இன்னொன்று. அப்போது செல்ல மகனாக இருந்த மதுரை இளவரசருக்கு மற்றொன்று. இப்படித்தான் தேர்வாணைய நியமனங்கள் நடந்தன. திமுக மீண்டும் 2011ல் ஆட்சிக்கு வந்திருந்தால், பொட்டு சுரேஷ், தேர்வாணைய உறுப்பினராயிருந்தால் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
டிசம்பர் 2011ல், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்தது. அப்போது தலைவராக இருந்தவர் செல்லமுத்து. இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர் இதற்கு முன்னதாக, அரசு வீட்டு வசதித் துறையின் செயலாளராக இருந்தார். ஜாபர் சேட் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கருணாநிதி சொல்லியபடி வீட்டு மனை ஒதுக்கியவர். இவரோடு சேர்த்து தேர்வாணைய உறுப்பினர்கள் எம்.ராமசாமி, டி.சங்கரலிங்கம், டாக்டர் கே லட்சுமணன், திருமதி சோபினி, டாக்டர் ஜேவியர் ஜேசு ராஜா, டாக்டர் கேஎம்.ரவி, ஜி சண்முக முருகன், கே.கே.ராஜா, டாக்டர் பன்னீர் செல்வம் திரு.வி.ரத்தினசபாபதி, டாக்டர் பெருமாள்சாமி, திரு.டி.குப்புசாமி, மற்றும் ஜி.செல்வமணி.
டிசம்பர் 2011ல் இருந்த ஒட்டுமொத்த தேர்வாணைய உறுப்பினர்கள், தலைவர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து சோதனைகள் மேற்கொண்டது. லஞ்ச ஒழிப்புத் துறையின் பூர்வாங்க விசாரணையில், தேர்வாணைத்தினால் நடத்தப்பட்ட ஏறக்குறைய அனைத்துத் தேர்வுகளிலும், ஊழலும் முறைகேடுகளும் புழுத்துப் போய் இருந்தது தெரிய வந்தது. இப்படிப்பட்ட ஊழல்களுக்குச் சொந்தக்காரரான கருணாநிதிதா இன்று தகுதிநீக்கம் செய்யப்பட்ட 83 அதிகாரிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் அனில் தவே மற்றும் தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பில் தெளிவாக பல விஷயங்களை உணர்த்துகிறார்கள். இந்த வழக்கில் விடைத்தாள்களில் தேர்வாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. விடைத்தாள்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கருப்பு, நீலக் கருப்பு அல்லது கருப்பு மை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இங்க் பேனா, ஸ்டீல் அல்லது பால் பாயின்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையும் முறி பல்வேறு தேர்வாளர்கள் ஸ்கெட்ச் பெண்கள், பென்சில்கள், பல்வேறு வண்ணங்களில் பேனாக்கள் மற்றும் பென்சில்கள் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர். வேறு வண்ணத்தில் பேனா பயன்படுத்தியது விடைத்தாள் திருத்துபவருக்கு, தேர்வாளரின் அடையாளத்தை குறிப்பிட பயன்பட்டிருக்கக் கூடும். இந்த விஷயம் உணர்த்துவது என்னவென்றால் ஒன்று, தேர்வாளர்கள் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள் அல்லது தேர்வாளர்கள் விடை திருத்துபவருக்கு சில குறிப்பை உணர்த்த முயன்றிருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட ஒரு வண்ணத்திலோ அல்லது பென்சிலிலோ ஒரு தேர்வாளர் எழுதினால், அந்தத் தேர்வாளர் நேர்மையான முறையில் நடந்து கொள்ளவில்லை என்றே எண்ண வேண்டியதுள்ளது.
குறிப்பாக தேர்வாளர்கள் விடைத்தாளின் முதல் பக்கத்திலிருந்து எழுதத் தொடங்க வேண்டும், எந்தத் தாளையும் காலியாக விடக்கூடாது என்ற குறிப்பான விதிமுறையை பல தேர்வாளர்கள் மீறி, பக்கங்களை காலியாக வைத்துள்ளனர். ஒரு தேர்வாளர் காலிப் பக்கத்தில் “மணி” என்று எழுதியுள்ளார். இது நிச்சயமாக திருத்துபவருக்கான குறிப்பே.
நேர்மையாக, தவறிழைக்காமல் தேர்வெழுதும் எந்த தேர்வாளரும் தான் யார் என்பதை காண்பித்துக் கொள்ள முயற்சிக்க மாட்டார்கள். அனுமதியில்லாத ஒரு சில விஷயங்களை தேர்வாளர்கள் செய்கிறார்கள் என்றால், அது தான் யார் என்பதை திருத்துபவருக்கு உணர்த்துவதற்காகவே. நேர்மையான தேர்ச்சி நடக்க வேண்டும் என்று நினைத்தால், இது போன்ற செயல்களை அனுமதிக்க முடியாது.
தேர்வாணையம் போன்ற அமைப்பு தவறிழைக்கும் தேர்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்வாணையமோ அல்லது இது போன்ற அமைப்புகள் நல்ல அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் நோக்கமே வீணடிக்கப்படும். உயர்நீதிமன்றம், தவறிழைத்த தேர்வர்களின் தேர்ச்சியை ரத்து செய்தது சரியான செயலே.
தேர்வர்கள் க்ரூப் 1 பதவிக்காக விண்ணப்பித்தவர்கள். வினாத்தாள்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறியிருந்தால், ஒன்று அது அவர்கள் விதிமுறைகளைப் பற்றி கவலைப் படவில்லை என்பதாக இருக்கும். அல்லது அதை படிக்கக் கூட அவர்கள் அக்கறைப்படவில்லை என்பதாக இருக்கும். அல்லது, அவர்கள் விடைத்தாள்களை திருத்துபவர்களுக்கு தங்களின் அடையாளம் பற்றிய குறிப்பு அளிக்கிறார்கள் என்றே பொருள். இதில் எதுவாக இருந்தாலும், இப்படி ஒரு நபர் தேர்ச்சி செய்யப் படக்கூடாது. தன்னுடைய நலனைப் பற்றிக் கூட அக்கறை செலுத்தாத நபர் ஒரு நல்ல அதிகாரியாக உருவாக முடியாது.
ஒரு தேர்வரின் நோக்கம் தேர்வில் வெற்றி பெறுவதே. அதற்காக அவர் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பிற்பற்றாமல், தன்னுடைய நலனில் கூட அக்கறை செலுத்தாமல் இருப்பவர் அலட்சியமாக இருப்பவரானால் அவர் ஒரு அலட்சியமான நபர். அதனால் அவர் அதிகாரியாகக் கூடாது. வேண்டுமென்றே செய்திருப்பாரானாலும் அவர் அதிகாரியாகக் கூடாது. ஏனென்றால், பணியில் சேர்வதற்கு முன்னதாகவே இப்படிப்பட்ட ஊழலில் ஈடுபடும் நபர் நிச்சயமாக நேர்மையான அதிகாரியாக இருக்க வாய்ப்பே கிடையாது. ஆகையால் எப்படி இருந்தாலும் இப்படிப்பட்ட நபர்களுக்கு நியமனம் வழங்கக் கூடாது.
இதுதான் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு. இதில் குழப்பத்துக்கு இடமின்றி தெள்ளத் தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது ஜெயலலிதா அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
க்ரூப் 1 போன்ற தேர்வுகளில் பங்கு கொள்ளும் நபர்களிடம் விசாரித்தால் தேர்வாணையத்தில் முறைகேடுகள் 1993ம் ஆண்டு கருப்பண்ணன் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைவராக நியிமிக்கப்பட்டதிலிருந்தே தொடங்கி விட்டது. அப்போதெல்லாம் 30 முதல் 40 சதவிகிதமாக இருந்த முறைகேடுகள் நாளாக நாளாக 80 முதல் 90 சதவிகிதமாக மாறின. திமுக மற்றும் அதிமுக கட்சிகள், அரசு அதிகாரிகள் தங்களின் ஏவலாளாக செயல்பட வேண்டும் என்று கருதி அதற்கேற்றார்ப் போன்ற அதிகாரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று முயன்றதே இதற்கு காரணம்.
ஒரு பெண், தன் கணவரை சந்திக்கிறாள் என்பதற்காக அவன் மீது ஒரு அயோக்கியன் அளித்த புகாரில் பொய் வழக்கு பதிவு செய்து, அவனை திருநெல்வேலி வரை சென்று கைது செய்ய உத்தரவிட்டால் அதை சிரமேற்கொண்டு நேர்மையான அதிகாரி செய்வாரா ? முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்ற அதிகாரி, நல்ல பதவி வேண்டும், பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசிடம் விசுவாசம் காட்ட வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிவாரா இல்லையா ?
சசிகலாவை தன் வீட்டு பணிப்பெண்ணாக இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கும் ஜெயலலிதா, அவர் கணவரிடமிருந்து அவரை பிரித்து வைத்திருக்கிறார். பிரிந்திருந்தாலும், வாரமிருமுறை இருவரும் சந்தித்துக் கொண்டே இருந்து வந்துள்ளனர். இப்படி சந்திப்பது, சசிகலா போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப் பட்ட பிறகு நின்று போனது. சமீப காலமாக மீண்டும் இந்த சந்திப்பு நடக்கிறது என்ற காரணத்தை மனதில் வைத்து, ஷிகான் ஹுசைனி போன்ற ஊரறிந்த அயோக்கியனிடம் ஒரு புகாரைப் பெற்று, சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்து, மறு நாளே திருநெல்வேலி வரை, ஒரு துணை ஆணையரை அனுப்பி நடராஜனை கைது செய்கிறது காவல்துறை.
ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லையென்றால், நீதிபதியின் மருமகனின் மீது கஞ்சா வழக்கு போடச் சொன்னால் போடுகிறது. முன்னாள் வளர்ப்பு மகன் மீது ஹெராயின் வழக்கு போடச் சொன்னால் போடுகிறது. மன்னார்குடி மாஃபியா உறுப்பினர்கள் மீது நில அபகரிப்பு என்று வளைத்து வளைத்து வழக்கு போடச் சொன்னால் போடுகிறது. இப்படி பொய் வழக்குகளைப் போடுவதில் நேரடியாக நியமனம் செய்யப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள் செய்ய மாட்டார்களா என்றால் அவர்கள், க்ரூப் 1 அதிகாரிகளை விட விசுவாசத்தில் விஞ்சி விடுவார்கள். ஆனாலும் ஆட்சியாளர்களுக்கு, இந்த அடிமைகள் நாம் உருவாக்கும் அடிமைகள் என்பதால் அதிக விசுவாசமாக இருப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை.
தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு வரும் ஜுலை 17 அன்று விசாரணை செய்யப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது தவறான தகவல். தமிழக அரசின் தேர்வாணையம் சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. தற்பாது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, விளக்கம் கேட்கும் மனு. அதாவது, உச்சநீதிமன்றத்தின் ஆணையை எப்படி செயல்படுத்துவது என்று விளக்கம் கேட்கும் மனு. CLARIFICATION PETITION. இப்படி அயோக்கியத்தனமாக ஒரு மனுவை தாக்கல் செய்து, அதன் மூலம் எப்படியாவது இந்தத் தீர்ப்பை ரத்து செய்யலாம் என்று முயல்கிறார் ஜெயலலிதா.
இந்த வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு, அனில் தவே மற்றும் தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு பிரிந்து விட்டது. அனில் தவே வேறொரு நீதிபதியுடனும், தீபக் மிஸ்ரா வேறொரு நீதிபதியுடனும் அமர்ந்துள்ளனர்.
தமிழக அரசு விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ததும், உச்சநீதிமன்றப் பதிவகத்தில், விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ய வழிவகை கிடையாது. ஆகையால் இதற்கு நம்பர் அளிக்க முடியாது என்றதும், நீதிபதி அனில் தவே இருந்த நீதிமன்றத்தில் கடந்த ஜுலை 9 அன்று காலையில் மென்ஷன் செய்யப்பட்டது.
அப்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சில முக்கிய அம்சங்களை உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது கவனத்தில் கொள்ளத் தவறி விட்டது. இந்தத் தேர்வை எழுதியவர்கள் மொத்தம் 747 பேர். இவர்களில் விதிமுறைகளை மீறியவர்கள் 746 பேர். அதாவது ஒரே ஒருவர்தான் ஒழுங்காக தேர்வு எழுதியிருக்கிறாராம். அதனால் இதில் சில விளக்கங்களை நீதிமன்றம் அளிக்க வேண்டும் என்று கோரினார். உடனே நீதிபதி அனில் தவே “விதிமுறைகளை மீறியிருந்தார்கள் என்றால் அவர்கள் க்ளெர்க்காக இருக்கக் கூடத் தகுதியில்லாதவர்கள்” என்றார். இருப்பினும், இந்த வழக்கை வரும் 17ம் தேதியன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உத்தரவிட்டார் நீதிபதி.
டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்துள்ள மனுவில், பென்சில் பயன்படுத்தக் கூடாது என்று டிஎன்பிஎஸ்சியின் விதிமுறைகள் கூறவில்லை என்று தற்போது டிஎன்பிஎஸ்சியின் செயலராக இருக்கும் விஜயக்குமார் ஐஏஎஸ் கூறியுள்ளார்.
இன்று இணையதளத்தில், தேர்வெழுதுபவர்களுக்கு இருக்கும் விதிமுறைகள் உங்கள் பார்வைக்காக …..
இந்த எம்.விஜயக்குமார் எத்தனை பெரிய ஃப்ராடாக இருப்பார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் டிஎன்பிஎஸ்சி தங்களது மனுவில், தேர்வர்கள் விதிகளை மீறியிருந்தாலும், திருத்துபவர்கள் அந்த விடை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதில் தவறில்லை என்று கூறியிருக்கிறார். அந்த விதிமுறை மீறலே, “ஒரு சிக்னல்” என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த பிறகு, மதிப்பெண்கள் வழங்கினால் என்ன, வழங்காவிட்டால் என்ன ?
அடுத்ததாக டிஎன்பிஎஸ்சி கையாளும் தந்திரம், அந்த ஆண்டு தேர்வெழுதிய அனைத்து தேர்வர்களின் விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்யலாமா என்று உச்சநீதிமன்றம் விளக்க வேண்டுமாம். க்கும்….
மேலும் வெறும் பென்சில் உபயோகப்படுத்தியதற்காக மட்டும், இவர்களை தகுதியிழப்பு செய்வது நியாயமா ? இது டிஎன்பிஎஸ்சி உச்சநீதிமன்றத்திடம் எழுப்பும் கேள்வி.
இதில் மற்றொரு அயோக்கியத்தனத்தை செய்துள்ளார் விஜயக்குமார். சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எட்டு பேரின் தேர்ச்சி சரி என்று கூறப்பட்டுள்ளது. தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் மனு தாக்கல் செய்துள்ள எம்.விஜயக்குமார் ஐஏஎஸ், தேர்வெழுதிய 747 பேர்களுள் 746 பேர்கள் விதிமுறைகளை மீறியதாக குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில், சரியாக தேர்வெழுதியிருந்த ஏழு பேர் இப்போது எப்படி தவறிழைத்துள்ளார்கள் ?
எப்படி என்றால், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகையில், இந்த ஏழு பேரும் ஒரு மனுவை தாக்கல் செய்கின்றனர். என்னவென்றால், நாங்கள் அனைவரும் எங்கள் முதல் விருப்பமாக துணை மாவட்ட ஆட்சியர் பணியைத்தான் தேர்ந்தெடுத்திருந்தோம். ஆனால், எங்களுக்கு வேறு பதவிகள் அளிக்கப்பட்டு, தகுதியிழப்பு செய்யப்பட வேண்டிய மற்ற நபர்களுக்கு துணை மாவட்ட ஆட்சியர் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் நேர்மையாக தேர்வெழுதிய எங்களுக்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்காக விஜயக்குமார் ஐஏஎஸ் பழி வாங்குகிறாராம்.
தற்போது உச்சநீதிமன்றத்தின் முன் விஜயக்குமார் ஐஏஎஸ் எத்தகையே மோசடியை அரங்கேற்றியுள்ளார் என்பதற்கு மற்றொரு உதாரணம். 747 பேர் தேர்வெழுதியதில் 746 பேர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று இப்போது மனு தாக்கல் செய்துள்ளார் விஜயக்குமார்.
ஆனால், வெறும் 48 பேரின் விடைத்தாள்களை மட்டும் ஏன் டிஎன்பிஎஸ்சி தகுதி நீக்கம் செய்தது ? இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பகுதிகள்.
“The TNPSC filed a counter affidavit to the writ petition in W.P.No.30885 of 2004 admitting violations of norms by various persons and 48 answer scripts have been invalidated for violating Note-5 of the Memorandum of admission. In this regard, the relevant passage in para 29 of the counter affidavit filed by the TNPSC is extracted hereunder:
“With reference to the averments made in paras 11 and 12 of the Writ Petition, it is submitted that in the Group I Main Written Examination, in the valuation of the answer book it was ensured that the Commission’s instructions were strictly adhered to and 48 answer books have been invalidated for the reason that the candidates have used Colour Pens, Sketch Pencil etc., for underlining / drawing / highlighting the answers in the answer books. …….”
31. When the TNPSC invalidated 48 answer scripts for using colour pens, sketch pens and pencils etc., for underlining / drawing / highlighting, the same yardstick should have been adopted by the TNPSC in the case of 83 candidates among the 91 candidates as they also committed the same violations as found by the second Advocate Commissioner, as otherwise, the action of the TNPSC would be characterised as arbitrary and discriminatory and violative of Articles 14 and 16 of the Constitution. Hence, we have no hesitation in holding that since the 83 among the 91 candidates violated the first portion of clause 14 of the instructions and clause 22 of the instructions read with Note-5 of Memorandum of admission, their answer scripts are liable to be invalidated.”
48 தேர்வர்களின் விடைத்தாள்களை விதிமுறை மீறல் காரணமாக தகுதி நீக்கம் செய்த அதே டிஎன்பிஎஸ்சி, தேர்ச்சி பெற்ற 83 பேரும் அதே விதி மீறல்களில் ஈடுபட்டிருக்கையில், எதற்காக இரட்டை அளவுகோல் என்ற கேள்வியைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியது.
மார்ச் 2011ல், தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட 83 அதிகாரிகளை தொடர்ந்து பணியில் நீடிக்கச் செய்து, அவர்களை அரசு ஆவணங்களை கையாளச் செய்து, எப்படியாவது பணியில் நீடித்து விடுவோம் என்று அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் மன உளைச்சலை ஏற்படுத்திய ஜெயலலிதா, உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூட மதிக்காமல், அவர்களுக்கு பொய்யான நம்பிக்கையை அளித்து, சட்டத்தை நான் எதற்கு மதிக்க வேண்டும் என்ற இறுமாப்போடு இருக்கிறாரே……
இந்த அரசு முட்டாள் அரசா இல்லையா ?
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரில் கருணாநிதி சிறந்த நிர்வாகி என்று முன்பு ஒருமுறை சவுக்கு குறிப்பிட்டிருந்ததாக ஒரு ஞாபகம். அந்த விடயத்தில் நான் சற்று முரண்படுகிறேன்.
கருணாநிதி நல்ல நிர்வாகி அல்ல. ஒரு பொய்யை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டேயிருந்தால் அது உண்மையென்று நம்புமளவுக்கு ஆளுமை பெற்றுவிடும் என்று ஹிட்லரின் உதவியாளரான கோயபல்ஸ் நம்பிக்கை கொண்டிருந்ததுபோல கருணாநிதி பொய், தந்தரம், சுத்துமாத்து, குத்துக்கரணம், சூது, வஞ்சகம், சுயநலம் ஆகியவற்றின் மொத்த உருவம்.
கருணாநிதி நல்ல ஞாபகசக்திக்காரன் என்பதும் உலகில் உள்ள தந்திரசாலிகளில் முதல் மூன்றிபேர்களில் ஒருவன் என்பதே உண்மை.
பொய்யை உண்மையாக்கக்கூடியவன் பல கருத்துப்பட பேசி தப்பித்துக்கொள்ளும் சாதுரியக்காரன், கறுப்பு கண்ணாடிக்குள் மறைந்திருந்து காரியம் செய்யும் கருணாநிதியின் தில்லு முல்லுகள் பார்ப்பவர்களுக்கு நிர்வாகத் திறமைபோல காணப்படுகிறது என்பதே எனது வாதம்.
கருணாநிதிக்கு நல்ல எதிர் மாற்று ஜெயலலிதா என்பது மகிழ்ச்சிக்குரியது. ஜெயலலிதாவுக்கு தந்தரம் சரிப்பட்டு வருவதில்லை.
மற்றும்படி செயற்பாடு என்று வரும்போது ஆணவப்போக்கு நான் என்ற முனைப்பு அதிகார துஷ்ப்பிரயோகம் கொஞ்சம் அவசரம் அதிகம் இருக்கிறது என்ற குறையிரந்தாலும் கருணாநிதி அளவுக்கு ஜெயலலிதா ஆபத்தான பேர்வழி இல்லை என்பதும் எனது அனுமானம்..
கருணாநிதி போலல்லாமல் முன்னையை விட ஜெயலலிதா சில விடயங்களில் பக்குவப்பட்டிருப்பதாக உணர முடிகிறது. கருணாநிதி முன்னையைவிட மிக மோசமான பயங்கரவாதியாக மாறிக்கொண்டிருப்பதாகவே செயற்பாடுகளும் பேச்சும் அச்சப்பட வைக்கிறது.
இருமலும் தும்மலும் ஆட்சி செய்கிறது.
நீக்கப்பட்டவர்களில் சிலர் திறமையானவர்கள் என்றாலும் குற்றம் குற்றமே. தண்டிக்கப்படவேண்டியவர்களே. இதில் அவர் பணியாற்றிய பாங்கு கடந்தகால வழக்குகள் எந்த புண்ணாக்கும் தேவையில்லை.
நம்ம தான இந்த ஜந்துக்களை தேர்ந்து எடுத்தோம். அதுக்கு அனுபபவுச்சு தான் ஆக வேண்டும் மக்களே!
இது முட்டாள் அரசு மட்டுமில்லை. மோசடி அரசும் கூட.